| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2661 | பெரிய திருவந்தாதி || 77 | உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே, இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம், நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர் சொல்நன்றி யாகும் துணை. | இரைக்கும் கடல், Iraikkum Kadhal - கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே கிடந்த, Kidandha - பள்ளிக்கொண்டிரா நின்ற எந்தாய், Endhai - ஸ்வாமீ! உரைக்கில், Uraikkil - ஆராய்ந்து சொல்லில், ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே, Oru Sutraththaar Utraar Endru Aarae - (நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ? எனது உயிர்க்கு, Enathu Uyirkkum - என் ஆத்மாவுக்கு ஓர் சொல், Oru Sol - ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்கிற சரமச்லோகமாகிற ஒரு சொல்லாலே நன்றி ஆகும் துணை, Nandri Aakum Thunai - உதவிசெய்யும் துணையும் உரைப்பு எல்லாம், Uraippu Ellam - மற்றும் சொல்லப்படுகிற எல்லாவகையான துணையும் நின் அன்றி மற்று இலேன் கண்டாய், Nin Andri Matru Ileen Kandaai - உன்னைத் தவிர வேறொருவரையும் உடையே னல்லேனுகாண். |