| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2637 | பெரிய திருவந்தாதி || 53 | ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது, உன்னடியார்க் கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில் வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு வைகுந்த மென்றருளும் வான். | செம்கண் மால், Semkan Mal - (அடியார்கள் மீது வாத்ஸ்ல்யத்தாலே) சிவந்த திருக்கண்களையுடைய திருமாலே; (- (எத்தனை நன்மை செய்தும் த்ருப்தி பெறாமல்)) யான் உரைப்பது, Yaan Uraippathu - அடியேன் விண்ணப்பஞ் செய்வது ஒன்று உண்டு, Onru Undu - ஒரு விஷயமுண்டு; அவர்க்கு, Avarkku - இப்படி பார்க்கின்ற நீ அடியவர்களுக்கு வைகுந்தம் என்று அருளுமி வான், Vaikundham Endru Arulum Vaan - ஸ்ரீவைகுண்டமென்று சிறப்பித்துச் சொல்லி உதவுகின்ற பரம பதமானது. நீ, Nee - நீயோ வென்றால் உன் அடியார்க்கு, Un Adiyarkku - உனது அடியார்களுக்கு என் செயவன் என்றே இருத்தி, En Seyavan Endrae Iruththi - இன்னமும் என்ன நன்மை செய்வோமென்றே பாரித்திரா நின்றாய்; நின் புகழில் வைகுந்தம் சிந்தையிலும் இனிதோ, Nin Pugazhila Vaikundham Sindhaiyilum Inidho - உனது திருக்குணங்களிலேயே ஊன்றியிருக்கப்பெற்ற தமது சிந்தையிற் காட்டிலும் சிறந்ததோ? |