Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: பெரிய திருவந்தாதி (88 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0பெரியதிருவந்தாதி - தனியன் || (முந்துற்ற நெஞ்சே) (முந்துற்ற நெஞ்சித்யாதி, இதுபெரிய திருவந்தாதித் தனியனாகப் பெரியோர்களாலே அநுஸந்தித்துக்கொண்டு போருமதாயிருக்கும், ஆகையால் இதுவும் அந்த ஸப்தத்தை அநுவதித்தாயிற்றிருப்பது.(முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து) 'முயற்றி சுமந்தெழுந்து முந் துற்ற நெஞ்சே'' என்றது முன்பின்னாயிருக்கிறது) 34
முந்துற்ற நெஞ்சே! முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே சந்த
முருகூருஞ்சோலசூழ் மொய் பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு
Mundhutra nenje, முந்துற்ற நெஞ்சே - ஆழ்வாரை ஆஸ்ரவிக்க என்னைக்காட்டிலும் முன் செல்லும் மனமே
Muyatri, முயற்றி - முயற்றி' என்று ஆரம்பித்துள்ள திவ்யப்ரபந்தத்தை
Tharithu, தரித்து - (புத்தியிலே) தரித்து
Uraithu, உரைத்து - (வாயாலே ) சொல்லி
Vanthithu, வந்தித்து - (ஆழ்வாரை) வணங்கி
Vazhthi, வாழ்த்தி - வாய் ஓயும் வரை மங்களாஸாஸனம் பண்ணி
Murugu oorum, முருகு ஊரும் - தேன் பெருகும்படியான
Sandham solai, சந்தம் சோலை - சந்தன மரங்களையுடைய சோலைகளாலே
Soozh, சூழ் - குழப் பட்டதாய்
Moy, மொய் - நீர் நிறைந்ததும்
Poo, பூ - அழகியதுமான
Porunal, பொருநல் - தாம்ரபரணி நதியையுடையதான
Kuru kooran, குரு கூரன் - திருநகரிக்கு ஸ்வாமியான
Maran per kooru, மாறன் பேர் கூறு - நம்மாழ்வாருடைய திருநாமத்தை அநுஸந்தித்துப் போரு
2585பெரிய திருவந்தாதி || 1
முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய
நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்
பூவீன்ற வண்ணன் புகழ்
முயற்சி சுமந்து, Muyarchi Sumandhu - எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே உத்ஸாஹம் பூண்டு (- (இதுவே நீயும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம்.))
எழுந்து, Ezhunthu - கிளம்பி
முந்துற்ற நெஞ்சே, Mundru Nenjhe - (அவ்விஷயத்தில் என்னைவிட) முற்பட்டிருக்கிற மனமே!
நீ எம் எம்மொடு கூடி, Nee Em Emmodu Koodi - நீ (தனிப்பட்டுப் போகாமல்) என்னோடு சேர்ந்து
இயற்றுவாய், Iyattruvai - காரியத்தை நடத்த வேணும்; (நாம் இருவருஞ் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம் என்னவென்றால்)
நல் பூவைப்பூ ஈன்ற வண்ணான், Nal Poovai Poo Eendra Vannaan - (அழகிய காயாம் பூவிலுண்டான நிறம் போன்ற நிறத்தையுடையனான எம்பெருமானுடைய
புகழ், Pugazh - திருக்கல்யாணகுணங்களை
நயப்பு உடைய, Nayappu Udaya - அன்பு பொதுந்திய
நா ஈன், Na Een - நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற
தொடை கிளவியுள், Thodai Kilaviyul - சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே
பொதிவோம், Podivom - அடக்குவோமாக.
2586பெரிய திருவந்தாதி || 2
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம்
மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இவை.
எம் கண், Em Kan - எங்களிடத்தில் (- (ஆக இப்படிப்பட்ட உண்மையை நாங்கள் நன்கு அறிந்திருந்தும் உன்னைப் புகழாமலாவது மதியாமலாவது இருக்கப் போகிறதில்லை; புகழ்வதும், மதிப்பதும் செய்யத்தான் போகிறோம்.))
மால், Maal - வ்யாமோஹகத்தையுடைய
செம் கண் மால், Sem Kan Maal - புண்டரீகாக்ஷனான பெருமானே,
புகழ்வோம், Pugazhvom - (ஒருவராலும் புகழ்ந்து முடிக்கவொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில்
பழிப்போம், Pazhippom - (அயோக்யர் புகழ்வது புகழ்ச்சியன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய்விடுவோம்;
புகழோம், Pugazhom - (இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு) புகழாதிருந்தோமாகில்
பழியோம், Pazhiyom - உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம்;
மதிப்போம், Mathippom - உன்னைச் சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோமாகிலும்
இகழ்வோம், Ikazhvom - உன்னை அகௌரவப்படுத்தினவர்களாக ஆய்விடுவோம்;
மதியோம், Madhiyom - அப்படி நெஞ்சால் நினையாதிருந்தோமாகில்
இகழோம், Ikazhom - அகௌரவப்படுத்தாதவர்களாக ஆவோம்;
நீ சீறல், Nee Seeral - நீ கோபங்கொள்ளலாகாது;
இவை, Ivai - புகழ நினைப்பதும் (பிறகு) புகழலாகாதென்று பின் வாங்குவதுமாகிற இவை
தீ வினையோம் எங்கள் மால் கண்டாய், Thee Vinaiyom Engal Maal Kandaai - மஹாபாவிகளான எங்களுடைய ப்ரமமேயாம்.
2587பெரிய திருவந்தாதி || 3
இவையன்றே நல்ல இவையன்றே தீய,
இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம்
என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,
என்னால் செயற்பால தென்?
இறையவனே, Iraiyavane - எம்பெருமானே!
இவை அன்றே நல்ல, Ivai Anrae Nalla - உன்னைப் புகழாமையும் சிந்தியாமையுமாகிற இவையன்றோ நல்லது;
இவை அன்றே தீய, Ivai Anrae Theeya - உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதுமாகிற இவையன்றோ கெட்டது;
இவை இவை என்ற அறவனேனும், Ivai Ivai Endra Aravaneenum - (ஆகவே) ‘இன்னது இப்படிப்பட்டது’ என்று நான் உண்மையில் தெரிந்து கொண்டிருக்கிறேனாகிலும்
இவை எல்லாம், Ivai Ellam - புகழாமையும் மதியாமையும், புகழ்தலும் மதித்தலுமாகிய இவையெல்லாம்
என்னால், Ennal - என்னாலே
அடைப்பு நீக்கு ஒண்ணாது, Adaippu Neekku Onnaadhu - பற்றவும் முடியாது, விடவும் முடியாது;
என்னால் செயற்பாவது என், Ennal Seyarpaavathu En - (சபலனான) என்னாலே செய்யக்கூடியது என்ன இருக்கிறது?
2588பெரிய திருவந்தாதி || 4
என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்
றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்
பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று.
என்ன, Enna - என்னுடையவனான
நரும் சோதி கண்ணன், Narum Sothi Kannan - கறுத்த நிறத்தையுடைய ஸ்ரீக்ருஷ்ணனும்
கடல்  புரையும் சீலன், Kadal Puraiyum Seelan - கடல் போன்ற (கம்பீர) ஸ்வபாவ முடையவனும்
பெரும் சேயதிக்கு, Perum Seyathikku - மிகப் பெரிய சோதிவடிவமானவனுமான எம்பெருமானுக்கு
என் நெஞ்சு ஆள் பெற்று, En Nenju Aal Petru - என்னுடைய நெஞ்சானது அடிமைப்பட்டதனால்
என்னில், Ennil - என்னைவிட
மிகு புகழார் யாவரே, Migu Pugazhaar Yaavare - மிக்க புகழுடையவர் யார் கொல்?
மற்று பிள்ளையம் எண்ணில், Mattru Pillaiyam Ennil - இன்னமும் ஆராய்ந்து பார்க்குமளவில்
மிரு புகழோன் யான் அல்லால், Miru Pugazhon Yaan Allaal - மிக்க புகழுடையவன் தவிர வேறு யாருமில்லை.
2589பெரிய திருவந்தாதி || 5
பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையா ராவாரும் நீபேசில்,- எற்றேயோ!
மாய! மா மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா! காட்டும் நெறி.
மாய, Maaya - மாயவனே!
அம்மா, Amma - ஸ்வாமியே!
பேசில், Pesil - உன்னால் நான் பெய்ய உபகாரங்களைப் பேசப் புகுந்தால்
பெற்ற தாய் நீயே, Petra Thaai Neeye - பெற்றதாய் போலே ப்ரியமானதையே செய்பவனும் நீயே;
பிறப்பித்த தந்தை நீ, Pirappiththa Thandhai Nee - உண்டாக்கின பிதாவைப் போல ஹிதமானதையே செய்பவனும் நீயே;
மற்றையர் ஆவாரும் நீ, Mattraiyar Aavaarum Nee - மற்றும் ஆசாரியரும் நீயே;
மா மாயவளை மாய, Maa Maayavalai Maaya - மஹத்தான வஞ்சனையையுடைனான பூதனையை முடிப்பதற்காக
முலை, Mulai - (அவளது விஷந்தடவின) முலையை
வாய் வைத்த நீ, Vaai Vaiththa Nee - அமுது செய்த நீ
காட்டும் நெறி, Kaattum Nerii - எனக்குக் காட்டின வழிகள்
எற்றே ஓ, Ettre O - என்ன ஆசாரியமானவை ( என்று உருகுகிறார்.)
2590பெரிய திருவந்தாதி || 6
நெறிகாட்டி நீக்குதியோ? நின்பால் கருமா
முறிமேனி காட்டுதியோ? மேனாள்-அறியோமை
எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே! ஈதுரையாய்
எஞ்செய்தா லென்படோம் யாம்?
கண்ணனே, Kannane - எம்பெருமானே!
நெறி காட்டி நின்பால் நீக்குதியோ, Nerii Kaatti Ninpaal Neekuthiyo - கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களைக் காட்டி (இவற்றை அநுஷ்டித்துப் பலன் பெறுவாய் என்று சொல்லி என்னை) கைவிட்டு விடப் பார்க்கிறாயோ? (அல்லது)
கரு மா முறி மேனி காட்டுதியோ, Karum Maa Muri Meeni Kaattuthiyo - கறுத்த மாமரத்தின் தளிர் போன்ற (உனது) திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து அநுப்ரஹிக்க நினைக்கிறாயோ?
மேல் நாள், Mel Naal - அநாதி காலமாக
அறியோமை, Ariyomai - அறியாதவர்களான எங்களை
என் செய்வான் எண்ணினாய், En Seivaan Enninai - என்ன செய்வதாக திருவுள்ளம் பற்றியிருக்கிறது?
ஈது உரையாய், Eethu Uraiyaai - தேவரீருடைய திருவுள்ள மின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்;
என் செய்தால், En Seithal - நீ எமக்கு என்ன நன்மையைச் செய்தாலும்
யாம் என் படோம், Yaam En Padom - யாம் என்ன அநர்த்தத்தைத்தான் அநுபவிக்க மாட்டோம்.
2591பெரிய திருவந்தாதி || 7
யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார்
தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த
அம்மா!நின் பாதத் தருகு.
பூ மேய, Poo Meyya - தாமரைப்பூவில் பொருந்தியிருக்கிற
செம் மாதை, Sem Maathai - *ஹிரண்ய வர்ணையான பிராட்டியை
நின் மார்வில் சேர்வித்து, Nin Maarvil Serivithu - உனது திருமார்விலே சேர்த்துக் கொண்டானாயும்
பார் இடந்த, Paar Idantha - (பிரளயத்திலழுந்திக் கிடந்த) பூமியைக் குத்தியெடுத்தவனாயுமிருக்கிற
அம்மா, Amma - ஸ்வாமீ!
நின் பாதத்து அருகு, Nin Paadaththu Arugu - தேவரீருடைய திருவடிகளின் சமீபத்திலே
என் நெஞ்சினார் தாமே, En Nenjinnaar Thaame - என்னுடைய நெஞ்சதானே
அணுக்கர் ஆய் சார்ந்தொழிந்தார், Anukkara Aayi Sarnthozhindhaar - அந்தரங்கமாகச் சென்று சேர்ந்துவிட்டது;
அரு வினையோம், Aru Vinaiyom - போக்க முடியாத பாவத்தைப் பண்ணியுள்ள
யாமே, Yaame - நாங்கள் மாத்திரம்
சேயோம்., Seyyom - தூரத்திலிருக்கிறோம்.
2592பெரிய திருவந்தாதி || 8
அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே
பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம்
பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம் கண்காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு.
பருகலாம் பண்பு உடையீர், Parugalaam Panbu Udaiyeer - வாய்மடுத்துப் பானம் பண்ணுதற்கு உரிய திருக்குணங்களையுடையவரே!
பார் அளந்தீர், Paar Alandheer - (த்ரிவிந்தரமாவதாரத்தால்) பூமியெல்லாமனந்தவரே!
பாவியேம் கண் காண்பு அரிய நுண்பு உடையீர், Paaviyeem Kan Kaanbu Ariya Nunbu Udaiyeer - பாவிகளான எங்களுடைய கண்களாலே காண முடியாத வைவக்ஷண்யத்தை யுடையவரே!
நும்மை, Nummai - உம்மை
அருகும், Arugum - கிட்டுவதையும்
சுவடும், Suvadum - சிட்டுவதற்கான உபாயத்தையும்
தெரிவு உணரோம், Therivu Unarom - (நாங்கள்) பகுத்தறிந்தோமில்லை; (அப்படியிருக்கச் செய்தேயும்)
நுமக்கே, Nummaikkee - உம் விஷயத்திலேயே
அன்புமிக பெருமை, Anbumiga Perumai - (எமக்கு) ஆசையானது மிகவும் பெருகா நின்றது;
இது என், Idhu En - இதற்கு என்ன காரணம்?
பேசீர், Pesir - நீர்தாம் சொல்லவேணும்.
2593பெரிய திருவந்தாதி || 9
நுமக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென்?, மாலார்
தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால் – எமக்கினி
யாதானு மாகிடுகாண் நெஞ்சே! அவர்த்திறத்தே
யாதானும் சிந்தித் திரு.
நெஞ்சே, Nenje - ஓ மனமே!
(மாலார்) அவர் தாம், Malar Avan Thaam - எம்பெருமானாகிற அப்பெரியவர் தாம்
சார்வு அரியர் ஆனால், Saarvu Ariyar Anaal - நமக்குக்கிட்ட முடியாதவராயிருக்கும்போது
நொந்து உரைத்து என், Nondhu Uraithu En - வாய் நோவச் சொல்வதில் என்ன பயன்?
இனி, Ini - இன்று முதலாக
எமக்கு ஆதானும்  ஆகிடு காண், Emakku Aadhanum Aagidu Kaan - நமக்கு எது வேணுமானாலும் நேரட்டும்;
மாலார் தமக்கு, Malar Thamakku - அவ்வெம்பெருமானை நோக்கி
நுமக்கு அடியோம் என்று என்று, Numakku Adiyom Endru Endru - “நாங்கள் உமக்கு அடிமைப்பட்டவர்கள்” என்று பல தடவை
அவர் திறத்தே, Avar Thiraththae - அப்பெருமான் விஷயமாகவே
யாதானும் சிந்தித்து இரு, Yaadhanum Sindhiththu Iru - எதையாவது சிந்தித்துக்கொண்டு கிடப்பாயாக.
