| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2647 | பெரிய திருவந்தாதி || 63 | பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய், வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும், பருச்செவியு மீர்ந்த பரன். | பின் துரத்தும் காற்று இழந்த சூல்கொண்டல், Pin Thuraththum Kaatru Izhanda Soolkondal - பின்பற்றித்தள்ளுகிற காற்றையிழந்து கடலிலே போய்ச் சேர்ந்த காளமேகமானது (- (எப்படி யிருக்கின்றதென்றால்)) திரு செய்ய நேமியான், Thiru Seyya Nemiyan - அழகிய சிவந்த சக்கரத்தையுடையவனும், தீ அரக்கி, Thee Arakki - கொடிய ராக்ஷஹியான சூர்ப்பணகையினது மூக்கும், Mookkum - மூக்கையும் பரு செலியும், Paru Seliyum - பருத்தகாதுகளையும் அன்று, Anru - ஸ்ரீராமாவதாரத்தில் ஈர்த்த, Eerththa - அறுத்தொழித்தவனுமான பரன், Paran - ஸ்ரீராமபிரான் பேர்ந்தும் போய், Pernthum Poi - (அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து, Van Thiraik Kan Vandhu Anaindha Vaimaiththu - பெரிய திருப்பாற்கடலிலே வந்து சேர்ந்தபடியை ஒத்திருக்கின்றது. |