| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2599 | பெரிய திருவந்தாதி || 15 | பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம் பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம் தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய செம்மேனிக் கண்வளர்வார் சீர். | நெஞ்சே, Nenje - ஓ மனமே! ஓதம், Otham - கடலானது ஆர்த்து, Aarththu - கோஷித்துக்கொண்டு தம்மேனி தாள், Thammeeni Thaal - தம்முடைய திருமேனியையும் திருவடியையும் தடவ, Thadava - (அலையாகிற கையினாலே) தடவும்படியாக தாம் கிடந்து, Thaam Kidandhu - (அக்கடலில்) பள்ளி கொண்டருளி தம்முடைய செம்மேனி கண் வளர் வார், Thammudaiya Semmeeni Kan Valar Vaar - தம்முடைய செந்நிறமான திருக்கண்கள் வளரப்பெறுகின்றவரான பெருமாளுடைய சீர், Seer - திருக்குணங்களை, படு துயரம் பேர்த்து ஓத, Padu Thuyaram Perthu Otha - கொடிய துக்கங்கள் தீரும்படி நாம் பேசுவதனால் பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை, Peedu Azhivu Aam Peechu Illai - அவனுடைய பெருமைக்கு அழிவு உண்டாய்விடுமென்பதில்லை; எதிரிதா பார்த்து ஓர், Edhiridha Paarthu Oor - (இவ்விஷயத்தை) கண்ணெதிரே நிற்பதாகக் கண்டு தெரிந்துகொள். |