| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2585 | பெரிய திருவந்தாதி || 1 | முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே, இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப் பூவீன்ற வண்ணன் புகழ் | முயற்சி சுமந்து, Muyarchi Sumandhu - எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே உத்ஸாஹம் பூண்டு (- (இதுவே நீயும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம்.)) எழுந்து, Ezhunthu - கிளம்பி முந்துற்ற நெஞ்சே, Mundru Nenjhe - (அவ்விஷயத்தில் என்னைவிட) முற்பட்டிருக்கிற மனமே! நீ எம் எம்மொடு கூடி, Nee Em Emmodu Koodi - நீ (தனிப்பட்டுப் போகாமல்) என்னோடு சேர்ந்து இயற்றுவாய், Iyattruvai - காரியத்தை நடத்த வேணும்; (நாம் இருவருஞ் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம் என்னவென்றால்) நல் பூவைப்பூ ஈன்ற வண்ணான், Nal Poovai Poo Eendra Vannaan - (அழகிய காயாம் பூவிலுண்டான நிறம் போன்ற நிறத்தையுடையனான எம்பெருமானுடைய புகழ், Pugazh - திருக்கல்யாணகுணங்களை நயப்பு உடைய, Nayappu Udaya - அன்பு பொதுந்திய நா ஈன், Na Een - நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற தொடை கிளவியுள், Thodai Kilaviyul - சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே பொதிவோம், Podivom - அடக்குவோமாக. |