| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 13 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமான ஸ்ரீ திருக் கோட்டியூரிலே அர்ச்சாவதார பர்யந்தமாக மங்களா சாசனம் பண்ணுகிறார் -வண்ண மாடத்தால்.) 1 | வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.–1-1-1 | வண்ணம்,Vannam - அழகு பொருந்திய மாடங்கள்,Madangal - மாடங்களாலே சூழ்,Soozh - சூழப்பட்ட திருக்கோட்டியூர்,Thirukkottiyur - திருக்கோட்டியூரில் (எழுந்தருளியுள்ள) கேசவன்,Kesavan - கேசவனென்ற திருநாமமுடையனாய் நம்பி,Nambi - கல்யாணகுண பரிபூர்ணனான கண்ணன்,Kannan - ஸ்ரீக்ருஷ்ணன் இன் இல்,In il - (நந்தகோபருடைய) இனிய திருமாளிகையிலே பிறந்து,Pirandhu - திருவவதிரித்தருளின வளவிலே, எண்ணெய்,Enney - (திருவாய்ப்பாடியிலுள்ளார்) எண்ணெயையும் சுண்ணம்,Sunnam - மஞ்சள் பொடியையும் எதிர் எதிர் தூவிட,Ethir ethir thoovida - (ஸந்தோஷத்தாலே ஒருவர்க்கொருவர்) எதிர்த்துத்தூவ, கண்டக்கினிய,Kandakkiniya - விசாலமாய் நல்,Nal - விலக்ஷணமான முற்றம்,Mutram - (நந்தகோபர் திருமாளிகையில்) திருமுற்றமானது கலந்து,Kalandhu - (எண்ணெயும் மஞ்சள் பொடியும் துகையுண்டு) தன்னிலே சேர்ந்து அளறு ஆயிற்று,Alaru aayitru - சேறாய்விட்டது. |
| 14 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (இவ்வளவிலே யன்றி தம் திரு உள்ளத்துக்குப் பொருந்த திருவாய்ப்பாடியில் உள்ளார் ப்ரியம் கண்டபடியாலே ஸ்லாகிக்கிறார்) 2 | ஓடுவார் விழு வார் உகந் தாலிப்பார் நாடுவார் நம்பி ரான் எங்குற் றானென்பார் பாடு வார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடு வார்களும் ஆயிற்று ஆய்ப் பாடியே.–1-1-2 | ஆய்ப்பாடி,Aayppadi - திருவாய்ப்பாடியானது, ஓடுவார்,Oduvaar - (ஸ்ம்ப்ரமித்து) ஓடுவாரும் விழுவார்,Vizhuvaar - (சேற்றிலே வழுக்கி) விழுவாரும் உகந்து,Ugandhu - உகப்புக்குப் போக்குவீடாக ஆலிப்பார்,Aalipaar - கோஷிப்பாரும் நாடுவார்,Naaduvaar - (பிள்ளையைத்) தேடுவாரும் நம் பிரான்,Nam piraan - நமக்கு உபகாரகனான கண்ணன் எங்கு தான் என்பார்,Engu thaan enbaar - எங்கேதான் (இராநின்றான்) என்பாரும் பாடுவார்களும்,Paaduvaargalum - பாடுவார்களும் பல் பறை,Pal parai - பலவகை வாத்யங்கள் கொட்ட,Kotta - முழங்க நின்று,Nindru - அதற்குப் பொருந்த நின்று ஆடுவார்களும்,Aaduvaargalum - கூத்தாடுவாருமாக ஆயிற்று,Aayitru - ஆய்விட்டது. |
| 15 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 3 | பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில் காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார் ஆணொப் பார் இவன் நேரில்லை காண் திரு வோணத் தானுலகாளு மென் பார்களே.–1-1-3 | சீர் உடை,Seer udai - ஸ்ரீமானான பிள்ளை,Pillai - க்ருஷ்ணன் பேணி,Peni - (கம்ஸாதிகள் கண்படாதபடி தன்னைக்) காத்து வந்து பிறந்தினில்,Pirandhinil - பிறந்தவளவில் தாம்,Thaam - ஆடிப்பாடி ஆயர்கள் காண,Kaana - (கண்ணனைக்) காண்கைக்காக புகுவார்,Puguvaar - உள்ளே நுழைவாரும் புக்கு,Pukku - உள்ளேபோய் (கண்டு) போதுவார்,Poduvaar - வெளிப்புறப்படுவாரும், ஆண் ஒப்பார்,Aan oppaar - ஆண்தன்மையொத்திருப்பவர்களில் இவன் நேர்,Ivan ner - இவனோடு ஒத்திருப்பார் இல்லை,Illai - (யாரும்) இல்லை; (இவன்) திரு ஓணத்தான்,Thiru onathaan - ச்ரவண நக்ஷரத்தில் அவதரித்த ஸர்வேச்வரனுடைய உலகு,Ulagu - விபூதிகளையெல்லாம் ஆளும்,Aalum - ஆளக்கடவன் என்பார்கள்,Enbaarghal - என்று சொல்லுவாருமாக ஆனார்கள். |
| 16 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 4 | உறியை முற்றத்து உருட்டி நின் றாடுவார் நறு நெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார் செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.–1-1-4 | ஆய்ப்பாடி,Aayppadi - திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர்,Aayar - இடையர்கள் உறியை,Uriyai - (பால் தயிர் சேமித்து வைத்த)உறிகளை முற்றத்து,Mutrathu - முற்றத்திலே உருட்டி நின்று,Urutti nindru - உருட்டிவிட்டு ஆடுவார்,Aaduvaar - கூத்தாடுவார் சிலரும், நறு,Naru - மணம்மிக்க நெய் பால்தயிர்,Ney paalthayir - நெய்யையும் பாலையும் தயிரையும் நன்றாக,Nandraaga - நிச்சேஷமாக தூதுவார்,Thoothuvaar - தாநம் பண்ணுவார் சிலரும், செறி மென்,Seri men - நெருங்கி மெத்தென்றிருக்கிற கூந்தல்,Koondhal - மயிர்முடியானது அவிழ,Avizha - அவிழ்ந்து கலையும்படி திளைத்து,Thilaiththu - நர்த்தநம்பண்ணுவார் சிலருமாக, எங்கும்,Engum - சேரியடங்கலும் அறிவு அழிந்தனர்,Arivu azhindhanar - தங்களூடைய விவேகம் ஒழியப் பெற்றனர். |
| 17 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 5 | கொண்ட தாளுறி கோலக் கொடு மழுத் தண்டினர் பறியோலை சயனத்தர் விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர் அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் –1-1-5 | தான்கொண்ட,Thaankonda - கால்நெருக்கத்தையுடைய உறி,Uri - உறிகளையும் கோலம்,Kolam - அழகிய கெரடு,Keradu - கூர்மையான மழு,Mazhu - மழுக்களையும் தண்டினர்,Thandinar - தடிகளையுமுடையராய் பறி,Pari - (தாழைமடலினின்றும்) பறிக்கப்பட்ட ஓலை ,Olai-olaigalinaarseydha - ஓலைகளினாற்செய்த சயனத்தர்,Sayanathar - படுக்கையையுடையராய் விண்ட,Vinda - விசஹித்த முல்லை அரும்பு அன்ன,Mullai arumbu anna - முல்லையரும்பு போன்ற பல்லினர்,Pallinar - பற்களையுடையவரான அண்டர்,Andar - இடையரானவர்கள் மிண்டி,Mindi - (ஒருவருக்கொருவர்) புகுந்து நெய் ஆடினார்,Ney aadinaar - நெய்யாடல் ஆடினார்கள். |
| 18 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 6 | கையும் காலும் நிமிர்த்து கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால் ஐய நா வழித் தாளுக்கு அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –1-1-6 | கையும்,Kaiyum - திருக்கைகளையும் காலும்,Kaalum - திருவடிகளையும் நிமிர்த்து,Nimirththu - (நீட்டி) நிமிர்த்து கடாரம்,Kadhaaram - கடாரத்தில் (காய்ச்சின) நீர்,Neer - திருமஞ்சனத் தீர்த்தத்திலே பசு சிறு மஞ்சளால்,Pasu siru manjalal - குறுங்கண்ணான பசு மஞ்சளால் பைய,Paiya - திருமேனிக்குப் பாங்காக ஆட்டி,Aatti - ஸ்நாநம் செய்வித்து ஐய,Ayya-mellidhaana - மெல்லிதான நா,Naa - நாக்கை வழித் தாளுக்கு,Vazhi thaalukku - வழித்தவளான யசோதைக்காக அங்காந்திட,Angaandhida - (கண்ணன்) வாயைத்திறக்க, (யசோதையானவன்) பிள்ளை,Pillai - கண்ணபிரானுடைய வாயுள்,Vaayul - வாயினுள்ளே வையம் ஏழும்,Vaiyam ezhum - உலகங்களையெல்லாம் கண்டாள்,Kandaal - ஸாக்ஷத்கரித்தாள். |
| 19 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 7 | வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம் பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே–1-1-7 | வாயுள்,Vaayul - (பிள்ளையின்) வாயினுள்ளே வையகம்,Vaiyagam - உலகங்களை கண்ட,Kanda - ஸாக்ஷாத்கரித்த நல் மடவார்,Nal madavaar - வைலக்ஷண்யத்தையும் மடப்பத்தையுமுடைய மாதர்,Maadhar - ஸ்த்ரீகளானவர்கள் ஆயர் புத்திரன் அல்லன்,Aayar puthiran allan - (இவன்) இடைப்பிள்ளை யல்லன் அரு தெய்வம்,Aru dheivam - பெறுதற்கரிய தெய்வம், பாய சீர் உடை,Paaya seer udai - பரம்பின புகழையுடையனும் பண்பு உடை,Panbu udai - குணங்களை யுடையனுமான பாலகன்,Paalakan - (இந்த) சிறு பிள்ளையானவன் மாயன்,Maayan - ஆச்சர்ய சக்தி யுக்தன் என்று,Endru - என்று (ஒருவர்க்கொருவர்) சொல்லிக் கொண்டு மகிழ்ந்தனர்,Magizhndhanar - ஆநந்தித்தார்கள். |
| 20 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 8 | பத்து நாளும் கடந்த இரண்டாநாள் எத்தி சையும் சயமரம் கோடித்து மத்த மாமலை தாங்கிய மைந்தனை உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே.–1-1-8 | பத்து நளும் கடந்த,Paththu nalum kadandha - பத்துநாளுங் கழிந்த இரண்டாம் நாள்,Erandaam naal - பன்னிரண்டாம் நாளான நாமகரண திநத்திலே எத் திசையும்,Eth thisaiyum - எல்லாத் திக்குக்களிலும் சயம் மரம்,Sayam maram - ஜயதோரண ஸ்தம்பங்களை கோடித்து,Kodiththu - நாட்டி அலங்கரித்து மத்தம் மா,Maththam maa - மதம் பிடிக்குந் தன்மையுள்ள மிருகமாகிய யானைகள் தங்கியிருக்கிற மலை,Malai - கோவர்த்தந பர்வதத்தை தாங்கிய,Thaangiya - (குடையாக) ஏந்தி நின்ற மைந்தனை,Maindhanai - குழந்தையாகிய கண்ணனை ஆயர்,Aayar - இடையரானவர்கள் உத்தானம் செய்து,Uthaanam seydhu - கைத் தலத்திலே வைத்துக் கொண்டு உகந்தனர்,Ugandhanar - ஸந்தோஷித்தார்கள். |
| 21 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (பருவத்துக்குத் தக்க அல்லாத சேஷ்டிதங்களை அனுசந்தித்து – திருத்தாயார் -சந்நிஹிதர் ஆனவர்களுக்கு சொன்ன பாசுரத்தை – அவளான பாவனையிலே தாம் அனுபவித்து -இனியர் ஆகிறார்) 9 | கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும் ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் மிடுக்கி லாமையால் நான் மெலிந் தேன் நங்காய்–1-1-9 | நங்காய்,Nangai - பூர்ணகளான ஸ்த்ரீகளே (இப்பிள்ளையானவன்) கிடக்கில்,Kidakkil - (தொட்டிலில்) கிடந்தானாகில் தொட்டில்,Thottil - தொட்டிலானது கிழிய,Kizhiya - சிதிலமாம்படி உதைத்திடும்,Udhaithidum - (கால்களினால்) உதையா நின்றான் எடுத்துக் கொள்ளில்,Eduththu kollil - (இவனை இடுப்பில்) எடுத்துக் கொண்டால் மருங்கை,Marungai - இடுப்பை இறுத்திடும்,Eruthidum - முறியா நின்றான். ஒடுக்கி,Oduki - (இவனுடைய கைகால்களை) ஒடுக்கி புல்கில்,Pulgil - மார்வில் அணைத்துக் கொண்டால் உதரத்து,Udharaththu - வயிற்றிலே பாய்ந்திடும்,Paayndhidum - பாயாநின்றான் மிடுக்கு,Midukku - (இச்சேஷ்டைகளைப் பொறுக்கவல்ல) சக்தி இலாமையால்,Ilaamaiyaal - (இப்பிள்ளைக்கு) இல்லாமையால் நான்,Naan - தாயாகிய நான் மெலிந்தேன்,Melindhen - மிகவும் இளைத்தேன். |
| 22 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (இத்திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் செந்நெலாலே நிறைந்த வயலாலே சூழப் பட்ட திருக் கோஷ்டியூரிலே நித்ய வாசம் பண்ணுகிற திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி என்று தொடங்கி மன்னு நாரணன் நம்பி -என்று நியமிக்கையாலே சாதாரண அசாதாரண வ்யாவ்ருத்தமான வாக்ய த்வய குண பூர்த்தியை மன்னு நாரணன் நம்பி -என்று அருளிச் செய்கிறார்.) 10 | செந்நெ லார் வயல் சூழ் திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த இப் பன்னு பாடல் வல் லார்க்கு இல்லை பாவமே–1-1-10 | செம் நெல்,Sem nel - செந்நெல் தாந்யங்களால் ஆர்,Aar - நிறையப் பெற்ற வயல்,Vayal - கழனிகளாலே சூழ்,Soozh - சூழப்பட்ட திருக்கோட்டியூர்,Thirukkottiyur - திருக்கோட்டியூரிலே மன்னு,Mannu - பொருந்தி வர்த்திக்குமவனாய் நாரணன்,Naaranan - நாராயண சப்த வாச்யனாய் நம்பி,Nambi - ஸர்வ குண பூர்ணனான ஸர்வேச்வரன் பிறந்தமை,Pirandhamai - திருவவதரித்தபடியை மின்னு,Minnu - விளங்கா நின்ற நூல்,Nool - யஜ்ஞோபலீதத்தையுடைய விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வார் விரித்த,Viritha - விஸ்தரித்து அருளிச் செய்த பன்னு,Pannu - ஜ்ஞாநிகள் எப்போதும் அநுஸந்திக்கக் கடவதான இப் பாடல்,Ep paadal - இப் பரசுரங்களை வல்லார்க்கு,Vallaarukku - ஓத வல்லவர்க்கு பாவமில்லை,Paavamilai - பாபமில்லை. |
| 23 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 1 | சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே –1-2-1 | சீதம்,Seetham - குளிர்ந்திரா நின்றுள்ள கடல்,Kadal - திருப்பாற்கடலிலே உன் அமுது அன்ன,Un amuthu anna - உள்ளமுதாகப் பிறந்த பிராட்டியோடொத்த தேவகி,Devaki - தேவகிப் பிராட்டியால் கோதை குழலான் அசோதைக்கு போத்தந்த,Kothai kuzhalan asothai ku pothantha - பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட கேச பாசத்தை யுடைய யசோதைப் பிராட்டிக்குப் போகவிடப்பட்டவனாய் பேதை,Pethai - அறிவின்மையை யுடையனாய் குழவி,Kuzhavi - சிசுவான கண்ணபிரான் பிடித்து,Pidithu - (தன் கைகளால்) பிடித்து சுவைத்து,Suvaithu - ருசி பார்த்து உண்ணும்,Unnum - திருப்பவளத்தில் வைத்து புஜியா நின்றுள்ள பாதம் கமலங்கள்,Paatham kamalangal - திருவடித் தாமரைகளை. காணீர்,Kanneer - வந்து காணுங்கோள். பவளம்,Pavalam - பவளம் போல் சிவந்த வாயீர்,Vaayir - அதரத்தையுடைய பெண் காள்! வந்து காணீர்! |
| 24 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 2 | முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும் பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே–1-2-2 | முத்தும்,Muttum - முத்துக்களையும் மணியும்,Maniyum - ரத்நங்களையும் வயிரமும்,Vairamum - வஜ்ரங்களையும் நல் பொன்னும்,Nal ponnum - மாற்றுயர்ந்த பொன்னையும் தத்திப்பதித்து,Tattippatitthu - மாறி மாறிப் பதித்து தலைப்பெய்தாற்போல்,Talaippeydaarpol - சேர்த்தாற்போலே எங்கும்,Engum - திருமேனி யெங்கும் மணி வண்ணன்,Mani vannan - மணி போன்ற வர்ணத்தை யுடையனான கண்ணனுடைய பாதங்கள்,Paathangal - திருவடிகளிலுள்ள பத்து விரலும்,Pathu viralum - விரல் பத்தும் ஒத்திட்டிருந்வா,Ottittirunva - ஒன்றோடொன்றெத்து அமைந்திருக்கும்படியை காணீர் ஒண் நுதலீர்,Kaanir onnudhalieer - ஒளிபொருந்திய நெற்றியை யுடையீர் காண்! வந்து காணீர்!,Vandhu kaanir! - வந்து காணீர்! |
| 25 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 3 | பணைத் தோளிள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை அணைத்தார உண்டு கிடந்த இப் பிள்ளை இணைக் காலில் வெள்ளித் தளை நின்றிலங்கும் கணைக் கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3 | பணை,Panai - மூங்கில்போன்ற தோள்,Thol - தோள்களை யுடையளாய் இள,Ila - இளமைப் பருவத்தை யுடையளான ஆய்ச்சி,Aaychi - யசோதையினுடைய பால் பாய்ந்த,Paal paayndha - பால் சொரிகிற கொங்கை,Kongai - முலையை அணைத்து,Anaiththu - (திருக்கையால்) அணைத்துக்கொண்டு ஆர,Aara - வயிறு நிரம்ப உண்டு,Undu - (பாலை) அமுது செய்து கிடந்த,Kidandha - (களித்துக்) கிடக்கின்ற இ பிள்ளை,I pillai - இந்தக் கண்ண பிரானுடைய இணை,Inai - சேர்த்தி யழகு அமைந்த காலில்,Kaalil - திருவடிகளில் வெள்ளி தளை நின்று,Velli thalai nindru - வெள்ளித் தண்டை நின்று இலங்கும்,Ilangum - விளங்கா நிற்கிற கணைக்கால் இருந்த ஆ,Kanaikkaal irundha aah - கணைக்காலிருந்தபடியை காணீர்! காரிகையீர்,Kaarigaiyer - அழகுடைய பெண்காள் வந்து காணீர்!! |
| 26 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 4 | உழந்தாள் நறு நெய் ஒரோ தடா வுண்ண இழந்தா ளெரிவினா லீர்த்து எழில் மத்தின் பழந் தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான் முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே–1-2-4 | உழந்தாள்,Uzhandhaal - (நெய் முதலியவற்றை) பிரயாஸப்பட்டுத் தடாவிலே சேர்த்த யசோதையினுடைய நறு நெய்,Naru nei - மணம் மிக்க நெய்யை ஒரோ தடா,Oro thadaa - ஒவ்வொரு தடாவாக உண்ண,Unna - (கண்ணன்) அமுது செய்த வளவில் இழந்தாள்,Izhandhaal - (பிள்ளையைத்) தான் இழந்தவளாக நினைத்த யசோதை எரிவினால்,Erivinaal - வயிற்றெரிச்சலாலே ஈர்த்து,Eerththu - கையைப் பிடித்திழுத்து எழில் மத்தின்,Ezhil maththin - அழகிய மத்தினுடைய பழ தாம்பால்,Pazha thaambaal - சுற்றிக் கடைந்தமையாலுண்டான) பழமை பொருந்திய தாம்பை ஒச்ச,Ocha - (அடிப்பதாகக்) கையிலெடுக்க பயத்தால்,Payaththaal - அச்சத்தாலே தவழ்ந்தான்,Thavazhnthaan - (அதைத் தப்பிப் போவதாக) தவழ்ந்த கண்ணனுடைய முழந்தான் இருந்த ஆ காணீரே,Muzhandhaan irundha a Kaanire - முழங்கால்களிருந்தபடியை காணீர்! முகிழ் முலையீர் வந்து காணீரே,Mukhil mulaiyer vandhu kaanire - முகிழ்த்த முலையையுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 27 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 5 | பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத் துண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த இப் பிள்ளை மறங்கொ ளிரணியன் மார்பை முன் கீண்டான் குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5 | முன்,Mun - முற்காலத்திலே மறம்கொள்,Maramkol - த்வேஷங்கொண்ட இரணியன்,Eranian - ஹிரண்யனுடைய மார்வை,Maarvai - மார்பை கீண்டான்,Keendan - பிளந்தவனாய், பிறங்கிய,Pirangiya - (கொடுமையால் வந்த) ப்ரகாசத்தை யுடைய பேய்ச்சி,Peychchi - பூதனையினுடைய முலை,Mulai - முலையை சுவைத்து,Suvaiththu - (பசையறும்படி) ஆஸ்வாதித்து உண்டிட்டு,Undittu - அமுது செய்து உறங்குவான் போலே,Uranguvaan pole - (ஒன்றுமறியாமே) உறங்குமவனைப் போலே கிடந்த,Kidandha - படுத்திருப்பவனான இ பிள்ளை,E pillai - இந்தக் கண்ணனுடைய குறங்குகளை வந்து காணீர்!,Kurangugalai vandhu kaanire - திருத்துடைகளை வந்து காணீர்! குவி முலையீர் வந்து காணீரே,Kuvi mulaiyer - குவிந்த முலைகளை யுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 28 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 6 | மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் முத்த மிருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே–1-2-6 | மத்தம்,Maththam - மதத்தையுடைய களிறு,Kaliru - யானைகளை நிர்வஹிக்குமவரான வசுதேவர் தம்முடை,Vasudevar thammudai - ஸ்ரீவஸுதேவருடைய சித்தம் பிரியாத,Siththam priyadha - மனத்தை விட்டுப் பிரியாத தேவகி தன்,Devagi than - தேவகியினுடைய வயிற்றில்,Vayitrril - வயிற்றிலே அத்தத்தின் பத்தாம் நாள்,Aththaththin paththaam naal - ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திரு நாளிலே தோன்றிய,Thonriya - திருவவதரித்த அச்சுதன்,Achchuthan - கண்ண பிரானுடைய முத்தம் இருந்த ஆ காணீரே,Muththam irundha aa kaanire - சண்ணமிருந்த படியை காணீர்!! முகிழ் நகையீர் வந்து காணீரே,Mugil nagaiyeer vandhu kaanire - புன் சிரிப்பை யுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 29 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 7 | இருங்கை மத களிறு ஈர்க்கின் றவனை பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடு பரமன் தன் நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே–1-2-7 | இரு கை மத களிறு,Eru kai matha kaliru - பெரிய துதிக்கையையுடைய மத்த கஜமான குவலயாபீடத்தை ஈர்க்கின்றவனை,Eerkkindravanai - தன் வசமாக நடத்தா நின்றுள்ள பாகனை பருங்கி,Parungi - கொன்று பறித்துக்கொண்டு,Pariththukkondu - (யானையின் கொம்புகளை) முறித்துக் கொண்டு ஓடு,Odu - (கம்ஸனிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு) ஓடின பரமன் தன்,Paraman than - பரமபுருஷனான கண்ணனுடைய நெருங்கு,Nerungu - செறியக் கோத்த பவளமும்,Pavalamum - பவள வடமும் நேர் நாணும்,Ner naanum - அழகிய அரை நாணும் முத்தும்,Muththum - முத்துவடமும் (இவற்றோடே சேர்ந்த) மருங்கும் இருந்த ஆ,Marungum irundha aa - திருவரையும் இருந்தபடியை காணீர்! வாள் நுதலீர் காணீர்!,Vaal nudhaleer kaanire - ஒளி பொருந்திய நெற்றியை யுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 30 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 8 | வந்த மதலைக் குழாத்தை வலி செய்து தந்தக் களிறு போல் தானே விளையாடும் நந்தன் மதலைக்கு நன்று மழகிய உந்தி இருந்தவா காணீரே ஒளி யிழையீர் வந்து காணீரே–1-2-8 | வந்த,Vanda - (தன்னோடு விளையாட) வந்த மதலை குழாத்தை,Mathalai kuzhaaththai - சிறு பிள்ளைகளின் கூட்டத்தில் வலி செய்து,Vali seydhu - தன் வல்லமையைக் காட்டிக் கொண்டு தந்தம் களிறு போல்,Thandham kaliru pol - கொம்பு முளைத்த யானைக் குட்டி போல் தானே,Thaane - தானே முக்கியனாய் நின்று விளையாடும்,Vilayaadum - விளையாடுமவனாய் நந்தன்,Nandhan - நந்தகோபர்க்கு மதலைக்கு,Mathalaikku - (விதேயனான) பிள்ளையாகிய கண்ணனுடைய நன்றும் அழகிய,Nandrum azhagiya - மிகவுமழகிதான உந்தி இருந்த ஆ காணீரே,Undhi irundha aa kaanire - நாபி இருக்கிறபடியை காணீர்! ஒளி,Oli - ஒளியால் விஞ்சின இழையீர் வந்து காணீரே,Ezhaiyeer vandhu kaanire - ஆபரணங்களணிந்த பெண்காள்! வந்து காணீர்!! |
| 31 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 9 | அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி மதுர முலை யூட்டி வஞ்சித்து வைத்து பதறப் படாமே பழந் தாம்பா லார்த்த உதரம் இருந்தவா காணீரே ஒளி வளை யீர் வந்து காணீரே–1-2-9 | அதிரும்,Athirum - கோஷிக்கின்ற கடல்நிறம்,Kadalniram - கடலினது நிறம்போன்ற வண்ணனை,Vannanai - நிறத்தை யுடைய கண்ணனுக்கு ஆய்ச்சி,Aaychchi - யசோதை யானவள் மதுரம் முலை ஊட்டி,Madhuram mulai ootti - இனிய முலைப் பாலை ஊட்டி, வஞ்சித்து வைத்து,Vanchiththu vaiththu - (மேல், தான் இவனைக் கட்டப் போகிறதை இவனறிய வொண்ணாதபடி) ஏமாத்தி பதறப் படாமே,Patharappadaame - தன் எண்ணம் தப்பாதபடி பழ தாம்பால்,Pazha thaambaal - பழகின கயிற்றாலே ஆர்த்த,Aartha - கட்டி வைத்த உதரம் இருந்த ஆ காணீரே,Utharam irundha aa kaanire - வயிறு இருந்தபடியை காணீர்! ஒளி வளையீர் வந்து காணீரே,Oli valaiyeer vandhu kaanire - ஒளி மிக்க வளையை யுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 32 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 10 | பெருமா வுரலில் பிணிப் புண்டிருந்து அங்கு இருமா மருதம் இறுத்த இப் பிள்ளை குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே–1-2-10 | பெரு மா உரலில்,Peru maa uralil - மிகப்பெரிய உரலோடு பிணிப்புண்டு,Pinippundu - கட்டுண்டிருந்து இருந்து அங்கு,Angu - அந்த நிலைமையிலே இரு மா மருதம்,Eru maa marutham - இரண்டு பெரிய மருத மரங்களை இறுத்த,Eruththa - முறித்தருளின இ பிள்ளை,E pillai - இக் கண்ண பிரானுடைய, குரு மா,Guru maa - மிகவும் சிறந்த மணி பூண்,Mani poon - கௌஸ்துபாபரணமானது குலாவி திகழும்,Kulaavi thigazhum - அசைந்து விளங்கா நின்றுள்ள திருமார்வு இருந்த ஆ காணீரே,Thirumaarvu irundha aa kaanire - திருமார்வு இருந்த ஆ காணீர்! சே இழையீர் வந்து காணீரே,Se izhaiyeer vandhu kaanire - செவ்விய ஆபரணங்களை யுடைய பெண்காள் வந்து காணீர்! |
| 33 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 11 | நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான் தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழ லீர்வந்து காணீரே-1-2-11 | நாள்கள்,Naalgal - (கண்ணன் பிறந்த பின்பு சென்ற) நாட்கள் ஓர்நாலு ஐந்து திங்கள் அளவிலே,Ornaalu aindhu thingal alavile - ஒரு நாலைந்து மாதத்தளவிலே தாளை நிமிர்ந்து,Thaalai nimirndhu - காலைத் தூக்கி சகடத்தை,Sakataththai - சகடாஸுரனை சாடிப்போய்,Saadippoy - உதைத்துவிட்டு, வாள் கொள்,Vaal kol - ஒளிகொண்டதாய் வளை,Valai - வளைந்திராநின்றுள்ள எயிறு,Eyiru - கோரப்பற்களையுடைய பூதனையினது ஆர் உயிர்,Aar uyir - அரிய உயிரை வவ்வினான்,Vavvinan - முடித்த கண்ணனுடைய தோள்கள் இருந்த ஆ காணீரே,Tholgal irundha aa kaanire - தோள்கள் இருந்த ஆ காணீர்! சுரி குழலீர் வந்து காணீரே,Suri kuzhalir vandhu kaanire - சுருண்ட கேசத்தையுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 34 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 12 | மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே–1-2-12 | மை,Mai - மையணிந்த தட,Thada - பெரிய கண்ணி,Kanni - கண்களையுடைய அசோதை,Asodhai - யசோதைப்பிராட்டியாலே வளர்க்கின்ற,Valarkkinra - வளர்க்கப்படுகின்றவனாய் தலைசெய்,Thalaisei - உயர்ந்த க்ஷேத்ரத்திலே (அலர்ந்த) நீலம் நிறம்,Neelam niram - கருநெய்தல் பூவினது போன்ற நிறத்தையுடையவான சிறுபிள்ளை,Sirupillai - (இந்த) பாலக்ருஷ்ணனுடைய நெய்,Ney - கூர்மைபொருந்திய தலை,Thalai - நுதியையுடைய நேமியும்,Nemiyum - திருவாழியும் சங்கும்,Sangum - திருச்சங்கும் நிலாவிய,Nilaviya - அமைந்திராநின்றுள்ள கைத்தலங்கள் வந்து காணீரே,Kaithalangal vandhu kaanire - உள்ளங்கைகளை வந்து காணீர்! கனம்,Kanam - பொன்னால்செய்த குழையீர் வந்து காணீரே,Kuzhaiyeer vandhu kaanire - காதணிகளையுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 35 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 13 | வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே–1-2-13 | வண்டு அமர்,Vandhu amar - வண்டுகள் படிந்திருக்கிற பூ குழல்,Poo kuzhal - பூ அணிந்த குழலையுடையளான ஆய்ச்சி,Aaychchi - யசோதைப் பிராட்டியானவள் மகனாக கொண்டு,Maganaaga kondu - (தன்) புத்ரனாக ஸ்வீகரித்து வளர்க்கின்ற,Valarkkinra - வளர்க்கப் பெற்றவனாய் கோவலர்,Kovalar - ஸ்ரீநந்தகோபருடைய குட்டற்கு,Kuttarku - பிள்ளையான கண்ணபிரானுடைய, அண்டமும்,Andamum - அண்டங்களையும் நாடும்,Naadum - (அவற்றினுள்ளே கிடக்கிற) சேதநாசேதநங்களையும் அடங்க,Adanga - முழுதும் விழுங்கிய,Vizhungiya - (ப்ரளயகாலத்தில்) கபளீகரித்த கண்டம் இருந்த ஆ,Kandam irundha a - கழுத்திருந்தபடியை |
| 36 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 14 | எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர் தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச் செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-14 | ஆய்ச்சியர்,Aaychchiyar - இடைப்பெண்கள் தொண்டை,Thondai - ‘‘கொவ்வைக்கனி போன்ற வாய்,Vaai - அதரத்தையுடைய எம் சிங்கம்,Em singam - எமது சிங்கக்குருவே! வா என்று,Vaa endru - (எம்பக்கல்) வா’’ என்று எடுத்துக் கொண்டு,Eduththuk kondu - (இடுப்பில்) எடுத்துக்கொண்டு அம் தொண்டை,Am thondai - அழகிய கொவ்வைபோன்ற வாய்,Vaai - (கண்ணனுடைய) அதரத்தில் அமுது,Amudhu - (ஊறுகிற) அம்ருதத்தை ஆதரித்து,Aadhariththu - விரும்பி, தம்,Tham - தங்களுடைய தொண்டை வாயால்,Thondai vaayaal - கோவை வாயை தருக்கி,Tharukki - (கண்ணன் வாயோடே நெருக்கி) பருகும்,Parugum - பாகம் பண்ணப்பெற்ற இ செம் தொண்டை வாய் வந்து காணீரே,E sem thondai vaai vandhu kaaneere - இந்தச் சிவந்த கோவை வாயை வந்து காணீர்! சேயிழையீர்! வந்து காணீரே,Seeyizhaiyeer! Vandhu kaaneere - சேயிழையீர்! வந்து காணீர்! |
| 37 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 15 | நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே–1-2-15 | அசோதை,Asothai - யசோதைப்பிராட்டி நோக்கி,Nookki - (கண்ணபிரான்திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி) பார்த்து ஆராய்ந்து நுணுக்கிய,Nunikkiya - அரைத்த மஞ்சளால்,Manjalal - மஞ்சட்காப்பாலே, நாக்கு வழித்து,Naakku vazhiththu - நாக்கு வழித்து நீராட்டும்,Neeraattum - ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற இ நம்பிக்கு,I nambikku - இக்கண்ணபிரானுடைய வாக்கும்,Vaakkum - திருவாக்கும் நயனமும்,Nayanamum - திருக்கண்களும் வாயும்,Vaayum - அதரஸ்புரணமும் முறுவலும்,Muruvalum - புன்சிரிப்பும் மூக்கும் இருந்த ஆ காணீரே ,Mookkum irundha aa kaaneere - மூக்குமிருந்தபடியை காணீர்! மொய்குழலீர் காணீரே,Moikuzhaleer kaaneere - செறிந்தகுழலையுடைய பெண்காள்! வந்து காணீர்! |
| 38 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 16 | விண் கொளமரர்கள் வேதனை தீர முன் மண் கொள் வசுதேவர் தம் மக னாய் வந்து திண் கொளசுரரைத் தேய வளர்கின்றான் கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே–1-2-16 | விண் கொள்,Vin kol - ஸ்வர்க்காதிலோகங்களை இருப்பிடமாகக் கொண்ட அமரர்கள்,Amararagal - தேவதைகளுடைய வேதனை தீர,Vedhanai theera - துன்பங்கள் தீரும்படி முன்,Mun - முன்னே மண்கொள்,Man kol - பூமியை இருப்பிடமாகக் கொண்ட வசுதேவர் தம்,Vasudevar tham - வஸுதேவர்க்கு மகனாய் வந்து,Maganaai vandhu - பிள்ளையாய் வந்து பிறந்து திண்கொள்,Thin kol - வலிமைகொண்ட அசுரர்,Asurar - அஸுரர்கள் தேய,Theya - க்ஷயிக்கும்படி வளர்கின்றான்,Valar kindraan - வளராநின்ற கண்ணனுடைய கண்கள் இருந்த ஆ வந்து காணீரே,Kangal irundha aa vandhu kaaneere - கண்கள் இருந்த ஆ காணீர்! கனம் வளையீர் வந்து காணீரே,Kanam valaiyeer vandhu kaaneere - கநக கங்கணத்தை யுடைய பெண்காள் வந்து காணீர்!! |
| 39 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 17 | பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன் புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே–1-2-17 | பருவம்,Paruvam - வயது நிரம்பாமே,Nirambaame - முதிருவதற்கு முன்னமே பார்எல்லாம்,Paar ellaam - பூமியிலுள்ளார் எல்லாரும் உய்ய,Uyyya - உஜ்ஜீவிக்கும்படியாக திருவின் வடிவு ஒக்கும்,Thiruvin vadivu okkum - பிராட்டியின் வடிவுபோன்ற வடிவையுடையளான தேவகி,Devagi - தேவகிப்பிராட்டியாலே பெற்ற,Pettra - பெறப்பட்டவனாய் உருவு கரிய,Uruvu kariya - உருவால் கறுத்ததாய் ஒளி,Oli - உஜ்ஜவலமான மணி,Mani - மணி போன்ற வண்ணன்,Vannan - வடிவையுடையனான கண்ணபிரானுடைய புருவம் இருந்த ஆ வந்து காணீரே,Pruvam irundha aa vandhu kaaneere - புருவம் இருந்த ஆ காணீர் பூண் முலையீர் வந்து காணீரே,Poon mulaiyeer vandhu kaaneere - ஆபரணம் பூண்ட முலையையுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 40 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 18 | மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-18 | மண்ணும்,Mannum - பூமியையும் மலையும்,Malayum - மலைகளையும் கடலும்,Kadalum - கடல்களையும் உலகு எழும்,Ulagu ezhum - ஸப்தலோகங்களையும் உண்ணுந்திறந்து,Unnundhirandhu - திருவயிற்றிலே வைக்கிறவளவில் மகிழ்ந்து,Magizndhu - உகந்து உண்ணும்,Unnum - திருவயிற்றிலே வைத்த பிள்ளைக்கு,Pillaiyukku - (இக்) கண்ணபிரானுடையதான எழில் வண்ணம் கொள்,Ezhil vannan kol - அழகிய நிறங்கொண்ட மகரம் குழை இவை,Magaram kuzai ivai - இம்மகர குண்டலங்களின் திண்ணம் இருந்த காணீரே ,Thinnam irundha kaaneere - திண்மை இருந்தபடியை காணீர் சேயிழையீர்! காணீரே,Seyizhaiyeer! Kaaneere - சேயிழையீர்! வந்து காணீர்!! |
| 41 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 19 | மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-18 | மண்ணும்,Mannum - பூமியையும் மலையும்,Malayum - மலைகளையும் கடலும்,Kadalum - கடல்களையும் உலகு எழும்,Ulagu ezhum - ஸப்தலோகங்களையும் உண்ணுந்திறந்து,Unnundhirandhu - திருவயிற்றிலே வைக்கிறவளவில் மகிழ்ந்து,Magizhndhu - உகந்து உண்ணும்,Unnum - திருவயிற்றிலே வைத்த பிள்ளைக்கு,Pillaiyukku - (இக்) கண்ணபிரானுடையதான எழில் வண்ணம் கொள்,Ezhil vannan kol - அழகிய நிறங்கொண்ட மகரம் குழை இவை,Magaram kuzai ivai - இம்மகர குண்டலங்களின் திண்ணம் இருந்த காணீரே,Thinnam irundha kaaneere - திண்மை இருந்தபடியை காணீர் சேயிழையீர்! காணீரே,Seyizhaiyeer! Kaaneere - சேயிழையீர்! வந்து காணீர்!! |
| 42 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 20 | அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு கழல்கள் சதங்கை கலந்து எங்கு மார்ப்ப மழகன் றினங்கள் மறித்துத் திரிவான் குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20 | அழகிய,Azhagiya - அழகியதும் பைம் பொன்னின்,Paim ponnin - பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான கோல்,Kol - மாடு மேய்க்குங் கோலை அம் கை,Am kai - அழகிய கையிலே கொண்டு,Kondu - பிடித்துக் கொண்டு கழல்கள்,Kazhagal - (கால்களிலுள்ள) வீரக் கழல்களும் சதங்கை,Sathangai - சதங்கைகளும் கலந்து,Kalanndhu - தன்னிலே சேர்ந்து எங்கும் ஆர்ப்ப,Engum aarpa - போமிடமெல்லா மொலிக்க மழ,Mazha - இளமை பொருந்திய கன்று இனங்கன்,Kanru inankan - கன்றுகளின் திரள்களை மறித்து,Mariththu - (கை கழியப் போகாமல் மடக்கி) திரிவான்,Thirivaan - திரியுமவனான கண்ணபிரானுடைய குழல்கள் இருந்தவா காணீரே,Kuzhalgal irundhavaa kaaneere - திருக் குழல்களானவை இருந்த ஆ காணீர்! குவி முலையீர் வந்து காணீரே,Kuvi mulaiyeer vandhu kaaneere - குவி முலையீர்! வந்து காணீர்!! |
| 43 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 21 | சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன திருப் பாத கேசத்தைத் தென் புதுவைப் பட்டன் விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும் உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே–1-2-21 | சுரும்பு ஆர்,Surumbu aar - வண்டுகள் படிந்து நிறைந்த குழலி,Kuzhali - கூந்தலை யுடையளான அசோதை,Asodhai - யசோதைப் பிராட்டியால் முன்,Mun - க்ருஷ்ணாவதார ஸமயத்திலே சொன்ன,Sonnan - சொல்லப்பட்ட திருப்பாத கேசத்தை,Thirupaadha kesaththai - பாதாதிகேசாந்த வர்ணநப் பாசுரங்களை தென் புதுவை பட்டன்,Then puduvai pattan - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (நிர்வாஹகரான) அழ்வார் விருப்பால்,Viruppaal - மிக்க ஆதரத்தோடு உரைத்த,Uraiththa - அருளிச்செய்த இருபதோடுஒன்றும்,Irupathodunonrum - இவ்விருபத்தொரு பாட்டுக்களையும் உரைப்பார் தாம்,Uraipaar thaam - ஓதுமவர்கள் போய்,Poy - (இம் மண்டலத்தைக் கடந்து) போய் வைகுந்தத்து,Vaikunthaththu - ஸ்ரீவைகுண்டத்திலே ஒன்றுவர்,Ondruvar - பொருந்தப் பெறுவார்கள் |
| 44 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 1 | மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான் மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!–1-3-1 | மாணிக்கம்,Maanikam - மாணிக்கத்தை கட்டி,Katti - (இரண்டருகும்) கட்டியும் இடை,Idai - நடுவில் வயிரம்,Vairam - வயிரத்தை கட்டி,Katti - கட்டியும் ஆணிப் பொன்னால்,Aanip ponnaal - மாற்றுயர்ந்த பொன்னால் செய்த,Seidha - செய்யப்பட்ட வண்ணம்,Vannam - அழகிய சிறு தொட்டில்,Siru thottil - சிறிய தொட்டிலை பிரமன்,Piraman - சதுர்முகனானவன் பேணி,Paeni - விரும்பி உனக்கு,Unakku - உனக்கு விடு தந்தான்,Vidu thandhaan - அனுப்பினான் மாணி குறளனே,Maani kuralane - ப்ரஹம்சாரி வாமநாவதாரம் பண்ணின கண்ணனே! தாலேலோ!,Thaalelo - தாலேலோ! வையம்,Vaiyam - உலகங்களை அளந்தானே,Alandhaane - (த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே! தாலேலோ!,Thaalelo - தாலேலோ! |
| 45 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 2 | உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கி னோடு விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்; உடையாய் அழேல் அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!–1-3-2 | உடை ஆர்,Udai aar - திருவரைக்குச் சேரும்படியான கனம் மணியோடு,Kanam maniyodu - பொன் மணியையும் இடை,Idai - நடு நடுவே விரவி,Viravi - கலந்து கோத்த,Kotha - கோக்கப் பட்ட எழில்,Ezhil - அழகிய தெழ்கினோடும்,Thezhginodum - இடைச் சரிகையையும் ஒண் மாதளம்பூ,On maadhalampoo - அழகிய மாதளம்புக் கோவையான அரை வடத்தையும் விடைஏறு,Vidai yeru - ரிஷப வாஹகனாய் காபாலி,Kaabaali - கபால தாரியாய் ஈசன் விடுதந்தான்,Eesan viduthandhaan - ஸ்வ வ்யூஹத்துக்கு நியாமகனான ருத்ரன் விடு தந்தான்-; உடையாய்,Udaiyaai - ஸ்வாமியான கண்ணனே! அழேல் அழேல்,Azael azael - அழாதேகொள், அழாதேகொள் தாலேலோ,Thaalelo - தாலேலோ உலகம் அளந்தானே! தாலேலோ!,Ulagam alandhaane! Thaalelo! - தாலேலோ |
| 46 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 3 | என் தம் பிரானார் எழில் திரு மார்வர்க்கு சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு, இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி தந்து உவனாய் நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!–1-3-3 | எம்தம் பிரானார்,Emtham praanar - எமக்கு ஸ்வாமியாய் எழில்,Ezhil - அழகிய திருமார்வார்க்கு,Thirumaarvaarukku - திருமார்பை யுடையாய் சந்தம் அழகிய,Santham azhagiya - நிறத்தாலழகிய தாமரை தாளர்க்கு,Thaamarai thaalarkku - தாமரை போன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு இந்திரன் தானும்,Indhiran thaanum - தேவேந்த்ரனானவன் எழில் உடை,Ezhil udai - அழகை யுடைய கிண்கிணி,Kinkin - கிண் கிணியை தந்து,Thandhu - கொணர்ந்து ஸமர்ப்பித்து உவனாய் நின்றான்,Uvanaai ninraan - அதோயிரா நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ,Thaalelo! Thaamaraik kannane! Thaalelo - தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ |
| 47 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 4 | சங்கின் வலம் புரியும் சேவடிக் கிண் கிணியும் அங்கைச் சரிவளையும் நாணும் அரைத் தொடரும் அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார், செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!–1-3-4 | சங்கில்,Sangil - சங்குகளில்(சிறந்த) வலம் புரியும்,Valam puriyum - வலம்புரிச் சங்கையும் சே அடி,Se adi - செவ்விய திருவடிகளில் (சாத்தத் தகுந்த) கிண்கிணியும்,Kinkin yum - சதங்கையையும் அம் கை,Am kai - அழகிய கைகளுக்கு உரிய சரி,Sari - முன் கை வளைகளையும் வளையும்,Valaiyum - தோள்வளைகளையும் நாணும்,Naanum - பொன்னரை நாணையும் அரை தொடரும்,Arai thodarum - அரைவடத்தையும் அம் கண்,Am kan - அழகியதாய் விசாலமான விசும்பில்,Visumbil - ஸ்வர்க்கத்திலுள்ள அமரர்கள்,Amarargal - தேவர்கள் போத்தந்தார்,Poththandhaar - அனுப்பினார்கள் செம் கண்,Sem kan - சிவந்த கண்களை யுடையையாய் கரு முகிலே,Karu mugile - கானமேகம் போன்ற வடிவை யுமுடையையான கண்ணனே! தாலேலோ!,Thaalelo! - தாலேலோ! தேவகி,Devaki - தேவகியின் வயிற்றிற்பிறந்த சிங்கமே,Singame - சிங்கக் குருகே! தாலேலோ!,Thaalelo! - தாலேலோ! |
| 48 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 5 | எழிலார் திருமார்வுக்கு ஏற்கு மிவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு வழுவில் கொடையான் வயிச்சி ரவணன் தொழுது உவனாய் நின்றான் தாலேலோ! தூமணி வண்ணனே தாலேலோ!–1-3-5 | எழில் ஆர்,Ezhil aar - அழகுமிக்கிருந்துள்ள திருமார்பிற்கு,Thirumaarpirku - வக்ஷஸ்ஸ்தலத்துக்கு இவை ஏற்கும் என்று,Ivai erkum endru - இவை பொருந்தும் என்று அழகிய,Azhagiya - அழகியவையான ஐம்படையும்,Aimbadayum - பஞ்சாயுதங்களையும் ஆரமும்,Aaramum - முத்து வடத்தையும் கொண்டு,Kondu - எடுத்துக்கொண்டு, வழுஇல்,Valuil - குற்றமற்ற கொடையான்,Kodaiyaan - ஔதார்யத்தையுடையனான வயிச்சிரவணன்,Vaichiravanan - குபேரானானவன் தொழுது,Thozhuthu - (இவற்றைத் திருவுள்ளம்பற்ற வேணுமென்று) அஞ்ஜலி பண்ணிக்கொண்டு உவனாய் நின்றான், தாலேலோ!,Uvanaai ninraan, Thaalelo! - உவனாய் நின்றான், தாலேலோ! தூ மணி,Thoo mani - பழிப்பற்ற நீலமணி போன்ற வண்ணனே,Vannane - வடிவையுடைய கண்ணனே! தாலேலோ!,Thaalelo - தாலேலோ! |
| 49 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 6 | ஓதக் கடலின் ஒளி முத்தி னாரமும் சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் மாதக்க வென்று வருணன் விடுதந்தான், சோதிச் சுடர்முடியாய் தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!–1-3-6 | ஓதம்,Otham - அலையெறிப்பையுடைய கடலில்,Kadalil - ஸமுத்ரத்தில் (உண்டாய்) ஒளி,Oli - ஒளியை யுடைத்தாய் முத்தின்,Muththin - முத்துக்களால் கோக்கப்பட்ட ஆரமும்,Aaramum - ஹாரத்தையும் சாதி,Saadhi - நல்ல ஜாதியிலுண்டான பவளமும்,Pavalamum - பவழ வடத்தையும் சந்தம்,Santham - அழகு பொருந்திய சரி,Sari - முன் கை வளைகளையும் வளையும்,Valaiyum - தோல்வளைகளையும் மா தக்க என்று,Maa thakka endru - விலையில் சிறந்து தகுதியாயிருந்துள்ளவை என்று வருணன் விடுதந்தான்,Varunan viduthandhaan - வருண தேவனானவன் விடுதந்தான் சோதி சுடர்,Sothi sudar - மிக்க ஜ்யோதிஸ்ஸை யுடைய முடியாய்,Mudiyaai - கிரீடத்தை யணிந்த கண்ணனே! தாலேலோ. . !,Thaalelo! - தாலேலோ. . ! சுந்தரம் தோளனே,Sundharam tholane - அழகிய திருத் தோள்களை யுடைய கண்ணனே! தாலேலோ. . !,Thaalelo! - தாலேலோ. . ! |
| 50 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 7 | கானார் நறுந்துழாய் கை செய்த கண்ணியும் வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் தேனார் மலர் மேல் திரு மங்கை போத்தந்தாள், கோனே! அழேல் அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!–1-3-7 | தேன் ஆர்,ThenAar - தேன் நிறைந்துள்ள மலர்மேல்,Malarmel - (செந்தாமரை) மலரிலுறைகின்ற திருமங்கை,Thirumangai - பெரிய பிராட்டியார் கான் ஆர்,Kaan aar - காட்டிலுண்டான நறு துழாய்,Naru thuzhaai - பரிமளம் மிக்க துளசியாலே கை செய்த,Kai seidha - தொடுத்த கண்ணியும்,Kanniyum - மாலையையும் வான் ஆர்,Vaan aar - சுவர்க்க லோகத்தில் நிறைய வளர்ந்துள்ள செழு,Sezhu - செழுமை தங்கிய சோலை,Solai - சோலையாய்த் தழைத்த கற்பகத்தின்,Karpagaththin - கல்ப வ்ருக்ஷத்தின் பூக்களால் தொடுத்த வாசிகையும்,Vaasikaiyum - திரு நெற்றி மாலையையும் போத்தந்தாள்,Poththandhaal - அனுப்பினாள் கோனே,Kone - ஸர்வ ஸ்வாமியான கண்ணனே! அழேல் அழேல் தாலேலோ!,Azael azael Thaalelo! - அழேல் அழேல் தாலேலோ! குடந்தை,Kudanthai - திருக்குடந்தையிலே கிடந்தானே,Kidandhaane - கண் வளந்தருளுகிற ஸ்ர்வேச்வானே! தாலேலோ!,Thaalelo! - தாலேலோ! |
| 51 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 8 | கச்சொடு பொற் சுரிகை காம்பு கனவளை உச்சி மணிச் சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ அச்சுதனுக்கென்று அவனியாள் போத்தந்தாள் நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராயணா அழேல் தாலேலோ!!–1-3-8 | கச்சொடு,Kachodu - கச்சுப் பட்டையையும் பொன்,Pon - பொன்னாற்செய்த சுரிகை,Surikai - உடை வாளையும் காம்பு,Kaambu - கரை கட்டிய சேலையையும் கனம்,Kanam - கநக மயமான வளை,Valai - தோள் வளைகளையும் மணி,Mani - ரத்நமிழைத்துச் செய்யப்பட்டதாய் உச்சி,Ucchi - உச்சியிலே சாத்தத் தக்கதான சுட்டி,Sutti - சுட்டியையும் ஒண் தாள்,On thaal - அழகிய காம்புகளை யுடைத்தாய் நிரை,Nirai - ஒழுங்கான பொற்பூ,Porpu - பொற்பூவையும் அச்சுதனுக்கு என்று,Achuthanukku endru - ‘கண்ணபிரானுக்கு (க்கொடுங்கோள்)’ என்று அவனியாள்,Avaniyaal - பூமிப்பிராட்டியானவள் போத்தந்தாள்,Poththandhaal - அனுப்பினாள்; நஞ்சு,Nanju - விஷமேற்றின முலை,Mulai - பூதனையின் முலையின் பாலை உண்டாய்,Undaai - உண்ட கண்ணனே! தாலேலோ;,Thaalelo - தாலேலோ; நாராயணா! அழேல்! தாலேலோ,Narayana! Azael! Thaalelo - நாராயணா! அழேல்! தாலேலோ |
| 52 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 9 | மெய் திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள் அய்யா அழேல் அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!–1-3-9 | மெய்,Mey - திருமேனியிலே திமிரும்,Thimirum - பூசுகைக்குரிய நானம் பொடியோடு,Naanam podiyodu - கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய ஸூகந்தப் பொடிகளையும் மஞ்சளும்,Manjalum - மஞ்சள்பொடியையும் செய்ய,Seyya - சிவந்ததாய் தட,Thada - விசாலமாயுள்ள கண்ணுக்கு,Kannukku - கண்களில் (சாத்த) அஞ்சனமும்,Anjanamum - மையையும், சிந்தூரமும்,Sindooramum - ஸிந்தூரத்தையும் (திரு நெற்றியில் சாத்துகைக்கு) வெய்ய கலை பாகி,Veyya kalai paagi - கொடிய ஆண்மானை வாஹமாகவுடைய துர்க்கையானவள் கொண்டு,Kondu - எடுத்துக்கொடு வந்து உவளாய் நின்றாள்,Uvalaai ninraal - அதோ இரா நின்றாள்; ஐயா,Ayaa - ஸ்வாமியான கண்ணனே! அழேழ் அழேழ் தாலேலோ;,Azael azael Thaalelo - அழேழ் அழேழ் தாலேலோ; அரங்கத்து,Arangaththu - ஸ்ரீரங்கத்திலே அணையானே,Anaiyaane - (திருவனந்தாழ்வானைப்) படுக்கையாக வுடையவனே! தாலேலோ.,Thaalelo - தாலேலோ. |
| 53 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 10 | வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே–1-3-10 | வஞ்சனையால் வந்த,Vanchanaiyaal vanda - வஞ்சக வேஷத்தோடே வந்த பேய்ச்சி,Peychi - பூதனையினுடைய முலை உண்ட,Mulai unda - முலையை அமுது செய்தவனாய் அஞ்சனம் வண்ணனை,Anjanam vannanai - மை போன்ற நிறத்தை யுடையவனான கண்ண பிரானை ஆய்ச்சி,Aaychi - யசோதைப் பிராட்டி தாலாட்டிய,Thaalattiya - தாலாட்டின படிகளை செம் சொல் மறையவர்,Sem sol maraivar - செவ்விய சொற்கள் நிறைந்த வேதங்களில் வல்லவரான ஸ்ரீவைஷ்ணவர்கள் சேர்,Ser - நித்ய வாசம் பண்ணப் பெற்ற புதுவை,Puthuvai - ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்த பட்டன்,Pattan - பெரியாழ்வார் (அருளிச் செய்த) சொல்,Sol - இப்பாசுரங்கள் எஞ்சாமை,Enjaamai - குறைவு படாமல் வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்க்கு இடர் இல்லை,Idar illai - துன்பம் ஒன்றுமில்லையாம். தான் ஏ,Thaan e - அசை |
| 54 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 1 | தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய் பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான் என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ நின்முகம் கண்ணுள வாகில் நீ இங்கே நோக்கிப் போ–1-4-1 | இள,Ila - இளமை தங்கிய மா மதீ,Maa madhi - அழகிய சந்திரனே! தன் முகத்து,Than mugaththu - தன் முகத்தில் (விளங்குகிற) சுட்டி,Sutti - சுட்டியானது தூங்க தூங்க,Thoonga thoonga - பல காலும் தாழ்ந்து அசையவும் பொன் முகம்,Pon mugam - அழகிய முகத்தை யுடைய கிண் கிணி,Kin kini - சதங்கைகளானவை ஆர்ப்ப,Aarppa - கிண் கிண் என்றொலிக்கவும் தவழ்ந்து போய்,Thavazhnthu poy - (முற்றத்தில்) தவழ்ந்து போய் புழுதி,Puzhuthi - தெருப்புழுதி மண்ணை அளைகின்றான்,Alaikindraan - அளையா நிற்பவனும் என் மகன்,En magan - எனக்குப் பிள்ளையுமான கோவிந்தன்,Govindhan - கண்ண பிரானுடைய கூத்தினை,Kooththinai - சேஷ்டைகளை நின் முகம்,Nin mugam - உன் முகத்தில் கண் உள ஆகில்,Kan ulla aagil - கண் உண்டேயானால் நீ இங்கே நோக்கி போ,Nee ingae nokki po - நீ இங்கே பார்த்துப் போ. |
| 55 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 2 | என் சிறுக் குட்டன் எனக்கோரின்னமுது எம்பிரான் தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான் அஞ்சன வண்ணனோடு ஆடலாட உறுதியேல் மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-2 | மா மதீ !,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே! எனக்கு,Enakku - (தாயாகிய) எனக்கு ஓர் இன் அமுது,Or in amudhu - விலக்ஷணமாய் மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவனாய் எம்பிரான்,Empiraan - எனக்கு உபகாரகனான என் சிறுக் குட்டன்,En siruk kuttan - என் மகனான கண்ணன் தன் சிறு கைகளால்,Than siru kaigalal - தன்னுடைய சிறிய கைகளால் காட்டிக் காட்டி,Kaattik kaatti - பலகாலும் (உன்னையே) காட்டி அழைக்கின்றான்,Azaikkindran - அழையா நின்றான்; அஞ்சனம் வண்ணனோடு,Anjanam vannanodu - மை போன்ற வடிவை யுடைய இக் கண்ண பிரானோடு ஆடல் ஆட,Aadal aada - விளையாட உறுதியேல்,Urudhiyael - கருதினாயாகில் மஞ்சில்,Manjil - மேகத்திலே மறையாது,Maraiyaadhu - சொருகி மறையாமல் மகிழ்ந்து ஓடி வா,Magizhndhu odi va - உகந்து ஓடி வா. |
| 56 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 3 | சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும் எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேரொவ்வாய் வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா–1-4-3 | அம்புலி,Ambuli - சந்த்ரனே! (உன்னுடைய) ஒளி,Oli - ஒளி பொருந்திய வட்டம்,Vattam - மண்டலமானது (எப்போதும்) சுற்றும் சூழ்ந்து,Sutrum soozhndhu - நாற்புறமும் சுழன்று எங்கும்,Engum - எல்லாத் திசைகளிலும் சோதி பரந்து,Sothi parandhu - ஒளி நிரம்பி யிருக்குமாறு எத்தனை செய்யிலும்,Eththanai seyyilum - இப்படி உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும் என் மகன்,En magan - என் மகனான கண்ண பிரானுடைய முகம்,Mugam - திருமுக மண்டலத்துக்கு நேர் ஒவ்வாய்,Ner ovvaai - பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்; வித்தகன்,Viththagan - ஆச்சர்யப் படத் தக்கவனாய் வேங்கடம்,Vengadam - திருவேங்கடமலையிலே வாணன்,Vaanan - நின்றாக வாழுமவனான இக்கண்ணபிரான் உன்னை விளிக்கின்ற,Unnai vilikkindra - உன்னை அழைக்கிற கை தலம்,Kai thalam - திருக் கைத் தலத்தில் நோவாமே,Novaame - நோவு மிகாத படி கடிது ஓடி வா,Kadidhu odi va - சீக்கிரமாய் ஓடிவா. |
| 57 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 4 | சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண் தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே மக்கட் பெறாத மலடனல்லையேல் வா கண்டாய்–1-4-4 | சந்திரா,Chandira - சந்திரனே! சக்கரம்,Chakaram - திருவாழி ஆழ்வானை கையன்,Kaiyan - திருக்கையிலணிந்த கண்ணபிரான் ஒக்கலை மேல்,Okkalai mel - (என்) இடுப்பின்மேல் இருந்து,Irundhu - இருந்துகொண்டு தட கண்ணால்,Thada kannaal - விசாலமான கண்களாலே மலர் விழித்து,Malar vizhiththu - மலரப் பார்த்து உன்னையே,Unnaiye - உன்னையே சுட்டிகாட்டும்,Suttikattum - குக்ஷ்த்துக் காட்டுகின்றான்; தக்கது,Thakkadhu - (உனக்குத்) தகுதியானதை அறிதியேல்,Aridhiyel - அறிவாயாகில் (அன்றியும்) மக்கள் பெறாத,Makkal peraadha - பிள்ளை பெறாத மலடன் அல்லையேல்,Maladan allaiyel - மலடன் அல்லையாகில் சலம் செய்யாதே,Salam seyyadhe - கபடம் பண்ணாமல் வா கண்டாய்,Vaa kandai - வந்து நில்கிடாய். |
| 58 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 5 | அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல் புழையில வாகாதே நின் செவி புகர் மாமதீ!–1-4-5 | புகர்,Pugar - தேஜஸ்வியாய் மா,Maa - பெருமை பொருந்தியிரா நின்ற மதீ,Madhi - சந்திரனே! அழகிய வாயில்,Azhagiya vaayil - அழகிய திருப் பவளத்திலே ஊறல்,Uural - ஊறுகின்ற ஜலமாகிய அமுதம்,Amudham - அம்ருதத்தோடே கூடி தெளிவுறா,Thelivuraa - உருத் தெரியாததாய் மழலை முற்றாத,Mazhalai mutraadha - மழலைத் தனத்துக்குள்ள முற்றுதலுமில்லா திருக்கிற இளஞ் சொல்லால்,Ilanj sollaal - இளம்பேச்சாலே உன்னை கூவுகின்றான்;,Unnai koovugindran - உன்னை கூவுகின்றான்; குழகன்,Kuzhagan - எல்லோரோடும் கலந்திருப்பவனாய் சிரீதரன்,Sreedharan - ச்ரிய: பதியான இக் கண்ண பிரான் கூவக் கூவ,Koova koova - (இப்படி) பலகாலுமழையா நிற்கச் செய்தோம் நீ போதியேல்,Nee podhiyel - நீ போவாயேயானால் நின் செவி,Nin sevi - உன் காதுளானவை புழை இல,Puzhai ila - துளை யில்லாதவையாக ஆகாதே,Aagaadhe - ஆகாதோ?(ஆகவே ஆகும்) |
| 59 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 6 | தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான் உண்ட முலைப் பாலறா கண்டாய் உறங்கா விடில் விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா–1-4-6 | விண் தனில்,Vin thanil - ஆகாசத்திலே மன்னிய,Manniya - பொருந்திய மா மதீ!,Maa madhi - பெருமை தங்கிய சந்திரனே! தண்டொடு,Thandodu - ‘கௌமோதகி’ என்னும் கதையையும் சக்கரம்,Chakaram - திருவாழி யாழ்வானையும் சார்ங்கம்,Saarngam - ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லையும் ஏந்தும்,Eendum - ஏந்தியிரா நின்றுள்ள தட,Thada - விசாலமான கையன்,kaiyan - கைகளை யுடைய இக் கண்ண பிரான் கண் துயில் கொள்ள கருதி,Kann thuyil kollak karudhi - திருக்கண் வளர்ந்தருள நினைத்து கொட்டாவி கொள்கின்றான்,Kottaavi kolkindraan - கொட்டாவி விடாநின்றான். உறங்காவிடில்,Urangavidil - (இப்போது இவன்) உறங்காதொழிந்தால் உண்ட,Unda - அமுது செய்யப் பட்டிருக்கிற முலைப்பால்,Mulaippaal - ஸ்தந்யமானது அறா,Araa - ஜரிக்கமாட்டாது; ஆகையால் விரைந்து ஓடிவா,Virainthu odiva - விரைந்து ஓடிவா |
| 60 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 7 | பாலக னென்று பரிபவம் செய்யேல் பண்டொரு நாள் ஆலி னிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன் மேலெழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல் மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-7 | மா மதீ!,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே! பாலகன் என்று,Baalagan endru - ‘இவனொரு சிறு பயலன்றோ’ என்று பரிபவம் செய்யேல்,Paripavam seiyael - திரஸ்கரியாதே; பண்டு ஒருநாள்,Pandu orunaal - முன்பொரு காலத்திலே ஆலின் இலை,Aalin ilai - ஆலந்தளிரிலே வளர்ந்த,Valarntha - கண் வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப் படுகிற சிறுக்கனவன்,Sirukkanavan - அந்த சிறுப்பிள்ளையானவன் இவன்,Ivan - இவனாகிறான் காண்; வெகுளும் ஏல்,Vegulum ael - (இவன்) சீறினானாகில் மேல் எழப் பாய்ந்து,Mael ezha painthu - (உன் மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும்,Pidiththu kollum - (உன்னைப்) பிடித்துக் கொள்வான்; மாலை,Maalai - இம் மஹா புருஷனை மதியாதே,Madhiyadhae - அவமதியாமல் மகிழ்ந்து ஓடிவா,Magizhndhu odiva - மகிழ்ந்து ஓடிவா |
