திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2887 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -திருமலை தான் வேணுமோ -அத்தோடு சேர்ந்த திருப்பதியை பரம பிரயோஜனம் என்கிறார்) 2 | சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2 | பதவுரை Show / Hidecatir,சதிர் - அழகு பொருந்திய ila matavar,இள மடவார் - இளம் பருவத்துப்பெண்களிடத்து talcciyai,தாழ்ச்சியை - ஆழய்காற்படுவதை matiyatu,மதியாது - ஒரு பொருளாக நினையாமல் atirkural cankattu,அதிர்குரல் சங்கத்து - முழங்குகின்ற ஓகையையுடைய சங்கு ஒலிக்கப்பெற்ற alakar tam koyil,அழகர் தம் கோயில் - அழகருடைய ஆலயமாய் mati taval kutumi,மதி தவழ் குடுமி - சந்திரன் உலாவப்பெற்ற சிகரத்தை யுடைத்தான மாலிருஞ்சோலை, maliruncolai - மாலிருஞ் சோலையாகிற pati atu,பதி அது - அந்தத் திருப்பதியை etti,ஏத்தி - துதித்து eluvate,எழுவதே - உய்வதே payan,பயன் - புருஷார்த்தம் |