| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2611 | பெரிய திருவந்தாதி || 27 | அடியால் படிகடந்த முத்தோ,அதன்றேல் முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய். செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம், அறிகிலாமால் நீயளந்த அன்று. | நெடியாய், Nediyai - பகவானே! செறி கழல் கொள் தான் நிமிர்த்து, Serri Kazhal Kol Thaan Nimirthu - செறிந்த வீரக் கழலை அணிந்த திருவடிகளை நீட்டி உலகம் எல்லாம் சென்று நீ அளந்த அன்று, Ulagam Ellam Sendru Nee Alandha Andru - கீழுலகம் மேலுலகமெல்லாம் வியாபித்து அளந்த காலமாகிய த்ரிஸிக்கிரமாவதாரத்திலே அடியால் படி சடந்த முத்தோ, Adiyal Padi Sadandha Muththo - திருவடியால் பூமி முழுவதையும் அளந்துகொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ? அது அன்றேல், Adhu Andraeel - அல்லது முடியால் விசும்பு அளந்த முந்தோ, Mudiyal Visumbu Alandha Mundho - திருவடியால் மேலுலகத்தையெல்லாம் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ? அறிகிலம், Arikilam - அவ்விரண்டு ஸந்தோஷங்களுள் எந்த ஸந்தோஷம் இப்போது உன் நெஞ்சில் ஓடுகிறதென்பதை அறிகிறோமில்லை. |