| 61 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 8 | சிறியனென்று என்னிளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலி யிடைச் சென்று கேள் சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண் நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்–1-4-8 | நிறை மதி,Nirai madhi - பூர்ண சந்திரனே! என் இள சிங்கத்தை,En ila singaththai - எனக்குச் சிங்கக்குரு போன்ற கண்ணபிரானை சிறியன் என்று,Siriyan endru - (உபேக்ஷிக்கைக்கு உறுப்பான) சிறுமையை யுடையவனாக நினைத்து இகழேல்,Izhalael - அவமதியாதே; சிறுமையில்,Sirumaiyil - (இவனுடைய) பால்யத்தில் நிடந்த வார்த்தையை,Vaarthaiyai - செய்கையை மாவலி இடை சென்று கேள்,Maavali idai sendru kel - மஹாபலியிடம் போய்க் கேட்டுக்கொள்; சிறுமை பிழை கொள்ளில்,Sirumai pizhai kollil - (இப்படி யுள்ளவன் விஷயத்தில்) சிறுமை நினைத்தலிது மஹாபாரதம் என்று நினைத்தாயாகில் நீயும்,Neeyum - (அப்போது) நீயும்; உன் தேவைக்கு,Un thevaikku - (அஜன் விஷயத்தில்) நீ பண்ணக் கூடிய அடிமைக்கு உரியை,Uriyai - தகுந்தவனாவாய் ; (அதெல்லாமப்படி நிற்க;) நெடு மால்,Nedu maal - ஸர்வ ஸ்மாத் பரனான இவன் விரைந்து உன்னை கூவுகின்றான்,Virainthu unnai koovuginraan - (‘மகிழ்ந்து ஓடி வா’ என்று வருவிக்க. ) |
| 62 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 9 | தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய பேழை வயிற்றெம் பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான் ஆழி கொண்டு உன்னை யெறியும் ஐயுற வில்லை காண் வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா–1-4-9 | மா மதீ!;,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே! தாழியில்,Thaazhil - தாழியிலே (சேமித்திருக்கிற) வெண்ணெய்,Vennai - வெண்ணெயை தட,Thad - பெரிதான கைஆர,Kaiaara - கை நிறைய (அள்ளி) விழுங்கிய,Vizhungiya - அமுது செய்த பேழை வயிறு,Paezhai vayiru - பெரு வயிற்றை யுடையவனான எம்பிரான்,Empiraan - என் கண்ணபிரான் உன்னை கூவுகின்றான்;,Unnai koovuginraan - (இப்படி அழைக்கச் செய்தேயும் நீ வாராதிருந்தால் உன் தலையை அறுக்கைக்காக) ஆழி கொண்டு,Aazhi kondu - திருவாழியாலே உன்னை எறியும்,Unnai eriyum - உன்னை வெட்டி விடுவேன்; ஐயுறவு இல்லை,Aiyuravu illai - ஸம்சயமேயில்லை; வாழ உறுதியேல்,Vaazha urudiyael - (இதில் நின்றுந்தப்பி) வாழக்கருதினாயாகில் மகிழ்ந்து ஓடிவா,Magizhndhu odivaa - மகிழ்ந்து ஓடிவா |
| 63 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 10 | மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர் வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை எத்தனையும் சொல்ல வல்ல வர்க்கு இட ரில்லையே–1-4-10 | மை,Mai - மையணிந்த தட,Thad - விசாலமாயிராநின்ற கண்ணி,Kanni - கண்களை யுடையளான அசோதை,Asothai - யசோதையானளவள் தன் மகனுக்கு,Than maganukku - தன் மகனான கண்ணனுக்கு ஒத்தன சொல்லி,Oththana solli - நினைவுக்கும் சொலவுக்கும் சேர்ந்திருப்பவற்றைச் சொல்லி உரைத்த,Uraitha - (சந்திரனை நோக்கிச்)சொன்ன இவை மாற்றம்,Ivai maatram - இப் பாசுரத்தை ஒளி,Oli - ஒளி பொருந்திய புத்தூர்,Puththoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய் வித்தகன்,Viththagan - (மங்களாசாஸநி) ஸமர்த்தரான விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வாராலே விரித்த,Viriththa - விரித்து அருளிச் செய்யப்பட்ட தமிழ்,Tamil - த்ராவிட பாஷாரூபமான இவை,Ivai - இப் பாசுரங்கள் பத்தையும் எத்தனையும்,Eththanaiyum - ஏதேனுமொருபடியாக சொல்ல வல்லவர்க்கு,Solla vallavarkku - ஓத வல்லவர்களுக்கு இடர் இல்லை,Idar illai - துன்பமொன்றுமில்லை. |
| 64 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 1 | உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல் பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே –1-5-1 | உய்ய,Uyya - (ஆத்மாக்கள்) உஜ்ஜீவிக்கைக்காக உலகு,Ulagu - லோகங்களை படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டித்து உண்ட,Unda - (பின்பு ப்ரளயம் வந்தபோது அவற்றை) உள்ளே வைத்து ரக்ஷித்த மணி வயிறா,Mani vayiraa - அழகிய வயிற்றை யுடையவளே பல ஊழி ஊழி தொறு,Pala oozhi oozhi thoru - பல கல்பங்கள் தோறும் ஆலின் இலை அதன் மேல்,Aalin ilai athan mel - ஆலிலையின் மேல் பைய,Paiya - மெள்ள உயோகு துயில் கொண்ட,Uyogu thuyil konda - யோகநித்திரை செய்தருளின பரம் பரனே,Param parane - பர ஸ்மாத் பரனானவனே! பங்கயம்,Pangayam - தாமரை மலர் போன்று நீள்,Neel - நீண்டிருக்கின்ற நயனம்,Nayanam - திருக் கண்களையும் அஞ்சனம்,Anjanam - மை போன்ற மேனியனே ஐய,Meniyaane aiya - திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே! செய்யவள்,Seyyaval - செந்தாமரை மலரிற் பிறந்த பிராட்டிக்கிருப்பிடமான நின் அகலம்,Nin akalam - உன் திரு மார்வானது சேமம் என கருதி,Semam ena karuthi - (இந்நிர்த்தனத்தால் அசையாமல்) ரஷையை உடைத்தாக வேணுமென்று நினைத்துக் கொண்டு செல்வு பொலி,Selvu poli - ஐச்வர்ய ஸம்ருத்திக்கு ஸூசகங்களான மகரம்,Makaram - திரு மகரக் குழைகளோடு கூடின காது,Kaadhu - திருக் காதுகளானவை திகழ்ந்து இலக,Thigazhnthu ilaga - மிகவும் விளங்கும்படி எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 65 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 2 | கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம் குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய். மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக் கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே. ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே–1-5-2 | கோன்,Kon - வலிமையை யுடைய அரியின்,Ariyin - (நா) சிங்கத்தின் உருவம் கொண்டு,Uruvam kondu - வேஷங்கொண்டு அவுணன்,Avunan - ஹிரண்யாஸுரனுடைய உடலம்,Udalam - சரீரத்தில் குருதி,Kuruthi - ரத்தமானது குழம்பி எழ,Kuzhambi ezha - குழம்பிக் கிளரும்படியாகவும் அவன்,Avan - அவ்வஸுரனானவன் மீள,Meela - மறுபடியும் மகனை,Maganai - தன் மகனான ப்ரஹ்லாதனை மெய்ம்மை கொள கருதி,Meimmai kola karuthi - ஸத்யவாதி யென்று நினைக்கும் படியாகவும் திருவுள்ளம் பற்றி கூர் உகிரால்,Koor ugiraal - கூர்மையான நகங்களாலே குடைவாய்,Kudaivai - (அவ்வசுரனுடலைக்) கிழித்தருளினவனே! மேலை,Melai - மேன்மை பொருந்திய அமரர் பதி,Amarar pathi - தேவேந்திரன் மிக்கு வெகுண்டு வா,Mikku vekundu vaa - மிகவும் கோபித்துவா (அதனால்) காளம்,Kaalam - கறுத்த நில்,Nil - சிறந்த மேகம் அவை,Megam avai - மேகங்களானவை கல்லொடு,Kallodu - கல்லோடு கூடின கார் பொழிய,Kaar poliya - வர்ஷத்தைச் சொரிய கருதி,Karuthi - (‘இம்மலையே உங்களுக்கு ரக்ஷகம் இச் சோற்றை இதுக்கிடுங்கோள் ‘என்று முன்பு இடையர்க்குத் தான் உபதேசித்ததை) நினைத்து வரை,Varai - (அந்த) கோவர்த்தநகிரியை குடையா,Kudaiyaa - குடையாகக்கொண்டு காலிகள்,Kaaligal - பசுக்களை காப்பவனே,Kaappavane - ரக்ஷித்தருளினவனே! ஆன,Aana - (இப்படி ரக்ஷிக்கைக் குறுப்பான) ஆண்பிள்ளைத் தனமுடையவனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 66 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 3 | நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே. நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால் தம்மனையானவனே. தரணிதலமுழுதும் தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும் விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும் விரவியவேலைதனுள்வென்றுவருமவனே. அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.1-5-3 | ம்முடை,Mmudai - எங்களுக்கு நாயகனே,Naayakane - நாதனானவனே! நால் மறையின்,Naal maraiyin - நாலு வேதங்களுடைய பொருளே,Porule - பொருளாயிருப்பவனே! நாபியுள்,Naabiyul - திருநாபியில் முளைத்திராநின்ற நல் கமலம்,Nal kamalam - நல்ல தாமரைமலரிற் பிறந்த நான்முகனுக்கு,Naanmukhanukku - பிரமனுக்கு ஒருகால்,Orukaal - அவன் வேதத்தைப் பறிகொடுத்துத் திகைத்த காலத்தில் தம்மனை ஆனவனே,Thammanai aanavane - தாய் போலே பரிந்து அருளினவனே! தரணி தலம் முழுதும்,Tharani thalam muzuthum - பூமி யடங்கலும் தாரகையின் உலகும்,Thaarakaiyin ulakum - நக்ஷத்ர லோக மடங்கலும் தடவி,Thadavi - திருவடிகளால் ஸ்பர்சித்து அதன் புறமும்,Athan puramum - அதற்குப் புறம்பாயுள்ள தேசமும் விம்ம,Vimm - பூர்ணமாம்படி வளர்ந்தவனே,Valarnthavane - த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே! வேழமும்,Vezhamum - குவலயாபீடமென்ற யானையும் ஏழ் விடையும்,Ezh vidaiyum - ஏழு ரிஷபங்களும் விரவிய,Viraviya - (உன்னை ஹிம்ஸிப்பதாக) உன்னோடு வந்து கலந்த வேலைதனுள்,Velaithanul - ஸமயத்திலே வென்று,Vendru - (அவற்றை) ஜயித்து வருமவனே,Varumavane - வந்தவனே! அம்ம,Amma - ஸ்வாமியானவனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 67 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 4 | வானவர்தாம்மகிழவன்சகடமுருள வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே. கானகவல்விளவின்காயுதிரக்கருதிக் கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே. தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன் என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும் ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே–1-5-4 | வானவர் தாம்,Vaanavar thaam - தேவர்கள் மகிழ,Magizha - மகிழும்படியாகவும் வல் சகடம்,Val sakadam - வலியுள்ள சகடாஸுரன் உருள,Urula - உருண்டு உருமாய்ந்து போம்படியாகவும் வஞ்சம்,Vancham - வஞ்சனையை உடையளான பேயின்,Peyin - பூதனையினுடைய முலை,Mulai - முலை மேல் தடவிக் கிடந்த நஞ்சு,Nanj - விஷத்தை அமுது உண்டவனே,Amudhu undavane - அம்ருதத்தை அமுது செய்யுமா போலே அமுது செய் தருளினவனே! கானகம்,Kaanagam - காட்டிலுள்ளதான வல்,Val - வலிமை பொருந்திய விளவின்,Vilavin - விளாமரத்தினுடைய காய்,Kaai - காய்களானவை உதிர,Udhira - உதிரும்படி கருதி,Karuthi - திருவுள்ளத்திற் கொண்டு கன்று அது கொண்டு,Kanru adhu kondu - கன்றான அந்த வத்ஸாஸுரனைக் கையில் கொண்டு எறியும்,Eriyum - (விளவின் மேல்) எறிந்தவனாய் கரு நிறம்,Karu niram - கறுத்த நிறத்தை யுடையனாய் என் கன்றே,En kanrae - என்னுடைய கன்றானவனே! தேனுகனும்,Thenukanum - தேனுகாஸுரனும் முரனும்,Muranum - முராஸுரனும் திண் திறல்,Thin thiral - திண்ணிய வலிவை யுடையனாய் வெம்,Vem - கொடுமை யுடையனான நரகன்,Naragan - நரகாஸுரனும் என்பவர் தாம்,Enbavar thaam - என்றிப்படி சொல்லப்படுகிற தீப்பப் பூண்டுகளடங்கலும் மடிய,Madiya - மாளும்படியாக செரு,Seru - யுத்தத்திலே அதிர,Athira - மிடுக்கை உடையயனாய்க் கொண்டு செல்லும்,Sellum - எழுந்தருளுமவனான ஆனை,Aanai - ஆனை போன்ற கண்ணனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 68 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 5 | மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார் வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய். முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன் முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுக–1-5-5 | வார் குழல்,Vaar kuzhal - நீண்ட மயிர்முடியை யுடையராய் நல் மடவார்,Nal madavaar - நன்மையையும் மடப்பத்தையுமுடையரான ஸ்த்முகனாலே வைத்தன,Vaiththana - சேமித்து வைக்கப்பட்டவையாய் மத்து,Mathu - மத்தாலே அளவும்,Alavum - அளாவிக் கடைகைக்கு உரிய தயிரும்,Thayirum - தயிரையும் நெய்,Ney - நெய்யையும் களவால்,Kalavaal - திருட்டு வழியாலே வாரி,Vaari - கைகளால் அள்ளி விழுங்கி,Vizhungi - வயிறார உண்டு உன்னிய,Unniya - உன்னை நலிய வேணும் என்னும் நினைவையுடையராய் ஒருங்கு,Orungu - ஒருபடிப்பட ஒத்த,Otha - மனம் ஒத்தவர்களாய் இணை மருதம்,Inai marutham - இரட்டை மருதமரமாய்க் கொண்டு வந்தவரை,Vanthavarai - வந்துநின்ற அஸுரர்களை ஊரு கரத்தினொடும்,Ooru karathinodum - துடைகளாலும் கைகளாலும் உந்திய,Unthiya - இரண்டு பக்கத்திலும் சரிந்து விழும்படி தள்ளின வெம்திறவோய்,Vem thiravoi - வெவ்விய வலிவை யுடையவனே! அத்த,Atha - அப்பனே! முத்து,Muthu - திருமுத்துக்கள் தோன்றும்படி இன்,In - இனிதான இள முறுவல்,Ila muruval - மந்தஹாஸமானது முற்ற,Mutra - பூர்ணமாக வருவதன் முன்,Varuvathan mun - வெளிவருவதற்கு முன்னே முன்னம் முகத்து,Munnam mugaththu - முன் முகத்திலே அணி ஆர்,Ani aar - அழகு மிகப் பெற்று மொய்,Moi - நெருங்கி யிரா நின்ற குழல்கள்,Kuzhalgal - திருக் குழல்களானவை அலைய,Alaiya - தாழ்ந்து அசையும்படி எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 69 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 6 | காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா. கானகமாமடுவில்காளியனுச்சியிலே தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா. துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே. ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய். ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.–1-5-6 | காய மலர்,Kaaya malar - காயாம் பூப் போன்ற நிறவா,Niravaa - நிறத்தை யுடையவனே! கரு முகில் போல்,Karu mugil pol - காள மேகம் போன்ற உருவா,Uruvaa - ரூபத்தை யுடையவனே கானகம்,Kaanagam - காட்டில் மா மடுவில்,Maa maduvil - பெரிய மடுவினுள்ளே கிடந்த காளியன்,Kaaliyan - காளிய நாகத்தினுடைய உச்சியிலே,Uchiyile - தலையின் மீது தூய,Thooya - மனோஹரமான நடம்,Nadam - நர்த்தநத்தை பயிலும்,Pailum - செய்தருளின சுந்தர,Sundara - அழகையுடையவனே! என் சிறுவா,En siruvaa - எனக்குப் பிள்ளை யானவனே! துங்கம்,Thungam - உன்னதமாய் மதம்,Madham - மதத்தை யுடைத்தான கரியின்,Kariyin - குவலயாபீடமென்னும் யானையினது கொம்பு,Kombu - தந்தங்களை பறித்தவனே,Pariththavane - முறித்தருளினவனே! ஆயம் அறிந்து,Aayam arindhu - (மல்ல யுத்தம்) செய்யும் வகையறிந்து பொருவான்,Poruvaan - யுத்தம் செய்வதற்காக எதிர் வந்த,Ethir vantha - எதிர்த்து வந்த மல்லை,Mallai - மல்லர்களை அந்தரம் இன்றி,Antharam indri - (உனக்கு) ஒரு அபாயமுமில்லாதபடி அழித்து,Azhiththu - த்வம்ஸம்செய்து ஆடிய,Aadiya - (இன்னம் வருவாருண்டோ என்று) கம்பீரமாய் ஸஞ்சரித்த தான் இணையாய்,Thaan inaiyaai - திருவடிகளை யுடையவனே! ஆய,Aaya - ஆயனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 70 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 7 | துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால் தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய நப்பினைதன்திறமாநல்விடையேழவிய நல்லதிறலுடையநாதனும்ஆனவனே. தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத் தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என் அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. –1-5-7 | துப்பு உடை,Thuppu udai - நெஞ்சில் கடினத் தன்மை யுடையரான ஆயர்கள் தம்,Aayargal tham - இடையர்களுடைய சொல்,Sol - வார்த்தையை வழுவாது,Vazhuvaadhu - தப்பாமல் ஒரு கால்,Oru kaal - ஒரு காலத்திலே தூய,Thooya - அழகியதாய் கரு,Karu - கறுத்திரா நின்றுள்ள குழல்,Kuzhal - கூந்தலையுடையளாய் நல் தோகை,Nal thogai - நல்ல தோகையையுடைய மயில் அனைய,Mayil anaiya - மயில்போன்ற சாயலை யுடையளான நப்பின்னை தன் திறமா,Nappinnai than thiramaa - நப்பின்னைப் பிராட்டிக்காக நல்,Nal - (கொடுமையில்) நன்றான விடைஏழ்,Vidai ezh - ரிஷபங்களேழும் அவிய,Aviya - முடியும்படியாக நல்ல திறல் உடைய,Nalla thiral udaiya - நன்றான மிடுக்கை யுடையனாய் நாதன் ஆனவனே,Naadhan aanavane - அவ்விடையர்களுக்கு ஸ்வாமியானவனே! தன்,Than - தன்னுடைய மிகு சோதி,Migu sothi - நிரவதிக தேஜோரூபமான் பரமபதத்திலே புக,Puga - செல்லும்படியாக தனியே,Thaniye - தனியே ஒரு,Oru - ஒப்பற்ற தேர்,Ther - தேரை கடலி,Kadali - கடத்தி தப்பின,Thappina - கை தப்பிப்போன பிள்ளைகளை,Pillaihalai - வைதிகன் பிள்ளைகளை தாயொடு கூட்டிய,Thaaiodu kootiya - தாயோடு கூட்டின என் அப்ப,En appa-en appane - என் அப்பனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 71 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 8 | உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும் கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக் கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ் சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே. என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. –1-5-8 | மன்னு,Mannu - (ப்ரளயத்துக்குமழியாமல்) பொருந்தி யிருக்கக் கடவ குறுங்குடியாய்,Kurungudiyai - திருக் குறுங்குடியிலே எழுந்தருளி யிருக்குமவனே! வெள்ளறையாய்,Vellaraiyai - திரு வெள்ளறையிலே வர்த்திக்குமவனே! மதிள் சூழ்,Mathil soozh - மதிலாலே சூழப்பட்ட சோலை மலைக்கு,Solai malaikku - திருமாலிருஞ்சோலை மலைக்கு அரசே,Arase - அதிபதியானவனே! கண்ணபுரத்து,Kannapuraththu - திருக் கண்ண புரத்திலே நிற்கிற அமுதே,Amudhe - அம்ருதம் போன்றவனே! என் அவலம்,En avalam - என் துன்பங்களை களைவாய்,Kalaivai - நீக்குபவனே! உன்னை,Unnai - (மகோ உதாரனான ) உன்னை ஒக்கலையில்,Okkalaiyil - இடுப்பிலே கொண்டு,Kondu - எடுத்துக் கொண்டு தம் இல்,Tham il - தங்கள் அகங்களிலே மருவி,Maruvi - சேர்ந்து உன்னொடு,Unnodu - உன்னோடு தங்கள்,Thangal - தங்களுடைய கருத்து ஆயின செய்து,Karuthu aayina seythu - நினைவுக்குத் தக்கபடி பரிமாறி வரும்,Varum - மறுபடியும் கொண்டு வாரா நிற்கிற கன்னியரும்,Kanniyarum - இளம்பெண்களும் மகிழ,Magizha - (இச் செங்கீரையைக் கண்டு) ஸந்தோஷிக்கும்படியாகவும் கண்டவர்,Kandavar - (மற்றும்) பார்த்தவர்களுடைய கண்,Kan - கண்களானவை குளிர,Kulira - குளிரும்படியாகவும் கற்றவர்,Katravar - (கவி சொல்லக்) கற்றவர்கள் தெற்றி வர,Thetri vara - பிள்ளைக் கவிகள் தொடுத்து வரும்படியாகவும் பெற்ற,Petra - உன்னை மகனாகப் பெற்ற எனக்கு,Enakku - என் விஷயத்திலே அருளி,Aruli - கிருபை செய்து செங்கீரை ஆடுக-;,Sengkirei aaduga - செங்கீரை ஆடுக-; ஏழ் உலகும்,Ezh ulagum - ஸப்த லோகங்களுக்கும் உடையாய்,Udaiyai - ஸ்வாமியானவளே! ஆடுக ஆடுக-.,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 72 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 9 | பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும் பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக் கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே –1-5-9 | மறை,Marai - வேதத்தினுடைய ஏலும்,Ealum - தகுதியான பொருளே,Porule - அர்த்தமானவனே! பாலொடு,Paalodu - பாலோடே கூட நெய்,Ney - நெய்யும் தயிர்,Thayir - தயிரும் ஒண் சாந்தொடு,Onn saanthodu - அழகிய சந்தநமும் செண்பகமும்,Senbagamum - செண்பகம் முதலிய மலர்களும் பங்கயம்,Pangayam - தாமரைப் பூவும் நல்ல,Nalla - உத்தமமான கருப்பூரமும்,Karuppooramum - பச்சைக் கர்ப்பூரமுமாகிய இலை நாறி வர,Naari vara - கலந்து பரிமளிக்க கோலம்,Kolam - அழகிய நறு பவளம்,Naru pavalam - நற் பவளம் போல் செம்,Sem - அழகியதாய் துவர்,Thuvar - சிவந்திருக்கிற வாயின் இடை,Vaayin idai - திருவதரத்தினுள்ளே கோமளம்,Komalam - இளையதான வெள்ளி முளை போல்,Velli mulai pol - வெள்ளி முளை போலே சில பல்,Sila pal - சில திரு முத்துக்கள் இலக,Ilaga - விளங்க நீலம் நிறத்து,Neelam nirathu - நீல நிறத்தை யுடைத்தாய் அழகு ஆர்,Azhagu aar - அழகு நிறைந்திரா நின்ற ஐம்படையின் நடுவே,Aimbadaiyin naduve - பஞ்சாயுதத்தின் நடுவே நின்,Nin - உன்னுடைய கனி,Kani - கொவ்வைக் கனி போன்ற வாய்,Vaai - அதரத்தில் ஊறுகின்ற அமுதம்,Amudham - அம்ருத ஜலமானது இற்று முறிந்து விழ,Itru murinthu vizha - இற்றிற்று விழ ஆடுக-.,Aaduga - ஆடுக-. |
| 73 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 10 | செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில் சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில் தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின் பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும் மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும் மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. –1-5-10 | எங்கள் குடிக்கு,Engal kudikku - எங்கள் வம்சத்துக்கு அரசே,Arase - ராஜாவானவனே! செம் கமலம்,Sem kamalam - செந்தாமரைப் பூப் போன்ற கழலில்,Kalazhil - திருவடிகளில் சிறு இதழ் போல்,Siru idhazh pol - (அந்தப் பூவினுடைய) உள்ளிதழ் போலே சிறுத்திருக்கிற விரலில்,Viralil - திரு விரல்களில் சேர் திகழ்,Ser thigal - சேர்ந்து விளங்கா நின்ற ஆழிகளும்,Aazhilgalum - திருவாழி மோதிரங்களும் கிண் கிணியும்,Kin kiniyum - சதங்கைகளும் அரையில் தங்கிய,Araiyil thangiya - அரையில் சாத்தி யிருந்த பொன் வடமும்,Pon vadamum - பொன் அரை நாணும் (பொன்) தாள,Pon thaal - பொன்னால் செய்த காம்பையுடைய நல்,Nal - நல்லதான மாதுளையின் பூவொடு,Mathulaiyin poovodu - மாதுளம் பூக் கோவையும் பொன் மணியும்,Pon maniyum - (நடு நடுவே கலந்து கோத்த) பொன் மணிக் கோவையும் மோதிரமும்,Mothiramum - திருக்கை மோதிரங்களும் சிறியும்,Siriyum - (மணிக் கட்டில் சாத்தின) சிறுப் பவள வடமும் மங்கலம்,Mangalam - மங்களாவஹமான ஐம்படையும்,Aimpadaiyum - பஞ்சாயுதமும் தோள் வளையும்,Thol valaiyum - திருத் தோள் வளைகளும் குழையும்,Kuzhaiyum - காதணிகளும் மகரமும்,Magaramum - மகர குண்டலங்களும் வாளிகளும்,Vaaligalum - (திருச் செவி மடல் மேல் சாத்தின) வாளிகளும் சுட்டியும்,Suttiyum - திரு நெற்றிச் சுட்டியும் ஒத்து,Othu - அமைந்து இலக,Ilaga - விளங்கும்படி ஆடுக. ஆடுக.,Aaduga aaduga - ஆடுக. . . ஆடுக. |
| 74 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 11 | அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும் ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே. என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ் இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில் எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. –1-5-11 | அன்னமும்,annamum - ஹம்ஸ ரூபியாயும் மீன் உருவும்,meen uruvum - மத்ஸ்ய ரூபியாயும் ஆள் அரியும்,aal ariyum - நர ஸிம்ஹ ரூபியாயும் குறளும்,kuRalum - வாமந ரூபியாயும் ஆமையும்,aamaiyum - கூர்ம ரூபியாயும் ஆனவனே,aanavane - அவதரித்தவனே! ஆயர்கள்,aayargal - இடையர்களுக்கு நாயகனே,naayakane - தலைவனானவனே! என் அவலம்,en avalam - என் துன்பத்தை களைவாய்,kaLaiyaai - நீக்கினவனே! செங்கீரை ஆடுக,senkeerai aaduga - செங்கீரை ஆட வேணும் ஏழ் உலகும்,ezh ulagum - ஸப்த லோகங்களுக்கும் உடையாய்,udaiyaai - ஸ்வாமி யானவனே! ஆடுக ஆடுக என்று,aaduga aaduga enRu - பலகாலுமாடவேணும் என்று அன்னம் நடை,annam nadai - ஹம்ஸ கதியை யுடையனாய் மடவாள்,maDavaal - நற்குணமுடையளான அசோதை,asodhai - யசோதைப் பிராட்டியாலே உகந்த,ugandha - உகந்த சொல்லப் பட்ட பரிசு,parisu - ப்ரகாரத்தை ஆன,aana - பொருந்திய புகழ்,pugazh - புகழை யுடையரான புதுவை பட்டன்,puduvai paTTan - பெரியாழ்வார் உரைத்த,uraittha - அருளிச் செய்த இன் இசை,in isai - இனிய இசையை யுடைய தமிழ் மாலைகள்,thamizh maalaigal - தமிழ்த் தொடைகளான இ பத்து,i paththu - இப் பத்துப் பாசுரங்களையும் வல்லார்,vallaar - ஓத வல்லவர்கள் உலகில்,ulakil - இந்த லோகத்தில் எண் திசையும்,eN thisaikum - எட்டுத் திசைகளிலும் (பரந்த) புகழ்,pugazh - கீர்த்தியையும் மிகு இன்பமது,migu inbamathu - மிக்க இன்பத்தையும் எய்துவர்,eydhuththavar - பெறுவார்கள். |
| 75 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 1 | மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல் ஆணிப் பொன் னால் செய்த ஆய் பொன்னுடை மணி பேணிப் பவள வாய் முத்திலங்க பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி–1-6-1 | ஆணிப் பொன்னால் செய்த,Aanip Ponnal Seytha - மாற்றுயர்ந்த பொன்னால் செய்த ஆய்,Aay - (வேலைப் பாட்டிற் குறைவில்லாதபடி) ஆராய்ந்து செய்த பொன் மணி,Pon Mani - பொன் மணிக் கோவையை உடைய,Udaiya - உடைய மருங்கின் மேல்,Marungin Mel - இடுப்பின் மேலே மாணிக்கம் கிண்கிணி,Manikkam Kinkini - (உள்ளே) மாணிக்கத்தை யிட்ட அரைச் சதங்கை ஆர்ப்ப,Aarppa - ஒலி செய்யவும் பவளம்,Pavalam - பவழம் போன்ற வாய்,Vaai - வாயிலே முத்து,Muthu - முத்துப் போன்ற பற்கள் இலங்க,Ilanga - விளங்கவும் பண்டு,Pandu - முற்காலத்திலேயே காணி,Kaani - பூமியை கொண்ட,Konda - (புவிச் சக்ரவர்த்தியினிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட கைகளால்,Kaigalal - திருக் கைகளாலே பேணி,Peni - விரும்பி சப்பாணி,Sappani - சப்பாணி கொட்டி யருள வேணும்; கரு,Karu - கரு நிறமான குழல்,Kuzhal - கூந்தலை யுடைய குட்டனே,Kuttane - பிள்ளாய்! சப்பாணி,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 76 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 2 | பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி தன்னரை யாடத் தனிச் சுட்டி தாழ்ந்தாட என்னரை மேல் நின்றிழிந்து உங்க ளாயர் தம் மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி–1-6-2 | பொன்,Pon - ஸ்வர்ண மயமான அரை நாணொடு,Arai Naanodu - அரை நாணோடு கூட மாணிக்கம் கிண்கிணி,Manikkam Kinkin - (உள்ளே) மாணிக்கமிட்ட அரைச் சதங்கையும் தன் அரை,Than Arai - தனக்கு உரிய இடமாகிய அரையிலே ஆட,Aada - அசைந்து ஒலிக்கவும் தனி,Thani - ஒப்பற்ற சுட்டி,Sutti - சுட்டியானது தாழ்ந்து,Thazhnthu - (திருநெற்றியில்) தொங்கி ஆட,Aada - அசையவும் என் அரை மேல் நின்று,En Arai Mel Ninru - என்னுடைய மடியிலிருந்து இழிந்து,Izhinthu - இறங்கிப் போய் உங்கள்,Ungal - உன்னுடைய (பிதாவான) ஆயர் தம் மன்,Aayar Tham Man - இடையர்கட்கெல்லாம் தலைவரான நந்த கோபருடைய அரை மேல்,Arai Mel - மடியிலிருந்து கொட்டாய் சப்பாணி,Kottai Sappani - சப்பாணி கொட்டாய் மாயவனே,Maayavane - அற்புதமான செயல்களை யுடையவனே! சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 77 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 3 | பன் மணி முத்து இன் பவளம் பதித்தன்ன என் மணி வண்ணன் இலங்கு பொற் றோட்டின் மேல் நின் மணி வாய் முத் திலங்க நின்னம்மை தன் அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி–1-6-3 | என்,En - என்னுடைய மணிவண்ணன்,ManiVannan - நீல மணி போன்ற நிறமுடையவனே! பல்,Pal - பலவகைப் பட்ட மணி,Mani - சதகங்களையும் முத்து,Muthu - முத்துக்களையும் இன் பவளம்,In Pavalam - இனிய பவழத்தையும் பதித்த,Pathitha - அழுத்திச் செய்யப் பட்டதும் அன்ன,Anna - அப்படிப்பட்டதுமான (அழகியதுமான) இலங்கு,Ilangu - விளங்குகின்ற பொன் தோட்டின் மேல்,Pon Thottin Mel - பொன்னாற் செய்த தோடென்னும் காதணியினழகுக்கு மேலே நின் மணி வாய் முத்து,Nin Mani Vaai Muthu - உன்னுடைய அழகிய வாயிலே முத்துப் போன்ற பற்கள் இலங்க,Ilanga - விளங்கும்படி (சிரித்துக் கொண்டு) நின் அம்மை தன்,Nin Ammaithan - உன் தாயினுடைய அம்மணி மேல்,Ammani Mel - இடையிலிருந்து கொட்டாய் சப்பாணி,Kottai Sappani - சப்பாணி கொட்டாய்-; ஆழி,Aazhi - திருவாழி மோதிரத்தை அம் கையனே,Am Kaiyane - அழகிய கையிலுடையவனே! சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 78 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 4 | தூ நிலா முற்றத்தே போந்து விளையாட வானிலா அம்புலீ சந்திரா வா வென்று நீநிலா நின் புகழா நின்ற ஆயர் தம் கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி–1-6-4 | வான்,Vaan - ஆகாசத்திலே நிலா,Nila - விளங்குகின்ற அம்புலி,Ambuli - அம்புலியே! சந்திரா,Chandira - சந்திரனே! தூ,Thoo - வெண்மையான நிலா,Nila - நிலாவையுடைய முற்றத்தே,Mutraththae - முற்றத்திலே போந்து,Poanthu - வந்து நீ,Nee - நீ விளையாட,Vilaiyaada - (நான்) விளையாடும்படி வா,Vaa - வருவாயாக என்று,Endru - என்று (சந்திரனை அழைத்து) நிலா,Nila - நின்று கொண்டு நின்,Nin - உன்னை புகழாநின்ற,Pugazhaninra - புகழ்கின்ற ஆயர் தம்,Aayar Tham - இடையர்களுடைய கோ,Ko - தலைவராகிய நந்த கோபர் நிலாவ,Nilaava - மனம் மகிழும்படி சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டி யருள வேணும்; குடந்தை கிடந்தானே! சப்பாணி-.,Kudanthai Kidanthane!Sappani - குடந்தை கிடந்தானே! சப்பாணி-. |
| 79 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 5 | புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து அட்டி யமுக்கி அகம் புக் கறியாமே சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக்கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி–1-6-5 | புட்டியில்,Puttiyil - திருவரையிற் படிந்த சேறும்,Serum - சேற்றையும் புழுதியும்,Puzhiyum - புழுதி மண்ணையும் கொண்டு வந்து,Kondu Vandu - கொணர்ந்து வந்து அட்டி,Atti - (என் மேல்) இட்டு அமுக்கி,Amukki - உறைக்கப் பூசி அகம் புக்கு,Agam Pukku - வீட்டினில் புகுந்து அறியாமே,Ariyamae - (எனக்கு நீ) தெரியாதபடி சட்டி தயிரும்,Satti Thairum - சட்டியில் வைத்திருக்கும் தயிரையும் தடாவினில்,Thadavinil - மிடாக்களிலிருக்கிற வெண்ணெயும்,Vennaiyum - வெண்ணெயையும் உண்,Un - உண்ணுகின்ற பட்டி கன்றே,Patti Kanrae - பட்டி மேய்ந்து திரியும் கன்று போன்றவனே! சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டாய்-; பற்ப நாபா,Parpa Naaba - ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக்கொண்ட நாபியை யுடையவனே! சப்பாணி கொட்டாய்-.,Sappani Kottai - சப்பாணி கொட்டாய்-; |
| 80 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 6 | தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி–1-6-6 | தந்தை,Thandai - (எல்லார்க்கும்) பிதாவாகிய உனது சொல்,Sol - பேச்சை தாரித்து கொள்ளாது,Thariththu Kollaathu - (மனத்திற்) கொண்டு அங்கீகரியாமல் போர் உய்த்து வந்து,Poar Uyiththu Vandu - யுத்தத்தை நடத்துவதாக (க்கருவத்துடன்) வந்து புகுந்தவர்,Pugunthavar - (போர்க்களத்தில்) ப்ரவேசித்தவரும் மண்,Mann - ராஜ்யத்தை ஆள,Aala - (தாமே) அரசாளுவதற்கு பாரித்த,Paariththa - முயற்சி செய்த மன்னர்,Mannar - அரசர்களுமாகிய நூற்றுவர்,Noorruvar - நூற்றுக் கணக்காயிருந்த துரியோதநாதிகள் பட,Pada - மாண்டு போகும்படி அன்று,Andru - (பாரத யுத்தம் நிடந்த) அக் காலத்திலே பஞ்சவர்க்கு,Panjavarkku - பஞ்ச பாண்டவர்களுக்கு (வெற்றி உண்டாக) தேர் உய்த்த,Ther Uyiththa - (பார்த்தஸாரதியாய் நின்று) தேரை ஓட்டின கைகளால்,Kaigalal - திருக்கைகளாலே சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். தேவகி சிங்கமே,Devaki Singamae - தேவகியின் வயிற்றிற் பிறந்த சிங்கக்குட்டி போன்றவனே! சப்பாணி-.,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 81 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 7 | பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை இரந்திட்ட கைம் மேல் எறி திரை மோத கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்கவிற் கையனே சப்பாணி–1-6-7 | பரந்திட்டு நின்ற,Parandhittu Nindra - (எல்லை காண வொண்ணாதபடி) பரவியுள்ள படு கடல்,Padu Kadal - ஆழமான ஸமுத்ரமானது தன்னை இரந்திட்ட,Thannai Irandhitta - (வழி விடுவதற்காகத்)தன்னை யாசித்த கை மேல்,Kai Mel - கையின் மேலே எறி திரை,Eri Thirai - வீசுகின்ற அலைகளினால் மோத,Modha - மோதி யடிக்க கரந்திட்டு நின்ற,Karandhittu Nindra - (முகங் காட்டாமல்) மறைந்து கிடந்த கடல்,Kadal - அக் கடலுக்கு உரிய தேவதையான வருணன் கலங்க,Kalanga - கலங்கி விடும்படி சரம்,Saram - அம்புகளை தொட்ட,Thotta - தொடுத்து விட்ட கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும். சார்ங்கம் வில்,Sargam Vil - ஸ்ரீசார்ங்கமென்னும் தநுஸ்ஸை கையனே,Kaiyane - (அப்போது) கையில் தரித்தவனே! சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 82 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 8 | குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீள் நீரிலங்கை அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங் கையனே சப்பாணி–1-6-8 | குரை,Kurai - கோக்ஷியா நின்ற கடல் தன்னை,Kadal Thannai - ஸமுத்ரத்தை நெருக்கி,Nerukki - (இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து குரங்கு,Kurangu - குரங்குகளினுடைய இனத்தாலே,Inaththaalai - கூட்டங்களைக் கொண்டு அணை கட்டி,Anai Katti - ஸேதுவைக் கட்டி முடித்து நீள் நீர்,Neel Neer - பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட இலங்கை,Ilangai - லங்கையிலுள்ள அரக்கர்,Arakkar - ராக்ஷஸர்களெல்லாம் அலிய,Aliya - அழிந்து போம்படி அடு கணையாலே,Adu Kanaiyaale - கொல்லும் தன்மையை யுடைய அம்புகளைக் கொண்டு நெருக்கிய,Nerukkiya - நெருங்கப் போர் செய்த கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும். நேமி,Nemi - திருவாழி ஆழ்வானை அம் கையனே,Am Kaiyane - அழகிய கையிலேந்தினவனே! சப்பாணி-.,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 83 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 9 | அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய் உளந்தொட் டிரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி–1-6-9 | தூணை,Thoona - கம்பத்தை அவன்,Avan - அந்த ஹிரண்யாஸுரன் (தானே) தட்ட,Thatta - புடைக்க ஆங்கே,Aange - (அவன் புடைத்த) அந்த இடத்திலேயே வான் உகிர்,Vaan Ukir - கூர்மையான நகங்களை யுடைய சிங்கம் உருஆய்,Singam Uruaai - நரஸிம்ஹ மூர்த்தியாய் வளர்ந்திட்டு,Valarnthittu - வளர்ந்த வடிவத்துடன் தோன்றி உளம்,Ulam - (அவ்விரணியனது) மநஸ்ஸு (ஒருகால் இவ்விரணியனும் அநுகூலனாகக் கூடுமோ! என்று) தொட்டு,Thotta - பரிசோதித்துப் பார்த்து (பின்பு) இரணியன்,Iraaniyan - அவ்விரணியனுடைய ஒளி,Oli - ஒளி பொருந்திய மார்பு அகலம்,Maaarbu Akalam - மார்பின் பரப்படங்கலும் பிளந்திட்ட,Pilandhitta - (நகத்தாற்) பிளந்த கைகளால் சப்பாணி,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும். பேய்,Paey - பூதனையின் முலை,Mulai - முலையை உண்டானே,Undaane - உண்டவனே! சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 84 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 10 | அடைந்திட்டு அமரர்கள் ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி–1-6-10 | அமரர்கள்,Amarar - தேவர்கள் (துர்வாச முனி சாபத்தினால் தாம் இழந்த ஐச்வர்யத்தைப் பெறுதற்காக) அடைந்திட்டு,Adainthittu - (உன்னைச்) சரணமடைய (நீ) ஆழ்கடல் தன்னை,Aazh Kadal Thannai - ஆழமான க்ஷிராப்தியை (உன்னுடைய படுக்குமிடமென்று பாராமல்) விடைந்திட்டு,Vidaindhittu - நெருங்கி மந்தரம்,Mantharam - மந்தர பர்வதத்தை மத்து ஆக,Maththu Aaga - (கடைவதற்குரிய) மத்தாகும்படி கூட்டி,Kooti - நேராக நிறுத்தி வாசுகி,Vaasuki - வாசுகியென்னும் பாம்பாகிய வன்வடம்,Vanvadham - வலிய கயிற்றை கயிறு ஆக சுற்றி,Kayiru Aaga Sutri - (அந்த மந்தரமலையாகிற மத்திலே) கடை கயிறாகச் சுற்றி கடைந்திட்ட,Kadaiynthitta - கடைந்த கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும். கார்முகில் வண்ணனே,Kaarmugil Vannanae - காளமேகம் போன்ற நிறமுடையவனே! சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 85 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 11 | ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர் தங் கோவினை நாட் கமழ் பூம் பொழில் வில்லி புத்தூர்ப் பட்டன் வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும் வேட்கையினால் சொல்லுவார் வினை போமே–1-6-11 | ஆள் கொள்ள,Aal Kolla - (அனைவரையும்) அடிமை கொள்வதற்காக தோன்றிய,Thonriya - திருவவதரித்த ஆயர் தம் கோவினை,Aayar Tham Kovinai - இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில் வேட்கையினால்,Vetchaiyinaal - ஆசையினால் நாள்,Naal - எந்நாளிலும் கமழ்,Kamazh - மணம் வீசுகின்ற பூ,Poo - புஷ்பங்கள் வீசுகின்ற பொழில்,Pozhil - சோலைகளை யுடைய வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பட்டன்,Pattan - பெரியாழ்வார் சொன்ன,Sonna - அருளிச் செய்த சப்பாணி ஈர் ஐந்தும்,Sappani Eer Aindhum - சப்பாணி கொட்டுதலைக் கூறிய பத்துப் பாசுரங்களையும் வேட்கையினால்,Vetchaiyinaal - இஷ்டத்தோடு சொல்லுவார்,Solluvaar - ஓதுகிறவர்களுடைய வினை,Vinai - பாபங்கள் போம்,Pom - அழிந்து போம். |
| 86 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 1 | தொடர் சங்கிலி கை சலார் பிலாரென்னத் தூங்கு பொன் மணி யொலிப்ப படு மும் மதப் புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல் உடங்கூடிக் கிண் கிணி யாரவாரிப்ப உடை மணி பறை கறங்க தடந்தா ளிணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ–1-7-1 | சங்கிலி கை தொடர்,Sangili kai todar - இரும்புச் சங்கிலியின் தொடர்பு சலார் பிலார் என்ன,Salar pilar enna - ’சலார்பிலார்’ என்று சப்திக்கவும் தூங்கு,Thoongu - தொங்குகின்றனவும் பொன்,Pon - பொன் கயிற்றிற்கட்டி யிருப்பனவுமான மணி,Mani - மணிகள் ஒலிப்ப,Olippa - ஒலிக்கவும் படு,Padu - உண்டான மும்மதம் புனல்,Mummadham punal - மூன்று வகையான மதநீர் சோர,Sora - பெருகவும் நின்று,Nindru - இருந்து கொண்டு வாரணம்,Varanam - யானை பைய,Paiya - மெல்ல ஊர்வது போல்,Oorvathu pol - நடந்து போவது போல கிண் கிணி,Kin kini - காற் சதங்கைகள் உடன் கூடி,Udan koodi - தம்மிலே தாம் கூட்டி ஆரவாரிப்ப,Aravarippa - சப்திக்கவும் உடை,Udai - திரு வரையில் கட்டிய மணி,Mani - சிறு மணிகள் பறை கறங்க,Parai karanga - பறை போல் சப்திக்கவும் சார்ங்கம்,Sarngam - சார்ங்கமென்னும் வில்லை பாணி,Pani - கையிலேந்திய பிள்ளையாகிய இவன் தட தாள் இணை கொண்டு,Thada thal inai kondu - (தன்னுடைய) பெரிய பாதங்களிரண்டினால் தளர் நடை,Thalar nadai - இளநடையை நடவானோ,Nadavano - நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 87 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 2 | செக்க ரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போல நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர் வெண் பல் முளையிலக அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன் தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ–1-7-2 | செக்கரிடை,Sekkaridai - செவ் வானத்திலே நுனி கொம்பில்,Nuni kombil - கொம்பின் நுனியிலே தோன்றும்,Thondrum - காணப்படுகிற சிறுபிறை முளை போல,Sirupirai mulai pola - சிறிய பிறைச் சந்திரனாகிய முளையைப்போல, நக்க,Nakka - சிரித்த செம் அவர் வாய்,Sem avar vai - மிகவுஞ் சிவந்த வாயாகிய தி்ண்ணை மீது,Thinnai meedhu - மேட்டிடத்தில் நளிர் வெண் பல் முளை,Nalir ven pal mulai - குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள் இலக,Ilaka - விளங்க அஃகுவடம்,Akkuvadam - சங்கு மணி வடத்தை உடுத்து,Uduthu - (திரு வரையில்) தரித்த ஆமைத் தாலி,Amai thali - ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை பூண்ட,Poonda - கழுத்திலணி்ந்து கொண்டவனும் அனந்த சயனன்,Anantha sayanan - திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும் தக்க மா மணிவண்ணன்,Thakka ma manivannan - தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும் வாசுதேவன்,Vasudevan - வஸுதேவ புத்திரனுமான இவன் தளர் நடை நடவானோ .,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 88 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 3 | மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய் பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும் மின்னில் பொலிந்த தோர் கார் முகில் போலக் கழுத்திணில் காறை யொடும் தன்னில் பொலிந்த இருடீ கேசன் தளர்நடை நடவானோ–1-7-3 | மின் கொடியும்,Min kodiyum - கொடி மின்னலும் ஓர் வெண் திங்களும்,Or ven thingalum - அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான (முழுவதும்) வெண்மையாயுள்ள ஒரு சந்த்ரனும் சூழ்,Sool - (அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும் பரிவேடமும் ஆய்,Parivedamum aai - பரி வேஷத்தையும் போல பின்னல்,Pinnal - (திருவரையில் சாத்தின) பொற் பின்னலும் துலங்கும் அரசிலையும்,Thulanggum arasilaiyum - விளங்குகின்ற அரசிலை போல வேலை செய்த ஒரு திருவாபரணமும் பீதகம் சிறு ஆடையோடும்,Peedhagam siru aadaiyodum - (இவ்விரண்டையுஞ் சூழ்ந்த) பொன்னாலாகிய சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும், மி்ன்னில்,Minnil - மின்னலினால் பொலிந்தது,Polinthathu - விளங்குவதாகிய ஓர்,Or - ஒப்பற்ற கார் முகில் போல,Kar mugil pola - காளமேகம் போல கழுத்தினில் காறையோடும்,Kazhuthinil kaaraiyodum - கழுத்திலணிந்த காறையென்னும் ஆபரணத்தோடும் (கூடிய) தன்னில் பொலிந்த,Thannil polintha - (இவ்வாபரணங்கள் திருமேனிச்சுமை என்னும்படி இயற்கையான) தனது அழகினால் விளங்குகின்ற இருடீகேசன்,Irudheekesan - ‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திருநாமமுடைய இவன் தளர்நடை நடவானோ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 89 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 4 | கன்னற் குடம் திறந் தாலொத் தூறிக் கண கண சிரித்து வந்து முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திரு மார்வன் தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர் நடை நடவானோ–1-7-4 | கன்னல் குடம்,Kannal kudam - கருப்பஞ்சாறு நிறைந்த குடம் திறந்தால்,Thirandhal - பொள்ளல் வி்ட்டால் (அப் பொள்ளல் வழியாகச் சாறு பொசிவதை) ஒத்து,Othu - போன்று ஊறி,Oori - (வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய கண கண,Kana kana - கண கண வென்று சப்தமுண்டாகும்படி சிரித்து உவந்து,Uvandhu - ஸந்தோஷித்து முன் வந்து நின்று,Mun vandhu nindru - என் முன்னே வந்து நின்று முத்தம் தரும்,Mutham tharum - (எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மை யுள்ளவனும் என் முகில் வண்ணன்,En mugil vannan - எனது முகில் போன்ற திரு நிறத்தை யுடையவனும் திரு,Thiru - பெரியபிராட்டியார் மார்வன்,Maarvan - மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன் தன்னை பெற்றேற்கு,Thannai petraerku - தன்னைப் பெற்ற எனக்கு தன்,Than - தன்னுடைய வாய் அமுதம்,Vaai amudham - அதராம்ருதத்தை தந்து,Thandhu - கொடுத்து என்னை,Ennai - (தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய) என்னை தளிர்ப்பிக்கின்றான்,Thalirppikkinraan - தழைக்கச் செய்கிறான், தன் ஏற்றும்,Than etrum - (இவன்) தன்னோடு எதிர்க்கிற மாற்றலர்,Maatralar - சத்ருக்களுடைய தலைகள் மீதே,Thalaigal meedhe - தலைகளின் மேலே (அடியிட்டு) தளர்நடை நடவானோ.,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 90 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 5 | முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவது போல் பன்னி யுலகம் பரவி யோவாப் புகழ்ப் பலதே வனென்னும் தன் நம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ–1-7-5 | முன்,Mun - முன்னே நல்,Nal - அழகிய ஓர்,Or - ஒப்பற்ற வெள்ளி பெருமலை,Velli perumalai - பெரிய வெள்ளிமலை பெற்ற குட்டன்,Kuttan - குட்டி மொடுமொடு,Modu modu - திடுதிடென்று விரைந்து,Viraindhu - வேகங்கொண்டு ஓட,Oda - ஓடிக்கொண்டிருக்க, பின்னை,Pinnai - (அந்தப் பிள்ளையின்) பின்னே தொடர்ந்தது,Thodarndhathu - (தன் செருக்காலே அப்பிள்ளையைப் பிடிப்பதற்காக) தொடர்ந்ததுமாகிய ஓர்,Or - ஒப்பற்ற கரு மலை,Karu malai - கரு நிறமான மலை பெற்ற குட்டன்,Kuttan - குட்டி பெயர்ந்து,Peyarnthu - தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு அடி இடுவது போல்,Adi iduvathu pol - அடி யிட்டுப் போவது போல, உலகம்,Ulagam - லோகமெல்லாங்கூடி பன்னி,Panni - (தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து பரவி,Paravi - ஸ்தோத்ரஞ்செய்தும் ஓவா,Ovaa - முடிவு காண முடியாத புகழ்,Pugazh - கீர்த்தியை யுடைய பலதேவன் என்னும்,Baladevan ennum - பலராமன் என்கிற தன் நம்பி ஓட,Than nambi oda - தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக்கொண்டிருக்க பின் கூட செல்வான்,Pin kooda selvaan - (அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான் தளர்நடை நடவானோ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 91 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 6 | ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த இரு காலும் கொண்டு அங்கங்கு எழுதினாற் போல் இலச்சினை பட நடந்து பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து கரு கார்க் கடல் வண்ணன் காமர் தாதை தளர் நடை நடவானோ–1-7-6 | கரு கார் கடல் வண்ணன்,Karu kar kadal vannan - மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும் காமர் தாதை,Kamar thadhai - காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை,- ஒரு காலில்,Oru kaalil - ஒரு பாதத்திலே சங்கு,Sangu - சங்கமும் ஒரு காலில்,Oru kaalil - மற்றொரு பாதத்தில் சக்கரம்,Chakkaram - சக்கரமும் உள் அடி,Ul adi - பாதங்களின் உட் புறத்திலே பொறித்து,Porithu - ரேகையின் வடிவத்தோடு கூடிரேகையின் வடிவத்தோடு கூடி அமைந்த,Amaindha - பொருந்தி யிருக்கப் பெற்ற இரு காலும் கொண்டு,Iru kaalum kondu - இரண்டு திருவடிகளினாலும் அங்கு அங்கு,Angu angu - அடி வைத்த அவ்வவ் விடங்களிலே எழுதினால் போல்,Ezhuthinaal pol - சித்திரித்ததுபோல இலச்சினை பட,Ilachinai pada - அடையாளமுண்டாம்படி நடந்து,Nadandhu - அடி வைத்து பெருகா நின்ற,Perugaa nindra - (தனது வடிவழகைக் கண்டு) பொங்குகிற இன்பம் வெள்ளத்தின் மேல்,Inbam vellathin mel - ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே பி்ன்னையும்,Pinnaiyum - பின்னும் பெய்து பெய்து,Peythu peythu - (ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக் கொண்டு தளர்நடை நடவானோ ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 92 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 7 | படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனி படு சிறு துளி போல் இடங்கொண்ட செவ் வாயூறி யூறி இற்றிற்று வீழ நின்று கடுஞ்சேக் கழுத்தின் மணிக் குரல் போல் உடை மணி கண கணென தடந்தாளினை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ–1-7-7 | படர்,Padar - படர்ந்திருக்கிற (பெருத்திருந்துள்ள பங்கயம் மலர்,Pangayam malar - தாமரைப்பூ வாய் நெகிழ,Vaai negizha - (மொட்டாயிராமல்) வாய் திறந்து மலர பனிபடு,Panipadu - (அதில் நின்றும் பெருகுகி்ன்ற) குளிர்ச்சி பொருந்திய சிறு துளி போல,Siru thuli pola - (தேனினுடைய) சிறுத்த துளியைப்போலே இடம் கொண்ட,Idam konda - பெருமை கொண்டுள்ள செவ்வாய்,Sevvaai - தனது சிவந்த வாயினின்றும் ஊறிஊறி,Oori oori - (ஜலமானது) இடைவிடாமற் சுரந்து இற்று இற்று வீழநின்று,Itru itru veezha nindru - (நடுவே) முறிந்து முறிந்து கீழே விழும்படி நின்று -, கடும் சே,Kadum se - கொடிய ரிஷபத்தின் கழுத்தில்,Kazhuthil - கழுத்திலே கட்டப்பட்டுள்ள மணி,Mani - மணியினுடைய குரல் போல்,Kural pol - ஒலிபோலே உடை மணி,Udai mani - (தனது) திருவரையிற் கட்டிய மணி கண கண என,Kana kana ena - கண கண வென்றொலிக்க |
| 93 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 8 | பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய அக்கு வடமிழிந் தேறித் தாழ அணி யல்குல் புடை பெயர மக்க ளுலகினில் பெய்தறியாத மணிக் குழவி யுருவின் தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர்நடை நடவானோ–1-7-8 | கரு,Karu - கருநிறமான சிறு,Siru - சிறிய பாறை,Parai - மலையினுடைய பக்கம் மீது,Pakka meedhu - பக்கத்திலே அருவிகள்,Aruvigal - (மேடுபள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற) நீரருவிகள் பகர்ந்து அனைய,Pakarnthu anaiya - ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற அக்கு வடம்,Akku vadam - (திருவரையிற் சாத்திய) சங்கு மணி வடமானது ஏறி இழிந்து தாழ,Eri izhinthu thaazha - உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும் அணி,Ani - அழகிய அல்குல்,Algul - நிதம்பம் புடை,Pudai - பக்கங்களிலே பெயர,Peyara - அசையவும் உலகினில்,Ulaginil - உலகத்திலுள்ள மக்கள்,Makkal - மனிதர் பெய்து அறியா,Peythu ariya - பெற்றறியாத மணி குழலி உருவி்ன்,Mani kuzhal uruvin - அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும் தக்க மா மணிவண்ணன்,Thakka ma manivannan - தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும் வாசுதேவன்,Vasudevan - வஸுதேவ புத்திரனுமான இவன் தளர் நடை நடவானோ .,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 94 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 9 | வெண் புழுதி மேல் பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின் கருங்கன்றுபோல் தெண் புழுதி யாடித் திரிவிக் கிரமன் சிறு புகர் படவியர்த்து ஒண் போதலர் கமலச் சிறுக் காலுரைத்து ஒன்றும் நோவாமே தண் போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ–1-7-9 | திரிவிக்கிரமன்,Thirivikraman - (தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன் வெள் புழுதி,Vel puzhudi - வெளுத்த புழுதியை மேல் பெய்து கொண்டு,Mel peythu kondu - மேலே போகட்டுக் கொண்டு அளைந்தது,Alaindhathu - அளைந்ததாகிய ஓர் வேழத்தின் கரு கன்று போல்,Or vezhathin karu kanru pol - ஒரு கரிய குட்டியானை போல, தெள் புழுதி,Thel puzhudi - தெளிவான புழுதியிலே ஆடி,Aadi - விளையாடி சிறு புகர் பட,Siru pugar pada - சிறிது காந்தி உண்டாக வேர்த்துப் போய், வியர்த்து,Viyarndhu - வேர்த்துப் போய், போது,Podhu - உரிய காலத்திலே அலர்,Alar - மலர்ந்த ஒள்,Ol - அழகிய கமலம்,Kamalam - தாமரைப் பூவை ஒத்த சிறு கால்,Siru kaal - சிறிய பாதங்கள் உறைத்து,Uraithu - (ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்) ஒன்றும் நோவாமே,Ondrum novamae - சிறிதும் நோவாதபடி தண் போது கொண்ட,Than podhu konda - குளிர்ந்த புஷ்பங்களுடைய தவிசின் மீது,Thavisin meedhu - மெத்தையின் மேலே தளர்நடை நடவானோ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 95 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 10 | திரைநீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண்மால் கேசவன் தன் திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்தெங்கும் புடை பெயர பெருநீர்த் திரை யெழு கங்கை யிலும் பெரியதோர் தீர்த்த பலம் தருநீர் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ–1-7-10 | செம் கண் மால்,Sem kan mal - சிவந்த கண்களையும் கரு நிறத்தையுமுடைய கேசவன்,Kesavan - கேசவனென்னுந் திருநாமமுடைய இவன், திரை நீர்,Thirai neer - அலைகின்ற நீரையுடைய ஸமுத்திரத்தின் நடுவில் சந்திரன் மண்டலம் போல்,Chandiran mandalam pol - (அசைந்து தோன்றுகிற) ப்ரதிபிம்ப சந்த்ர மண்டலத்தைப் போல தன்,Than - தன்னுடைய திரு நீர்,Thiru neer - அழகிய ஒளியை யுடைய முகத்து,Mugathu - திருமுகத்திலே துலங்கு,Thulangu - விளங்குகின்ற சுட்டி,Sutti - சுட்டியானது எங்கும்,Engum - எல்லா விடத்திலும் திழ்ந்து,Thizhnthu - ப்ரகாசித்துக் கொண்டு புடை பெயர்,Pudai peyar - இடமாகவும் வலமாகவும் அசையவும் பெரு நீர்,Peru neer - சிறந்த தீர்த்தமாகிய திரை எழு கங்கையிலும்,Thirai ezhu gangaiyilum - அலை யெறிகிற கங்கையிற் காட்டிலும் பெரியது,Periyathu - அதிகமான ஓர்,Or - ஒப்பற்ற தீர்த்த பலம்,Theertha balam - தீர்த்த பலத்தை தரும்,Tharum - கொடுக்கின்ற நீர்,Neer - ஜலத்தை உடைத்தான சிறு சண்ணம்,Siru sannam - சிறிய சண்ணமானது துள்ளம் சோர்,Thullam sor - துளி துளியாகச் சொட்டவும் தளர்நடை நடவான,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 96 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 11 | ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே–1-7-11 | ஆயர் குலத்தினில் வந்து,Aayar kulaththil vandhu - இடையர் குலத்திலே வந்து தோன்றிய,Thondriya - அவதரித்த அஞ்சனம் வண்ணன்,Anjanam vannan - மை போன்ற கருநிறமுடையனான கண்ணன் தன்னை,Thannai - தன்னை (க்கண்டு) தாயர்,Thaayar - தாய்மார்கள் மகிழ,Magizha - மனமுகக்கவும் ஒன்னார்,Onnar - சத்ருக்கள் தளர,Thalara - வருத்தமடையவும் தளர்நடை நடந்தனை,Thalar nadai nadaththana - தளர்நடை நடந்ததை வேயர்,Veyar - வேயர் குடியிலிருப்பவரெல்லாராலும் புகழ்,Pugazh - புகழப் பெற்ற விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வார் சீரால்,Seeraal - சிறப்பாக விரித்தன,Viridhthana - விவரித்துச் சொன்ன பாசுரங்களை உரைக்க வல்லார்,Uraikka vallaar - சொல்ல வல்லவர்கள் மாயன்,Maayan - ஆச்சர்யமான குணங்கள யுடையவனும் மணி,Mani - நீல மணி போன்ற வண்ணன்,Vannan - நிறமுடையனுமான எம்பெருமானுடைய தாள்,Thaal - திருவடிகளை பணியும்,Paniyum - வணங்க வல்ல மக்களை,Makkalai - பிள்ளைகளை பெறுவார்கள்,Peruvaarhal - அடைவார்கள். |