2594பெரிய திருவந்தாதி || 10
இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ
டொருநால்வர் ஓரிருவர் அல்லால்,- திருமாற்கு
யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்.
இரு நால்வர், Iru Naalvar - அஷ்ட வஸுக்கவென்ன
ஈரைந்தின் மேல் ஒருவர், Eeraindhin Mel Oruvar - ஏகாதசருத்ரர் களென்ன
எட்டோடு ஒரு நால்வர், Ettodu Oru Naalvar - த்வாதசாதித்யர்களென்ன
ஓர் இருவர் அல்லால், Oru Irivar Allaal - அச்ஸிநீ தேவர்களென்ன ஆகிய முப்பத்துமூவரமரர்கள் தவிர (மற்றவர்களான)
யாம், Yaam - நாம்
திருமாற்கு, Thirumaarku - எம்பெருமானைப் பணிவதற்கு
வணக்கம் ஆர், Vanakkam Aar - நம்முடைய பணிவுதான் எத்தன்மையது!
ஏ பாவம், Ae Paavam - அந்தோ!;
நல் நெஞ்சே, Nal Nenje - நல்ல மனமே!
நாமா, Naamaa - நாமோ வென்றால்
மிக நாழ் உடையோம், Miga Naazh Udayom - மிகவும் குற்றமுள்ளவர்களாயிருக்கிறோமிறே.
2595பெரிய திருவந்தாதி || 11
நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,
வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத
பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,
நீரும்நீ யாய்நின்ற நீ.
ஆழாத பாரும் நீ, Aazhaadha Paarum Nee - (நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு;
நீரும் நீ, Neerum Nee - ஜலதத்வமும்*;
தீயும் நீ, Theeyum Nee - தேஜஸ்தத்வமும் நீ;
காலும் நீ, Kaalum Nee - வாயுதத்வமும் நீ;
வானும் நீ, Vaanum Nee - ஆகாசமும் நீ;
ஆய் நின்ற நீ, Aay Nindra Nee - இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாகவுடைய நீ,
நாழால் அமர் முயன்ற, Naazhaal Amar Muyantra - அஹங்காரத்தினால் யுத்தம் செய்வதில் கைவைத்த
வல் அரக்கன், Val Arakkan - கொடிய இராவணனுடைய
இன் உயிரை, In Uyirai - இனிமையான பிராணனை
வாழா வகை, Vaazha Vagai - வாழ்ந்திருக்க ஒட்டாமல்
வலிதல், Valithal - கவர்ந்து கொண்டது
நின்வலியே, Ninvaliye - உனக்கு ஒரு சூரத்தனமோ? அல்ல.
2596பெரிய திருவந்தாதி || 12
நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்?
போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும்
காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.
நெஞ்சே, Nenje - ஓ மனமே! (- (என்னை வருத்தத்திற்கு ஆளாக்கப் பார்த்தது நீயேயன்றோ.) (உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்வித்துக் கொள்ளுகிறீர்’ என்ற நெஞ்சு பதில் சொல்ல) (உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்’ என்று நெஞ்சு பதில் சொல்ல) (இப்போது முடிவாகச்சொல்கிறேன் கேள்;)- (கண்டாய்  –  முன்னிலையசை))
ஆழ் துயரில், Aazh Thuyaril - அநாதமான துக்க ஸாகரத்தில்
வீழ்விப்பான், Veelvippaan - என்னைக் கொண்டு போய்த் தள்ளுவதாக
நின்று உழன்றாய் நீ அன்றே, Nindru Uzhandraai Nee Andrae - இடைவிடாதே நின்று யத்னம் பண்ணினது நீயன்றோ;
போய் ஒன்று சொல்லி என், Poi Ondru Solli En - மேன்மேலும் நீயொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ, Po - அது கிடக்கட்டும்.
உபதேசம்தரினும், Upadesamtharinum - (எம்பெருமானுக்கு நம்பக்கல் உள்ளூற வாத்ஸல்ய முண்டு’ என்று உனக்கு நான்) உபதேசித்தாலும்
நீ காழ்ந்து என்றும் கைக்கொள்ளாய், Nee Kaazhndhu Endrum Kaikkollai - நீ என்மேற் கோபங்கொண்டு என்றைக்கும் (அவ்வுபதேசத்தைக்) குறிக்கொள்கிறாயில்லை;
போய் ஒன்று சொல்லி என், Poi Ondru Solli En - மேன்மேலும் நீ யொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ, Po - அது கிடக்கட்டும்.
கண்ணன் தான், Kannan Thaan - எம்பெருமானது திருவடிகளை
வாழ்த்துவதே, Vaazhthuvathe - வாழ்த்துவதுதான்
வழக்கு, Vazhakku - நியாயம்
2597பெரிய திருவந்தாதி || 13
வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,
இழக்கவும் காண்டும் இறைவ.- இழபுண்டே,
எம்மாட் கொண்டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்
தம்மால்காட் டுன்மேனிச் சாய்.
வழக்கொடு மாறுகொள் அன்று, Vazhakkodu Maarugol Andru - (இப்போது அடியேன் விஜ்ஞாபிக்கப் போகிற ஒரு விஷயம்) நியாத்தோடு மாறுபட்டதன்று; (- (அஃது என்னவெனில்))
அடியார் வேண்ட, Adiyaar Venda - (மேன்மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்களாகில்
இழக்கவும் காண்டும், Izhakkavum Kaandum - (மேன்மக்கள் நஷ்டப்பட்டாகிலும் காரியம் செய்வதை உலகில்) காண்கிறோம்;
இறைவ, Iraiva - ஸ்வாமீ!
இழப்பு உண்டே, Izhappu Unde - (என்வேண்டுகோளை நிறைவேற்றுதற்காக) கஷ்டப்படவேண்டியது ஏதேனுமுண்டோ? (ஒன்றுமில்லை)
யான் வேண்ட, Yaan Venda - என்னுடைய வேண்டுகோளுக்காக
எம் ஆள் கொண்டு ஆகிலும், Em Aal Kondu Aagilum - என்னை அடிமைப்படுத்திக் கொண்டாவது
என் கண்கள் தம்மால், En Kangal Thammaal - எனது கண்களுக்கு
உன்மேனி சாய், Unmeeni Saai - உனது திருமேனியின் ஒளியை
காட்டு, Kaattu - காட்டியருள வேணும்
2598பெரிய திருவந்தாதி || 14
சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே,
பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த்
தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம்
பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து.
நெஞ்சே, Nenje - ஓ மனமே! (- (அப்பெருமானைக் கொன்றுவிட நினைத்து) (இப்படிக் கேட்பது எதுக்காக? என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள்;))
பேயார், Peyaar - பூதனையானவள்,
சாயால் கரியானை, Saayal Kariyanai - நிறத்தால் கரியனான கண்ணபிரானை
உன் அறியார் ஆய், Un Ariyaar Aay - உள்ளே புகுந்து அநுபவிக்க அறியாதவளாய்
பேயர் ஆய், Peyar Aay - அறிவுகெட்டவளாய்
முலை கொடுத்தார், Mulai Koduththaar - (விஷம் தடவின) முலையை (உண்ணக்) கொடுத்தாள்;
நீ ஆர், Nee Aar - அவளுக்கு நீ உறவு முறையில் என்ன ஆகவேண்டும்?
தேம்பு ஊண் சுவைத்து, Theembu Oon Suvaiththu - ஆத்மா கெட்டுப்போம்படியான சப்தாதி  விஷய போகங்களை நீ அநுபவித்து
ஊன் அறிந்து அறிந்தும், Oon Arindhu Arindhum - (அதனால்) ஊனமடைந்திருக்கிறாயென்பதை நன்றாக நீ அறிந்திருந்தும்
போய், Poy - நம்முடைய தாழ்வுக்குத் தகாததான சிறந்த பகவத் விஷயத்தை அநுபவிப்பதாகப்) போய்
தீ வினை ஆம்பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி, Thee Vinai Aampam Paar Vaai Kain Neettal Paarthi - அநர்த்தத்தை விளைக்கவல்ல பாம்பின் வாயிலே கை வீட்டுவாரைப் போலலே பகவதநுபவம் பண்ணி மூடியப் பார்க்கிறாயே.
2599பெரிய திருவந்தாதி || 15
பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம்
பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம்
தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய
செம்மேனிக் கண்வளர்வார் சீர்.
நெஞ்சே, Nenje - ஓ மனமே!
ஓதம், Otham - கடலானது
ஆர்த்து, Aarththu - கோஷித்துக்கொண்டு
தம்மேனி தாள், Thammeeni Thaal - தம்முடைய திருமேனியையும் திருவடியையும்
தடவ, Thadava - (அலையாகிற கையினாலே) தடவும்படியாக
தாம் கிடந்து, Thaam Kidandhu - (அக்கடலில்) பள்ளி கொண்டருளி
தம்முடைய செம்மேனி கண் வளர் வார், Thammudaiya Semmeeni Kan Valar Vaar - தம்முடைய செந்நிறமான திருக்கண்கள் வளரப்பெறுகின்றவரான பெருமாளுடைய
சீர், Seer - திருக்குணங்களை,
படு துயரம் பேர்த்து ஓத, Padu Thuyaram Perthu Otha - கொடிய துக்கங்கள் தீரும்படி நாம் பேசுவதனால்
பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை, Peedu Azhivu Aam Peechu Illai - அவனுடைய பெருமைக்கு அழிவு உண்டாய்விடுமென்பதில்லை;
எதிரிதா பார்த்து ஓர், Edhiridha Paarthu Oor - (இவ்விஷயத்தை) கண்ணெதிரே நிற்பதாகக் கண்டு தெரிந்துகொள்.
2600பெரிய திருவந்தாதி || 16
சீரால் பிறந்து சிறப்பால் வளராது,
பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப்
புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே?
சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து.
பேராளா, Peraala - ‘மஹாநுபாவனான பெருமானே!
சீரால் பிறந்து சிறப்பால் வளராது, Seeraal Pirandhu Sirappaal Valaraadhu - சிறப்புடன் பிறப்பதையும் சிறப்புடன் வளர்வதையும் செய்யாமல்
பேர் வாமன் ஆகாக்கால், Peer Vaaman Aagaakkal - திருநாமம் வ மானென்று வைத்துக் கொள்ளாமலிருந்தால்
மார்பு ஆர புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி, Maarbu Aara Pulki Nee Undu Umizhndha Bhoomi - உன்னாலே மார்பால் அணையப்பட்டும் வயிற்றில் வைக்கப்பட்டும் பின்பு வெளிப்படுத்தப்பட்டும் இப்படி ஸ்வாதீநமாயிருந்த இப்பூமியானது.
நீர் ஏற்பு அரிதே, Neer Erppu Aridhe - தாரை வார்த்து தத்தம் பண்ணிக் கொடுக்கப்பெற முடியாதோ?’
யாம் அறிய, Yaam Ariya - இவ்விஷயத்தை அடியோம் தெரிந்து கொள்ளும்படி
நீ சூழ்ந்து சொல்லு, Nee Soozhndhu Sollu - நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேணும்.
2601பெரிய திருவந்தாதி || 17
சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய,
தாள்வரைவில் லேந்தினார் தாம்.
எங்கும் சூழ்ந்து, Engum Soozhndhu - நாற்புறங்களிலும் சுற்றிக்கொண்டு
அரக்கன், Arakkan - இராவணனுடைய
வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடிய, Vaal Varaigal Pol Van Thalaigal Thaam Idhiya - ஒளி பொருந்திய, மலைகள் போல் வலிதான தலைகளானவை இற்று விழும்படி
தாள்வரைவில் ஏந்தினார் தாம், Thaalvaraivil Aendhinar Thaam - காலுரத்தை யுடைத்தாய் மலை போன்றதான வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்
சூழ்ந்து, Soozhndhu - (இந்த லீலா விபூதியிலே வந்து) வளைத்துக் கொண்டு
அடியார் வேண்டின் அக்கால், Adiyaar Veenin Akkal - ‘ஓ ஜனங்களே! நீங்கள் எனக்கு அடிமைப்பட வேணும்’ என விரும்பினால்
தோன்றாது விட்டாலும், Thondraathu Vittaalum - ஒரு அடியவனும் அகப்படாதபடி உபேக்ஷிக்கப் பெற்றாலும்
வாழ்ந்திடுவர், Vaazhnthiduvar - திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்) உகந்தேயிருப்பர்;
பின்னும், Pinnum - எக்காலத்திலும்
தம் வாய் திறவார், Tham Vaai Thiravaar - (பிராட்டிமாரிடத்திலும் இந்த மனக் குறையை) வாய் திறந்து சொல்லிக்கொள்ளமாட்டார்.
2602பெரிய திருவந்தாதி || 18
தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக,
பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப்
பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.
தாம்பால் ஆப்புண்டாலும், Thaampaala Aappundhaalum - (அசோதையினால்) தாம்பு கொண்டு கட்டியடிக்கப் பெற்றாலும்
அத்தழும்புதான் இளக, Aththalumbudhaan Ilaga - அந்தத் தாம்பினால் கட்டினத்தாலுண்டான காய்ப்பு அற்பதம் என்னும்படி
பாம்பால், Paampaala - காளியனாகிய பாம்பினால்
ஆப்புண்டு, Aappundu - கட்டப்பட்டு
பாடு உற்றாலும், Paadu Utralaam - கஷ்டங்களையடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்)
சோம்பாது, Soombaadhu - (ஜகத்ஸ்ருஷ்டியில்) சோம்பல்படாமல்
இ பல் உருவை எல்லாம், I Pal Uruvai Ellam - இவ்வுலகில் காணப்படுகிற பலபல பிராணிகளையெல்லாம்.
படர்வித்த, Padarvitha - விஸ்தாரமாக வுண்டாக்கின
வித்தா, Viththa - ஆதிமூலமே!
உன் தொல் உருவை ஆர் அறிவார், Un Thol Uruvai Aar Arivaar - உன்னுடைய திவ்ய ஸ்வரூபத்தை அறிவாருண்டோ?
சொல்லு, Solla - நீயே சொல்லு.
2603பெரிய திருவந்தாதி || 19
சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே,
எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண்
மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக,
காத்தானைக் காண்டும்நீ காண்.
சூது அறியா நெஞ்சமே, Soodhu Ariyaa Nenjamai - செய்ய வேண்டியது இன்னதென்றறியாமல் தளும்புகிற மனமே! (- (மெய்யே காண விரும்பினால்))
சொல்லில் குறை இல்லை, Sollil Kurai Illai - பகவத் விஷயத்தைப் பேசினால் பேச்சில் குறையில்லை; (அல்லது) நமக்கொரு குறையில்லை;
தொல்லை கண், Thollai Kan - அநாதியான இப்பூமியில்
மா தானைக்கு எல்லாம், Maa Thanaikku Ellam - (துரியோதநாதிகளுடைய) பெரிய சேனைகளுக்கெல்லாம்.
ஓர் ஐவரையே மாறு ஆக, Oor Aivaraie Maaru Aaga - பஞ்சபாண்டவர்களே எதிரிகளாம் படி
எல்லி பகல் என்னாது எப்போதும் காத்தானை, Elli Pagal Ennaadhu Eppodhum Kaathaanai - இரவுபகலென்னாமல் எக்காலத்திலும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை
காண்டும், Kaandum - காண்போம்!
