| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2624 | பெரிய திருவந்தாதி || 40 | வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே, போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை மாய்த்தானை வாழ்தே வலி. | வா நெஞ்சே, Va Nenje - வாராய் மனமே! இது ஒப்ப வாய்ப்பு மற்று இல்லை, Idhu Oppa Vaippu Matru Illai - இப்போது நமக்கு வாய்திருக்கிற மாதிரி மற்று எப்போதும் வாய்க்கமாட்டாது காண; வெம் நரகில், Vem Narakil - (நைச்சியம் பேசிப் பின் வாங்குவதாகிற) கொடிய நரகத்திலே பூவியேல், Pooviyel - கொண்டு தள்ளி விடாதே; தீ பால, Thee Paal - தீயதான தன்மையையுடையலான பேய் தாய், Pei Thaai - தாய் வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய உயிர், Uyir - பிராணனை பால், Paal - அவளது முலைப்பாலோடே நலாய், Nalai - கலந்து உண்டு, Undu - அமுது செய்து அவன் உயிரை மாய்த்தானை, Avan Uyirai Maayththaanai - அப்பூதனையினது உயிரை முடித்த பெருமானை வாழ்த்தே, Vaazhththe - வாழ்த்துதலே வலி, Vali - நமக்கு மிடுக்காம். |