| 97 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 1 | பொன்னியல் கிண் கிணி சுட்டி புறம்கட்டி தன்னிய லோசை சலஞ்சல னென்றிட மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற் போல் என்னிடைக் கோட்டரா அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோ–1-8-1 | பொன் இயல்,Pon iyal - பொன்னாற்செய்த கிண்கிணி,Kinkini - அரைச் சதங்கை பாதச் சதங்கைகளையும் சுட்டி,Sutti - சுட்டியையும் புறம்,Puram - (அதற்கு உரிய) இடங்களிலே கட்டி,Katti - அணிந்து தன்,Than - சதங்கைக்கு இயல்,Iyal - பொருந்திய இசை,Isai - சப்தமானது சலன் சலன் என்றிட,Salan salan endrida - சலன் சலனென்று ஒலிக்க மின் இயல்,Min iyal - மின்னலோடு பொருந்திய மேகம்,Megam - மேகமானது விரைந்து,Viraindhu - வேகமாக ஓடி வந்து எதிர் வந்தால் போல்,Ethir vanthal pol - எதிரே வந்தாற் போலே என் இடைக்கு ஒட்டரா,En idaiyku ottara - என் இடையிலிருக்க (விரும்பி) ஓடிவந்து அச்சோ அச்சோ,Achcho achcho - (என்னை) அணைத்துக் கொள்ள வேணும் அணைத்துக் கொள்ள வேணும் எம்பெருமான்,Emperuman - எங்களுடைய தலைவனே! வாரா,Vaara - வந்து அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |
| 98 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 2 | செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல் பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப சங்கு வில் வாள் தண்டு சக்கர மேந்திய அங்கைகளாலே வந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவா வந்து அச்சோ வச்சோ–1-8-2 | செங்கமலம்,Sengamalam - செந்தாமரைப் பூவில் தேன் உண்ணும்,Then unnum - தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற வண்டே போல்,Vande pol - வண்டுகளைப் போல பங்கிகள் வந்து,Pangigal vandhu - (உனது) கூந்தல் மயிர்கள் வந்து உன் பவளம் வாய்,Un pavalam vai - பவளம்போற் செந்நிறமான உனது வாயில் மொய்ப்ப,Moippa - மொய்த்துக் கொள்ளும்படி வந்து,Vandhu - ஓடி வந்து சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும் வில்,Vil - ஸ்ரீசார்ங்கத்தையும் வாள்,Val - நந்தகத்தையும் தண்டு,Thandu - கௌமோதகியையும் சக்கரம்,Chakkaram - ஸ்ரீஸூதர்சநாழ்வானையும் ஏந்திய,Enthiya - (பூவேந்தினாற்போல) தரித்துக் கொண்டுள்ள அம் கைகளாலே,Am kaigalale - அழகிய கைகளாலே அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ வந்து,Vandhu - ஓடிவந்து ஆர தழுவா,Ara thazhuvaa - திருப்தி உண்டாகும்படி நன்றாகத் தழுவி அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |
| 99 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 3 | பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ–1-8-3 | பஞ்சவர்,Panjavar - பாண்டவர்களுக்காக தூதன் ஆய்,Thoodhan aay - (துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய் பாரதம்,Paaratham - (அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்) பாரத யுத்தத்தை கை செய்து,Kai seythu - அணி வகுத்துச் செய்து நஞ்சு,Nanju - விஷத்தை உமிழ்,Umizh - கக்குகின்ற நாகம்,Naagam - (கானிய) ஸர்ப்பம் கிடந்த,Kidandha - இருந்த நல் பொய்கை,Nal poigai - கொடிய மடுவிலே புக்கு,Pukku - புகுந்து அஞ்சு,Anju - (ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி பணத்தின் மேல்,Panathin mel - (அப்பாம்பின்) படத்திலே பாய்ந்திட்டு,Paindhittu - குதித்து அருள்செய்த,Arulseytha - (நடமாடி அக்காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க) (அப்பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;,Anjanam vannane Achcho achcho - அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-; ஆயர்,Aayar - இடையர்களுக்கு பெருமானே,Perumane - தலைவனானவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |
| 100 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 4 | நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன தேறி அவளும் திரு வுடம்பில் பூச ஊறிய கூனினை உள்ளே யொடுங்க அன்று ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோ வச்சோ–1-8-4 | நாறிய,Naariya - ‘நல்ல வாசனை வீசுகின்ற சாந்தம்,Santham - சந்தனத்தை நமக்கு,Namakku - எங்களுக்கு இறை,Irai - கொஞ்சம் நல்கு என்ன,Nalku enna - கொடு என்று (நீ) கூனியைக் கேட்க அவளும்,Avalum - அந்தக் கூனியும் (‘இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்) தேறி,Theri - மனம் தெளிந்து திரு உடம்பில்,Thiru udambil - (உனது) திருமேனியிலே பூச,Poosa - சாத்த ஊறிய,Ooriya - வெகுநாளாயிருக்கிற கூனினை,Kooninai - (அவளுடைய) கூனை உள்ளே,Ulle - (அவள்) சரீரத்திற்குள்ளே ஒடுங்க,Odunga - அடங்கும்படி அன்று,Andru - அக் காலத்திலே ஏற,Era - நிமிர்த்து உருவினாய்,Uruvinai - உருவினவனே! அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.,Emperumaan! vandhu achcho achcho - எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ. |
| 101 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 5 | கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழியங் கையனே அச்சோ வச்சோ–1-8-5 | கழல்,Kalal - வீரக் கழலை யணிந்த மன்னர்,Mannar - ராஜாக்கள் சூழ,Sool - தன்னைச் சுற்றியிருக்க (அவர்கள் நடுவில்) கதிர்போல்,Kathirpol - ஸூரியன்போல விளங்கி,Vilangi - ப்ரகாசமாயிருந்து (‘கண்ணனுக்கு எழுந்திருத்தல் குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலிய மர்யாதை எழல் உற்று,Ezhal utru - (ஒன்றும் செய்யக்கூடாது’ என்று கட்டளையிட்டிருந்த தானே தனக்கும் தெரியாமல்)(முதலில்) எழுந்திருந்து மீண்டு,Meendu - மறுபடியும் இருந்து,Irundhu - (தானெழுந்தது தெரியாதபடி) உட்கார்ந்து கொண்டு உன்னை,Unnai - உன்னை நோக்கும்,Nokkum - (பொய்யாஸநமிடுதல் முதலியவற்றால் கொல்வதாகப்) பார்த்த பெரிது கழலை உடை,Perithu kalalai udai - மிகவும் (வஞ்சனையான) ஆலோசனையை யுடைய துச்சோதனனை,Thuchchodhananai - துர்யோதநினை (திருவுள்ளத்திலுள்ள சீற்றமெல்லாம் பார்வையிலே தோன்றும்படி) அழல விழித்தானே,Azhal vizhiththane - உஷ்ணமாகப் பார்த்தவனே! அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை அம் கையனே,Am kaiyane - அழகிய கையிலேந்தியவனே! அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-; |
| 102 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 6 | போரொக்கப் பண்ணி இப் பூமிப் பொறை தீர்ப்பான் தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய் காரொக்கும் மேனிக் கரும் பெருங் கண்ணனே ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ–1-8-6 | இ பூமி, E poomi - இந்தப் பூமியினுடைய பொறை,Porai - பாரத்தை தீர்ப்பான்,Theerppan - தீர்ப்பதற்காக போர்,Por - யுத்தத்தை ஒக்க,Okka - (துர்யோதநாதிகளோடு) ஸமமாக பண்ணி,Panni - செய்து செழு,Sezhu - செழுமைதாங்கிய தார்,Thar - மாலையை யுடைய விசயற்கு ஆய்,Vijayarku aay - அர்ஜுநனுக்காக தேர்,Ther - (அவனுடைய) தேரை ஒக்க,Okka - (எதிரிகள் தேர் பலவற்றிற்கும் இது ஒன்றுமே) ஸமமாம்படி ஊர்ந்தாய்,Oorndhai - பாகனாய்ச் செலுத்தினவனே! கார் ஒக்கும்,Kaar okkum - மேகத்தோடு ஒத்த மேனி,Meni - திருமேனியில் கரும்பெருங் கண்ணனே,Karumperum kannane - கரியவாகிப் புடைபரந்து கண்களையுடையவனே! வந்து,Vandhu - ஓடிவந்து ஆர,Aara - நின்றாக தழுவா,Thazhuvaa - தழுவிக்கொண்டு அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு (அடங்கி நற்கின்ற) போர் ஏறே,Por ere - போர் செய்யுந் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே! அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-; |
| 103 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 7 | மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கது அன்று என்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்சோ வச்சோ சங்க மிடத்தானே அச்சோ வச்சோ–1-8-7 | மிக்க பெரும்புகழ்,Mikka perumpugazh - (ஔதார்யத்தால்) மிகுந்த கீர்த்தியை யுடைய மா வலி,Maa vali - மஹாபலி (செய்த) வேள்வியில்,Velviyil - யாகத்திலே (வாமநனாய்ச் சென்ற உனககு அந்த மஹாபலி நீ கேட்டதைக் கொöடுக்க முயன்ற வளவிலே) இது,Ithu - நீ கொடுக்கிற விது தக்கது அன்று,Thakkathu andru - தகுதியானதன்று’ என்று,Endru - என்று முறையிட்டு தானம்,Thaanam - பூமி தானத்தை (அவன் தத்தம் பண்ணும் போது நீர் விழ வொட்டாமல்) விலக்கிய,Vilakkiya - தடுத்த சுக்கிரன்,Sukiran - சுக்கிராச்சாரியனுடைய கண்ணை,Kannai - ஒரு கண்ணை துரும்பால்,Thurumpaal - (உன் கையிலணிந்திருந்த) தர்ப்ப பவித்ரத்தின் நுனியால் கிளறிய,Kilarriya - கலக்கின சக்கரம் கையனே,Chakkaram kaiyane - சக்ராயுதமேந்திய கையை யுடையவனே! அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; சங்கம்,Sangam - பாஞ்ச ஜன்யத்தை இடத்தானே,Idaththane - இடக்கையிலேந்தினவனே! அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-; |
| 104 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 8 | என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ–1-8-8 | இது,Ithu - (வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து அளக்கப் புகும் போது அது கண்ட மஹாபலி புத்ரனான நமுசி ஓடிவந்து) (யாசிக்கும் போதிருந்த வடிவம் மாறி யளக்கிற) இது என் மாயம்,En maayam - என்ன மாயச் செய்கை!; என் அப்பன்,En appan - என் தகப்பன் அறிந்திலன்,Arinthilan - (நீ செய்யும் இந்தமாயத்தை) அறியவில்லை முன்னைய வண்ணமே கொண்டு,Munnaiya vanname kondu - நீ யாசிக்க வந்த போதிருந்த வடிவத்தையே கொண்டு அளவாய்,Alavaay - அளப்பாயாக என்ன,Enna - என்று சொல்ல மன்னு,Mannu - (இப்படி) பிடிவாதமாய் நின்ற நமுசியை,Namusiyai - (அந்த) நமுசி யென்பவனை வானில்,Vaanil - ஆகாசத்திலே சுழற்றிய,Suzharriya - சுழலச் செய்த மின்னு முடியனே,Minnu mudiyane - விளங்குகின்ற கிரீடத்தை யுடையவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ-; வேங்கடம்,Vengadam - திருமலையிலே வாணனே,Vaanane - வாழுமவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |
| 105 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 9 | கண்ட கடலும் மலையும் உலகேழும் முண்டத்துக் காற்றா முகில் வண்ணா ஓ ஒ வென்று இண்டைச் சடை முடி ஈசன் இரக்கொள்ள மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ–1-8-9 | கண்ட,Kanda - கண்ணாற்கண்ட கடலும்,Kadalum - ஸமுத்ரங்களும் மலையும்,Malayum - மலைகளும் உலகு ஏழும்,Ulaku ezhum - கீழ் ஏழ் மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்களும் (ஆகிய எல்லாவற்றையுமிட்டு நிறைக்கப் பார்த்தாலும்) முண்டத்துக்கு,Mundaththukku - (என் கையிலிருக்கிற ப்ரஹ்ம) கபாலத்துக்கு ஆற்றா,Aatraa - போதாவாம்; முகில் வண்ணா,Mugil vanna - மேக வண்ணனே! ஓஒ!,Ooo - ஓஒ! (ஹாஹா!) என்று,Endru - என்று கூப்பிட்டு இண்டை,Indai - நெருங்கின சடை முடி,Sadai mudi - ஜடா பந்தத்தை யுடைய ஈசன்,Eesan - சிவன் இரக்கொள்ள,Irakkolla - பிச்சை யெடுக்க மண்டை,Mandai - (அவன் கையிலிருந்த ப்ரஹ்ம) கபாலத்தை நிறைத்தானே,Niraiththane - (மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால்) நிறையச் செய்தவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ மார்வில்,Maarvil - திரு மார்பிலே மறுவனே,Maruvane - ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை யுடையவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |
| 106 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 10 | துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்ன மதானானே அச்சோ வச்சோ அரு மறை தந்தானே அச்சோ வச்சோ-1-8-10 | மன்னிய,Manniya - நித்ய ஸித்தமான நால் மறை,Naal marai - சதுர் வேதங்களும் முற்றும்,Mutrum - முழுவதும் மறைந்திட,Maraindhida - மறைந்து விட (அதனால்) அன்னிய,Anniya - நெருங்கிய பேர் இருள்,Per irul - பெரிய அஜ்ஞாநாந்தகாரம் சூழ்ந்து,Soozhndhu - பரவி உலகை,Ulakai - லோகங்களை மூட,Mooda - மறைத்துக் கொள்ள பின்,Pin - பின்பு உலகினில்,Ulakinil - இந்த லோகங்களில் பேர் இருள்,Per irul - (அந்த) மிகுந்த அஜ்ஞாகாந்தகாரமானது நீங்க,Neenga - நீங்கும்படி என்று,Endru - அக் காலத்தில் அன்னம் அது ஆனானே,Annam adhu aanane - ஹம்ஸமாய் அவதரித்தவனே! அரு மறை தந்தானே,Aru marai thanthane - (அந்த ரூபத்தோடு) அருமையான வேதங்களை உபகரித்தவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |
| 107 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 11 | நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருக வென்று ஆய்ச்சி யுரைத்தன மச்சணி மாடப் புதுவை கோன் பட்டன் சொல் நச்சலும் பாடுவார் நீள் விசும்பாள்வரே–1-8-11 | நச்சுவார் முன்,Nachchuvaar mun - (தன்னை) விரும்பிப்ப பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே நிற்கும்,Nirkum - வந்து நிற்குந் தன்மையுள்ள நாராயணன் தன்னை,Narayanan thannai - நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை ஆய்ச்சி,Aaychchi - இடைக் குலத்தவளான யசோதை அச்சோ வருக என்று உரைத்தன,Achcho varuga endru uraiththana - (அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி) ‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை மச்சு அணி,Machchu ani - பல நிலைகளால் அழகிய மாடம்,Maadam - மாளிகைகளை யுடைய புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattan - பெரியாழ்வார் சொல்,Sol - சொன்ன இப் பத்துப் பாசுரங்களையும் பாடுவார்,Paaduvaar - பாடுபவர்கள் நிச்சலும்,Nichchalum - எப்போதும் நீள் விசும்பு,Neel visumbu - பரமாகாசமாகிற பரமபதத்திற்கு ஆள்வர்,Aalvar - நிர்வாஹகராவர். |
| 108 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 1 | வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல் சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க என் குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான்–1-9-1 | என் குட்டன்,En kutthan - என் பிள்ளை வட்டு நடுவே,Vattu naduve - (இரண்டு நீலரத்ந) வட்டுகளின் நிடுவே வளர்கின்ற,Valarkindra - வளர்த்துக் கொண்டிருப்பதான மாணிக்கம் மொட்டு,Manikkam mottu - இந்திர நீலமயமான அரும்பினுடைய நுனையில்,Nunaiyil - நுனியில் முளைக்கின்ற,Mulaikkindra - உண்டாகின்ற முத்தே போல்,Mutthe pol - முத்தைப் போல சொட்டு சொட்டு என்ன,Sottu sottu enna - சொட்டுச் சொட்டென்ற ஓசை யுண்டாகும்படி துளிர்க்க துளிர்க்க,Thulirkkal thulirkkal - (அம்மாணிக்க மொட்டு) பல தரம் துளியா நிற்க வந்து,Vandhu - ஓடி வந்து என்னை,Ennai - என்னுடைய புறம்,Puram - முதுகை புல்குவான்,Pulkuvan - கட்டிக் கொள்வான்; கோவிந்தன் என்னை புறம்புல்குவான்,Govindan ennai purampulkuvan - கோவிந்தன் என்னை புறம்புல்குவான் |
| 109 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 2 | கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில் கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர் கட்டி தன் கணத் தாலே சதிரா நடந்து வந்து என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்-1-9-2 | என் கண்ணன்,En kannan - என் கண்ணபிரான் கிண்கிணி,Kinkini - அரைச் சதங்கையை கட்டி,Katti - கட்டிக் கொண்டும் கிறி,Kiri - சிறுப் பவள வடத்தை கையினிலே,Kaiyinilae - கையிலே கட்டி,Katti - கட்டிக் கொண்டும் கங்கணம்,Kanganam - தோள் வளையை இட்டு,Ittu - (தோள்களில்) சாத்திக் கொண்டும் கழுத்தில்,Kazhuththil - திருக் கழுத்திலே தொடர்,Thodhar - சங்கிலியை கட்டி,Katti - அணிந்து கொண்டும் தம் கணத்தாலே,Tham kanaththale - (இன்னுமணிந்து கொண்டுள்ள) திருவாபரணங்களின் திரளோடுங்கூட சதிர் ஆ நடந்து வந்து,Sathir aa nadandhu vandhu - அழகாக நடந்து வந்து என்னை புறம் புல்குவான்-;,Ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் |
| 110 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 3 | கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம் ஒத்துப் பொருந்திக் கொண்டு உண்ணாது மண்ணாள்வான் கொத்துத் தலைவன் குடி கெடத் தோன்றிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்களேறு என் புறம் புல்குவான்–1-9-3 | கத்தக் கதித்து கிடந்த,Kattak kathiththu kidantha - மிகவும் கொழுத்து (உனக்கு எனக்கென்று பிணங்கும்படி) இருந்த பெருஞ்செல்வம்,Perunchelvan - மிகுந்த ஐச்வர்யத்தை ஒத்து,Othu - (தன் பந்துக்களான பாண்டவர்களோடு) ஒத்து பொருந்திக் கொண்டு,Porundhik kondu - மனம் பொருந்தி யிருக்க உண்ணாது,Unnaadhu - அநுபவியாமல் மண்,Man - பூமியை ஆள்வான்,Azhvaan - (தான் அத்விதீயனாய்) ஆள வேணுமென்று நினைத்தவனான கொத்து தலைவன்,Kothu thalaivan - (தம்பிமார்களும் பந்துக்களும் ஸேனைகளுமாகிய) திரளுக்குத் தலைவனாகிய துர்யோதநன் குடி கெட,Kudi keda - (தன்) குடும்பத்தோடு பாழாம்படி தோன்றிய,Thonriya - திருவவதரித்த அத்தன்,Atthan - ஸ்வாமி வந்து என்னை புறம் புல்குவான்-;,Vandhu ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் ஆயர்கள் ஏறு,Aayarkal aaru - இடையர்களுக்குள் சிறந்த கண்ண பிரான் என் புறம் புல்குவான்-.,En puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் |
| 111 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 4 | நாந்தக மேந்திய நம்பி சரணென்று தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில் வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-4 | நாந்தகம்,Nanthagam - நந்தகம் என்னும் வாளை ஏந்திய,Aendhiya - கையிலணிந்துள்ள நம்பி,Nambi - பெரியோனே! சரண்,Saran - (நீ எனக்கு) ரக்ஷகன் என்று,Endru - என்று சொல்லி தாழ்ந்த,Thaazhntha - (தன்னை) வணங்கிய தனஞ்சயற்கு ஆகி,Thananjayarku aagi - அர்ஜுநனுக்குப் பக்ஷபாதி யாயிருந்து தரணியில்,Tharaniyil-ib bhoomiyile - இப் பூமியிலே வேந்தர்கள்,Vendarhal - (எதிரிகளான) ராஜாக்கள் உட்க,Utka - அஞ்சிக் கலங்கும்படி விசயன்,Vichayan-anda Arjunanathu - அந்த அர்ஜுநனது மணி திண் தேர்,Mani thin ther - அழகிய வலிய தேரை ஊர்ந்தவன்,Oornthavan - (ஸாரதியாயிருந்து) செலுத்தின இவன் என்னை புறம்புல்குவான்-;,Ennai purampulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் உம்பர்,Umbar - நித்ய ஸூரிகளுக்கு கோன்,Kon - நிர்வாஹகனான இவன் என்னை புறம் புல்குவான்,Ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் |
| 112 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 5 | வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி கண் பல செய்த கருந்தழைக் காவின் கீழ் பண்பல பாடிப்பல்லாண் டிசைப்ப பண்டு மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமனன் என்னைப் புறம் புல்குவான்–1-9-5 | பண்டு,Pandu - முன்னொரு காலத்திலே வெண்கலம் பத்திரம்,Venkalam paththiram - வெண்கலத்தினாற் செய்த பத்திரத்தை கட்டி,Katti - (அரையிற்) கட்டிக் கொண்டு விளையாடி,Vilaiyaadi - விளையாடி பல கண் செய்த,Pala kan seitha - பல பீலிக் கண்களைக் கொண்டு செய்யப்பட்ட கரு தழை,Karu thazhai - பெரிய குடையாகிற காவின் கீழ்,Kaavin keezh - சோலையின் கீழேயிருந்து (மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று) பல பண் பாடி,Pala pan paadi - (அநுகூலரானவர்கள்) பலவித ராகங்களைப் பாடிக் கொண்டு பல்லாண்டு இசைப்ப,Pallandu isaippa - மங்களாசாஸநம் செய்ய பல மண் கொண்டான்,Pala man kondaan - பல (ஸகலமான) லோகங்களையுமளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன் புறம் புல்குவான்,Puram pulkuvan - வாமனன் என்னை புறம் புல்குவான் |
| 113 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 6 | சத்திர மேந்தித் தனி யொரு மாணியாய் உத்தர வேதியில் நின்ற ஒருவனை கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட பத்திராகாரன் புறம் புல்குவான் பாரளந்தான் என் புறம் புல்குவான்–1-9-6 | உத்தர வேதியில் நின்ற,Uththara vethiyil ninra - உத்தர வேதியிலிருந்த ஒருவனை,Oruvanai - (ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே சத்திரம்,Saththiram - குடையை ஏந்தி,Aendi - (கையில்) பிடித்துக் கொண்டு தனி,Thani - ஒப்பற்ற ஒரு மாணி ஆய்,Oru maani aayi - ஒரு ப்ரஹ்மசாரி வாமகனாய் (போய்) கத்திரியர்,Kaththiriyar - (அவனுக்குக் கீழ்ப்பட்ட) க்ஷத்ரியர்கள் காண,Kaana - பார்த்துக் கொண்டிருக்கையில் காணி முற்றும்,Kaana muṟṟum - உலகம் முழுவதையும் கொண்ட,Konda - (நீரேற்றளந்து) தன்னதாக்கிக் கொண்ட பத்திரம்,Paththiram - விலக்ஷணமான ஆகாரன்,Aakaaran - வடிவை யுடையனான இவன் புறம் புல்குவான்-;,Puram pulkuvan - புறம் புல்குவான்-; பார்,Paar - பூமியை அளந்தான்,Alandhaan - (திரிவிக்கிரமனாய்) அளந்த இவன் என் புறம் புல்குவான்-.,En puram pulkuvan - என் புறம் புல்குவான்-. |
| 114 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 7 | பொத்த வுரலைக் கவிழ்த்து அதன் மேலேறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறார விழுங்கிய அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்–1-9-7 | பொத்த உரலை,Potta uralai - (அடியில்) ஓட்டையாய் விட்டதொரு உரலை (கொண்டு வந்து) கவிழ்த்து,Kavizhththu - தலை கவிழ்த்துப் போட்டு அதன் மேல் ஏறி,Adhan mel aeri - அவ் வுரவின் மேலேறி தடாவினில்,Thadavinil - மிடாக்களிலே உள்ள தித்தித்த பாலும்,Thiththitha paalum - மதுரமான பாலையும் வெண்ணெயும்,Vennaiyum - வெண்ணெயையும் திரு வயிறு ஆர்,Thiru vayiru aar - வயிறு நிரம்ப மெத்த விழுங்கிய,Meththa vizhunkiya - மிகுதியாக விழுங்கின அத்தன்,Atthan - தலைவன் வந்து என்னை புறம் புல்குவான்-;,Vandhu ennai puram pulkuvan - வந்து என்னை புறம் புல்குவான்-; ஆழியான்,Aazhiyaan - (இப்படிக் களவு கண்டு உண்கையில்) ஆழ்ந்து தேறியவன் என்னை புறம் புல்குவான்-.,Ennai puram pulkuvan - என்னை புறம் புல்குவான்-. |
| 115 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 8 | மூத்தவை காண முது மணற் குன்றேறி கூத்து உவந்தாடிக் குழலால் இசை பாடி வாய்த்த மறையோர் வணங்க இமையவர் ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்–1-9-8 | மூத்தவை,Moothavai - வயசு சென்ற இடைச் சனங்கள் காண,Kaana - காணும் படியாக முது மணல் குன்று ஏறி,Mudhu manal kunru aeri - நெடுநாளாய் குவிந்து மேடாயிருந்த மணற்குன்றின் வாய்த்த,Vaayththa - தன்னுடைய சேஷ்டிதத்தைக் காணும்படி கிட்டின மறையோர்,Maraiyor - ப்ரஹ்ம ரிஷிகள் வணங்க,Vananga - தன்னைக் கண்டு வணங்கவும் இமையவர்,Imaiavar - தேவர்கள் ஏத்த,Aetha - ஸ்தோத்ரஞ்செய்யவும் குழலால் இசைபாடி,Kuzhalal isaipaadi - வேய்ங்குழலினால் ராகம் பாடிக் கொண்டும் உவந்து,Uvandu - ஸந்தோஷித்து கூத்து ஆடி,Koothu aadi - கூத்தாடியும் நின்று வந்து என்னை புறம்புல்குவான்-;,Vandhu ennai purampulkuvan - வந்து என்னை புறம்புல்குவான்-; எம்பிரான் என்னை புறம்புல்குமான்-,Emperaan ennai purampulkumaan - வந்து என்னை புறம்புல்குவான்-; |
| 116 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 9 | கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-9 | இந்திரன் காலினில்,Indhiran kaalinil - இந்த்ரனுடைய உத்யாநவநத்திலிருந்த கற்பகம் காவு,Karphakam kaavu - கற்பகச் சோலையை கருதிய,Karuthiya - (தன் வீட்டிற் கொண்டு வைக்க வேணுமென்று) விரும்பிய காதலிக்கு,Kaathalikkum - தனக்கு ப்ரியையான ஸத்யபாமைப் பிராட்டிக்கு இப்பொழுது,Ippozhudhu - இப்பொழுதே ஈவன்,Eevan - கொணர்ந்து தருவேன் என்று,Endru - என்று சொல்லி நிலா திகழ்,Nila thigazh - நிலா விளங்குகின்ற முற்றத்துள்,Mutraththul - அவள் வீட்டு முற்றத்தில் நிற்பன செய்து,Nirpan seyththu - இருப்பனவாகச் செய்து உய்த்தவன் என்னை,Uythanavan ennai - தழைக்கும்படி செய்தவன் என்னை புறம்புல்குவான்-;,Ennai purampulkuvan - என்னை புறம்புல்குவான்-; உம்பர் கோன்,Umbar kon - (அன்று தன் பராக்ரமத்தை காட்டிய) தேவாதி தேவன் என்னை புறம்புல்குவான்-.,Ennai purampulkuvan - என்னை புறம்புல்குவான்-; |
| 117 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (பெரியாழ்வார் தாம் அநுபவித்து ஸந்தோஷித்து உலகத்தார்க்கு உபகரித்த தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள் மங்களாசாஸநத்தில் விருப்பம் பொருந்தி நல்ல புத்திரர்களை அடைந்து ஆநந்திப்பர்கள்) 10 | ஆய்ச்சி யன்றாழிப் பிரான் புறம் புல்கிய வேய்த் தடந் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர் வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே–1-9-10 | வேய்,Vey - மூங்கில் போன்ற தடந்,Tadan - பெரிய தோளி,Tholi - தோள்களை யுடையனான ஆய்ச்சி,Aaychi - யசோதை யானவன் ஆழிப் பிரான்,Aazhi piran - சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன் அன்று,Andru - அக் காலத்திலே புறம் புல்கிய,Puram pulgiya - புறம் புல்குவதைக் கூறிய சொல்,Sol - சொல்லை விட்டு சித்தன்,Vittu chiththan - பெரியாழ்வார் மகிழ்ந்து,Magizhndhu - (தாம் அநுபவித்து) ஸந்தோஷித்து ஈந்த,Eintha - (உலகத்தார்க்கு) உபகரித்த தமிழ் இவை ஈர் ஐந்தும்,Tamil ivai eer aindhum - தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும் வல்லவர்,Vallavar - ஓத வல்லவர்கள் வாய்த்த,Vaaytha - (மங்களாசாஸநத்தில் விருப்பம்) பொருந்தி நல் மக்களை,Nal makkalai - நல்ல புத்திரர்களை பெற்று,Petru - அடைந்து மகிழ்வர்,Magizhvar - ஆநந்திப்பர்கள். |
| 118 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 1 | மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-1 | மெச்ச,Mecha - (அனைவரும்) கொண்டாடும்படி ஊது,Oodu - ஊதுகின்ற சங்கம்,Sangam - பாஞ்சஜந்யத்தை மிடத்தான்,Midathaan - இடக்கையில் ஏந்தியுள்ளவனும் நல்வேய்,Nalvey - நல்ல வேய்ங்குழலை ஊதி,Oodi - ஊதுபவனும் பொய் சூதில்,Poi soodhil - க்ருத்ரிமமான சூதிலே தோற்ற,Thotra - (தம்முடைய சொத்துக்களை யெல்லாம்) இழந்தவர்களாய் பொறை உடை,Porai udai - பொறுமைசாலிகளான மன்னர்க்கு,Mannarkku - பாண்டவர்கட்கு ஆய்,Aay - (தான் எல்லாவகைத்) துணையுமாயிருந்து பத்து ஊர்,Pathu oor - (துர்யோதநாதிகளிடத்துத் தூது போய்க் கேட்டுப் பார்த்தும் அவர்களிடத்தினின்றும்) ஊரையும் பெறாது,Peraadhu - அடைய முடியாமல் அன்று,Andru - அக் காலத்திலே பாரதம்,Baaratham - பாரத யுத்தத்தை கை செய்த,Kai seitha - அணி வகுத்துச் செய்து அ தூதன்,A thoodhan - அந்தப் பாண்டவ தூதனான கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்,Appoochi kaattuginraan - அப்படிப்பட்ட (மிகவும் பயங்கரமான) பூச்சி காட்டுகின்றான்; அம்மனே,Ammaney - அம்மா! அப்பூச்சி காட்டுகின்றான்-.,Appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |
| 119 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 2 | மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன் சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-2 | மலை புரை,Malai purai - மலையை ஒத்த தோள்,Thol - தோள்களை யுடைய மன்னவர்,Mannavar - அரசர்களான மாரதரும்,Maaratharum - மஹா ரதரும் மற்றும் பலரும்,Matrum palarum - மற்றும் பலவகை அரசர்களும் குலைய,Kulaiya - அழியவும் நூற்றுவரும்,Noorruvarum - (துர்யோதநாதிகள்) நூறு பேரும் பட்டு,Pattu - மரணமடைந்து அழிய,Azhiya - உருவமழிந்து போகவும் பார்த்தன்,Paarthan - அர்ஜுனனுடைய சிலை,Silai - (காண்டீவமென்னும்) வில் வளைய,Valaiya - வளையவும் திண் தேர் மேல்,Thin ther mel - (அந்த அர்ஜுனனுடைய) வலிய தேரின் மேல் முன் நின்ற,Mun ninra - (ஸாரதியாய்) முன்புறத்தில் நின்ற செம் கண்,Sem kan - (வாத்ஸல்ய ஸூசகமாகச்) சிவந்த கண்களை யுடையனாய் அல வலை,Ala valai - (அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |
| 120 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 3 | காயும் நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயிங் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-3 | காயும்,Kaayum - (காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற நீர்,Neer - மடுவின் ஜலத்திலே புக்கு,Pukku - புகுந்து (கலக்கி) (அம் மடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து) கடம்பு ஏறி,Kadambu eri - (அம் மடுவின் கரையிலிருந்த) கடம்ப மரத்தின் மேலேறி காளியன்,Kaaliyan - அந்தக் காளியனுடைய தீய பணத்தில்,Theeya panathil - கொடிய படத்திலே சிலம்பு ஆர்க்க,Silambu aarka - (தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த) சிலம்பு சப்திக்கும்படி பாய்ந்து,Paayndhu - குதித்து ஆடி,Aadi - கூத்தாடி வேயின் குழல் ஊதி,Veyin kuzhal oodi - (இச்செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ) மூங்கினாலானாகிய குழலை ஊதி வித்தகன் ஆய் நின்ற,Vithagan aay ninra - (இப்படி) விஸ்மயரீயனாயிருந்த ஆயன்,Aayan - கண்ணபிரான் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |
| 121 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 4 | இருட்டில் பிறந்து போய் ஏழை வல் லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து வஞ்சகன் மாளப் புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-4- | இருட்டில்,Iruttil - இருள் நிறைந்த நடு நிசியில் பிறந்த,Pirandha - (மதுரையிலே) தேவகீ புத்ரனாகத் தோன்றி போய்,Poi - (அங்கு நின்றும் அப்போதே ஆய்ப் பாடிக்குப்) போய் ஏழை,Ezhai - அவிவேகிகளான வல்,Val - (தன்னைப் பற்றி யிருக்கும்) மன வலிமையை யுடைய ஆயர்,Aayar - இடையர்களின் மருட்டை,Maruttai - (கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக் கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற) மருள் வார்த்தைகளை தவிர்ப்பித்து,Thavirppithu - போக்கினவனாயும் வல் கஞ்சன்,Val kanjan - கொடிய கம்ஸன் மாள,Maala - மாண்டு போம்படி புரட்டி,Puratti - (அவனை மயிரைப் பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப்) புரட்டினவனாயும் அ நாள்,A naal - (நாங்கள் யமுனையில் நீராடிய) அக் காலத்திலே எங்கள்,Engal - எங்களுடைய பூ பட்டு,Poo pattu - அழகிய பட்டுப் புடவைகளை கொண்ட,Konda - வாரிக் கொண்டு போன அரட்டன்,Arattan - தீம்பனாயுமுள்ள கண்ணன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |
| 122 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 5 | சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்க அன்று ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-5- | சேபூண்ட,Seboonda - எருதுகள் கட்டுதற்கு உரிய சாடு,Sadu - சகடம் சிதறி,Sithari - (அஸுராவேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலே தன் திருவடியைத் தூக்கி அச் சகடத்தை) உருக்குலையும்படி உதைத்து நெய்க்கு,Neikku - நெய்க்கு ஆசைப்பட்டு திருடி,Thirudi - களவு செய்து ஆப்பூண்டு,Aboonda - (உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு (அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க) நந்தன் மனைவி,Nandan manaivi - நந்தகோபன் தேவியான அவ் யசோதை கடை தாம்பால்,Kadai thambal - (தயிரைக்) கடையும் தாம்பாலே (அடிக்க) துள்ளித் துடிக்க,Thullith thudikka - துடிக்க துடிக்க சோப்பூண்டு,Soboonda - அள்ளி மிகவும் துடிக்கும் படி அடியுண்டு அன்று,Andru - (அதனோடு நல்லாமல்) அக்காலத்தில் ஆப்பூண்டாள்,Aboondal - (எங்கும் சலிக்கமுடியாதபடி உரலில்) கட்டுண்டவனுமாகிய கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்,Appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான் |
| 123 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 6 | செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு சொப்படத் தோன்றித் தொறுப்பாடியோம் வைத்த துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-6 | செப்பு,Seppu - ஸ்வர்ண கலசங்கள் போன்ற இள மெல் முலை,Ila mel mulai - இளமையையும் மென்மையையுமுடைய முலைகளையுடைய தேவகி நங்கைக்கு,Devaki nangaiyku - தேவகிப் பிராட்டிக்கு (மகனாக) சொப்பட தோன்றி,Soppada thondri - நன்றாகப் பிறந்து தொறுப்பாடியோம்,Thoruppadiyom - ஆய்ப்பாடியிலுள்ளவர்களா கிய நாங்கள் வைத்த,Vaitha - சேமித்து வைத்த துப்பமும்,Thuppamum - நெய்யையும் பாலும்,Palum - பாலையும் தயிரும்,Thairum - தயிரையும் விழுங்கிய,Vizhungiya - உட்கொண்ட அப்பன்,Appan - ஸ்வாமி (உபகாரகன்) வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான் |
| 124 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 7 | தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ சித்த மனையாள் அசோதை யிளஞ்சிங்கம் கொத்தார் கருங்குழல் கோபால கோளரி அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-7 | தத்து கொண்டாள் கொல் ஓ,Thathu kondal kol o - (இந்தப் பிள்ளையை யசோதை) தத்த புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ! தானே பெற்றாள் கொலோ,Thane petral kolo - (அல்லது) ஸ்வயமாகவே மெய் நொந்து பெற்றெடுத்தாளோ! சித்தம் அனையாள்,Sitham anaiyal - (கண்ணனுடைய) மனக் கருத்தை ஒத்து நடப்பவளாகிய அசோதை,Asothai - யசோதையினுடைய இளஞ்சிங்கம்,Ilanchingam - சிங்கக்குட்டி போன்றவனும் கொத்து ஆர் கருங்குழல்,Kothu ar karunkuzhal - பூங்கொத்துக்களை யணிந்த கரிய கூந்தலை யுடையவனும் கோபாலர் கோன் அரி,Gopalar kon ari - இடையர்கட்கு (அடங்காத) மிடுக்கைக் கொண்ட சிங்கம் போன்றவனுமாகிய அத்தன்,Athan - ஸ்வாமியான இவன் |
| 125 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 8 | கொங்கை வன் கூனி சொற் கொண்டு குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற் கருளிவன் கானடை அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-8 | கொங்கை,Kongai - (முதுகில்) முலையெழும்பினாற் போன்ற வல்,Val - பலிஷ்டமான கூனி,Kooni - கூனை யுடையளான மந்தரையினுடைய சொல்,Sol - சொல்லை கொண்டு,Kondu - அங்கீகரித்து எங்கும்,Engum - எல்லாவிடங்களிலுமுள்ள குவலயம் துங்கம்,Kuvalayam thungam - இப் பூமியில் (இருப்பவற்றுள்) கரியும்,Kariyum - யானைகளையும் பரியும்,Pariyum - (அங்ஙனொத்த) குதிரைகளையும் இராச்சியமும்,Iraachiyamum - ராஜ்யத்தையும் பரதற்கு,Paratharku - பரதாழ்வானுக்கு அருளி,Aruli - கொடுத்துவிடல் வல் கான் அடை,Val kan adai - கொடிய காட்டை அடைந்த அம் கண்ணன்,Am kannan - அழகிய கண்ணையுடையனான இவன் அப்பூச்சி காட்டுகின்றான்,Appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான் |
| 126 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 9 | பதக முதலை வாய்ப் பட்ட களிறு கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-9 | பதகம்,Padagam - பாதிக்குந் தன்மையை யுடைய முதலை,Mudhalai - முதலையின் வாய்,Vai - வாயிலே பட்ட,Patta - அகப்பட்ட களிறு,Kaliru - ஸ்ரீகஜேந்த்ராழ்வான் கதறி,Kathari - (தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு கை கூப்பி,Kai kooppi - கையைக் குவித்துக் கொண்டு என் கண்ணா கண்ணா என்ன,En kanna kanna enna - என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க அங்கு,Angu - அப்போதே உதவ,Udhava - (அந்த யானைக்கு) உதவும்படி புள் ஊர்ந்து,Pul oorndhu - பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று உறு துயர்,Uru thuyar - (அந்த யானையின்) மிக்க வருத்தத்தை தீர்த்த,Theertha - போக்கின அதகன்,Athagan - (ஆச்ரித ரக்ஷணத்தில்) மிடுக்கை யுடையவன் வந்து,Vandhu - அப்பூச்சி காட்டுகின்றான்-. |
| 127 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 10 | வல்லாளிலங்கை மலங்கச் சரந்துரந்த வில்லாளனை விட்டு சித்தன் விரித்த சொல்லார்ந்த அப் பூச்சிப் பாடல் இவை பத்தும் வல்லார் போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே–2-1-10 | வல்லாள்,Vallal - பலசாலிகளான வீரர்களை யுடைய இலங்கை,Ilangai - லங்கையானது மலங்க,Malanga - பாழாம்படி சரம் துரந்த,Saram thuranda - அம்பைச் செலுத்திய வில் ஆளனை,Vil alanai - வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி விட்டு சித்தன்,Vittu sithan - பெரியாழ்வார் விரித்த,Viritha - பரக்க கூறிய சொல் ஆர்ந்த,Sol arndha - சொல் நிரம்பிய அப் பூச்சி பாடல் இவை பத்தும்,Appuchi paadal ivai pathum - அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும் வல்லார்,Vallar - கற்க வல்லவர் போய்,Poi - (அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய் வைகுந்தம்,Vaikundam - ஸ்ரீவைகுண்டத்திலே மன்னி இருப்பர்,Manni iruppar - நித்ய வாஸம் பண்ணப் பெறுவர். |
| 128 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 1 | அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே இரவுமுண்ணாது உறங்கி நீ போய் இன்றுமுச்சி கொண்டதாலோ வரவும் காணேன் வயிறசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய திரு வுடைய வாய் மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே–2-2-1 | அரவு அணையாய்,Aravu anaiyai - சேஷசாயி யானவனே! ஆயர் ஏறே,Aayar ere - இடையர்களுக்குத் தலைவனே! நீ இரவும் உண்ணாத,Nee iravum unnaadha - நீ (நேற்று) இரவும் முலை உண்ணாமல் உறங்கிப் போனாய்,Urangip ponaai - உறங்கிப் போய் விட இன்றும்,Indrum - இப் போதும் உச்சி கொண்டது,Uchi kondathu - (பொழுது விடிந்து) உச்சிப் போதாய் விட்டது; ஆல்,Aal - ஆதலால் அம்மம் உண்ண,Ammam unna - முலை யுண்பதற்கு துயில் எழாய்,Thuyil ezhai - (தூக்கந்தெளிந்து) படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும்; வரவும் காணேன்,Varavum kaanen - (நீயே எழுந்திருந்து அம்மமுண்ண வேணுமென்று சொல்லி) வருவதையுங் கண்டிலேன்! வயிறு அசைத்தாய்,Vayiru asaithai - (உனக்குப் பசியில்லை யென்போமென்றா) வயிறுந்தளர்ந்து நின்றாய்; வன முலைகள்,Vana mulaigal - (எனது) அழகிய முலைகள் (உன் மேல் அன்பினால் நெறித்து) சோர்ந்து பாய,Sornthu paaya - பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க திரு உடைய,Thiru udaiya - அழகை உடைய வாய் மடுத்து,Vai maduthu - (உன்) வாயை வைத்து திளைத்து,Thilaithu - செருக்கி உதைத்து,Uthaithu - கால்களாலே உதைத்துக் கொண்டு பருகிடாய்,Parugidai - முலையுண்பாய். |
| 129 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 2 | வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம்படாதே முத்தனைய முறுவல் செய்து மூக்குறுஞ்சி முலை யுணாயே–2-2-2 | எம் பிரான்,Em piran - எமது உபகாரகனே! வைத்த நெய்யும்,Vaitha neyyum - உருக்கி வைத்த நெய்யும் காய்ந்த பாலும்,Kaayndha palum - (ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும் வடி தயிரும்,Vadi thayirum - (உள்ள நீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும் நறு வெண்ணெயும்,Naru vennaiyum - மணம் மிக்க வெண்ணெயும் இத்தனையும்,Ithanaiyum - (ஆகிய) இவை யெல்லாவற்றையும் நீ பிறந்த பின்னை,Nee pirandha pinnai - நீ பிறந்த பிறகு பெற்று அறியேன்,Petru ariyen - கண்டதில்லை; எத்தனையும்,Ethanaiyum - (நீ) வேண்டினபடி யெல்லாம் செய்யப் பெற்றாய்,Seyyap petraai - நீ செய்யலாம்; ஏதும் செய்யேன்,Edhum seyyen - (அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்ய மாட்டேன்; கதம் படாதே,Kadham padaadhe - நீ கோபியாதே கொள்; முத்து அனைய முறுவல் செய்து,Muthu anaiya muruval seydhu - முத்தைப் போல் வெண்ணிறமாக மந்தஸ்மிதம் பண்ணி மூக்கு உறிஞ்சி,Mooku urinji - மூக்கை உறிஞ்சிக் கொண்டு முலை உணாய்,Mulai unai - முலை உண்பாயாக. |
| 130 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 3 | தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் வந்து நன் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா உந்தையார் உந் திறத்தரல்லர் உன்னை நானொன் றுரப்ப மாட்டேன் நந்தகோப னணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே–2-2-3 | தம் தம் மக்கள்,Tham tham makkal - தங்கள் தங்கள் பிள்ளைகள் அழுது,Aluthu - அழுது கொண்டு சென்றால்,Sendral - (தம் தம் வீட்டுக்குப்) போனால் தாய்மார் ஆவார்,Thaaymar aavaar - (அக்குழந்தைகளின்) தாய்மார்கள் தரிக்க கில்லார்,Tharikka killar - பொறுக்க மாட்டாதவர்களாய் வந்து,Vandhu - (தம் குழந்தைகளை அழைத்துக்) கொண்டு வந்து நன் மேல் பூசல் செய்ய,Nan mel poosal seiyya - உன் மேல் பிணங்க வாழ வல்ல,Vaazha valla - (அதைக் கண்டு) மகிழ வல்ல வாசு தேவா,Vasu deva - கண்ண பிரானே! உந்தையார்,Unthaiyar - உன் தகப்பனார். உன் திறத்தர் அல்லர்,Un thirathar allar - உன் விஷயத்தைக் கவனிப்பவரல்லர்; நான்,Naan - (அபலையான) நானும் உன்னை,Unnai - (தீம்பில் ..) உன்னை ஒன்று உரப்ப மாட்டேன்,Ondru urappa matten - சிறிதும் அதட்ட வல்லமை யற்றிரா நின்றேன்; நந்த கோபன்,Nanda kopan - (இவையெல்லாங் கிடக்க) நந்த கோபருடைய அணி சிறுவா,Ani siruvaa - அழகிய சிறு பிள்ளாய்! நான் சுரந்த முலை,Naan surandha mulai - எனது பால் சுரந்திருக்கிற முலையை உணாய்,Unai - உண்பாயாக |
| 131 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 4 | கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சகடு கலக்கழிய பஞ்சி யன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடுமென்று அஞ்சினேன் காண் அமரர் கோவே ஆயர் கூட்டத்தள வன்றாலோ கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப் படுத்தாய் முலை யுணாயே–2-2-4 | அமரர் கோவே,Amarar kove - தேவர்களுக்குத் தலைவனே! (நீ) கஞ்சன் தன்னால்,Kanjan thannal - கம்ஸனாலே புணர்க்கப்பட்ட,Punarppatta - (உன்னைக் கொல்வதற்காக) ஏற்படுத்தப் பட்ட கள்ளச் சகடு,Kallas sakadu - க்ருத்ரிம சகடமானது கலக்கு அழிய,Kalakku azhiya - கட்டு (க்குலைந்து உருமாறி) அழிந்து போம்படி பஞ்சி அன்ன மெல் அடியால்,Panji anna mel adiyal - பஞ்சைப் போன்ற ஸூகுமாரமான உன் திருவடிகளினால் பாய்ந்த போது,Paindha pothu - உதைத்த போது நொந்திடும் என்று,Nondhidum endru - (உன் திருவடிகளுக்கு) நோவுண்டாகுமே யென்று அஞ்சினேன் காண்,Anjinen kaan - பயப்பட்டேன் காண்; ஆயர் கூட்டத்து அளவு அன்று ஆல்,Aayar kootathu alavu andru aal - (என்னுடைய அச்சம்) இடையர் திரளினுடைய (அச்சத்தின்) அள்வல்ல காண்; கஞ்சனை,Kanjanai - (உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த) கம்ஸனை உன் வஞ்சனையால்,Un vanjanaiyal - உன்னுடைய வஞ்சனையினாலே வலைப்படுத்தாய்,Valaipaduthai - (உன் கையிற்) சிக்கும்படி செய்து கொன்றவனே! முலை உணாய்.,Mulai unai - முலை உண்பாயாக. |
| 132 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 5 | தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினமுடையன் சோர்வு பார்த்து மாயந் தன்னால் வலைப் படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா தாயர் வாய்ச் சொல் தருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா ஆயர் பாடிக் கணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை யுணாயே–2-2-5 | வாசுதேவா,Vasudeva - கண்ணபிரானே! தீய புந்தி,Theeya bundhi - துஷ்ட புத்தியை யுடைய கஞ்சன்,Kanjan - கம்ஸனானவன் உன் மேல்,Un mel - உன் பக்கலிலே சினம் உடையவன்,Sinam udaiyavan - கோபங்கொண்டவனாயிரா நின்றான்; சோர்வு பார்த்து,Sorvu paarthu - (நீ) தனியாயிருக்கும் ஸமயம் பார்த்து மாயம் தன்னால்,Maayam thannal - வஞ்சனையால் வலைப் படுக்கில்,Valaip padukkil - (உன்னை) அகப்படுத்திக் கொண்டால் வாழகில்லேன்,Vaazha killein - (நான்) பிழைத்திருக்க சக்தை யல்லேன்; தாயர்,Thaayar - தாய்மார்களுடைய வாய் சொல்,Vai sol - வாயினாற் சொல்லுவது கருமம் கண்டாய்,Karumam kandai - அவச்ய கர்த்தவ்ய கார்யமாகும்; சாற்றி சொன்னேன்,Saatri sonnen - வற்புறுத்திச் சொல்லுகிறேன்; போக வேண்டா,Poga venda - (நீ ஓரிடத்திற்கும்) போக வேண்டா; ஆயர் பாடிக்கு,Aayar paadikku - திருவாய்ப்பாடிக்கு அணி விளக்கே,Ani vilakke - மங்களதீபமானவனே! அமர்ந்து வந்து,Amarnthu vandhu - பொருந்தி வந்து என் முலை உணாய்,En mulai unai - முலை உண்பாயாக. |
| 133 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 6 | மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை யெய்துவித்த இருடீகேசா முலை யுணாயே–2-2-6 | மின் அனைய,Min anaiya - மின்னலை யொத்த நுண்,Nun - ஸூக்ஷ்மமான இடையார்,Idaiyar - இடையை யுடைய பெண்களின் விரி குழல் மேல்,Viri kuzhal mel - விரிந்த (பரந்த) கூந்தலின் மேல் நுழைந்த,Nuzhaindha - (தேனை உண்ணப்) புகுந்த வண்டு,Vandu - வண்டுகள் இன் இசைக்கும்,In isaiyum - (தேனை யுண்டு களித்து) இனிதாக ஆளத்தி வைத்துப் பாடா நின்ற வில்லிபுத்தூர்,Villiputhur - ஸ்ரீவில்லிபுத்தூரிலே இனிது,Inidhu - போக்யமாக அமர்ந்தாய்,Amarnthai - எழுந்தருளி யிருப்பவனே! உன்னை கண்டார்,Unnai kandar - உன்னைப் பார்த்தவர் இவனை பெற்ற வயிறு உடையாள்,Ivanai petra vayiru udaiyaal - இவனைப் (பிள்ளையாகப்) பெற்ற வயிற்றை யுடையவள் என்ன நோன்பு நோற்றாள் கொலோ,Enna nonbu notraal kolo - என்ன தபஸ்ஸு பண்ணினாளோ! என்னும்,Ennum - என்று கொண்டாடிச் சொல்லுகிற வார்த்தை,Varthai - வார்த்தையை எய்துவித்த,Eythuvitha - (எனக்கு) உண்டாக்கின இருடீகேசா,Irudheekesa - ஹ்ருஷீகேசனே! முலை உணாய்.,Mulai unai - முலை உண்பாயாக. |
| 134 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 7 | பெண்டிர் வாழ்வார் நன்னொப்பாரைப் பெறுது மென்னு மாசையாலே கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்க நோக்கி வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ண வேண்டி கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே–2-2-7 | கண்டவர்கள்,Kandavargal - (உன்னைப்) பார்த்தவர்களான பெண்டிர் வாழ்வார்,Pendir vaalvar - (தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள் நன் ஒப்பாரை,Nan opparai - உன்னைப் போன்ற குழந்தைகளை பெறுதும்,Peruthum - பெறுவோம் (பெற வேணும்) என்னும்,Ennum - என்கிற ஆசையாலே,Aasaiyale - ஆசையினாலே போக்கு ஒழிந்தார்,Pokku ozhindar - (உன்னை விட்டுப்) போதலைத் தவிர்ந்தார்கள்; வண்டு உலாம்,Vandu ulaam - வண்டுகள் ஸஞ்சரிக்கிற பூ,Poo - புஷ்பங்களை யணிந்த குழலினார்,Kuzhalinar - கூந்தலை யுடையவர்கள் கண் இணையால்,Kan inaiyaal - (தமது) இரண்டு கண்களினாலும் கலக்க நோக்கி,Kalakka nokki - (உனது) திருமேனி முழுவதும் பார்த்து உன்,Un - உன்னுடைய வாய் அமுதம்,Vai amudham - அதராம்ருதத்தை உண்ண வேண்டி,Unna vendi - பாநம் பண்ண ஆசை கொண்டவர்களாய் கொண்டு போவான்,Kondu povaan - (உன்னை) எடுத்துக் கொண்டு போவதற்கு வந்து நன்றார்,Vandhu nandrar - வந்து நிற்கிறார்கள்; கோவிந்தா,Govinda - கோவிந்தனே! நீ முலை உணாய்.,Nee mulai unai - நீ முலை உணாய். |
| 135 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 8 | இருமலை போலெதிர்ந்த மல்லர் இரு வரங்கம் எரி செய்தாய் உன் திருமலிந்து திகழ் மார்வு தேக்க வந்து என்னல்குலேறி ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்துணாயே–2-2-8 | இரு மலை போல்,Iru malai pol - இரண்டு மலை போலே (வந்து) எதிர்ந்த,Ethirntha - எதிர்த்து நின்ற மல்லர் இருவர்,Mallar iruvar - (சாணூர முஷ்டிகரென்னும்) இரண்டு மல்லர்களுடைய அங்கம்,Angam - உடம்பை எரி செய்தாய்,Eri seithai - (பயத்தாலே) எரியும்படி செய்தவனே! வந்து,Vandhu - (நீ) வந்து என் அல்குல் ஏறி,En alkul eri - என் மடிமீது ஏறிக் கொண்டு உன்,Un - உன்னுடைய திரு மலிந்து திகழும் மார்வு,Thiru malindhu thigazhum maarvu - அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது தேக்க,Thekka - (முலைப் பாலால்) நிறையும்படி ஒரு முலையை,Oru mulaiai - ஒரு முலையை வாய் மடுத்து,Vai maduthu - வாயிலே வைத்துக் கொண்டு ஒரு முலையை,Oru mulaiai - மற்றொரு முலையை நெருடிக் கொண்டு,Nerudik kondu - (கையினாலே) நெருடிக் கொண்டிருந்து ஏங்கி ஏங்கி,Engi engi - (மிகுதியாயிருப்பது பற்றிப் பால் வாயிலடங்காமையினால்) இளைத்திளைத்து இரு முலையும்,Iru mulaigal - (இப்படி) இரண்டு முலையையும் முறை முறை ஆய்,Murai murai aai - மாறி மாறி இருந்து,Irundhu - பொருந்தியிருந்து உணாய்,Unai - உண்பாயாக. |
| 136 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 9 | அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினாற்போல் செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம் முற்றத்தூடே அங்கமெல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம அங்கமரர்க் கமுதளித்த அமரர் கோவே முலையுணாயே–2-2-9 | அம்ம,Amma - தலைவனே! அங்கு,Angu - (அஸுரர்கள் கையிலகப்பட்டு இறவாமலிருக்கும்படி தேவர்கள் அம்ருதத்தைப் பெறுதற்கு உன்னை யடைந்த) அக் காலத்திலே விம்ம,Vimm - (அவர்கள் வயிறு) நிரம்பும்படி அமரர்க்கு,Amararkku - (அந்த) தேவர்களுக்கு அமுது அளித்த,Amudhu alitha - (க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த அமரர் கோவே,Amarar kove - தேவாதிராஜனே! அம் கமலம் போது அகத்தில்,Am kamalam podhu agathil - அழகிய தாமரைப் பூவினுள்ளே அணி கொள் முத்தம் சிந்தினால் போல்,Ani kol mutham sindhinal pol - அழகிய முத்துகள் சிந்தியதை ஒத்திருக்கும்படி செம் கமலம் முகம்,Sem kamalam mugam - செந்தாமரை மலர் போன்ற (உனது) முகமானது வியர்ப்ப,Viyarpa - வியர்த்துப் போக இ முற்றத்தூடே,I mutraththude - இந்த முற்றத்திலேயே தீமை செய்து,Theemai seithu - தீம்பைச் செய்து கொண்டு அங்கம் எல்லாம் புழுதி ஆக,Angam ellam puzhudhi aga - உடம்பெல்லாம் புழுதி படியும்படி அளைய வேண்டா,Alaiya venda - புழுதி யளையாதே; முலை உணாய்,Mulai unai - முலை யுண்ண வாராய். |
| 137 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 10 | ஓட வோடக் கிங்கிணிகள் ஒலிக்கு மோசைப் பாணியாலே பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாப னென்றிருந்தேன் ஆடி யாடி யசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தை யாடி ஓடி யோடிப் போய் விடாதே உத்தமா நீ முலையுணாயே–2-2-10 | ஓடஓட,Odaoda - (குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி) பதறி ஓடுவதனால் ஒலிக்கும்,Olikkum - சப்திக்கின்ற கிண் கிணிகள்,Kin kinigal - பாதச் சதங்கைகளினுடைய ஓசைப் பாணியாலே,Osai paaniyale - ஓசையாகிற சப்தத்தால் பாடிப் பாடி,Paadi paadi - இடைவிடாது பாடிக் கொண்டு அதனுக்கு ஏற்ற கூத்தை,Athanukku etra koothai - அப் பாட்டிற்குத் தகுந்த ஆட்டத்தை அசைந்து அசைந்திட்டு,Asaindhu asaindhittu - வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அசைந்து ஆடி ஆடி,Aadi aadi - ஆடிக் கொண்டு வருகின்றாயை,Varugindraiyai - வருகின்ற உன்னை பற்பநாபன் என்று இருந்தேன்,Parpanapan endru irundhen - (வேறோபரணம் வேண்டாதபடி) பத்மத்தை நாபியிலுடையவனென்று எண்ணி யிருந்தேன்; நீ,Nee - நீ ஆடி,Aadi - ஆடிக்கொண்டே ஓடிஓடிபோய் விடாதே,Odi odipoi vidaathe - (என் கைக்கு எட்டாதபடி) ஓடிப் போய் விடாதே முலை உணாய்.,Mulai unai - முலை உணாய். |
