| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2667 | பெரிய திருவந்தாதி || 83 | அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன் உயப்போம் நெறியிதுவே கண்டாய், – செயற்பால அல்லவே செய்கிறுதி நெஞ்சமே! அஞ்சினேன் மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து. | நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே! செயற்பால அல்லவே, Seyarpala Allave - செய்யத்தகாதவற்றையே செய்கிறுதி, Seygiruthi - செய்ய முல்வாயென்று அஞ்சினேன், Anjinhen - (உன்னைப் பற்றிப்) பயப்படுகின்றேன்; மல்லர் நான் வல்வினளை வாழ்த்து, Malllar Naan Valvinaiyai Vazhthu - மல்லர்களின் ஆயுளை முடித்த கண்ணபிரானை மங்கவா சாஸநம் பண்ணிக்கொண்டிரு உயபோம் நெறி இதுவே கண்டாய், Uyapom Nerii Idhuvee Kandaai - உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்; அயர்ப்பாய், Ayirppai - (அப்பெருமானை) மறந்து கெட்டாலும் கெடு; அயர்ப்பாய், Ayirppai - மறவாமல் நினைந்து வாழ்ந்தாலும் வாழ்; சொன்னேன், Sonnain - (உனக்கு நான் சொல்லவேண்டிய ஹிதத்தைச்) சொல்லி வைத்தேன். |