திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2640 | பெரிய திருவந்தாதி || 56 | வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே!
ஒருவாறொருவன் புகவாறு,-உருமாறும்
ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,
மாயவர்தாம் காட்டும் வழி. | பதவுரை Show / Hideஒருவன், Oruvan - எந்த சேதானும் (- (அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக)) ஒரு ஆறு, Oru Aaru - எந்த உபாயாந்தரத்திலும் புகா ஆறு, Pugaa Aaru - பிரவேசிக்க வேண்டாதபடி உரு மாறும், Uru Maarum - தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற ஆயவர் தாம், Aayavar Thaam - ஸ்ரீகிருஷ்ணனானவனும் சேயவர் தாம், Seyavar Thaam - ஆஸுரப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும் அன்று உலகம் தாயவர் தாம், Andru Ulagam Thaayavar Thaam - முன்பொருநாள் உலகங்களைத் தாலியளந்தவனும் மாயவர் தாம், Maayavar Thaam - ஆச்சரியருமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான் காட்டும் வழி, Kaattum Vazhi - காட்டுகிற உபாயம் வரவு ஆறு ஒன்று, Varavu Aaru Ondru - இன்னவழியாக வந்ததென்று தெரியாது; வாழ்வு இனிது, Vazhvum Inidhu - பலன் போக்யமாயிரா நின்றது; ஆல் எல்லே, Aal Ellae - ஆச்சரியம் |