| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2590 | பெரிய திருவந்தாதி || 6 | நெறிகாட்டி நீக்குதியோ? நின்பால் கருமா முறிமேனி காட்டுதியோ? மேனாள்-அறியோமை எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே! ஈதுரையாய் எஞ்செய்தா லென்படோம் யாம்? | கண்ணனே, Kannane - எம்பெருமானே! நெறி காட்டி நின்பால் நீக்குதியோ, Nerii Kaatti Ninpaal Neekuthiyo - கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களைக் காட்டி (இவற்றை அநுஷ்டித்துப் பலன் பெறுவாய் என்று சொல்லி என்னை) கைவிட்டு விடப் பார்க்கிறாயோ? (அல்லது) கரு மா முறி மேனி காட்டுதியோ, Karum Maa Muri Meeni Kaattuthiyo - கறுத்த மாமரத்தின் தளிர் போன்ற (உனது) திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து அநுப்ரஹிக்க நினைக்கிறாயோ? மேல் நாள், Mel Naal - அநாதி காலமாக அறியோமை, Ariyomai - அறியாதவர்களான எங்களை என் செய்வான் எண்ணினாய், En Seivaan Enninai - என்ன செய்வதாக திருவுள்ளம் பற்றியிருக்கிறது? ஈது உரையாய், Eethu Uraiyaai - தேவரீருடைய திருவுள்ள மின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்; என் செய்தால், En Seithal - நீ எமக்கு என்ன நன்மையைச் செய்தாலும் யாம் என் படோம், Yaam En Padom - யாம் என்ன அநர்த்தத்தைத்தான் அநுபவிக்க மாட்டோம். |