| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2641 | பெரிய திருவந்தாதி || 57 | வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே, தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும் தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள, வாழ்வடங்க மார்விடந்த மால். | நெஞ்சே, Nenje - நெஞ்சமே! போர், Poar - யுத்த பூமியிலே அவுணன் தன்னை, Avunan Thannai - இரணியாசுரனை தழீஇக் கொண்டு, Thazhiik Kondu - அழுந்தக் கட்டிக்கொண்டு, புலால் வெள்ளம், Pulaal Vellam - ரத்த ப்ரவாஹமானது தாழ்வு இடங்கள் பற்றி, Thazhvu Idangal Patri - பள்ள நிலங்கள் பக்கமாக எங்கும் சுழித்து உகன, Engum Suzithu Ukan - கண்டவிடமெங்கும் சுழித்துக் கொண்டு அலையெறிந்து கிளரும்படியாக வாழ்வு அடங்கா, Vazhvum Adangaa - (அவ்விணியனுடைய) வாழ்ச்சி முடியும்படி மார்வு இடந்தமால், Maarvu Idanthamaal - அவனது மார்பைப் பிளந்த பெருமான், வழி தங்கு வல்வினையை, Vazhi Thangu Valvinaiyai - இடைவழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற (பிரதிபந்தகமான) வலிய பாவங்களை மாற்றோனோ, Maatrono - (போக்கியருள மாட்டானோ? (போக்கியேவிடுவன்.) |