நீ காண், Nee Kaan - நீ காணலாம்.
2604பெரிய திருவந்தாதி || 20
காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,
நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி
உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,
திருவாகம் தீண்டிற்றுச் சென்று.
அறிவு கைக் கொண்ட நல் நெஞ்சம், Arivu Kaik Konda Nal Nenjam - அறிவுடைய நல்ல நெஞ்சே
மாணி உரு ஆகிக்கொண்டு, Maani Uru Aagikkondu - வாமநரூபியாய்
உல்கம் நீர் ஏற்ற சீரான், Ulgam Neer Aetra Seeraan - (மாவலியிடத்திற் சென்று) உலகங்களை நீரேற்றப் பெற்ற சீர்மை பொருந்திய திருமால்.
சென்று, Sendru - தானே எங்கும் பரவி
திரு ஆகம, Thiru Aagama - தனது திருமேனியினாலே
தீண்டிற்று, Theendirru - உலகங்களையெல்லாம் தீண்டினானென்பதை
காணப்புகில், Kaanappugil - ஆராய்ந்தோமாகில்
நாம் பேசில், Naam Pesil - நாம் பேசும் வார்த்தைகளுக்கு
நாணப்படும் அன்றே, Nanappatum Anre - வெட்கப்பட வேண்டுமன்றோ
2605பெரிய திருவந்தாதி || 21
சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப்
பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய,
காருருவன் தான்நிமிர்த்த கால்.
அன்று, Anru - முன்பு மாவலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில்
அங்கு, Anku - அந்த மாவலியின்யாக பூமியிற் சென்று
பார் உருவும், Par Uruvum - பூமியாகிறஸ்துவும்
பார் வளைத்த நீர் உருவும், Par Valaitta Nir Uruvum - அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற ஜலதத்துவமும்
கண் புதைய, Kan Pudaiya - மறையும்படி
கார் உருவன் தான் நிமிர்த்த கால், Kar Uruvan Tan Nimirtta Kal - காளமேகத் திருவுருவனான எம்பெருமான் நிமிர்த்தருளிய திருவடிகள்
அங்கு வெம் நரகில் சென்று சேராமல் காப்பதற்கு, Anku Vem Narakil Cenru Ceramal Kappatarku - கொடிய அந்த நரகங்களிலே நான் சென்று சேராதபடி என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு
இன்று, Inru - இப்போது
இங்கு, Inku - இவ்விடத்தில்
என் நெஞ்சால், En Nencal - என்னுடைய நெஞ்சிலே
இடுக்குண்ட, Itakkunta - நெருக்குப்பட்டுக்கிடக்கின்றன.
2606பெரிய திருவந்தாதி || 22
காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்,
மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால்
தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம்,
வீற்றிருக்குமிடம் காணா திளைத்து.
என் மனத்தே, En Manatte - எனது நெஞ்சினுள்ளே
மாலால் குடி புகுந்தார், Malal Kuti Pukunrar - திருமால் வந்து சேர்ந்துவிட்டார்;
வல் வினையார் தாம், Val Vinaiyar Tam - (இதுவரையில் இங்கே குடியிருந்த) கொடிய பாவங்கள்.
வீற்றிருக்கும் இடம் காணாது, Virrirukkum Itam Kanadu - (இனிமேலும்) அதிகாரம் செலுத்திக்கொண்டு தங்கியிருக்க இடம் காணாமல்
கால் பொத திரிந்து, Kal Pota Tirintu - கால் நோவத்திரிந்து அலைந்ததனால்
மேலால், Melal - முன்பெல்லாம்
தருக்கும், Tarukkum - என்னைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்த
இடம் பாட்டினொடும், Itam Pattinotum - பெருமையோடே
இளைத்து, Ilaitthu - வருத்தமுற்று
இன்நாள், Innaal - இப்போது
கத்துவாரம், Kattuvaaram - கத்திக்கொண்டு கிடக்கின்றன போலும்.
2607பெரிய திருவந்தாதி || 23
இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன்,
இளைக்க நமன்தமர்கள் பற்றி – இளைப்பெய்த,
நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,
தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
நமன் தமர்கள், Naman Thamarhal - யமபடர்கள்
இளைக்க பற்றி, Ilaiyka Patri - பிடிக்கிற பிடியிலே நாம் துடிக்கும்படி நம்மைப் பிடித்து
இளைப்பு எய்த, Ilaiyppu Eitha - அதற்கு மேலும் அதிகமாகத் துடிக்கும்படி
நாய்தந்து மோதாமல், Naithandu Moothamal - நாய்களை ஏவி நலியாமற்படி
நங்குவான் நல்காப்பான், Nanguvaan Nalkaappaan - (எம்பெருமான் நமக்கு) அருள் செய்தாலும் சரி, அருள் செய்யாவிட்டாலும் சரி;
தான், Thaan - அந்த எம்பெருமான்தான்
எவ்வுயிர்க்கும், Evvuirkkum - எல்லாப்பிராணிகளுக்கும்
தாய் தந்தை, Thaai Thandai - தாயும் தமப்பனுமாவன்;
சொன்னேன், Sonnain - (இவ்வுண்மையை உனக்குச்) சொல்லிவிட்டேன்;
இளைப்பாய் இளைப்பாய், Ilaiyppai Ilaiyppai - இனி நீ  அநர்த்தப்பட்டாலும் படு; சுகப்பட்டாலும் படு.
2608பெரிய திருவந்தாதி || 24
தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்
தானே பிறர்கட்கும் தற்றோன்றல்,- தானே
இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்,
அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்.
தானே தனி தோன்றல், Thaane Thani Thondral - அவ்வெம்பெருமானொருவனே புருஷோத்தமன்;
தானே தன் அனப்பு ஒன்று இல்லாதான், Thaane Than Anappu Ondru Illadhaan - அவனே ஒப்பற்றவன்;
இளைக்கில், Ilaiykkil - (ரக்ஷிக்குந் தொழிலில்) சளைத்து நின்கிற பக்ஷத்தில்
பார், Paar - இவ்வுலகமானது
கீழ்மேல் ஆம், Keelmael Aam - தலைகீழாக விபரீதமாய்வீடும்;
பிறர் தானே கட்கும் தற்றேன்றல், Pirark Thaane Katkum Thatrenral - அவனே மற்றெல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவன்;
(தானே), Thane - இப்படிப்பட்ட எம்பெருமான்றானே
மீண்டு அமைப்பான் ஆனால, Meendu Amaippaan Aanala - (தலை கீழானவற்றை அவனே) மறுபடியும் சரிப்படுத்தப்புகுந்ததால்
பாரின் மேல் ஆர் அளக்கிற்பார், Paarin Mel Aar Alakkirpaar - இப்பூமியில் ஆர்தாம் (அவனுடைய ரக்ஷகத்வத்தை) அளவிடவுரியர்?
2609பெரிய திருவந்தாதி || 25
ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை
ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார்
மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன்,வானோர்
இனத்தலைவன் கண்ணனால் யான்.
ஆரானும் ஆதானும் செய்ய, Aaraanum Aadaanum Seyya - யாராவது எதையாவதுசெய்து கொள்ளட்டும்;
அகல் இடத்தை ஆராய்ந்து, Akal Idaththai Aaraindhu - விசாலமான இப்பூமியை ஆராய்ந்து
அது திருத்தல் ஆவதே, Adhu Thiruththal Aavadhe - அவரவர்களது காரியங்களைத் திருத்த நம்மாலாகுமோ?
யான், Yaan - நானோவென்றால்
சீர் ஆர் மனத்தலை, Seer Aar Manaththalai - (எனது) சிந்த மனத்திலுள்ள
வன் துன்பத்தை, Van Thunbaththai - வலிய துன்பங்களை
வானோர் இனம் தலைவன் கண்ணனால், Vaanor Inam Thalaivan Kannanaal - நித்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனான கண்ணபிரானால்
மாற்றினேன், Maatrinen - நீக்கிக்கொண்டேன்.
2610பெரிய திருவந்தாதி || 26
யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்
கானும் மலையும் புகக்கடிவான்,- தானோர்
இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,
அருளென்னும் தண்டால் அடித்து.
ஓர்  இருள் தான் அன்ன மாமேனி, Oor Irul Thaan Anna Maameni - இருள்தானே ஒரு வடிவு கொண்டாற்போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியையுடைய
எம் இறையார், Em Iraiyaar - எம்பெருமான்
தந்த, Thanda - அளித்த
அருள் என்னும் தண்டால், Arul Ennum Thandhaal - க்ருபையாகிற ஒரு தடியினாலே
வல்வினையை, Valvinaiyai - கொடிய பாவங்களை
அடித்து, Adiththu - புடைத்து,
கானும் மலையும் புக, Kaanum Malaiyum Puga - (அவை) காடுகளிலும் மலைகளிலும் சென்று புருரும்படியாக
கடிவான், Kadivaan - தூரத்துவதற்கு
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம், Yaanum En Nenjum Isainthozhindhom - நானும் என் மலாமுமாகிற இருவரும் இசைந்து நின்றோம்.
2611பெரிய திருவந்தாதி || 27
அடியால் படிகடந்த முத்தோ,அதன்றேல்
முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய்.
செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம்,
அறிகிலாமால் நீயளந்த அன்று.
நெடியாய், Nediyai - பகவானே!
செறி கழல் கொள் தான் நிமிர்த்து, Serri Kazhal Kol Thaan Nimirthu - செறிந்த வீரக் கழலை அணிந்த திருவடிகளை நீட்டி
உலகம் எல்லாம் சென்று நீ அளந்த அன்று, Ulagam Ellam Sendru Nee Alandha Andru - கீழுலகம் மேலுலகமெல்லாம் வியாபித்து அளந்த காலமாகிய த்ரிஸிக்கிரமாவதாரத்திலே
அடியால் படி  சடந்த முத்தோ, Adiyal Padi Sadandha Muththo - திருவடியால் பூமி முழுவதையும் அளந்துகொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
அது அன்றேல், Adhu Andraeel - அல்லது
முடியால் விசும்பு அளந்த முந்தோ, Mudiyal Visumbu Alandha Mundho - திருவடியால் மேலுலகத்தையெல்லாம் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
அறிகிலம், Arikilam - அவ்விரண்டு ஸந்தோஷங்களுள் எந்த ஸந்தோஷம் இப்போது உன் நெஞ்சில் ஓடுகிறதென்பதை அறிகிறோமில்லை.
2612பெரிய திருவந்தாதி || 28
அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,
இன்றேநாம் காணா திருப்பது வும்,-என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்
உட்கண்ணால் காணு முணர்ந்து.
என்றேனும், Endraenum - எக்காலத்திலும்
கண் கண்ணால், Kan Kannal - வெளிக்கண்ணாலே
நாணாக, Naanaga - காணக்கூடாத
அவ்வுருவை, Avvuruvai - அப்படிப்பட்ட விலக்ஷணமான திருவுருவத்தை
நெஞ்சு என்னும் உன் கண் உணர்ந்து  காணுமேல், Nenju Ennum Un Kan Unarndhu Kaanumeel - நெஞ்சாகிற அகக்கண் விகஹித்து ஸாக்ஷாத்கரிக்குமாகில்,
அன்றே, Andrae - அப்போதே,
ஆழியான கார் உருவம், Azhiyana Kaar Uruvam - திருவாழியை நிரூபகமாகவுடையனான எம்பெருமானுடைய கரிய திருமேனியை
நம் கண் காணும், Nam Kan Kaanum - நமது புறக்கண்ணும் காணப்பெறும்;
நாம் காணாதிருப்பதுவும் இன்றே, Naam Kaanadhiruppadhum Indrae - நாம் அவ்வுருவத்தைக் காணாமல் வருந்திக் கிடப்பது அகக்கண் மலராத இப்போது மாத்திரமே.
2613பெரிய திருவந்தாதி || 29
உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே,
இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத்
தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,
எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு.
இணரும் துழாய் அலங்கல் எந்தை, Inarun Thuzhai Alankal Endhai - (திருமேனியின் ஸம்பந்தத்தாலே) மேன்மேலும் தழைத்தோங்கு கின்ற திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமான்
தனக்கு எளியர், Thanakku Ezhiyar - தனக்கு அடிமைப்பட்டவர்கள்
எவ்வளவர், Evvalavar - (தன்மேல்) எவ்வளவு அன்பு உடையவர்களோ
அவ்வளன், Avvalan - தானும் தன்னை அவ்வளவு காட்டிக் கொடுப்பவன் (திருமால்)
ஒருவர்க்கு, Oruvarkku - (தாமாகவே முயற்சி செய்பவர்களில்) ஒருவர்க்காவது
செவ்வே, Sevvae - நேராக
உணர  எளியனே?, Unar Ezhiyane - அறியக்கூடியவனோ? (ஒருவர்க்கும் அறியக்கூடியவைனல்லனாயினும்)
ஆனால், Aanaal - ஆகையினாலே
இங்கு, Inku - இவ்விடத்தில்
எம்பெருமான், Emperumaan - எம்பெருமான்
எனக்கு, Enakku - என்னாவறிந்து
உணர எளியன், Unar Ezhiyan - கொள்ளக்கூடியவன்.
2614பெரிய திருவந்தாதி || 30
இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வி னையார் தாம்,மீண்
டடியெடுப்ப தன்றோ அழகு?
இங்கு, Inku - என்னுடைய இந்த நெஞ்சில்
பண்டுபோல், Pandupol - இத்தனை நாளும் போலே
என்னுடைய செம் கண் மால், Ennudaiya Sem Kan Maal - என்மேல் வாத்ஸல்யத்தாலே வெந்த திருக்கண்களையுடையனான பெருமானுடைய
சீர்க்கும், Seerkum - கல்யாண குணங்களுக்கே
உள்ளம் சிறிது, Ullam Siridhu - எனது நெஞ்சு இடம்போராத தாயிருக்கின்றது.
அங்கே, Ange - முன்பு விசாலமாக வாழ்ந்தவிடத்திலே
வீற்றிருத்தல் இல்லை, Veetiruththal Illai - (பாவங்கள் இனி) தங்கியிருக்க முடியாது (ஏனென்றால்)
வல்வினையார் தாம், Valvinaiyaar Thaam - கொடிய பாவங்கள்
மடி அடக்கி நிற்பதனில், Madi Adakki Nirpadanil - துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக நிற்பதைவிட
ஈண்டு, Eendu - இவ்விடத்தில் நின்றும்.
அடி எடுப்பது அன்றோ அழகு, Adi Eduppadhu Andro Azhagu - கால் பேர்ந்து வெளிக் கிளம்பிப் போவதன்றோ அழகியது.
2615பெரிய திருவந்தாதி || 31
அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,
நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக்
குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு.
நல்வினையை தீர்ப்பான், Nalvinaiyai Theerppaan - வலிய பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக (- (வல்வினையைத் தீர்ப்பதற்கு அறிந்த உபாயம் இதுவே.))
