| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2639 | பெரிய திருவந்தாதி || 55 | மருங்கோத மோதும் மணிநா கணையார், மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால், மனக்கவலை தீர்ப்பார் வரவு. | வரவு, Varavu - (தம்முடைய) வருகையினாலே மனம் கவலை தீர்ப்பார், Manam Kavalai Theerppaar - (நமது) மணத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும் மழுங்கு ஓதம் மோதும், Mazhunghu Oodham Moathum - ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே) மணி நாக அணையார், Mani Naaga Anaiyaar - மாணிக்கத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவருமான பெருமான். மருங்கே வர அரியர் எலும், Marungae Vara Ariyar Elum - (ஒருவர்க்கும் ஸ்வப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும் எமக்கு, Emakku - நமக்கு அவரை, Avarai - அப்பெருமானை உன்னால், Unnaal - மனத்தினால் ஒருங்கே, Orungae - ஒரே தன்மையாக எப்பொழுதும் காணலாம், Eppozhudhum Kaanalaam - எப்போதும் கண்டு அநுபவிக்கட்டும். |