| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2589 | பெரிய திருவந்தாதி || 5 | பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ மற்றையா ராவாரும் நீபேசில்,- எற்றேயோ! மாய! மா மாயவளை மாயமுலை வாய்வைத்த நீயம்மா! காட்டும் நெறி. | மாய, Maaya - மாயவனே! அம்மா, Amma - ஸ்வாமியே! பேசில், Pesil - உன்னால் நான் பெய்ய உபகாரங்களைப் பேசப் புகுந்தால் பெற்ற தாய் நீயே, Petra Thaai Neeye - பெற்றதாய் போலே ப்ரியமானதையே செய்பவனும் நீயே; பிறப்பித்த தந்தை நீ, Pirappiththa Thandhai Nee - உண்டாக்கின பிதாவைப் போல ஹிதமானதையே செய்பவனும் நீயே; மற்றையர் ஆவாரும் நீ, Mattraiyar Aavaarum Nee - மற்றும் ஆசாரியரும் நீயே; மா மாயவளை மாய, Maa Maayavalai Maaya - மஹத்தான வஞ்சனையையுடைனான பூதனையை முடிப்பதற்காக முலை, Mulai - (அவளது விஷந்தடவின) முலையை வாய் வைத்த நீ, Vaai Vaiththa Nee - அமுது செய்த நீ காட்டும் நெறி, Kaattum Nerii - எனக்குக் காட்டின வழிகள் எற்றே ஓ, Ettre O - என்ன ஆசாரியமானவை ( என்று உருகுகிறார்.) |