அழகும் அறிவோம் ஆய், Azhagum Arivom Aay - அழகிய உபாயத்தை அறிந்தோமாக,
குடங்கள், Kudangal - குடங்களை
தலை மீது எடுத்துக்கொண்டு, Thalai Meedhu Eduththukondu - தலையின் மேலே எடுத்து வைத்துக்கொண்டு
சுழல ஆடி, Suzhala Aadi - ஆகாசத்திலே சுழன்று வரும்படி கூத்தாடி
அன்று, Anru - முற்காலத்திலே (அக்குடக்கூத்தாடினவிடாய் தீர்வதற்காக)
அத் தட கடலை மேயார் தமக்கு, Ath Thada Kadalai Meyaar Thamakku - (முதலில் விட்டு வந்த) அப்பெரிய திருப்பாற்கடலிலேயே போய்ச் சேர்ந்த பெருமானுக்கு
நிழலும் அடி தாறும் ஆனோம், Nizhalum Adi Thaarum Aanom - பாது நிழலாகவும் பாதரேகையாகவும் உடன்பட்டோமானோம்.
2616பெரிய திருவந்தாதி || 32
தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,
தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று
தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,
யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது?
தமக்கு அடிமை வேண்டுவார், Thamakku Adimai Vendum Vaar - தாம் அடிமையாயிருப்பதற்கு ஆசைப்படுமவரான
தாமோதரனார் தமக்கு, Thamodharanaar Thamakku - தாம்பாலாப்புண்ட பெருமானுக்கு
அடிமை செய் என்றால், Adimai Sei Endraal - (நெஞ்சே! நீ) அடிமை செய் என்று சொன்னால்
நெஞ்சினார், Nenjinaar - எனது நெஞ்சானது
செய்யாது, Seiyyaadhu - அப்படியே அடிமை செய்யாமல்
எமக்கென்று, Emakkendru - என் வார்த்தை கேளாத ஸ்வாகத் திரியம் பாராட்டி
தாம் செய்யும தீ வினைக்கே, Thaam Seiyyum Thee Vinnaikkee - (வெகுகாலமாகத்) தான் செய்து வருகிற தப்புக் காரியத்திலேயே
தாழ்வுறுவர், Thaazhvuruvaar - ஊன்றியிருக்கின்றது;
இங்கு, Inku - இப்படிப்பட்ட நிலைமையில்
யாம் செய்வது யாது, Yaam Seivathu Yaadhu - நான் செய்யத்தக்கது என்னோ?
2617பெரிய திருவந்தாதி || 33
யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ,
யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,- யாதானும்
தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால்
பாறுபா றாக்கினான் பால்.
யாதானும் தேறும் ஆ செய்யா அசுரர்களை, Yaadhaanum Therum A Seiyaa Asurarhalai - கொஞ்சமும் விச்வஹிக்கும்படியான செயலைச் செய்யாதவர்களான அஸுரர்களை (- (எப்போதும் தீங்கையே செய்பவர்களை) (சிறந்த பெருமானை அயோக்யமான நாம் கிட்டவாமோ என்னில்) (அணுகாவாறு தான் என்கொல்?))
நேமியாய், Nemiyaa - திருவாழியினாலே
பாறு பாறு ஆக்சினான் பால், Paaru Paaru Aaksinaan Paal - துண்டம் துண்டமாகத் துணித்தொழித்த எம்பெருமான் பக்கலில்
யாதானும் நேர்ந்து, Yaadhaanum Neerndhu - எதையாவது ஸமர்ப்பித்து
அணுகா ஆறுதான் என்கொல், Anugaa Aaru Thaan Enkol - கிட்டாமலிருப்பது என்னோ?
யாதானும் ஒன்று அறியில், Yaadhaanum Ondru Ariyil - எதையாவது ஒரு வஸ்துவை அறியக்கூடிய சைதந்யத்தையுடைத்தாயிருந்து வைத்தும்
தன் உகக்கில், Than Ugakkil - தான் ஆநந்தப்படுவதைத் தன்மையாக உடைத்தாயிருந்து வைத்தும்
2618பெரிய திருவந்தாதி || 34
பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும்,
நீதியாய்! நிற்சார்ந்து நின்று.
நீலாழி சோதியாய், Neelaazhi Sothiyaai - நீலக்கடல் போன்ற நிறத்தையுடையவனே!
ஆதியாய், Aadhiyaai - முழுமுதற் கடவுளே!
எம்பால் தொல் வினை கடியும் நீதியாய், Empaal Thol Vinai Kadiyum Neethiyaai - எம்மிடத்திலே யுள்ள பழைய பாவங்களைத் தொலைக்குமியல்வுடையவனே!
யாம், Yaam - அடியோம்
நின், Nin - உன்னை
சார்ந்து நின்று, Saarndhu Nindru - அணுகி,
நீ பால் ஆழி கிடக்கும் பண்பை, Nee Paal Aazhi Kidakkum Panbai - நீ திருப்பாற் கடலில் சயனிக்கு மழகை
கேட்டேயும், Kaetteyum - காதாற்கேட்ட மாத்திரத்திலும்
கால் ஆழும், Kaal Aazhum - கால்கள் தடுமாறுகின்றன;
நெஞ்சு அழியும், Nenju Azhiyum - நெஞ்சு சிதிலமாகா நின்றது;
கண் சுழலும், Kan Suzhalum - கண்கள் சுழலவிடா நின்றன.
2619பெரிய திருவந்தாதி || 35
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,
ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை
வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான்,
அன்புடைய னன்றே யவன்?
அன்று, Anru - முற்காலத்தில்
அம் கை வன் புடையால், Am Kai Van Pudaiyaal - அழகிய திருக்கைகளாலே ஓங்கி அறைந்ததனால்
பொன் பெயரோன் வாய் தகர்ந்து, Pon Peyroon Vaai Thakarndhu - இரணியாசுரனுடைய (ப்ரஹ்லாதனை அதட்டின) வாயைப் புடைத்து
நின்றும், Nindrum - (என்னெஞ்சிலே) நின்று கொண்டிருந்தும்
இருந்தும், Irundhum - வீற்றிருந்தும்
கிடந்தும், Kidandhum - சயனித்திருந்தும்
திரிதந்தும், Thiridandhum - எழுந்துஉயாலியும்
ஒன்றும், Ondrum - கொஞ்சமும்
மார்பு இடந்தான் அவன், Maarbu Idandhaan Avan - (அவ்விரணியனுடைய) மார்பைக் கிழித்தெறிந்த பெருமான்.
அன்பு உடையான் அன்றே, Anbu Udaiyaan Andrae - (ஆச்ரிதர்திறத்தில்) மிக் அன்புடையவனன்றோ; (ஆனது பற்றியே)
ஓவாற்றான், Ovaattraan - திருப்தியடைகிறானில்லை;
என் நெஞ்சு அகலான், En Nenju Akalaan - என்னுடைய நெஞ்சைவிட்டு நீங்குகிறானில்லை.
2620பெரிய திருவந்தாதி || 36
அவனாம் இவனாம் உவனாம், மற்றும்ப
ரவனாம் அவனென் றிராதே,- அவனாம்
அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்,
அவனே எவனேலும் ஆம்.
அவன், Avan - ஸர்வேச்வரனானவன்
அவன் ஆம், Avan Aam - துர்பலனாயிருப்பனோ?
இவன் ஆம், Ivan Aam - ஸுலபனாயிருப்பனோ?
உவன் ஆம், Uvan Aam - மத்யஸ்தனாயிருப்பனோ?
மற்று உம்பரவன் ஆம், Mattru Umbaravan Aam - அல்லது, மிகவும் உயர்ந்தவனாய் எட்டாதேயிருப்பனோ?
என்று இராதோ, Endru Iraatho - என்றிப்படி பலவகையான ஸந்தேஹங்கள் கொண்டிராமல்
அவன் அவனே ஆம் என தெளிந்து, Avan Avane Aam En Thelinthu - எம்பெருமானுடைய ஸ்வரூபமே லௌலப்யம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டு
கண்ணனுக்கே தீர்ந்தால், Kannankke Theerndhaal - அந்த ஸௌவப்யத்தை க்ருஷ்ணாவதார முகத்தாலே விளங்கக் காட்டிய அவனுக்கே ஆட்பட்டால்
அவனே, Avane - அப்பெருமானே
எவனேலும் ஆம், Evanelum Aam - எல்லாவுறவுமுறையுமாவன்.
2621பெரிய திருவந்தாதி || 37
ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே?
நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய்
மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்
அதுகரமே அன்பால் அமை.
நல் நெஞ்சே, Nal Nenje - நல்ல மனமே! (- (ஆகையால் நீ செய்யத்தக்கது என்னவென்றால்))
ஆம் ஆறு அறிவு உடையார் ஆவது, Aam Aaru Arivu Udaiyaar Aavathu - யுக்தமான அறிவை உடையவராக ஆவது
அரிது அன்றே, Aridhu Andrae - (உலகில் யார்க்கும்) அருமையன்றோ;
அது, Adhu - அப்படிப்பட்ட அறிவை
நாமே உடையோம், Naam E Udaiyom - (பகவத் கிருபையால்) பெற்றிருக்கின்றோம்;
பூ மேய் மதுகரம் மே தண் துழாய், Poo Mey Mathukaram Me Than Thuzhai - பூக்களிலே மேய்கின்ற வண்டுகள் படிந்துள்ள குளிர்ந்த திருத்துழாயையுடையனாய்
மாலாரை, Maalaarai - (ஆச்ரிதர் திறத்தில்) வ்யாமோஹமுடையான பெருமாளை
வாழ்த்து ஆம் அது, Vaazhthu Aam Adhu - வாழ்த்துவதாகிற அக்காரியமொன்றிலேயே
அன்பால், Anbaal - பக்தியுடன்
கரமே, Karame - திண்ணமாக
அமை, Amai - ஊன்றியிரு.
2622பெரிய திருவந்தாதி || 38
அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே,
இமைக்கும் பொழுதும் இடைச்சி – குமைத்திறங்கள்,
ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே,
பேசியே போக்காய் பிழை.
நெஞ்சே, Nenje - ஓ மனமே!
ஆராயில், Aaraayil - ஆராய்ந்து பார்த்தால்
இமைக்கும் பொழுதும், Imaykkum Pozhudum - ஒரு க்ஷண காலமாகிலும்
அமைக்கும் பொழுது உண்டே, Amaikkum Pozhuthu Unde - வீண்போது போக்க முடியுமோ?
இடைச்சி குமை திறங்கள், Idaichchi Kumai Thirangal - யசோதையின் கையிலே அகப்பட்டு இவன் நலிவுபட்ட பாடுகளை
ஏசியே ஆயினும், Easiyai Aayinum - பரிஹா ஸோக்தியாகச் சொல்லியாவது
ஈன் துழாய் மாயளையே, Een Thuzhai Maayalaiye - போய்கமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானைப் பற்றியே
பேசியே, Pesiyye - (எதையாவது) பேசிக்கொண்டே
பிழை, Pizhai - உனது பாவங்களை
போக்காய், Pokkai - போக்கிக் கொள்ளப்பார்.
2623பெரிய திருவந்தாதி || 39
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே! பேசாய்,
தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால்
போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே
வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு.
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை, Thazhaikkum Thuzhai Maarvan Thannai - தழைத்தோங்குகின்ற திருத்துழாய் மாலையைத் திருமார்விலே யுடையனான எம்பெருமானைக் குறித்து
அழைத்து, Azhaitthu - கூப்பிட்டு
ஒருகால், Orukaal - அவனுக்குத் திருவுள்ளமானவொரு காலத்திலே
போய், Poy - பரமபதத்திலே சென்று
பொலிய, Poliya - நன்றாக
உபகாரம், Upakaaram - கைங்கரியங்கள் செய்கையாகிற உபகாரத்தை
கொள்ளாது, Kollaadhu - கொள்ள முயலாமல்
அவன் புகழே, Avan Pugazhe - அப்பெருமானது திருக்குணங்களையே
வாய் உபகாரம் கொண்ட, Vaai Upakaaram Konda - வாயாலே சொல்லிக்கொண்டருக்கையாகிற
வாய்ப்பு, Vaippu - இந்த நேர்பாடு
பிழைக்க முயன்றோமோ, Pizhaikka Muyanrom - தப்பு செய்ததாமோ?
பேசாய், Pesai - நீ சொல்வாய்.
2624பெரிய திருவந்தாதி || 40
வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,
போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால
பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை
மாய்த்தானை வாழ்தே வலி.
வா நெஞ்சே, Va Nenje - வாராய் மனமே!
இது ஒப்ப வாய்ப்பு மற்று இல்லை, Idhu Oppa Vaippu Matru Illai - இப்போது நமக்கு வாய்திருக்கிற மாதிரி மற்று எப்போதும் வாய்க்கமாட்டாது காண;
வெம் நரகில், Vem Narakil - (நைச்சியம் பேசிப் பின் வாங்குவதாகிற) கொடிய நரகத்திலே
பூவியேல், Pooviyel - கொண்டு தள்ளி விடாதே;
தீ பால, Thee Paal - தீயதான தன்மையையுடையலான
பேய் தாய், Pei Thaai - தாய் வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய
உயிர், Uyir - பிராணனை
பால், Paal - அவளது முலைப்பாலோடே
நலாய், Nalai - கலந்து
உண்டு, Undu - அமுது செய்து
அவன் உயிரை மாய்த்தானை, Avan Uyirai Maayththaanai - அப்பூதனையினது உயிரை முடித்த பெருமானை
வாழ்த்தே, Vaazhththe - வாழ்த்துதலே
வலி, Vali - நமக்கு மிடுக்காம்.
2625பெரிய திருவந்தாதி || 41
வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கி,-வலியநின்
பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,
பன்னாளும் நிற்குமிப் பார்.
வலியம் என நினைந்து, Valiyam Ena Ninaindhu - நாமே பலசாலிகள்’ என்று நினைத்துக் கொண்டு (- (நீ கைகோகக் காரியம் செய்ததைக் கண்ணால் கண்டு வைத்தும்))
வலிய முடி, Valiya Mudi - வலிதான தலைகள்
இடிய, Idiya - சிதறியொழியும்படி
வாங்கி, Vaangi - போக்கடித்து
நின், Nin - உன்னுடைய
வலிய பொன் ஆழி கையால், Valiya Pon Aazhi Kaiyaal - வலிதாயும் அழகிய திருவாழியையுடையதாயுமுள்ள திருக்கையாலே
புடைத்திடுதி, Pudaitthiduthi - (அந்த மல்லர்களை) அடித்துவிட்டாய்;
வந்து எதிர்த்த மல்லர், Vandhu Edhirththa Mallar - எதிரிட்டு வந்த மல்லர்களுடைய
இப்பார், Ippaar - இவ்வுலகமானது
கீளாதே, Keelaadhe - வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்
பல் நாளும் நிற்கும், Pal Naalum Nirkkum - சிரஞ்ஜீவியாயிருக்கின்றதே! (என்ன கல் நெஞ்சோ!)
2626பெரிய திருவந்தாதி || 42
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன்படைத்தா னென்பரால்,- பாரிடம்
ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு
ஆவான் பூகாவால் அவை.