| 138 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 11 | வாரணிந்த கொங்கை யாய்ச்சி மாதவா உண் ணென்ற மாற்றம் நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர் பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார் சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே–2-2-11 | வார் அணிந்த,Vaar anintha - கச்சை அணிந்து கொண்டிருக்கிற கொங்கை,Kongai - ஸ்தநங்களையுடைய ஆய்ச்சி,Aaychi - யசோதை மாதவா,Maadhavaa - மாதவனே! உண்,Un - முலையை (உண்பாயாக) என்ற,Endru - என்று (வேண்டிச்) சொன்ன மாற்றம்,Maatram - வார்த்தையைக் குறித்தனவான நீர் அணிந்த குவளை,Neer anintha kuvalai - நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழுநீரின் வாசம்,Vaasam - நல்ல வாசனை நிகழ நாறும்,Nigazha naarum - ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற வில்லிபுத்தூர்,Villiputhur - ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்தவரும் பார் அணிந்த,Paar anintha - பூமி முழுவதும் அழகாகப் பரவிய தொல் புகழான்,Thol pugazhaan - பழமையான கீர்த்தியை யுடையவருமான பட்டர்பிரான்,Pattaripiraan - பெரியாழ்வார் அருளிச் செய்த பாடல்,Paadal - பாசுரங்களை வல்லார்,Vallar - ஓத வல்லவர் சீர் அணிந்த,Seer anintha - குணங்களாலழகிய செம் கண் மால் மேல்,Sem kan maal mel - சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலிடத்தில் சென்ற,Sendra - பதிந்த சிந்தை,Sindhai - மநஸ்ஸை பெறுவர்,Peruvaar - அடைவார்கள் |
| 139 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 1 | போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன் காப்பாரு மில்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி பேய்ப்பால் முலை யுண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த ஆய்ப்பாலர் பெண்டுகளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்–2-3-1 | பாடு உடைய,Paadu Udaiya - பெருமையை உடைய நின் தந்தையும்,Nin Thandaiyum - உன் தகப்பனும் போய்,Poi - (வெளியே) போய் தாழ்த்தான்,Thaazhthaan - (திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்; பொரு திறல்,Poru Thiral - போர் செய்யுந் திறமை யுள்ள கஞ்சன்,Kanjan - கம்ஸனோ கடியன்,Kadiyan - (உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்; கடல்,Kadal - கடல் போன்ற (ச்ரமஹரமான) வண்ணா,Vannaa - வடிவை யுடையவனே! உன்னை,Unnai - உன்னை காப்பாரும்,Kaapaarum - பாதுகாப்பவரான வேறொருவரும் இல்லை,Illai - (இங்கு இப்போது) இல்லை; தனியே போய்,Thaniye Poi - (நீயோவென்றால்) அஸஹாயனாய்ப் போய் எங்கும்,Engum - கண்ட விடங்களிலும் திரிதி,Thirithi - திரியா நன்றாய்; பேய்,Pey - பூதனையினுடைய முலை பால்,Mulai Paal - முலைப்பாலை உண்ட,Unda - உட்கொண்ட பித்தனே,Piththane - மதி மயக்கமுள்ளவனே! கேசவ,Kesava - கேசவனே நம்பி,Nambi - பூர்ணனானவனே! உன்னை காது குத்த,Unnai Kaathu Kutha - உன் காதுகளைக் குத்துவதற்காக ஆய் பாலர்,Aai Paalar - இடைச்சியர்களாகிய பெண்டுகள் எல்லாரும்,Pendumkal Ellarum - எல்லாப் பெண்களும் வந்தார்,Vandhaar - வந்திரா நின்றார்கள்; நான்,Naan - நானும் அடைக்காய்,Adaikkai - (அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை திருத்தி வைத்தேன்,Thiruthi Vaithen - ஆய்ந்து வைத்திருக்கிறேன். |
| 140 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 2 | வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப் பாதக் கிங்கிணி யார்ப்ப நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன் கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா–2-3-2 | நண்ணி தொழுமவர்,Nanni Thozhumavar - கிட்டி வணங்குகின்றவர்களுடைய சிந்தை,Sindhai - மநஸ்ஸில் நின்றும் பிரியாத,Priyaadha - விட்டு நீங்காத நாராயணா,Narayana - நாராயணனே! வண்ணம்,Vannam - (நீ) (மிக்க செந்) நிறத்தையுடைய பவளம்,Pavalam - பவழ வடத்தை மருங்கினில்,Marunginil - திருவரையிலே சாத்தி,Saathi - சாத்திக் கொண்டு மலர்,Malar - தாமரை மலர் போன்ற பாதம்,Paadham - பாதங்களிலணிந்த கிண் கிணி,Kin Kini - சதங்கை ஆர்ப்ப,Aarpa - ஒலிக்கும்படி இங்கே வாராய்,Inge Vaarai - (நீ) இங்கே வாராய் எண்ணற்கு அரிய பிரானே,Ennarukku Ariya Piraane - (உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு) நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே! திரியை,Thiriyai - நூல் திரியை எரியாமே,Eriyaame - எரிச்சலுண்டாகாதபடி காதுக்கு,Kaadhukku - (உன்) காதுகளுக்கு இடுவன்,Iduvan - இடுவேன்; கண்ணுக்கு நின்றும் அழகு உடைய,Kannukku Nindrum Azhagu Udaiya - (அப்படித் திரியையிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான) கண்களுக்கு மிகவும் அழகையுடைய (தர்ச நீயமான) கனகம் கடிப்பும்,Kanagam Kadippum - பொற் கடிப்பும் இவை,Ivai - இவையாகும்; ஆ,Aa - ஆச்சர்யம். |
| 141 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 3 | வையமெல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன் வெய்யவே காதில் திரியை யிடுவன் நீ வேண்டிய தெல்லாம் தருவன் உய்ய இவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடராயர் கொழுந்தே மையன்மை செய்து இள வாய்ச்சிய ருள்ளத்து மாதவனே இங்கே வாராய்–2-3-3 | உய்ய,Uyya - (நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி இ ஆயர் குலத்தினில் தோன்றிய,E Aayar Kulathinil Thondriya - இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த ஒன் சுடர்,On Sudar - மிக்க ஒளியையுடைய ஆயர் கொழுந்தே,Aayar Kozhundhe - இடையர்களின் கொழுந்து போன்றவனே! வையம் எல்லாம் பெறும்,Vaiyam Ellaam Perum - இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய வார் கடல் வாழும் மகரம் குழை,Vaar Kadal Vaazhum Magaram Kuzhai - பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக்குழையை கொண்டு வைத்தேன்,Kondu Vaithen - (உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்; வெய்யவே,Veyyave - (உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு) வெம்மை யுடனிருக்கும் படி காதில் திரியை இடுவன்,Kaadhil Thiriyai Iduvan - (உன்) காதிலே திரியை இடுவேன்; வேண்டியது எல்லாம்,Vendiyathu Ellaam - நீ விரும்பிய பொருள்களை யெல்லாம் தருவன்,Tharuvaan - கொடுப்பேன்; மாதவனே,Madhavane - ச்ரியபதியே! இன ஆய்ச்சியர் உள்ளத்து,Ina Aaychiyar Ullathu - மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸி லே மையன்மை செய்து,Maiyanmai Seidhu - வ்யாமோஹத்தைச் செய்துகொண்டு இங்கே வாராய்:-.,Inge Vaarai - இங்கே வாராய். |
| 142 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 4 | வண நன் றுடைய வயிரக் கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கி குண நன் றுடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய் இணை நின் றழகிய இக் கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து சுண நன் றணி முலை யுண்ணத் தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய்–2-3-4 | இ கோபாலர் பிள்ளைகள், E Gopalar Pillaiyar - இந்த இடைப் பிள்ளைகள் வார் காது,Vaar Kaadhu - (தமது) நீண்ட காதை தாழ பெருக்கி,Thaazha Perukki - (தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி வணம் நின்று உடைய,Vanam Nindru Udaiya - நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய வயிரம் கடிப்பு,Vairam Kadippu - வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை இட்டு,Ittu - அணிந்து கொண்டு நன்று குணம் உடையர்,Nandru Gunam Udaiyar - (இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து) ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்; கோவிந்தா,Govindha - கோவிந்தனே! நீ,Nee - நீயோ வென்றால் சொல்லு,Sollu - (தாயாகிய என்னுடைய) சொல்லை கொள்ளாய்,Kollai - கேட்கிறாயில்லை; இணை,Inai - (இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு) ஒன்றோடொன்றொத்து நன்று அழகிய,Nandru Azhagiya - மிகவு மழகியனவா யிருக்கிற இ கடிப்பு,I Kadippu - இக் கடிப்பை இட்டால்,Ittaal - அணிந்து கொண்டால் நான்,Naan - நான் இனிய பலாப்பழம் தந்து,Iniya Palaappazham Thandhu - தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து சுணம் நின்று அணி முலை,Sunam Nindru Ani Mulai - சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும் உண்ண,Unna - (நீ) பருகும்படி தருவன்,Tharuvaan - கொடுப்பேன்; பிரான்,Piraan - ஸ்வாமியே! சோத்தம்,Soththam - (உனக்கு) ஸ்தோத்ரம்; இங்கே வாராய்.,Inge Vaarai - இங்கே வாராய். |
| 143 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 5 | சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழ லாரொடு நீ போய் கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங் கொண்டிடுவனோ நம்பீ பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட வொட்டில் வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே நீ இங்கே வாராய்–2-3-5 | பிரான்,Piraan - தலைவனே! சோத்தம்,Soththam - உனக்கு ஓரஞ்ஜலி என்று,Endru - என்று சொல்லி இரந்தாலும்,Irandhaalum - (வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும் கொள்ளாய்,Kollai - (நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை; நம்பீ,Nambi - பூர்ணனே! நீ,Nee - நீ சுரி குழலாரொடு,Suri Kuzhalarodhu - சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு போய்,Poi - (ஏகாந்த ஸ்தலத்திலே) போய் கோத்து,Kothu - கை கோத்து குரவை பிணைந்து,Kuravai Pinaindhu - குரவைக் கூத்தாடி இங்கு வந்தால் ;,Ingu Vandhaal - (பின்) இங்கே வந்தால் குணம் கொண்டிடுவனோ,Gunam Kondiduvano - (நீ அப்படி செய்ததை)(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ? பிரானே,Piraane - உபகாரகனே! திரி இட ஒட்டில்,Thiri Ida Otti - திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால் பேர்த்தும்,Perthum - மறுபடியும் மறுபடியும் பெரியன அப்பம்,Periyana Appam - பெரிய பெரிய அப்பங்களை தருவன்,Tharuvaan - கொடுப்பேன்; வேய் தட தோளார்,Vey Thada Tholar - மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர் விரும்பு,Virumbu - விரும்புகைக்கு உரிய கரு குழல் விட்டுவே,Karu Kuzhal Vittuve - கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே! (நீ இங்கே வாராய்).,Nee Inge Vaarai - நீ இங்கே வாராய் |
| 144 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 6 | விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி யதனை நான் நோக்கி மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே யஞ்சி மதுசூதனே யென்றறிந்தேன் புண்ணேது மில்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ கண்ணா என் கார் முகிலே கடல் வண்ணா காவலனே முலை யுணாயே–2-3-6 | விண் எல்லாம் கேட்க,Vin Ellam Ketka - மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி அழுதிட்டாய்,Azhuthittai - அழுதாய்; நான்,Naan - (நீ அப்படி அழுகையில்) (தாயாகிய) நான் விரும்பி,Virumbi - ஆதரங்கொண்டு உன் வாயில்,Un Vaayil - உன் வாயிலே அதனை,Adhanai - (நீ மண் உண்ட) அதை நோக்கி,Nookki - பார்க்கும் போது மண் எல்லாம் கண்டு,Man Ellam Kandu - (அவ் வாயில்) லோகங்களை யெல்லாம் பார்த்து என் மனத்துள்ளே அஞ்சி,En Manathulle Anji - என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு மதுசூதனே என்று,Madhusudane Endru - ‘இவன் மதுஸூதனே யாவ’னென்று அறிந்தேன்,Arindhen - தெரிந்து கொண்டேன்; புண் ஏதும் இல்லை,Pun Edhum Illai - (உன்னுடைய காதிலே) புண் ஒன்றுமில்லை; உன் காது மறியும்,Un Kaadhu Mariyum - (கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்; இறை போது,Irai Podhu - (அதை மாத்திரம்) க்ஷண காலம் பொறுத்து இரு,Poruththu Iru - பொறுத்துக் கொண்டிரு; நம்பி,Nambi - பூர்ணனே! கண்ணா,Kanna - கண்ணனே! கார் முகிலே,Kaar Mugile - காளமேகம் போன்றவனே! கடல் வண்ணா,Kadal Vannaa - கடல் போன்ற திரு நிறத்தவனே! காவலனே,Kaavalaney - ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே! என் முலை உணாய்.,En Mulai Unai - என் முலை உணாய். |
| 145 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 7 | முலை யேதும் வேண்டேனென் றோடி நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு மலையை யெடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய் சிலை யொன்று இறுத்தாய் திரி விக்கிரமா திரு வாயர் பாடிப் பிரானே தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே–2-3-7 | முலை,Mulai - ‘முலையையும் ஏதும்,Edhum - (மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும் வேண்டேன்,Venden - (நான்) விரும்ப மாட்டேன்’ என்று ஓடி,Endru Odi - என்று சொல்லி ஓடிப் போய் நின் காதில் கடிப்பை,Nin Kaadhil Kadippai - (நான்) உன் காதிலிட்ட காதணியை பறித்து எறிந்திட்டு,Pariththu Erindhittu - பிடுங்கி யெறிந்து விட்டு மலையை,Malaiyai - கோவர்த்தன மலையை எடுத்து,Eduthu - (குடையாக) எடுத்துத் தூக்கி மகிழ்ந்து,Magizhndhu - திருவுள்ளமுகந்து கல் மாரி,Kal Maari - கல் வர்ஷத்தில் நின்றும் காத்து,Kaathu - (இடையர் முதலானாரை) ரக்ஷித்து பசு நிரை,Pasu Nirai - பசுக்களின் திரளை மேய்த்தாய்,Meythaai - மேய்த்தவனே! ஒன்று சிலை,Ondru Silai - ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை முறித்தாய்,Muriththai - (பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே! திரிவிக்கிரமா,Thirivikramaa - த்ரிவிக்ரமனே! திரு ஆயர்பாடி,Thiru Aayarpadi - திரு வாய்ப்பாடிக்கு பிரானே,Piraane - உபகாரகனே! தலை நிலா போதே,Thalai Nila Poadhe - தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே உன் காதை பெருக்காது,Un Kaadhai Perukkaadhu - உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல் விட்டிட்டேன்,Vittitten - விட்டு வைத்தேன்; குற்றமே அன்றே,Kutrame Andre - (அப்படி விட்டு வைத்தது) என்னுடைய அபராதமன்றோ? |
| 146 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 8 | என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் ணுண்டேனாக அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி யிட்டுச் சொல்லுகேன் மெய்யே–2-3-8 | என் குற்றமே என்று,En Kutrame Endru - (நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது) ‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று சொல்லவும் வேண்டா காண்,Sollavum Venda Kaan - நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்: நான் மண் உண்டேன் ஆக,Naan Man Unden Aaga - (ஏனெனில்;) நான் மண் உண்டதாகச் சொல்லி என்னை,Ennai - (மண் திண்ணாத) என்னை பிடித்தும்,Pidiththum - பிடித்துக் கொண்டும் அன்பு உற்று,Anbu Utru - அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல) நோக்கி,Nookki - (என் வாயைப்) பார்த்து அடித்தும்,Adiththum - (என்னை) அடித்தும் அனைவர்க்கும்,Anaivarkkum - எல்லார்க்கும் காட்டிற்றிலையே,Kaattitrilaiye - காட்டின தில்லையோ? வல் புற்று அரவின்,Val Putru Aravin - (என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை) வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு பகை,Pagai - விரோதியான கருடனை கொடி,Kodi - கொடியாக வுடைய வாமந நம்பி,Vaamana Nambi - வாமந மூர்த்தியே! உன் காதுகள் தூரும்,Un Kaadhugal Thoorum - (இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்) உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்; உற்றன,Uttrana - (உன்னை யடுத்தவர்கள்) அடைந்தனவான துன்பு எல்லாம்,Thunbu Ellam - துன்பங்களை யெல்லாம் தீர்ப்பாய்,Theerppai - போக்குமவனே! பிரானே,Piraane - உபகாரகனே! திரி இட்டு,Thiri Ittu - (உன் காதில்) திரியை யிட்டு மெய்யே சொல்லுகேன்,Meyye Sollugean - (உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன் (என்கிறாள். ) |
| 147 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 9 | மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று கையைப் பிடித்துக் கரை யுரலோடு என்னைக் காணவே கட்டிற் றிலையே செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் சிரிதரா உன் காது தூரும் கையில் திரியை யிடுகிடாய் இந் நின்ற காரிகையார் சிரி யாமே–2-3-9 | சொல்லுவார் சொல்லை,Solluvaar Sollai - சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம் மெய் என்று கருதி,Mey Endru Karuthi - (நீ) மெய்யென்றெண்ணி வெண்ணெயை,Vennaiyai - வெண்ணெயை தொடுப்பு உண்டாய்,Thoduppu Undaai - களவு கண்டு உண்டாய் என்று,Endru - என்று (என் மீது பழி சுமத்தி) கையை பிடித்து,Kaiyai Pidiththu - (என்) கையைப் பிடித்து காண்,Kaan - (பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி கரை உரலோடு,Karai Uralodu - விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில் என்னை,Ennai - (ஒன்றும் திருடாத) என்னை கட்டிற்றிலையே,Kattitrilaiye - நீ கட்ட வில்லையா? (என்று கண்ணன் யசோதைமேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க) சிரிதரா,Siridharaa - (அதற்கு யசோதை சொல்லுகிறாள்) ஸ்ரீதரனே! செய்தன,Seidhanai - (நான் முன்பு) செய்தவற்றை சொல்லி,Solli - சொல்லிக் கொண்டு சிரித்து,Siriththu - புன் சிரிப்புச் செய்து அங்கு,Angu - அங்கே (தூரத்தில்) இருக்கில்,Irukkil - (பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால் உன் காது,Un Kaadhu - உன் காதுகள் தூரும்,Thoorum - தூர்ந்து விடும்; இ நின்ற காரிகையார் சிரியாமே,I Nindra Kaarigaiyaar Siriyame - (உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி கையில் திரியை,Kaiyil Thiriyai - (என்) கையிலுள்ள திரியை இடுகிடாய்,Idukidai - இட்டுக் கொள்வாயாக. |
| 148 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 10 | காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில் தாரியா தாகில் தலை நொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே சேரியிற் பிள்ளைகளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி ஏர் விடை செற்று இளங் கன்று எறிந்திட்ட இருடீகேசா என் தன் கண்ணே–2-3-10 | காதுகள்,Kaadhugal - (என்னுடைய) காதுகள் வீங்கி,Veengi - வீங்கிப் போய் எரியில்,Eriyil - எரிச்சலெடுத்தால், காரிகையார்க்கும்,Kaarigaiyaarkkum - (பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும் உனக்கும்,Unakkum - (என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும் உற்ற(து),Uttrathu - நேரிட்டதான இழுக்கு,Ilukku - சேதம் என்,En - ஏதேனுமுண்டோ? (என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்) தாரியாது ஆகில்,Thaariyaadhu Aagil - (நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்தபோது) ('திரியை இடுவது) பொறாமற்போனால் தலை நொந்திடும் என்று,Thalai Nondhidum Endru - (குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து விட்டிட்டேன்,Vittitten - (முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன் குற்றமே அன்றே,Kutrame Andre - (அன்பினால் அப்படி விட்டிருந்தது) (என்னுடைய) குற்றமேயாமல்லவா? ஏர் விடை,Er Vidai - அழகிய ரிஷபத்தின் வடிவுகொண்டு வந்த அரிஷ்டாஸுரனை செற்று,Setru - அழித்து இள கன்று,Ila Kanru - சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை எறிந்திட்ட,Erindhitta - (குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய இருடீகேசர்,Irudheekesar - ஹ்ருஷீகேசனே’ என்றன் கண்ணே,Endran Kanne - எனக்குக் கண் போன்றவனே’ சேரியில்,Seriyil - இவ் விடைச் சேரியில் பிள்ளைகள் எல்லாரும்,Pillaigal Ellarum - எல்லாப் பிள்ளைகளும் காது பெருக்கி,Kaadhu Perukki - காதைப் பெருக்கிக் கொண்டு திரியவும்,Thiriyavum - திரியா நிற்பதையும் காண்டி,Kaandi - நீ காணா நின்றாயன்றோ |
| 149 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 11 | கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடி கமழ் பூங் குழலார்கள் எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்க ளமுதே உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன் பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய்–2-3-11 | குளிர,Kulira - மனங்குளிரும்படி கண்ணை,Kannai - (உன்) கண்ணை கலந்து,Kalandhu - (இடைப் பெண்களுடைய கண்களோடு) சேர்த்து, எங்கும்,Engum - (அவர்களுடைய) வடிவம் முழுவதும் நோக்கி,Nookki - பார்த்து, கடி கமழ்,Kadi Kamazh - வாஸனை வீசுகின்ற பூ,Poo - புஷ்பங்களணிந்த குழலார்கள்,Kuzhalaarkal - கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய எண்ணத்துள்,Ennaththul - மநஸ்ஸினுள்ளே என்றும் இருந்து,Endrum Irundhu - எப்போது மிருந்து கொண்டு தித்திக்கும்,Thithikkum - ரஸிக்கின்ற பெருமானே,Perumaane - பெருமையை யுடையவனே1 எங்கள் அமுதே,Engal Amudhe - எங்களுக்கு அமுருதம் போன்றவனே’ உண்ண,Unna - தின்பதற்கு கனிகள்,Kanigal - (நாவல் முதலிய) பழங்களை தருவன்,Tharuvaan - கொடுப்பேன் கடிப்பு,Kadippu - காதணியை ஒன்றும் நோவாமே,Ondrum Novamae - சிறிதும் நோவாதபடி காதுக்கு,Kaadhukku - (உன்னுடைய) காதிலே இடுவன்,Iduvan - இடுவேன் சகடம்,Sakadam - (அஸுராவிஷ்டமாகா) சகடத்தை பண்ணை கிழிய உதைத்திட்ட,Pannai Kizhiyuthaiththitta - கட்டுக் குலையும்படி உதைத்தருளின பத்மநாபா,Pathmanabha - பத்மநாபனே இங்கே வாராய்,Inge Vaarai - இங்கே வாராய் |
| 150 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 12 | வாவென்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்? காதுகள் நொந்திடும் கில்லேன் நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளைச் சாவப் பாலுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய்–2-3-12 | வா என்று சொல்லி,Vaa Endru Solli - (கண்ணன் யசோதையைப் பார்த்து) ‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி என் கையை பிடித்து,En Kaiyai Pidiththu - என் கையைப் பிடித்துக் கொண்டு காதில்,Kaadhil - காதிலே நோவ,Nova - நோம்படி கடிப்பை,Kadippai - காதணியை இங்கு,Ingu - இப்போது வலியவே,Valiyave - பலாத்காரமாக தரிக்கில்,Tharikkil - இட்டால் உனக்கு,Unakku - உனக்கு இழுக்கு உற்ற(து) என்,Ilukku Utthru En - சேதமுண்டானதென்ன? காதுகள்,Kaadhugal - (என்) காதுகள் நொந்திடும்,Nondhidum - நோவெடுக்கும் கில்லேன்,Killean - (அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன் (என்று மறுத்துச் சொல்ல) நம்பீ,Nambi - யசோதை சொல்லுகிறாள்-) பூர்ணனே நாவல் பழம்,Naaval Pazham - (உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை கொண்டு வைத்தேன்,Kondu Vaiththaan - கொண்டு வைத்திருக்கிறேன் இவை,Ivai - இவற்றை காணாய்,Kaanai - பார்ப்பாயாக முன்,Mun - முன்பு வஞ்சம் மகள்,Vancham Magal - வஞ்சனை யுள்ள பூதனையானவள் சாவ,Saava - மாளும்படி பால்,Paal - (அவளது) முலைப் பாலை உண்டு,,Undu - பாநம் பண்ணி, சகடு,Sakadu - சகடாஸுரன் இற,Ira - முறியும்படி பாய்ந்திட்ட,Paandhitta - (கால்களைத்) தூக்கி யுதைத்த தாமோதரா’ இங்கே வாராய்,Thaamodhara Inge Vaarai - தாமோதரா’ இங்கே வாராய் |
| 151 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 13 | வார் காது தாழப் பெருக்கி யமைத்து மகரக் குழையிட வேண்டி சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடி யாரே–2-3-13 | அசோதை,Ashodai - யசேதையானவள் வார்,Vaar - (ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற காது,Kaadhu - காதுகளை தாழ,Thaazha - தொங்கும்படி பெருக்கி,Perukki - வளர்த்து அமைத்து,Amaiththu - ஓரளவிலே நிற்கும்படி செய்து மகரம் குழை இட வேண்டி,Magaram Kuzhai Idu Vendi - மகர குண்டங்களை இடவிரும்பி திருமாலை,Thirumalai - ச்ரிய பதியான கண்ணனை சீரால் சொன்ன,Seeraal Sona - சிறப்புக் குறையாதபடி அழைத்த சொல்,Soll - சொற்கள் சிந்தையுள்,Sindhaiyul - (தம்முடைய) மநஸ்ஸிலே நின்று,Nindru - நிலையாகப் பொருந்தி திகழ,Thigazha - விளங்க, பார் ஆர் தொல் புகழான்,Paar Aar Thol Pugazhaan - பூமியில் நிரம்பிய வழமையான யசஸ்ஸையுடையவரும் புதுவை,Puduvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மன்னன்,Mannan - நிர்வாஹகருமான’ பெரியாழ்வார் பன்னிரு நாமத்தால் சொன்ன,Panniru Naamaththaal Sona - த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த ஆராத,Aaraadha - (ஓத ஓத) த்ருப்தி பிறவாத அந்தாதி,Andhaadi - அந்தாதித் தொடையினாலாகிய பன்னிரண்டும்,Pannirandum - பன்னிரண்டு பாட்டுக்களையும் வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் அச்சுதனுக்கு,Achuthanukku - எம்பெருமானுக்கு அடியார்,Adiyaar - அடிமை செய்யப் பெறுவர். |
| 152 | பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - கண்ணபிரான் * தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய் பட்டு மொச்சை நாற்றம் வீசும்.. அதனோடு விளையாடப் போனால் அதன் மேல் புழுதியும் படியும, இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவு தின்னும்; அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராட வழைக்கின்றனளென்க, விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க. புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய். 1 | வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணென இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் எண்ணெய்ப் புளி பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 -4-1 | வெண்ணெய் அளைந்த, Vennai alaindha - வெண்ணெ யளைந்ததனாலான குணுங்கும், Kunungum - மொச்சை நாற்றத்தையும் விளையாடு புழுதியும், Vilaiyaadu puzhudhiyum - விளையாடுவதினாற் படிந்த புழுதியையும் கொண்டு, Kondu - (உடம்பிற்) கொண்டிருந்து (அதனால்) இவ் விரா, Iv vira - இன்றை இரவில் தேய்த்து கிடக்க, Theithu kidakka - (உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட) உன்னை, Unnai - உன்னை திண்ணென, Thinnaena - நிச்சயமாக நான் ஒட்டேன், Naan ottaen - நான் ஸம்மதிக்க மாட்டேன் எண்ணெய், Ennai - (தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும் புளி பழம், Puli pazham - புளிப் பழத்தையும் கொண்டு, Kondu - ஸித்தமாக வைத்துக் கொண்டு இங்கு, Ingu - இங்கே எத்தனை போதும், Ethanai podhum - எவ்வளவு காலமாக (வெகு காலமாக) இருந்தேன், Irundhaen - (உன் வரவை எதிர்பார்த்து) இரா நின்றேன் நண்ணல் அரிய பிரானே, Nannal ariya pirane - (ஒருவராலும ஸ்வ யத்நத்தால்) கிட்டக் கூடாத ஸ்வாமியே நாரணா, Naaraana - நாராயணனே நீராட, Neeraada - நீராடுவதற்கு வாராய், Vaaraay - வர வேணும் |
| 153 | பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - கன்று உண்டானால் பசு கறக்கலாம், பசுவைக் கறந்தால் பாலுண்டாகும், பாலுண்டானால் வெண்ணெயுண்டாகும், ஆகவே, வெண்ணெய் வேணுமென்றால், கன்றுகள் அவசியம் வேணும், அக் கன்றுகள் வெருண்டோடுவதைக் காண்கைக்காக நீ அவற்றின் காதுகளில் கட்டெறும்பைப் பிடித்துப் புகவிட்டால் அவை காண முடியாதபடி ஓடிப்போய் விடுமே’ பின்பு உனக்கு இஷ்டமான வெண்ணெய் கிடைக்கும்படி யெங்ஙனே? என்பது முதலிரண்டடிகளின் கருத்து. ‘வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்’ என்ற தொடர் வெண்ணெய் விழுங்கக் கிடைக்காது என்ற கருத்தைக் காட்டும், இது ஒருவகை எதிர்மறை இலக்கணை, ஆ – ‘ஆறு’ என்பதன் விகாரம். (மராமரம் சாய்த்தாய்.) ராமாவதாரத்தில் ரிச்யமூகபர்வதத்தில் ஸுக்ரீவனுக்குத் தன் வலியின் மிகுதியைக் காட்ட ஏழு மராமரங்களை ஒருங்கே எய்தவனென்ற வரலாறு காண்க. 2 | கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால் தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2 | நின்ற, Nindra - நிலையாய் நின்ற மராமரம், Maramaram - (ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே கன்றுகள், Kanrugal - பசுவின் கன்றுகள் ஓட, Oda - வெருண்டோடும்படி செவியில், Seviyil - (அக் கன்றுகளின்) காதில் கட்டெறும்பு பிடித்து இட்டால், Katterumbu pidithu ittaal - கட்டெறும்பைப் பிடித்துப் போட்டால் தென்றி, Thenri - (அதனால் அக் கன்றுகள் வெருண்டு)சிதறிப் போய் கெடும் ஆகில், Kedum aagil - (கண்டு பிடிக்க முடியாதபடி) ஓடிப் போய் விட்டால் (பின்பு நீ) வெண்ணெய், Vennai - வெண்ணையை திரட்டி, Thiratti - திரட்டி விழுங்குமா, Vizhungumaa - விழுங்கும்படியை காண்பன், Kaanban - பார்ப்பேன்(வெண்ணெயே உனக்கு உண்ணக் கிடைக்கா தென்றபடி) இன்று, Indru - இந்த நாள் நீ பிறந்த, Nee pirandha - நீ அவதரித்த திரு ஓணம், Thiru onam - ஸ்ரவண நஷத்ரமாகும் (ஆகையால்) நீ, Nee - நீ நீர் ஆட வேண்டும், Neer aada vendum - நீராடுவதற்கு வர வேணும் எம்பிரான் ஓடாதே வாராய், Embiraan odaathe vaaraay - எம்பிரான் ஓடாதே வாராய் |
| 154 | பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - ‘உனக்கு முலை கொடுத்த பேய்ச்சி பட்ட பாட்டை நானறிந்து வைத்தும், நாமும் அப்பாடுபட வேண்டி வரப் போகிறதே என்று அஞ்சி ஓட வேண்டி இருக்க அது செய்யாமல், மற்றும் அச்சமுறுத்துகிற இடைச்சிகளின் பேச்சையும் கேளாமல் உனக்கு நான் முலை தந்தது அன்பினாலன்றோ? அதற்கிணங்க நீ நான் சொல்லிற்றைக் கேட்கவேண்டவோ‘ என்கிறாள். நெல்லி – நெல்லியிலை. காய்ச்சின நீரோடு நெல்லி – நெல்லியோடு காய்ச்சின நீர் என உருபு பிரித்துக் கூட்டப்பட்டது. கடாரம் – கடாஹம். பூரித்த – வடமொழித் தாது வடியாப் பிறந்த வினையெச்சம். 3 | பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் காய்ச்சின நீரோடு நெல்லிக் கடாரத்தில் பூரித்து வைத்தேன் வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சனமாட நீ வாராய் -2 4-3 | பேய்ச்சி, Peycchi - பூதனையினுடைய முலை, Mulai - முலையை (அவளுடைய உயிரோடும்) உண்ண, Unna - (நீ) உண்டு விட கண்டு, Kandu - (அதைப்) பார்த்தும் பின்னையும் என் நெஞ்சம் நில்லாது, Pinnaiyum en nenjam nillaadhu - (நான் அஞ்சி ஓட வேண்டி யிருக்க ஆய்ச்சியர் எல்லாரும், Aaychiyar ellaarum - இடைச்சிகள் எல்லாரும் கூடி, Koodi - ஒன்று கூடி அழைக்கவும், Azhaikkavum - கூப்பாடு போட்டுக் கதறவும் நான், Naan - (உன் மேல் அன்பு கொண்ட) நான் முலை தந்தேன், Mulai thandhaen - முலை (உண்ணக்) கொடுத்தேன் நெல்லியொடு, Nelliyodu - நெல்லியை யிட்டு காய்ச்சின, Kaaychina - காய்ச்சின நீர், Neer - வெந்நீரை கடாரத்தில், Kadaarathil - சருவத்தில் பூரித்து வைத்தேன், Poorithu vaithaen - நிறைத்து வைத்திருக்கிறேன் வாய்த்த, Vaaytha - பொருந்திய புகழ், Pugazh - யசஸ்ஸையும் மணி, Mani - நீல மணி போன்ற வண்ணா, Vanna - நிறத்தையுமுடைய கண்ணனே! மஞ்சனம் ஆட, Manjanam aada - நீராட நீ வாராய், Nee vaaraay - நீ வர வேணும் |
| 155 | பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - உன் திருமேனிக்கு வேண்டுமவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள். உனது அழகு கெடாதபடி நீ நீராட வேணுமென்பதற்காக அழகனே! என்கிறாள். 4 | கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும் அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4 | கஞ்சன், Kanchan - கம்ஸனுடைய புணர்ப்பினில், Punarpinil - கபடமான ஆலோசனையினாலே வந்த, Vandha - (நலிவதாக) வந்த கடிய, Kadiya - (அஸுரா வேசத்தாலே) க்ரூரமான சகடம், Sakadam - சகடத்தை உதைத்து, Udaithu - (திருவடிகளால்) உதைத்து முறித்து விட்டு வஞ்சகம், Vanjakam - வஞ்சனை யுள்ள பேய் மகள், Pei Magal - பூதனை யானவள் துஞ்ச, Thunja - முடியும்படி முலை, Mulai - (அவளுடைய) முலையிலே வாய் வைத்த, Vai Vaitha - வாயை வைத்த பிரானே, Pirane - உபகாரகனே! மஞ்சளும், Manjalum - (உன் மேனி நிறம் பெறும்படி சாத்துவதற்கு உரிய)மஞ்சளையும் செங்கழுநீரின் வாசிகையும், Sengazhuneerin Vaasikaiyum - (நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும் நாறு சாந்தும், Naaru Saandhum - பரிமளிதமான சந்தநத்தையும் அஞ்சனமும், Anjanamum - (கண்களிலிடும்) மையையும் கொண்டு வைத்தேன், Kondu Vaithen - கொண்டு வைத்தேன் அழகனே! நீராட வாராய், Azhagane! Neeraada Vaaraay - அழகனே! நீராட வாராய் |
| 156 | பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - ‘இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்’ என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில் வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான். அப்பம் – ‘அபூபம்’ என்ற வடசொற்சிதைவு. சிறுமை + உண்டி – சிற்றுண்டி. “ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டை” என்றும் பாடமாம். (“சிறுபுறம்” என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமை’ என்ற பண்பினடி. புறம் பேசுதல் – மறைவில் குற்றத்தைச் சொல்லுதல். 5 | அப்பம் கலந்த சிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உருதியேல் நம்பீ செப்பிள மென் முலையாளர்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர் சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் நீ இங்கே வாராய் -2 4-5 | நம்பி, Nambi - (பால சாபலத்தால்) பூர்ணனே! செப்பு, Seppu - பொற் கலசம் போன்ற இள மெல் முலையார்கள், Ila mel mulaiyaargal - இளமையான மெல்லிய முலையை யுடைய மாதர்கள் சிறுபுறம் பேசி, Sirupuram pesi - (உன் மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி சிரிப்பர், Sirippar - பரிஹஸிப்பார்கள் (அன்றியும்) பாலில், Paalil - பாலிலே அக்காரம், Akkaaram - வெல்லக் கட்டியை கலந்து, Kalandhu - சேர்த்துப் (பிசைந்து) அப்பம், Appam - அப்பத்தையும் கலந்த, Kalandha - (அப்படியே) சேர்ந்த சிற்றுண்டி, Sitrundi - சிற்றுண்டியையும் சொப்பட, Soppada - நன்றாக நான் சுட்டு வைத்தேன், Naan suttu vaithen - நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதி ஏல், Thinnal uruthi ael - (நீ அவற்றை) தின்ன விரும்பினாயாகில் சொப்பட, Soppada - நன்றாக நீர் ஆட வேண்டும், Neer aada vendum - நீராட வேண்டும் பிரான், Piran - ஸ்வாமியே! சோத்தம், Soththam - உனக்கு ஓரஞ்சலி இங்கே வாராய், Inge vaaray - இங்கே வாராய் |
| 157 | பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - அகத்திலுள்ளார் எல்லாரும் அந்ய பரரம்படியாக முதலிலே எண்ணெய்க் குடத்தை உருட்டி, அவர்கள் சிந்திப்போன எண்ணெயை வழிப்பதும் துடைப்பதுமாய் இருக்கையில் அக் காரியத்தைவிட்டு ஓடிவரும்படி – தொட்டிலில் படுத்துத் தூங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற்போல வீரிட்டுக் கதறியழும்படி வெடுக்கெனக் கிள்ளி, ஸமீபத்திலே வந்த சிறுவர்களுக்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்தி இப்படி எல்லாம் தீம்பு செய்பவனே! என்றபடி. கண் – இமைக்கு ஆகுபெயர். கண்ணைப்புரட்டி விழித்து – வெளியிற் காணப்படுங் கருவிழி உட்புறமாகும்படி கண்ணை மாறி விழித்து என்று உரைப்பாருமுள. ‘கழகண்டு’ என்றும் பிரதிபேதம். 6 | எண்ணைய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக் கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே உண்ணக் கனிகள் தருவன் ஒலி கடல் ஓத நீர் போலே வண்ணம் அழகியபிரானே மஞ்சனமாட நீ வாராய் – 2-4 6 | எண்ணெய் குடத்தை, Ennai kudathai - எண்ணெய் நிறைந்த குடத்தை உருட்டி, Urutti - உருட்டிவிட்டு இள பிள்ளை, Ila pillai - (உறங்குகிற) சிறு குழந்தைகளை கிள்ளி, Killi - கையால் வெடுககெனக் கிள்ளி எழுப்பி, Ezhuppi - (தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து கண்ணை, Kannaai - கண் இமையை புரட்டி விழித்து, Puratti vizhithu - தலை கீழாக மாற்றி (அப் பூச்சி காட்டி) விழித்து கழை கண்டு, Kazhai kandu - பொறுக்க முடியாத தீம்புகளை செய்யும், Seyyum - செய்து வருகிற பிரானே, Pirane - ஸ்வதந்த்ரனே! கனிகள், Kanigal - (நில்ல) பழங்களை உண்ண, Unna - (நீ) உண்ணும்படி தருவன், Tharuvan - (உனக்குக்) கொடுப்பேன் ஒலி, Oli - கோஷியா நின்ற கடல், Kadal - கடலினுடைய ஓதம், Otham - அலைகளை யுடைய நீர் போலே, Neer pole - ஜலம் போலே வண்ணம் அழகிய, Vannam azhagiya - திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற நம்பீ, Nambi - உத்தம புருஷனே! மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும் |
| 158 | பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - (சிறந்தவித்யாதி.) ‘மகன் குற்றம் செய்தாலும் மறைக்கும்படி மிகுந்த அன்புடையளான தாயும் இப்படி இவன் மேல் பழி தூற்றினால், இவன் எவ்வளவு துஷ்ட சேஷ்டிதனாயிருப்பனோ’ என்று உன் மேல் பிறர் குறைவாகச் சொல்லப் போகிறார்களோ யென்ற எண்ணத்தினா லென்றபடி. 7 | கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் எம்பிரானே சிறந்த நல் தாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய் – 2-4 7 | எம்பிரானே, Embiraane - எம்பிரானே! கறந்த, Karandha - (அந்தந்த காலங்களில்) கறந்த நல் பாலும், Nal paalum - நல்ல பாலையும் தயிரும், Thayirum - தயிரையும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய், Kadainthu uri mel vaitha vennai - (தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும் பிறந்ததுவே முதல் ஆக, Pirandhadhuve mudhal aaga - (நீ) பிறந்தவன்று தொடங்கி பெற்று அறியேன், Pertru ariyen - கண்டறியேன் சிறந்த நல் தாய், Sirandha nal thay - (எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும்(பிள்ளை மேல் குற்றம் உண்டானாலும் மறைக்கக் கடவ நல் சிறந்த தாயார் ) அலர் தூற்றும், Alar thootrum - பழி சொல்லுகின்றாளே என்பதனால், Enpathaanal - என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால் பிறர் முன்னே, Pirar munne - அயலா ரெதிரில் மறந்தும், Maranthum - ப்ராமாதிகமாகவும் உரை ஆட மாட்டேன், Urai aada maatten - (உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும் |
| 159 | பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - கண்ணபிரான் கன்று துள்ளியொடுவதைக் காண்கைக்காக அதன் வாலிலே ஓலைகளை முடைந்து விடுவதனால், ’கன்றினை வாலோலை கட்டி’ என்றார். கன்றினை-உருபுமயக்கம், [நன் இத்யாதி,] ‘அத்தைச் செய்தான் இத்தைச் செய்தான்’ என்றிப்படி யெல்லாம் சொல்லுவார் சொல்லக் கேட்டதல்லது, உன்னுடைய தன்மையை நினைத்தறிதற்கும் எனக்கு முடியாதென்றபடி. 8 | கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும் நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் திரு நாள் நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 | கன்றினை, Kanrinai - கன்றினுடைய வால், Vaal - வாலிலே ஓலை கட்டி, Olai katti - ஓலையைக் கட்டி கனிகள், Kanigal - பழங்கள் (அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்ல வந்த ஒரு கன்றை எறி குணிலாகக் கொண்டு அஸுராவேசமுள்ள விளா மரத்தின் பழங்கள்) உதிர, Udhira - (கீழே) உதிர்ந்து விழும்படி எறிந்து, Erindhu - வீசி பின், Pin - பின்பு ஓடி தொடர்ந்து, Odi thodarndhu - ஓடிப் போய் ஓர் பாம்பை, Or paambai - (காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை பிடித்துக் கொண்டு, Pidithuk kondu - பிடித்துக் கொண்டு ஆட்டினாய் போலும், Aattinaay polum - ஆட்டினவனோ தான் (நீ) நம்பி, Nambi - ஒன்றிலும் குறைவில்லாதவனே! நின் திறத்தேன் அல்லேன், Nin thirathen allen - (நான்) உன் விஷய மொன்றையு மறியாத வளாயிரா நின்றேன் (அது கிடக்கட்டும்) நீ பிறந்த, Nee pirandha - நீ அவதரித்த நல் திரு நாள், Nal thiru naal - திரு நிஷத்திரமாகும் (இந் நாள்) (ஆகையால்) நீ நின்று நீர் ஆட வேண்டும், Nee nindru neer aada vendum - நீ நின்று நீர் ஆட வேண்டும் நாரணா ஓடாதே வாராய், Naarana odaathe vaaraay - நாரணா ஓடாதே வாராய் |
| 160 | பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - நீ ஜாதிக்குத் தக்கபடி மாட்டுத் தொழுவிற் புகுந்து புழுதியளைந்து அழுக்குடம்புடனே இருந்தாலும், உனது மேனி பொன்னுக்குப் புழுதியேறினாற்போலக் குழந்தைப் பருவத்தினால் விளங்குதலால் அதைக் காண்பது எனக்கு மிகவும் விருப்பமே, என்றாலும் ‘இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கிறது!’ என்று கண்டவர்கள் எல்லாரும் என்னைச் சிரிப்பார்களே, தவிரவும், நப்பின்னையும் உன்னைப் பரிஹாஸம் பண்ணுவாளே, ஆகையால் இப்போது இருப்பது போல நீ வெட்கமற்று நில்லாமல் உடனே நீராட வரவேணுமென்கிறாள். … 9 | பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் நாண் எத்தனையும் இலாதாய் நற்பின்னை காணில் சிரிக்கும் மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் -2 4-9 | பூணி, Pooni - பசுக்கள் கட்டிய தொழுவினில், Thozhuvinil - கொட்டகையிலே புக்கு, Pukku - நுழைந்து புழுதி அளைந்த, Puzhuthi alaindha - புழுதி மண்ணிலளைந்து அதனால் மாசு படிந்த பொன் மேனி, Pon meni - (உனது) அழகிய உடம்பை காண, Kaana - பார்ப்பதற்கு பெரிதும், Perithum - மிகவும் உகப்பன், Ugappan - (நான்) விரும்புவேன் ஆகிலும், Aagilum - ஆனாலும் கண்டார், Kandaar - (உன்னைப்) பார்ப்பவர்கள் பழிப்பர், Pazhippar - ‘(இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள் எத்தனையும் நாண் இலாதாய், Yethanaiyum naan ilaadhaay - (அன்றியும்) சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே! நப்பின்னை, Nappinnai - நப்பின்னையானவள் காணில், Kaanil - நீ இப்படியிருப்பதைக் கண்டால் சிரிக்கும், Sirikkum - சிரிப்பாள் என் மாணிக்கமே!, En maanikkame! - (என்) மணியே! மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும் |
| 161 | பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - ‘‘உகந்து ஆட்டிய ஆற்றைச் சொன்ன பாடல் வல்லார் தீவினையிலர்’ என்று முடிபு காண்க. 10 | கார்மலி மேனி நிறத்து கண்ண பிரானை உகந்து வார்மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டியவாற்றை பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல் சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-4 10 | கார், Kaar - காளமேகத்திற் காட்டிலும் மலி, Mali - சிறந்த மேனி நிறத்து, Meni nirathu - திரு மேனி நிறத்தை யுடைய கண்ண பிரானை, Kanna piranai - கண்ண பிரானை உகந்து, Ugandhu - விரும்பி வார்மலி, Vaarmali - கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற கொங்கை, Kongai - ஸ்தனங்களையுடைய அசோதை, Asothai - யசோதைப் பிராட்டி மஞ்சனம் ஆட்டிய, Manjanam aattiya - நீராட்டின ஆற்றை, Aattrai - ப்ரகாரத்தை பார், Paar - பூமியிலே மலி, Mali - சிறந்த தொல், Thol - பழமையான புதுவை, Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு கோன், Kon - நிர்வாஹகரான பட்டர் பிரான், Pattar piran - பெரியாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த சீர்மலி, Seermali - அழகு நிறைந்த செந்தமிழ், Sendhamizh - செந்தமிழாலாகிய பாடல், Paadal - (இப்) பாசுரங்களை வல்லார், Vallaar - ஓத வல்லவர்கள் யாதும், Yaadhum - சிறிதும் தீவினை இலர், Theevinai ilar - பாவமில்லாதவராவர் |
| 162 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 1 | பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை முன்னை யமரர் முதல் தனி வித்தினை என்னையும் எங்கள் குடி முழுது ஆட் கொண்ட மன்னனை வந்து குழல் வாராய் அக் காக்காய் மாதவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-1 | அக்காக்காய்,Akkakkai - காக்கையே! பின்னை,Pinnai - நப்பின்னைப் பிராட்டிக்கு மணாளனை,Manalanai - நாயகனும் பேரில்,Peril - திருப் பேர்களிலே கிடந்தானை,Kidandhanai - பள்ளி கொண்டிருப்பவனும் முன்னை,Munnai - (பகவதநுபவத்தில்) முதல்வரான அமரர்,Amarar - நித்ய ஸுரிகளுக்கு முதல்,Mudhal - தலைவனும் தனி வித்தினை,Thani viththinai - (அந்த நித்ய ஸுரிகளின் ஸத்தைக்கும் தாரகாதிகளுக்கும்) ஒப்பற்ற காரணமாயிருப்பவனும் என்னையும்,Ennaiyum - என்னையும் எங்கள் குடி முழுது,Engal kudi muzhuvathu - எங்களுடைய குடியிலுள்ளாரெல்லாரையும் ஆட் கொண்ட,Aad kond - அடிமை கொண்ட மன்னனை,Mannanai - தலைவனுமாகிய கண்ணனுக்கு வந்து,Vandhu - (நீ) வந்து குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக அக்காக்காய்,Akkakkai - காக்கையே! மாதவன் தன்,Madhavan than - ஸ்ரீயபதியான இவனுக்கு குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |
| 163 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 2 | பேயின் முலை யுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர் வண்ணன் கண்ணன் கருங்குழல் தூய்தாக வந்து குழல் வாராய் அக் காக்காய் தூ மணி வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-2 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! இவன்,Ivan - இப் பிள்ளை முன்னம்,Munnam - முன்பு பேயின் முலை,Peyin mulai - பூதனையின் முலையை உண்ட,Unda - (அவளுயிரோடுங்) குடித்த பிள்ளை,Pillai - பிள்ளை காண் மாயம்,Maayam - (அன்றியும்) வஞ்சனை யுள்ள சகடும்,Sagadum - சகடத்தையும் மருதும்,Marudum - யமளார்ஜுகங்களையும் இறுத்தவன்,Iruththavan - முறித்தவன் காயா மலர் வண்ணன்,Kaaya malar vannnan - காயாம் பூப் போன்ற திரு நிறத்தை உடையவன் கண்ணன்,Kannan - ‘க்ருஷ்ணன்’ என்னும் பேரை யுடையவன் கரு குழல்,Karu kuzhal - கரு நிறமான கூந்தலை வந்து,Vandhu - (நீ) வந்து தூய்து ஆக குழல் வாராய்,Thooythu aaga kuzhal vaarai - நின்றாக வாருவாயாக. தூ மணிவண்ணன்,Thoo ManiVannan - பழிப்பற்ற நீல மணி போன்ற நிறத்தை யுடைய இவனுக்கு குழல் வாராய் |
| 164 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 3 | திண்ணக் கலத்தில் திரை யுறி மேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம் கண்ணனை வந்து குழல் வாராய் அக் காக்காய் கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-3 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! திரை,Thirai - பின்னுதலை யுடைய உறி மேல் வைத்த,Uri mel vaiththa - (பெரிய) உறி மேல் வைத்த திண்ணம் கலத்து,Thinnam kalaththu - த்ருடமான பாத்ரத்திலுள்ள வெண்ணெய்,Vennai - வெண்ணெயை விழுங்கி,Vizhunki - உட் கொண்டு விரைய,Viraiya - விரைவாக (ஓடி வந்து) உறங்கிடும்,Urangidum - பொய் யுறக்க முறங்குகின்ற அண்ணல்,Annal - ஸ்வாமியும் அமரர்,Amarar - நி்த்ய ஸுரிகளுக்கு பெருமானை,Perumanai - நிர்வாஹகனும் ஆயர் தம் கண்ணனை,Aayar tham kannanai - இடையர்களுக்குக் கண் போன்றவனுமான இவனை வந்து குழல் வாராய்,Vandhu kuzhal vaarai - வந்து கூந்தல் வாருவாயாக அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! கார் முகில்,Kaar mugil - காள மேகம் போன்ற வண்ணன்,Vannan - நிறத்தை யுடையனான இவனுடைய குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |
| 165 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 4 | பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு கள்ள வசுரன் வருவானைத் தான் கண்டு புள்ளிது வென்று பொதுக் கோவாய் கீண்டிட்ட பிள்ளையை வந்து குழல் வாராய் அக் காக்காய் பேய் முலை யுண்டான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-4 | அக் காக்காய்!-,Akkakkai - காக்கையே! பள்ளத்தில்,Pallathil - நீர்த் தாழ்வுகளிலே மேயும்,Meyyum - இரை யெடுத்துத் திரிகின்ற பறவை,Paravai - (கொக்கு என்னும்) பஷியின் உரு,Uru - ரூபத்தை கொண்டு,Kondu - ஏறிட்டு்க்கொண்டு வருவான்,Varuvaan - வருபவனாகிய கள்ளம் அசுரனை,Kallam asuranai - வஞ்சனை பொருந்திய அசுரனை (பகாஸுரனை) தான் கண்டு,Thaan kandu - தான் பார்த்து (அவனை) இது புள் என்று,Ithu pul endru - இது பஷியே யென்று (ஸாமாந்யமாக நினைத்து) பொதுக்கோ,Pothukko - விரைவாக வாய்,Vaai - (அவ் வஸுரனது) வாயை தீ்ண்டிட்ட,Theenditta - கிழித்துப் போட்ட பிள்ளையை வந்து குழல் வாராய் ,Pillaiyai Vandhu kuzhal vaarai - அக்காக்காய்! பேய் முலை உண்டான் குழல் வாராய் |
| 166 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 5 | கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி யெறிந்த பரமன் திரு முடி உற்றன பேசி நீ ஓடித் திரியாதே அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக் காக்காய் ஆழியான் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-5 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! நீ,Nee - நீ உற்றன,Uttrana - (உன் ஜாதிக்குத்) தகுந்த வற்றை பேசி,Peshi - சொல்லிக் கொண்டு ஓடி,Odi - அங்குமிங்கும் பறந்து திரியாதே,Thiriyaadhe - திரியாமல்,- கன்று இனம் மேய்த்து,Kanru inam meythu - கன்றுகளின் கூட்டத்தை மேய்த்து வந்து ஒரு கன்றினை,Oru kanrinai - (அஸுரா விஷ்டமான) கன்றொன்றை பற்றி,Patri - பிடித்து கனிக்கு,Kanikku - (அஸுரா விஷ்டமான) விளாம் பழத்தை உதிர்த்ததற்காக எறிந்த,Erindha - (குணிலாக) வீசின பரமன்,Paraman - பரம புருஷனுடைய திருமுடி,Thirumudi - அழகிய தலை முடியை அற்றைக்கும் வந்து,Attraiyum vandhu - அவ்வக்காலும் வந்து குழல் வாராய்,Kuzhal vaarai - வாருவாயாக ஆழியான் தன்,Azhiyan than - சக்ராயுதபாணியான இவனுடைய குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |
| 167 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 6 | கிழக்கில் குடி மன்னர் கேடிலா தாரை அழிப்பான் நினைந்திட்டு அவ் வாழி யதனால் விழிக்கு மளவிலே வேரறுத் தானை குழற்கு அணி யாகக் குழல் வாராய் அக் காக்காய் கோவிந்தன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-6 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! கேடு இலாதார்,Kedu ilaadhaar - (வர பலமும் புஜ பலமுமிருப்பதால் நமக்கு) அழிவில்லை யென்றுநி னைத்திருந்தவரான கிழக்கில் குடி மன்னரை,Kizhakkil kudi mannarai - கிழக்குத் திக்கிலுள்ள பட்டணத்திற் குடியிருந்த ராஜாக்களை அழிப்பான்,Azhippaan - அழிக்கும் படி நினைந்திட்டு,Ninaindittu - எண்ணி அவ் வாழி அதனால்,Av vaazhi athanaal - அந்தச் சக்ராயுதத்தால் விழிக்கும் அளவிலே,Vizhikkum alavile - கண் மூடித் திறக்கின்ற காலத்திற்குள் வேர் அறுத்தானை,Ver arutthaanai - ஸ மூலமாக அழித்தவனுடைய குழற்கு,Kuzharku - கூந்தலுக்கு அணி ஆக,Ani aaga - அழகு உண்டாம்படி குழல் வாராய் கோவிந்தன்,Govindan - (இந்த) கோவிந்தனுடைய தண் குழல்,Than kuzhal - குளிர்ந்த (சிறந்த) குழலை வாராய்,Vaarai - வாருவாயாக. |
| 168 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 7 | பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும் உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே அண்டத்து அமரர் பெருமான் அழகமர் வண்டொத் திருண்ட குழல் வாராய் அக் காக்காய் மாயவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-7 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! பிண்டம் திரளையும்,Pindam thiralaiyum - (பித்ருக்களை உத்தேசித்து இடும்) பிண்டத்தின் உருண்டையையும் பேய்க்கு இட்ட,Peykku itta - பிசாசங்களுக்குப் போகட்ட நீர் சோறும்,Neer sorum - நீரையுடைய சோற்றையும் உண்டற்கு,Undarkku - உண்ணுதற்கு வேண்டி,Vendi - விரும்பி நீ ஓடி திரியாதே,Nee odi thiriyadhe - நீ பறந்தோடித் திரியவே வேண்டா அண்டத்து,Andathu - மேலுலகத்திலுள்ள அமரர்,Amarar - தேவர்களுக்கு பெருமான்,Perumaan - தலைவனாகிய இக் கண்ண பிரானுடைய அழகு அமர்,Azhagu amar - அழகு பொருந்திய வண்டு ஒத்து இருண்ட,Vandu othu irunda - வண்டைப் போல் கருநிறமான குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக மாயவன் தன்,Maayavan than - ஆச்சர்யச் செயல்களை யுடைய இவனுடைய குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |
| 169 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 8 | உந்தி யெழுந்த உருவ மலர் தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் கொந்தக் குழலைக் குறந்து புளியட்டி தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக் காக்காய் தாமோதரன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-8 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! உந்தி,Undhi - (தனது) திருநாபியிலே எழுந்த,Ezhntha - உண்டான உருவம்,Uruvam - ஸுருபத்தையுடைய மலர் தன்னில்,Malar thannil - தாமரைப் பூவிலே சந்தம்,Sandham - சந்தஸ்ஸை நிரூபகமாக வுடைய சதுமுகன் தன்னை,Sathumugan thannai - நான்முகனை படைத்தவன்,Padaithavan - ஸ்ருஷ்டித்த இவனுடைய புளி அட்டி கொந்தம் குழலை,Puli atti kondham kuzhalai - புளிப் பழத்தை யிட்டுத் தேய்த்ததனால் நெறிப்பை யுடைய கூந்தலை தந்தத்தின் சீப்பால்,Thandathin seepal - தந்தத்தினாற் செய்த சீப்பாலே குறந்து,Kurandhu - சிக்கு விடுத்து குழல் வாராய்,Kuzhal vaarai - வாருவாயாக அக்காக்காய்! தாமோதரன் தன் குழல் வாராய்!-,Akkakkai - (இந்த) தாமோதரனுடைய குளிர்ந்த (சிறந்த) குழலை வாருவாயாக. |
