திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3427 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3427திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (அன்பர்களுக்காக என்னைக்கொண்டு தான் தன்னைக் கவிபாடின மஹோபகாரனை ஒரு நாளாவது மறக்கப்போமோ வென்கிறார்.) 3
ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என் நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என் வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3
பதவுரை Show / Hide
இவன் முதல்வன் ஆம் என்று,Iwan mudhalvan aam endru - குருகூர்ச்சடகோபனாகிய இவன் ப்ரபந்த ஜநகூடஸ்தானகக் கடவன்’ என்று திருவுள்ளம் பற்றி
தன் தேற்றி,Than thetri - தன் விஷயமான தெளிவை எனக்குப் பிறப்பித்து
என் நா முதல் வந்து புகுந்து,En naa mudhal vandhu pugundhu - என்னுடைய நாவிலே தானே வந்து புகுந்து
நல் இன் கவி,Nal in kavi - பரம போக்யமான சொல் தொடைகளை
தூ முதல் பத்தர்க்கு,Thoo mudhal patharkku - முமுக்ஷூக்களுக்கு அநுபவிக்கலாம்படி
தான் தன்னை சொன்ன,Thaan thannai sonna - தானே தன்னைப் பாடின
என் வாய் முதல் அப்பனே,En vaai mudhal appanai - என் வாக்குக்கு முதல்வானான மஹோபகாரகனை
என்று மறப்பனோ,Endru marappano - என்றைக்காவது மறப்பேனா? (ஒரு நாளும் மறக்கமாட்டேன்.)