திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2612 | பெரிய திருவந்தாதி || 28 | அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,
இன்றேநாம் காணா திருப்பது வும்,-என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்
உட்கண்ணால் காணு முணர்ந்து. | பதவுரை Show / Hideஎன்றேனும், Endraenum - எக்காலத்திலும் கண் கண்ணால், Kan Kannal - வெளிக்கண்ணாலே நாணாக, Naanaga - காணக்கூடாத அவ்வுருவை, Avvuruvai - அப்படிப்பட்ட விலக்ஷணமான திருவுருவத்தை நெஞ்சு என்னும் உன் கண் உணர்ந்து காணுமேல், Nenju Ennum Un Kan Unarndhu Kaanumeel - நெஞ்சாகிற அகக்கண் விகஹித்து ஸாக்ஷாத்கரிக்குமாகில், அன்றே, Andrae - அப்போதே, ஆழியான கார் உருவம், Azhiyana Kaar Uruvam - திருவாழியை நிரூபகமாகவுடையனான எம்பெருமானுடைய கரிய திருமேனியை நம் கண் காணும், Nam Kan Kaanum - நமது புறக்கண்ணும் காணப்பெறும்; நாம் காணாதிருப்பதுவும் இன்றே, Naam Kaanadhiruppadhum Indrae - நாம் அவ்வுருவத்தைக் காணாமல் வருந்திக் கிடப்பது அகக்கண் மலராத இப்போது மாத்திரமே. |