| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2587 | பெரிய திருவந்தாதி || 3 | இவையன்றே நல்ல இவையன்றே தீய, இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம் என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே, என்னால் செயற்பால தென்? | இறையவனே, Iraiyavane - எம்பெருமானே! இவை அன்றே நல்ல, Ivai Anrae Nalla - உன்னைப் புகழாமையும் சிந்தியாமையுமாகிற இவையன்றோ நல்லது; இவை அன்றே தீய, Ivai Anrae Theeya - உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதுமாகிற இவையன்றோ கெட்டது; இவை இவை என்ற அறவனேனும், Ivai Ivai Endra Aravaneenum - (ஆகவே) ‘இன்னது இப்படிப்பட்டது’ என்று நான் உண்மையில் தெரிந்து கொண்டிருக்கிறேனாகிலும் இவை எல்லாம், Ivai Ellam - புகழாமையும் மதியாமையும், புகழ்தலும் மதித்தலுமாகிய இவையெல்லாம் என்னால், Ennal - என்னாலே அடைப்பு நீக்கு ஒண்ணாது, Adaippu Neekku Onnaadhu - பற்றவும் முடியாது, விடவும் முடியாது; என்னால் செயற்பாவது என், Ennal Seyarpaavathu En - (சபலனான) என்னாலே செய்யக்கூடியது என்ன இருக்கிறது? |