பார் உண்டான், Paar Undhaan - (பிரளய காலத்தில்) பூமியை விழுங்கினான்; (- (ஸ்ரீமந் நாராயணனே))
பார் இடந்தான், Paar Idandhaan - (மஹாவரடாநஹமாகிப்) பூமியை ஒட்டுவிடுவித்தெடுத்தான்;
பார் அளந்தான், Paar Alandhaan - (திரிவிக்கிரமனாகிப்) பூமியை அளந்து கொண்டான்;
முன், Mun - முதல்முதலாக
பார் இடம் படைத்தான், Paar Idam Padaiththaan - இப்பூமியை யெல்லாம் உண்டாக்கினான்
என்பர், Enbar - என்ற சாஸ்த்ர ஞானிகள் சொல்லுகிறார்கள்;
பார் உமிழ்ந்தான், Paar Umizhndhaan - (பிறகு) அதைப் புறப்படவிட்டான்;
பார் இடம் ஆவானும் தான், Paar Idam Aavaanum Thaan - அவனே ஸகல ப்ரபஞ்ச ஸ்வரீபியாகவுமிருக்கிறான்;
ஆனால், Aanaal - ஆனபின்பு (நமக்கு)
இடம் ஆர், Idam Aar - ஆச்ரயமாகக் கூடியவர்கள் வேறு யார்? (ஆருமில்லை)
அவை, Avai - இவ்வுலகங்கள்
மற்று ஒருவர்க்கு, Mattru Oruvarkku - ஸ்ரீமந்நாராயணனைத் தவிர மற்றொரு தெய்வத்துக்கு
ஆவான் புகா, Aavaan Pugaa - சேஷப்பட்டிருக்க மாட்டா.
2627பெரிய திருவந்தாதி || 43
அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,
நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ,
மனத்துயரை மாய்க்கும் வகை.
அவயம் என நினைத்து வந்த, Avayam Ena Ninaiththu Vanda - அபயம் வேண்டிவந்து சரணமடைந்த
சுரர் பால், Surar Paal - தேவதைகளிடத்திலுள்ள
நவையை, Navaiyai - குற்றங்குறைகளை
நளிர்விப்பான் தன்னை, Nalirvippaan Thannai - போக்கடிக்கு மெம்பிரானை
சுவை இல் மனத்து, Suvai Il Manathu - ஒரு படிப்பட்ட மனத்திலே
உயர வைத்து இருந்து, Uyar Vaiththu Irundhu - பரிபூர்ணமாக வைத்துக் கொண்டிருந்து
வாழ்த்தா தார்க்கு, Vazhththaa Thaarakku - மங்களாசாஸனம் பண்ணாதவர்களுக்கு
மனம் துயரை மாய்க்கும் வகையுண்டோ?, Manam Thuyirai Maaykkum Vagaiyundoo - தங்கள் மனத்திலேயுள்ள துக்கங்களைப் போக்கிக் கொள்ள வழி ஏது?
2628பெரிய திருவந்தாதி || 44
வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,
மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து
மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே,
மேலைத்தாம் செய்யும் வினை.
வகை சேர்ந்த நல்நெஞ்சும், Vagai Serndha Nalenjum - (ஞானத்திற்கு) மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும்
மிக வாய்ந்து வீழா எனினும், Miga Vaayndhu Veezhaa Eninum - (எம்பெருமானை) நன்றாகக்கிட்டி அநுபவிக்காவிட்டாலும்,
தாம், Thaam - சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள்
மிக ஆய்ந்து, Miga Aayndhu - நன்றாக ஆராய்ச்சி பண்ணி
நா உடைய வாயும், Naa Udaiya Vaayum - (எம்பெருமானைப் பேசுவதற்கு உறுப்பான) நாவோடு கூடிய வாக்கும்
மாலை, Maalai - எம்பெருமானை
வாழ்த்தாது இருப்பர், Vazhththaadhu Irupper - வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள்
மேலை தாம் செய்யும் வினை இது அன்றே, Melaith Thaam Seyyum Vinai Ithu Andrae - மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது.
2629பெரிய திருவந்தாதி || 45
வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி,
தினையாம் சிறிதளவும் செல்ல – நினையாது
வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,
நாயகத்தான் பொன்னடிகள் நான்.
விளையார், Vilaiyaar - பாவங்கள்
தர முயலும், Thara Muyalum - நமக்கு உண்டு பண்ண நினைக்கிற
வெம்மையை அஞ்சி, Vemmmai Ajnchi - கொடிய துன்பங்களுக்கு அஞ்சி
தினை ஆம் சிறிது அளவும், Dinai Aam Siridhu Alavum - தினையளவு சிறிய அற்ப காலமும்
செல்ல நினையாது, Sella Ninaiaadhu - வீணாகக் கழிய விரும்பமாட்டாமையினாலே,
நான், Naan - அடியேன்
வானோர், Vaanor - நித்யஸூரிகள்
தொழுது இறைஞ்சும் நாயாகத்தான், Thozhudhu Irainchum Naayagaththaan - தொழுது வணங்கும் பெருமை வாய்ந்த பெருமானுடைய
பொன் அடிக்கள், Pon Adikkal - திருவடிகளை
வாசகத்தால் ஏத்தினேவ், Vasakathal Aethinev - சொற்களாலே துதிக்கின்றேன்.
2630பெரிய திருவந்தாதி || 46
நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும்
தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
நீகதியா நெஞ்சே! நினை.
தேங்கு ஓதம் நீர் உருவன், Thengu Odam Neer Uruvan - ஓடாமல் தேங்குகின்ற கடல் போன்ற திருநிறத்தையுடையவனும்.
செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவனுமான
மால், Maal - ஸர்வேச்வரன்
நீங்காத, Neengadha - ஒருநாளும் விட்டுப்பிரியக்கூடாத
மா கதி ஆம், Maa Kathi Aam - சிறந்த உபேயமாயிரா நின்றான்; (அவ்வளவு மல்லாமல்,)
வெம்நரகில், Vemnarakil - கொடியஸம்ஸாரத்திலே
சேராமல், Seramal - பொருந்தாமல்
காப்பதற்கு, Kaappatharku - நம்மை ரக்ஷிப்பதற்கு
கதி ஆம், Kathi Aam - உபாயமாகவும் இராநின்றான்;
நெஞ்சேரி நினை, Nenjeri Ninai - நெஞ்சே!  (இதை) நீ அநுஸந்திக்கக்கடவை;
நாள் நாளும், Naal Naalum - நாள்தோறும் (உடனுக்கு) நான்
நான் கூறும் கூற்று ஆவது இத்தனையே, Naan Koorum Kootru Aavathu Ithanaiye - சொல்லும் சொல்லாவது இங்ஙனமே காண்.
2631பெரிய திருவந்தாதி || 47
நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே,
நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச
எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும்
எவ்வளவு முண்டோ எமக்கு.
மாலே, Maale - ஸர்வேச்வரனே! (- (இப்பாவிகள் அற்ப பலன்களை விரும்பி தேவதாந்தரங்களின் பக்கல் ஓடுமவர்களே யொழிய அவற்றுக்காகவும் உன்னருகு வரமாட்டார்கள்; இப்படியான பின்பு.) (உபாயமும் உபேயமும் நீயேயென்கிற உறுதி எமக்கு நிலை பெற்றதன்றோ.))
மானிடவர், Maanidavar - “இவ்வுலகத்தவர்கள்
நினைத்து இறைஞ்சி, Ninaithu Irainji - நம்மை ஒரு பொருளாக நினைத்து வணங்கி
ஒன்று, Ondru - ஏதாவதொரு அற்ப பலனையாவது
இரப்பர், Irappar - நம்மிடத்தில் வேண்டிக் கொள்வர்கள்
என்றேயும், Endraiyum - என்று கூட
நீ நினைத்திட வேண்டா, Nee Ninaithida Venda - நீ நினைக்க வேண்டா;
நேரே நினைத்து இறைஞ்ச, Nere Ninaithu Irajinja - (இவர்கள்) உன்னையே உபாயமாகவும் உபேயமாகவும் நினைத்துத் தொழுவதற்கு
எவ் அளவர், Ev Alavar - என்ன அறிவுள்ளவர்கள்?
என் இடத்தோர், En Idathor - அப்படிப்பட்ட அறிவு உண்டாகக்கூடிய இடத்தில் தானுள்ளவர்களோ? (இருள் தருமாஞானத்திலுள்ளவர்களன்றோ.)
எமக்கு, Emakku - உன்னுடைய நிர்ஹேதுந கடாஷத்திற்குப் பாத்திராமன அடியோங்களுக்கோவென்றால்
அது தானும், Adhu Thanum - கீழ்சொன்ன மானிடவர்களுக்குமான துர்ப்புத்தி
எவ்வளவும், Evvalavum - சிறிதேனும்,
உண்டோ, Undo - உண்டாகக் கூடியதோ?
2632பெரிய திருவந்தாதி || 48
எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,
அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப்பொலிந்த
மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,
கொன்றானை யேமனத்துக் கொண்டு.
அமை பொலிந்த மென் தோளி காரணம் ஆ, Amai Polintha Men Tholi Kaaranam Aa - மூங்கில்போல் பருத்து விளங்குகின்ற மெல்லிய தோள்களையுடையவளான நப்பின்னைப் பிராட்டிக்காக
வெம்கோடு ஏழ் ஏறு, Vemkodu Ezha Eru - கொடிய கொம்புகளையுடைய ஏழு நாளைகளை
உடனே, Udaney - ஒரு நொடிப்பொழுதில்
சொன்றானையே, Sonranaie - முடிந்த எம்பெருமானையே
மனத்துகொண்டு, Manathukondu - சிந்தையில் தியானித்துக் கொண்டு
யாம், Yaam - அடியோம்
விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை, Vin Naatukku Uchasamudhu Aam Veettai - மேலுலகங்களுக்கெல்லாம் மேற்பட்டதான பரமபதத்தை
எமக்கு அமைத்திருந்தோம், Emakku Amaithirundhom - எமக்கு (ப்ராப்யபூமியாகப்) பாரித்துக் கொண்டிருக்கின்றோம்.
அஃது அன்றே ஆம் ஆற, Aghthu Andrae Aam Aaru - அப்படி யிருப்பதுன்றோ (முழுக்ஷுத்வத்திற்கு) ஏற்றிருப்பது.
2633பெரிய திருவந்தாதி || 49
கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்
பேருருவென் றெம்மைப் பிரிந்து.
கொண்டால் தான், Kondal Thaan - மேகங்களையும்
மால் வரை தான், Maal Varai Thaan - பெரிய மலைகளையும்
மா கடல்தான், Maa Kadalthaan - கருங்கடலையும்
மற்று கார் உருவம்தான், Mattru Kaar Uruvamthaan - மற்றுமுள்ள (குவளை, குயில், மயில் முதலிய) கறுத்து உருவங்களையும்
கண்ட நாள், Kanda Naal - பார்க்குங் காலத்தில்
காண்தோறும், Kaandhorum - பார்க்கும்போதெல்லாம்
கூர் இருள் தான், Koora Irul Thaan - செறிந்த இருளையும்
வண்டு அறா பூவைதான், Vandu Araa Poovaithaan - (தேனில் நசையாலே) வண்டுகள் விட்டு நீங்காத பூவைப் பூவையும்
நெஞ்சு, Nenju - என் மனமானது
கண்ணனார் பேர் உரு என்று, Kannanaar Peer Uru Enru - இவை கண்ணபிரானுடைய அழகிய திருமேனி என்றெண்ணி
எம்மை பிரிந்து, Emmai Pirinthu - என்னைவிட்டு நீங்கி
ஓடும், Oodum - அங்கே ஓடும்.
2634பெரிய திருவந்தாதி || 50
பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,
திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால்
ஆவா! எனவிரங்கார் அந்தோ! வலிதேகொல்,
மாவை பிளந்தார் மனம்.
பிரிந்து, Pirinthu - தம்மைவிட்டுப் பிரிந்து
ஒன்று நோக்காது, Onru Nookkaadhu - வேறொன்றிலும் கண் வையாமல்
தம்முடைய பின்னே, Thammudaiya Pinne - தம்மோடு கூடவே
திரிந்து உழலும், Thirinthu Uzhalum - அலைந்துகொண்டு திரிகிற
சிந்தனையார் தம்மை, Sindhanaiyaar Thammai - என் நெஞ்சினாரை
ஒரு கால், Oru Kaal - ஒரு நாலாகிலும்
புரிந்து, Purinthu - அன்புகூர்ந்து
ஆ ஆ என இரங்கார், Aa Aa En Raingaar - ஐயோவென்று அருள்புரிகின்றலர் (பகவான்);
அந்தோ, Andho - கஷ்டம்!;
மா வாய் பிளந்தார் மனம், Maa Vaai Pilandhaar Manam - கேசியென்னும் குதிரையின் வாயைக் கிண்டொழித்த அப்பெருமானுடைய நெஞ்சு
வலிதே கொல், Valithe Kol - கடினமோ;
2635பெரிய திருவந்தாதி || 51
மனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை,
சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய
தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே,
வண்டுழாம் சீராக்கு மாண்பு.
மனம் ஆளும், Manam Aalum - மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி ஆளுமவையான
ஓர் ஐயர், Oor Aiyar - ஒப்பற்ற பஞ்சேந்திரியங்கனென்கிற
வன் குறும்பர் தம்மை, Van Kurumpar Thammai - பிரபலர்களான துஷ்டர்களை
சினம் மாள்வித்து, Sinam Maalviththu - கோவமடங்கச் செய்து
ஓர் இடத்தே சேர்த்து, Oru Idaththae Serththu - (பகவத் விஷயமாகிற) ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி,
புனம்மேல் தண் துழாயான் அடியை, Punammeel Than Thuzhaayaan Adiyai - தன்னிலத்திலே பொருந்திய குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானது திருவடிகளை
தாம் காணும் அஃது அன்றே, Thaam Kaanum Aghthu Anr Ae - ஸேவித்துக் கொண்டிருப்பதன்றோ
வண் துழாம் சீரார்க்கு மாண்பு, Van Thuzhaam Seeraarkku Maanbu - அழகிய விசாலமான நற்குணங்களை யுடையவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு.
2636பெரிய திருவந்தாதி || 52
மாண்பாவித் தஞ்ஞான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ்
சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங்
கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா
துண்ணவாய் தானுறுமோ ஒன்று.
அஞ்ஞான்று, Ajnyaantru - முன்னொரு காலத்தில்
மாண், Maan - வாமாவேஷத்தை
பாவித்து, Paaviththu - பாவனை செய்துகொண்டு
மண் இரந்தான், Man Irandhaan - (மாவலியிடத்துச் சென்று) பூமியை யாசித்தவனும்
மாயவன், Maayavan - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
நஞ்சு, Nanju - (முலையிலே தடவியிருந்த) விஷத்தை
ஊண் பாவித்து உண்டானது, Oon Paaviththu Undaanathu - உண்பதாகப் பாவனை செய்து அமுது செய்தவனுமான பெருமானுடைய
ஓர் உருவம், Oru Uruvam - விலக்ஷணமான திருமேனியை
காண்பான், Kaanbaan - ஸேவிக்கும் விஷயத்திலே
நம் கண் அவா, Nam Kan Avaa - நமது ஆண்களுக்கு ஆசை;
மற்று ஒன்று காண உறா, Mattru Ondru Kaan Uraa - வேறொன்றையும் காண விரும்புகின்றனவில்லை!
வாய்தான், Vaithaan - வாக்கானது
சீர் பரவாது, Seer Paravaadhu - (அவனது) திருக்குணங்களைப் புகழ்வது தவிர்த்து
ஒன்று, Ondru - வேறொன்றை (சோற்றை)
உண்ண, Unna - உண்பதற்கு
உறுமோ, Urumo - விரும்புமோ?
2637பெரிய திருவந்தாதி || 53
ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது,
உன்னடியார்க் கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில்
வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு
வைகுந்த மென்றருளும் வான்.
