| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2636 | பெரிய திருவந்தாதி || 52 | மாண்பாவித் தஞ்ஞான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ் சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங் கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா துண்ணவாய் தானுறுமோ ஒன்று. | அஞ்ஞான்று, Ajnyaantru - முன்னொரு காலத்தில் மாண், Maan - வாமாவேஷத்தை பாவித்து, Paaviththu - பாவனை செய்துகொண்டு மண் இரந்தான், Man Irandhaan - (மாவலியிடத்துச் சென்று) பூமியை யாசித்தவனும் மாயவன், Maayavan - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய நஞ்சு, Nanju - (முலையிலே தடவியிருந்த) விஷத்தை ஊண் பாவித்து உண்டானது, Oon Paaviththu Undaanathu - உண்பதாகப் பாவனை செய்து அமுது செய்தவனுமான பெருமானுடைய ஓர் உருவம், Oru Uruvam - விலக்ஷணமான திருமேனியை காண்பான், Kaanbaan - ஸேவிக்கும் விஷயத்திலே நம் கண் அவா, Nam Kan Avaa - நமது ஆண்களுக்கு ஆசை; மற்று ஒன்று காண உறா, Mattru Ondru Kaan Uraa - வேறொன்றையும் காண விரும்புகின்றனவில்லை! வாய்தான், Vaithaan - வாக்கானது சீர் பரவாது, Seer Paravaadhu - (அவனது) திருக்குணங்களைப் புகழ்வது தவிர்த்து ஒன்று, Ondru - வேறொன்றை (சோற்றை) உண்ண, Unna - உண்பதற்கு உறுமோ, Urumo - விரும்புமோ? |