| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2603 | பெரிய திருவந்தாதி || 19 | சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே, எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண் மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக, காத்தானைக் காண்டும்நீ காண். | சூது அறியா நெஞ்சமே, Soodhu Ariyaa Nenjamai - செய்ய வேண்டியது இன்னதென்றறியாமல் தளும்புகிற மனமே! (- (மெய்யே காண விரும்பினால்)) சொல்லில் குறை இல்லை, Sollil Kurai Illai - பகவத் விஷயத்தைப் பேசினால் பேச்சில் குறையில்லை; (அல்லது) நமக்கொரு குறையில்லை; தொல்லை கண், Thollai Kan - அநாதியான இப்பூமியில் மா தானைக்கு எல்லாம், Maa Thanaikku Ellam - (துரியோதநாதிகளுடைய) பெரிய சேனைகளுக்கெல்லாம். ஓர் ஐவரையே மாறு ஆக, Oor Aivaraie Maaru Aaga - பஞ்சபாண்டவர்களே எதிரிகளாம் படி எல்லி பகல் என்னாது எப்போதும் காத்தானை, Elli Pagal Ennaadhu Eppodhum Kaathaanai - இரவுபகலென்னாமல் எக்காலத்திலும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை காண்டும், Kaandum - காண்போம்! நீ காண், Nee Kaan - நீ காணலாம். |