| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2605 | பெரிய திருவந்தாதி || 21 | சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு, இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப் பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய, காருருவன் தான்நிமிர்த்த கால். | அன்று, Anru - முன்பு மாவலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில் அங்கு, Anku - அந்த மாவலியின்யாக பூமியிற் சென்று பார் உருவும், Par Uruvum - பூமியாகிறஸ்துவும் பார் வளைத்த நீர் உருவும், Par Valaitta Nir Uruvum - அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற ஜலதத்துவமும் கண் புதைய, Kan Pudaiya - மறையும்படி கார் உருவன் தான் நிமிர்த்த கால், Kar Uruvan Tan Nimirtta Kal - காளமேகத் திருவுருவனான எம்பெருமான் நிமிர்த்தருளிய திருவடிகள் அங்கு வெம் நரகில் சென்று சேராமல் காப்பதற்கு, Anku Vem Narakil Cenru Ceramal Kappatarku - கொடிய அந்த நரகங்களிலே நான் சென்று சேராதபடி என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு இன்று, Inru - இப்போது இங்கு, Inku - இவ்விடத்தில் என் நெஞ்சால், En Nencal - என்னுடைய நெஞ்சிலே இடுக்குண்ட, Itakkunta - நெருக்குப்பட்டுக்கிடக்கின்றன. |