| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2668 | பெரிய திருவந்தாதி || 84 | வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத் தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி, எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே, தங்கத்தா னாமேலும் தங்கு. | அவன் அடியை வாழ்த்தி, Avan Adiyai Vaazhththi - “அப்பெருமானுடைய திருவடிகளை மங்களா சாஸநம்பண்ணி பூ புனைந்து, Poo Punaindhu - (அத்திருவடிகளிலே) புஷபங்களைச் சாத்தி நின் தலையை தாழ்த்து, Nin Thalaiyai Thaazhththu - உன் தலையை வணங்கு; இரு கை கூப்பு, Iru Kai Kooppu - இரண்டு கையையுங்கொண்டு அஞ்ஜலிபண்ணு” என்றால், Endraal - என்று சொன்னால் உப்பாத, Uppadha - அப்படி செய்யாத பாழ்த்த விதி, Paalththa Vidhi - பாழும் விதியையுடைய என் நெஞ்சமே, En Nenjamai - என்னுடைய மனமே! அவனை, Avanai - அந்த ஸர்வேச்வானை எங்கு உற்றாய் என்று ஏத்தாது, Engu Utrraai Endru Aeththadhu - ‘எங்கேயிருக்கிறாய்’ என்று சொல்லியழைத்துத் துதியாமல் தங்க ஆம் எனில், Thanga Aam Enil - தரித்திருக்கக் கூடுமாகில் தங்கு, Thangu - தரித்திரு. |