| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2628 | பெரிய திருவந்தாதி || 44 | வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும், மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே, மேலைத்தாம் செய்யும் வினை. | வகை சேர்ந்த நல்நெஞ்சும், Vagai Serndha Nalenjum - (ஞானத்திற்கு) மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும் மிக வாய்ந்து வீழா எனினும், Miga Vaayndhu Veezhaa Eninum - (எம்பெருமானை) நன்றாகக்கிட்டி அநுபவிக்காவிட்டாலும், தாம், Thaam - சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள் மிக ஆய்ந்து, Miga Aayndhu - நன்றாக ஆராய்ச்சி பண்ணி நா உடைய வாயும், Naa Udaiya Vaayum - (எம்பெருமானைப் பேசுவதற்கு உறுப்பான) நாவோடு கூடிய வாக்கும் மாலை, Maalai - எம்பெருமானை வாழ்த்தாது இருப்பர், Vazhththaadhu Irupper - வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள் மேலை தாம் செய்யும் வினை இது அன்றே, Melaith Thaam Seyyum Vinai Ithu Andrae - மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது. |