| 170 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 9 | மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த முன் இவ் வுலகினை முற்றும் அளந்தவன் பொன்னின் முடியினைப் பூவணை மேல் வைத்து பின்னே யிருந்து குழல் வாராய் அக் காக்காய் பேராயிரத்தான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-9 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! முன்,Mun - வாமநாவதார காலத்தில் மன்னன் தன்,Mannan than - அஸுரராஜனான மஹாபலியினுடைய தேவிமார்,Devimaar - மனைவியர்கள் கண்டு,Kandu - (தன்னுடைய) வடிவைக் கண்டு மகிழ்வு எய்த,Magizhvu aiththa - மகிழ்ச்சி யடையும்படி இ உலகினை முற்றும், E ulakini mutrum - (மஹாபலியினிடத்திற்போய் ‘கொள்வன் நான் மாவலி’ என்று மூவடி மண் இரந்து பெற்றுப் பின்பு த்ரிவிக்ரமனாய்) இந்த வுலகங்கள் முழுவதையும் அளந்தவன்,Alandhavan - அளந்து கொண்ட இவனுடைய பொன் முடியினை,Pon mudhiyinai - அழகிய தலையை பூஅணை மேல் வைத்து,Pooanai meel vaiththu - புஷ்பத்தினாலாகிய படுக்கையில் வைத்து பின்னே இருந்து,Pinne irundhu - (இவனது) பின்புறத்திலே இருந்து கொண்டு குழல் வாராய்,Kuzhal vaarai - அக்காக்காய்!- பேர் ஆயிரத்தான்,Per aayiraththaan - ஸஹஸ்ர நாமங்களை யுடைய இவனுக்கு குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |
| 171 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (தரவு கொச்சகக்கலிப்பா) 10 | கண்டார் பழியாமே அக் காக்காய் கார் வண்ணன் வண்டார் குழல் வார வா வென்ற ஆய்ச்சி சொல் விண் தோய் மதிள் வில்லி புத்தூர்க் கோன் பட்டன் சொல் கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே–2-5-10 | அக் காக்காய்,Akkakkai - காக்கையே! கண்டார்,Kandar - பார்த்தவர்கள் பழியாமே,Pazhiyaamae - பழியாதபடி கார் வண்ணன்,Kaar vannan - காள மேகம் போன்ற நிறமுடைய கண்ணனுடைய வண்டு ஆர் குழல்,Vandu aar kuzhal - வண்டை ஒத்த கரிய கூந்தலை வார,Vaar - வாரும்படி வா,Vaa - வருவாயாக என்ற,Endru - என்று சொன்ன ஆய்ச்சி,Aaychi - யசோதைப் பிராட்டியின் சொல்,Sol - சொல்லை (க்குறித்த) விண் தோய்,Vin thoy - ஆகாசத்தை அளாவுகின்ற மதிள்,Mathil - மதிளை யுடைய வில்லிபுத்தூர்,Villipuththoor - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattam - பெரியாழ்வாருடைய சொல்,Sol - அருளிச் செயல்களை கொண்டாடி,Kondaadi - சிலாகித்து பாட,Paada - பாடப் பெற்றால் வினை தாம்,Vinai thaam - ஸுக்ருத துஷ்க்ருதங்களிரண்டும் குறுகா,Kurugaa - சேராவாம். |
| 172 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 1 | வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி தாலிக் கொழுந்தைத் தடங்கழுத் திற் பூண்டு பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா கடல் நற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-1 | (அக்காக்காய்),Akkakkai - காக்கையே! வேலிக்கோல்,Velikkol - வேலிக் கால்களிலுள்ள கோலை வெட்டி,Vetti - (வாளால்) வெட்டி (அதை) விளையாடு வில்,Vilaiyadu Vil - லீலோபகரணமான வில்லாகச் செய்து ஏற்றி,Etri - (அதிலே) நாணேற்றியும், கொழுந்து தாலியை,Kozhundu Thalaiyai - சிறந்த ஆமைத் தாலியை தடங்கழுத்தில்,Thadankazhuthil - (தனது) பெரிய கழுத்திலே பூண்டு,Poondu - அணிந்து கொண்டும் பீலித் தழையை,Peelith Thazhaiyai - மயில் தோகைகளை பிணைத்து,Pinaittu - ஒன்று சேர்த்து பிறகு இட்டு,Piragu Ittu - பின் புறத்திலே கட்டிக் கொண்டும் காலி பின்,Kaali Pin - பசுக் கூட்டங்களின் பின்னே போவாற்கு,Povarku - போகி்ன்ற இவனுக்கு ஓர் கோல்,Or Kol - ஒரு கோலை கொண்டு வா கடல் நிறம் வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா,Kadal Niram Vannarku Or Kol Kondu Va - கடல் நிறம் வண்ணற்கு ஒரு கோலை கொண்டு வா |
| 173 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 2 | கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் சங்கம் பிடிக்கும் தடக் கைக்குத் தக்க நல் அங்க முடையதோர் கோல் கொண்டு வா அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா–2-6-2 | கொங்கு,Kongu - வாஸனை பொருந்திய குடந்தையும்,Kudanthaiyum - திருக் குடந்தையிலும் கோட்டி ஊரும்,Kotti Uurum - திருக் கோட்டியூரிலும் பேரும்,Perum - திருப்பேர் நகரிலும் எங்கும்,Engum - மற்றுமுள்ள திருப்பதிகளிலுமெல்லாம் திரிந்து,Thirindhu - ஸஞ்சரித்து விளையாடும்,Vilaiyaadum - விளையாடுகின்ற என் மகன்,En Magan - என் பிள்ளையினுடைய சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு,Sangam Pidikkum Thadakkaikku - பாஞ்ச ஜந்யம் தரிக்கிற பெரிய திருக்கைக்கு தக்க,Thakka - தகுந்ததான நல் அங்கம் உடையது,Nal Angam Udaiyathu - நல்ல வடிவை யுடையதாகிய ஓர் கோல் கொண்டு வா,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா அரக்கு வழித்தது,Arakku Vazhithathu - (நல்ல நிறமுண்டாம்படி) அரக்குப் பூசியதாகிய ஓர் கோல் கொண்டுவா,Or Kol Konduva - ஒரு கோலை கொண்டு வா |
| 174 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 3 | கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான் பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான் நெறித்த குழல்களை நீங்க முன் னோடி சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-3 | கறுத்திட்டு,Karuthittu - கோபித்து எதிர் நின்ற,Ethir Nindra - தன்னை எதிரிட்டு நின்ற கஞ்சனை,Kanjanai - கம்ஸனை கொன்றான்,Konraan - கொன்றவனும் எதிர் வந்த,Ethir Vandha - (தன்னைக் கொல்வதாக) எதிர்த்து வந்த புள்ளின்,Pullin - பகாஸுரனுடைய வாய்,Vaai - வாயை பொறுத்திட்டு,Poruthittu - (முதலிற்) பொறுத்துக் கொண்டிருந்து கீண்டான்,Keendaan - (பின்பு) கிழித்தவனும் நெறித்த,Neritha - நெறித்திரா நின்றுள்ள குழல்கள்,Kuzhalgal - கூந்தல்கள் நீங்க,Neenga - ஓடுகிற வேகத்தாலே இரண்டு பக்கமும் அலையும் படியாக முன் ஓடி,Mun Odi - கன்றுகளுக்கு முன்னே போய் சிறு கன்று,Siru Kanru - இளங்கன்றுகளை மேய்ப்பாற்கு,Meipparkku - மேய்ப்பவனுமாகிய இவனுக்கு ஓர் கோல் கொண்டு வா,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா,Devapiranukku Or Kol Kondu Va - தேவபிரானுக்கு ஒரு கோலை கொண்டு வா |
| 175 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 4 | ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவன் துன்று முடியான் துரியோதனன் பக்கல் சென்று அங்குப் பாரதம் கை யெறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-4 | ஒன்றே,Ondre - (பாண்டவர்களுடன் சேர்ந்து வாழோம் என்ற) ஒரே விஷயத்தை உரைப்பான்,Uraippan - சொல்லுபவனும் ஒரு சொல்லே,Oru Sollae - (மத்யஸ்தர் எவ்வளவு சொன்னாலும் ஊசி குத்து நிலமும் பாண்டவர்களுக்குக் கொடேன்’ என்ற) ஒரு சொல்லையே சொல்லுவான்,Solluvaan - சொல்லுபவனும் துன்று முடியான்,Thunru Mudiyan - (நவரத்னங்களும்) நெருங்கப் பதித்த கிரீடத்தை அணிந்தவனுமான துரியோதநன் பக்கல்,Dhuriyodhanan Pakkal - துரியோதநனிடத்தில் சென்று,Sendru - தூது போய் அங்கு,Angu - அவ்விடத்தில் பாரதம்,Baaratham - பாரத யுத்தத்தை கையெறிந்தானுக்கு,Kaiyerindhaanukku - உறுதிப் படுத்திக் கொண்டு வந்த இவனுக்கு கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா,Kanrughal Meippathu Or Kol Kondu Va - இளங்கன்றுகளை மேய்ப்பவனுமாகிய இவனுக்கு ஒரு கோலை கொண்டு வா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா,Kadal Nira Vannarku Or Kol Kondu Va - கடல் நிற வண்ணற்கு ஒரு கோலை கொண்டு வா |
| 176 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 5 | சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல் ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால் பாரொன்றிப் பாரதம் கை செய்து பார்த்தற்குத் தேரொன்றை யூர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-5 | துரியோதநன் பக்கல்,Dhuriyodhanan Pakkal - துரியோதநனிடத்தில் பாண்டவர்களுக்காக சீர் ஒன்று தூது ஆய்,Seer Ondru Thoodhu Aai - சிறப்பு பொருந்திய தூதனாகப் போய் ஊர் ஒன்று வேண்டி,Oor Ondru Vendi - (பாண்டவர்களுக்கு) ஒரு ஊராவது கொடு என்று யாசித்துக் கேட்டும் பெறாத,Peraadha - அந்த ஒரு ஊரையும் பெறாமையினாலுண்டான உரோடத்தால்,Urodathaal - சீற்றத்தாலே பார் ஒன்றி,Paar Ondri - பூமியில் பொருந்தி யிருந்து பாரதம் கை செய்து,Baaratham Kai Seidhu - பாரத யுத்தத்தில் அணி வகுத்து பார்த்தற்கு,Paartharkku - அர்ஜுநனுக்கு தேர் ஒன்றை ஊர்ந்தார்க்கு,Ther Ondrai Oornthaarkku - ஒப்பற்ற தேரை (ப்பாகனயிருந்து) நடத்தினவனுக்கு ஓர் கோல் கொண்டுவா—;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா,Deva Piranukku Or Kol Kondu Va - தேவபிரானுக்கு ஒரு கோலை கொண்டு வா |
| 177 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 6 | ஆலத் திலையான் அரவினணை மேலான் நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான் பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள் செய்த கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா குடந்தைக் கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-6 | ஆலத்து இலையான்,Aalathu Ilaiyaan - (ப்ரளய காலத்தில் உலகமெல்லா முண்டு) ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பவனும் அரவின் அணை மேலான்,Aravin Anai Melan - (எப்போதும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொள்பவனும் நிலம் கடலுள்,Nilam Kadalul - கரு நிறமான சமுத்திரத்தில் நெடுங்காலம்,Nedunkaalam - வெகு காலமாக கண் வளர்ந்தான்,Kann Valarnthaan - யோக நித்ரை செய்பவனும் பாலம் பிராயத்தே,Paalam Pirayathe - குழந்தைப் பருவமே தொடங்கி பார்த்தற்கு,Paartharkku - அர்ஜுநனுக்கு அருள் செய்த,Arul Seidha - க்ருபை செய்த கோலம்,Kolam - அழகிய வடிவத்தை யுடைய பிரானுக்கு,Piranukku - தலைவனுமான இவனுக்கு ஓர் கோல் கொண்டு வா;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா குடந்தை கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.,Kudanthai Kidanthaarkku Or Kol Kondu Va - குடந்தை கிடந்தாற்கு ஒரு கோலை கொண்டு வா |
| 178 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 7 | பொன் திகழ் சித்திர கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா மணி வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-7 | (அக்காக்காய்!),Akkakkai - காக்கையே! பொன்,Pon - அழகியதாய் திகழ்,Thigal - விளங்குகின்ற சித்திர கூடம் பொருப்பினில்,Chithira Koodam Poruppinil - சித்ர கூட மலைச் சாரலில் (பிராட்டி மடியிலே தலை வைத்துக் கொண்டு ஸ்ரீராமனாகிய தான் கண் வளர்ந்தருளும் போது) வடிவில்,Vadivil - (பிராட்டியின்) திரு மேனியில் உற்ற,Utra - பதிந்த ஒரு கண்ணும்,Oru Kannum - (உனது இரண்டு கண்களில்) ஒரு கண்ணை மாத்திரம் கொண்ட,Konda - பறித்துக் கொண்ட அ கற்றை குழவன்,A Kattrai Kuzhavan - அந்தத் தொகுதியான கூந்தலை யுடையவன் கடியன்,Kadiyan - க்ரூரன்; உன்னை,Unnai - (ஆதலால், அவன் தனக்கு இஷ்டமானதை உடனே செய்யாமலிருத்தற்காக) உன்னை (ச்சீறி) மற்றை கண்,Matrai Kann - (உனது) மற்றொரு கண்ணையும் கொள்ளாமே,Kollamae - பறித்துக் கொள்ளாதபடி விரைந்து,Viraindhu - ஓடிப் போய் ஓர் கோல் கொண்டு வா;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா மணிவண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா.,Manivannan Nambikku Or Kol Kondu Va - மணிவண்ணன் நம்பிக்கு ஒரு கோலை கொண்டு வா |
| 179 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 8 | மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ தன்னிக ரொன்றில்லாச் சிலை கால் வளைத்திட்ட மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா வேலை யடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-8 | மின்,Min - மின்னல் போன்ற (ஸூக்ஷ்மமான) இடை,Idai - இடையை யுடைய சீதை பொருட்டா,Seethai Porutraa - ஸீதையை மீட்டுக் கொணர்வதற்காக இலங்கையர் மன்னன்,Ilangaiyar Mannan - லங்கையிலுள்ளார்க்குத் தலைவனான ராவணனுடைய மணி முடி பத்தும்,Mani Mudi Paththum - ரத்ந கிரீடமணிந்த தலைகள் பத்தும் உடன் வீழ,Udan Veezha - ஒரு சேர அற்று விழும்படி தன்னிகர் ஒன்று இல்லா,Thannigar Ondru Illaa - தனக்கு ‘உபமாநமானதொன்று மில்லாத (உயர்ந்த) சிலை,Silai - வில்லை கால் வளைத்து இட்ட,Kaal Valaithu Itta - கால் வளையும் படி பண்ணி ப்ரயோகித்த மின்னும் முடியற்கு,Minnum Mudiyarkku - விளங்கா நின்ற கிரீடத்தை அணிந்தவனுக்கு வேலை அடைத்தாற்கு,Velai Adaiththaarkku - ஸமுத்ரத்தில் ஸேது கட்டினவனுக்கு ஓர் கோல் கொண்டுவா-,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா |
| 180 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 9 | தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னிலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா வேங்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டுவா–2-6-9 | தென் இலங்கை,Then Ilangai - அழகிய லங்கைக்கு மன்னன்,Mannan - அரசனாகிய ராவணனுடைய சிரம்,Siram - தலைகளையும் தோள்,Thol - தோள்களையும் துணி செய்து,Thuni Seidhu - (அம்பினால்) துணித்துப் போகட்டு மின் இலங்கு,Min Ilangu - ஒளி வீசுகின்ற பூண்,Poon - ஆபரணங்களை அணிந்த விபீடணன் நம்பிக்கு,Vibheethanan Nambikku - விபீஷணாழ்வானுக்கு என் இலங்கு நாமத்து அளவும்,En Ilangu Naamaththu Alavum - என் பெயர் ப்ரகாசிக்குமளவும் அரசு,Arasu - ராஜ்யம் (நடக்கக் கடவது) என்ற,Endra - என்று அருள் செய்து மின் இலங்கு ஆரற்கு,Min Ilangu Aararkku - மின்னல்போல் விளங்குகின்ற ஹாரத்தை யுடையவனுக்கு ஓர் கோல் கொண்டு வா-;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா வேங்கடம்,Vengadam - திருமலையில் வாணற்கு,Vaanarkku - வாழ்ந்தருளுமவனுக்கு ஓர் கோல் கொண்டுவா-.,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா |
| 181 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (தரவு கொச்சகக்கலிப்பா) 10 | அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வாவென்று மிக்காளுரைத்த சொல் வில்லி புத்தூர்ப் பட்டன் ஒக்க வுரைத்த தமிழ் பத்தும் வல்லவர் மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே–2-6-10 | அக்காக்காய்,Akkakkai - காக்கையே! நம்பிக்கு கோல் கொண்டுவா என்று,Nambikku Kol Kondu Va Endru - உத்தமனான இவனுக்கு கோலைக் கொண்டு வந்து தா என்று மிக்கான் உரைத்த சொல்,Mikkaan Uraiththa Sol - சிறந்தவளான யசோதை சொன்ன சொற்களை வில்லி புத்தூர் பட்டன்,Villi Puththoor Pattam - ஸ்ரீவில்லிபுத்தூரில வதரித்த பெரியாழ்வார் ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்,Okka Uraiththa Tamil Paththum Vallavar - அவ் யசோதையைர் போலவே சொன்ன தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள் மக்களை பெற்று இ வையத்தே மகிழ்வர்,Makkalai Pettru I Vayaththae Magizhvar - ஜ்ஞாந்புத்ரர்களை (சிஷ்யர்களை) அடைந்து இப்பூமியிலே மகிழ்ந்திருக்கப் பெறுவர் |
| 182 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - “இந்த கிருஷ்ணன் எங்கள் வீட்டில் கைப்பானையிலிருந்த பாலைக் குடித்துப் போனான்” என்று உகவாதார் சொல்லும்படி கறந்த பானையிலிருந்த பச்சைப் பாலைப் பருகுமவனான பித்தனாய் இருந்தாலும் தேனைவிட இனியவனாயிருப்பவனே! உன்னுடைய திருமேனியின் அருமையைத் தெரிந்து கொள்ளாமல் காட்டிலே போய்த் திரிவது தவிர்ந்து செண்பகப்பூவை நான் சூட்டும்படி வரவேணுமென்றவாறு. அருமருந்தாவதறியாய் – இவ்வுலகத்தில் உள்ளார்க்குப் பிறவி நோயறுக்கும் மருந்துமாய் பரம பதத்தில் உள்ளார்க்குப் போக மகிழ்ச்சிக்கு மருந்துமாய் நீயிருப்பதை அறிகிலை காண். பற்றாதார் சிரிப்ப – பற்றுமவர்கள் (அன்பர்கள்) இவன் செயலுக்கு உகப்பர் போலும். தேனில் – ஐந்தாம் வேற்றுமை. 1 | ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய் கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத் தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் 2-7-1 | தேனில், Thenil - தேனைக் காட்டிலும் இனிய, Iniya - போக்யனாயிருக்கிற பிரானே, Pirane - ப்ரபுவே! பற்றாதார் எல்லாம், Patraadhaar ellaam - பகைவரெல்லாரும் சிரிப்ப, Sirippa - பரிஹஸிக்கும்படி பானையில் பாலை பருகி, Paanaiyil paalai parugi - (கறந்த) பானையிலே யுள்ள பச்சைப் பாலைக் குடித்து (பின்பு) உன், Un - உன்னுடைய கரிய, Kariya - ஸ்யாமமான திருமேனி, Thirumeni - அழகிய திருமேனி வாட, Vaada - வாடும்படி கானகம் எல்லாம் திரிந்து, Kaanagam ellaam thirindhu - காட்டிடம் முழுதும் திரிந்து கொண்டு ஆநிரை, Aanirai - பசுக்களின் திரளை மேய்க்க, Meikkha - மேய்ப்பதற்கு நீ போதி, Nee pothi - ஸூ குமாரமான நீ போகிறாய்; அரு மருந்து ஆவது, Aru marundhu aavadhu - (நீ உன்னை) பெறுதற்கரிய தேவாம்ருதம் போன்றவனாதலை சம்சாரிகளுக்கு சம்சாரம் போக்கவும் நித்யர்களுக்கு போகம் அனுபவிக்க மருந்து அறியாய், Ariyaai - அறிகிறாயில்லை; செண்பகம் பூ, Senbagam poo - (இனி நீ கன்று மேய்ப்பதை விட்டிட்டு) செண்பகப் பூவை சூட்ட, Soota - (நான்) சூட்டும்படி வாராய், Vaaraay - வருவாயாக |
| 183 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - நீர் கொண்டெழுந்த காளமேகம் போன்ற வடியையுடையவனே! உலகங்களுக்கு ஸத்தை யுண்டாகும்படி இந்நிலத்தில் வந்து பிறந்தவனே!; திருவாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் திருவாயிருப்பவனே! இந்த மல்லிகைப்பூவின் பரிமளம் குன்றுவதற்கு முன்னே இதைச் சூடவா என்பதாம் ‘ஒக்கும்’ என்பதை முற்றாகக் கொண்டு கருவுடை மேகங்களைக் கண்டால் உன்னைக் காண்பதை ஒத்திருக்கும்: (அதுக்கு மேலே) கண்கள் உருவுடையதாய் – கண்ணழகையுமுடையவனே! என்றும் உரைக்கலாம். 2 | கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய் உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய் -2-7-2 | கண்கள், Kangal - கண்களானவை உன்னை கண்டால், Unnai kandaal - உன்னைப் பார்த்தால் கரு உடை மேகங்கள், Karu udai mekangal - கர்ப்பத்தை யுடைய (நீர் கொண்ட) மேகங்களை கண்டால், Kandaal - பார்த்தால் (அதை) ஒக்கும், Okkum - ஒத்துக் குளிர்கின்ற உரு உடையாய், Uru udayaai - வடிவை யுடையவனே! உலகு ஏழும், Ulagu ezhum - ஏழுலகங்களும் உண்டாக, Undaaga - ஸத்தை பெறும்படி வந்து பிறந்தாய், Vandhu pirandhaai - திருவவதரித்தவனே! திரு உடையாள், Thiru udayaal - (உன்னை) ஸம்பத்தாக வுடைய பிராட்டிக்கு மணவாளா, Manavaala - நாயகனே! திரு அரங்கத்தே, Thiru arangatthae - கோயிலிலே கிடந்தாய், Kidandhai - பள்ளி கொண்டிருப்பவனே! மணம், Manam - வாஸனை மருவி கமழ்கின்ற, Maruvi kamazhkindra - நீங்காமலிருந்து பரிமளிக்கிற மல்லிகைப் பூ, Mallikai poo - மல்லிகைப் பூவை சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |
| 184 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - மேல் மாடங்களில் ஏகாந்தமாக வாழ்கின்ற பெண்களிடத்திலும் சென்று அவர்களுடைய கச்சுகளையும் பட்டாடைகளையும் கரை கட்டின சேலைகளையும் கிழித்துத் தீம்பு செய்வதை விட்டிட்டுப் பூச்சூட வரவேணுமென்பதாம். கச்சு – ‘கஞ்சுகம்’ என்ற வடசொற்சிதைவு துகிலவை = அவை முதல் வேற்றுமைச் சொல்லுருபு. நிச்சல் – ‘நித்யம்’ என்ற வடசொல் விகாரம். தமநிகம் – வடசொல். 3 | மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய் பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7-3 | மச்சொடு மாளிகை ஏறி, Machodu maalikai eri - நடு நலையிலும் மேல் நிலையிலும் ஏறிப் போய் மாதர்கள் தம் இடம் புக்கு, Maadhargal tham idam pukku - பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து கச்சொடு, Kachodu - (அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும் பட்டை, Pattai - பட்டாடைகளையும் கிழித்து, Kizhithu - கிழித்து விட்டு காம்பு துகில் அவை, Kaambu thugil avai - (மற்றும் அப் பெண்கள் உடுத்துள்ள) கரை கட்டின சேலையையும் கீறி, Keeri - கிழித்துப் போட்டு நிச்சலும், Nichalum - (இப்படியே) ப்ரதி நித்யம் தீமைகள், Theemaigal - துஷ்ட சேஷ்டைகளை செய்வாய், Seyvaai - செய்பவனே! நீள் திருவேங்கடத்து, Neel thiruvenkatathu - உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற எந்தாய், Endhaay - ஸ்வாமியே! பச்சை, Pachai - பசு நிறமுள்ள தமனகத்தோடு, Thamanakathodu - மருக்கொழுந்தையும் பாதிரிப்பூ, Paathirippoo - பாதிரிப்பூவையும் சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |
| 185 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - நீ தெருவிலே நின்று அவ் விடத்தில் விளையாடுகின்ற சிறிய இடைப் பெண்களைத் தீம்பு செய்து திரியாமல் மருவையும் தமனகத்தையுஞ் சேர்த்துக் கட்டின மணம் வீசுகின்ற மாலையை அந்த மணம் பழுது படாதபடி சூடிக்கொள்ள வா என்கிறாள். எம்பெருமானுக்கு ஏற்ற உவமைப் பொருள் கிடையாமையால் “புருவங் கருங்குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று” என இல் பொருளுவமை கூறப்பட்டது. கமழ்கின்ற – ‘அன்’ சாரியை பெறாத முற்று 4 | தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2-7-4 | புருவம், Puruvam - புருவங்களையும் கரு குழல், Karu kuzhal - கரு நிறமான கூந்தலையும் நெற்றி, Nettri - (இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு பொலிந்த, Polindha - விளங்குகின்ற முகில் கன்று போலே, Mugil kanru pole - மேகக் கன்று போலே உருவம் அழகிய, Uruvam azhagiya - வடிவமழகிய நம்பி, Nambi - சிறந்தோனே! (நீ) தெருவின் கண் நின்று, Theruvin kan nindru - தெருவிலே நின்று கொண்டு இள ஆய்ச்சி மார்களை, Ila aaychi maargalai - இடைச் சிறுமிகளை தீமை செய்யாதே, Theemai seyaadhe - தீம்பு செய்யாமலிரு; மருவும், Maruvum - மருவையும் தமனகமும், Thamanakamum - தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின) சீர் மாலை, Seer maalai - அழகிய மாலைகள் மணம் கமழ்கின்ற, Manam kamazhgindra - வாஸனை வீசுகின்றன; இவை, Ivai - இவற்றை உகந்து, Ugandhu - மகிழ்ச்சி கொண்டு சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |
| 186 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - கொக்கின் வாயைக் கீண்டொழித்தவனே! நீ எது செய்தாலும் உன்னுடைய வல்லமையைக் கண்டு நான் வெறுமனே யிருக்க வேண்டியதாயிருந்தும் நீ வெண்ணெணை வாரி உட்கொண்டதைக் கண்டு ‘இவன் இப்படியே வேறு வீடுகளிற் போய்ச் செய்தால் பழி வருமே’ என்று நினைத்து அஞ்சாமல் அடித்து விட்டேன்; அவஸரப் பட்டு நான் செய்தவிதைப் பொறுத்துச் செங்கழுநீர்ப்பூச் சூடவா என்கிறாள். புஷ்பம் மேலே பட்டாலும் வாடும்படியான உன்னுடைய ஸௌகுமார்யத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதாயிருக்க அப்படி அஞ்சாமல் அடித்ததைப் பொறுத்துப் பூச்சூட வரவேணுமென்பதாகவுங் கொள்ளலாம். அடியேன் = ஸ்ரீக்ருஷ்ணனுடைய வீரத்திலீடுபட்டுச் சொல்லுகிற சொல்:” மரபுவழுவமைதி; அடித்த பின்பு அநுதாபங்கொண்டு அடியேன் என்றாளெனினுமாம். 5 | புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் 2-7-5 | புள்ளினை, Pullinai - பகாஸுரனை வாய் பிளந்திட்டாய், Vai pilandhittai - வாய் கிழித்துப் பொகட்டவனே! பொரு, Poru - யுத்தோந்முகமான கரியின், Kariyin - குவலயாபீடத்தின் கொம்பு, Kombu - கொம்பை ஒசித்தாய், Osithaai - பறித்தவனே! கள்ளம் அரக்கியை மூக்கொடு, Kallam arakkiyai mookodu - வஞ்சனை யுடைய ராக்ஷஸியாகிய சூர்ப்பணகையின் மூக்கையும் காவலனை, Kaavalanai - (அவளுக்குப்) பாதுகாவலாயிருந்த ராவணனுடைய தலை, Thalai - தலையையும் கொண்டாய், Kondai - அறுத்தவனே! நீ, Nee - (இப்படிப்பட்ட) நீ வெண்ணெய், Vennai - வெண்ணெயை அள்ளி விழுங்க, Alli vizhungu - வாரி விழுங்க அஞ்சாது, Anjaadhu - சிறிதும் பயப்படாமல் அடியேன், Adiyen - (‘எப்போது குழந்தை பிறந்து வெண்ணெய் விழுங்கப் போகிறது?’ என்றிருந்த) நான் அடித்தேன், Adithen - அடித்தேன்; (அப் பிழையைப் பொறுத்து) தெள்ளிய, Thelliya - தெளிவான நீரில், Neeril - நீரிலே எழுந்த, Ezundha - உண்டான செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீரை சூட்டவாராய், Sootavaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |
| 187 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - பொருதி = முன்னிலை யொருமை நிகழ்கால வினைமுற்று. (எருதுகளோடே பொருதது) காலாந்தரமாயிருக்கச் செய்தேயும் தற்காலம் போலே ப்ரகாசிக்கையாலே ‘பொருதி’ என்று வர்த்தமாகமாகச் சொல்லுகிறது என்ற பெரிய ஜீயர் உரை நோக்கத் தக்கது. உலோபாய் = வடமொழியின் திரிபாகிய ‘உலோபம்’ என்பதனடியாக வந்த எதிர்மறை முற்று. உடம்பைப் பேணுதல் உயிரைப் பேணுதல் ஒன்றும் செய்யாதிரா நின்றாய் என்று கருத்து. போம் வழியில் வண்ணானைக் கொன்று வஸ்த்ரங்களைப் பறித்துக் கொண்டமை கம்ஸனுடைய வில்லை முறித்தமை குவலயாபீடத்தைக் கொன்றமை முதலியன – இங்கு தெருவின் கண் செய்த தீமைகளாகும். கண் – ஏழனுருபு. 6 | எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய் தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூ சூட்ட வாராய் -2-7-6 | நம்பி, Nambi - சிறந்தோனே!(நப்பின்னையை மணம் புணர்வதற்காக) எருதுகளோடு, Erudhugalodu - ஏழு ரிஷபங்களுடன் பொருதி, Poruthi - போர் செய்யா நின்றாய்; ஏதும், Yedhum - எதிலும் (ஒன்றிலும்) உலோபாய் காண், Ulopaai kaan - விருப்பமில்லாதவனாயிரா நின்றாய்;(தேகம் பிராணன் பேணாமல் கருதிய, Karuthiya - (கம்ஸன் உன் மேல் செய்ய) நினைத்த தீமைகள், Theemaigal - தீம்புகளை செய்த, Seydha - (நீ அவன் மேற்) செய்து கம்ஸனை, Kamsanai - அந்தக் கம்ஸனை கால் கொடு, Kaal kodu - காலினால் (காலைக் கொண்டு) பாய்ந்தாய், Paainthaai - பாய்ந்தவனே! தெருவின் கண், Theruvin kan - தெருவிலே(அக்ரூரர் மூலமா யழைக்கப் பட்டுக் கம்ஸனரண்மனைக்குப் போம் போது) தீமைகள் செய்து, Theemaigal seydhu - தீமைகளைச் செய்து கொண்டு போய் சிக்கென, Sikkenna - வலிமையாக மல்லர்களோடு, Mallarkalodu - (சாணூர முஷ்டிகரென்னும்) மல்லர்களுடனே பொருது வருகின்ற, Poruthu varugindra - போர் செய்து வந்த பொன்னே, Ponne - பொன் போலருமையானவனே! புன்னைப் பூ சூட்ட வாராய், Punnai poo sootta vaaraay - புன்னைப் பூ சூட்ட வாராய் |
| 188 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - நரஸிம்ஹாவதாரம் முதலிய மற்றுமுள்ள விபவாவதாரங்கள் செய்தவனும் திருக்குடந்தை முதலிய திவ்ய தேசங்களில் வாழ்பவனும் இக் கண்ணபிரானே யென்பது இதில் விளங்கும். குடக்கூத்து – ப்ராஹ்மணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகஞ்செய்வது போல இடையர்க்குச் செல்வம் விஞ்சினால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்கு வீடாக அவர்களாடுவதொரு கூத்து; இதனைத் தலையிலே அடுக்குங் குடமிருக்க இருதோள்களிலும் இருகுடங்களிருக்க இருகையிலுங் குடங்களை யேந்தி ஆகாசத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து என்பர்; இதனைப் பதினோராடலிலொன்றெனறும் அறுவகைக் கூத்திலொன்றென்றுங் கூறி “குடத்தாடல் குன்றெடுத்தோனாடலலனுக் கடைக்குபவைந் துறுப் பாய்ந்து” என்று மேற்கோளுங்காட்டினர் சிலப்பதிகாரவுரையில் அடியார்க்கு நல்லார். 7 | குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய் குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி பூ சூட்ட வா -2-7-7 | குடங்கள், Kudangal - பல குடங்களை எடுத்து, Eduthu - தூக்கி ஏற விட்டு, Eera vittu - உயர்வெறிந்து கூத்து ஆட, Koothu aada - (இப்படி) குடக் கூத்தை யாடுவதற்கு வல்ல, Valla - ஸாமர்த்தியமுடைய எம் கோவே, Em kove - எம்முடைய தலைவனே மடம் கொள், Madam kol - மடப்பமென்ற குணத்தை யுடைய மதி முகத்தாரை, Mathi mugatharai - சந்த்ரன் போன்ற முகத்தை யுடைய பெண்களை மால் செய்ய வல்ல, Maal seiya valla - மயக்க வல்ல என் மைந்தா, En maindha - எனது புத்திரனே! முன், Mun - நரஸிம்ஹாவதாரத்திலே இரணியன் நெஞ்சை, Iraniyan nenjai - ஹிரண்யாஸுரனுடைய மார்பை இடந்திட்டு, Idandhittu - (திரு வுகிரால்) ஊன்ற வைத்து இரு பிளவு ஆக, Iru pilavu aaga - இரண்டு பிளவாகப் போம்படி தீண்டாய், Theendai - பிளந்தவனே! குடந்தை, Kudanthai - திருக் குடந்தையில் கிடந்த, Kidandha - பள்ளி கொள்ளுகிற எம் கோவே, Em kove - எமது தலைவனே! குருக்கத்திப் பூ சூட்டவாராய், Kurukkathi poo sootta vaaraay - குருக்கத்திப் பூ சூட்டவாராய் |
| 189 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - மாலிகன் என்பான் ஒருவன் கண்ணபிரானுக்கு உயிர்த் தோழனாய் அப்பிரானிடத்திற் பலவகை ஆயுதங்களையும் பயின்று ஒருவர்க்கு மஞ்சாமல் அஹங்காரியாய் ஸாதுஜகங்களை ஹிம்ஸித்துக்கொண்டிருக்க, கண்ணபிரான் ‘நண்பனாகிய இவனை நாம் கொல்வது தகாதே! என்னசெய்யலாம்? என்று வ்யாகுலப்பட்டு, ஒருநாள் அவனை நோக்கி ‘நீ இப்படி செய்வது தகாது‘ என்ன, ஆஸுர ப்ரக்ருதியான அந்த மாலிகன் தன் வாயில் வந்தபடி பிதற்றி ‘நீ எல்லா ஆயுதங்களையும் எனக்குக் கற்பித்தும் சக்ராயுதப் பயிற்சி மாத்திரம் செய்விக்கவில்லையே‘ என்று கண்ணன் மேற்குறைகூற, ‘இதில் பழகுவது உனக்கு முடியாது எனக்கே அஸாதாரணமானது‘ என்ன, ‘என்னால் முடியாதது மொன்றுண்டோ? நீ அவச்யம் அதைக் கற்பிக்க வேணும்‘ என்று அவன் நிர்ப்பந்திக்க, கண்ணன் இது தான் தக்க ஸமயம்‘ என்று திருவுள்ளத்திற்கொண்டு சக்ராயுதத்தை யெடுத்துத் தன் ஒற்றை விரலால் சுழற்றி மேலெறிந்து கையிலேற்க, ‘இது எனக்கு அரிதோ‘ என்று மாலிகன் சொல்ல, ‘இது உனக்கு அரிதே‘ என்று கண்ணன் சொல்லவும் அதை அவன் கேளாமல் அச் சக்ராயுதத்தை வாங்கிச் சுழற்றி நிற்க, அச் சக்கரம் சுழன்று வருவதற்கு இடம் போதாமையாலே அதன் வீச்சு இவன் கையிற் பிடிபடாமல் இவன் தலையை அரிந்து விட்டதென்பது இப்பாட்டில் குறித்த கதை. இவ்வரலாறு எந்தப் புராணத்திலுள்ளதென்று ஆராய்ந்து பார்த்தும் பல பெரியோர்களைக் கேட்டும் ஆகரம் அறியப் பெற்றிலேன் வந்த விடத்திற்கண்டுகொள்க. தத் ஸர்வம் தர்ம வீர்யேண யதாவத் ஸம்ப்ரபச்யதி“ என்று ஸ்ரீ – சதுர்முகன் வரத்தினால் வால்மீகி முனிவர் பகவதவதார வ்ருத்தாந்தங்களைத் தாமாக ஸாக்ஷத்கரித்தது போலே ஆழ்வாரும் மயர்வற மதிகல மருளப் பெற்றுத் தாமாக ஸாக்ஷாத்கரித்தவற்றில் இவ்வரலாறு ஒன்று என்பர் பெரியோர், இப்பிரபந்த்த்தின் ஈற்றுத் திருமொழியின் ஆறாம் பாசுரத்தின் வியாக்கியானத்திலே பெரியவாச்சான் பிள்ளை தாமும் இதை ஸ்பஷ்டமாக அருளிச்செய்துளர். ‘மாலிகன்‘ என்பதே அவன்பெயர், மேன்மைப் பொருளைத் தரும் ‘ஸ்ரீ‘ என்ற சொல் ‘சீ‘ எனத் திரிந்து வந்து சீமாலிகன் எனக் கிடக்கிறது. க்ருஷ்ண ஸ்நேஹத்தால் வந்த மேன்மையுண்டே அவனக்கு, அவனைக் கொல்வது ஆவச்யகமான போது ‘தோழினைக் கொன்றான்‘ என்னும் பழி தனக்கு வாராமல் ‘தன்னாலே தான் முடிந்தான்‘ என்று உலகத்தார் சொல்லும்படி கண்ண பிரான் மாலிகனை உபாயமாகக் கொன்றன்னென்பார் ‘சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்‘ என்றார். “தோழமைக்கொள்ளவும்“ என்னற உம்மை எதிரது தழுவியதாய், தலை கொள்ளவும் என்பதைக் காட்டும். 8 | சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7-8 | சீ மாலிகன் அவனோடு, See maligan avanodu - மாலிகன் என்ற பெயரை யுடையவனோடு தோழமை கொள்ளவும், Thozhamai kollavum - ஸ்நேஹம் செய்து கொள்ளுதற்கும் வல்லாய், Vallaai - வல்லவனாய் அவனை, Avanai - அந்த மாலிகனை நீ, Nee - நீ சாம் ஆறு எண்ணி, Saam aaru enni - செத்து போம் வழியையும் ஆலோசித்து சக்கரத்தால், Sakkarathal - சக்ராயுதத்தினால் தலை கொண்டாய், Thalai kondai - தலையையுமறுத்தாய்; ஆம் ஆறு, Aam aaru - நடத்த வேண்டியவைகளை அறியும், Ariyum - அறிய வல்ல பிரானே, Piraane - ப்ரபுவே! அணி, Ani - அழகிய அரங்கத்தே, Arangathey - கோயிலிலே கிடந்தாய், Kidandhaai - பள்ளி கொண்டிருப்பவனே! ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய், Emaatram ennai thavirthaai - இது தன்னாலே இறே இவர் ஏமாற்றத்தைப் பெரிய பெருமாள் தவிர்த்து அருளிற்றும் இருவாட்சி பூ சூட்ட வாராய், Iruvaatchi poo sootta vaaraai - இருவாட்சி பூ சூட்ட வாராய் |
| 190 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - பரமபதத்திலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருப்பவனே! அவ்விருப்பைக் காட்டிலும் மிக விரும்பி அன்பர்களின் நெஞ்சிலே யெழுந்தருளியிருப்பவனே! லக்ஷ்மீநாதனே! உலகங்களைப் பிரளயங் கொள்ளாதபடி வயிற்றிலே கொண்டு காப்பவனே! மாலையும் மயிர்முடியுமாக உன்னை நான் கண்டு களிக்குமாறு கருமுகைப்பூச் சூடவரவேணு மென்கிறாள். 9 | அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய் தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய் கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் -2-7-9 | அத்தாணியுள், Atthaaniyul - அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி) அமர்ர்கள், Amarrgal - தேவர்கள் சூழ, Soozha - சூழ்ந்திருக்க அங்கு, Angu - அவர்கள் நடுவில் அண்டத்து, Andhathu - பரம பதத்தில் இருத்தாய், Iruththaay - வீற்றிருப்பவனே! தொண்டர்கள், Thondargal - அடியார்களுடைய நெஞ்சில், Nenjil - ஹ்ருதயத்தில் உறைவாய், Uraivaai - வஸிப்பவனே! தூ மலரான், Thoo malaran - பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு மணவாளா, Manavaalaa - கொழுநனே! உலகினை ஏழும், Ulaginaai yezhum - (பிரளய காலத்தில்) ஏழு உலகங்களையும் உண்டிட்டு, Undittu - உண்டு விட்டு ஓர் ஆல் இலையில், Or aal ilaiyil - ஒராவிலையில் துயில் கொண்டாய், Thuyil kondai - யோக நித்திரையைக் கொண்டவனே! நான், Naan - நான் உன்னை கண்டு, Unnai kandu - (நீ பூச் குடியதைப்) பார்த்து உகக்க, Ugakka - மகிழும்படி கருமுகைப் பூ சூட்ட வாராய், Karumukai poo sootta vaaraai - கருமுகைப் பூவை சூட்டவாராய் |
| 191 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - இந்தத் திருமொழிக்குப் பலஞ்சொல்லாதொழிந்தது, இப்பத்துப் பாசுரங்களும் ஸ்வயமே ரஸ்யமாய் போக்யமாயிருக்குமென்பதற்கு. பத்தே – ஏகாரம் – இப்படியும் பாடவிருக்கப் பெறுவதே! என்று இத்திருமொழியின் போக்யதையைக் கொண்டாடியதைக் காட்டும். எண்பகர் – சூட்டிக்கொள்ளலாமென்று சாஸ்த்ரங்களில் எண்ணப்பட்ட என்றுமாம். கொணர்ந்தேன் = ‘கொணா, என்ற பகுதி குறுக்கலும் விரித்தலுமாகிற விகாரங்களைப்பெற்று ‘கொணர், என நின்றது. பகர்மண் – வாமநனாய்ச்சென்ற திருமால் ‘எனக்கு வடி மண் தா, என்று சொல்லப்பெற்ற பூமியை என்றாவது, ‘வடிமண் அளந்துகொள், என்று மஹாபலி உடன்பட்டுச் சொன்ன பூமியை என்றாவது கொள்க. ஆரேனும் ஒன்றைச் சொல்லிலும் ராகத்திலே சேரும்படி சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரென்பது ‘பண்பகர் வில்லிபுத்தூர், என்பதன் கருத்து. உரைசெய்த – பலவின்பால் இறந்தகால வினையாலணையும் பெயர்; இரண்டாம் வேற்றுமைத்தொகை. உரை செய்தவற்றைப் பட்டர் பிரான் சொன்ன இம்மாலையென்க. —— அடிவரவு – ஆநிரை கரு மச்சு தெரு புள் எருது குடம் சீமாலிகன் அண்டம் செண்பகம் இந்திரன். 10 | செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம்மாலை பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே 2-7-10 | செண்பகம், Senbakam - செண்பகப் பூவும் மல்லிகையோடு, Mallikaiyodu - மல்லிகைப் பூவும் செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீர்ப் பூவும் இருவாட்சி, Iruvaatchi - இருவாட்சிப் பூவும் எண் பகர், En pakar - (இன்ன தின்னதென்று) (ஆகிய) எண்ணிச் சொல்லப் படுகிற பூவும், Poovum - மலர்களை யெல்லாம் கொணர்ந்தேன், Konarendhen - கொண்டு வந்தேன்; இன்று, Indru - இப்போது இவை சூட்ட , Ivai sootta - இப் பூக்களைச் சூட்டும்படி வா, va - வருவாயாக என்று, Endru - என்று பகர் மண் கொண்டானை, Pakar man kondanai - பகர்ந்த மண்ணைக் கொண்டவனை (தன்னது என்று சாஸ்திரம் பகர்ந்த லோகத்தை அன்றோ இரந்து கொண்டான் ) ஆய்ச்சி, Aaychi - யசோதை மகிழ்ந்து, Magizhndhu - மகிழ்ச்சி கொண்டு உரை செய்த, Urai seytha - சொல்லியவற்றை எண் பகர் வில்லிபுத்தூர், En pakar villiputhoor - ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கோன், Kon - நிர்வாஹகரான பட்டர் பிரான், Pattar piraan - பெரியாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த இம்மாலை, Immaalai - இந்தச் சொல்மாலையும் பத்தே, Patthe - ஒருபத்தே! |
| 192 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - சந்திர மண்டலத்தளவும் ஓங்கி யிருக்கின்ற மாளிகைகள் நிறையப் பெற்றதும் மங்களாசாஸநம் செய்ய வல்லவர் மலிந்திருக்கப் பெற்றதுமான திருவெள்ளறையில் எழுந்தருளி யிருப்பவனே!, எல்லாத் தேவரும் உன்னை ஸேவிக்கும்படி மந்த்ர புஷ்பங் கொண்டு வந்து மறைந்து நிற்கிறார்கள், பொழுதும் ஸந்தியா காலமாயிற்று. உனது அழகுக்கு ஒரு குறை வாராதபடி நான் திருவந்திக்காப்பிட வரவேணுமென்பதாம். பகவத் ஸ்தோத்ரமாகிய வேத மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு பகவானுக்கு ஸமர்ப்பிப்பதற்காகக் கையிலேந்தியுள்ள மலர் மந்திர மலர் எனப்பட்டது. காப்பு = ரக்ஷை. 1 | இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் மந்திர மா மலர் கொண்டு மறைந்துவராய் வந்து நின்றார் சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய் அந்தியம்போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய் – 2-8 1- | சந்திரன், chandiran - சந்த்ரனானவன் மாளிகை சேரும், maaligai serum - வீடுகளின் மேல் நிலையிலே சேரப் பெற்ற சதுரர்கள் வெள்ளறை, sathurargal vellarai - மங்களா ஸாஸன ஸமர்த்தர்கள் வஸிக்கின்ற திரு வெள்ளறையிலே நின்றாய், nindrai - நின்றவனே! அழகனே, azhagane - அழகு உடையவனே! இந்திரனோடு, indiranodu - இந்திரனும் பிரமன், piraman - ப்ரஹ்மாவும் ஈசன், eesan - ருத்ரனும் இமையவர், imaiyavar - மற்றுமுள்ள தேவர்களும் எல்லாம், ellam - (ஆகிய) யாவரும் மா மந்திரம் மலர் கொண்டு, maa manthiram malar kondru - சிறந்த மந்த்ர புஷ்பங்களைக் கொண்டு உவர் ஆய் வந்து, uvar aay vandhu - (மிக்க ஸமீபமாவும் மிக்க தூரமாகவு மல்லாமல்) நடுவிடத்தி லிருப்பவராக வந்து மறைந்து நின்றார், marainthu nindraar - மறைந்து நின்றார்கள் இது, idhu - இக் காலம் அம், am - அழகிய அந்தி போது ஆகும், andhi podhu aagum - ஸாயம் ஸந்த்யா காலமாகும் காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆகையால்) (நான் உனக்கு ரக்ஷையாக) திருவந்திக் காப்பிடும்படி வருவாயாக |
| 193 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - பசுக்களைக் கறக்க வேண்டிய நான் உன்னைக் காப்பிட அழைத்துக் கொண்டிருப்பதனால்! மேய வெளியே போயிருந்த பசுக்களெல்லாம் கன்றுகளுள்ள விடத்தில் வந்து சேர்ந்த பின்பும் கறப்பாரில்லாமல் முலைக்கடுப் பெடுத்துக் கத்துகின்றன என்பது முதலடியின் கருத்து. ‘கதறுகின்ற, என்பதை இடைநிலைத் தீபகமாக்கி, கன்றுகள் முலை யுண்ணப் பெறாமையால் கத்துகின்றன; பசுக்கள் புறம்பே நின்று கொண்டு கன்றுகள் முலை யூட்டுதல் கறத்தல் செய்யாமையாலே முலைக் கடுப்பாற் கதறுகின்றன என்றுமாம். ‘நேசமேல், என்றவிடத்தில், நேசம் ஏல் என்று பிரித்து ஏல் என்பதை அசைச் சொல்லாகவுங் கொள்வர். நேசம் – ‘ஸ்நேஹம், என்ற வடசொல் விகாரம். 2 | கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம் நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய் மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள் திருவெள்ளறை நின்றாய் நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் -2 8-2 | மதிள், madhil - மதிளரணை யுடைய திரு வெள்ளறை, thiru vellarai - திரு வெள்ளறையிலே நின்றாய், nindrai - நின்றருளினவனே! மேல், mel - (என்) மேல் ஒன்றும், ondruum - துன்பமும் நேசம் இலாதாய், naesam ilaadhaay - அன்பில்லாதவனே! உன்னை கூவி, unnai koovi - உன்னைக் கூவிக் கொண்டு நின்றொழிந்தேன் (அதனால்), nindrozhinthen (adhanal) - நின்று விட்டேன் பசு எல்லாம், pasu ellam - பசுக்களெல்லாம் கன்றுகள் இல்லம் புகுந்து, kanrugall illam pugundhu - கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து கதறுகின்ற, kadharukindra - முலை கடுப்பாலே கத்துகின்றன; அந்தி போது, andhi podhu - அந்தி வேளையில் மன்றில், manril - நாற் சந்தியில் நில்வேல், nilvael - நில்லாதே; என் தன் சொல்லு, en than sollu - என்னுடைய வார்த்தை நன்று கண்டாய், nanru kandaay - (உனக்கு) நல்லதாகுங்கிடாய் நான் உன்னை காப்பு இட வாராய், naan unnai kaappu ida vaaraay - இப்போது இது சொல்வது சடக்கென (நீ) காப்பிட வருவதற்காக |
| 194 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - சிறு பெண்கள் விளையாட்டாக மணற்சோறு சமைப்பதும் மணல் வீடு அமைப்பதுமாயிருக்க, அதை நீ அழித்து அப் பெண்களோடே வலிவிற் சண்டை யிட்டுக் கொண்டிருந்ததனால் ‘நீ இப்படித் திரியக்கூடாது, என்று நான் உனக்கு ஹிதமாக அதட்டினேன்; ஒருகால் நான் அடிப்பனோ வென்று அஞ்சி நீ ஓடிப் போய்ச் சோறுண்பதற்கும் வாராது நின்றிட்டாய்; இப்போது அப்படியொன்றுஞ் செய்யமாட்டேன்; காப்பிட நீ வரவேணுமென்கிறாள். ஆள்வாய்! – என் சொற்படி கேட்டு நான் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனே! என்றவாறு. முப்போது – இரண்டு ஸந்த்யையும் ஒரு உச்சிப்போதும். ‘‘வானவரேத்த,, என்பதும் பாடம். 3 | செப்போது மென் முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய் முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய் இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 3 | ஆள்வாய், aalvai - என்னை ஆளப் பிறந்தவனே! முப்போதும், muppothum - மூன்று காலத்திலும் வானவர், vaanavar - தேவர்கள் ஏத்தும், eththum - ஸ்தோத்திரஞ்செய்கின்ற முனிவர்கள் வெள்ளறை, munivargal vellarai - (உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திரு வெள்ளறையிலே நின்றாய், nindrai - நிற்பவனே! (நீ) செப்போது, seppodhu - பொற் கலசங்களை (உவமையாகச்) சொல்லத் தகுந்த மெல் முலையார்கள், mel mulaiyaarkal - மெல்லிய முலையை யுடைய ஸ்திகள் சிறு சோறும், siru sorum - (விளையாட்டாகச் செய்த) மணற் சோற்றையும் (சிறு) இல்லும், (siru) illum - மணல் வீட்டையும் சிதைத்திட்டு, sidhaidittu - அழித்து விட்டு (நிற்க) அப்போது, appodhu - அக் காலத்தில் நான், naan - நான் உரப்ப, urappu - கோபித்துச் சொல்ல போய், poi - (பிடித்தடிப்பேனோ? என்றஞ்சி என் முன் நில்லாமல்) அப்பாற்போய் அடிசிலும், adisilum - சோற்றையும் உண்டிலை, undilai - உண்ணாமலிருந்திட்டாய் இப்போது, ippodhu - இந்த மையத்திலே நான் ஒன்றும் செய்யேன், naan ondruum seyyen - நான் உன்னை (மருட்டுதல் முதலியன) ஒன்றும் செய்ய மாட்டேன் எம்பிரான் காப்பிட வாராய், empiraan kaappida vaaraay - எம்பிரான் காப்பிட வாராய் |
| 195 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - ‘நாங்கள் கண்ணை விழித்து விளையாட வொண்ணாதபடி இந்த கிருஷ்ணன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவியும், நீ ஏன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவினாயென்று நாங்கள் கேட்கக் காலினாலுதைத்தும் போனான், என்றிப்படி இவ்வூரிலுள்ள பிள்ளைகள் ஒருவரிருவர் அல்லாமல் மிகப்பலர் வந்து என்னிடத்தில் முறையிட்டுக் கொள்ளுகிறார்கள்; ஆதலால் நீ அங்கு போகாமல் நான் காப்பிடும்படி வரவேணுமென்கிறாள். கண்டாரோடே தீமை செய்வாய் = உன்னிடம் அன்புள்ளவர்களாய் நீ செய்தவற்றைப் பொறுக்குமவர்களிடத்தில் மாத்திரமல்லாமல் யாவரிடத்துமட் தீமை செய்கிறாயே! என்றவாறு. ‘‘தீமை செய்வாய்! வண்ணம் வேலையதொப்பாய்,, என்றது – நீ தீம்பு செய்தாலும் உன்னை விடமுடியாதபடி யிருக்கிறது உனது வடிவழகு என்றபடி. வேலையது = அது – முதல் வேற்றுமைச் சொல்லுருபு. 4 | கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய் வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் 2-8 4 | கண்ணனே, kannane - ஸ்ரீக்ருஷ்ணனே! வெள்ளறை நின்றாய்!, vellarai nindrai! - புண்டரீகாக்ஷன் தானே இவன் கண்டாரோடே, kandaarode - கண்டவரோடெல்லாம் தீமை செய்வாய், theemai seivaay - தீம்பு செய்பவனே! வண்ணம், vannam - திருமேனி நிறம் வேலை அது, velai adhu - கடலின் நிறத்தை ஒப்பாய், oppaay - ஒத்திருக்கப் பெற்றவனே! வள்ளலே, vallale - உதாரனே! எண் அரு, en aru - எண்ணுவதற்கு அருமையான (மிகப் பல) பிள்ளைகள் இவர், pillaigal ivar - இப் பிள்ளைகள் வந்திட்டு, vandhittu - வந்திருந்து மணல் கொடு, manal kodu - மணலைக் கொண்டு வந்து கண்ணில் தூவி, kannil thoovi - கண்ணில் தூவி விட்டு காலினால் பாய்ந்தனை, kaalinaal paaindhanai - (அதனோடு நில்லாமல்) காலினாலும் உதைத்தாய்; என்று என்று, endru endru - என்று பலதரஞ்சொல்லி (நீ செய்யுந்தீம்பைக் குறித்து) முறைப்படுகின்றார், muraippaduginraar - முறையிடா நின்றார்கள் காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆதலால் அங்கே போவதை விட்டு) காப்பு இட வாராய் |
| 196 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - பஞ்சலக்ஷங் குடியுள்ள இவ்வூரிலோ தீம்புசெய்யும் பிள்ளைகள் பலருண்டு; அப்படியிருக்கவும், அவர்கள் தாம் தாம் செய்யுந் தீம்பை உன்மேலே யேற்றிவிடுகிறார்கள். ஆதலால் உன் மேலே குற்றத்தைச் சுமத்துகின்ற அவர்களை விட்டிட்டு, உன்னை அன்புடன் வாழ்த்திக் காப்பிடும்படி உன்மேல் பரிவுள்ளவர்களிருக்கின்ற இவ்விடத்திற்கு வரவேணுமென்பதாம். எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் ஸ்வயம் ப்ரகாசமாய் ஜ்ஞாநமயமாயிருப்பதால் ‘ஞானச்சுடரே, என்கிறார். எல்லாம் போகாது – ஒருமைப் பன்மை மயக்கம். 5 | பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய் நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி சொப்படக் காப்பிட வாராய் -2 8-5 | இ ஊரில், i ooril - (பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே தீமைகள் செய்வார், theemaigal seivaar - தீம்புகளைச் செய்பவர்களாகிய பிள்ளைகள், pillaigal - சிறுவர்கள் பல் ஆயிரவர், pal aayiravar - அனேக ஆயிரக் கணக்கானவர்கள்; எல்லாம், ellam - அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம் உன் மேல் அன்றி , un mel andri - உன் மேலல்லாமல் போகாது, pogaadhu - (வேறொருவர் மேலும்) ஏறாது; எம்பிரான்! நீ இங்கே வாராய், empiraan! nee inge vaaraay - (இப்படியிருப்பதால் அங்கே போகாமல்) எம்பிரான்! நீ இங்கே வாராய்; நல்லார்கள் வெள்ளறை நின்றாய், nallaargal vellarai nindraay - நல்லவர்கள் வாழ்கிற வெள்ளறை(யில்) நின்றாய்! ஞானம் சுடரே, gyaanam sudare - ஞான வொளியை யுடையவனே! உன் மேனி, un meni - உன் திருமேனியை சொல் ஆர் நின்று ஏத்தி, sol ar nindru aethi - சொல் நிறையும்படி நின்று ஸ்தோத்ரஞ்செய்து வாழ்த்தி சொப்பட காப்பு இட வாராய், vaazhthi soppada kaappu ida vaaraay - மங்களாசாஸநஞ்செய்து நன்றாக காப்பு இட வாராய் |
| 197 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - கம்ஸன் ஆகாச வாணி சொன்னதைக் கேட்டது முதல் தேவகியின் கருப்பம் பிறந்ததும் அப்போதைக்கப் போது அழித்து வருகையில் உனது யோக நித்திரையாற் பிறந்த கன்னிகையைக் கொல்ல முயன்ற போது அக் கன்னிகை ‘உன்னைக் கொல்லப் போகிறவன் ஒளித்து வளர்கின்றான், என்று சொல்லியதைக் கேட்டது முதல் உன் மேல் கோபங்கொண்டவனாய் உன்னை வஞ்சனையாலழிப்பதற்குத் தாய் வடிவத்தோடு போகும்படி பேய் மகளாகிய பூதனையை ஏவினானென்று லோக ப்ரவாதமிருக்கிறது; ஆகையால், அவன் உன்னைக்கொல்ல இன்னும் யாரையேனும் ஏவக் கூடும்; எனக்கு அச்சமாயிருக்கிறது; ஆகவே, நீ அவ்விடத்து நின்றும் நான் அந்திக் காப்பிட இங்கு வரவேணுமென்பதாம். 6 | கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய் அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2- 8-6 | மஞ்சு தவழ், manju thavazh - மேகங்கள் ஊர்ந்து செல்கின்ற மணி மாடம், mani maadam - ரத்ந மயமான வீடுகளையும் மதிள் திருவெள்ளறை, madhil thiru vellarai - மதிளையுமுடைய திருவெள்ளறை(யில்) நின்றாய்! கஞ்சன், kanjan - கம்ஸனானவன் நின் மேல், nin mel - உன் மேலே கறுக்கொண்டு, karukkondu - கோபங்கொண்டு கரு நிறம், karu niram - கரு நிறத்தையும் செம் மயிர், sem mayir - செம் பட்ட மயிரையுமுடைய பேயை, peyai - பூதனையை வஞ்சிப்பதற்கு, vanjippatharku - (உன்னை) வஞ்சனையாகக் கொல்வதற்கு விடுத்தான், Vidutthaan - அனுப்பினான் என்பது, Enbadhu - என்பதான ஓர் வார்த்தையும் , Or vaarthaiyum - ஒரு சொல்லும் உண்டு, undu - கேட்டிருப்பதுண்டு நீ அங்கு நிற்க, Nee Angu Nirka - (ஆதலால்) நீ அவ்விடத்திலே நிற்பதற்கு அஞ்சுவன், Anjuvan - நான் அஞ்சா நின்றேன் அழகனே! காப்பு இட வாராய், Azhagane! Kaappu Ida Vaaraay - அழகனே! காப்பு இட வாராய் |
| 198 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - ‘’பேய்ச்சிமுலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே” என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டின் இரண்டு மூன்றாமடிகளை ஒருபுடை ஒப்பிடுக. பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கையோ அதிமாநுஷம், ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபம் என்னாலறியப் போகிறதில்லை யென்கிறாள். 7 | கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலை உண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய் பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய் -2 -8-7 | கள்ளம், Kallam - வஞ்சனை யுடைய சகடும், Sagadum - சகடாஸுரனையும் மருதும், Marudhum - யமளார்ஜுநங்களையும் கலக்கு அழிய, Kalakku Azhiya - (வடிவம்) கட்டுக் குலைந்தழியும்படி உதை செய்த, Udhai Seydha - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய பிள்ளை அரசே, Pillai Arase - பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே! நீ, Nee - நீ பேயை, Peyai - பூதனையினுடைய முலை பிடித்து உண்ட பின்னை, Mulai pidithu unda pinnai - தாயாகவே நினைத்து முலையைப் பிடித்து (வாய் வைத்து) உண்ட பின்பு உள்ள ஆறு, Ulla aaru - உள்ள படி ஒன்றும் அறியேன், Ondrum ariyen - ஒன்றுமறிகிறேனில்லை; ஒளி உடை வெள்ளறை நின்றாய், Oli udai vellarai nindrai - ஒளி உடை வெள்ளறை நின்றாய்! இது, Idhu - இப்போது பள்ளி கொள் போது ஆகும், Palli kol podhu aagum - படுத்து உறங்குகிற வேளையாகும்; பரமனே!, Paramane! - அழகாலே மேம்பட்டவனே காப்பு இட வாராய் |
| 199 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - அங்கு துர்க்கையென்னும் க்ஷுத்ர தேவதையிருப்பதனால் அவ்விடத்தை விட்டு நான் காப்பிடும்படி விரைந்து வர வேணுமென்பதாம். \ கபாலி – ருத்ரனென்றுமாம். இனி, உடம்பு நிறையச் சாம்பல் பூசி எலும்புகளை மாலையாகக் கட்டியணிந்து கையில் கபாலங்கொண்டு பிச்சை யெடுப்பவர் இரவிற் பிச்சை யெடுத்தத் திரிவது முற்காலத்தியற்கையாதலால் அப்படிப்பட்டவர்களை ‘கபாலி, என்றதாகவுமாம்; அப்படியிருப்பவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சுமென்று அழைத்தல் இயல்பு. 8 | இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் கும்பக் களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே செம் பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் கம்பக் கபாலி காண் அங்கு கடிதோடிக் காப்பிட வாராய் – 2-8 -8 | இன்பம் அதனை, Inbam adhanai - உன் குண சேஷ்டிதங்களால்) பரமாநந்தத்தை உயர்த்தாய், Uyarthaai - (எனக்கு) மேன் மேலுண்டாக்கினவனே! தொல்லை இன்பத்து இறுதி கண்டவள் அன்றோ இமையவர்க்கு, Imaiyavarkku - தேவர்க்கு என்றும், Endrum - எந்நாளும் அரியாய், Ariyaai - அருமையானவனே! கும்பம், Kumbam - மஸ்தகத்தையுடைய களிறு, KaLiru - குவலயாபீடத்தை அட்ட, Atta - கொன்ற கோவே, Koode - ஸ்வாமியே! கொடு, Kodu - கொடுமை தங்கிய கஞ்சன், Kanjan - கம்ஸனுடைய நெஞ்சினில், Nenjil - மநஸ்ஸிலே கூற்றே, Kootre - யமன் போல் பயங்கரனாய்த் தோன்றுமவனே! செம் பொன் மதிள் வெள்ளறையாய்!, Sem pon madhil vellaraiyaay! - செம் பொன் மதிள் வெள்ளறையாய்! செல்லத்தினால் வளர், Sellathinaal valar - செல்வச் செருக்கோடு வளர்கின்ற பிள்ளாய், Pillay - குழந்தாய்! அங்கு, Angu - நீ இருக்கிறவிடத்தில் கம்பம், Kambam - (கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்க வல்ல கபாலி காண், Kabali kaan - துர்க்கையாகும்; கடிது ஓடி காப்பு இட வாராய், Kadidhu odi kaappu ida vaaraay - (ஆகையால் அங்கு நில்லாமல்) மிகவும் விரைந்தோடி காப்பு இட வாராய் |
