திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2652 | பெரிய திருவந்தாதி || 68 | கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,
புல்லென் றழிந் தனகொல் ஏபாவம்,-வெல்ல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,
அடியேன துள்ளத் தகம். | பதவுரை Show / Hideவெல்ல நெடியான், Vella Nediyan - மிகவுயர்ந்தவனும் நிறம் கரியான், Niram Kariyan - நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான் உன் புகுந்து, Un Pugundhu - உள்ளே பிரவேசித்து அடியேனது உள்ளத் தகம் நீங்கான், Adiyenathu Ullath Thagam Neengan - அடியேனது உள்ளத்தைவிட்டு நீங்குகின்றனில்லை; (ஆகையாலே) கல்லும், Kallum - திருவேங்கடமலையும் கனை கடலும், Kanai Kadalum - கோஷிக்கின்ற திருப்பாற்கடலும் வைகுந்தம், Vaikundham - வைகுண்டமென்கிற வான் நாடும், Vaan Naadum - வானுலகமும் புல்லென்று ஒழிந்தன கொல், Pullenru Ozhindhana Kol - அல்பமாய் விட்டன போலும்; எபாவம், Epavam - ஐயோ பாவம்! |