செம்கண் மால், Semkan Mal - (அடியார்கள் மீது வாத்ஸ்ல்யத்தாலே) சிவந்த திருக்கண்களையுடைய திருமாலே; (- (எத்தனை நன்மை செய்தும் த்ருப்தி பெறாமல்))
யான் உரைப்பது, Yaan Uraippathu - அடியேன் விண்ணப்பஞ் செய்வது
ஒன்று உண்டு, Onru Undu - ஒரு விஷயமுண்டு;
அவர்க்கு, Avarkku - இப்படி பார்க்கின்ற நீ அடியவர்களுக்கு
வைகுந்தம் என்று அருளுமி வான், Vaikundham Endru Arulum Vaan - ஸ்ரீவைகுண்டமென்று சிறப்பித்துச் சொல்லி உதவுகின்ற பரம பதமானது.
நீ, Nee - நீயோ வென்றால்
உன் அடியார்க்கு, Un Adiyarkku - உனது அடியார்களுக்கு
என் செயவன் என்றே இருத்தி, En Seyavan Endrae Iruththi - இன்னமும் என்ன நன்மை செய்வோமென்றே பாரித்திரா நின்றாய்;
நின் புகழில் வைகுந்தம் சிந்தையிலும் இனிதோ, Nin Pugazhila Vaikundham Sindhaiyilum Inidho - உனது திருக்குணங்களிலேயே ஊன்றியிருக்கப்பெற்ற தமது சிந்தையிற் காட்டிலும் சிறந்ததோ?
2638பெரிய திருவந்தாதி || 54
வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ?
கானோ? ஒருங் கிற்றும் கண்டிலமால்,- ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்துயரை யாவா! மருங்கு.
ஆன் ஈன்ற கண்டு, Aan Eendra Kandu - பசுவினால் பெறப்பட்ட வத்ஸாஸுரனை (- (இன்னவிடத்தில் மறைந்து போயினவென்று தெரியவில்லை;))
உயர எறிந்து, Uyara Erindhu - (விளாமரத்தின்) மேலே வீசியெறிந்து
காய் உதிர்த்தார், Kaai Uthirthaar - (அவ்விளாமரத்தின்) காய்களை உதிர்த்த கண்ணபிரானுடைய
தாள், Thaal - திருவடிகளை
பணிந்தோம், Panindhom - ஆச்ரயித்தோம் (அதன் பிறகு)
வன் துயரை, Van Thuyarai - வலிய (நமது) பாவங்களை
மருங்கு கண்டிலம், Marungu Kandilam - ஸமீபத்தில் காணோம்;
ஒருங்கிற்று, Orungitru - (அப்பாவங்கள்) மறைந்து போனவிடம்
வானோ, Vaano - ஆகாசமோ?
மறி கடலோ, Mari Kadaloo - மடிந்து மடிந்து அலையெறிகி கடலோ?
மாருரமோ, Maruramo - காற்றோ?
தீயகமோ, Thiyakamo - நெருப்போ?
கானோ, Kaano - காடோ?
ஆ ஆ ஆல், Aa Aa Aal - ஐயோ பாவம்.
2639பெரிய திருவந்தாதி || 55
மருங்கோத மோதும் மணிநா கணையார்,
மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே
எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,
மனக்கவலை தீர்ப்பார் வரவு.
வரவு, Varavu - (தம்முடைய) வருகையினாலே
மனம் கவலை தீர்ப்பார், Manam Kavalai Theerppaar - (நமது) மணத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும்
மழுங்கு ஓதம் மோதும், Mazhunghu Oodham Moathum - ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே)
மணி நாக அணையார், Mani Naaga Anaiyaar - மாணிக்கத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவருமான பெருமான்.
மருங்கே வர அரியர் எலும், Marungae Vara Ariyar Elum - (ஒருவர்க்கும் ஸ்வப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும்
எமக்கு, Emakku - நமக்கு
அவரை, Avarai - அப்பெருமானை
உன்னால், Unnaal - மனத்தினால்
ஒருங்கே, Orungae - ஒரே தன்மையாக
எப்பொழுதும் காணலாம், Eppozhudhum Kaanalaam - எப்போதும் கண்டு அநுபவிக்கட்டும்.
2640பெரிய திருவந்தாதி || 56
வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே!
ஒருவாறொருவன் புகவாறு,-உருமாறும்
ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,
மாயவர்தாம் காட்டும் வழி.
ஒருவன், Oruvan - எந்த சேதானும் (- (அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக))
ஒரு ஆறு, Oru Aaru - எந்த உபாயாந்தரத்திலும்
புகா ஆறு, Pugaa Aaru - பிரவேசிக்க வேண்டாதபடி
உரு மாறும், Uru Maarum - தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற
ஆயவர் தாம், Aayavar Thaam - ஸ்ரீகிருஷ்ணனானவனும்
சேயவர் தாம், Seyavar Thaam - ஆஸுரப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும்
அன்று உலகம் தாயவர் தாம், Andru Ulagam Thaayavar Thaam - முன்பொருநாள் உலகங்களைத் தாலியளந்தவனும்
மாயவர் தாம், Maayavar Thaam - ஆச்சரியருமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
காட்டும் வழி, Kaattum Vazhi - காட்டுகிற உபாயம்
வரவு ஆறு ஒன்று, Varavu Aaru Ondru - இன்னவழியாக வந்ததென்று தெரியாது;
வாழ்வு இனிது, Vazhvum Inidhu - பலன் போக்யமாயிரா நின்றது;
ஆல் எல்லே, Aal Ellae - ஆச்சரியம்
2641பெரிய திருவந்தாதி || 57
வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,
தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள,
வாழ்வடங்க மார்விடந்த மால்.
நெஞ்சே, Nenje - நெஞ்சமே!
போர், Poar - யுத்த பூமியிலே
அவுணன் தன்னை, Avunan Thannai - இரணியாசுரனை
தழீஇக் கொண்டு, Thazhiik Kondu - அழுந்தக் கட்டிக்கொண்டு,
புலால் வெள்ளம், Pulaal Vellam - ரத்த ப்ரவாஹமானது
தாழ்வு இடங்கள் பற்றி, Thazhvu Idangal Patri - பள்ள நிலங்கள் பக்கமாக
எங்கும் சுழித்து உகன, Engum Suzithu Ukan - கண்டவிடமெங்கும் சுழித்துக் கொண்டு அலையெறிந்து கிளரும்படியாக
வாழ்வு அடங்கா, Vazhvum Adangaa - (அவ்விணியனுடைய) வாழ்ச்சி முடியும்படி
மார்வு இடந்தமால், Maarvu Idanthamaal - அவனது மார்பைப் பிளந்த பெருமான்,
வழி தங்கு வல்வினையை, Vazhi Thangu Valvinaiyai - இடைவழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற (பிரதிபந்தகமான) வலிய பாவங்களை
மாற்றோனோ, Maatrono - (போக்கியருள மாட்டானோ? (போக்கியேவிடுவன்.)
2642பெரிய திருவந்தாதி || 58
மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது
பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால்
பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,
மறப்பின்மை யான்வேண்டும் மாடு.
மாலே, Maale - திருமாலே! (- (உன் திருவடிகளில் கைங்கரியம் பண்ணவேணுமென்று அடியேன் ஆசைப்படவில்லை.))
உனது, Unathu - உன்னுடைய
பால்போல் சீரில் பழுந்தொழிந்தேன், Paalpol Seeril Pazhunthozhindhen - பால்போலப் பரம போக்யாமன திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்;
இனி, Ini - இனிமேல்
பிறப்பு இன்மை பெற்று, Pirappu Inmai Petru - வீடுபெற்று
அடி கீழ், Adi Keezh - (உனது) திருவடிவாரத்திலே
குற்றவேல், Kuttraveel - கைங்கரியம் பண்ணுவது
யான் வேண்டும் மாடு அன்று, Yaan Vendum Maadu Andru - அடியேன் அபேஷிக்கிற செல்வமன்று;
படிசோதி, Padisothi - (உன்னுடைய) திவ்யமங்கள விக்ரஹ தேஜஸ்வை
மாற்றேல், Maatreel - எனக்கு ஒரு காலும் மாற்றாமல் நிற்யாநுபவ விஷயமாக்க வேணும் ;
மேலால், Melal - மேலுள்ள காலத்திலே
மறப்பு இன்மை, Marappu Inmai - உன்னை மறவாதிருந்தால் போதுமென்பதே
யான்வேண்டும் மாடு, Yaanvendum Maadu - அடியேன் ஆசைப்படும் செல்வம்.
2643பெரிய திருவந்தாதி || 59
மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்
காடானும் ஆதானும் கைகொள்ளார்,- ஊடேபோய்ப்
போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.
பேர் ஓதம், Peer Otham - விசாலமான கடலிலே
சிந்து திரை ஊடேபோய், Sindhu Thirai Oodepoy - சிதறிவிழுகின்ற அலைகளினுள்ளே சென்று
கண்வளரும், Kanvalarum - திருக்கண் வளர்ந்தருளா நின்ற
பேராளன், Peraalan - எம்பெருமானுடைய
பேர், Peer - திருநாமங்களை
ஓத, Otha - அநுஸந்திக்க வேணுமென்று
சிந்திக்க, Sindhikka - நினைத்த மாத்திரத்திலே,
வல்வினையார், Valvinaiyaar - கொடிய பாவங்கள்
பேர்ந்து, Perndhu - நம்மைவிட்டுக் கிளம்பி
காடானும் ஆதானும் கைக்கொள்ளார், Kaadaanum Aadaanum Kaikkollaar - காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது)
மாடு வரப்பெறுவராம் என்றே?, Maadu Varapperuvaaram Endrae - இன்னமும் நம்மிடத்திலே வாழப்பெறலாமென்கிற எண்ணத்தினாலோ?
2644பெரிய திருவந்தாதி || 60
பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே,- பேர்ந்தெங்கும்
தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லைகாண் மற்றோர் இறை.
என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே!
பேர்ந்து ஒன்று நோக்காது, Perndhu Ondru Nookkathu - வேறொன்றையும் கணிசியாமல்
ஈன் துழாய் மாயனையே பின்நிற்பாய், Een Thuzhai Maayanaiye Pinnirpai - போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி நின்றும் நில்லு;
நில்லாப்பாய், Nillaappai - அப்படி அவனைப் பற்றாதொழியினும் ஒழி;
தொல்லை, Tollai - அநாதியாய்
மா, Maa - பெரிதாய்
வெம், Vem - கடினமான
நரகில், Naragil - நரகத்திலே
சேராமல், Seramal - போய்ப்புகாமல்
காப்பதற்கு, Kaappatharku - நம்மை ரக்ஷிப்பதற்கு
பேர்ந்து மற்று ஓர் இறை, Perndhu Matru Oru Irai - வேறொரு ஸ்வாமி
எங்கும் இல்லை காண், Engum Illai Kaan - ஓரிடத்திலுமில்லைகிடாய்.
2645பெரிய திருவந்தாதி || 61
இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,
மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்
மீதிலகித் தாங்கிடக்கும் மீன்.
தாழ் விசும்பின் மீது, Thaal Visumbin Meedhu - வெளியான ஆகாசத்திலே
இலசி கிடக்கும் மீன், Ilasi Kidakkum Meen - விளங்காநின்ற நக்ஷத்திரங்களானவை
இறை முறையான், Irai Muraiyaan - ஸ்வாமியான முறைமையையுடைய எம்பெருமான்
மண் அளந்த அந்நாள், Man Alandha Annal - உலகளந்த அக்காலத்திலே
வான் நாடர், Vaan Naadar - வானுலகத்திலுள்ளாரெல்லாரும்
கூடி, Koodi - கும்பல்கூடி
சே அடி மேல், Sae Adi Mel - (அப்பெருமானது) செவ்விய திருவடிகளின் மேல்
மறை முறையால், Marai Muraiyaal - வேதங்களிற் சொல்லிய விதிப்படி
தாது இலகு பூ, Thaadu Ilaku Poo - தாதுநயாலே விளங்காநின்றுள்ள புஷ்பங்களை
முறை முறையின், Murai Muraiyin - முறை முறையாக
தெளித்தால் ஒவ்வாதே, Thelithaal Ovaadhe - தெளிந்தாற்போன்றுள்ளனவன்றோ?
2646பெரிய திருவந்தாதி || 62
மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்
வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர்
மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான்,நங்கள்
பிணிக்காம் பெருமருந்து பின்.
மீள் என்னும் நம்பின், Meel Ennum Nambin - நக்ஷத்திங்களாகிற நம்புகளையுடையதும்
வெறி என்னும் வெள்ளி லேய், Veri Ennum Velli Ley - சந்தினாகிற வெள்ளிக்குழையையுடையதும்
வான் என்னம், Vaan Ennam - ஆகாசமென்கிற பெயருடையதும்
கேடு இலா, Kedu Ila - ஒருநாளும் அழிவில்லாததுமான
வான் குடைக்கு, Vaan Kudhaikku - பெரிய குடைக்கு
ஓர் மணி காம்பு போல் நிமிர்ந்து, Or Mani Kaambu Pol Nimirthu - ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போல வளர்ந்து
மண் அளந்தான் தான், Man Alandhaan Thaan - உலகளந்தவனான பெருமாள்
பின், Pin - மேலுள்ள காலமெல்லாம்
நங்கன் பிணிக்கு, Nangan Pinikku - நம்முடைய (ஸம்ஸாரமாகிற) வியாதிக்கு
பெரு மருந்து ஆம், Peru Marundhu Aam - சிறந்த ஔஷதமாவன்
2647பெரிய திருவந்தாதி || 63
பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,
வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று
திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்,
பருச்செவியு மீர்ந்த பரன்.
பின் துரத்தும் காற்று இழந்த சூல்கொண்டல், Pin Thuraththum Kaatru Izhanda Soolkondal - பின்பற்றித்தள்ளுகிற காற்றையிழந்து கடலிலே போய்ச் சேர்ந்த காளமேகமானது (- (எப்படி யிருக்கின்றதென்றால்))
திரு செய்ய நேமியான், Thiru Seyya Nemiyan - அழகிய சிவந்த சக்கரத்தையுடையவனும்,
தீ அரக்கி, Thee Arakki - கொடிய ராக்ஷஹியான சூர்ப்பணகையினது
மூக்கும், Mookkum - மூக்கையும்
பரு செலியும், Paru Seliyum - பருத்தகாதுகளையும்
அன்று, Anru - ஸ்ரீராமாவதாரத்தில்
ஈர்த்த, Eerththa - அறுத்தொழித்தவனுமான
பரன், Paran - ஸ்ரீராமபிரான்
பேர்ந்தும் போய், Pernthum Poi - (அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து, Van Thiraik Kan Vandhu Anaindha Vaimaiththu - பெரிய திருப்பாற்கடலிலே வந்து சேர்ந்தபடியை ஒத்திருக்கின்றது.
2648பெரிய திருவந்தாதி || 64
பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,
உரனா லொருமூன்று போதும்,-மரமேழன்
றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர்
கைதான் தொழாவே கலந்து.