| 200 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - “உனக்கு ரக்ஷை யிடும்படி விலக்ஷணரான பிராமணர் சங்குகளில் நீரெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று யசோதை சொல்லவும், கண்ணன் விளையாடப் போகவே, மீண்டும் ‘நீ பிராமணர்கள் ரக்ஷை யிடும்படி வராவிட்டாலும் நாற் சந்தியிலே செருக்குடன் விளையாடித் திரிதல் கூடாது. அது க்ஷுத்ர தேவதைகள் வஸிக்கிற இடமாகும். தாய் சொல்வதை இன்னுஞ் சிலகாமாவது கேள்; உனக்கு ரக்ஷை யிட விளக்கேற்றுகிறேன்; நீ அவ்விடத்தை விட்டு வரவேணும், என்கிறாள். இக்காலத்திலும், விளக்கேற்றிக் குழந்தைகளுக்குச் சுழற்றும் வழக்கமுளது. 9 | இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார் தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லு கொள்ளாய் சில நாள் திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய் உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் – 2-8 9 | இருக்கொடு, Irukodu - (புருஷ ஸூக்தம் முதலிய) ருக்குக்களைச் சொல்லிக் கொண்டு நீர், Neer - தீர்த்தத்தை சங்கில், Sangil - சங்கத்திலே கொண்டிட்டு, Kondittu - கொணர்ந்து எழில், Ezhil - விலக்ஷணரான மறையோர், Maraaiyor - ப்ராஹ்மணர் (உனக்கு ரக்ஷையிடுவதற்கு) வந்து நின்றார், Vandhu nindraar - வந்து நிற்கிறார்கள்; நம்பி, Nambi - தீம்பு நிறைந்தவனே! சந்தி நின்று, Sandhi nindru - நாற்சந்தியிலே நின்று தருக்கேல், Tharukkael - செருக்கித் திரியாதே சில நாள், Sil naal - சில காலம் தாய் சொல்லு, Thai sollu - தாய் வார்த்தையை கொள்ளாய், Kollaay - கேட்பாயாக; தேசு உடை வெள்ளறை நின்றாய், Desu udai vellarai nindraay - தேஜஸ்ஸை உடைய வெள்ளறை நின்றாய்! இன்று, Indru - இப்போது நான், Naan - நான் திரு காப்பு, Thiru kaappu - அழகிய ரக்ஷையை உன்னை சாத்த, Unnai saathu - உனக்கு இடுதற்காக உருகாட்டும் அந்திவிளக்கு, Urukaatum andhivilakku - உன் திருமேனி வடிவத்தைக் காட்டுகின்ற அந்தி விளக்கை ஏற்றுகேன் வாராய், Etruken vaaraay - ஏற்றுவேன் (இதைக்காண) கடுக வருவாயாக |
| 201 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - ஒரு பாசுரத்தின் ஓரடிக்கு இத் துணை மஹிமை கூறிய முகத்தால் இத்திருமொழியின் பயன் அளவிட்டுச் சொல்ல முடியாதென்பதைக் கைமுதிக ந்யாயத்தால் பெறவைத்தார். (பாதப்பயனித்யாதி.) ஒவ்வொரு பாட்டின் கடைசிப்பாதத்தில் கூறியுள்ள காப்பிடலாகிய புருஷார்த்தத்தைக் கைக் கொள்ளக் கடவ பக்தர்களுடைய பாபங்கள் தீருமென்று முரைக்கலாம். 10 | போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம் வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2- 8-10 | மாதர்க்கு உயர்ந்த, Maadharkku uyarntha - ஸ்திரீகளுள் சிறந்த அசோதை, Asodhai - யசோதைப் பிராட்டி மகன் தன்னை, Magan thannai - தன் புத்ரனான கண்ணனை காப்பு இட்ட, Kaappu itta - ரக்ஷை யிட அழைத்த மாற்றம், Maatram - வார்த்தையை போது அமர், Pothu amar - தாமரைப் பூவைப் (பிறப்பிடமாகப்) பொருந்திய செல்வக் கொழுந்து, Selva kozhundhu - செல்வத்திற்கு உரியவளாய் மற்றைத் தேவியரிற் சிறந்தவளான பிராட்டி புணர், Punar - ஸம்ச்லேஷிக்கப் பெற்ற திரு வெள்ளறையானை, Thiru vellaraiyaanai - திரு வெள்ளறையில் நின்றருளியவனைப் பற்றி வேதப் பயன், Vedha payan - (எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்கையையே) வேத தாத்பர்யமாக கொள்ள வல்ல, Kolla valla - அறிய வல்ல விட்டு சித்தன், Vittu chithan - பெரியாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த மாலை, Maalai - பாமாலையினுடைய பாதம் பயன், Paadham payan - ஓரடி கற்றதனாலாகிய பயனை; நாலாம் அடியில் சொன்ன காப்பிடுதலை கொள்ள வல்ல, Kolla valla - அடைய வல்ல பக்தர் உள்ளார், Bakthar ullaar - பக்தராக உள்ளவரது வினை, Vinai - வினைகளெல்லாம் போம், Poom - கழிந்து விடும் |
| 202 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1 | வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடை யிட்டு அதனோசை கேட்கும் கண்ண பிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லோம் உன் மகனைக் காவாய் புண்ணில் புளிப்பெய்தா லொக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல அண்ணற் கண்ணானோர் மகனைப் பெற்ற அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்–2-9-1 | வெண்ணெய்,Vennai - வெண்ணெயை விழுங்கி,Vizhunki - (நிச் சேஷமாக) விழுங்கி விட்டு வெறுங் கலத்தை,Verung Kalathai - (பின்பு) ஒன்றுமில்லாத பாத்ரத்தை வெற்பிடை இட்டு,Verpidai Ittu - கல்லிலே பொகட்டு அதன் ஓசை,Adhan Osai - அப்படி எறிந்ததனாலுண்டான ஓசையை கேட்கும்,Ketkum - கேட்டுக் களிக்கின்ற கண்ண பிரான்,Kanna Piraan - ஸ்ரீக்ருஷ்ண பிரபு கற்ற,Katra - படித்துள்ள கல்வி தன்னை,Kalvi Thannai - (தஸ்கர) வித்தையைக் காக்க கில்லோம்,Kaakka Killom - (எங்களால்) காக்க முடியாது; உன் மகனை,Un Mahanai - (ஆகையால்) உன் பிள்ளையை காவாய்,Kaavai - (தீம்பு செய்யாமல்) தடுப்பாயாக; புண்ணில்,Punnil - புண்ணின் மேலே புளி பெய்தால் ஒக்கும்,Puli Peithal Okkum - புளியைச் சொரிந்ததைப் போன்ற (தீவிரமான) தீமை இவை,Theemai Ivai - இப்படிப்பட்ட தீம்புகளை புரை புரை,Purai Purai - வீடு தோறும் செய்ய வல்ல,Seyya Valla - செய்வதில் ஸமர்த்தனாகி அண்ணல் கண்ணான்,Annal Kannan - ஸ்வாமித்வ ஸூசகமான கண்களை யுடையனான ஓர் மகனை,Or Mahanai - ஒரு புத்திரனை பெற்ற,Petra - பெற்ற அசோதை நங்காய்,Asothai Nangai - யசோதைப் பிராட்டி; உன் மகனை,Un Mahanai - உன் பிள்ளையை கூவாய்,Koovai - அழைத்துக் கொள்வாயாக. |
| 203 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2 | வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பீ வருக இங்கே அரிய னிவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசல கத்தார் பரிபவம் பேசத் தரிக்க கில்லேன் பாவியேனுக்கு இங்கே போத ராயே–2-9-2 | இங்கே,Enge - இவ்விடத்திலே வருக வருக வருக,Varuga Varuga Varuga - சடக்கென வருவாயாக; வாமன நம்பீ! இங்கே வருக-;,Vamana Nambi Inge Varuga - வாமன நம்பீ! இவ்விடத்திலே வருவாயாக; கரிய குழல்,Kariya Kuzhal - கரு நிறமான கூந்தலையும் செய்ய வாய்,Seyya Vaai - செந் நிறமான வாயையும் முகத்து,Mugaththu - (ஒப்பற்ற) முகத்தையு முடைய காகுத்த நம்பீ,Kaaguththa Nambi - இராம மூர்த்தி! இங்கே வருக-;,Inge Varuga - இவ்விடத்திலே வருவாயாக நங்காய்,Nangai - (என்று கண்ணனையழைத்து, தன் பிள்ளைமேல் குற்றம்சொன்னவளை நோக்கி யசோதை) குண பூர்ணை யானவளே! இவன்,Ivan - இந்தப் பிள்ளை எனக்கு,Enakku - எனக்கு இன்று,Indru - இப்போது அரியன்,Ariyan - அருமையானவனாயிற்றே; அஞ்சனம்,Anjanam - (என்று சொல்லி மீண்டும் கண்ணனை நோக்கி) மை போன்ற வண்ணா,Vanna - வடிவு படைத்தவனே! அசல் அகத்தார்,Asal Agaththar - அசல் வீட்டுக்காரர்கள் பரிபவம் பேச,Paripavam Pes - (உன்மேல்) அவமாந கரமான சொற்களைச் சொன்னால் தரிக்க கில்லேன்,Tharikka Killen - பொறுக்க வல்லேனல்லேன்; பாவியேனுக்கு,Paaviyeenukku - (இப்படி பரிபவங்களைக் கேட்கும்படியான) பாவத்தைப் பண்ணின எனக்கு இங்கே போதராய்,Inge Potharai - (இவ் வருத்தந் தீர) இங்கே வாராய் (என்று யசோதை கண்ணனையழைக்கிறாள்.) |
| 204 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3 | திருவுடைப் பிள்ளை தான் தீய வாறு தேக்க மொன் றுமிலன் தேசு டையன் உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான் அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் வழக்கோ அசோதாய் வருகவென்று உன் மகன் தன்னைக் கூவாய் வாழ வொட்டான் மது சூதனனே–2-9-3 | திரு உடை பிள்ளை தான்,Thiru Udai Pillai Thaan - உன் செல்லப் பிள்ளையாகிய கண்ணன் தீய ஆறு,Theeya Aaru - தீம்பு செய்யும் வழியில் ஒன்றும் தேக்கம் இவன்,Ondrum Theakkam Ivan - சிறிதும் தாமஸிப்பதில்லை. தேசு உடையன்,Desu Udaiyan - அதைத் தனக்குப்) புகழாகக் கொண்டிரா நின்றான்; உருக வைத்து,Uruga Vaithu - (இவன் செய்ததென்ன வென்றால்) உருகுவதற்காக (அடுப்பில் நான் வைத்திருந்த) வெண்ணெய்,Vennai - வெண்ணெயை குடத்தொடு,Kudathodu - தாழியோடே (நிச்சேஷமாக) உறிஞ்சி,Uruinji - உறிஞ்சி விட்டு உடைத்திட்டு,Udaithittu - தாழியை யுமுடைத்துப் பொகட்டு போந்து நின்றான்,Ponthu Nindran - (பிறகு தான் உடையாதவன் போல்) அவ்வருகே வந்து நில்லா நின்றான்; அசோதாய்,Asothai - யசோதையே! அருகு இருந்தார் தம்மை,Arugu Irundhar Thammai - உன் வீட்டருகே இருந்தவர்களை அநியாயம் செய்வது,Aniyaayam Seivadhu - இஷ்டப்படி அக்ரமஞ் செய்வது வழக்கோ தான்,Vazhakkothan - ந்யாயமாகுமோ? உன் மகன் தன்னை,Un Mahan Thannai - (நீ) உன் பிள்ளையை வருக என்று,Varuga Endru - ‘வா’என்று சொல்லி கூவாய்,Koovai - அழைக்க வேணும்; மது சூதனன்,Madhu Soodhanan - (நீ அழைத்துக் கொள்ளா விட்டாலோ) இக் கண்ண பிரான் வாழ ஒட்டான்,Vaazha Ottan - (எங்களைக்) குடி வாழ்ந்திருக்க வொட்டான். |
| 205 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4 | கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே தெண் திரை சூழ் திருப் பேர்க் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே உண்டு வந்தேன் அம்ம னென்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி தானும் கண்டெதிரே சென் றெடுத்துக் கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே–2-9-4 | கொண்டல்,Kondal - காளமேகம் போன்ற வண்ணா,Vanna - வடிவை யுடையவனே! இங்கே போதராய்,Inge Potharai - இங்கே வாராய்; கோயில்,Kovil - திரு வரங்கத்தில் வஸிக்குமவனான பிள்ளாய்,Pillai - பிள்ளையே! இங்கே போதராய் ;,Inge Potharai - இங்கே வாராய்; தென் திரை சூழ்,Then Thirai Soozh - தெளிவான அலையை யுடைய ஜலத்தால் சூழப்பட்ட திருப்பேர்,Thiruper - திருப்பேர் நகரிலே கிடந்த,Kidandha - பள்ளி கொண்டிரா நின்ற திரு நாரணா,Thiru Narana - ஸ்ரீமந் நாராயணனே! இங்கே போதராய்,Inge Potharai - இங்கே வாராய்; அம்மம்,Ammam - (இப்படி அம்ம முண்கைக்காகப் புகழ்ந்தழைத்த யசோதையினருகிற் கண்ண பிரான் வந்து) உணவை உண்டு வந்தேன்,Undu Vanthen - (நான்) உண்டு வந்தேன் என்று சொல்லி,Endru Solli - என்று சொல்லி ஓடி,Odi - ஓடி வந்து அகம் புக,Agam Puga - அகத்தினுள்ளே புகும் ஆய்ச்சி தானும்,Aaychi Thaanum - தாயான யசோதையும் கண்டு,Kandu - (கண்ணன் வந்த வரவையும் இவன் முக மலர்ச்சியையும்) கண்டு (மகிழ்ந்து) எதிரே சென்று,Ethire Sendru - எதிர் கொண்டு போய் எடுத்துக் கொள்ள,Eduthuk Kolla - (அவனைத் தன் இடுப்பில்) எடுத்துக் கொள்ளும்படி கண்ண பிரான்,Kanna Piraan - (அந்த) ஸ்ரீகிருஷ்ணன் கற்ற,Katra - (தானாகவே) கற்றுக் கொண்ட கல்வி தானே,Kalvi Thaane - கல்வியின் பெருமையிருந்தவாறு என்னே! (என்று ஆழ்வார் இனியராகிறார்) |
| 206 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5 | பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளை யாள் என் மக ளிருப்ப மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன் சாளக் கிராம முடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான் ஆலைக் கரும்பின் மொழி யனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்–2-9-5 | ஆலை கரும்பு அனைய,Aalai Karumbu Anaiya - ஆலையிலிட்டு ஆடும்படி முதிர்ந்த கரும்பைப் போன்று இன் மொழி,En Mozhi - மதுரமான மொழியை யுடைய அசேதை நல்லாய்,Asethai Nallai - யசோதைப் பிராட்டி! பல் வளையாள்,Pal Valaiyaal - பல வகை வளைகளை அணிந்துள்ள என் மகன்,En Mahan - என் மகனானவன் பாலை கறந்து,Paalai Karandhu - பாலை (ப்பாத்திரங்களில்) கறந்தெடுத்து அடுப்பு ஏற வைத்து,Aduppu Era Vaithu - (அப் பாத்திரங்களை) அடுப்பின் மேலேற்றி வைத்து இருப்ப,Irubba - (அவற்றுக்குக் காவலாக) இருக்க (நான்) நெருப்பு வேண்டி,Neruppu Vendi - (அவற்றைக் காய்ச்சுவதற்காக) நெருப் பெடுத்து வர விரும்பி மேலை அகத்தே சென்று,Melai Agaththe Sendru - மேலண்டை வீட்டிற்குப் போய் அங்கே,Ange - அவ் விடத்தில் இறைப் பொழுது,Iraip Pozhuthu - க்ஷண காலம் பேசி நின்றேன்,Pesinindren - (அவர்களோடு) பேசிக் கொண்டிருந்து விட்டேன்; (அவ் வளவிலே) சாளக்கிராமம் உடைய,Saalagrama Udaiya - ஸ்ரீஸாளக்ராமத்தை (இருப்பிடமாக) உடையனாய் நம்பி,Nambi - ஒன்றாலுங் குறைவற்றவனான (உன் மகன்) சாய்த்து,Saithu - (என் மகளிருந்த விடத்திற் சென்று) (அந்த க்ஷீர பாத்திரத்தைச்) சாய்த்து பருகிட்டு,Parugittu - (அதிலிருந்த பாலை முழுதும்) குடித்து விட்டு போந்து,Ponthu - (இப் புறத்தே) வந்து நின்றான்,Nindran - (ஒன்றுமறியாதவன் போல) நில்லா நின்றான்; உன் மகனை,Un Mahanai - (இனி இவன் எங்களகங்களில் இவ் வாறான தீமைகளைச் செய்யத் துணியாதபடி நீ சிக்ஷிப்பதற்காக) உன் பிள்ளையான இவனை கடவாய்,Kadavai - அழைத்துக் கொள்ள வேணும். |
| 207 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6 | போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய் ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மட்டேன் கோதுகலமுடைக் குட்டனேயா குன்றெடுத்தாய் குடமாடு கூத்தா வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே–2-9-6 | கோதுகலம் உடை,Kothukalam Udai - (எல்லாருடைய) கொண்டாட்டத்தையும் (தன் மேல்) உடைய ஓ குட்டனே,O Kuttane - வாராய் பிள்ளாய்! குன்று,Kundru - (கோவர்த்தனம் என்னும்) மலையை எடுத்தாய்,Eduththai - (குடையாக) எடுத்தவனே! குடம் ஆடு கூத்தா,Kudam Aadu Kooththa - குடக் கூத்தாடினவனே! வேதம்,Vedam - வேதங்களுக்கு பொருளே,Porule - பொருளாயிருப்பவனே! என் வேங்கடவா,En Vengadavaa - ‘என்னுடையவன்’ என்று அபிமாநிக்கும்படி திருமலையில் நிற்பவனே! வித்தகனே,Viththagane - வியக்கத் தக்கவனே! (நீ) இங்கே,Inge - என்னருகில் போதர் கண்டாய் போதர் கண்டாய்,Pothar Kandai Pothar Kandai - விரைந்து ஓடிவா; போதரேன் என்னாதே,Potharen Ennaathe - (என்று யசோதை அழைக்க, அவன் ‘வரமாட்டேன்’ என்ன; )‘வர மாட்டேன்’ என்று சொல்லாமல் போதர் கண்டாய்,Pothar Kandai - (இசைந்து) வருவாயாக; அசல் அகத்தார்,Asal Agaththar - (என்று யசோதை வேண்டி யழைக்க, கண்ணன் ‘நீ இங்ஙனே வருந்தி யழைப்பது ஏதுக்காக?’ என்ன ) அசல் வீட்டுக் காரர்கள் ஏதேனும்,Ethenum - இன்னது என்று எடுத்துக் கூற ஒண்ணா படியுள்ள சில கடுஞ்சொற்களை சொல்லி,Solli - (உன்னை நோக்கித் தம்மிலே தாம்) சொல்லிக் கொண்டு ஏதேனும்,Ethenum - (அவ்வளவோடும் நில்லாமல்) (என் காதால் கேட்கவும் வாயாற்சொல்லவு மொண்ணாத) சில பழிப்புகளை பேச,Pesa - (என் பக்கலிலே வந்து) சொல்ல நான்,Naan - (அவற்றை) (உன் மீது பரிவுள்ள) நான் கேட்க மாட்டேன்,Ketka Matten - கேட்டுப் பொறுக்க மாட்டேன் இங்கே போதராய்,Enge Potharai - (ஆதலால், அவர்களின் வாய்க்கு இரையாகாமல்) இங்கே வருவாயாக, (என்றழைக்கிறாள்.) |
| 208 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7 | செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக் காரம் நறு நெய் பாலால் பன்னிரண்டு திரு வோணம் அட்டேன் பண்டும் இப்பிள்ளை பரிசறிவன் இன்ன முகப்பன் நா னென்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான் உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே–2-9-7 | அசோதை நங்காய்!,Asothai Nangai - அசோதை நங்காய்! செந்நெல் அரிசி,Sennel Arisi - செந்நெல் லரிசியும் சிறு பருப்பு,Siru Paruppu - சிறு பயற்றம் பருப்பும் செய்த,Seidha - (சமையற் குற்றமொன்றும் நெராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச்) செய்த அக்காரம்,Akkaram - கருப்புக் கட்டியும் நறு நெய்,Naru Nei - மணம் மிக்க நெய்யும் பாலால்,Paalaal - பாலும் ஆகிற இவற்றாலே பன்னிரண்டு திரு ஓணம்,Pannirandu Thiru Onam - பன்னிரண்டு திருவோணத் திரு நாளளவும் அட்டேன்,Atten - (நோன்புக்கு உறுப்பாகப் பாயஸ பக்ஷணாதிகளை) சமைத்தேன்; பண்டும்,Pandum - முன்பும் இப் பிள்ளை,E Pillai - இப் பிள்ளையினுடைய பரிசு,Parisu - ஸ்வபாவத்தை அறிவன்,Arivan - (நான்) அறிவேன்; எல்லாம்,Ellaam - (இப்போதும் அப்படியே திருவோண விரதத்திற்காகச் சமைத்த வற்றை) யெல்லாம் விழுங்கிட்டு,Vizhungittu - (ஒன்றும் மிகாதபடி) விழுங்கிவிட்டு நான் இன்னம் உகப்பன் என்று சொல்லி,Naan Innam Ugappan Endru Solli - (அவ்வளவிலும் திருப்தி பெறாமல்) ‘நான் இன்னமும் உண்ண வேண்டியிரா நின்றேன்’ என்று சொல்லிக் கொண்டு போந்த,Ponthu - (அவ் விடத்தை விட்டு) கடக்க வந்து நின்றான்,Nindran - (அந்ய பரரைப் போல) நில்லாநின்றான்; உன் மகன் தன்னை,Un Mahan Thannai - (இனி இவ்வாறு தீமை செய்யாதபடி) உன் பிள்ளையான இக் கண்ணனை கூவிக் கொள்ளாய்,Koovik Kollai - (உன் னருகில்) அழைத்துக் கொள்வாயாக; இவையும்,Ivaiyum - (பிள்ளைகளைத் தீம்பு செய்ய வொட்டாதபடி பேணி வளர்க்க வேண்டி யிருக்க, அப்படி வளர்க்காமல்) இப்படி வளர்ப்பதும் சிலவே,Silave - சில பிள்ளை வளர்க்கையோ? |
| 209 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | கேசவனே இங்கே போதராயே கில்லே னென்னாது இங்கே போதராயே நேச மிலாதா ரகத்திருந்து நீ விளையாடாதே போதராயே தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற விடத்தில் நின்று தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே–2-9-8 | கேசவனே,Kesavane - அழகிய குழலை யுடையவனே! இங்கே போதராய்,Inge Potharai - இங்கே வருவாயாக; கில்லேன் என்னாது,Killeen Ennadhu - ‘மாட்டேன்’ என்று மறுத்துச் சொல்லாமல் இங்கே போதராய்;,Inge Potharai - இங்கே வருவாயாக, என்று யசோதை யழைக்க (இங்கே சிறிது விளையாடி வருகிறேன் என்று கண்ணன் சொல்ல,) நீ,Nee - நீ நேசம் இலாதார்,Nesam Ilaathaar - (உன்மீது) அன்பில்லாதவர்களுடைய அகத்து இருந்து,Agaththu Irundhu - அகங்களிலே யிருந்து விளையாடாதே,Vilayaadaadhe - விளையாட்டொழிவது மன்றி, தூசனம் சொல்லும்,Thooshanam Sollum - (உன் மேல்) பழிப்புகளைச் சொல்லுகிற தொழுத்தைமாரும்,Thozhuththaimarum - (இடைச்சிகளுக்கு) அடிச்சிகளானவர்களும் தொண்டரும்,Thondarum - (இடையர்க்கு) அடியரானவர்களும் நின்ற,Nindra - நிற்கின்ற இடத்தில் நின்று,Idaththil Nindru - இடங்களையு மொழித்து விட்டு போதராய்,Potharai - (இங்கே) வாராய்; தாய் சொல்லு,Thaai Sollu - (என்று யசோதை சொல்லியும் அவன் வரக் காணாமையாலே,) தாய் வாய்ச் சொல்லை கொள்வது,Kolvadhu - மேற் கொண்டு நடப்பது தன்மம் கண்டாய்,Thanmam Kandai - (பிள்ளைகளுக்கு) தர்மங்காண்; தாமோதரா! இங்கே போதராய். (என்றழைக்கின்றாள்.),Thaamodharaa Inge Potharai - (ஆதலால்) தாமோதரா! இங்கே போதராய். (என்றழைக்கின்றாள்.) |
| 210 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9 | கன்ன லிலட்டுவத்தோடு சீடை காரெள்ளி னுண்டை கலத்தி லிட்டு என்னக மென்று நான் வைத்துப் போந்தேன் இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்கொளி வெண்ணெயும் சோதிக் கின்றான் உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே–2-9-9 | அசோதை நங்காய்,Asothai Nangai - அசோதை நங்காய் கன்னல்,Kannal - கருப்புக் கட்டிப்பாகுடன் சேர்ந்த இலட்டுவத்தோடு,Elattuvathodu - லட்டு என்னும் பக்ஷ்யத்தோடு சீடை,Seedai - சீடையும் கார் எள்ளின் உண்டை,Kaar Ellin Undai - எள்ளுண்டையையும் கலத்தில்,Kalaththil - அவ் வவற்றுக்கு உரிய பாத்திரங்களிலே இட்டு,Ettu - நிரைத்து என் அகம் என்று,En Agam Endru - என் அகம் (ஆகையால் இங்குப் புகுவாரில்லை) என்று நினைத்து விசேஷமாக காவலிடாமல் வைத்து,Vaithu - உறிகளிலே வைத்து விட்டு நான் போந்தேன்,Naan Ponthen - நான் வெளியே வந்தேன் இவன்,Evan - (அவ்வளவில்) இப் பிள்ளையானவன் புக்கு,Pukku - அவ் விடத்திலே வந்து புகுந்து அவற்றை,Avatrai - அப் பணியாரங்களை பெறுத்தி,Peruththi - நான் பெறும்படி பண்ணி போந்தான்,Ponthaan - ஒன்றுமறியாதவன் போல் இவ்வருகே வந்து விட்டான் பின்னும்,Pinnum - (அவ்வளவிலும் பர்யாப்தி பிறவாமையால் ) மறுபடியும் அகம் புக்கு,Agam Pukku - என் வீட்டினுள் புகுந்து உறியை நோக்கி,Uriyai Nokki - உறியைப் பார்த்து அதில் பிறங்கு ஒளி வெண்ணையும் சோதிக்கின்றான்,Pirangu Oli Vennaiyum Sodhikkindran - மிகவும் செவ்வியை உடைத்தான வெண்ணை உண்டோ என்று ஆராயா நின்றான் உன் மகன் தன்னை,Un Mahan Thannai - (இச்சேஷ்டைகள் எனக்குப் பொறுக்கப் போகாமையால்) உன் பிள்ளையாகிய கண்ணனை கூவிக் கொள்ளாய்,Koovik Kollai - உன்னருகில் வரும்படி அழைத்துக் கொள் இவையும்,Ivaiyum - இப்படி இவனைத் தீம்பிலே கைவளா விட்டிருக்கிற இவையும் சிலவே,Silave - ஒரு பிள்ளை வளர்க்கையோ |
| 211 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | சொல்லி லரசிப் படுதி நங்காய் சுழலுடையன் உன் பிள்ளை தானே இல்லம் புகுந்து என் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து நல்லன நாவற் பழங்கள் கொண்டு நானல்லேனென்று சிரிக்கின்றானே–2-9-10 | நங்காய்,Nangai - யசோதைப் பிராட்டி சொல்லில்,Sollil - உன் மகன் செய்த தீமைகளை நாங்கள் சொன்னால் அரசிப்படுதி,Arasippaduthi - அதற்காக நீ சீற்றம் கொள்ளா நின்றாய் (அரசி – அரசன் மனைவி. அரசிப்படுதி – அரசியின் தன்மையை அடைகிறாய்; இது கோபிக்கிறாயென்ற பொருளைத் தந்தது.) உன் பிள்ளை தான்,Un Pillai Thaan - உன் பிள்ளையோ என்றால் சூழல் உடையனே,Soozhal Udaiyane - (பற்பல) வஞ்சனச் செய்கைகளை உடையனா இருக்கின்றானே (என்று ஒரு இடைச்சி சொல்ல அவன் என்ன தீமை செய்தான் என்று யசோதை கேட்க) இல்லம் புகுந்து,EIlam Pugundhu - என் வீட்டினுள் புகுந்து என் மகளை,En Magalai - என் பெண்ணை கூவி,Koovi - பேர் சொல்லி அழைத்து கையில் வளையை,Kaiyil Valaiyai - அவளுடைய கையிலிருந்த வளையை கழற்றிக் கொண்டு,Kazhaththi Kondu - பலாத்காரமாக நீக்கிக் கொண்டுபோய் கொல்லையில் நின்றும்,Kollayil Nindrum - காடுகளில் நின்றும் நாவற்பழங்கள்,Naavar Pazhangal - நாவற்பழங்களை கொணர்ந்து,Konarndhu - இடைச்சேரி தெருக்களில் கொண்டு வந்து அங்கு,Angu - அவ் விடத்தில் விற்ற,Vitra - அவற்றை விற்பனை செய்யலுற்ற ஒருத்திக்கு,Oruththikku - ஒரு பெண் பிள்ளைக்கு அவ்வளை,Avvalai - அந்த என் மகளுடைய கை வளையை கொடுத்து,Koduthu - கொடுத்து நல்லன,Nallana - (அதற்குப் பதிலாக) (தனக்கு) நல்லவையாகத் தோற்றின நாவல் பழங்கள்,Naaval Pazhangal - நாவற் பழங்களை கொண்டு,Kondu - அவளிடத்தில் வாங்கிக் கொண்டு நான் அல்லேன் என்று,Naan Allaen Endru - (போரும் போராதென்று விவாதப் படுகிற வளவிலே , என்னைத் தன் அருகில் வரக் கண்டு, நான் ஒன்றுங் கேளாதிருக்கச் செய்தேயே) (உன் மகளினது கை வளையை களவு கண்டவன்) நான் அல்லேன் என்று தானாகவேச் சொல்லி சிரிக்கின்றான்,Sirikkindran - (அவ்வளவில் தன் திருட்டுத்தனம் வெளியானதை தானே அறிந்து கொண்டு) ஓ! மோசம் போனோமே என்று சிரியா நின்றான்.(இதிலும் மிக்கத் தீமையுண்டோ என்கிறாள்) |
| 212 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 11 | வண்டுகளித்திரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென்ன ரங்கன் பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான் விட்டு சித்தன் பாடல் கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை யடி என் தலை மேலனவே–2-9-11 | வண்டு,Vandu - வண்டுகளானவை களித்து,Kaliththu - (தேனைப் பருகிக்) களித்து இரைக்கும்,Eraikkum - ஆரவாரங்கள் செய்யப் பெற்ற பொழில்,Pozhil - சோலைகளாலும் வரு,Varu - (அச் சோலைகளுக்காகப் பெருகி) வாரா நின்றுள்ள புனல்,Punal - நீரை யுடைத்தான காவிரி,Kaaviri - காவேரீ நதியான சூழ்,Soozh - சூழப் பெற்று தென்,Then - அழகிய அரங்கன் அவன்,Arangan Avan - திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிற வைபவத்தை யுடையவனான அப் பெருமான் பண்டு,Pandu - (விபவமாகிய) முற் காலத்தில் செய்த,Seidha - செய்த கிரீடை எல்லாம்,Kireedai Ellaam - லீலா சேஷ்டிதங்களெல்லாவற்றையும் (விசேஷமாகக் கொண்டு) விட்டு சித்தன் பட்டர்பிரான் பாடல்,Vittu Siththan Pattarpiraan Paadal - விஷ்ணுவை நெஞ்சிற் கொண்டவராய் பிராஹ்மணோத்தமரான பெரியாழ்வார் (பாடின) பாடலாகிய இவை கொண்டு,Ivai Kondu - இப் பாட்டுக்களை (அநு சந்தேயமாகக் ) கொண்டு பாடி,Paadi - (இப் பாசுரங்களை)பாடி குனிக்க வல்லார்,Kunikka Vallaar - (அதனால் பக்தி மீதூர்ந்து உடம்பு இவ் விடத்தில் இராமல் விகாரமடைந்து) கூத்தாட வல்லவர்களாய் கோவிந்தன் தன் அடியார்கள் ஆகி,Govindhan Than Adiyaargal Aagi - கண்ண பிரானுக்கு அடியவர்களாய் என் திசைக்கும்,En Disaiyukkum - எட்டு திக்குகளிலும் (உள்ள இருள் நீங்கும்படி) விளக்கு ஆகி நிற்பார்,Vilakku Aagi Nrirpaar - (அத் திக்குகளுக்கு) விளக்காக நிற்கும் அவர்களுடைய இணை யடி,Inai Yadi - திருவடிவிணை களானவை என் தலை மேலான,En Thalai Melaana - என்னுடைய முடியின் மேல் வீற்றிருக்கத் தக்கவை |
| 213 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 1 | ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை சேற்றா லெறிந்து வளை துகில் கைக் கொண்டு காற்றின் கடியனாய் ஓடி அகம் புக்கு மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்–2-10-1 | ஆற்றில் இருந்து,Aatril Irundhu - யமுனை ஆற்றங்கரை மணலிலிருந்து கொண்டு விளையாடுவோங்களை,Vilaiyaaduvongalai - விளையாட நின்ற எங்கள் மேல் சேற்றால் எறிந்து,Saetral Erindhu - சேற்றை விட்டெறிந்து வளை,Valai - எங்களுடைய கை வளைகளையும் துகில்,Thugil - புடவைகளையும் கைக் கொண்டு,Kaik Kondu - (தன்) கையால் வாரி யெடுத்துக் கொண்டு காற்றில்,Kaatril - காற்றிலுங் காட்டில் கடியன் ஆய்,Kadian Aai - மிக்க வேகமுடையவனாய் ஓடி,Odi - (அங்கு நின்றும்) ஓடி வந்து அகம் புக்கு,Agam Pukku - (தன்)வீட்டினுள்ளே புகுந்து கொண்டு மாற்றமும்,Maatramum - (வாசலில் நின்று அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கதறுகின்ற எங்களைக் குறித்து) ஒரு வாய்ச் சொல்லும் தாரானாய்,Tharaanaai - அருளாமல் உபேக்ஷியா நின்ற பெருமானால் இன்று முற்றும்,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்; வளைத் திறம்,Valai Thiram - (தான் முன்பு வாரிக் கொண்டு போன) வளையின் விஷயமாக பேசானால்,Paesaanal - (தருகிறேன், தருகிறிலேன் என்பவற்றில் ஒன்றையும்) வாய் விட்டுச் சொல்லாத அப் பெருமானால் இன்று முற்றும்.,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 214 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 2 | குண்டலம் தாழக் குழல் தாழ நாண் தாழ எண் திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த வண்டமர் பூங்குழ லார் துகில் கைக் கொண்டு விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்–2-10-2 | குண்டலம்,Kundalam - கர்ண பூஷணங்களானவை தாழ,Thaazha - (தோள் (அளவும்) தாழ்ந்து தொங்கவும் குழல்,Kuzhal - திருக் குழல்களானவை தாழ,Thaazha - (அத்தோடொக்கத்) தாழ்ந்தசையவும் நாண்,Naan - திருக்கழுத்திற் சாத்தின விடு நாணானது தாழ,Thaazha - (திருவுந்தி யளவும்) தாழந்தசையவும் எண் திசையோரும்,Enn Disaiyorum - எட்டு திக்கிலுமுள்ள (தேவர் முனிவர் முதலியோர்) எல்லாரும் இறைஞ்சி தொழுது,Erainji Thozhudhu - நன்றகா [ஸாஷ்டாங்கமாக] வணங்கி ஏத்த,Ethan - ஸ்தோத்ரம் பண்ணவும் வண்டு அமர் பூ குழலார்,Vandu Amar Poo Kuzhalar - (இப்படிப்பட்ட நிலைமையை யுடையனாய்) வண்டுகள் படிந்துகிடக்கப் பெற்ற பூக்களை அணிந்த கூந்தலையுடைய இடைச்சிக(ளான எங்க)ளுடைய துகில்,Thugil - (ஆற்றங்கரையில் களைந்து வைக்கப் பட்டிருந்த) புடவைகளை கைக் கொண்டு,Kaik Kondu - (தனது)கைகளால் வாரிக் கொண்டு விண் தோய் மரத்தானால்,Vin Thoi Maraththaanal - ஆகாசத்தை அளாவிய (குருந்த) மரத்தின் மேல் ஏறியிரா நின்றுள்ள கண்ணபிரானால் இன்று முற்றும்;,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்; வேண்டவும்,Vendavum - (எங்கள் துகிலை தந்தருள் என்று நாங்கள்) வேண்டிக் கொண்ட போதிலும் தாரானால்,Tharanaal - (அவற்றைக்) தந்தருளாத கண்ணபிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 215 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 3 | தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம் படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்–2-10-3 | தடம் படு,Thadam Padu - இடமுடைத்தான [விசாலமான] தாமரைப் பொய்கை,Thamaraip Poigai - தாமரைப் பொய்கையை கலக்கி,Kalakki - உள்ளே குதித்து கலங்கச் செய்வது (அக் கலக்கத்தினால் சீற்றமுற்று) விடம் படு,Vidam Padu - விஷத்தை உமிழ்ந்து கொண்டு (பொய்கையில்) மேற்கிளம்பின நாகத்தை,Naagaththai - காளிய ஸர்ப்பத்தை வால் பற்றி ஈர்த்து,Vaal Patri Eerththu - வாலைப் பிடித்திழுத்து, (அதனால் பின்பு) படம்படு,Padam Padu - படமெடுக்கப்பெற்று பை,Pai - மெத்தென்றிருந்த தலை மேல்,Thalai Mel - (அந் நாகத்தின்) தலை மேல் எழப் பாய்ந்திட்டு,Ezha Paindhittu - கிளாக்குதித்து (அத் தலையின் மீது நின்று) உடம்பை,Udambai - (தன்) திரு மேனியை அசைத்ததனால்,Asaiththadhaal - அசைத்து கூத்தாடின கண்ணபிரானால் இன்று முற்றும்;,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்; உச்சியில்,Uchiyil - (அந்த காளியன் இளைத்து விழுந்து தன்னை சரணம் புகுமளவும்) (அவனுடைய) படத்தின் மீது நின்றானாள்,Nindranal - நின்றருளின கண்ணபிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 216 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 4 | தேனுகனாவி செகுத்து பனங்கனி தானெறிந்திட்ட தடம் பெருந் தோளினால் வானவர் கோன் விட வந்த மழை தடுத்து ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவை யுய்யக் கொண்டானால் இன்று முற்றும்–2-10-4 | தேனுகன்,Thenukan - தேநுகாஸுரனுடைய ஆவி,Aavi - உயிரை செகுத்து,Sekuththu - முடிக்க நினைத்த அத் தேனுகனை பனங்கனி,Panangani - (ஆஸிராலிஷ்டமான) பனை மரத்தின் பழங்கள் (உதிரும்படியாக) எறிந்திட்ட,Erindhitta - (அந்த மரத்தின் மேல்) வீசி யெறிந்த தடம் பெருந் தோளினால்,Thadam Perun Tholinal - மிகவும் பெரிய தோளாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து) வானவர் கோன் விட வந்த மழை தடுத்து,Vaanavar Kon Vida Vandha Mazhai Thaduththu - தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து ஆனிரை,AaNirai - பசுக்களின் திரளை காத்தானால்,Kaaththaanal - ரக்ஷித்தருளின கண்ணபிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; அவை,Avai - அப் பசுக் கூட்டத்தை இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 217 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 5 | ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடி யுண்டு வேய்த் தடந் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு ஆப்புண்டிருந்தானால் இன்று முற்றும் அடி யுண்டழுதானால் இன்று முற்றும்–2-10-5 | ஆய்ச்சியர் சேரி,Aaychiyar Seri - இடைச் சேரியிலே அளை,Alai - (இடைச்சிகள் கடைவதாக) (மத்தை நாட்டி) உடைத்த தயிர்,Thayir - தயிரையும் பால்,Paal - (காய்ச்சுவதற்காக வைத்த) பாலையும் உண்டு,Undu - அமுது செய்து பேர்ந்து,Perndhu - (அவ் வளவோடு திருப்தி யடையாமல்) பின்னையும் (ஒரு கால் வெண்ணை திருடப் புகுந்த வளவிலே) அவர்,Avar - அவ் லிடைச்சிகள் கண்டு,Kandu - (ஒளிந்திருந்து) (இவன் திருடுகின்ற போதில்) கண்டு பிடிக்க,Pidikka - (இவனைத் தங்கள் கையில்)அகப் படுத்திக் கொள்ள பிடி யுண்ட,Pidi Unda - (அவர்கள் கையில்) பிடிபட்டு வெண்ணை,Vennai - (அதற்கு தப்ப மாட்டாமல்) வெண்ணெயை கொள்ள மாட்டாது,Kolla Maattaadhu - (தான் நினைத்தபடி) கைக் கொள்ள மாட்டாமல் அங்கு,Angu - அவர்கள் வீட்டில் ஆப்புண்டு இருந்தானால்,Aappundu Irundhaanal - கட்டுண்டிருந்த கண்ணபிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; அடியுண்ட அமுதினால்,Adi Unda Amudhinal - (அவர்கள் கையால்) அடிபட்டு அழுத கண்ணபிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 218 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 6 | தள்ளித் தளிர் நடை யிட்டு இளம் பிள்ளையாய் உள்ளத்தினுள்ளே அவளை யுற நோக்கி கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கற வுண்டானால் இன்று முற்றும்–2-10-6 | தள்ளி தளர்நடை இட்டு,Thalli Thalarnadai Ittu - (காலூன்றி நடக்கத் தரிப்பில்லாமையாலே) தட்டித் தடுமாறி தளர்நடை யிட்டு இளம் பிள்ளையாய்,Iam Pillaiyaai - (நடக்க வேண்டும்படியான) இளங்குழந்தையாய் கள்ளத்தினால்,Kallaththinal - (இருக்கச் செய்தே) (தன் வடிவை மறைத்து தாய் வடிவைக் கொண்டு) கிருத்திரிமத்தாலே வந்த,Vandha - (தன்னைக் கொல்ல) வந்த பேய்ச்சி அவளை,Peychi Avalai - பேய்ச்சியாகிய அந்தப் பூதனையை உள்ளத்தின் உள்ளே உற நோக்கி,Ullaththin Ullae Ura Nokki - (’நம்மை நலிய வருகிறவள் இவள்’ என்று) தன் மநஸ்ஸினுள்ளே (எண்ணி) உறைக்கப் பார்த்து முலை,Mulai - (பிறகு அவள் தனக்கு முலை உண்ணக் கொடுத்தவாறே) அம் முலையை உயிர் துள்ள சுவைத்ததனால்,Uyir Thulla Suvaiththadhaal - (அவளுடைய) உயிர் துடிக்கும்படி உறிஞ்சி உண்ட கண்ண பிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; துவக்கு அற,Thuvakku Ara - (அம் முலையில் தடவிக் கிடந்த விஷத்தில் தனக்கு) ஸ்பர்சமில்லாதபடி உண்டானால்,Undaanaal - (அம் முலையிற் பாலை) உண்ட கண்ண பிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 219 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 7 | மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச் சென்று மூவடி தா வென்று இரந்த இம் மண்ணினை ஓரடி யிட்டு இரண் டாமடி தன்னிலே தாவடி யிட்டானால் இன்று முற்றும் தரணி யளந்தானால் இன்று முற்றும்–2-10-7 | மாவலி,Maavali - மஹாபலியினுடைய வேள்வியில்,Velviyil - யாக பூமியிலே மாண் உரு ஆய் சென்று,Maan Uru Aai Sendru - பிரமசாரி ரூபியாய் எழுந்தருளி மூ அடி தா என்று,Moo Adi Thaa Endru - (என் அடியாலே) மூன்றடி (நிலம்) கொடு என்று இரந்து,Erandhu - யாசித்துப் பெற்ற இம் மண்ணினை,Em Manninai - இந்தப்பூமியை ஓர் அடி இட்டு,Or Adi Ittu - (அளந்து தன் வசப்படுத்தத் தொடங்கின வளவிலே) (பூமிப் பரப்படங்கலும் தனக்குள்ளே யாம்படி) ஓரடியைப் பரப்ப வைத்து (அளந்து) இரண்டாம் அடி தன்னிலே,Erandam Adi Thannilae - இரண்டாவது அடியைக் கொண்டு அளக்கத் தொடங்கின வளவிலே தாலி அடி இட்டானால்,Thaali Adi Ittaanal - மேலுலகங்களடங்கலும் தனக்குள்ளே யாம்படி) தாவி அடி யிட்ட கண்ண பிரானால் இன்று முற்றும்,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்; தரணி அளந்தானால்,Dharani Alandhaanal - (தேவேந்திரனாகிய ஒரு ஆச்ரிதனுக்காக இப்படி) லோகத்தை அளந்தவனாலே இன்று முற்றும்.,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 220 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 8 | தாழை தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கை வாய் வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண் வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்–2-10-8 | தாழை,Thaazhai - (கரையிலே) தாழைகளையும் தண் ஆம்பல்,Than Aambal - (உள்ளே) குளிர்ந்த ஆம்பல் மலர்களை யுமுடைய தடம் பெரும்,Thadam Perum - மிகவும் பெரிய பொய்கை வாய்,Poigai Vaai - தடாகத்தினுள்ளே வாழும்,Vaazhum - வாழ்ந்து கொண்டிருந்த முதலை,Mudhalai - முதலையின் வாயாகிய வலைப்பட்டு,Valaipattu - வலையிலே அகப்பட்டுக் கொண்டு வாதிப்பு உண்,Vaadippu Un - துன்பமடைந்த வேழம்,Vezham - ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துயர்,Thuyar - வருத்தம் கெட,Keda - தீரும்படியாக விண்ணோர் பெருமான் ஆய்,Vinnor Perumaan Aai - நித்ய ஸூரிகளுக்குத் தலைவன் என்பதைத் தோற்றுவிக்கப் பெரிய திருவடியை வாகனமாக உடையவனாய் ஆழி,Aazhi - (அப்பொய்கைக் கரையிலே சென்று) சக்ராயுதத்தாலே பணி கொண்டானால்,Pani Kondaanal - (முதலையைத் துணிந்து , கஜேந்திராழ்வரனுடைய) கைங்கர்யத்தை ஸ்வீக்ரித்தருளின கண்ண பிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; அதற்கு,Adharku - அந்த யானையின் திறத்தில் அருள் செய்தானால்,Arul Seidhaan - (இப்படிப்பட்ட) கிருபையைச் செய்தருளின கண்ண பிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 221 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 9 | வானத் தெழுந்த மழை முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடி ஏனத் துருவாய் இடந்தஇம் மண்ணினை தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி யிடந்தானால் இன்று முற்றும்–2-10-9 | வானத்து,Vaanaththu - (கடலில் நீரை முகந்து கொண்டு) ஆகாசத்திலே எழுந்து,Ezhandhu - கிளம்பின மழை முகில் போல்,Mazhai Mugil Pol - வர்ஷிக்கப் புக்க மேகம் போல ஏனத்து உரு ஆய்,Eenaththu Uru Aai - (கறுத்த நிறத்தை யுடைய) ஒரு வராஹத்தின் ரூபமாய் (அவதரித்து) கானத்து,Kaanaththu - காடு நிலங்களில் எங்கும்,Engum - எல்லாவிடத்திலும் (திரிந்து) மேய்ந்து,Meindhu - (கோரைக் கிழங்கு முதலியவற்றை) அமுது செய்து களித்து,Kaliththu - செருக்கடைந்து விளையாடி,Vilaiyaadi - விளையாடி, இடந்த,Edandha - (பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன ஹிரண்யாக்ஷனைக் கொன்று) (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த இம் மண்ணினை,Em Manninai - இந்தப் பூமியை தானத்தே,Thaanaththae - யதாஸ்தாநத்தில் வைத்தானால்,Vaiththaanal - (கொணர்ந்து) வைத்து நிலை நிறுத்தின கண்ண பிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; தரணி,Dharani - (இப்படி கடலில் மூழ்கிப் போன) பூமியை இடந்தானால்,Edandhaan - கோட்டாற் குத்தி எடுத்துக் கொணர்ந்த கண்ண பிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 222 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 10 | அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு மங்கை நல் லார்கள் தாம் வந்து முறைப்பட்ட அங்கவர் சொல்லைப் புதுவைக் கோன் பட்டன் சொல் இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே–2-10-10 | நல் மங்கைமார்கள் தாம்,Nal Mangaimargal Thaam - (பகவத் ப்ரேமமாகிற) நன்மை பொருந்திய (இடைப்) பெண்கள் அம் கமலம்,Am Kamalam - அழகிய செந்தாமரைப் பூப்போன்ற கண்ணன் தன்னை,Kannan Thannai - கண்களை யுடைய கண்ணபிரான் (செய்த தீம்பு) விஷயமாக அங்கு வந்து,Angu Vandhu - அந்தக் கண்ண பிரானுடைய வீட்டுக்கு வந்து அசோதைக்கு,Asothaiyukku - (அவன் தாயான) யசோதைப் பிராட்டி யிடத்திலே முற்பட்ட,Murppatta - (தங்கள் ஆர்த்திதோற்றக்) கதறிச் சொன்ன அவர் சொல்லை,Avar Sollai - அவ் விடைச்சிகளின் சொல்லை, புதுவை,Puthuavai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattam - பெரியாழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த இவை,Evai - இப் பாசுரங்களை இங்கு,Engu - இந்த ஸம்ஸாரத்தில் (இருந்து கொண்டே) வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு ஒன்று ஏதம்,Onru Aedham - ஒரு வகைக் குற்றமும் இல்லை,ellai - இல்லையாம். |
| 223 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 1 | தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான் பொன்னேய் நெய்யொடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3-1-1 | தன் நேர்,Than Ner - (வயஸ்ஸாலும் வளர்த்தியாலும்) தன்னோடு ஒத்த ஆயிரம் பிள்ளைகளோடு,Ayiram Pillaihalodu - ஆயிரம் பிள்ளைகளோடு கூட தளர் நடை இட்டு,Thalar Nadai Ittu - தளர் நடை நடந்து வருவான் ,Varuvaan - வருகின்ற கண்ணபிரானே! பொன் ஏய்,Pon Ey - (நிறத்தால்) பொன்னை ஒத்திரா நின்ற நெய்யோடு,Neyyodu - நெய்யோடு கூட பால் அமுது,Paal Amuthu - போக்யமான பாலையும் உண்டு,Undu - (இடைச்சேரியில் களவு கண்டு) அமுது செய்து பொய்யே,Poiye - (ஒன்றுமறியாத பிள்ளை போல்) கபடமாக தவழும்,Thavazhum - தவழ்ந்து வருகின்ற ஒரு புள்ளுவநொப்பற்ற கள்ளனே! மின் நேர்,Min Ner - மின்னலைப் போன்று நுண்,Nun - அதி ஸூக்ஷ்மமான இடை,Idai - இடையையும் வஞ்சம்,Vanjam - வஞ்சனையையுமுடையளான மகள்,Magal - பூதனை யென்னும் பேய் மகள் துஞ்ச,Thunja - மாண்டு போம்படி கொங்கை,Kongai - (அவளுடைய) முலையிலே வாய் வைத்த,Vaai Vaitha - தன்னுடைய வாயை வைத்து (சுவைத்து) பிரானே,Pranane - நாயனே உன்னை,Unnai - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை அறிந்து கொண்டேன்,Arindhu Kondean - (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு,Unakku - (ஆதலால் ) உனக்கு அம்மம் தர,Ammam Thara - முலை கொடுக்க அஞ்சுவன்,Anjuvan - பயப்படா நின்றேன் அன்னே,Anne - அன்னே- அச்சக் குறிப்பிடைச் சொல் |
| 224 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 2 | பொன் போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப் பால் வன் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கிருந்து மின் போல் நுண்ணிடையால் ஒரு கன்னியை வேற்றுருவம் செய்து வைத்த அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-2 | பொன் போல்,Pon Pol - பொன்னைப் போல் மஞ்சனம் ஆட்டி,Manjanam Aatti - (உன் வடிவழகு விளங்கும்படி) (உன்னைத்) திருமஞ்சனம் செய்வித்து அமுது ஊட்டி,Amuthu Ootti - (அதன் பிறகு) அமுது செய்யவும் பண்ணி விட்டு போனேன்,Ponen - (யமுனை நீராடப்) போன நான் வரும் அளவு இப் பால்,Varum Alavu Ip Paal - (மீண்டு) வருவதற்குள்ளே வல்,Val - வலி வுள்ளதும் பாரம்,Baaram - கனத்ததுமாயிருந்த சகடம்,Sakadam - சகடமானது மிற,Mira - (கட்டுக் குலைந்து) முறியும்படி சாடி,Saadi - (அதைத் திருவடியால்) உதைத்துத் தள்ளி வடக்கில் அகம்,Vadakkil Agam - (அவ்வளவோடும் நில்லாமல்) (இவ் வீட்டுக்கு) வடவருகிலுள்ள வீட்டிலே புக்கு இருந்து,Pukku Irundhu - போய் நுழைந்து மின் போல் நுண் இடையால்,Min Pol Nun Idaiyaal - (அவ் வீட்டிலுள்ள) மின்னலைப் போன்ற நுட்பமான இடையை யுடையளான ஒரு கன்னியை,Oru Kanniyai - ஒரு கன்னிகையை வேறு உருவம் செய்து வைத்த,Veru Uruvam Seidhu Vaitha - (கலவிக் குறிகளால்) வேறுபட்ட வடிவை யுடையளாகச் செய்துவைத்த அன்பர்,Anbar - அன்பனே! உன்னை,Unnai - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை அறிந்து கொண்டேன்,Arindhu Kondean - (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு,Unakku - (ஆதலால் ) உனக்கு அம்மம் தர,Ammam Thara - முலை கொடுக்க அஞ்சுவன்,Anjuvan - பயப்படா நின்றேன் |
| 225 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 3 | கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி பொய்ம் மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்று நீ வந்தாய் இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே யென்பர் நின்றார் அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-3 | கும்மாயத்தோடு,Kummaayathodu - (கண்ணபிரானே!) குழையச் சமைத்த பருப்பையும் வெண்ணெய்,Vennai - வெண்ணெயையும் விழுங்கி,Vizhunghi - விழுங்கி விட்டு குடம் தயிர்,Kudam Thayir - குடத்தில் நிறைந்த தயிரை சாய்த்து,Saaythu - (அந்தக் குடத்தோடு) சாய்த்து பருகி,Parugi - குடித்தும் பொய் மாயம் மருது ஆன அசுரரை,Poi Maayam Marudhu Aana Asurarai - பொய்யையும் மாயச் செய்கையை யுமுடைய அஸுரர்களால் ஆவேசிக்கப் பெற்ற (இரட்டை) மருத மரங்களை பொன்று வித்து,Ponru Viththu - விழுந்து முறியும் படி பண்ணியும் நீ,Nee - (இவ்வளவு சேஷ்டைகளைச் செய்த) நீ இன்று,Indru - இப்போது வந்தாய்,Vandhai - (ஒன்றுஞ் செய்யாதவன் போல) வந்து நின்றாய்; இம் மாயம்,Em Maayam - இப்படிப்பட்ட மாயச்செய்கைகளை வல்ல,Valla - செய்ய வல்ல பிள்ளை,Pillai - பிள்ளாய்! நம்பி,Nambi - (அந்தப் பிள்ளைத் தனத்தால்) பூர்ணனானவனே! உன்னை,Unnai - (இப்படி யிருக்கிற) உன்னை நின்றார்,Ninraar - (உன் வாசி அறியாத) நடு நின்றவர்கள் என் மகனே என்பர்,En Magane Enpar - என் (வயிற்றிற் பிறந்த) சொல்லா நின்றார்கள்;(நானோ வென்றால் அப்படி நினையாமல்) உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Kondean - (இவன் ஸர்வேச்வரன் என்று) உன்னைத் தெரிந்து கொண்டேன்; அம்மா,Amma - (ஆதலால்,) ஸர்வேச்வரனே! உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன் |
| 226 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 4 | மை யார் கண்ட மட வாய்ச்சியர் மக்களை மை யன்மை செய்து அவர் பின் போய் கொய்யார் பூந் துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய் பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ புத்தகத்துக்குள கேட்டேன் ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-4 | மை ஆர் கண்,Mai Aar Kan - மையை அணிந்துள்ள கண்களையும் மடம்,Madam - மடப்பம் என்ற குணத்தை யுமுடையரான ஆய்ச்சியர் மக்களை,Aaychiyar Makkalai - இடைப் பெண்களை மை யன்மை செய்து,Mai Yanmai Seithu - (உன் விஷயத்திலே) மோஹிக்கப் பண்ணி கொய் ஆர் பூ துகில்,Koi Aar Poo Thugil - (அப் பெண்களுடைய) கொய்தல் நிறைந்த அழகிய புடவைகளை பற்றி,Patri - பிடித்துக் கொண்டு அவர் பின் போய்,Avar Pin Poi - அப் பெண்களின் பின்னே போய் தனி நின்று,Thani Nindru - தனி யிடத்திலே நின்று பல பல குற்றம்,Pala Pala Kutram - எண்ணிறந்த தீமைகளை செய்தாய்,Seithai - (நீ) பண்ணினாய்; பொய்யா,Poiyaa - (என்று யசோதை சொல்ல,’ நீ கண்டாயோ?’ என்று கண்ணன் கேட்க) (அதற்கு யசோதை சொல்கிறாள்;) (தீ மை செய்தது மல்லாமல், செய்ய வில்லை யென்று) பொய் சொல்லுமவனே! உன்னை,Unnai - உன்னைக் குறித்து புத்தகத்துக்கு உள,Puthagathukku Ula - ஒருபுஸ்தக மெழுதுகைக்குத் தகுந்துள்ளனவாம்படி பேசுவ,Pesuva - சொல்லப் படுகின்றனவான பல புறம்,Pala Puram - பற்பல உன் சொற்கள் கேட்டேன்,Kettaen - (என் காதால்) கேட்டிருக்கின்றேன்; ஐயா,Ayya - அப்பனே உன்னை,Unnai - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை அறிந்து கொண்டேன்,Arindhu Konden - (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு,Unakku - (ஆதலால் ) உனக்கு அம்மம் தர,Ammam Thara - முலை கொடுக்க அஞ்சுவன்,Anjuvan - பயப்படா நின்றேன் |
| 227 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 5 | முப்போதும் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி கப்பாலாயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி மெய்ப்பாலுண்டழு பிள்ளைகள் போலந விம்மி விம்மி யழுகின்ற அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-5 | முப்போதும்,Muppothum - மூன்று சந்திப் போதுகளிலும் கடைந்து,Kadaindhu - (இடையரால்) கடையப் பட்டு ஈண்டிய,Eindiya - திரண்ட வெண்ணெயினோடு,Venneyinodu - வெண்ணையையும் தயிரும்,Thayirum - தயிரையும் விழுங்கி,Vizhunki - (களவு கண்டு) விழுங்கி, ஆயர்கள்,Aayargal - (அவ்வளவோடும் நில்லாமல்) அவ்விடையர்கள் (தம்முடைய) கப்பால்,Kappal - தோளாலே (வருந்திச் சுமந்து) காவில்,Kavil - காவடியில் கொணர்ந்த,Konarntha - கொண்டு வந்த பால் முதலியவற்றை கலத்தொடு,Kalathodu - (அந்தப்) பாத்திரத்தோடே சாய்த்து,Saithu - சாய்த்து பருகி,Parugi - குடித்தும் மெய் பால் உண்டு அழுகிற பிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்ற,Mei Paal Undu Alugira Pillaihal Pola Vimmi Vimmi Alugindra - (அதனால் பசி யடங்கின படியை மறைக்க நினைத்து) முலைப் பாலை உண்டு (அது பெறாதபோது) அழுகிற பிள்ளைகளைப் போலே விக்கி அழுகின்ற அப்பா,Appa - பெரியோனே! உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன் |
| 228 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 6 | கரும்பார் நீள் வயல் காய் கதிர்ச் செந்நெலைக் கற்றா நிரை மண்டித் தின்ன விரும்பாக் கன்றொன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே சுரும்பார் மென் குழல் கன்னி யொருத்திக்குச் சூழ் வலை வைத்துத் திரியும் அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-6 | நீள் வயல்,Neel Vayal - பரந்த வயலிலே கரும்பு ஆர்,Karumbu Aar - கரும்பு போலக் கிளர்ந்துள்ள காய்,Kaai - பசுங்காயான கதிர்,Kathir - கதிரையுடைய செந்நெலை,Sennelai - செந்நெல் தாந்யத்தை கன்று ஆ நிரை,Kanru Aa Nirai - கன்று களோடு கூடின பசுக்களின் திரள் மண்டி தின்ன,Mandi Thinna - விரும்பித் தின்னா நிற்கச் செய்தே விரும்பா கன்று ஒன்று,Virumbaa Kanru Ondru - (அத்திரளிலே சேர்ந்து மேய்கிறாப்போல் பாவனை செய்த அஸுராவிஷ்டமான) (நெல்லைத் தின்கையில்) விருப்பமில்லாத ஒரு கன்றை கொண்டு,Kondu - (அதன் செய்கையினாலே ‘இது ஆஸுரம்’ என்று அறிந்து) (அதனைக் குணிலாகக்) கொண்டு, (மற்றொரு அஸுரனால் ஆவேசிக்கப்பட்டிருந்த) விளங்கனி,Vilangani - விளாமரத்தின் பழங்கள் வீழ,Veezha - உதிரும்படி எறிந்த ,Erindha - (அவ்விளாமரத்தின் மேல் அக்கன்றை) வீசியெறிந்த பிரானே,Piraane - பெரியோனே! சுரும்பு ஆர்,Surumbu Aar - வண்டுகள் நிறைந்த மென் குழல்,Men Kuzhal - மெல்லிய குழலை யுடையனான கன்னி ஒருத்திக்கு,Kanni Oruththikku - ஒரு கன்னிகையை அகப்படுத்திக் கொள்வதற்காக சூழ் வலை,Soozh Valai - (எல்லாரையும்) சூழ்ந்து கொள்ளக் கடவ (திருக் கண்களாகிற) வலையை வைத்து,Vaiththu - (அவள் திறத்திலே விரித்து) வைத்து திரியும்,Thiriyum - (அந்ய பரரைப் போலத்) திரியா நின்ற அரம்பா,Arambaa - தீம்பனே! உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன் |
| 229 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 7 | மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ் வாயர் தம் பாடி சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னைச் சுற்றும் தொழ நின்ற சோதி பொருட்டா யமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றமல்லால் மற்றிங்கு அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-7 | மருட்டு ஆர்,Maruttu Aar - (கேட்டவர்களை) மயங்கப் பண்ணுந்திறமை யுள்ள மெல்,Mel - மெல்லிய (த்வநியை யுடைய) குழல் கொண்டு,Kuzhal Kondu - வேய்ங்குழலைக் கையிற் கொண்டு பொழில்,Pozhil - (ஸம்போகத்துக்கு ஏகாந்தமான) சோலைகளிலே புக்கு,Pukku - போய்ச் சேர்ந்து வாய் வைத்து,Vaai Vaiththu - (அந்த வேங்குழலை) (தன்) வாயில் வைத்து (ஊத) ஆயர் தம் பாடி,Aayar Tham Paadi - (அவ்வளவிலே) இடைச்சேரியிலுள்ள சுருள் தார் மெல் குழல்,Surul Thaar Mel Kuzhal - சுருண்டு பூவனிந்த மெல்லிய குழலையுடைய அக் கன்னியர்,Ak Kanniyar - (இடையர்களால் காக்கப்பட்டிருந்த) அந்த இடைப்பெண்கள் வந்து,Vandhu - (குழலோசை கேட்கையிலுள்ள விருப்பத்தாலே காவலுக்கடங்காமல்) (அச் சோலை யிடத்தே) வந்து உன்னை,Unnai - உன்னை சுற்றும் தொழ,Sutrum Thozha - நாற்புரமும் சூழ்ந்து கொண்டு ஸேவிக்க நின்ற,Nindra - (அதனால்) நிலைத்து நின்ற சோதி,Sothi - தேஜஸ்ஸை யுடையவனே எம் பெருமான்,Em Perumaan - எமக்குப் பெரியோனே! உன்னை,Unnai - (இப்படி தீம்பனான) உன்னை பெற்ற,Pettra - பிள்ளையாகப் பெற்ற குற்றம் அல்லால்,Kutram Allaal - குற்றமொன்றை (நான் ஸம்பாதித்துக் கொண்டேனத்தனை) யல்லது இங்கு,Ingu - இவ்வூரில் உள்ளாரோடொக்க மற்று பொருள் தாயம் இலேன்,Matru Porul Thaayam Ileyn - மற்றொரு பொருட் பங்கையும் பெற்றிலேன்; அரட்டா,Arattaa - (இப்படிப்பட்ட) தீம்பனே! உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன் |
| 230 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 8 | வாளா வாகிலும் காண கில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து தோளா லிட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப் படாதன செய்தாய் கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன் காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே-3-1-8 | வாளா ஆகிலும்,Vaalaakilum - (நீ தீம்பு செய்யாமல்) வெறுமனே யிருந்தாலும் காண கில்லார்,Kaana Killar - (உன் மினுக்குப் பொறாதவர்கள்) (உன்னைக்) காண வேண்டார்கள்; நீ,Nee - (இப்படியிருக்கச் செய்தேயும்) நீயோ வென்றால் பிறர் மக்களை,Pirar Makkalai - அயற் பெண்டுகளை மையன்மை செய்து,Maiyanmai Seidhu - (உன்னுடைய இங்கிதாதிகளாலே) மயக்கி தோளால் இட்டு,Tholaal Ittu - (அவ்வளவோடு நில்லாமல்) (அவர்களைத்) தோளாலும் அணைத்திட்டு அவரோடு,Avarodu - அப் பெண்களோடு திளைத்து,Thilaiththu - விளையாடி சொல்லப்படாதன,Sollappadadhana - வாயாற் சொல்லக் கூடாத காரியங்களை செய்தாய்,Seidhai - (அவர்கள் விஷயத்திலே) செய்தாய்; ஆயர் குலத்தவர்,Aayar Kulathavar - இடைக் குலத்துத் தலைவர்கள் இப் பழி,Ip Pali - இப்படிப் பட்ட பழிகளை கேளார்,Kaelaar - கேட்கப் பொறார்கள்; கெட்டேன்,Kettaen - (இப் பழிகளைக் கேட்கப் பெற்ற நான்) பெரும் பாவியாயிரா நின்றேன்; வாழ்வு இல்லை,Vazhvu Illai - (இனி எனக்கு இவ் வூரில்) வாழ்ந்திருக்க முடியாது, நந்தற்கு,Nandharku - நந்த கோபருக்கு ஆளா,Aalaa - (அழகியதாக) ஆள் பட்ட பிள்ளாய்; உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன் |
| 231 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 9 | தாய்மார் மோர் விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர் நீ ஆய்ப் பாடி இளங் கன்னி மார்களை நேர்படவே கொண்டு போதி காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-9 | தாய்மார்,Thaaymaar - (பெண்களை அகம் பார்க்க வைத்து விட்டு) தாய்மாரானவர் மோர் விற்க,Mor Virkka - மோர் விற்பதற்கு போவர்,Poovar - (வெளியூருக்குப்) போவர்கள் தமப்பன்மார்,Thamappanmaar - (அப் பெண்களின்) தகப்பன் மாரானவர் கன்று ஆ நிரை பின்பு போவர்,Kanru Aa Nirai Pinbu Poovar - இளம் பசுக் கூட்டங்களை மேய்க்கைக்காக அவற்றின் பின்னே போய் விடுவர்கள் நீ-;,Nee - (அப்படிப்பட்ட ஸமயத்திலே) நீ ஆய்ப்பாடி,Aayppaadi - இடைச்சேரியில் இள கன்னிமார்களை,Ela Kannimaargalai - (தந்தம் வீடுகளில் தனியிருக்கின்ற) யுவதிகளான பெண்களை நேர் பட,Ner Pada - நீ நினைத்தபடி கொண்டு போதி,Kondu Pothi - (இஷ்டமான இடங்களில்) கொண்டு போகா நின்றாய்; காய்வார்க்கு,Kaayvaarkku - (உன் மேல்)த்வேஷம் பாராட்டுகின்ற கம்ஸாதிகளுக்கு என்றும் உகப்பனவே,Endrum Ukappanave - எந் நாளும் (வாயாரப் பழித்து) ஸந்தோஷப் படக் கூடிய செய்கைகளையே செய்து,Seidhu - செய்து கொண்டு கண்டார் கழற திரியும்,Kandaal Kalara Thiriyum - (உனக்கு) அநுகூலரா யுள்ளவர்களும் (உன்னை) வெறுத்துச் சொல்லும்படி திரியா நின்ற ஆயா,Aayaa - ஆயனே! உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன் |
