| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2602 | பெரிய திருவந்தாதி || 18 | தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக, பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப் பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன் தொல்லுருவை யாரறிவார் சொல்லு. | தாம்பால் ஆப்புண்டாலும், Thaampaala Aappundhaalum - (அசோதையினால்) தாம்பு கொண்டு கட்டியடிக்கப் பெற்றாலும் அத்தழும்புதான் இளக, Aththalumbudhaan Ilaga - அந்தத் தாம்பினால் கட்டினத்தாலுண்டான காய்ப்பு அற்பதம் என்னும்படி பாம்பால், Paampaala - காளியனாகிய பாம்பினால் ஆப்புண்டு, Aappundu - கட்டப்பட்டு பாடு உற்றாலும், Paadu Utralaam - கஷ்டங்களையடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்) சோம்பாது, Soombaadhu - (ஜகத்ஸ்ருஷ்டியில்) சோம்பல்படாமல் இ பல் உருவை எல்லாம், I Pal Uruvai Ellam - இவ்வுலகில் காணப்படுகிற பலபல பிராணிகளையெல்லாம். படர்வித்த, Padarvitha - விஸ்தாரமாக வுண்டாக்கின வித்தா, Viththa - ஆதிமூலமே! உன் தொல் உருவை ஆர் அறிவார், Un Thol Uruvai Aar Arivaar - உன்னுடைய திவ்ய ஸ்வரூபத்தை அறிவாருண்டோ? சொல்லு, Solla - நீயே சொல்லு. |