திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2875 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (பிரானே! உன்திருவடிகளை என் தலைமீது வைக்குமித்தனையே வேண்டுவது; எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷத்திலும் எனக்கு விருப்பமில்லை யென்கிறார்.) 1 | எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1 | பதவுரை Show / Hideகைம்மா துன்பம் கடிந்த பிரானே,Kaiamma thunbam katintha pirane - கஜேந்திராழ்வானுடைய இடரைத் தீர்த்த பிரபுவே! நின்,Nin - தேவரீருடைய செம்,Sem - சிவந்த மா,Maa - மேன்மை தங்கிய பாதபற்பு,Paadhaparpu - பாதபத்மங்களை தலை,Thalai - என் தலையிலே ஒல்லை,Ollai - சீக்கிரமாக சேர்ந்து,Seerndhu - சேர்க்கப்பெறறால் எமர்வீடு திற,Emar veedu thira - மிகவும் விலக்ஷணமான மோக்ஷத்தைப் பற்றின பேச்சையும் செப்பம்,Seppam - பிரஸ்தாவிக்கமாட்டோம் அம்மா,Amma - ஸ்வாமியே! அடியேன் வேண்டுவது,Adiyen venduvadhu - நான் பிரார்த்திப்பது ஈதே,Eedhe - இதுதான். (நின் செம்மாபாதபற்புத்தலை சோக்க வேணுமென்பதே யென்றபடி) |