அன்று, Anru - முற்காலத்தில் (- (அப்படிப்பட்ட விவேகிகளை))
மரம் ஏழ் எய்தானை, Maram Ezhu Eydhaanai - (ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தஸால வ்ருக்ஷங்களைத் துளைத்த இராமபிரானென்ன,
புள்ளின் வாய் சீண்டானை, Pullin Vaai Seendhaanai - பகாஸுரனது வாயைக் கிழித்தெறிந்த கண்ணபிரானென்ன இவர்களை நோக்கி
அவன் பரன் ஆம் ஆதல், Avan Paran Aam Aadhala - ‘அந்த இராமபிரானும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மனுஷ்யரல்லர்;) ஸாக்ஷாத் பரமபுருஷரேயாவர்’ என்கிற விஷயத்தை
உõனால், Unnaal - தங்களுடைய மனத்தினாலே
பாவிப்பர் ஆகில், Paavippar Aagil - அநுஸந்திப்பர்களேயானால்
அமரர் கை, Amarar Kai - தேவர்களின் கைகளானவை
கலந்து, Kalandhu - ஒன்றுசேர்ந்து
ஒரு மூன்று போதும், Oru Moondru Podhum - எப்போதும்
தொழாவே, Thozhaave - ஸேவிக்க மாட்டாவோ.
2649பெரிய திருவந்தாதி || 65
கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல்
தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,
சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.
நெஞ்சே, Nenje - வாராய்மனமே!
கலந்து, Kalandhu - நம்மோடு கூடவேயிருந்து
நஸியும், Nasiyum - ஹிம்ஸிக்கின்ற
கடு துயரை, Kadu Thuyarai - கடுமையான துக்கங்களை
மலங்க அடித்து மடிப்பான், Malanga Adithu Madippaan - முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில்,
விலக்கல்போல், Vilakkalpol - மலைபோன்றவனும்
தொல் மாலை, Thol Maalai - அநாதிசாலமாக நம்மேல் வ்யாமோஹமுடையவனும்
கேசவனை, Keesavanai - சிறந்த திருக்குழல் கற்றையை யுடையவனும்
நாரணனை, Naaranai - ஸ்ரீமர்நாராயணனும்
மாதவனை, Maadhavanai - திருமகள் கேழ்வனுமான பெருமான் விஷயத்திலே
சொல் மாலை, Sol Maalai - பாசுரங்களாகிற மாலைகளை
எப்பொழுதும், Eppozhudhum - ஸர்வகாலமும்
குட்டு, Kuttu - ஸமர்ப்பி.
2650பெரிய திருவந்தாதி || 66
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை,
மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட
வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே!
அறிகண்டாய் சொன்னேன் அது.
நெஞ்சை, Nenjai - ஓ மனமே!
சூடு ஆய நேமியான், Soodu Aaya Nemiyan - (ஆயுதமாயிருக்கும் மாத்திரமல்லாமல்) அலங்காரமாயுமிருக்கிற திருவாழியையுடையவனும்
மாட்டே, Maattai - அவன் பக்கத்திலிருந்து கொண்டே
துயர் இழைத்த, Thuyar Izhaittha - துன்பப்படுத்தின
மாயவனை, Maayavanai - ஆச்சர்யனும்
ஈட்ட, Eetta - திரண்ட
வெறிகொண்ட, Verikonda - பரிமளம் மிக்க
தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த
தொல் அரக்கன் இன்உயிரை, Thol Arakkan Inuyirai - வெகு காலமாகத் தீமை செய்து கொண்டிருந்த இராவணனுடைய இனிய உயிரை.
வேதியனை, Vedhiyai - வைதிகனுமான எம்பெருமானை
அறிகண்டாய், Arikandai - அநுஸந்தித்திரு;
அது சொன்னேன், Adhu Sonnaen - ஒருவர்க்கும் சொல்லவொண்ணாத அப்படிப்பட்ட இவ்விஷயத்தை உனக்குச் சொன்னேன்.
2651பெரிய திருவந்தாதி || 67
அநுவோநன் றென்றங் கமருலகோ வேண்டில்*
அதுவோர் பொருளில்லை யன்றே? *- அதுவொழிந்து
மண்ணின்றாள் வேனெனிலுங் கூடும் மடநெஞ்சே! *
கண்ணன்தாள் வாழ்த்துவதே கல்.
மடநெஞ்சே, Madanenjee - அறிவுகெட்ட மனமே!
அதுவோ நன்று என்று, Adhuvo Nandru Endru - (இப்பூபதியிலிருப்பைவிட) அந்தப் பரமபதாநுபவம் சிறந்ததென்று கொண்டு
அங்கு அவர் உலகு வேண்டில், Angu Avar Ulaku Vendl - அந்தப் பரம பதாநுபவத்தை விரும்புகிற பக்ஷத்தில்
மண் நின்று ஆள்வேன் எனினும், Man Nindru Aalvaen Eninum - இந்த மண்ணுலகத்தில் நிலை நின்று ஐச்வரியத்தை ஆள வேணுமென்று விரும்பினாயாகிலும்
கூடும், Koodum - அதையும் அவன் எளிதில் அருளக்கூடும்;
அது ஓர் பொருள் இல்லை அன்றே, Adhu Oor Porul Illai Andrae - அதனைக் கொடுப்பது (எம்பெருமானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே;
அது ஒழிந்து, Adhu Ozhindhu - அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு
கண்ணன், Kannan - ஆசவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய
தாள், Thaal - திருவடிகளை
வாழ்த்துவதே, Vaazhthuvathe - மங்களாசாஸநம் பண்ணுவதையே
கல், Kal - அப்பஸிக்கக்கடவாய்.
2652பெரிய திருவந்தாதி || 68
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,
புல்லென் றழிந் தனகொல் ஏபாவம்,-வெல்ல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,
அடியேன துள்ளத் தகம்.
வெல்ல நெடியான், Vella Nediyan - மிகவுயர்ந்தவனும்
நிறம் கரியான், Niram Kariyan - நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான்
உன் புகுந்து, Un Pugundhu - உள்ளே பிரவேசித்து
அடியேனது உள்ளத் தகம் நீங்கான், Adiyenathu Ullath Thagam Neengan - அடியேனது உள்ளத்தைவிட்டு நீங்குகின்றனில்லை; (ஆகையாலே)
கல்லும், Kallum - திருவேங்கடமலையும்
கனை கடலும், Kanai Kadalum - கோஷிக்கின்ற திருப்பாற்கடலும்
வைகுந்தம், Vaikundham - வைகுண்டமென்கிற
வான் நாடும், Vaan Naadum - வானுலகமும்
புல்லென்று ஒழிந்தன கொல், Pullenru Ozhindhana Kol - அல்பமாய் விட்டன போலும்;
எபாவம், Epavam - ஐயோ பாவம்!
2653பெரிய திருவந்தாதி || 69
அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,
முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால்
சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,
ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து?
வல்வினையர் ஆவார், Valvinaiyar Aavaar - கடுமையான பாவங்களானவை (- (தங்களுடைய குடியிருப்பை யிழந்தமையாலே))
அகம் சிவந்த கண்ணினர் ஆய், Aham Sivantha Kanninar Aay - (கோவத்தினால் உள்ளே சிவந்த கண்களையுடையனவாய்
முக்கி, Mugki - வருந்தி
முகம் சிதைவராம் அன்றே, Mugam Sithaivaraam Andrae - முகம் வாடியிருக்கின்றனவல்லவோ?
மிகும், Mikum - எல்லாரிலும் மேற்பட்டவனான
திருமால், Thirumaal - திருமாலினுடைய
சீர் கடலை, Seer Kadalai - கல்யாண குணங்களாகிற கடலை
உள் பொதிந்த, Ull Pothintha - உள்ளே அடக்கிக் கொண்ட
சிந்தனையேன் தன்னை, Sindhanaiyen Thannai - சிந்தனையை யுடையேனான என்னை
செவ்வே, Sevvae - செவ்வையாக
அடர்ந்து, Adarnthu - நெருக்கி
ஆர்க்கு அடல் ஆம், Aarkku Adal Aam - யாரால் உபத்ரவிக்க முடியும்? (ஒருவராலும் என்னைத் திரஸ்கரிக்க முடியாது.)
2654பெரிய திருவந்தாதி || 70
அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை,
சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே இனி?
அடர்பொன் முடியானை, Adarpon Mudiyaanai - அடர்ந்த பொன்மயமான திருவபிஷேகத்தையுடையவனும்
ஆயிரம் பேரானை, Aayiram Peraanai - ஸஹஸ்ரநாமங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும்
சுடர்கொள் சுடர் ஆர்யானை, Sudarkol Sudar Aaryanai - (சந்திர ஸூர்யன் முதலியன) சுடர்களையெல்லாம் வென்று விளங்குகின்ற திருவாழியையுடையவனுமான எம்பெருமானை.
இடர் கடியும் மாதா பிது ஆக, Idar Kadiyum Maatha Pithu Aaga - துக்கங்களைப் போக்கவல்லதாயும் தந்தையுமாக
எனது உள்ளே வைத்தேன், Enathu Ullae Vaiththen - என்னுடைய ஹ்ருதயத்திலே இருத்தினேன்;
இனி, Ini - இனிமேல்
யாது ஆகில் யாதே, Yaadhu Aagil Yaadhe - (எனக்கு) என்ன நேர்ந்தாலென்ன?
2655பெரிய திருவந்தாதி || 71
இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,
தனிநின்ற சார்விலா மூர்த்தி,- பனிநீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு
முகத்தான்நின் உந்தி முதல்.
தனி நின்ற, Thani Nindra - தானொருவனுமே காரணமாய் நின்றவனும் (- (என்னால் சொல்லப்போகாதென்கை))
சார்வு இலா, Saarvu Ilaa - வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான
மூர்த்தி, Moorthy - எம்பெருமானே!
அகத்து பனி நீர் உலவு செம்சடையான், Agathu Pani Neer Uhlavu Semchadayan - உள்ளே குளிர்ந்த சங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையையுடையனான சிவன்.
ஆகத்தான், Aagaththaan - உன் திருமேனியை அச்ரயித்து வாழ்பவன்;
நான்கு முகத்தான், Naanthu Mugaththaan - நான்முகக் கடவுள்
நின் உந்தி முதல், Nin Undhi Mudhal - உனது திருநாபிக் கமலத்தை மூலகாரணமாகவுடையவன்;
இனி, Ini - இப்படியான பின்பு
நின் பெருமை, Nin Perumai - உனது மேன்மையை
யான் நின்று உரைப்பது என்னே, Yaan Nindru Uraippathu Ennae - தான் முயன்று சொல்வது எங்ஙனே?
2656பெரிய திருவந்தாதி || 72
முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் மென்பர் – முதல்வா,
நிகரிலகு காருருவா! நின்னகத்த தன்றே,
புகரிலகு தாமரையின் பூ.
முதல்வா, Muthalvaa - ஸகலகாரண பூதனான பெருமானே!
மூன்று திரு உருவம் முதல் ஆம் என்பர், Moondru Thiru Uruvam Mudhal Aam Enbar - பிரமன் விஷ்ணு சிவன் என்கிற மூன்று திவ்ய மூர்த்திகள் தலைவராவர்’ என்று சிலர் சொல்லுவார்கள்;
மூன்றுக்கும் ஒன்றே முதல் ஆகும் என்பர், Moondrukkum Ondrae Mudhal Aagum Enbar - ‘மேற்சொன்ன மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கும்’ என்று மற்றுஞ் சிலர் சொல்லுவார்கள்.
நிகர் இலகு கார் உருவா, Nikar Ilaku Kaar Uruvaa - மேகமொன்று சொல்லலாம்படி அதனோடொத்து விளங்காநின்ற திருமேனியை யுடையவனே!
புகர் இலகு தாமரையின் பூ, Pugar Ilaku Thaamaraik Koo - தேஜஸ்ஸுமிக்கு விளங்குகின்ற தாமரைப் பூவானது
நின் அகத்தது அன்றே, Nin Agaththathu Andrae - உன்னிடத்திலுள்ளதன்றோ? (திருநாபிக்கமலமே உனது பரத்வத்தை வெளியிடவல்லது என்றவாறு.)
2657பெரிய திருவந்தாதி || 73
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,
காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.
பூவையும், Poovaiyum - பூவைப்பூவையும்
காயாவும், Kaayavum - காயாம் பூவையும்
நீலமும், Neelamum - கரு நெய்தல் பூவையும்
பூக்கின்ற, Pookkinra - புஷ்பிக்கின்ற
பிரான், Piraan - எம்பெருமானுடைய
உருவே என்று, Uruve Endru - திருவுருவமே என்ற கொண்டு
பாவியேன், Paaviyen - அடியேனுடைய
காவி மலர், Kaavi Malar - செங்கழுநீர்ப் பூவையும்
என்றும் காண் தோறும், Endrum Kaan Thorum - பார்க்கிற போதெல்லாம்
அவ் அவை எல்லாம், Avv Avai Ellam - அந்தந்த மலர்களெல்லாம்
மெல் ஆவி, Mel Aavi - மிருதுவான உயிரும்
மெய், Mei - சரீரமும்
மிகவே பூரிக்கும், Mikave Poorkkum - மிகவும் பருத்து வளர்கின்றது
2658பெரிய திருவந்தாதி || 74
என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்,
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று
குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே!
புடைதான் பெரிதே புவி.
ஒரு நாள் ஒழியாமை, Oru Naal Ozhiyamai - ஒருநாளும் தப்பாமல்
என்றும், Endrum - எந்நாளும்
யான் இரந்தால், Yaan Irandhaal - அடியேன் பிரார்த்தித்தால்,
குன்று குடை ஆக ஆ காத்த கோவலனார், Kundru Kudai Aaga Aa Kaatha Kovalanaar - (முன்பு) கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திப் பசுக்களை ரக்ஷித்த கோபாலகிருஷ்ண பகவான்
ஒன்றும் இரங்கார், Ondrum Irangaar - சிறிதும் தயவு செய்கிறாரில்லை;
உரு காட்டார், Uru Kaattaar - தன் திருமேனியைக் காட்டுகிறாரில்லை;
நெஞ்சே, Nenje - ஓ மனமே!
புவி, Bhuvi - நாமிருக்கும் இடம்
பெரிதே புடை தான், Peridhe Pudai Thaan - (அவருடைய அருள் வெள்ளம் ஏறிப்பாய முடியாத) மிகப் பெரிய மேட்டு நிலமோ?
2659பெரிய திருவந்தாதி || 75
புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்
செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,- அவிவின்றி
யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,
ஊன்பருகு நேமியாய்! உள்ளு.
ஊன் பருகு நேமியாய், Oon Parugu Nemiyai - (அஸுர சரீரத்திலுள்ள) மாம்ஸங்களைக் கவர்கின்ற திருவாழி யாழ்வானைக் கையிலேந்தியுள்ள பெருமானே!,
புவியும், Puviyum - இவ்வுலகமும்
இரு விசும்பும், Iru Visumbum - விசாலமான மேலுலகமும்
என் உள்ளாய், En Ullai - என் பக்கல் இரா நின்றாய்:
யான் பெரியன், Yaan Periyan - நானே பெரியவன்;
நின் அகத்த, Nin Akath - உன்னிடத்தேயுள்ளன;
நீ, Nee - உபய விபூதியையும் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற நீ
என் செவியின் வழி புகுந்து, En Seviyin Vazhi Pugundhu - என் காது வழியே புகுந்து
அவிவு இன்றி, Avivu Inri - ஒருநாளும் விட்டு நீங்காமல்
நீ வெரியை என்பதனை யார் அறிவார், Nee Veriyai Enbadhai Yaar Arivaar - நீ பெரியனென்று அறிவாருண்டோ?
