திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2613 | பெரிய திருவந்தாதி || 29 | உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே,
இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத்
தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,
எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு. | பதவுரை Show / Hideஇணரும் துழாய் அலங்கல் எந்தை, Inarun Thuzhai Alankal Endhai - (திருமேனியின் ஸம்பந்தத்தாலே) மேன்மேலும் தழைத்தோங்கு கின்ற திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமான் தனக்கு எளியர், Thanakku Ezhiyar - தனக்கு அடிமைப்பட்டவர்கள் எவ்வளவர், Evvalavar - (தன்மேல்) எவ்வளவு அன்பு உடையவர்களோ அவ்வளன், Avvalan - தானும் தன்னை அவ்வளவு காட்டிக் கொடுப்பவன் (திருமால்) ஒருவர்க்கு, Oruvarkku - (தாமாகவே முயற்சி செய்பவர்களில்) ஒருவர்க்காவது செவ்வே, Sevvae - நேராக உணர எளியனே?, Unar Ezhiyane - அறியக்கூடியவனோ? (ஒருவர்க்கும் அறியக்கூடியவைனல்லனாயினும்) ஆனால், Aanaal - ஆகையினாலே இங்கு, Inku - இவ்விடத்தில் எம்பெருமான், Emperumaan - எம்பெருமான் எனக்கு, Enakku - என்னாவறிந்து உணர எளியன், Unar Ezhiyan - கொள்ளக்கூடியவன். |