திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3336 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3336திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((அடிக்கீழமாந்து) இத்திருவாய்மொழியைப் பற்றினவர்கள் திருநாட்டிலே நித்யாநுபலம் பண்ணப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும் படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும் பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11
பதவுரை Show / Hide
adiyeeir,அடியீர் - அடியவர்களே!
adi keel amarndhu pugundhu vaazhmin endru endru,அடி கீழ் அமர்ந்து புகுந்து வாழ்மின் என்று என்று - நம்முடைய திருவடிகளின் கீழே புகுந்திருந்து உஜ்ஜீவித்துப் போருங்கள்“ என்று அநவாதமும் காட்டிக்கொடுத்து,
arul kodukkum,அருள் கொடுக்கும் - க்ருபை பண்ணுகிறவனும்
padi kel ella perumaanai,படி கேழ் இல்லா பெருமானை - சீர் நிலங்களை பெருமை வாய்ந்தவனுமான ஸர்வேச்வரனைக்குறித்து
mudipaan sonna,முடிப்பான் சொன்ன - ஸம்ஸாரத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த
aayirathu,ஆயிரத்து - ஆயிரத்தினுள்ளும்
thiruvengadathukku ivaipaththum,திருவேங்கடத்துக்கு இவைபத்தும் - திருவேங்கடமலை விஷயமான இத்திருவாய்மொழியை
pidithaar pidithaar,பிடித்தார்பிடித்தார் - ஸாக்ஷாத்தாகவும் பரம்பரையாகவும் அவலம்பித்தவர்கள்
periya vaanul,பெரிய வானுள் - பாமாகாசமென்கிற பரமபதத்திலே
veettrindhu nilaavular,வீற்றிருந்து நிலாவுலர் - நிலை நின்று வீற்றிருப்பர்கள்.