| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2653 | பெரிய திருவந்தாதி || 69 | அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார், முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால் சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை, ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து? | வல்வினையர் ஆவார், Valvinaiyar Aavaar - கடுமையான பாவங்களானவை (- (தங்களுடைய குடியிருப்பை யிழந்தமையாலே)) அகம் சிவந்த கண்ணினர் ஆய், Aham Sivantha Kanninar Aay - (கோவத்தினால் உள்ளே சிவந்த கண்களையுடையனவாய் முக்கி, Mugki - வருந்தி முகம் சிதைவராம் அன்றே, Mugam Sithaivaraam Andrae - முகம் வாடியிருக்கின்றனவல்லவோ? மிகும், Mikum - எல்லாரிலும் மேற்பட்டவனான திருமால், Thirumaal - திருமாலினுடைய சீர் கடலை, Seer Kadalai - கல்யாண குணங்களாகிற கடலை உள் பொதிந்த, Ull Pothintha - உள்ளே அடக்கிக் கொண்ட சிந்தனையேன் தன்னை, Sindhanaiyen Thannai - சிந்தனையை யுடையேனான என்னை செவ்வே, Sevvae - செவ்வையாக அடர்ந்து, Adarnthu - நெருக்கி ஆர்க்கு அடல் ஆம், Aarkku Adal Aam - யாரால் உபத்ரவிக்க முடியும்? (ஒருவராலும் என்னைத் திரஸ்கரிக்க முடியாது.) |