| 232 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 10 | தொத்தார் பூங்குழல் கன்னி யொருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூவேழு சென்ற பின் வந்தாய் ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன் அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-10 | தொத்து ஆர்,Thothu Aar - கொத்தாய்ச் சேர்ந்திருந்துள்ள பூ,Poo - புஷ்பங்கள் அணியப் பெற்ற குழல்,Kuzhal - கூந்தலை யுடைய கன்னி ஒருத்தியை,Kanni Oruthiyai - ஒரு கன்னிகையை தடஞ்சோலை,Thadanchoalai - விசாலமானதொரு சோலையிலே இரா,Iraa - (நேற்று) இரவில் கொண்டு புக்கு,Kondu Pukku - அழைத்துக் கொண்டு போய் முத்து ஆர்,Muthu Aar - (அவளுடைய) முத்து வடமணிந்த கொங்கை,Kongai - ஸ்தநங்களோடு புணர்ந்து,Punarnthu - ஸம்ச்லேஷித்து விட்டு மூ ஏழு நாழிகை சென்ற பின்,Moo Ezhu Naaligai Senra Pin - மூன்று யாமங்கள் கடந்த பிறகு வந்தாய்,Vandhai - (வீட்டுக்கு) வந்து சேர்ந்தாய்; உன்னை,Unnai - (நீ இவ்வாறு தீமை செய்கையாலே) உன்னைக் குறித்து ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்,Oththaarkku Oththana Pesuvar - வேண்டுவார் வேண்டினபடி சொல்லுவார்கள்; உரப்ப,Urappa - (இப்படி அவர்கள் சொல்லாதிருக்கும்படி) (உன்னை) சிக்ஷிக்க நான்,Naan - (அபலையாகிய) நான் ஒன்றும்,Ondrum - கொஞ்சமும் மாட்டேன்,Matten - சக்தை யல்லேன்; அத்தா,Aththa - நாயனே! உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன் |
| 233 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 11 | காரார் மேனி நிறத் தெம்பிரானைக் கடி கமழ் பூங்குழலாய்ச்சி ஆரா இன்னமு துண்ணத் தருவன் நான் அம்மம் தாரேனென்ற மாற்றம் பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல் ஏராரின்னிசை மாலை வல்லார் இருடீகேச னடியாரே–3-1-11 | கார் ஆர்,Kaar Aar - மேகத்தோடு ஒத்த மேனி நிறத்து,Meni Nirathu - திருமேனி நிறத்தை யுடைய எம் பிரானை,Em Piraanai - கண்ண பிரானைக் குறித்து, கடி கமழ் பூ குழல் ஆய்ச்சி,Kadi Kamal Poo Kuzhal Aaychi - வாஸனை வீசா நின்ற பூக்களை அணிந்த கூந்தலை யுடைய யசோதை ஆரா இன் அமுது உண்ண தருவன் நான்,Aaraa In Amudhu Unna Tharuvan Naan - (எவ்வளவு குடித்தாலும்) திருப்தி பிறவாத இனிய ஸ்தந்யத்தை இது வரை உனக்கு உண்ணத் தந்துகொண்டிருந்த நான் அம்மம் தாரேன்,Ammam Thaarein - (இன்று உன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தேனாகையால்) அம் மந்தர அஞ்சுவேன்” என்ற மாற்றம்,Endra Maattram - என்று சொன்ன பாசுரத்தை சொன்ன,Sonna - அருளிச் செய்த, பார் ஆர்,Paar Aar - பூமி யெங்கும் நிறைந்துள்ள தொல்,Thol - பழமையான புகழான்,Pugazhaan - கீர்த்தியை யுடையராய் புதுவை,Puthuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மன்னன்,Mannan - நிர்வாஹகரான பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியாழ்வாருடைய பாடல்,Paadal - பாடலாகிய ஏர் ஆர் இன் இசை மாலை,Er Aar In Isai Maalai - இயலழகாலே நிறைந்து இனிய இசையோடே கூடியிருந்துள்ள சொல் மாலையை வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் இருடீகேசன்,Erudheekesan - ஹ்ருஷிகேசனான எம்பெருமானுக்கு அடியார்,Adiyaar - அடிமை செய்யப் பெறுவார்கள். |
| 234 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 1 | அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின் பின் என் செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-1 | அஞ்சனம் வண்ணனை,Anjanam Vannanai - மை போன்ற நிறத்தை யுடையனும் ஆயர் கோலம்,Aayar Kolam - இடைக் கோலம் பூண்டுள்ளவனும் கொழுந்தினை,Kozhuthinai - (அவ் விடையர்க்குத்) தலைவனும் பிள்ளையை,Pillaiyai - (எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை மனைகள் தொறும்,Manaigal Thorum - (தன் வீட்டிற் போலவே) அயல் வீடுகள் தோறும் திரியாமே,Thiriyame - (இஷ்டப்படி) திரிய வொட்டாமல் மஞ்சனம் ஆட்டி,Manjanam Aatti - (காலையில் குள்ளக் குளிர) நீராட்டி, கஞ்சனை,Kanjanai - கம்ஸனை காய்ந்த,Kaayndha - சீறி யுதைத்த கழல்,Kazhal - வீரக் கழலை அணிந்துள்ள அடி,Adi - திருவடிகள் நோவ,Nova - நோம் படியாக கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (மேய்க்கப் போ வென்று) என் செய போக்கினேன்,En Seiya Pokkinean - ஏதுக்காகப் போக விட்டேன்!; எல்லே பாவமே,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 235 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 2 | பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே கற்றுத் தூளி யுடை வேடர் கானிடைக் கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-2 | பாடியில்,Paadiyil - திருவாய்ப் பாடியில் பற்று மஞ்சள் பூசி,Patru Manjal Poosi - பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனி யெங்கும் பெண்கள் கையால் தனித் தனியே) பூசப் பெற்று, சிற்றில் சிதைத்து,Sitril Sithaithu - (அப் பெண்கள் இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி) எங்கும்,Engum - எல்லா விடங்களிலும் தீமை செய்து,Theemai Seidhu - தீம்புகளைச் செய்து கொண்டு பாவை மாரொடு,Paavai Maarodu - அவ் விடைப் பெண்களோடே திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல், கன்று,Kanru - கன்றுகளினுடைய தூளி உடை,Thooli Udai - தூள்களை யுடைத்தாய் வேடர்,Vedar - (அடித்துப் பிடுங்கும்) வேடர்களுக் கிருப்பிடமான கான் இடை,Kaan Idai - காட்டிலே கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (திரியும் படியாக) என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனை எற்றுக்கு போக்கினேன்,Etrukku Pokkinean - ஏதுக்காக அனுப்பினேன்! |
| 236 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 3 | நன் மணி மேகலை நங்கை மாரொடு நாள் தொறும் பொன் மணி மேனி புழுதி யாடித் திரியாமே கன் மணி நின்றதிர் கானதரிடைக் கன்றின் பின் என் மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-3 | என்,En - என் மகனான மணி வண்ணனை,Mani Vannanai - நீல மணி போன்ற வடிவை யுடைய கண்ணனை, நல்,Nal - லோகோத்தரமான மணி,Mani - நவ மணிகள் பதித்த மேகலை,Megalai - மேகலையை (அணிந்துள்ள) நங்கைமாரொடு,Nangaimaarodhu - யுவதிகளோடு கூட நாள் தொறும்,Naal Thorum - தினந்தோறும் பொன் மணி மேனி,Pon Mani Meni - அழகிய நீல மணி போன்ற திருமேனியானது புழுதி ஆடி,Puzhuthi Aadi - புழுதி படைக்கப் பெற்று(விளையாடி) திரியாமே,Thiriyame - திரிய வொண்ணாதபடி கான்,Kaan - காட்டிலே கல்,Kal - (இவன் கன்றுகளை அழைக்கிற த்வநியாலும், அவை கூவுகிற த்வநியாலும்) மலையிலே மணி நின்று அதிர்,Mani Nindru Athir - மணியினோசை போல பிரதி த்வநி யெழும்பப் பெற்றுள்ள (பயங்கரமான) அதர் இடை,Athar Idai - வழியிலே கன்றின் பின்,Kanrin Pin - (வருந்தும்படியாக) கன்றுகளின் பின்னே போக்கினேன்,Pokkinean - போகவிட்டேனே! எல்லே பாவமே,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 237 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 4 | வண்ணக் கருங் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட பண்ணிப் பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே கண்ணுக் கினியானைக் கானதரிடைக் கன்றின் பின் எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-4 | கண்ணுக்கு இனியானை,Kannukku Iniyanai - கண்களுக்கு மிகவும் தர்சநீயனாய் எண்ணற்கு அரியானை,Ennarkku Ariyanai - (இத் தன்மையன் என்று) நினைக்க முடியாதவனாயுள்ள கண்ணபிரானை இப் பாடி எங்கும்,Ep Paadi Engum - இத் திருவாய்ப்பாடி முழுவதும் பல செய்து,Pala Seidhu - பல (தீமைகளைச்) செய்து (அத் தீமைகளினால்) வண்ணம் கரு குழல்,Vannam Karu Kuzhal - அழகிய கறுத்த கூந்தலை யுடையரான மாதர்,Maadhar - பெண் பிள்ளைகள் வந்து,Vandhu - (தாயாகிய என்னிடம் ஓடி) வந்து அலர் தூற்றிடப் பண்ணி,Alar Thoottidap Panni - பழி தூற்றும்படியாகப் பண்ணிக் கொண்டு திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல் கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (திரியும்படி) போக்கினேன்,Pokkinean - அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 238 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 5 | அவ்வவ் விடம் புக்கு அவ் வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் கொவ்வைக் கனி வாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே எவ்வம் சிலை யுடை வேடர் கானிடைக் கன்றின் பின் தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-5 | தெய்வம்,Deivam - தேவர்களுக்கு தலைவனை,Thalaivanai - நிர்வாஹகனான கண்ணனை அ அ இடம் புக்கு,A A Idam Pukku - (மச்சு மாளிகை முதலான) அவ்வவ் விடங்களில் (ஏகாந்தமாகப்) புகுந்து அ ஆயர் பெண்டிர்க்கு,A Aayar Pendirkku - (அவ்வவ் விடங்களிலுள்ள) அவ்விடைப் பெண்களுக்கு அணுக்கன் ஆய்,Anukkan Aai - அந்தரங்கனாய் கொவ்வை கனி,Kovvai Kani - (அவர்களுக்கு) கோவைப் பழம் போன்ற வாய்,Vaai - (தன்) அதரத்தை கொடுத்து,Koduthu - (போக்யமாக்க) கொடுத்துக் கொண்டு கூழைமை செய்யாமே,Koolaimai Seiyyaame - கூழ்மைத் தன்மடித்துத் திரிய வொட்டாமல் எவ்வும்,Evvum - துன்பத்தை விளைக்குமதான சிலை உடை,Silai Udai - வில்லை(க்கையிலே) உடைய வேடர்,Vedar - வேடர்களுக்கு(இருப்பிடமான) கான் இடை,Kaan Idai - காட்டிலே கன்றின் பின் போக்கினேன் ;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 239 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 6 | மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப் போய் படிறு பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின் இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-6 | என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனாகிய கண்ண பிரானை வெண்ணெய்,Vennei - வெண்ணெயை மிடறு,Midaru - கழுத்திலே மெழுமெழுத்து ஓட,Mezhumezhuthu Oda - (உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி விழுங்கி,Vizhunghi - விழுங்கி விட்டு போய்,Poi - (பிறரகங்களுக்குப்) போய் பல படிறு,Pala Padiru - பல கள்ள வேலைகளை செய்து,Seidhu - செய்து கொண்டு இ பாடி எங்கும்,E Paadi Engum - இவ் விடைச்சேரி முழுதும் திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல் பல கடிறு திரி,Pala Kadiru Thiri - பல காட்டானைகள் திரியப் பெற்ற கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே இடற,Idara - தட்டித் திறியும்படியாக கன்றின் பின் போக்கினேன் ;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 240 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 7 | வள்ளி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே கள்ளி யுணங்கு வெங் கானதரிடைக் கன்றின் பின் புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-7 | புள்ளின் தலைவனை,Pullin Thalaivanai - பெரிய திருவடிக்குத் தலைவனான கண்ண பிரானை வள்ளி,Valli - கொடி போன்று துடங்கு,Thudangu - துவளா நின்றுள்ள இடை,Edai - இடையை யுடைய மாதர்,Maadhar - இடைப் பெண்கள் வந்து,Vandhu - (தாயாகிய என்னிடத்தில்) வந்து (இவன் செய்த தீமைகளைச் சொல்லி) அலர் தூற்றிட,Alar Thoottida - பழி தூற்றிக் கொண்டிருக்கச் செய்தே துள்ளி,Thulli - (அதை ஒரு பொருளாக மதியாமல்) (நிலத்தில் நில்லாமல்) துள்ளி தோழரோடு,Thozharodu - (தன்) தோழர்களோடு கூட விளையாடி,Vilayaadi - விளையாடிக் கொண்டு திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல் கள்ளி,Kalli - (மழை யில்லாக் காலத்திலும் பசுமை மாறாத) கள்ளிச் செடியுங்கூட உணங்கு,Unangu - (பால் வற்றி) உலரும் படியாய் வெம்,Vem - மிக்க வெப்பத்தை யுடைய கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே |
| 241 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 8 | பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் என் இளங் கொங்கை அமுத மூட்டி யெடுத்து யான் பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின் என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-8 | என் இள சிங்கத்தை,En Ila Singathai - எனது சிங்கக் குட்டி போன்ற கண்ணபிரானை பன்னிரு திங்கள்,Panniru Thingal - பன்னிரண்டு மாஸ காலம் வயிற்றில் கொண்ட ஆ பாங்கினால்,Vayitril Konda A Paanginal - (என்) வயிற்றிலே வைத்து நோக்கின அப்படிப்பட்ட அன்புக்கேற்ப யான்,Yaan - (தாயாகிய) நான் என்,En - என்னுடைய இள,Ela - குழைந்திரா நின்றுள்ள கொங்கை,Kongai - முலையிலுண்டான அமுதம்,Amudham - பாலை ஊட்டி,Ootti - (அவனுக்கு) உண்ணக் கொடுத்து எடுத்து,Eduthu - வளர்த்து புலரியே,Pulariye - (இப்படியாக அருமைப்பட நோக்கின பிள்ளையை) (இன்று) விடியற் காலத்திலேயே (எழுப்பி) பொன் அடி நோவ,Pon Adi Nova - அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக கானில்,Kaanil - காட்டிலே கன்றின் பின் போக்கினேன்;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 242 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 9 | குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனை நான் உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடை கடிய வெங் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின் கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-9 | என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனான தாமோதரனை,Thaamodharanai - கண்ணபிரானை, குடையும்,Kudaiyum - குடையையும் செருப்பும்,Seruppum - செருப்பையும் கொடாதே,Kodaadhe - (அவனுக்குக்) கொடாமல் கொடியேன் நான் ,Kodiyen Naan - கொடியவளாகிய நான் உடையும்,Udaikum - (ஸூர்யனுடைய வெப்பத்தாலே) உடைந்து கிடப்பனவாய் கடியன,Kadiyana - கூரியனவாய்க் கொண்டு ஊன்று,Oonru - (காலிலே) உறுத்துவனவாய் வெம்,Vem - (இப்படி) அதி தீக்ஷ்ணமான பரற்கள் உடை,Parargal Udai - பருக்காங் கல்லை யுடைய கடிய வெம்,Kadiya Vem - அத்யுஷ்ணமான கான் இடை,Kaan Idai - காட்டிலே கால் அடி நோவ கன்றின் பின் போக்கினேன்,Kaal Adi Novu Kanrin Pin Pokkinen - அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 243 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 10 | என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினே னென்று அசோதை கழறிய பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல் இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இட ரில்லையே–3-2-10 | என்றும்,Endrum - எப்போதும் எனக்கு,Enakku - (தாயாகிய) எனக்கு இனியானை,Eniyanai - இனிமையைத் தருமவனாய் என்,En - என்னுடைய மணி வண்ணனை,Mani Vannanai - நீல மணி போன்ற வடிவை யுடையனான கண்ணபிரானை கன்றின் பின் போக்கினேன் என்று,Kanrin Pin Pokkinen Endru - கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று அசோதை,Asothai - யசோதைப் பிராட்டி கழறிய,Kalariya - (மனம் நொந்து) சொன்னவற்றவை சொல்,Sol - அருளிச் செய்த பொன்,Pon - பொன் மயமாய் திகழ்,Thigal - விளங்கா நின்றுள்ள மாடம்,Maadam - மாடங்களை யுடைய புதுவையர்,Puthuvaiyar - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattan - பெரியாழ்வாருடைய இன்,En - போக்யமான தமிழ் மாலைகள்,Tamil Maalaigal - தமிழ்ச் சொல் மாலைகளை வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு இடர் இல்லை,Edar Ellai - (ஒரு காலும்) துன்பமில்லையாம். |
| 244 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1 | சீலைக் குதம்பை ஒரு காது ஒரு காது செந்நிற மேல் தோன்றிப் பூ கோலப் பணைக் கச்சும் கூறை யுடையும் குளிர் முத்தின் கோடாலமும் காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர் ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானோ மற்றாருமில்லை–3-3-1 | நங்கைமீர்,Nangaimir - பெண்காள்!, ஒரு காது,Oru Kaadu - ஒரு காதிலே சீலைக் குதம்பை,Seilai Kudambai - சீலைத் தக்கையையும் ஒரு காது,Oru Kaadu - மற்றொரு காதிலே செம் நிறம் மேல் தோன்றிப் பூ,Sem Niram Mel Thonrip Poo - செங்காந்தள் பூவையும் (அணிந்து கொண்டு) கூறை உடையும்,Koorei Udaiyum - திருப் பரியட்டத்தின் உடுப்பையும் கோலம்,Kolam - (அது நழுவாமைக்குச் சாத்தின) அழகிய பணை,Panai - பெரிய கச்சும்,Kachum - கச்சுப் பட்டையையும் குளிர்,Kulir - குளிர்ந்திரா நின்றுள்ள முத்தின்,Muthin - முத்தாலே தொடுக்கப் பெற்று கோடு,Kodu - (பிறை போல்)வளைந்திருக்கின்ற ஆலமும்,Aalamum - ஹாரத்தையும் காலி பின்னே,Kaali Pinne - (உடையனாய்க் கொண்டு) கன்றுகளின் பின்னே வருகின்ற,Varugindra - (மீண்டு)வாரா நின்ற கடல் வண்ணன்,Kadal Vannan - கடல் போன்ற நிறத்தனான கண்ணனுடைய வேடத்தை,Vedaththai - வேஷத்தை வந்து காணீர்,Vandhu Kaanir - வந்து பாருங்கள்; ஞாலத்து,Gnalathu - பூ மண்டலத்திலே புத்திரனை,Puthiranai - பிள்ளையை பெற்றார்,Pettrar - பெற்றவர்களுள் நானே,Naane - (’நல்ல பிள்ளை பெற்றவள்’ என்று சொல்லத் தக்கவள்) நான் ஒருத்தியே யாவேன்; மற்று ஆரும் இல்லை,Matru Aarum Illai - வேறொருத்தியுமில்லை. |
| 245 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2 | கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம் மன்னிய சீர் மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வுகந்து உன்னை இளங் கன்று மேய்க்கச் சிறு காலே யூட்டி ஒருப் படுத்தேன் என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா–3-3-2 | கன்னி,Kanni - அழிவற்ற நல்,Nal - விலக்ஷணமான மா மதிள்,Maa Mathil - பெரிய மதிள்களாலே சூழ் தரு,Soozh Tharu - சூழப்பட்டு பூ பொழில்,Poo Pozhil - பூஞ்சோலைகளை யுடைய காவிரி,Kaaviri - காவேரி நதியோடு கூடிய தென் அரங்கம்,Then Arangam - தென் திருவரங்கத்தில் மன்னிய,Manniya - பொருந்தி யெழுந்தருளி யிருக்கின்ற சீர்,Seer - கல்யாண குண யுக்தனான மது சூதனா,Madhu Soothana - மதுஸூதநனே! [கண்ணபிரானே!] கேசவா,Kesavaa - கேசவனே! பாவியேன்,Paaviyeen - பாவியாகிய நான் வாழ்வு உகந்து,Vaazhvu Ugandhu - (நமது ஜாதிக்கேற்ற கன்று மேய்க்கை யாகிற) ஜீவநத்தை விரும்பி உன்னை,Unnai - (இவ் வலைச்சலுக்கு ஆளல்லாத) உன்னை சிறுகாலே,Sirukaale - விடியற்காலத்திலேயே ஊட்டி,Ootti - உண்ணச் செய்து இள கன்று மேய்க்க,Ela Kanru Meikka - இளங்கன்றுகளை மேய்க்கைக்காக (அவற்றின் பின்னே போக) ஒருப்படுத்தேன்,Orupadutthen - ஸம்மதித்தேன்; என்னில்,Ennil - (இப்படி உன்னை அனுப்பிவிட்டுப் பொறுத்திருந்த) என்னிற்காட்டில் மனம் வலியாள்,Manam Valiyaal - கல் நெஞ்சை யுடையளான ஒரு பெண்,Oru Pen - ஒரு ஸ்த்ரீயும் இல்லை,Ellai - (இவ் வுலகில்) இல்லை; என் குட்டனே,En Kuttane - எனது குழந்தாய்! முத்தம் தா,Mutham Thaa - (எனக்கு) ஒரு முத்தம் கொடு. |
| 246 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3 | காடுகளூடு போய்க் கன்றுகள் மேய்த்து மறி யோடி கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு பேடை மயிற் சாயல் பின்னை மணாளா நீராட்டமைத்து வைத்தேன் ஆடி அமுது செய் அப்பனு முண்டிலன் உன்னோடு உடனே யுண்பான்–3-3-3 | காடுகள் ஊடு போய்,Kaadugal Oodu Poi - (பற்பல) காடுகளிலுள்ளே புகுந்து மறி ஓடி,Mari Odi - (கன்றுகள் கை கழியப் போகாத படி) (அவற்றை) மறிக்கைக்காக [திருப்புகைக்காக] முன்னே ஓடி கன்றுகள் மேய்த்து,Kanrugal Meithu - (அக்) கன்றுகளை மேய்த்து கார் கோடல் பூ சூடி,Kaar Koadal Poo Soodi - பெரிய கோடல் பூக்களை முடியிலணிந்து கொண்டு வருகின்ற,Varugindra - (மீண்டு) வருகின்ற தாமோதரா,Thaamotharaa - கண்ணபிரானே! உன் உடம்பு,Un Udambu - உன் உடம்பானது கன்று தூளி காண்,Kanru Thooli Kaan - கன்றுகளால் துகைத்துக் கிளப்பபட்ட தூளிகள் படியப் பெற்றுள்ளது காண்; மயில் பேடை,Mayil Paedai - பெண் மயில் போன்ற சாயல்,Saayal - சாயலை யுடைய பின்னை,Pinnai - நப்பின்னைப் பிராட்டிக்கு மாணாளா,Maanalaa - வல்லபனானவனே! நீராட்டு அமைத்து வைத்தேன்,Neeraattu Amaithu Vaithen - (இந்த உடம்பை அலம்புவதற்காக) நீராட்டத்துக்கு வேண்டியவற்றை ஸித்தப்படுத்தி வைத்திருக்கின்றேன்; ஆடி,Aadi - (ஆகையால் நீ) நீராடி அமுது செய்,Amudhu Sei - அமுது செய்வாயாக; உன்னோடு உடனே,Unnodu Udane - உன்னோடு கூடவே உண்பான்,Unbaan - உண்ண வேணுமென்று அப்பனும்,Appanum - (உன்) தகப்பனாரும் உண்டிலன்,Undilan - (இதுவரை) உண்ணவில்லை. |
| 247 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4 | கடியார் பொழிலணி வேங்கடவா கரும் போரேறே நீ யுகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன சிறுக் குட்டச் செங் கமல அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்–3-3-4 | கடி ஆர்,Kadi Aar - (மலர்களின்) பரிமளம் நிறைந்த பொழில்,Pozhil - சோலைகளை யுடைய அணி,Ani - அழகிய வேங்கடவா,Vengadavaa - திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே! போர்,Por - யுத்தஞ்செய்ய முயன்ற கரு ஏறே,Karu Eare - காள ரிஷபம் போல் செருக்கி யிருக்குமவனே! மாலே,Maale - (கன்றுகளிடத்தில்) மோஹமுள்ளவனே! எம்பிரான்,Empiraan - எமக்கு ஸ்வாமி யானவனே! நீ உகக்கும்,Nee Ugakkum - நீ விரும்புமவையான குடையும்,Kudaiyum - குடையையும் செருப்பும்,Seruppum - செருப்பையும் குழலும்,Kuzhalum - வேய்ங்குழலையும் தருவிக்க,Tharuviikka - (நான் உனக்குக்) கொடுக்கச் செய்தேயும் கொள்ளாதே,Kollaadhe - (அவற்றை நீ) வாங்கிக் கொள்ளாமல் போனாய்,Poonaai - (கன்றுகளின் பின்னே) சென்றாய்; கடிய வெம் கான் இடை,Kadiya Vem Kaan Idai - மிகவும் வெவ்விய காட்டிலே கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே போன,Poona - தொடர்ந்து சென்ற சிறு குட்டன்,Siru Kuttan - சிறுப் பிள்ளையாகிய உன்னுடைய செம் கமலம் அடியும்,Sem Kamalam Adiyum - செந் தாமரைப் பூப் போன்ற திருவடிகளும் வெதும்பி,Vedumbi - கொதிக்கப் பெற்று உன் கண்கள்,Un Kangal - உன் கண்களும் சிவந்தாய்,Sivandhaai - சிவக்கப் பெற்றாய்; நீ;,Nee - நீ; அசைந்திட்டாய்,Asaindittai - (உடம்பு) இளைக்கவும் பெற்றாய் |
| 248 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5 | பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக் குட்டச் செங்கண் மாலே சிற்றாடையும் சிறுப் பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்துப் போய் கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்–3-3-5 | முன்,Mun - (பாரதப் போர் செய்த) முற் காலத்தில் பற்றார்,Patraar - (உனது உயிர் போன்ற பாண்டவர்களுக்குப்) பகைவரான துரியோதனாதியர் நடுங்கும்,Nadungum - நடுங்கும்படி பாஞ்ச சன்னியத்தை,Paancha Sanniyaththai - சங்கத்தை போர் ஏறே,Por Eare - போர் செய்யலுற்ற காளை போன்ற கண்ணபிரானே!-எனக்கு விதேயனாய் சிறு ஆயர் சிங்கமே,Siru Aayar Singame - சிறிய இடைப் பிள்ளைகளுள் சிங்கக் குட்டி போன்றுள்ளவனே! சீதை,Seethai - ஸீதாப் பிராட்டிக்கு மணாளா,Manaalaa - வல்லபனானவனே! சிறு குட்டன்,Siru Kuttan - சிறு பிள்ளையாயிருப்பவனே! செம் கண் மாலே,Sem Kan Maale - (இப்படியிருக்கச் செய்தேயும்) செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடைய ஸர்வேச்வரனாக விளங்குமவனே! நீ;,Nee - நீ; சிறு ஆடையும்,Siru Aadaiyum - (உன் பருவத்துக்குத் தக்க) சிறிய திருப்பரிவட்டமும் சிறு பத்திரமும் இவை,Siru Paththiramum Ivai - குற்றுடை வாளுமாகிற இவற்றை கட்டிலின் மேல் வைத்து போய்,Kattilin Mel Vaithu Poi - (காட்டுக்குப் போகையிலுள்ள விரைவாலே) (கண் வளர்ந்தருளின) கட்டிலின் மேலே வைத்து மறந்து போய் கன்று ஆயரோடு,Kanru Aayarodhu - கன்று மேய்க்கிற இடைப் பிள்ளைகளுடனே கன்றுகள் மேய்த்து,Kanrugal Meithu - கன்றுகளை மேய்த்து விட்டு கலந்து உடன்,Kalandhu Udan - (மீண்டு மாலைப் பொழுதிலே) (அந்த தன்னேராயிரம் பிள்ளைகளோடே) கூடிக் கலந்து வந்தாய் போலும்,Vandhai Poolum - (வீட்டுக்கு) வந்தாயன்றோ?. |
| 249 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6 | அஞ்சுடராழி உன் கையகத் தேந்தும் அழகா நீ பொய்கை புக்கு நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்தி ருந்தேன் என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏது மோரச்ச மில்லை கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்–3-3-6 | அம் சுடர்,Am sudar - அழகிய ஒளியை யுடைய ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை கை அகத்து,Kai akathu - திருக் கையிலே ஏந்தும்,Aendum - தரியா நின்றுள்ள அழகா,Azhagaa - அழகப் பிரானே! நீ;,Nee - நீ; பொய்கை,Poigai - (காளியன் கிடந்த) பொய்கையிலே புக்கு,Pukku - போய்ப் புகுந்து பிணங்கவும்,Pinangavum - (அவ் விடத்தில்) சண்டை செய்த போதும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன்,Naan uyir vaazndhu irundhen - நான் ஜீவித்திருந்தேன்; என் செய்ய,En seyyya - ஏதுக்காக என்னை,Ennai - என்னை வயிறு மறுக்கினாய்,Vayiru marukkinai - (இப்படி) வயிறு குழம்பச் செய்கின்றாய்; ஏது ஓர் அச்சம் இல்லை,Aethu or achcham illai - (உனக்குக்) கொஞ்சமும் பயமில்லையே; காயாம் பூ வண்ணம் கொண்டாய்,Kaayaam poo vannam kondai - காயாம் பூப் போன்ற வடிவு படைத்தவனே! கஞ்சன்,Kanjan - கம்ஸனுடைய மனத்துக்கு,Manaththukku - மநஸ்ஸுக்கு உகப்பனவே,Ugappanave - உகப்பா யுள்ள வற்றையே செய்தாய்,Seythaay - செய்யா நின்றாய். |
| 250 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7 | பன்றியும் ஆமையும் மீனமு மாகிய பாற் கடல் வண்ணா உன் மேல் கன்றி னுருவாகி மேய் புலத்தே வந்த கள்ள அசுரன் தன்னை சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே விளங்கா யெறிந்தாய் போலும் என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கன மாவார்களே–3-3-7 | பன்றியும்,Panriyum - மஹா வராஹமாயும் ஆமையும்,Aamiyum - ஸ்ரீகூர்மமாயும் மீனமும்,Meenamum - மத்ஸ்யமாயும் ஆகிய,Aagiya - திருவவதரித்தருளின பால் கடல் வண்ணா,Paal kadal vanna - பாற் கடல் போல் வெளுத்திருந்துள்ள திருமேனியை யுடையவனே! உன் மேல்,Un mel - உன்னை நலிய வேணுமென்ற எண்ணத்தினால் கன்றின் உரு ஆகி,Kanrin uru aagi - கன்றின் உருவத்தை எடுத்துக் கொண்டு மேய் புலத்தே வந்து,Mey pulathey vandhu - (கன்றுகள்) மேயும் நிலத்தில் வந்து கலந்த கள்ளம் அசுரர் தம்மை,Kallam asurar thammai - க்ருத்ரிமனான அஸுரனை சென்று,Senru - (அவன் சேஷ்டையாலே அவனை அசுரனென்றறிந்து) (அக்கன்றின் அருகிற்) சென்று சிறு கைகளாலே,Siru kaikalaale - (உனது) சிறிய கைகளாலே பிடித்து,Pitithu - (அக்கன்றைப்) பிடித்து விளங்காய்,Vilangaai - (அஸுராவிஷ்டமானதொரு) விளா மரத்தின் காய்களை நோக்கி எறிந்தாய் போலும்,Erindhaai polum - விட்டெறிந்தா யன்றோ; என் பிள்ளைக்கு,En pillaiyukku - என் பிள்ளையான கண்ணபிரானுக்கு தீமை செய்வார்கள்,Theemai seivargal - தீமைகளை உண்டுபண்ணுமவர்கள் என்றும்,Endrum - என்றைக்கும் அங்ஙனம் ஆவார்கள்,Angnanam aavargal - அவ் விளவும் கன்றும் போலே நசித்துப் போகக் கடவர்கள். |
| 251 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும் ஊட்ட முதலிலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக் கரிது வாட்டமிலாப் புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்–3-3-8 | கேசவா,Kesavaa - கண்ணபிரானே! கேட்டு அறியாதன,Kaettu ariyaadhana - (உன் விஷயமாக இதுவரை நான்) கேட்டறியாதவற்றை கேட்கின்றேன்,Kaetkinraen - (இன்று) கேட்கப் பெற்றேன்; கோவலர்,Kovalara - (அவற்றில் ஒன்று சொல்லுகின்றேன் கேள்;) கோபாலர்கள் இந்திரற்கு,Indirarku - இந்திரனைப் பூஜிப்பதற்காக காட்டிய,Kaattiya - அனுப்பிய சோறும்,Soruma - சோற்றையும் கறியும்,Kariyuma - (அதுக்குத் தக்க) கறியையும் தயிரும்,Thairuma - தயிரையும் உடன் கலந்து,Udan kalandhu - ஒன்று சேரக் கலந்து உண்டாய் போலும்,Undaai poolum - உண்டவனன்றோ நீ; ஊட்ட,Ootta - (இப்படி உண்ண வல்ல பெரு வயிற்றாளனான உன்னை) (நாடோறும்) ஊட்டி வளர்க்க(த்தக்க) முதல் இலேன்,Mudhal ilaen - கைம் முதல் எனக்கில்லை; உன் தன்னை கொண்டு,Un thannai kondu - உன்னை வைத்துக் கொண்டு ஒரு போதும்,Oru pothum - ஒரு வேளையும் எனக்கு அரிது,Enakku aridhu - என்னால் ஆற்ற முடியாது; வாட்டம் இலா,Vaattam ilaa - (என்றும்) வாடாத புகழ்,Pugazh - புகழை யுடைய வாசு தேவா,Vaasu Devaa - வஸுதேவர் திருமகனே! இன்று தொட்டும்,Indru thottum - இன்று முதலாக உன்னை,Unnai - உன்னைக் குறித்து அஞ்சுவன்,Anjuvan - அஞ்சா நின்றேன். |
| 252 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9 | திண்ணார் வெண் சங் குடையாய் திருநாள் திருவோணமின் றேழு நாள் முன் பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறு வித்தேன் கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தரிசியும் ஆக்கி வைத்தேன் கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகேல் கோலம் செய் திங்கே யிரு–3-3-9 | திண் ஆர்,Thin Aar - திண்மை பொருந்திய வெண் சங்கு,Ven Sangu - வெண் சங்கத்தை உடையாய்,Udaiyaai - (திருக் கையில்) ஏந்தி யுள்ளவனே! கண்ணா,Kanna - கண்ணபிரானே! திருநாள்,Thirunaal - (நீ பிறந்த) திருநக்ஷத்திரமாகிய திருஓணம்,Thiru Onam - திருவோண க்ஷத்திரம் இன்று,Endru - இற்றைக்கு ஏழு நாள்,Ezh NaaL - ஏழாவது நாளாகும்; முன்,Mun - (ஆதலால்,) முதல் முதலாக பண் ஏர் மொழியாரை கூவி,Pan Aer Mozhiyaarai Koovi - பண்ணோடே கூடின அழகிய பேச்சை யுடைய மாதர்களை யழைத்து முளை அட்டி,Mulai Atti - அங்குராரோபணம் பண்ணி பல்லாண்டு கூறுவித்தேன்,Pallaandu Kooruvithen - மங்களாசாஸனமும் பண்ணுவித்தேன்; கண்ணாலம் செய்ய,Kannaalam Seyya - (திருவோணத்தினன்று) திருக் கல்யாணம் செய்வதற்கு கறியும்,Kariyum - கறி யமுதுகளையும் அரிசியும்,Arisiyum - அமுது படியையும் கலத்தது ஆக்கி வைத்தேன்,Kalathathu Aakki Vaithen - பாத்திரங்களில் சேமித்து வைத்திருக்கின்றேன்; நீ-;,Nee - நீ-; நாளைத் தொட்டு,NaaLai Thottu - நாளை முதற்கொண்டு கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே போகேல்,Pogael - (காட்டுக்குப்) போக வேண்டா; கோலம் செய்து,Kolam Seythu - (உன் வடிவுக்குத் தக்க) அலங்காரங்களைச் செய்து கொண்டு இங்கே இரு,Engae Eru - இந்த அகத்திலேயே இருக்கக் கடவாயாக. |
| 253 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | புற்றர வல்குல் அசோதை நல் லாய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டுகந்து அவள் கற்பித்த மாற்ற மெல்லாம் செற்ற மிலாதவர் வாழ் தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல் கற்றிவை பாட வல்லார் கடல் வண்ணன் கழலிணை காண்பார் களே–3-3-10 | புற்று,Putru - புற்றிலே (வளர்கின்ற) அரவு,Aravu - பாம்பின் படத்தை ஒத்த அல்குல்,Alkul - அல்குலை உடையளாய் அசோதை,Asothai - யசோதை யென்னும் பெயரை யுடையளாய் நல்,Nal - (பிள்ளை திறத்தில்) நன்மையை யுடையளான ஆய்ச்சி,Aaychi - ஆய்ச்சியானவள் தன் புத்திரன்,Than Puthiran - தன் மகனான கோவிந்தனை,Govindanai - கண்ணபிரானை கன்று இனம் மேய்த்து வரக் கண்டு,Kanru Inam Maeythu Varak Kandu - கன்றுகளின் திரளை (க்காட்டிலே) மேய்த்து விட்டு மீண்டு வரக் கண்டு உகந்து,Ugandhu - மன மகிழ்ந்து அவள்,Aval - அவ் யசோதை கற்பித்த,Karpitha - (அம் மகனைக் குறித்து இன்னபடி செய் என்று)நியமித்துக் கூறிய மாற்றம் எல்லாம்,Maatram Ellaam - வார்த்தைகளை யெல்லாம்; செற்றம் இலாதவர்,Setram Ilaadhavar - அஸூயை யற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ் தரு,VaaL Tharu - வாழுமிடமான தென்,Then - அழகிய புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த இவை,Evai - இப் பாசுரங்களை கற்று,Katru - (ஆசார்ய முகமாக) ஓதி பாட வல்லார்,Paada Vallaar - (வாயாரப்) பாட வல்லவர்கள் கடல் வண்ணன்,Kadal Vannan - கடல் போன்ற நிறத்தனான எம்பெருமானுடைய கழல் இணை,Kalal Inai - திருவடி யிணைகளை காண்பார்கள்,Kaanbargal - கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள். |
| 254 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1 | தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம்மத் தளி தாழ் பீலி குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு மழை கொலோ வருகின்ற தென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழைவனர் நிற்பனராகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்தொழிந்தனரே–3-4-1 | தழைகளும் தொங்கலும்,Thazhaigalum Thongalum - பலவகைப் பட்ட மயிற் பீலிக் குடைகள் எங்கும் ததும்பி,Engum Thathumbi - நாற் புறங்களிலும் நிறைந்து தண்ணுமை,Thannumai - ம்ருதங்கங்களும் எக்கம் மத்தளி,Ekkam Maththali - ஒரு தந்த்ரியை யுடைய மத்தளி வாத்யங்களும் தாழ் பீலி,Thazh Peeli - பெரிய விசிறிகளும் குழல்களும்,Kuzhalgalum - இலைக் குழல், வேய்ங்குழல் என்ற குழல்களும் கீதமும்,Geethamum - இவற்றின் பாட்டுக்களும் எங்கும் ஆகி,Engum Aagi - எங்கும் நிறைய கோவிந்தன்,Govindan - (இந்த ஸந்நிவேசத்துடனே)கண்ணபிரான் வருகின்ற,Varugindra - (கன்று மேய்த்து மீண்டு) வருகின்ற கூட்டம்,Koottam - பெரிய திருவோலக்கத்தை கண்டு,Kandu - பார்த்து மங்கைமார்,Mangaimar - யுவதிகளான இடைப் பெண்கள் மழை கொல் ஓ வருகின்றது என்று சொல்லி,Mazhai Kol O Varugindrathu Endru Solli - ‘மேக ஸமூஹமோ தான் (தரை மேலே நடந்து) வருகின்றது!’ என்று உல்லேகித்து சாலகம் வாசல் பற்றி,Saalagam Vaasal Patri - ஜாலகரந்த்ரங்களைச் சென்று கிட்டி நுழைவனர் நிற்பனர் ஆகி,Nuzhaivanar Nrirpanar Aagi - (வியாமோஹத்தாலே சிலர் மேல் விழுவதாகச் சால்க வாசல் வழியே) நுழையப் புகுவாரும், (சிலர் குருஜந பயத்தாலே) திகைத்து நிற்பாருமாகி எங்கும்,Engum - கண்ணபிரான் நடந்த வழி முழுவதும் உள்ளம் விட்டு,Ullam Vittu - தங்கள் நெஞ்சைப் பரக்க விட்டு ஊண்,Oon - ஆஹாரத்தை மறந்தொழிந்தனர்,Maranthoizhindhanar - மறந்து விட்டார்கள். |
| 255 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2 | வல்லி நுண் இதழன்ன ஆடை கொண்டு வசை யறத் திரு வரை விரித் துடுத்து பல்லி நுண் பற்றாக உடை வாள் சாத்திப் பணைக்கச் சுந்திப் பல தழை நடுவே முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல்லாயர் குழாம் நடுவே எல்லியம் போதாகப் பிள்ளை வரும் எதிர் நின்று அங்கினவளை இழவேன்மினே–3-4-2 | பிள்ளை,Pillai - நந்த கோபர் மகனான கண்ணன், வல்லி,Valli - கற்பகக் கொடியினது நுண்,Nun - நுட்பமான இதழ் அன்ன,Ethazh Anna - இதழ் போன்று ஸுகுமாரமான ஆடை கொண்டு,Aadai Kondu - வஸ்த்ரத்தைக் கொணர்ந்து திரு அரை ,Thiru Arai - (தனது) திருவரையிலே வசை அற,Vasai Ara - ஒழுங்காக விரித்து உடுத்து,Virithu Uduthu - விரித்துச் சாத்திக் கொண்டு பணை கச்சு,Panai Kachu - (அதன்மேல்) பெரிய கச்சுப் பட்டையை உந்தி,Undhi - கட்டிக் கொண்டு உடை வாள்,Udai Vaal - (அதன் மேல்) கத்தியை பல்லி நுண் பற்று ஆக சாத்தி,Palli Nun Patru Aaga Saathi - பல்லியானது சுவரிலே இடை வெளியறப் பற்றிக் கிடக்குமா போலே நெருங்கச் சாத்திக் கொண்டு நல்,Nal - அழகியதும் நறு,Naru - பரிமளமுள்ளதுமான முல்லை மலர்,Mullai Malar - முல்லைப் பூவையும் வேங்கை மலர்,Vengai Malar - வேங்கைப் பூவையும் (தொடுத்து) அணிந்து,Anindhu - (மாலையாகச்) சாத்திக் கொண்டு பல் ஆயர்,Pal Aayar - பல இடைப் பிள்ளைகளுடைய குழாம் நடுவே,Kuzhaam Naduvae - கூட்டத்தின் நடுவில் பல தழை நடுவே,Pala Thazhai Naduvae - பல மயில் தோகைக் குடை நிழலிலே எல்லி அம் போது ஆக,Elli Am Poothu Aaga - ஸாயம் ஸந்த்யா காலத்திலே வரும்,Varum - வருவன் அங்கு,Angu - அவன் வரும் வழியில் எதிர் நின்று,Ethir Nindru - எதிராக நின்று வளை இனம்,Valai Inam - கை வளைகளை இழவேல்மின்,Ezhavaelmin - இழவாதே கொள்ளுங்கள். |
| 256 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3 | சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டோட ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்ற ஆ நிரையினம் மீளக் குறித்த சங்கம் வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள் அது கண்டு இவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே–3-4-3 | தோழன்மார்,Thozhanmaar - தன்னேராயிரம் பிள்ளைகள், சுரிகையும்,Surikaiyum - உடை வாளையும் தெறி வில்லும்,Theri Villum - சுண்டு வில்லையும் செண்டு கோலும்,Sendu Kolum - பூஞ்செண்டு கோலையும் மேல் ஆடையும்,Mel Aadaiyum - உத்தராயத்தையும் கொண்டு,Kondu - (கண்ண பிரானுக்கு வேண்டின போது கொடுக்கைக்காக) கையிற்கொண்டு ஓட,Oda - பின்னே ஸேவித்து வர, ஒருவன் தன்,Oruvan Than - ஒரு உயிர்த் தோழனுடைய தோளை,Tholai - தோளை ஒரு கையால்,Oru Kaiyal - ஒரு திருக் கையினால் ஊன்றி,Oonri - அவலம்பித்துக் கொண்டு (ஒரு கையால்),(Oru Kaiyal) - மற்றொரு திருக் கையினால் ஆநிரை இனம் மீள குறித்த சங்கம்,Aanirai Inam Meela Kuritha Sangam - (கை கழியப் போன) பசுக்களின் திரள் திரும்பி வருவதற்காக ஊத வேண்டிய சங்கை (ஊன்றி),(Oonri) - ஏந்திக் கொண்டு வருகையில்,Varugaiyil - மீண்டு வருமளவில் வாடிய,Vaadiya - வாட்டத்தை அடைந்துள்ள பிள்ளை கண்ணன்,Pillai Kannan - ஸ்ரீக்ருஷ்ண கிசோரனுடைய மஞ்சளும் மேனியும்,Manjalum Maeniyum - பற்று மஞ்சள் மயமான திருமேனியையும் வடிவும்,Vadivum - அவயவ ஸமுதாய சோபையையும் அருகே நின்றான் என் பெண்,Arugae Nindraan En Pen - (அவனுக்குச்) சமீபத்தில் நின்று கொண்டிருந்த என் மகள் கண்டாள்,Kandaal - (முதலில் எல்லாரும் பார்க்கிறாப்போல்) பார்த்தாள்; நோக்கி கண்டாள்,Nookki Kandaal - (பிறகு, அபூர்வ வஸ்து தர்ச நீயமாயிருந்த படியால்) கொஞ்சம் குறிப்பாகப் பார்த்தாள்; அது கண்டு,Adhu Kandu - அவ்வளவையே நிமித்தமாகக் கொண்டு இ ஊர்,E Oor - இச்சேரியிலுள்ளவர்கள் ஒன்று புணர்க்கின்றது,Ondru Punarugindrathu - (அவனுக்கும் இவளுக்கும் அடியோடில்லாத) ஒரு ஸம்பந்தத்தை யேறிட்டுச் சொல்லுகின்றனர்; ஏ,Ae - இதற்கு என் செய்வது! |
| 257 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4 | குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழலூதி யூதி கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு என்றும் இவனை யொப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி வந்து காணாய் ஒன்றும் நில்லா வளை கழன்று துகி லேந்திள முலையும் என் வசமல்லவே–3-4-4 | நங்காய்,Nangai - பூர்த்தியை யுடையவனே! ஏடி,Edi - தோழீ! இவனை ஒப்பாரை,Evanai Oppaarai - இவனைப் போன்றுள்ள வ்யக்தியை என்றும்,Endrum - எந்த நாளிலும் கண்டு அறியேன்,Kandu Ariyaen - (நான்) பார்த்ததில்லை; வந்து காணாய்,Vandhu Kaanai - (இங்கே) ஓடிவந்து பார்; (என்று ஒருத்தி தன் தோழியை அழைக்க, அவள் சிறிது தாமஸிக்க, மேல் தனக்குப் பிறந்த விகாரத்தைச் சொல்லுகிறாள்;) கோவலன் ஆய்,Kovalan Aay - இடைப் பிள்ளையாகப் பிறந்து (இந்த்ர பூஜையை விலக்க) குன்று,Kundru - (பசிக் கோபத்தினால் இந்திரன் விடா மழை பெய்வித்த போது) கோவர்த்தன மலையை எடுத்து,Eduthu - (குடையாக) எடுத்து ஆநிரை,Aanirai - பசுக்களின் திரளை காத்த,Kaatha - ரக்ஷித்தருளின பிரான்,Piraan - உபகாரகனும் குழல்,Kuzhal - குழலை ஊதி ஊதி,Oodhi Oodhi - பல கால் ஊதிக் கொண்டு கன்றுகள்,Kanrugal - கன்றுகளை மேய்த்து,Meyththu - (காட்டில்) மேய்த்து விட்டு தன் தோழரோடு உடன் கலந்து,Than Thozharodu Udan Kalanthu - தனது தோழர்களுடன் கூடிக் கொண்டு தெருவில்,Theruvil - இவ் வீதி வழியே வருவானை,Varuvaanai - வருபவனுமான கண்ணபிரானை கண்டு,Kandu - நான் கண்ட வளவிலே துகில்,Thugil - (எனது அரையிலுள்ள) புடவை கழன்று,Kalandru - (அரையில் தங்காதபடி) அவிழ்ந்தொழிய வளை,Valai - கை வளைகளும் ஒன்றும் நில்லா,Ondrum Nillaa - சற்றும் நிற்கின்றனவில்லை; ஏந்து,Enndhu - (என்னால்) சுமக்கப் படுகின்ற இள முலையும்,Ela Mulaiyum - மெல்லிய முலைகளும் என் வசம் அல்ல,En Vasam Alla - என் வசத்தில் நிற்கின்றனவில்லை. |
| 258 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5 | சுற்றி நின்று ஆயர் தழைகளிடச் சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து பற்றி நின்று ஆயர் கடைத் தலையே பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின் மற்றொருவர்க்கு என்னைப் பேச லொட்டேன் மாலிருஞ் சோலை எம் மாயற் கல்லால் கொற்றவனுக்கு இவளா மென்றெண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே–3-4-5 | ஆயர்,Aayar - இடைப் பிள்ளைகள் சுற்றி நின்று,Suttri Nindru - (தன்னைச்) சூழ்ந்து கொண்டு தழைகள்,Thazhaigal - மயில் தோகைக் குடைகளை இட,Eda - (தன் திருமேனிக்குப் பாங்காகப்) பிடித்துக் கொண்டு வர, சுருள் பங்கி,Surul Pangi - (தனது) சுருண்ட திருக் குழல்களை (எடுத்துக் கட்டி) நேத்திரத்தால்,Nethrathaal - பீலிக் கண்களாலே அணிந்து,Anindhu - அலங்கரித்துக் கொண்டு ஆயர் கடைத்தலை பற்றி நின்று,Aayar Kadaithalai Patri Nindru - இடைப் பிள்ளைகளின் கோஷ்டியில் முன் புறத்தில் நின்று கொண்டு பாடவும் ஆடவும் கண்டேன்,Paadavum Aadavum Kandaen - பாட்டுங்கூத்துமாக வரக் கண்டேன்; பின்,Pin - இனி மேல் அன்றி,Andri - அவனுக்கொழிய மற்று ஒருவற்கு,Matru Oruvarku - வேறொருவனுக்கு என்னை பேசல் ஒட்டேன்,Ennai Paesal Ottaen - என்னை (உரியளாகத் தாய் தந்தையர்) பேசுவதை நான் பொறுக்க மாட்டேன்; மாலிருஞ்சோலை,Malirunjcholai - (ஆர்க்கொழிய வென்று கேட்கிறிகோளாகில்?) திருமாலிருஞ்சோலையில் நித்ய வாஸம் பண்ணுகிற எம் மாயற்கு அல்லால்,Em Maayarukku Allaal - எனது தலைவனுக்கொழிய (மற்றொருவற்கு என்னைப் பேசலொட்டேன்;) இவள்,Eval - (ஆகையினால், தாய்மார்களே!) (நம் மகளான) இவள் கொற்றவனுக்கு,Kottravanukku - அத் தலைவனுக்கே ஆம்,Aam - உரியன் என்று எண்ணி,Endru Enni - என்று நிச்சயித்து விட்டு கொடுமின்கள்,Kodumingal - (அவனுக்கே தாரை வார்த்து) தத்தம் பண்ணி விடுங்கள்; கொடீர் ஆகில்,Kodir Aagil - (அப்படி) கொடா விட்டீர்களே யானால் கோழம்பமே,Kozhambamae - (உங்களுக்கு என்றைக்கும்) மனக் குழப்பமேயாம். |
| 259 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6 | சிந்துர மிலங்கத் தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும் அந்தர முழவத் தண் தழைக் காவின் கீழ் வருமாயரோடு உடன் வளை கோல் வீச அந்தமொன் றில்லாத ஆயப் பிள்ளை அறிந்தறிந்து இவ் வீதி போதுமாகில் பந்து கொண்டானென்று வளைத்து வைத்துப் பவள வாய் முறுவலும் காண்போம் தோழீ–3-4-6 | தோழீ,Thozhi - வாராய் தோழீ! தன்,Than - தன்னுடைய திருநெற்றி மேல்,Thirunettri Mel - திரு நெற்றியில் சிந்துரம்,Sindhuram - சிந்தூரமும் திருத்திய,Thiruthhiya - (அதன் மேல்) ப்ரகாசமாகச் சாத்தின கோறம்பும்,Korambum - திலகப் பொட்டும் திரு குழலும்,Thiru Kuzhalum - (அதுக்குப் பரபாகமான) திருக் குழற் கற்றையும் இலங்க,Elanga - விளங்கவும் அந்தரம்,Antharam - ஆகாசமடங்கலும் முழவம்,Muzhavam - மத்தளங்களின் ஓசையினால் நிறையவும் தழை,Thazhai - பீலிக் குடைகளாகிற தண்,Than - குளிர்ந்த காவின் கீழ்,Kaavin Keezh - சோலையின் கீழே வரும்,Varum - (தன்னோடு) வருகின்ற ஆயரோடு உடன்,Aayarodu Udan - இடைப் பிள்ளைகளோடு கூட வளை கோல் வீச,Valai Kol Veesa - வளைந்த தடிகளை வீசிக் கொண்டு ஒன்றும் அந்தம் இல்லாத,Ondrum Antham Illadha - (அலங்கார விசேஷங்களில்) ஒவ்வொன்றே எல்லை காண ஒண்ணாத ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரான் அறிந்து அறிந்து,Arindhu Arindhu - தன் தன்மையையும் என் தன்மையையும் அறிந்து வைத்தும் இ வீதி,E Veedhi - இத் தெரு வழியே போதும் ஆகில்,Podhum Aagil - வருவானாகில் பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து,Panthu Kondaan Endru Valaithu Vaithu - (அவனை) ‘ (எங்கள்) பந்தை வலியப் பிடுங்கிக் கொண்டு போனவனன்றோ இவன்’ என்று (முறையிட்டு) வழி மடக்கி பவளம் வாய்,Pavalam Vaai - (அவனுடைய) பவளம் போன்ற அதரத்தையும் முறுவலும்,Muruvallum - புன் சிரிப்பையும் காண்போம்,Kaanbom - நாம் கண்டு அநுபவிப்போம். |
| 260 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7 | சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின் கீழ் தன் திருமேனி நின்றொளி திகழ நீல நல் நறுங் குஞ்சி நேத்திரத் தாலணிந்து பல்லாயர் குழாம் நடுவே கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதி யிசை பாடிக் குனித்து ஆயரோடு ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் யயர்க்கின்றதே–3-4-7 | சால பல் நிரை பின்னே,Saala Pal Nirai Pinnae - பற்பல பசுத் திரளின் பின்னே தழை,Thazhai - பீலிக் குடைகளாகிற காவின் கீழ்,Kaavin Keezh - சோலையின் கீழே தன்,Than - தன்னுடைய திருமேனி,Thirumeni - திருமேனியானது ஒளி திகழ நின்று,Oli Thigazha Nindru - பளபளவென்று விளங்கும்படி நின்று நீலம்,Neelam - நீல நிறத்தை யுடைத்தாய் நல் ,Nal - நீட்சி முதலிய அமைப்பையுடைத்தாய் நறு,Naru - பரிமளம் வீசா நின்றுள்ள குஞ்சி,Kunji - திருக்குழற் கற்றையை நேத்திரத்தால்,Nethrathaal - பீலிக் கண்களினால் அணிந்து,Anindhu - அலங்கரித்துக் கொண்டு பல் ஆயர் குழாம் நடுவே,Pal Aayar Kuzhaam Naduvae - பல இடையர்களின் கூட்டத்தின் நடுவில் கோலம் செந்தாமரை கண் மிளிர,Kolam Senthaamarai Kann Milira - அழகிய செந்தாமரை மலர் போன்ற (தனது) திருக் கண்கள் ஸ்புரிக்கப் பெற்று குழல்,Kuzhal - வேய்ங்குழலை ஊதி,Oodhi - ஊதிக் கொண்டும் இசை,Esai - (அதுக்குத் தக்க) பாட்டுக்களை பாடி,Paadi - பாடிக் கொண்டும் குனித்து,Kuniththu - கூத்தாடிக் கொண்டும் ஆயரோடு,Aayarodu - இடைப் பிள்ளைகளுடனே ஆலித்து வருகின்ற,Aaliththu Varugindra - மகிழ்ந்து வருகின்ற ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரானுடைய அழகு,Azhagu - வடிவழகை என் மகள் கண்டு,En Magal Kandu - என் மகள் பார்த்து அயர்க்கின்றது,Ayarkkindrathu - அறிவு அழியாநின்றாள். |
| 261 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | சிந்துரப் பொடிக் கொண்டு சென்னி யப்பித் திரு நாம மிட்டங்கோ ரிலையந் தன்னால் அந்தர மின்றித் தன்னெறி பங்கியை அழகிய நேத்திரத் தாலணிந்து இந்திரன் போல் வரு மாயப் பிள்ளை எதிர் நின்றங் கினவளை இழவே லென்ன சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே–3-4-8 | சிந்துரம் பொடி கொண்டு,Sindhuram Podi Kondu - ஸிந்தூர சூர்ணத்தைக் கொணர்ந்து தன்,Than - தன்னுடைய சென்னி,Senni - திரு முடியிலே சிப்பி,Sippi - அப்பிக் கொண்டும் அங்கு,Angu - திரு நெற்றியில் ஓர் இலை தன்னால்,Or Ilai Thannal - ஒரு இலையினாலே திரு நாமம் இட்டு,Thiru Naamam Ittu - ஊர்த்துவ புண்ட்ரம் சாத்திக் கொண்டும் நெறி,Neri - நெறித்திரா நின்றுள்ள பங்கியை,Pangiyai - திருக் குழலை அழகிய,Azhagiya - அழகிய நேத்திரத்தால்,Nethrathaal - பீலிக் கண்களினால் அந்தரம் இன்றி அணிந்து,Antharam Inri Anindhu - இடைவெளியில்லாதபடி (நெருங்க) அலங்கரித்துக் கொண்டும் இந்திரன் போல்,Endhiran Pol - ஸாக்ஷாத் தேவேந்திரன் போல வரும்,Varum - (ஊர்வலம்) வருகின்ற ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரானுக்கு எதிர் அங்கு,Ethir Angu - எதிர்முகமான இடத்தில் நின்று,Nindru - நின்று கொண்டு வளை இனம்,Valai Inam - கை வளைகளை இழவேல்,Ezhavael - நீ இழக்க வேண்டா” என்ன,Enna - என்று (என் மகளை நோக்கி நான் உறுத்திச்) சொல்லச் செய்தேயும் நங்கை,Nangai - (எனது) மகளானவள் சந்தியில் நின்று,Sandhiyil Nindru - அவன் வரும் வழியில் நின்று தன் துகிலொடு,Than Thugilodu - தனது துகிலும் சரிவளை,Sarivalai - கைவளைகளும் கழல்கின்றது,Kalalkindrathu - கழன்றொழியப் பெற்றாள். ஏ,Ae - இதென்ன அநியாயம்! |
| 262 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9 | வலங்காதின் மேல் தோன்றிப் பூ வணிந்து மல்லிகை வன மாலை மெளவல் மாலை சிலிங்காரத் தால் குழல் தாழ விட்டுத் தீங் குழல் வாய் மடுத் தூதி யூதி அலங்காரத்தால் வரு மாயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே–3-4-9 | வலங்காதில்,Valangaadhil - வலது காதில் மேல் தோன்றிப் பூ,Mel Thondrip Poo - செங்காந்தள் பூவையும் வனம் மல்லிகை மாலை,Vanam Malligai Maalai - (திருமார்பில்) காட்டு மல்லிகை மாலையையும் மௌவல் மாலை,Mouval Maalai - மாலதீ புஷ்ப மாலையையும் அணிந்து,Anindhu - அணிந்து கொண்டு, சிலிங்காரத்தால்,Silingaarathaal - அலங்காரமாக குழல்,Kuzhal - திருக்குழல்களை தாழ விட்டு,Thaazha Vittu - (திரு முதுகில்) தொங்க விட்டுக் கொண்டு தீம் குழல்,Theem Kuzhal - இனிமையான வேய்ங்குழலை வாய் மடுத்து,Vaai Maduthu - திருப் பவளத்தில் வைத்து ஊதி ஊதி,Oodhi Oodhi - வகை வகையாக ஊதிக் கொண்டு, அலங்காரத்தால்,Alangaarathaal - (கீழ்ச் சொன்ன) அலங்காரங்களோடே வரும்,Varum - வாரா நின்ற ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரானுடைய அழகு,Azhagu - வடிவழகை என் மகள் கண்டு,En Magal Kandu - என் மகள் பார்த்து ஆசைப்பட்டு,Aasaipattu - (அவனிடத்தில்) காமங் கொண்டு, விலங்கி நில்லாது,Vilangi Nillaadhu - (இவ்வடிவழகு கண்டவர்களை வருத்தும் என்று கண்ணை மாற வைத்துக் கடக்க நிற்க வேண்டி யிருக்க,) (அப்படி) வழி விலங்கி நில்லாமல் எதிர் நின்று,Ethir Nindru - (அவனுக்கு) எதிர்முகமாக நின்று வெள்வளை கழன்று,Velvalai Kalandru - (தனது) சங்கு வளைகள் கழலப் பெற்று மெய் மெலிகின்றது,Mey Melikindrathu - உடலும் இளைக்கப் பெற்றாள். |
| 263 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து ஆயர் பாடியில் வீதி யூடே கண்ணங் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம் வண்டமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும் பண்ணின்பம் வரப் பாடும் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே–3-4-10 | விண்ணின் மீது,Vinnin Meedhu - பரமாகாசமாகிய ஸ்ரீவைகுண்டத்திலே அமரர்கள்,Amarargal - நித்ய ஸூரிகள் விரும்பி,Virumbi - ஆதரித்து தொழ,Thozha - ஸேவியா நிற்கச் செய்தேயும் கண்ணன்,Kannan - ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா மறைத்து,Maraiththu - (அவர்களை மதியாமல்) மேனாணித்து ஆயர் பாடியில்,Aayar Paadiyil - திருவாய்ப்பாடியில் (வந்து அவதரித்து) வீதி ஊடே,Veedhi Oodae - தெருவேற காலி பின்னே,Kaali Pinnae - பசுக்களின் பின்னே எழுந்தருள,Ezhundharula - எழுந்தருளா நிற்க, இள ஆய் கன்னிமார்,Ila Aay Kannimaar - (அவ்வழகை)யுவதிகளான இடைப் பெண்கள் கண்டு,Kandu - பார்த்து காமுற்ற வண்ணம்,Kaamutra Vannam - காம லிகாரமடைந்த படியை, வண்டு அமர் பொழில்,Vandu Amar Pozhil - வண்டுகள் படிந்த சோலைகளை யுடைய புதுவையர் கோன்,Puduvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் சொன்ன,Sonnan - அருளிச் செய்த மாலை பத்தும்,Maalai Paththum - சொல் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையும் இன்பம் வர,Inbam Vara - இனிமையாக பண்,Pan - பண்ணிலே பாடும்,Paadum - பாட வல்ல பக்தருள்ளார்,Bhaktar Ullaar - பக்தர்களா யிருக்குமவர்கள் பரமான,Paramaan - லோகோத்தரமான வைகுந்தம்,Vaikundham - ஸ்ரீவைகுண்டத்தை நண்ணுவர்,Nannuvaar - அடையப் பெறுவார்கள். |
| 264 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1 | அட்டுக் குவி சோற்றுப் பருப் பதமும் தயிர் வாவியும் நெய் யளறும் அடங்கப் பொட்டத் துற்று மாரிப்பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை வட்டத் தடங்கண் மட மான் கன்றினை வலை வாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர் கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-1 | குற மகளிர்,Kura Magalir - குறப் பெண்கள், வட்டம் தட கண்,Vattam Thada Kan - வட்ட வடிவான பெரிய கண்களை யுடையதும் மடம்,Madam - (தனது தாய்க்கு) வசப் பட்டிருப்பதுமான மான் கன்றினை,Maan Kanrinai - மான் குட்டியை வலை வாய்,Valai Vaai - வலையிலே பற்றிக் கொண்டு,Patri Kondu - அகப் படுத்தி கொட்டை,Kottai - (பின்பு அதனைத் தங்களுடையதாக அபிமானித்து, அதற்கு) பஞ்சுச் சுருளின் தலை,Thalai - நுனியாலே பால்,Paal - பாலை கொடுத்து,Koduthu - எடுத்து ஊட்டி வளர்க்கும்,Valarkkum - வளர்க்கைக்கு இடமான கோவர்த்தனம் என்னும்,Govarthanam Ennum - ‘கோவர்த்தநம்’ என்ற பெயரை யுடையதும் கொற்றம்,Kotram - வெற்றியை யுடையதுமான குடை,Kudai - குடையானது (யாதெனில்?) அட்டு,Attu - சமைத்து குவி,Kuvi - குவிக்கப் பட்ட சோறு,Sooru - சோறாகிற பருப்பதமும்,Paruppathamum - பர்வதமும் தயிர்,Thayir - தயிர்த் திரளாகிற வாவியும்,Vaaviyum - ஓடையும் நெய் அளறும்,Ney Alarum - நெய்யாகிற சேறும் அடங்க,Adanga - ஆகிய இவற்றை முழுதும் பொட்ட,Potta - விரைவாக (ஒரே கபளமாக) துற்றி,Thutri - அமுது செய்து விட்டு, மாரி,Maari - (இப்படி செய்கையினாலே இந்திரனுக்குக் கோபம் மூட்டி அவன் மூலமாக) மழையாகிற பகை,Pagai - பகையை புணர்த்த,Punartha - உண்டாக்கின பொரு மா கடல் வண்ணன்,Poru Maa Kadal Vannan - அலை யெறிகிற பெரிய கடலினது நிறம் போன்ற நிறத்தனான கண்ணபிரான் பொறுத்த,Porutha - (தனது திருக் கைவிரலால்) தூக்கின மலை,Malai - மலையாம். |
