| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2606 | பெரிய திருவந்தாதி || 22 | காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள், மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால் தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம், வீற்றிருக்குமிடம் காணா திளைத்து. | என் மனத்தே, En Manatte - எனது நெஞ்சினுள்ளே மாலால் குடி புகுந்தார், Malal Kuti Pukunrar - திருமால் வந்து சேர்ந்துவிட்டார்; வல் வினையார் தாம், Val Vinaiyar Tam - (இதுவரையில் இங்கே குடியிருந்த) கொடிய பாவங்கள். வீற்றிருக்கும் இடம் காணாது, Virrirukkum Itam Kanadu - (இனிமேலும்) அதிகாரம் செலுத்திக்கொண்டு தங்கியிருக்க இடம் காணாமல் கால் பொத திரிந்து, Kal Pota Tirintu - கால் நோவத்திரிந்து அலைந்ததனால் மேலால், Melal - முன்பெல்லாம் தருக்கும், Tarukkum - என்னைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்த இடம் பாட்டினொடும், Itam Pattinotum - பெருமையோடே இளைத்து, Ilaitthu - வருத்தமுற்று இன்நாள், Innaal - இப்போது கத்துவாரம், Kattuvaaram - கத்திக்கொண்டு கிடக்கின்றன போலும். |