திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2665 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2665பெரிய திருவந்தாதி || 81
பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,–தகவாத் தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என்றோரார், செழும்பரவை மேயார் தெரிந்து.
பதவுரை Show / Hide
செழு பரவை மேயார், Sezhu Paravai Meyaar - அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான்,
இவர் தகவாதொழும்பர், Ivar Thagavathozhumbar - “இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்;
சீர்க்கும் துணை இலர், Seerkum Thunai Ilar - சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்”
என்று தெரிந்து ஓரார், Endru Therinthu Ooraar - என்பதை ஊன்றி ஆராயாதவனாய்
பகல் இரா என்பதுவும் பாவியாது இருபொழுதும், Pagal Ira Enbadhum Paaviyadhu Irupozhudhum - பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும்
இகல் செய்து, Ikal Seidhu - வலிகட்டாயப்படுத்தி
எம்மை ஆள்வர், Emmai Aalvar - அடியேனை அநுபவியா நின்றான்.