| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2595 | பெரிய திருவந்தாதி || 11 | நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை, வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ, நீரும்நீ யாய்நின்ற நீ. | ஆழாத பாரும் நீ, Aazhaadha Paarum Nee - (நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு; நீரும் நீ, Neerum Nee - ஜலதத்வமும்*; தீயும் நீ, Theeyum Nee - தேஜஸ்தத்வமும் நீ; காலும் நீ, Kaalum Nee - வாயுதத்வமும் நீ; வானும் நீ, Vaanum Nee - ஆகாசமும் நீ; ஆய் நின்ற நீ, Aay Nindra Nee - இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாகவுடைய நீ, நாழால் அமர் முயன்ற, Naazhaal Amar Muyantra - அஹங்காரத்தினால் யுத்தம் செய்வதில் கைவைத்த வல் அரக்கன், Val Arakkan - கொடிய இராவணனுடைய இன் உயிரை, In Uyirai - இனிமையான பிராணனை வாழா வகை, Vaazha Vagai - வாழ்ந்திருக்க ஒட்டாமல் வலிதல், Valithal - கவர்ந்து கொண்டது நின்வலியே, Ninvaliye - உனக்கு ஒரு சூரத்தனமோ? அல்ல. |