| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2644 | பெரிய திருவந்தாதி || 60 | பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய் ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே,- பேர்ந்தெங்கும் தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இல்லைகாண் மற்றோர் இறை. | என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே! பேர்ந்து ஒன்று நோக்காது, Perndhu Ondru Nookkathu - வேறொன்றையும் கணிசியாமல் ஈன் துழாய் மாயனையே பின்நிற்பாய், Een Thuzhai Maayanaiye Pinnirpai - போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி நின்றும் நில்லு; நில்லாப்பாய், Nillaappai - அப்படி அவனைப் பற்றாதொழியினும் ஒழி; தொல்லை, Tollai - அநாதியாய் மா, Maa - பெரிதாய் வெம், Vem - கடினமான நரகில், Naragil - நரகத்திலே சேராமல், Seramal - போய்ப்புகாமல் காப்பதற்கு, Kaappatharku - நம்மை ரக்ஷிப்பதற்கு பேர்ந்து மற்று ஓர் இறை, Perndhu Matru Oru Irai - வேறொரு ஸ்வாமி எங்கும் இல்லை காண், Engum Illai Kaan - ஓரிடத்திலுமில்லைகிடாய். |