திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2586 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2586பெரிய திருவந்தாதி || 2
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம் மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம் எங்கள்மால் கண்டாய் இவை.
பதவுரை Show / Hide
எம் கண், Em Kan - எங்களிடத்தில் (- (ஆக இப்படிப்பட்ட உண்மையை நாங்கள் நன்கு அறிந்திருந்தும் உன்னைப் புகழாமலாவது மதியாமலாவது இருக்கப் போகிறதில்லை; புகழ்வதும், மதிப்பதும் செய்யத்தான் போகிறோம்.))
மால், Maal - வ்யாமோஹகத்தையுடைய
செம் கண் மால், Sem Kan Maal - புண்டரீகாக்ஷனான பெருமானே,
புகழ்வோம், Pugazhvom - (ஒருவராலும் புகழ்ந்து முடிக்கவொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில்
பழிப்போம், Pazhippom - (அயோக்யர் புகழ்வது புகழ்ச்சியன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய்விடுவோம்;
புகழோம், Pugazhom - (இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு) புகழாதிருந்தோமாகில்
பழியோம், Pazhiyom - உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம்;
மதிப்போம், Mathippom - உன்னைச் சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோமாகிலும்
இகழ்வோம், Ikazhvom - உன்னை அகௌரவப்படுத்தினவர்களாக ஆய்விடுவோம்;
மதியோம், Madhiyom - அப்படி நெஞ்சால் நினையாதிருந்தோமாகில்
இகழோம், Ikazhom - அகௌரவப்படுத்தாதவர்களாக ஆவோம்;
நீ சீறல், Nee Seeral - நீ கோபங்கொள்ளலாகாது;
இவை, Ivai - புகழ நினைப்பதும் (பிறகு) புகழலாகாதென்று பின் வாங்குவதுமாகிற இவை
தீ வினையோம் எங்கள் மால் கண்டாய், Thee Vinaiyom Engal Maal Kandaai - மஹாபாவிகளான எங்களுடைய ப்ரமமேயாம்.