உள்ளு, Ullu - இதை நீயே ஆலோசித்துப் பார்.
2660பெரிய திருவந்தாதி || 76
உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம்,
விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள
உலகளவு யானும் உளனாவன் என்கொல்?
உலகளந்த மூர்த்தி! உரை.
உலகு அளந்த மூர்த்தி, Ulaku Alandha Moorthi - த்ரிவிக்ரம பகவானே,
உன்னை உள்ளிலும், Unnai Ullilum - உன்னை(நெஞ்சில்) அநுஸந்தித்த மாத்திரத்திலும்
உள்ளம், Ullam - எனது நெஞ்சானது
துடிக்கும், Thudikkum - (ஸந்தோஷத்தினால்) பூரிக்கின்றது
வினை படலம் விள்ள, Vinai Padalam Vill - பாவங்களின் கூட்டங்கள் என்னை விட்டு ஒழிந்து போம்படி
விழித்து, Vizhithu - உன்னாலே நான் கடாக்ஷிக்கப் பெற்று
உன்னை மெய்வற்றால், Unnai Meivatraal - (பரமபதத்திலே வந்து) உன்னை உள்ளபடியே அடைந்து விட்டேனாகில்
உள்ள உலகு அளவும், Ulla Ulaku Alavum - நீ வியாபித்திருக்கிற உலகமெங்கும்
யானும் உளன் ஆவன், Yaanum Ulan Aavan - நானும் வியாபித்தவனாவேன்;
என் கொலோ, En Kolon - நான் சொல்லுகிற விது ஸம்பாவிதநதானோ?
உரை, Urai - நீயே சொல்லு.
2661பெரிய திருவந்தாதி || 77
உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,
இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்,
நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்
சொல்நன்றி யாகும் துணை.
இரைக்கும் கடல், Iraikkum Kadhal - கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே
கிடந்த, Kidandha - பள்ளிக்கொண்டிரா நின்ற
எந்தாய், Endhai - ஸ்வாமீ!
உரைக்கில், Uraikkil - ஆராய்ந்து சொல்லில்,
ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே, Oru Sutraththaar Utraar Endru Aarae - (நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ?
எனது உயிர்க்கு, Enathu Uyirkkum - என் ஆத்மாவுக்கு
ஓர் சொல், Oru Sol - ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்கிற சரமச்லோகமாகிற ஒரு சொல்லாலே
நன்றி ஆகும் துணை, Nandri Aakum Thunai - உதவிசெய்யும் துணையும்
உரைப்பு எல்லாம், Uraippu Ellam - மற்றும் சொல்லப்படுகிற எல்லாவகையான துணையும்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய், Nin Andri Matru Ileen Kandaai - உன்னைத் தவிர வேறொருவரையும் உடையே னல்லேனுகாண்.
2662பெரிய திருவந்தாதி || 78
துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும்,
சுற்றத் திணைநாளு மின்புடைத்தா மேலும், – கணைநாணில்
ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,
ஓவாத வூணாக உண்.
துணை, Thunai - ஸ்நேஹிதர்களும் (- (ஆகிய இவை யெல்லாம்) (நீ அவற்றில் ஆசை கொள்ளாமல்))
நாள், Naal - ஆயுஸ்ஸும்
பெரு கிளையும், Peru Kilaiyum - பிள்ளைகள் பேரன்கனென்கிற பெரிய ஸந்தானமும்
தொல் குணமும், Thol Gunamum - பரம்பரையாக வருகிற நற்குலமும்
சுற்றத்து இணை, Sutraththil Inai - பந்துக்களோடே சேர்ந்திருப்பதும்
நாளும், Naalum - நாள்தோறும்
இன்பு உடைத்து ஆம் எனும், Inbu Udaiththu Aam Ennum - (துக்கத்தை யுண்டு பண்ணாமல்)  ஸந்தோஷத்தையுண்டு பண்ணுவனவென்றே வைத்துக்கொண்õடலும்,
நல்நெஞ்சே, Nalnenje - நல்மனமே!
கணை நாணில் ஒவா தொழில்சார்ங்கன், Kanai Naanil Ovaa Thozhilsaarngan - அம்புகள் நாளில் நின்றும் ஒருகாலும் மாறாதபடி வீரத்தொழில் செய்துகொண்டேயிருக்கிற வில்லையுடையனான இராமபிரானுடைய
தொல் சீரை, Tol Seerai - இயற்கையான நற்குணங்களையே
ஓவாத ஊண் ஆக உண், Ovaadha Oon Aaga Un - நித்யபோக்யமாக அநுபவிக்கக் கடவாய்.
2663பெரிய திருவந்தாதி || 79
உள் நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையை யஞ்சுமே,
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்
பேராயற் காளாம் பிறப்பு.
மண் நாட்டில், Man Naattin - இந்த மண்ணுலகத்திலே
ஆர் ஆகி, Aar Aagi - எப்பிறவியிலே பிறந்தவராயினும்
என் இழிலிற்று ஆனாலும், En Izhilichirru Aanallum - எப்படிப்பட்ட இழி தொழில்களையுடையவர்களாயினும்
ஆழி அம் கைபேர் ஆயற்கு ஆன் ஆம் பிறப்பு, Aazhi Am Kaiper Aayarku Aan Aam Pirappu - திருவாழியை அழகிய கையிலேயுடைய ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அடிமைப்பட்டவர்களாகப் பிறக்கும் பிறவியானது.
உன் நாடு தேச அன்றே, Un Naadu Desa Anrre - பரமபதத்திள்ள தேஜஸ்ஸையுடையதன்றோ?
ஊழ் வினையை அஞ்சுமே, Oozh Vinaikay Anjumee - அநாதியான பாவங்களைக் குறித்து அஞ்ச வேணுமோ?
விண் நாட்டை, Vin Naattai - ஸ்வர்க்க லோகத்தை
ஒன்று ஆக, Onru Aaga - ஒரு பொருளாக
மெச்சுமே, Mechchume - விரும்பக்கூடுமோ?
2664பெரிய திருவந்தாதி || 80
பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும்
இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல்.
பிறப்பு, Pirappu - பிறவியையும்
இறப்பு, Irappu - மரணத்தையும்
மூப்பு, Mooppu - கிழத்தனத்தையும்
பிணி, Pini - வியாதிகளையும்
துறந்து, Thurandhu - ஒழிந்து
பின்னும், Pinnum - அவ்வளவோடு மல்லாமல்
இறக்கவும், Irakkavum - மிகவும்
இன்பு உடைத்து ஆம் ஏலும், Inbu Udaithu Aam Aelum - ஆநந்தமுடையதான ஸநவல்யமோக்ஷம் உண்டாவதானாலும்
மண் அளந்தான் பாதமே ஏத்தா பகல், Man Alandhaan Paathame Aetthaa Pakal - உலகளந்த பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தப்பெறாத காலங்களிலுண்டான
மறப்பு எல்லாம், Marappu Ellam - மறப்புகள் எல்லாம்
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே, Edhame Endru Allal Ennavane - துன்பமென்றே எண்ணுவனேயொழிய வேறுவகையாக எண்ணுவனோ?
2665பெரிய திருவந்தாதி || 81
பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை
இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,–தகவாத்
தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என்றோரார்,
செழும்பரவை மேயார் தெரிந்து.
செழு பரவை மேயார், Sezhu Paravai Meyaar - அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான்,
இவர் தகவாதொழும்பர், Ivar Thagavathozhumbar - “இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்;
சீர்க்கும் துணை இலர், Seerkum Thunai Ilar - சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்”
என்று தெரிந்து ஓரார், Endru Therinthu Ooraar - என்பதை ஊன்றி ஆராயாதவனாய்
பகல் இரா என்பதுவும் பாவியாது இருபொழுதும், Pagal Ira Enbadhum Paaviyadhu Irupozhudhum - பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும்
இகல் செய்து, Ikal Seidhu - வலிகட்டாயப்படுத்தி
எம்மை ஆள்வர், Emmai Aalvar - அடியேனை அநுபவியா நின்றான்.
2666பெரிய திருவந்தாதி || 82
தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன்,
வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில்
அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை யேத்தா தயர்ந்து.
தீ வினையேன், Thee Vinaiyen - மஹாபாபியான நான்
தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால், Therintha Unarvu Ondru Inmaiyaal - விவேகவுணர்ச்சி சிறிதுமில்லாமையினாலே
அந்நான்று, Annandru - முன்பொருகாலத்தில்
கரந்த உருவிய அமானை பின் தொடர்ந்து, Karandha Uruviya Amanaipin Thodarndhu - நிஜமான வுருவத்தை மறைத்துக்கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற
ஆழி அம் கை அம்மானை, Aazhi Am Kai Ammanai - அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையிலணிந்திருந்த இராமபிரானை
ஏத்தாது, Eththadhu - தோத்திரம் செய்யாமல்
அயர்த்து, Ayarththu - அறிவுகெட்டு
கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன், Keel Naalgal Ellam Vaanaa Irundhozhindhen - கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன்.
2667பெரிய திருவந்தாதி || 83
அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்
உயப்போம் நெறியிதுவே கண்டாய், – செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே! அஞ்சினேன்
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
செயற்பால அல்லவே, Seyarpala Allave - செய்யத்தகாதவற்றையே
செய்கிறுதி, Seygiruthi - செய்ய முல்வாயென்று
அஞ்சினேன், Anjinhen - (உன்னைப் பற்றிப்) பயப்படுகின்றேன்;
மல்லர் நான் வல்வினளை வாழ்த்து, Malllar Naan Valvinaiyai Vazhthu - மல்லர்களின் ஆயுளை முடித்த கண்ணபிரானை மங்கவா சாஸநம் பண்ணிக்கொண்டிரு
உயபோம் நெறி இதுவே கண்டாய், Uyapom Nerii Idhuvee Kandaai - உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்;
அயர்ப்பாய், Ayirppai - (அப்பெருமானை) மறந்து கெட்டாலும் கெடு;
அயர்ப்பாய், Ayirppai - மறவாமல் நினைந்து வாழ்ந்தாலும் வாழ்;
சொன்னேன், Sonnain - (உனக்கு நான் சொல்லவேண்டிய ஹிதத்தைச்) சொல்லி வைத்தேன்.
2668பெரிய திருவந்தாதி || 84
வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத்
தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,
எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,
தங்கத்தா னாமேலும் தங்கு.
அவன் அடியை வாழ்த்தி, Avan Adiyai Vaazhththi - “அப்பெருமானுடைய திருவடிகளை மங்களா சாஸநம்பண்ணி
பூ புனைந்து, Poo Punaindhu - (அத்திருவடிகளிலே) புஷபங்களைச் சாத்தி
நின் தலையை தாழ்த்து, Nin Thalaiyai Thaazhththu - உன் தலையை வணங்கு;
இரு கை கூப்பு, Iru Kai Kooppu - இரண்டு கையையுங்கொண்டு அஞ்ஜலிபண்ணு”
என்றால், Endraal - என்று சொன்னால்
உப்பாத, Uppadha - அப்படி செய்யாத
பாழ்த்த விதி, Paalththa Vidhi - பாழும் விதியையுடைய
என் நெஞ்சமே, En Nenjamai - என்னுடைய மனமே!
அவனை, Avanai - அந்த ஸர்வேச்வானை
எங்கு உற்றாய் என்று ஏத்தாது, Engu Utrraai Endru Aeththadhu - ‘எங்கேயிருக்கிறாய்’ என்று சொல்லியழைத்துத் துதியாமல்
தங்க ஆம் எனில், Thanga Aam Enil - தரித்திருக்கக் கூடுமாகில்
தங்கு, Thangu - தரித்திரு.
2669பெரிய திருவந்தாதி || 85
தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,
எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத்
தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய
கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்.
பொங்கு ஓதம், Pongu Oodham - கிளர்ந்த அலைகளையுடைத்தாய்
தண் அம், Than Am - குளிர்ந்து அழகிய
பால்வேலைவாய், Paalvelaivai - திருப்பாற்கடலிலே
நல் நிறம் கொள் கார், Nal Niram Kol Kaar - நல்ல திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டிருக்கிற மேகங்கள்
தங்கா முயற்சிய ஆய், Thangaa Muyarchiya Aay - மாறாத முயற்சியையுடையனவாய்க் கொண்டு
தாழ் விசும்பின் மீது பாய்ந்து, Thaal Visumbin Meedhu Paayndhu - விசாலமான ஆகாசத்தின் மேலே ஸஞ்சரித்து
கண்வளரும், Kanvalarum - திருக்கண் வளர்ந்தருளுகிற
என்னுடைய கண்ணன் பால், Ennudaiya Kannan Paal - எமது கண்ணபிரானிடத்திலுள்ள
எங்கே புக்கு, Engae Pukku - எந்த தேசத்திலேபோய்
எத்தவம் செய்திட்டன கொல், Eththavam Seidittana Kol - எவ்வகையான தபஸ்ஸைச் செய்தனவோ? (அறியேன்.)
2670பெரிய திருவந்தாதி || 86
கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,
என்நினைந்து போக்குவரிப் போது.
கார் கலந்த மேனியான், Kaar Kalanda Meniyaan - மேகத்தோடொத்த திருமேனியை யுடையவனும்
கை கலந்த ஆழியான், Kai Kalanda Azhiyaan - கையோடு சேர்ந்த திருவாழியை யுடையவனும்.
பார் கலந்த வல் வயிற்றான், Paar Kalanda Val Vayitran - (பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சோப் பெற்ற வலிய திருவயிற்றையுடையவனும்
பாம்பு அணையான், Paambu Anaiyaan - திருவன்நதாழ்வானைப் படுக்கையாகவுடையவனுமான பெருமானுடைய
சீர் கலந்து, Seer Kalandhu - திருக்குணங்கள் நிரம்பிய
சொல், Sol - ஸ்ரீஸூக்திகளை
நினைந்து, Ninaindhu - அநுணுந்தித்து
சூழ்வினையின் ஆழ் அவரை போக்கார் எம், Sozhvinainin Aazh Avarai Pokkaar Em - கொடிய பாவங்களினாலுண்டாகும் மிக்க துன்பங்களைப் போக்கிக்கொள்ளார்களாகில் (ஒழியட்டும்)
என் நினைந்து இப்போது போகுவர், En Ninaindhu Ippodhu Poguvaar - வேறு எதை அநுஸந்தித்து இந்தப் போதைப் போக்குவார்கள்.
2671பெரிய திருவந்தாதி || 87
இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்
எப்போது மீதேசொல் என்னெஞ்சே–எப்போதும்
கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்
மெய்கழலே ஏத்த முயல்.
என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே!
நம்மேல் வினை கடிவான், Nammael Vinai Kadivaan - நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக
எப்போதும் கை கழலா நேமியான், Eppodhum Kai Kazhalaa Nemiyaan - ஒருபோதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய
மொய்கழலே, Moykazhale - அழகிய திருவடிகளையே
ஏந்த, Aentha - அதிக்க
இப்போதும், Ippodhum - இக்காலத்திலும்
இன்னம் இனி சிறிது நின்றாலும், Innam Ini Siridhu Nindraalum - மேலுள்ள காலத்திலும்
எப்போதும், Eppodhum - ஆக எந்தக் காலத்திலும்
ஈதே சொல், Eedhe Sol - இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும்.