திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3434 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3434திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (அவனுடைய பேருதவிக்கு ஒருபடியாலும் கைம்மாறு இல்லையென்கிறார்.) 10
உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப் பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10
பதவுரை Show / Hide
உதவி கைம்மாறு,Uthavi kaimmaaru - திருவாய்மொழி பாடுவித்துக் கொண்டவுதவிக்குப் பிரதியுபகாரம்
என்உயிர் என்னவுற்று எண்ணில்,En uyir ennavuṟṟu eṇṇil - என்னுடைய ஆத்மா என்று சொல்ல நினைத்தால்
அதுவும் அவன் தன்னது,Adhuvum avan thannadhu - அவ்வாக்மவஸ்துவும் அவனுடைய பொருளாகவே யிரா நின்றது;
என்னால் தன்னை பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,Ennala thannai padaviy in kavi paadiya appanukku - (ஆனபின்பு) என்னையிட்டுத் தனைனை மதுரமாகப பாடுவித்துக் கொண்ட எம்பிரானுக்கு
இங்கும் அங்கும்,Ingum angum - உபயவிபூதியிலும்
செய்வது,Seyvathu - செய்யக்கூடிய கைம்மாறு
எதுவும் ஒன்றும் இல்லை,Edhuvum ondru illai - மிக அற்பமானதுமில்லை.