| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2631 | பெரிய திருவந்தாதி || 47 | நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே, நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும் எவ்வளவு முண்டோ எமக்கு. | மாலே, Maale - ஸர்வேச்வரனே! (- (இப்பாவிகள் அற்ப பலன்களை விரும்பி தேவதாந்தரங்களின் பக்கல் ஓடுமவர்களே யொழிய அவற்றுக்காகவும் உன்னருகு வரமாட்டார்கள்; இப்படியான பின்பு.) (உபாயமும் உபேயமும் நீயேயென்கிற உறுதி எமக்கு நிலை பெற்றதன்றோ.)) மானிடவர், Maanidavar - “இவ்வுலகத்தவர்கள் நினைத்து இறைஞ்சி, Ninaithu Irainji - நம்மை ஒரு பொருளாக நினைத்து வணங்கி ஒன்று, Ondru - ஏதாவதொரு அற்ப பலனையாவது இரப்பர், Irappar - நம்மிடத்தில் வேண்டிக் கொள்வர்கள் என்றேயும், Endraiyum - என்று கூட நீ நினைத்திட வேண்டா, Nee Ninaithida Venda - நீ நினைக்க வேண்டா; நேரே நினைத்து இறைஞ்ச, Nere Ninaithu Irajinja - (இவர்கள்) உன்னையே உபாயமாகவும் உபேயமாகவும் நினைத்துத் தொழுவதற்கு எவ் அளவர், Ev Alavar - என்ன அறிவுள்ளவர்கள்? என் இடத்தோர், En Idathor - அப்படிப்பட்ட அறிவு உண்டாகக்கூடிய இடத்தில் தானுள்ளவர்களோ? (இருள் தருமாஞானத்திலுள்ளவர்களன்றோ.) எமக்கு, Emakku - உன்னுடைய நிர்ஹேதுந கடாஷத்திற்குப் பாத்திராமன அடியோங்களுக்கோவென்றால் அது தானும், Adhu Thanum - கீழ்சொன்ன மானிடவர்களுக்குமான துர்ப்புத்தி எவ்வளவும், Evvalavum - சிறிதேனும், உண்டோ, Undo - உண்டாகக் கூடியதோ? |