| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2649 | பெரிய திருவந்தாதி || 65 | கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல் தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை, சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு. | நெஞ்சே, Nenje - வாராய்மனமே! கலந்து, Kalandhu - நம்மோடு கூடவேயிருந்து நஸியும், Nasiyum - ஹிம்ஸிக்கின்ற கடு துயரை, Kadu Thuyarai - கடுமையான துக்கங்களை மலங்க அடித்து மடிப்பான், Malanga Adithu Madippaan - முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில், விலக்கல்போல், Vilakkalpol - மலைபோன்றவனும் தொல் மாலை, Thol Maalai - அநாதிசாலமாக நம்மேல் வ்யாமோஹமுடையவனும் கேசவனை, Keesavanai - சிறந்த திருக்குழல் கற்றையை யுடையவனும் நாரணனை, Naaranai - ஸ்ரீமர்நாராயணனும் மாதவனை, Maadhavanai - திருமகள் கேழ்வனுமான பெருமான் விஷயத்திலே சொல் மாலை, Sol Maalai - பாசுரங்களாகிற மாலைகளை எப்பொழுதும், Eppozhudhum - ஸர்வகாலமும் குட்டு, Kuttu - ஸமர்ப்பி. |