| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2658 | பெரிய திருவந்தாதி || 74 | என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால், ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே! புடைதான் பெரிதே புவி. | ஒரு நாள் ஒழியாமை, Oru Naal Ozhiyamai - ஒருநாளும் தப்பாமல் என்றும், Endrum - எந்நாளும் யான் இரந்தால், Yaan Irandhaal - அடியேன் பிரார்த்தித்தால், குன்று குடை ஆக ஆ காத்த கோவலனார், Kundru Kudai Aaga Aa Kaatha Kovalanaar - (முன்பு) கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திப் பசுக்களை ரக்ஷித்த கோபாலகிருஷ்ண பகவான் ஒன்றும் இரங்கார், Ondrum Irangaar - சிறிதும் தயவு செய்கிறாரில்லை; உரு காட்டார், Uru Kaattaar - தன் திருமேனியைக் காட்டுகிறாரில்லை; நெஞ்சே, Nenje - ஓ மனமே! புவி, Bhuvi - நாமிருக்கும் இடம் பெரிதே புடை தான், Peridhe Pudai Thaan - (அவருடைய அருள் வெள்ளம் ஏறிப்பாய முடியாத) மிகப் பெரிய மேட்டு நிலமோ? |