| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2600 | பெரிய திருவந்தாதி || 16 | சீரால் பிறந்து சிறப்பால் வளராது, பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப் புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே? சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து. | பேராளா, Peraala - ‘மஹாநுபாவனான பெருமானே! சீரால் பிறந்து சிறப்பால் வளராது, Seeraal Pirandhu Sirappaal Valaraadhu - சிறப்புடன் பிறப்பதையும் சிறப்புடன் வளர்வதையும் செய்யாமல் பேர் வாமன் ஆகாக்கால், Peer Vaaman Aagaakkal - திருநாமம் வ மானென்று வைத்துக் கொள்ளாமலிருந்தால் மார்பு ஆர புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி, Maarbu Aara Pulki Nee Undu Umizhndha Bhoomi - உன்னாலே மார்பால் அணையப்பட்டும் வயிற்றில் வைக்கப்பட்டும் பின்பு வெளிப்படுத்தப்பட்டும் இப்படி ஸ்வாதீநமாயிருந்த இப்பூமியானது. நீர் ஏற்பு அரிதே, Neer Erppu Aridhe - தாரை வார்த்து தத்தம் பண்ணிக் கொடுக்கப்பெற முடியாதோ?’ யாம் அறிய, Yaam Ariya - இவ்விஷயத்தை அடியோம் தெரிந்து கொள்ளும்படி நீ சூழ்ந்து சொல்லு, Nee Soozhndhu Sollu - நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேணும். |