| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2648 | பெரிய திருவந்தாதி || 64 | பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில், உரனா லொருமூன்று போதும்,-மரமேழன் றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர் கைதான் தொழாவே கலந்து. | அன்று, Anru - முற்காலத்தில் (- (அப்படிப்பட்ட விவேகிகளை)) மரம் ஏழ் எய்தானை, Maram Ezhu Eydhaanai - (ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தஸால வ்ருக்ஷங்களைத் துளைத்த இராமபிரானென்ன, புள்ளின் வாய் சீண்டானை, Pullin Vaai Seendhaanai - பகாஸுரனது வாயைக் கிழித்தெறிந்த கண்ணபிரானென்ன இவர்களை நோக்கி அவன் பரன் ஆம் ஆதல், Avan Paran Aam Aadhala - ‘அந்த இராமபிரானும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மனுஷ்யரல்லர்;) ஸாக்ஷாத் பரமபுருஷரேயாவர்’ என்கிற விஷயத்தை உõனால், Unnaal - தங்களுடைய மனத்தினாலே பாவிப்பர் ஆகில், Paavippar Aagil - அநுஸந்திப்பர்களேயானால் அமரர் கை, Amarar Kai - தேவர்களின் கைகளானவை கலந்து, Kalandhu - ஒன்றுசேர்ந்து ஒரு மூன்று போதும், Oru Moondru Podhum - எப்போதும் தொழாவே, Thozhaave - ஸேவிக்க மாட்டாவோ. |