| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2617 | பெரிய திருவந்தாதி || 33 | யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ, யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,- யாதானும் தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால் பாறுபா றாக்கினான் பால். | யாதானும் தேறும் ஆ செய்யா அசுரர்களை, Yaadhaanum Therum A Seiyaa Asurarhalai - கொஞ்சமும் விச்வஹிக்கும்படியான செயலைச் செய்யாதவர்களான அஸுரர்களை (- (எப்போதும் தீங்கையே செய்பவர்களை) (சிறந்த பெருமானை அயோக்யமான நாம் கிட்டவாமோ என்னில்) (அணுகாவாறு தான் என்கொல்?)) நேமியாய், Nemiyaa - திருவாழியினாலே பாறு பாறு ஆக்சினான் பால், Paaru Paaru Aaksinaan Paal - துண்டம் துண்டமாகத் துணித்தொழித்த எம்பெருமான் பக்கலில் யாதானும் நேர்ந்து, Yaadhaanum Neerndhu - எதையாவது ஸமர்ப்பித்து அணுகா ஆறுதான் என்கொல், Anugaa Aaru Thaan Enkol - கிட்டாமலிருப்பது என்னோ? யாதானும் ஒன்று அறியில், Yaadhaanum Ondru Ariyil - எதையாவது ஒரு வஸ்துவை அறியக்கூடிய சைதந்யத்தையுடைத்தாயிருந்து வைத்தும் தன் உகக்கில், Than Ugakkil - தான் ஆநந்தப்படுவதைத் தன்மையாக உடைத்தாயிருந்து வைத்தும் |