| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2622 | பெரிய திருவந்தாதி || 38 | அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே, இமைக்கும் பொழுதும் இடைச்சி – குமைத்திறங்கள், ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே, பேசியே போக்காய் பிழை. | நெஞ்சே, Nenje - ஓ மனமே! ஆராயில், Aaraayil - ஆராய்ந்து பார்த்தால் இமைக்கும் பொழுதும், Imaykkum Pozhudum - ஒரு க்ஷண காலமாகிலும் அமைக்கும் பொழுது உண்டே, Amaikkum Pozhuthu Unde - வீண்போது போக்க முடியுமோ? இடைச்சி குமை திறங்கள், Idaichchi Kumai Thirangal - யசோதையின் கையிலே அகப்பட்டு இவன் நலிவுபட்ட பாடுகளை ஏசியே ஆயினும், Easiyai Aayinum - பரிஹா ஸோக்தியாகச் சொல்லியாவது ஈன் துழாய் மாயளையே, Een Thuzhai Maayalaiye - போய்கமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானைப் பற்றியே பேசியே, Pesiyye - (எதையாவது) பேசிக்கொண்டே பிழை, Pizhai - உனது பாவங்களை போக்காய், Pokkai - போக்கிக் கொள்ளப்பார். |