திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3152 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (அநிஷ்டங்களைத் தொலைக்க வல்லனான இராமபிரானும் உதவ வருகின்றிலன்; முடியவும் வழி தெரியாமல் திகைக்கின்றேனென்கிறாள்.) 3 | நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3 | பதவுரை Show / Hideநெஞ்சமே,Nenjame - மனமே! நீயும்,Neeyum - (எல்லாக் காரியங்களுக்கும் முதற்கருவியான நீயும் பாங்கு அல்லை காண்,Paangu allai kaan - எனக்கு விதேயமாக இருக்கிறாயில்லை; நின் இரவும்,Ninn iravum - ஏற்கனவே நீண்டு வருகின்ற ராத்திரியும் ஓயும் பொழுது இன்றி,Oyum pozhudhu indri - ஓயுங்காலம் இல்லாமல் ஊழி ஆய்,Uuzhi aay - ஒரு கல்பமாய் கொண்டு நீண்டது,Neendadhu - வளர்ந்து விட்டது; ஆல்,Aal - அந்தோ; காயும்,Kaayum - (விரோதிகளைக்) காய்கின்ற சுடு சிலை,Sudu silai - கடிய சார்ங்கவில்லையுடைய என் காகுத்தன்,En Kaaguthan - இராமபிரான் வாரான்,Vaaraan - வந்து முகம்காட்டுகின்றவன்; வல்வினையேன்,Valvinaiyene - வலிய பாபத்தையுடையேனான நான் பெண் பிறந்து,Pen pirandhu - பெண்ணாய்ப்பிறந்து மாயும் வகை அறியேன்?,Maayum vakai arien - முடியும் வழியை அறிகின்றிலேன். |