திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2924 | திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (இப்பதிகத்தில் முதற்பாட்டில் கைங்கர்யம் ப்ரஸ்தாவிக்கப்பட்டது; (அதன்மேல் நான்கு பாசுரங்கள் ப்ராஸங்கிகங்கள்.) முதற்பாட்டோடு இப்பாட்டிற்கு ஸங்கதி கொள்ளலாம். பிரதிபந்தகங்களான கருமங்கள் பலகிடக்க அடிமை செய்வது எங்ஙனே ஸாத்யம்? என்று சங்கை பிறக்க, அடிமை செய்வோமென்று இசையவே அவை தானே தொலையுமென்கிறாரிப்பாட்டில்.) 6 | வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6 | பதவுரை Show / Hideவேங்கடத்து , Vengadathu - திருமலையிலே உறைவார்க்கு , Uraivaarkku - நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு நம எனல் ஆம் கடமை அது , Nama enal aam kadamai adhu - நமர் என்று சொல்லுவதாகிற அந்தக் கடமையை சுமந்தார்கட்கு , Sumanthaarkku - வஹிக்கின்றவர்களுக்கு கடங்கள் , Kadangal - அனுபவித்தே தீர்க்கவேண்டிய (பூர்க்ருத) பாபங்களும் மேல்வினை , Melvinai - (ப்ரக்ருதிவாஸநையாலே) இனி விளையக்கூடிய பாவங்களம் (ஆகிய) முற்றவும் , Mutravum - ஸகலபாபங்களும் வேம் , Vem - வெந்துபோயினவென்னும் அழிந்து விடும்: (இப்படி பாவங்கள் தொலையலே) தங்கட்கு நல்லனாவே , Thangatku nallanaave - தாங்கள் அடியவர்களான தாங்கள் ; தங்கள் ஸ்வரூபத்திற்குத் தகுதியானவற்றையே (ஸகங்கரியங்களையே) செய்வார் , Seivaar - செய்யப் பெறுவர்கள். |