| 265 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 2 | வழு வொன் றுமிலாச் செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்டு மழை வந்து எழு நாள் பெய்து மாத்தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை இழவு தரியாத தோரீற்றுப் பிடி இளஞ்சீயம் தொடர்ந்து முடுகுதலும் குழவி யிடைக்காலிட் டெதிர்ந்து பொரும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-2 | ஒன்றும் வழு இல்லா செய்கை,Ondrum Vazh Illa Seigai - (இந்திரபட்டம் பெறுதற்காகச் செய்த ஸாதநாம்சத்தில்) ஒரு குறையுமற்ற செய்கைகளை யுடைய வானவர் கோன,Vaanavar Kon - தேவேந்திரனுடைய வலி பட்டு,Vali Pattu - பலாத்காரத்துக்கு உள் பட்டும் முனிந்து விடுக்கப்பட்ட,Muninthu Vidukkapatta - (அவ் விந்திரனால்) கோபத்துடன் ஏவப்பட்டுமுள்ள மழை,Mazhai - மேகங்களானவை வந்து,Vandhu - (அகாலத்திலே குமுறிக் கொண்டு) வந்து ஏழு நாள் பெய்து,Ezhu Naal Peidhu - ஏழுநாளளவும் (இடைவிடாமல்) வர்ஷித்து மா தடுப்ப,Maa Thaduppa - பசுக்களை (வெளியே போகக் கூடாதபடி) தகைய மதுசூதன்,Madhusoodhan - கண்ணபிரான் எடுத்து,Eduthu - (ஸர்வ ஜநங்களையும் காப்பதற்காக அடி மண்ணோடு கிளப்பி) எடுத்து மறித்த,Maritha - தலை கீழாகப் பிடித்தருளின மலை,Malai - மலையானது (எது என்னில்;) இள சீயம்,Ila Seeyam - சிங்கக் குட்டியானது தொடர்ந்து,Thodarndhu - ( யானைக் குட்டியை நலிவதாகப்) பின் தொடர்ந்து வந்து முடுகுதலும்,Muduguthalum - எதிர்த்த வளவிலே, இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி,Izhal Thariyaadathu Oor Eetrupidi - (தன் குட்டியின்) வருத்தத்தைப் பொறுக்க மாட்டாத (அக் குட்டியைப்) பெற்ற பெண் யானை யானது குழவி,Kuzhavi - (அந்தக்) குட்டியை கால் இடை இட்டு,Kaal Idai Ittu - (தனது) நான்கு கால்களின் நடுவில் அடக்கிக் கொண்டு எதிர்ந்து,Edhirndhu - (அந்தச் சிங்கக் குட்டியோடு) எதிர்த்து பொரும்,Porum - போராடப்பெற்ற கோவர்த்தனம்,Govarthanam - குடையே-. |
| 266 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3 | அம்மைத் தடங்கண் மட வாய்ச்சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலறி எம்மைச் சரணேன்று கொள்ளென்றிரப்ப இலங்காழிக் கை யெந்தை எடுத்த மலை தம்மைச் சரணென்ற தம் பாவையரைப் புன மேய்கின்ற மானினம் காண்மினென்று கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-3 | அம்,Am - அழகிய மை,Mai - மை அணிந்த தட,Thada - விசாலமான கண்,Kann - கண்களையும் மடம்,Madam - ‘மடப்பம்’ என்ற குணத்தை யுமுடைய ஆய்ச்சியரும்,Aaychiyarum - இடைச்சிகளும் ஆன் ஆயரும்,Aan Aayarum - கோபாலர்களும் ஆநிரையும் ,Aanirayum - பசுக்கூட்டமும்ட்டமும் அலறி,Alari - (மழையின் கனத்தால்) கதறிக் கூப்பிட்டு எம்மை சரண் என்று கொள் என்று,Emmai Saran Endru Kol Endru - (‘எம்பிரானே! நீ) எமக்கு ரக்ஷகனாயிருக்குந் தன்மையை எற்றுக் கொள்ள வேணும்’ என்று இரப்ப,Irappa - பிரார்த்திக்க, இலங்கு,Ilangu - (அவ்வேண்டுகோளின்படியே) விளங்கா நின்ற ஆழி,Aazhi - திருவாழி ஆழ்வானை கை,Kai - கையிலே உடையனாய் எந்தை,Endhai - எமக்கு ஸ்வாமியான கண்ணபிரான் எடுத்த,Edutha - (அவற்றை ரக்ஷிப்பதற்காக) எடுத்த மலை,Malai - மலையாவது (எது என்னில்?); கொம்மை புயம்,Kommai Puyam - பருத்த புஜங்களை யுடைய குன்றர்,Kunrar - குறவர்கள், தம்மை,Thammai - தங்களை சரண் என்ற,Saran Endra - சரணமென்று பற்றியிருக்கிற தம் பாவையரை,Tham Paavaiyarai - தங்கள் பெண்களை (கொல்லையிலே வியாபரிக்கிற அப்பெண்களின் கண்களைக் கண்டு இவை மான்பேடைகள் என்று ப்ரமித்து) புனம் மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று,Punam Meikindra Maan Inam Kaanmin Endru - ‘(நம்முடைய) கொல்லையை மேய்ந்து அழிக்கின்ற மான் கூட்டங்களைப் பாருங்கோள்’ என்று (ஒருவர்க்கொருவர் காட்டி) சிலை,Silai - (அவற்றின்மேல் அம்புகளை விடுவதாக) (தமது) வில்லை குனிக்கும்,Kunikkum - வளையா நின்றுள்ள |
| 267 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 4 | கடு வாய்ச் சின வெங் கண் களிற்றினுக்குக் கவள மெடுத்துக் கொடுப்பானவன் போல் அடி வாயுறக் கை யிட்டு எழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந் திறங்கிக் கதுவாய்ப் பட நீர் முகந்தேறி எங்கும் குடவாய்ப் பட நின்று மழை பொழியும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-4 | கடுவாய்,Kaduvaai - பயங்கரமான வாயையும் சினம்,Sinam - மிக்க சீற்றத்தையும் வெம் கண்,Vem Kan - தீக்ஷ்ணமான கண்களை யுமுடைய களிற்றினுக்கு,Kalittrinukku - ஒரு யானைக்கு கவளம்,Kavalam - சோற்றுக் கபளத்தை எடுத்து,Edukku - திரட்டி யெடுத்து கொடுப்பான் அவன் போல்,Koduppaan Avan Pol - கொடுக்கின்ற யானைப் பாகனைப் போல, அமரர் பெருமான்,Amarar Perumaan - தேவர்களுக்குத் தலைவனான கண்ணபிரான் கை,Kai - (தனது) திருக் கைகளை அடிவாய் உற இட்டு,Adivaai Ura Ittu - (மலையின்) கீழ் வேர்ப் பற்றிலே உறும் படியாகச் செலுத்தி (மற்றொரு திருக் கையினாலே மேலே பிடித்து) எழ பறித்திட்டு,Eza Parithittu - கிளரப் பிடுங்கி கொண்டு நின்ற,Kondu Nindra - (தானே) தாங்கிக் கொண்டு நின்ற மலை,Malai - மலையாவது (எது? என்னில்;) மேகம்,Megam - மேகங்கள் கடல் வாய் சென்று,Kadal Vaai Sendru - கடலிடத்துச் சென்று இறங்கி கவிழ்ந்து,Irangi Kavizhnthu - (அங்கு) இறங்கிக் கவிழ்ந்து கிடந்து கதுவாய்ப்பட,Kaduvaaippada - (கடல்) வெறுந்தரையாம்படி நீர்,Neer - (அங்குள்ள) நீர் முழுவதையும் முகந்து,Mukandhu - மொண்டு கொண்டு ஏறி,Eri - (மீண்டும் ஆகாசத்திலே) ஏறி எங்கும்,Engum - எல்லாவிடத்தும் குடம் வாய்ப்பட நின்று,Kudam Vaippada Nindru - குடங்களில் நின்றும் நீரைச் சொரியுமா போலே மழை பொழியும்,Mazhai Pozhiyum - மழை பொழியா நிற்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 268 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5 | வானத் திலுள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமி னென்பவன் போல் ஏனத் துருவாகிய ஈசன் எந்தை இடவனெழ வாங்கி யெடுத்த மலை கானக் களியானை தன் கொம் பிழந்து கது வாய் மதம் சோரத் தன் கை யெடுத்து கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-5 | ஏனத்து உரு ஆகிய,Eenathu Uru Aahiya - (முன்பு ஒரு காலத்திலே) வராஹ ரூபம் கொண்டருளின ஈசன்,Eesan - ஸ்வாமியாயும் எந்தை,Enthai - எனக்குத் தந்தையாயுமுள்ள கண்ணபிரான், வானத்தில் உள்ளீர்,Vaanaththil Ullir - “மேலுலகத்திலிருப்பவர்களே! (நீங்கள்) வலியீர் உள்ளீர் எல்,Valiyeer Ullir El - (என்னோடொக்க) வல்லமை யுள்ளவர்களா யிருப்பீர்களாகில் அறையோ,Arayo - அறையோ அறை!! வந்து,Vandhu - (இங்கே) வந்து வாங்குமின்,Vaangumin - (இம் மலையைக் கையால்) தாங்கிக் கொண்டு நில்லுங்கள்” என்பவன் போல்,Enbavan Pol - என்று, சொல்லுகிறவன் போல இடவன்,Idavan - ஒரு மண் கட்டி போலே எழ வாங்கி,Eza Vaangi - (அநாயஸமாகக்) கிளரப் பிடுங்கி எடுத்த மலை,Eduktha Malai - எடுத்துக் கொண்டு நிற்கப் பெற்ற மலையாவது; கானம்,Kaanam - காட்டு நிலங்களில் களி,Kali - செருக்கித் திரியக் கடவதான யானை,Yaanai - ஒரு யானையானது தன் கொம்பு,Than Kombu - (கரை பொருது திரியும் போது ஓரிடத்தில் குத்துண்டு முறிந்த) தன் தந்தத்தை இழந்து,Izhandhu - இழந்ததனால் கதுவாய்,Kaduvaai - அக் கொம்பு முறிந்து புண்பட்ட வாயிலே மதம்,Madham - மத நீரானது சோர,Soora - ஒழுகா நிற்க தன் கை,Than Kai - தனது துதிக்கையை எடுத்து,Edukthu - உயரத் தூக்கி கூன் நல் பிறை,Koon Nal Pirai - (ஆகாசத்தில் தோற்றுகின்ற) வளைந்த அழகிய பிறையை (தானிழந்த கொம்பாக ப்ரமித்து) வேண்டி,Vendi - (அதைப் பறித்துக் கொள்ள) விரும்பி அண்ணாந்து நிற்கும்,Annaandhu Nirkum - மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 269 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6 | செப்பா டுடைய திருமாலவன் தன் செந்தாமரைக் கை விரலைந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடுந்தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை எப்பாடும் பரந்திழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ குப்பாயமென நின்று காட்சி தரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-6 | செப்பாடு உடைய,Seppaadu Udaiya - செவ்வைக் குணத்தை யுடையனாய் திருமால் அவன்,Thirumaal Avan - ச்ரியஃபதியான அக்கண்ணபிரான் தன்,Than - தன்னுடைய செம் தாமரை கை,Sem Thaamarai Kai - செந்தாமரை மலர் போன்ற திருக்கையிலுள்ள விரல் ஐந்தினையும்,Viral Aindhinaiyum - ஐந்து விரல்களையும் கப்பு ஆக மடுத்து,Kappu Aaga Maduthu - (மலையாகிற குடைக்குக் காம்படியிலுண்டான) கிளைக் கொம்புகளாக அமைத்து மணி நெடு தோள்,Mani Nedu Thol - அழகிய நீண்ட திருத் தோள்களை காம்பு ஆக கொடுத்து,Kaambu Aaga Koduthu - (அந்த மலைக் குடைக்குத் தாங்கு) காம்பாகக் கொடுத்து கவித்த மலை,Kavitha Malai - தலை கீழாகக் கவித்த மலையாவது எப்பாடும்,Eppaaduum - எல்லாப் பக்கங்களிலும் பரந்து இழி,Parandhu Izhi - பரவிப் பெருகா நின்ற தெள்ளருவி,Thellaruvi - தெளிந்த சுனை நீரருவிகளானவை இலங்கு மணி முத்துவடம் பிறழ,Ilangu Mani Muthuvadam Pirazha - விளங்கா நின்ற அழகிய முக்தாஹரம் போலத் தனித் தனியே ப்ரகாசிக்க குப்பாயம் என நின்று,Kuppayam Ena Nindru - (கண்ண பிரானுக்கு இது ஒரு) முத்துச் சட்டையென்று சொல்லும்படியாக காட்சி தரும்,Kaatchi Tharum - காணப்படப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 270 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7 | படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் தடங்கை விரலைந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தட வரை தான் அடங்கச் சென்று இலங்கையை யீடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-7 | படங்கள் பலவும் உடை,Padangal Palavum Udai - பல படங்களை யுடைய பாம்பு அரையன்,Paambu Araiyan - ஆதிசேஷன் படர் பூமியை,Padar Bhoomiyai - பரம்பின பூமியை தாங்கி கிடப்பவன் போல்,Thaangi Kidappavan Pol - (தன் தலைகளினால்) தாங்கிக் கொண்டிருப்பது போல, தாமோதரன்,Thaamodharan - கண்ணபிரான் தடங்கை,Thadangkai - (தனது) பெரிய திருக் கைகளிலுள்ள விரல் ஐந்தும்,Viral Aindhum - ஐந்து விரல்களையும் மலர வைத்து,Malar Vaithu - மலர்த்தி (விரித்து) தாங்கு,Thaangu - (அவற்றாலே) தாங்கப் பெற்ற தடவரை,Thadavarai - பெரிய மலையாவது; மந்திகள்,Mandhigal - பெண் குரங்குகளானவை, இலங்கையை சென்று,Ilangaiyai Sendru - லங்காநகரத் தேறப்போய் அடங்க,Adanga - அவ்வூர் முழுவதையும் ஈடு அழித்த,Eedu Azhitha - சீர்கெடும்படி பங்கப்படுத்தின அனுமன்,Anuman - சிறிய திருவடியினுடைய புகழ்,Pugazh - கீர்த்தியை பாடி,Paadi - பாடிக் கொண்டு தம் குட்டன்களை,Tham Kuttanagalai - தமது (குரங்குக்) குட்டிகளை குடங்கைக் கொண்டு,Kudangai Kondu - கைத்தலத்தில் படுக்க வைத்துக் கொண்டு கண் வளர்த்தும்,Kann Valarthum - (சீராட்டி) உறங்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 271 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 8 | சலமா முகில் பல் கணப் போர்க் களத்துச் சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு நலிவானுறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை இலை வேய் குரம்பைத் தவமா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்றுறங்கும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-8 | சலம் மா முகில்,Salam Maa Mukil - நீர் கொண்டெழுந்த காளமேகங்களினுடைய பல் கணம்,Pal Kanam - பல திரளானது, எங்கும்,Engum - இடைச்சேரி யடங்கலும் பூசல் இட்டு,Poosal Ittu - கர்ஜனை பண்ணிக் கொண்டு போர் களத்து சரம் மாரி பொழிந்து,Por Kalathu Saram Maari Pozhindu - யுத்தரங்கத்தில் சர மழை பொழியுமா போலே நீர் மழையைப் பொழிந்து நலிவான் உற,Nalivaan Ura - (ஸர்வ ஜந்துக்களையும்) வருத்தப் புகுந்த வளவிலே நாராயணன்,Narayanan - கண்ணபிரான் கேடகம் கோப்பவன் போல்,Kedagam Koppavan Pol - கடகு கோத்துப் பிடிக்குமவன்போல (குடையாக எடுத்துப் பிடித்து) முன்,Mun - முந்துற வருகிற முகம்,Mugam - மழையினாரம்பத்தை காத்த,Kaatha - தகைந்த மலை,Malai - மலையாவது, கொலை வாய்,Kolai Vaai - கொல்லுகின்ற வாயையும் சினம்,Sinam - கோபத்தையுமுடைய வேங்கைகள்,Vengaihal - புலிகளானவை இலை வேய் குரம்பை,Elai Vey Kurambai - இலைகளாலே அமைக்கப்பட்ட குடில்களில் தவம் மா முனிவர் இருந்தார் நடுவே சென்று,Thavam Maa Munivar Irundhar Naduve Sendru - இருக்கின்ற தபஸ்விகளான மஹர்ஷிகளின் திரளிலே புகுர அணார் சொறிய,Anaar Soriya - (அங்குள்ள ரிஷிகள்) (தமது) கழுத்தைச் சொறிய நின்று உறங்கும்,Nindru Urangum - (அந்த ஸுக பாரவச்யத்தினால், அப்புலிகள்) நின்ற படியே உறங்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 272 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9 | வன் பேய் முலை யுண்ட தோர் வாயுடையன் வன் தூணென நின்றதோர் வன் பரத்தை தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தட வரை தான் முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களை கொம்பேற்றி யிருந்து குதி பயிற்றும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே–3-5-9 | வன் பேய்,Van Pey - கல் நெஞ்சளான பூதனையினுடைய முலை,Mulai - (விஷந்தடவின) முலையை உண்டது ஓர் வாய் உடையன்,Undathu Or Vaai Udaiyan - (உறிஞ்சி) உண்ட வாயை யுடையனான தாமோதரன்,Thaamodharan - கண்ணபிரான் தன் பேர்,Than Per - (கோவர்த்தநன் என்ற) தனது திருநாமத்தை இட்டுக் கொண்டு,Ettuk Kondu - (மலைக்கு) இட்டு, வல்பரத்தை நின்றது ஓர் வன் தூண் என,Valparathai Nindrathu Or Van Thoon Ena - பலிஷ்டமானதொரு பாரத்தைத் தாங்கிக் கொண்டுநின்ற ஒரு வலிய தூணைப் போல நின்று தரணி தன்னில்,Tharani Thannil - இந்நிலவுலகத்தில் தான் தாங்கு,Thaan Thaangu - (உள்ளவர்கள் காணும்படி) தான் தாங்கிக் கொண்டு நின்ற தடவரை,Thadavari - பெரிய மலையாவது; முசு கணங்கள்,Musu Kanangal - முசு என்ற சாதிக் குரங்குகளின் திரள்கள் முன்பே,Munbe - (தம் குட்டிகளுக்கு) ஏற்கனவே வழி காட்ட,Vali Kaata - ஒருகிளையில் நின்றும் மற்றொரு கிளையில் பாயும் வழியைக் காட்டுகைக்காக தம்முடை குட்டன்களை,Thammudai Kuttanagalai - தம்தம் குட்டிகளை முதுகில் பெய்து,Mudugil Peithu - (தம் தம்) முதுகிலே கட்டிக் கொண்டு போய் கொம்பு,Kombu - மரக் கொம்பிலே ஏற்றி யிருந்து,Etri Irundhu - ஏற்றி வைத்து குதி பயிற்றும்,Kuthi Payitrum - அக்கொம்பில் நின்றும் மற்றொரு கொம்பில் குதித்தலைப் பழக்குவியா நிற்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 273 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10 | கொடியேறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில வடிவேறு திரு வுகிர் நொந்துமில மணி வண்ணன் மலையுமோர் சம்பிரதம் முடியேறிய மா முகிற் பல் கணங்கள் முன்னெற்றி நரைத்தன போல எங்கும் குடியேறி யிருந்து மழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-10 | கொடி ஏறு,Kodi Eru - (ரேகா ரூபமான) த்வஜத்தை யுடைய செந்தாமரை கை,Senthamarai Kai - செந்தாமரை மலர் போன்ற (கண்ணனது) திருக்கையும் விரல்கள்,Viralgal - (அதிலுள்ள) திருவிரல்களும் (ஏழுநாள் ஒரு பழுப்பட மலையைத் தாங்கிக் கொண்டு நின்றதனால்) கோலமும் அழிந்தில,Kolamum Azhindhila - (இயற்கையான) அழகும் அழியப் பெறவில்லை; வாடிற்றில,Vaadittrila - வாட்டமும் பெறவில்லை; வடிவு ஏறு,Vadivu Eru - அழகு அமைந்த திரு உகிரும்,Thiru Ugirum - திரு நகங்களும் நொந்தில,Nondhila - நோவெடுக்க வில்லை; மணி வண்ணன்,Mani Vannan - (ஆகையால்) நீலமணி போன்ற நிறத்தனான கண்ணபிரான் மலையும்,Malaiyum - (எடுத்தருளின) மலையும் ஓர் சம்பிரதம்,Or Sampiratham - (அம் மலையை இவன் எடுத்து நின்ற நிலைமையும்) ஒரு இந்திர ஜாலவித்தையாயிருக்கின்றது; முடி ஏறிய,Mudi Eriya - (அந்தமலை எது? என்னில்;) கொடுமுடியின் மேலேறிய மா முகில்,Maa Mukil - காளமேகங்களினுடைய பல் கணங்கள்,Pal Kanangal - பல ஸமூஹங்களானவை எங்கும் மழை பொழிந்து,Engum Mazhai Pozhindhu - மலைச் சாரல்களிலெல்லாம் மழை பெய்து (வெளுத்ததனால்) முன் நெற்றி நரைத்தன போல,Mun Netri Naraiththana Poola - (அம்மலையினுடைய) முன்புறம் நரைத்தாற் போல் தோற்றும்படி குடி ஏறி இருக்கும்,Kudi Eri Irundhu - (கொடுமுடியின்மேல்) குடிபுகுந்திருக்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |
| 274 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 11 | அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை யூர்தி யவனுடைய குரவிற் கொடி முல்லைகள் நின்றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடை மேல் திருவிற் பொலி மா மறை வாணர் புத்தூர்த் திகழ் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் பரவு மன நன்குடைப் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண் ணுவரே–3-5-11 | அரவில்,Aravil - திருவனந்தாழ்வான்மீது பள்ளி கொண்டு,Palli Kondu - (பாற்கடலில்) பள்ளி கொள்பவனும் அரவம்,Aravam - (அதைவிட்டு ஆயர் பாடியில் வந்து பிறந்து) காளியநாகத்தை துரந்திட்டு,Thurandhittu - ஒழித்தருளினவனும் அரவம் பகை ஊர்தி,Aravam Bhagai Oorthi - ஸர்ப்ப சத்ருவான கருடனை வாஹனமாக வுடையவனுமான கண்ணனுடைய குரலில் கொடி முல்லைகள் நின்று உறங்கும்,Kuralil Kodi Mullaihal Nindru Urangum - குரவ மரத்தில் முல்லைக் கொடிகள் படர்ந்து கோவர்த்தனம் என்னும் கொற்றம் குடை மேல்,Kovarthanam Ennum Kotrham Kudai Mel - கோவர்த்தனமென்ற கொற்றக் குடை விஷயமாக திருவில்,Thiruvil - ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயாலே பொலி,Poli - விளங்கா நின்றுள்ள மறைவாணர்,Marai Vaanaar - வைதிகர்கள் இருக்குமிடமான புத்தூர்,Puthoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியழ்வார் சொன்ன,Sona - அருளிச் செய்த மாலை பத்தும்,Maalai Paththum - இப் பத்துப் பாசுரங்களையும் பரவும் மனம்,Paravum Manam - அப்யஸிக்கைக்கீடான மநஸ்ஸை நன்கு உடை,Nangu Udai - நன்றாக உடையரான பத்தர் உள்ளார்,Paththar Ullaaar - பக்தர்களாயிருப்பார் பரமான வைகுந்தம்,Paramaan Vaikundham - பரம பத்ததை நண்ணுவர்,Nannavur - அடையப் பெறுவர். |
| 275 | பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 1 | நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கை மீர்கள் இது ஓரற்புதம் கேளீர் தூ வலம் புரி யுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே கோவலர் சிறுமியர் இளங் கொங்கை குதுகலிப்ப உடலுளவிழ்ந்து எங்கும் காவலும் கடந்து கயிறு மாலை யாகி வந்து கவிழ்ந்து நின்றனரே–3-6-1 | அம்,Am - அழகிய பெரிய,Periya - விசாலமான நாவல் தீவினில்,Naaval Theevinil - ஜம்பூத்வீபத்தில் வாழும்,Vaazhum - வாழா நின்றுள்ள நங்கைமீர்கள்,Nangaimirgal - பெண்காள்! ஓர் அற்புதம் இது,Or Arputham Ithu - ஒரு ஆச்சரியமான இச் சங்கதியை கேளீர்,Keleer - செவி கொடுத்துக் கேளுங்கள்;(யாது அற்புதமென்னில்;) தூ,Thoo - சுத்தமான வலம்புரி உடைய,Valamburi Udaiya - ஸ்ரீபாஞ்சஜந்யத்தையுடைய திருமால்,Thirumal - ச்ரியபதியான கண்ண பிரானுடைய தூய வாயில்,Thooya Vaayil - அழகிய திருப்பவளத்தில் (வைத்து ஊதப்பெற்ற) குழல்,Kuzhal - புல்லாங்குழலினுடைய ஓசை வழியே,Osai Vazhiyai - இசையின் வழியாக, கோவலர் சிறுமியர,Kovalr Sirumiyar - இடைப் பெண்களினுடைய இள கொங்கை,Ila Kongai - இள முலைகளானவை குதுகலிப்ப,Kuthukalippa - (நாங்கள் முன்னே போகிறே மென்று நெறித்து) ஆசைப்பட உடல்,Udal - சரீரமும் உள்,Ul - மநஸ்ஸும் அவிழ்ந்து,Avizhndhu - சிதிலமாகப் பெற்று எங்கும்,Engum - எங்குமுள்ள காவலும்,Kaavalum - காவல்களையும் கடந்து,Kadandhu - அதிக்கிரமித்துவிட்டு கயிறு மாலை ஆகி வந்து,Kayiru Maalai Aagi Vandhu - கயிற்றில்தொடுத்த பூமாலைகள்போல (த் திரளாக) வந்து கவிழ்ந்து நின்றனர்,Kavizhndhu Nindranar - (கண்ணனைக் கண்டு வெள்கிக்) கவிழ்தலையிட்டு நின்றார்கள்; [இதிலும் மிக்க அற்புதமுண்டோ] |
| 276 | பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 2 | இடவணரை யிடத்தோளொடு சாய்த் திருகை கூடப் புருவம் நெரிந்தே குட வயிறு பட வாய் கடை கூடக் கோவிந்தன் குழல் கொடடூதின போது மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தலவிழ உடை நெகிழ வோர் கையால் துகில் பற்றி யொல்கியோ டரிக் கணோட நின்றனரே–3-6-2 | கோவிந்தன்,Govindhan - கண்ணபிரான் இட அணர,Ida Anara - (தனது) இடப்பக்கத்து மோவாய்க் கட்டையை இடத் தோளொடு சாய்ந்து,Idath Tholodu Saindhu - இடத்தோள் பக்கமாகச் சாய்ந்து குடம்பட,Kudampada - குடம் போலக் குமிழ்த்துத் தோற்றவும் வாய்,Vaay - வாயானது கடை கூட,Kadaikooda - இரண்டருகுங்குலியவும் (இவ்வறான நிலைமையாக) குழல் கொடு,Kuzhal Kodu - வேய்ங்குழலைக் கொண்டு ஊதின போது,Oodhina Podhu - ஊதின காலத்திலே மடம் மயில்களொடு,Madham Mayilgalodu - அழகிய மயில்களையும் மான் பிணை போலே,Maan Pinai Pole - மான் பேடைகளையும் போன்றுள்ள மங்கைமார்கள்,Mangaimargal - யுவதிகள் இரு கை,Eru Kai - இரண்டு திருக்கைகளும் கூட,Kooda - (குழலோடு) கூடவும் புருவம்,Puruva - புருவங்களானவை நெரித்து ஏற,Nerithu Era - நெறித்து மேலே கிளறவும் வயிறு,Vayiru - வயிறானது மலர் கூந்தல்,Malar Koondhal - (தங்களுடைய) மலரணிந்த கூந்தல் முடியானது அவிழ,Avizha - அவிழ்ந்து அலையவும் உடை,Udai - அரைப் புடவையானது நெகிழ,Negizha - நெகிழவும் துகில்,Thugil - (நெகிழ்ந்த) அத் துகிலை ஓர் கையால்,Or Kaiyaal - ஒரு கையாலே பற்றி,Patri - பிடித்துக் கொண்டு ஒல்கி,Olgi - துவண்டு அரி ஓடு கண் ஓட நின்றார்,Ari Odu Kan Oda Nindrar - செவ்வரி, கருவரிகள் ஓடாயின்ற கண்கள் (கண்ணபிரான் பக்கலிலே) ஓடப்பெற்றனர் |
| 277 | பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 3 | வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசு தேவன் மதுரை மன்னன் நந்த கோனிள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது வானிளம் படியர் வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்ப தேனளவு செறி கூந்தலவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே–3-6-3 | வான்,aan - பரம பதத்துக்கு இள அரசு,Ela Arasu - யுவராஜனாயும் வைகுந்தர்,Vaikunthar - அப் பரம பதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு குட்டன்,Kuttan - பரிந்து நோக்க வேண்டும்படியான பருவத்தை யுடையானாயும் வாசுதேவன்,Vasudevan - வஸுதேவர்க்கு மகனாகப் பிறந்தவனாயும் மதுரை மன்னன்,Madurai Mannan - வட மதுரைக்கு அரசனாயும் நந்தர்கோன் இள அரசு,Nandarkon Ila Arasu - நந்தகோபர்க்குப் (பிள்ளையாய் வளர்ந்து) இளவரசனாயும் கோவலர் குட்டன்,Kovalarkuttan - இடையர்களுக்கு பரிந்து நோக்க வேண்டும்படியான பிள்ளையாயுமுள்ள கோவிந்தன்,Govindhan - கண்ண பிரான் குழல் கொடு ஊதின போது;,Kuzhal Kodu Oodhina Podhu - குழல் கொடு ஊதின போது; வான்,Vaan - ஸ்வர்க்க லோகத்திலுள்ள இள படியர்,Ela Padiyar - பொகத்துக்கு உரிய சரீரத்தை யுடையரான மாதர் வந்து வந்து ஈண்டி,Vandhu Vandhu Indi - (ஸ்ரீப்ருந்தாவனத்திலே) திரள் திரளாக வந்து குவிந்து மனம் உருகி,Manam Urugi - (தங்கள்) நெஞ்சு உருகப் பெற்று மலர் கண்கள்,Malar Kangal - குவளை மலர்போலழகிய கண்களினின்றும் பனிப்ப,Panippa - ஆநந்த நீர் துளித்து விழ தேன் அளவு,Then Alavu - தேனோடு கூடின செறி கூந்தல்,Seri Koondhal - செறிந்த மயிர்முடியானது அவிழ,Avizha - அவிழ சென்னி,Senni - நெற்றியானது வேர்ப்ப,Verppa - வேர்வையடைய செவி,Sevi - (இவ் வகை விகாரங்களை யடைந்து) (தமது) காதுகளை சேர்த்து,Serthu - (அக்குழலோசையிலே) மடுத்து நின்றனர்,Nindranar - திகைத்து நின்றார்கள் |
| 278 | பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 4 | தேனுகன் பிலம்பன் காளிய னென்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி கானகம் படி உலாவி யுலாவிக் கருஞ் சிறுக்கன் குழ லூதின போது மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசி யரவர் வெள்கி மயங்கி வானகம் படியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே–3-6-4 | தேனுகன்,Thenukan - தேநுகாஸுரன் பிலம்பன்,Pilamban - ப்ரலம்பஸுரன் காளியன்,Kalian - காளிய நாகம் என்னும்,Ennum - என்று சொல்லப் படுகிற தீப்பபூடுகள் அடங்க,Theeppapoodugal Adanga - கொடிய பூண்டுகளை யெல்லாம் உழக்கி,Uzhakki - தலை யழித்துப் போகட்டு கான் அகம்,Kaan Agam - காட்டுக்குள்ளே படி,Padi - இயற்கையாக உலாவி உலாவி,Ulaavi Ulaavi - எப்போதும் உலாவிக் கொண்டு கரு,Karu - கரிய திருமேனியை யுடைய சிறுக்கன்,Sirukkan - சிறு பிள்ளையான கண்ணன் குழல் ஊதின போது;,Kuzhal Oodhina Podhu - குழல் ஊதின போது; மேனகையொடு,Menakaiyodu - மேனகையும் திலோத்தமை,Thilothamai - திலோத்தமையும் அரம்பை,Arambai - ரம்பையும் உருப்பசி,Uruppasi - ஊர்வசியும் (ஆகிற) அரவர்,Aravar - அப்ஸரஸ் ஸ்த்ரீகள் மயங்கி,Mayangi - (அக் குழலோசையைக் கேட்டு) மோஹமடைந்து வெள்கி,Velki - வெட்கப் பட்டு வான் அகம்,Vaan Agam - தேவ லோகத்திலும் படியில்,Padiyil - பூ லோகத்திலும் வாய் திறப்பு இன்றி,Vaai Thirappu Indri - வாயைத் திறவாமல் ஆடல் பாடல் இவை,Aadal Paadal Ivai - ஆடுகை பாடுகை என்கிற இக் காரியங்களை தாமே,Thaame - தாமாகவே மாறினர்,Maarinar - விட்டொழிந்தனர் |
| 279 | பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 5 | முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூ வுலகில் மன்னரஞ்சும் மது சூதனன் வாயில் குழலி னோசை செவியைப் பற்றி வாங்க நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறந்து கின்னர மிதுனங்களும் தம் தம் கின்னரம் தொடுகிலோ மென்றனரே–3-6-5 | முன்,Mun - முற்காலத்திலே நரசிங்கம் அது ஆகி,Narasingam Athu Aagi - நரஸிம்ஹ ரூபங்கொண்டு அவுணன்,Avunan - ஹிரண்யாஸுரனுடைய முக்கியத்தை,Mukkiyaththai - மேன்மையை முடிப்பான்,Mudippan - முடித்தவனும் மூ உலகில் மன்னர்,Moo Ulahil Mannar - மூன்று லோகத்திலுமுள்ள அரசர்கள் அஞ்சும்,Anjum - (தனக்கு) அஞ்சும்படியா யிருப்பவனுமான மதுசூதனன்,Madhusoodhanan - கண்ணபிரானுடைய வாயில்,Vaayil - வாயில் (வைத்து ஊதப் பெற்ற) குழலின்,Kuzhalin - வேய்ங்குழலினுடைய ஓசை,Osai - ஸ்வரமானது செவியை,Sevviyai - காதுகளை பற்றி வாங்க,Patri Vaanga - பிடித்திழுக்க நல் நரம்பு உடைய,Nal Narambu Udaiya - நல்ல வீணையைக் கையிலுடைய தும்புருவோடு,Thumburuvodu - தும்புரு முனிவனும் நாரதனும்,Naradhanum - நாரத மஹர்ஷியும் தம் தம்,Tham Tham - தங்கள் தங்களுடைய வீணை,Veenai - வீணையை மறந்து,Marandhu - மறந்து விட கின்னரம் மிதுனங்களும்,Kinnaram Mithunangalum - கிந்நர மிதுநம் என்று பேர் பெற்றுள்ளவர்களும் தம் தம் கின்னரம்,Tham Tham Kinnaram - தங்கள் தங்கள் கின்னர வாத்தியங்களை தொடுகிலோம் என்றனர்,Thodukilom Endranar - ’(இனித் தொடக்கடவோமல்லோம்’ என்று விட்டனர். |
| 280 | பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 6 | செம் பெருந் தடங் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் நம் பரமன் இந்நாள் குழலூதக் கேட்டவர்கள் இடருற்றன கேளீர் அம்பரம் திரியும் காந்தப்ப ரெல்லாம் அமுத கீத வலையால் சுருக் குண்டு நம்பர மன்றென்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம் மறித்து நின் றனரே–3-6-6 | செம்பெரு தடங் கண்ணன்,Semberu Thadang Kannan - சிவந்து மிகவும் பெரிய திருக்கண்களை யுடையனாய் திரள் தோளன்,Thiral Tholan - பருத்த தோள்களை யுடையனாய் தேவகி சிறுவன்,Devagi Siruvan - தேவகியின் பிள்ளையாய் தேவர்கள் சிங்கம்,Devargal Singam - தேவ சிம்ஹமாய் நம் பரமன்,Nam Paraman - நமக்கு ஸ்வாமியான பரம புருஷனாயிரா நின்ற கண்ணபிரான் இந் நாள்,En Naal - இன்றைய தினம் குழல் ஊத,Kuzhal Oodha - வேய்ங் குழலை ஊத கேட்டவர்கள்,Kaettavargal - (அதன் இசையைக்) கேட்டவர்கள் இடர் உற்றன,Edar Utrana - அவஸ்தைப்பட்ட வகைகளை கேளீர்,Kaaleer - (சொல்லுகிறேன்) கேளுங்கள் அம்பரம்,Ambaram - (அந்த இடர் யாதெனில்) ஆகாசத்திலே திரியும்,Thiriyum - திரியா நின்ற காந்தப்பர் எல்லாம்,Gaanthappar Ellaam - காந்தருவர் அனைவரும் அமுதம் கீதம் வலையால் ,Amudham Geetham Valayal - அமுதம் போல் இனிதான குழலிசையகிற வலையிலே சுருக்குண்டு,Surukkundu - அகப்பட்டு நம் பரம் அன்று என்று,Nam Param Andru Endru - (பாடுகையாகிற) சுமை (இனி) நம்முடையதன்றென்று அறுதியிட்டு நாணி,Naani - (முன்பெல்லாம் பாடித் திரிந்ததற்கும்) வெட்கப்பட்டு மயங்கி,Mayangi - அறிவழிந்து நைந்து,Naindhu - மனம் சிதிலமாகப் பெற்று சோர்ந்து,Sornthu - சரீரமுங் கட்டுக் குலையப் பெற்று கை மறித்து நின்றனர்,Kai Mariththu Ninranar - (இனி நாம் ஒருவகைக் கைத்தொழிலுக்குங் கடவோமலோம் என்று) கையை மடக்கிக் கொண்டு நின்றார்கள் |
| 281 | பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 7 | புவியுள் நான் கண்டதோ ரற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங் கோவலர் கூட்டத்து அவையுள் நாகத் தணையான் குழலூத அமர லோகத் தளவும் சென்றிசைப்ப அவி யுணா மறந்து வானவரெல்லாம் ஆயர் பாடி நிறையப் புகுந்து ஈண்டி செவி யுணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே–3-6-7 | புவியுள்,Puviyul - பூமியிலே நான் கண்டது ஓர் அற்புதம்,Naan Kandathu Or Arputham - நான் கண்ட ஒரு ஆச்சர்யத்தைச் (சொல்லுகிறேன்) கேளீர்,Kaaleer - கேளுங்கள்; (அது யாதெனில்) பூணி,Pooni - பசுக்களை மேய்க்கும்,Meikkum - மேய்க்கா நின்ற இள கோவலர்,Ela Kovalar - இடைப் பிள்ளைகள் கூட்டத்து அவையுள்,Kootathu Avaiyul - திரண்டிருக்கின்ற ஸபையிலே நாகத்து அணையான்,Naagathu Anaiyaan - சேஷ சாயியான கண்ண பிரான் குழல் ஊத,Kuzhal Oodha - குழலூதினவளவிலே, (அதன் ஓசையானது) அமார் லோகத்து அளவும் சென்று,Amaar Lokathu Alavum Sendru - தேவ லோகம் வரைக்கும் பரவி இசைப்ப,Isaippa - (அங்கே) த்வனிக்க (அதைக் கேட்ட) வானவர் எல்லாம்,Vaanavar Ellaam - தேவர்களனைவரும் அவி உணா,Avi Una - ஹவிஸ்ஸு உண்பதை மறந்து,Maranthu - மறந்தொழிந்து ஆயர் பாடி நிறைய புகுந்து,Aayar Paadi Nireya Pugundhu - இடைச்சேரி நிறையும்படி (அங்கே) வந்து சேர்ந்து ஈண்டி,Eendi - நெருங்கி செவி உள் நா,Sevi Ul Naa - செவியின் உள் நாக்காலே இன் சுவை,In Suvai - (குழலோசையின்) இனிய ரஸத்தை கொண்டு,Kondu - உட் கொண்டு மகிழ்ந்து,Magizhndhu - மனங்களித்து கோவிந்தனை,Govindanai - கண்ண பிரானை தொடர்ந்து,Thodarndhu - பின் தொடர்ந்தோடி என்றும்,Endrum - ஒரு க்ஷண காலமும் விடார்,Vidaar - (அவனை) விடமாட்டாதிருந்தனர் |
| 282 | பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 8 | சிறு விரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிக்க குறு வெயர்ப் புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந் திறங்கிச் செவி யாட்ட கில்லாவே–3-6-8 | சிறு விரல்கள்,Siru Viragal - (தனது) சிறிய கை விரல்கள் தடவி,Thadavi - (குழலின் துளைகளைத்) தடவிக் கொண்டு பரிமாற,Parimaara - (அக் குழலின் மேல்) வியாபரிக்கவும் செம் கண்,Sem Kann - செந்தாமரை போன்ற கண்கள் கோட,Koda - வக்ரமாகவும் செய்ய வாய்,Seiya Vaai - சிவந்த திருப்பவளம் கொப்பளிப்ப,Koppalippa - (வாயுவின் பூரிப்பாலே) குமிழ்க்கவும் குறு வெயர் புருவம்,Kuru Veyar Puruva - குறு வெயர்ப் பரும்பின புருவமானது கூடலிப்ப,Koodalippa - மேற் கிளர்ந்து வளையவும் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது பறவையின் கணங்கள்,Paravaiyin Kanangal - (அக் குழலோசையைக் கேட்ட) பக்ஷிகளின் கூட்டங்கள் கூடு துறந்து,Koodu Thurandhu - (தம் தம்) கூடுகளை விட்டொழிந்து வந்து,Vandhu - (கண்ணனருகில்) வந்து சூழ்ந்து,Soozhndhu - சூழ்ந்து கொண்டு படு காடு கிடப்ப,Padu Kaadu Kidappa - வெட்டி விழுந்த காடு போலே மெய் மறந்து கிடக்க கறவையின் கணங்கள்,Karavaiyin Kanangal - பசுக்களின் திரள் கால் பரப்பிட்டு,Kaal Parappittu - கால்களைப் பரப்பி கவிழ்ந்து இறங்கி,Kavizhnthu Irangi - தலைகளை நன்றாக தொங்க விட்டுக் கொண்டு செவி ஆட்ட கில்லா,Sevi Aatta Killaa - காதுகளை அசைக்கவும் மாட்டாதே நின்றன. |
| 283 | பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 9 | திரண்டெழு தழை மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே சுருண்டிருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழ லோசை வழியே மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே–3-6-9 | திரண்டு எழு,Thirandu Ezu - திரண்டுமேலெழுந்த தழை,Thazhai - தழைத்திராநின்ற மழை முகில்,Mazhai Mukil - காள மேகம் போன்ற வண்ணன்,Vannan - வடிவுடைய கண்ணபிரான் செம் கமலம் மலர் சூழ்,Sem Kamalam Malar Soozh - செந்தாமரைப் பூவைச் சூழ்ந்து படிந்துள்ள வண்டு இனம் போலே,Vandu Inam Pole - வண்டுத் திரளைப் போன்று சுருண்டு இருண்ட,Surundu Irunda - சுருட்சியையும் கறு நிறத்தையுமுடைய குழல்,Kuzhal - திருக்குழல்களானவை தாழ்ந்த,Thaazhndha - தாழ்ந்து அலையப் பெற்ற முகத்தான்,Mugathaan - முகத்தை யுடையவனாய்க் கொண்டு ஊதுகின்ற,Ooduginra - ஊதுகிற குழல் ஓசை வழியே,Kuzhal Osai VazhiyE - குழலின் ஓசையாகிற வழியிலே (அகப்பட்டு) மான் கணங்கள்,Maan Kanangal - மான் கூட்டங்கள் மருண்டு,Marundu - அறிவழிந்து மேய்கை மறந்து,Meykai Marandhu - மேய்ச்சலையும் மறந்து மேய்ந்த,Meyndha - வாயில் கவ்வின புல்லும்,Pullum - புல்லும் கடைவாய்வழி,Kadaivaayvazhi - கடைவாய் வழியாக சோர,Sora - நழுவி விழ, இரண்டு பாடும்,Erandu Paadum - முன் பின்னாகிற இரண்டறாகிலும் துலுங்கா,Thulunga - (காலை) அசைக்காமலும் புடை,Pudi - பக்கங்களில் பெயரா,Peyaraa - அடியைப் பெயர்ந்து இட மாட்டாமலும் எழுது சித்திரங்கள் போல நின்றன ,Ezhudhu Sithirangal Pola Nindrana - (சுவரில்) எழுதப்பட்ட சித்திரப் பதுமை போலத் திகைத்து நின்றன |
| 284 | பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 10 | கருங்கண் தோகை மயிற் பீலி யணிந்து கட்டி நன்குடுத்த பீதக வாடை அருங்கல வுருவி னாயர் பெருமான் அவனொருவன் குழ லூதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே–3-6-10 | கருங்கண்,Karungan - கறுத்தகண்களையுடைய தோகை,Thogai - தோகைகளை யுடைய மயில் பீலி,Mayil Peeli - மயில்களின் இறகுகளை அணிந்து,Anindhu - (திருமுடி மேல்) அணிந்து கொண்டு நன்கு கட்டி உடுத்த,Nangu Katti Udutha - நன்றாக அழுந்தச் சாத்தின பீதகம் ஆடை,Peethagam Aadayi - பீதம்பரத்தையும் அரு கலம்,Aru Kalam - அருமையான ஆபரணங்களையும் உருவின்,Uravin - திருமேனியை யுடையனான ஆயர் பெருமானவன் ஒருவன் குழல் ஊதினபோது;,Aiyar Perumanavan Oruvan Kuzhal Oothinapodhu - ஆயர் பெருமானவன் ஒருவன் குழல் ஊதினபோது; மரங்கள்,Marangal - (அசேதநமான) மரங்களுங் கூட நின்று,Nindru - ஒருபடிப்பட நின்று மது தாரைகள்,Madhu Thaaraiyalar - (உள்ளுருகினமை தோற்ற) மகரந்த தாரைகளை பாயும்,Paayum - பெருக்கா நின்றன; மலர்கள்,Malarkal - புஷ்பங்களும் வீழும்,Veezhum - (நிலை குலைந்து) விழா நின்றன; வளர்,Valar - மேல் நோக்கி வளர்கின்ற கொம்புகள்,Kombugal - கொம்புகளும் தாழும்,Thaazhum - தாழா நின்றன; இரங்கும்,Erangum - (அம்மரங்கள் தாம்) உருகா நின்றன கூம்பும்,Koombum - (கை கூப்புவாரைப் போலே, தாழ்ந்த கொம்புகளைக்) குவியா நின்றன; அவை,Avai - (இவ்வாறாக) அந்த மரங்கள் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி,Thirumal Nindra Nindra Pakkam Nokki - கண்ணன் எந்த எந்தப் பக்கங்களில் நிற்பனோ, அவ்வப் பக்கங்களை நோக்கி, செய்யும் குணம் ஏ,Seyyum Kunam Ea - செய்கின்ற வழிபாடுகள் இருந்தபடி யென்! [என்று வியக்கிறபடி] |
| 285 | பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 11 | குழலிருண்டு சுருண்டேறிய குஞ்சிக் கோவிந்த னுடைய கோமள வாயில் குழல் முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்திழிந்த அமுதப் புனல் தன்னை குழல் முழவம் விளம்பும் புதுவைக் கோன் விட்டு சித்தன் விரித்த தமிழ் வல்லார் குழலை வென்ற குளிர் வாயினராகிச் சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே–3-6-11 | இருண்டு சுருண்டு ஏறிய,Erundu Surundu Eriya - கறுத்து சுருண்டு நெடுக வளர்ந்த குழல் குஞ்சி,Kuzhal Kunji - அலகலகான மயிர்களை யுடையனான கோவிந்தனுடைய,Govindhanudaiya - கண்ணபிரானுடைய கோமள வாயில்,Komala Vaayil - அழகிய வாயில்(வைத்து ஊதப் பெற்ற) குழல்,Kuzhal - வேய்ங்குழலினுடைய முழஞ்சுகளினூடு,Muzhanjugalinoodu - துளைகளிலே குமிழ்த்து,Kumizhtthu - நீர்க்குமிழி வடிவாகக் கிளர்ந்து(பிறகு அது உடையப் பெற்று) கொழித்து எழுந்த,Kozhiththu Ezhundha - கொழித்துக் கொண்டு மேற்கிளம்பின அமுதம் புனல் தன்னை,Amudham Punal Thannai - அம்ருத ஜலத்தை குழல் முழவம் விளம்பும்,Kuzhal Muzhavam Vilambum - குழலோசை யோடொக்கப் [பரம யோக்யமாக] அருளிச் செய்தவரும் புதுவை கோன்,Puduvai Koon - ஸ்ரீவில்லிப்புத்தூர்க்குத் தலைவருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் விரிந்த,Virindha - விஸ்தாரமாகக் கூறிய தமிழ்,Tamil - இத்தமிழ்ப் பாசுரங்களை வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் குழலை வென்ற குளிர் வாயினர் ஆகி,Kuzhalai Vendra Kuleer Vaayinar Aagi - திருக் குழலோசையின் குளிர்த்தியையங் கீழ்ப் படுத்தித் தான் மேலாம்படி குளிர்ந்த வாய் மொழியை யுடையராய் சாது கோட்டியுள்,Saathu Koththiyul - ஸ்ரீ வைஷ்ணவர்கள் கோஷ்டியில் கொள்ளப் படுவார்,Kollappaduvaar - பரிக்ரஹிக்கப் படுவார்கள். |
| 286 | பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1 | ஐய புழுதி உடம்ப ளைந்து இவள் பேச்சு மலந்த லையாய் செய்ய நூலின் சிற்றாடை செப்பி னுடுக்கவும் வல்ல ளல்லள் கையி னில் சிறு தூதை யோடு இவள் முற்றில் பிரிந்துமிலள் பைய ரவணைப் பள்ளி யானோடு கை வைத்து இவள் வருமே–3-7-1 | இவள்,Eval - இச் சிறு பெண்ணானவள் ஐய புழுதியை,Ayya Puzhudhiyai - அழகிய புழுதியை உடம்பு அளைந்து,Udambu Alaindhu - உடம்பிலே பூசிக் கொண்டு பேச்சும் அலந்தலை ஆய்,Pechchum Alandhalai Aay - ஒன்றோடொன்று அந்வயியாத பேச்சை யுமுடையளாய் செய்ய நூலின் சிறு ஆடை,Seyya Noolin Siru Aadai - சிவந்த நூலாலே செய்விக்கப்பட்ட சிற்றாடையை செப்பன்,Seppan - செம்மையாக உடுக்கவும் வல்லன் அல்லன்,Udukkavum Vallan Allan - [அரையில் தங்கும்படி] உடுக்கவும் மாட்டாதவளாயிரா நின்றாள்; இவள்,Eval - இப்படியொரு பருவத்தை யுடையளான இவள் சிறு தூதையோடு,Siru Thoodhaiyodu - (மணற்சோறாக்கும்) சிறிய தூதையையும் முற்றிலும்,Mutrilum - சிறு சுளகையும் கையினில்,Kaiyinil - கையில் நின்றும் பிரிந்து இவள்,Pirindhu Ival - விட்டொழிகின்றிலள்; இவள்,Eval - இப்படிக்கொத்த விளையாட்டை யுடைய இவள் பை அரவு அணை பள்ளியானொடு,Pai Aravu Anai Palliyaanodu - சேஷ சாயியான எம்பெருமானுடனே கை வைத்து வரும்,Kai Vaitthu Varum - கை கலந்து வாரா நின்றாள். |
| 287 | பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2 | வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில சாய்விலாத குறுந்தலைச் சில பிள்ளைகளோ டிணங்கி தீயிணக்கிணங்காடி வந்து இவள் தன்னன்ன செம்மை சொல்லி மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறு கின்றாளே–3-7-2 | வாயில்,Vayil - (இம் மகளுடைய) வாயில் பல்லும் எழுந்தில,Pallum Ezhundhila - பற்களும் முளைக்க வில்லை; மயிரும் முடி கூடிற்றில,Mayirum Mudi Koodittrila - மயிரும் சேர்த்து முடிக்கும்படி கூடவில்லை. இவள்,Eval - இப்படிப்பட்ட இவள் இவண்,Evan - இந்தப் பருவத்தில் சாய்வு இலாத,Saivu Ilaadha - தலை வணக்கமில்லாத குறுந்தலை,Kurunthalai - தண்மையில் தலை நின்ற சில பிள்ளைகளோடு,Sila Pillailaodu - சில பெண் பிள்ளைகளோடு இணங்கி,Enangi - ஸஹ வாஸம் பண்ணி தீ இணக்கு இணங்காடி வந்து,Thee Inakku Inangaadi Vandhu - (அதற்குப் பலனாக) பொல்லாத இணக்கத்தை (களவுப் புணர்ச்சியை)ச் செய்து வந்து (இத்தனை போது எங்குப் போனாய்? யாரோடு இணங்கி வந்தாய்? என்று நான் கேட்டால்) தன் அன்ன,Than Anna - தனக்கு ஒத்த வார்த்தைகளை செம்மை சொல்லி,Semmai Solli - கபடமற்ற வார்த்தை போல் தோற்றும்படி சொல்லி இவள்; மாயன் மா மணிவண்ணன் மேல்,Maayan Maa Manivannan Mel - அற்புதச் செய்கைகளையும் நீலமணி நிறத்தையுமுடையனான கண்ணபிரான் மாலுறுகின்றாள்,Maal Urugindraal - மோஹப்படுகிறாள். |
| 288 | பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3 | பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத் திழைக்க லுறில் சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லு மல்லது இழைக்க லுறாள் கொங்கை இன்னம் குவிந்தெ ழுந்தில கோவிந்த னோடு இவளை சங்கை யாகி என் னுள்ளம் நாள் தொறும் தட்டுளுப்பாகின்றதே–3-7-3 | பொங்கு,Pongu - (இவள்)நுண்ணியதாய் வெள்,Vel - வெளுத்திரா நின்ற மணல் கொண்டு,Manal Kondu - மணலாலே முற்றத்து,Mutrathu - முற்றத்திலே சிற்றில்,Sittril - கொட்டகத்தை இழைக்கலுறிலும்,Izhaikkalurilum - நிர்மாணஞ் செய்யத் தொடங்கினாலும் சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது,sangu chakaram Thandu Vaal Villum Alladhu - சங்கு முதலிய எம்பெருமான் சின்னங்களை யொழிய (மற்றொன்றையும்) இழைக்கலுறாள்,Izhaikkalurall - இழைக்க நினைப்பதில்லை; இன்னம்,Innam - (இவளுக்கோ வென்றால்) இன்றளவும் கொங்கை,Kongai - முலைகளானவை குவிந்து எழுந்தில,Kuvindhu Ezhundhila - முகம் திரண்டு கிளர்ந்தன வில்லை; இவளை,Ivalai - இப்படி இளம் பருவத்தளான இவளை கோவிந்தனோடு சங்கை ஆகி,Govindhanoodu Sangai Aagi - கண்ணபிரானோடு சம்பந்த முடையவளாகச் சங்கித்து என் உள்ளம்,En Ullam - என் நெஞ்சமானது நாள் தொறும்,Naal Thorum - ஸர்வ காலமும் தட்டுளுப்பாகின்றது,Thattuluppaagindrathu - தடுமாறிச் செல்லா நின்றது. |
| 289 | பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4 | ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண் மகளை யெள்கி தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன் ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி மூழை யுப்பறியாத தென்னும் மூதுரையு மிலளே–3-7-4 | ஏழை,Ezhaai - சாபல்யமுடையவளும் பேதை,Paedhai - அறியாமை யுடையவளும் ஓர் பாலகன்,Or Balagan - இளம் பருவத்தை யுடையளுமான என் பெண் மகளை,En Pen Magalai - எனது பெண்பிள்ளையை தோழிமார் பலர் வந்து,Thozhimaaar Palar Vandhu - பல தோழிகள் அணுகி வந்து எள்கி,Elgi - (விளையாட வரவேணுமென்று) வஞ்சித்து கொண்டு போய்,Kondu Poi - அழைத்துக் கொண்டு போய் ஆழியான் என்னும்,Aazhiyan Ennum - ஸர்வேச்வரன் என்று ப்ரஸித்தமான ஆழம் மோழையில்,Aazham Mozhaiyil - ஒருவராலும் நிலைகொள்ள வொண்ணாத கீழாற்றில் பாய்ச்சி,Paaychchi - உள்ளுறத் தள்ளி அகப்படுத்தி,Agappaduthi - (அதிலே) அகப்படுத்தி செய்த சூழ்ச்சியை,Seidha Soozhchiyai - (இவ்வாறு) செய்த கபடத் தொழில்களை ஆர்க்கு உரைக்கேன்,Aarkku Uraikkaen - யாரிடம் முறையிடுவேன்?; மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இவள்,Moozhai Uppu Ariyaadhadhu Ennum Moodhuraiyum Ival - (இம் மகளோ வென்றால்) “அகப்பையானது (பதார்த்தத்தின்) ரஸத்தை அறியாது” என்கின்ற பழ மொழியின் அறிவையும் தன்னிடத்து உடையவளல்லள். |
| 290 | பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5 | நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாயலங்கள் சூடி நாரணன் போமிட மெல்லாம் சோதித்துழி தருகின்றாள் கேடு வேண்டு கின்றார் பலருளர் கேசவனோடு இவளை பாடு காவலிடுமி னென்றென்று பார் தடுமாறினதே–3-7-5 | நாடும்,Naadum - விசேஷ ஜ்ஞாநிகளும் ஊரும்,Oorum - ஸாமான்ய ஜ்ஞாநிகளும் அறிய,Ariya - அறியும்படியாக [பஹிரங்கமாக] போய்,Poi - வீட்டை விட்டுப் புறம்பே போய் நல்ல,Nalla - பசுமை மாறாத துழாய் அலங்கில்,Thuzhaai Alangil - திருத் துழாய் மாலையை சூடி,Soodi - (பகவத் ப்ரஸாதமென்று சொல்லிக் கொண்டு) தரித்துக் கொண்டு நாரணன் போம் இடம் எல்லாம்,Naaranan Pom Idam Ellaam - எம்பெருமான் போகிற இடம் முழுவதும் சோதித்து உழி தருகின்றாள்,Sodhiththu Uzhi Tharugindraal - தேடித் திரியா நின்றாள்; கேடு வேண்டுகின்றார்,Kaedu Vaendugindraar - இக்குடிக்குக் கேடு விளைய வெணுமென்று கோருமவர்கள் பலர் உளர்,Palar Ular - பல பேருண்டு; இவளை,Evalai - (ஆகையால்) எம்பெருமானைத் தேடித் திரிகிற இவளை கேசவனோடு,Kesavanodu - (அந்த) என்பெருமாளோடு (சேர்ப்பதற்காக அந்தப்புரத்திற் கொண்டாடுவோம்.) பாடு காவல் இடுமின்,Paadu Kaaval Idumin - அருகு காவலிடுங்கள் என்று என்னை,Endru Ennai - என்று இதையே பல காலும் சொல்லிக் கொண்டு பார்,Paar - பூமியிலுள்ள அநுகூல ஜநமானது தடுமாறினது,Thadumaarinadhu - மனங்குழம்பிச் செல்லா நின்றது |
| 291 | பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6 | பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்தெடுத் தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள் பூவைப்பூ வண்ணா வென்னும் பட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே–3-7-6 | வட்டம் வார்,Vattam Vaar - சுருட்சியையும் நீட்சியையும் உடைய குழல்,Kuzhal - கூந்தலையுடைய மங்கைமீர்,Mangaimeer - மாதர்காள்!, பட்டம் கட்டி,Pattam Katti - (இம் மகளுக்கு) (நெற்றிக்கு அணியான)பட்டத்தைக் கட்டியும் பொன் தோடு,Pon Thodu - (காதுக்கு அணியான) பொன் தோட்டையும் பாடகமும் சிலம்பும்,Paadagamum Silambum - (கழலணியான) பாடகத்தையும் சிலம்பையும் பெய்து,Peithu - இட்டும் இவள் இட்டம் ஆக,Eval Ettam Aaga - இவளுடைய இஷ்டாநுஸாரமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு,Valarthu Eduthtenukku Ennodu - (இவளை) வளர்த்தெடுத்த என்னோடு இவள் இருக்கலுறாள்,Eval Erukkaluraal - இவள் இருக்க மாட்டேனென்கிறாள்; பொட்ட,Potta - (பின்னை ஏன் செய்கின்றாளெனில்;) திடீரென்று போய்,Poi - என்னைக் கைவிட்டுப் போய் புறப்பட்டு நின்று,Purappattu Nindru - (எல்லாருங்காணத் தெருவிலே) புறப்பட்டு நின்று பூவைப் பூ வண்ணா என்னும்,Poovaip Poo Vannaa Ennum - “காயாம்பூப்போன்ற மேனி நிறமுடைய கண்ணபிரானே!” என்று வாய் விட்டுக் கூப்பிடா நின்றாள்; இவள் மாலுறுகின்றாள்,Eval Maalurugindraal - (அவ்வளவில் அவன் அருகுவாரா தொழியில்) இவள் மோஹத்தை யடைகின்றாள். |
| 292 | பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7 | பேசவும் தெரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள் கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோல் கழிந்தான் மூழையாய் கேசவா வென்றும் கேடிலீ யென்றும் கிஞ்சுக வாய் மொழியாள் வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுறு கின்றாளே–3-7-7 | வாசம் வார்,Vaasam Vaar - வாஸனையையும் நீட்சியையுமுடைய குழல்,Kuzhal - கூந்தலையுடைய மங்கைமீர்,Mangaimeer - பெண்காள்! பேதையேன்,Pethaien - பேதைமையை யுடையளான என்னுடைய பேதை,Pethai - பெண் பிள்ளையும் பேசவும் தெரியாத பெண்மையின்,Pesavum Theriyatha Penmaiyin - (தன்னுடைய ஆசாரத்துக்கு ஒரு கெடுதி விளைந்ததாகப் பிறர்) ஒரு வார்த்தை சொன்னாலும் (அதைப்) பொறுக்க மாட்டாத ஸ்த்ரீத்வத்தை யுடையவளும் கிஞ்சுகம் வாய் மொழியாள்,Kinchukam Vaaimozhiyal - கிளியினுடைய வாய்மொழி போன்ற இனிய வாய் மொழியை யுடையவளுமான இவள்,Eval - இவள், நின்றார்கள் தம் எதிர்,Nindraargal Tham Ethir - மர்யாதை தவறாமல் இருக்குமவர்கள் முன்னே, கூசம் இன்றி,Koosam Inri - கூச்சமில்லாமல் கோல் கழிந்தான் மூழை ஆய்,Kol Kazhindhaan Moozhai Aay - கோலை விட்டு நீங்கின அகப்பை போல (என்னோடு உறவற்றவளாய்க் கொண்டு) கேசவனே! என்றும் கேசவா என்றும்,Kesavaa Endrum - கேசவனே! என்றும் கேடு இலீ என்றும்,Kedu Ilee Endrum - அழிவற்றவனே! [அச்யுதனே!] என்றும் வாய் விட்டுச் சொல்லி இவள் மாலுறுகின்றாள்,Eval Maalurugindraal - இவள் மோஹமடையா நின்றாள்; ஏ,A - இரக்கம் |
| 293 | பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும் கூறை யுடுக்கும் அயர்க்கும் தங் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும் மாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே–3-7-8 | இவள்,Eval - இப் பெண் பிள்ளையானவள் காறை,Kaarai - பொற் காறையை பூணும்,Poonum - (தன் கழுத்தில்) பூணா நின்றாள்; கண்ணாடி காணும்,Kannadi Kaanum - (அக்காறையுங் கழுத்துமான அழகை) கண்ணாடிப் புறத்தில் காணா நின்றாள்; தன் கையில்,Than Kaiyil - தன் கையிலிருக்கிற வளை குலுங்கும்,Valai Kulungum - வளையல்களை குலுக்கா நின்றாள்; கூறை,Koora - புடவையை உடுக்கும்,Udukum - (ஒழுங்குபட) உடுத்துக் கொள்ளா நின்றாள்; (அவன் வரவுக்கு உடலாக இவ்வளவு அலங்கரித்துக் கொண்டவளவிலும் அவ்ன் வரக் காணாமையாலே,) அயர்க்கும்,Ayarkkum - தளர்ச்சி யடையா நின்றாள்; தன் கொவ்வை செம் வாய் திருத்தும்,Than Kovvai Sem Vaai Thiruthum - (மறுபடியுந் தெளிந்து இதற்கு மேலாக அலங்கரித்துக்கொள்ளத் தொடங்கி) கோவக் கனிபோலச் சிவந்துள்ள தன் அதரத்தைத் (தாம்பூல சர்வணாதிகளால்) ஒழுங்கு படுத்தா நின்றாள்; தேறித் தேறி நின்று,Theerith Theeri Nindru - மிகவுந் தெளிந்து நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்,Aayiram Per Devan Thiram Pitharuthum - ஸஹஸ்ர நாமப் பொருளான எம்பெருமானுடைய குணங்களை வாய் புலற்றா நின்றாள்; மாறு இல்,Maaru El - (அதன் பிறகு) ஒப்பற்றவனும் மா மணி வண்ணன் மேல்,Maa Mani Vannan Mel - நீலமணி போன்ற நிறத்தை யுடையனுமான(அக்) கண்ண பிரான் மேல் மாலுறுகின்றாள்,Maalurugindraal - மோஹியா நின்றாள் |
| 294 | பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9 | கைத்தலத் துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை வைத்து வைத்துக் கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப் படுத்தும் செய்த் தலை யெழு நாற்றுப் போல் அவன் செய்வன செய்து கொள்ள மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே–3-7-9 | கைத்தலத்து உள்ள மாடு அழிய,Kaithalathu Ulla Maadu Azhiy - கையிலுள்ள பணத்தைச் செலவழித்து கண்ணாலங்கள் செய்து,Kannaalangal Seidhu - (இவளுக்குச் செய்ய வேண்டிய) கல்யாணங்களைப் பண்ணி இவளை,Evalai - (நமக்கடங்காத) இவளை வைத்து வைத்துக் கொண்டு,Vaithu Vaithukkondu - நியமித்தும் காவலிட்டும் வைத்துக் கொண்டிருப்பதனால் என்ன வாணிபம்,Enna Vaanipam - என்ன பயனுண்டாம்; நம்மை வடுப்படுத்தும்,Nammai Vadupaduthum - (பயனுண்டாகாதொழிவது மன்றி) நமக்கு அவத்யத்தையும் உண்டாக்கும்; செய்தலை எழு நாற்று போல்,Seithalai Ezu Naatru Pol - (என்று தாயாராகிய நான் சொல்ல, இதைக் கேட்ட பந்துக்கள்) ”வயலிலே வளர்ந்த நாற்றை அவ்வயலுக் குடையவன் தன் இஷ்டப்படி விநியோகம் கொள்வது போல, அவள் செய்வன செய்து கொள்ள,Aval Seivana Seidhu Kolla - (இவளையும்) (ஸ்வாமியாகிய)அவன் தான் செய்ய நினைத்தவற்றை (தடையற)ச் செய்து கொள்ளும்படி மை தட முகில் வண்ணன் பக்கல்,Mai Thada Mugil Vannan Pakkal - கறுத்துப் பெருத்த மேகம் போன்ற வடிவுடைய அக் கண்ண பிரானிடத்தில் வளர,Valara - (இவள்) வாழும்படி விடுமின்கள்,Vidumingal - (இவளைக் கொண்டு போய்) விட்டு விடுங்கள் " (என்கிறார்கள் என்று, தாய் தானே சொல்லுகிறபடி.) |
| 295 | பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் மில்லத் துள்ளே இருத்துவா னெண்ணி நாமிருக்க இவளும் ஒன் றெண்ணுகின்றாள் மருத்துவப் பதம் நீங்கினா ளென்னும் வார்த்தை படுவதன் முன் ஒருப் படுத்திடுமின் இவளை உலகளந்தா னிடைக்கே–3-7-10 | பெருபெருத்த,Peruperutha - (இவளுக்கு) மிகவும் விசேஷமான கண்ணாலங்கள் செய்து,Kannaalangal Seidhu - கல்யாண காரியங்களைச்செய்து பேணி,Paeni - அன்பு பூண்டு நம் இல்லத்துள்ளே,Nam Illathulle - நம் வீட்டுக்குள்ளேயே இருந்துவான் எண்ணி நாம் இருக்க,Irundhuvaan Enni Naam Irukka - (இவளை) இருக்கச் செய்ததாக நாம் நினைத்திருக்க இவளும்,Ivalum - இவளொ வென்றால் ஒன்று எண்ணுகிறாள்,Ondru Ennugiraal - (நம் எண்ணத்திற்கு விபரீதமாக) மற்றொன்றை எண்ணுகிறாள். மருத்துவப்பதம் நீங்கினாலென்னும் வார்த்தைபடுவதன் முன்,Maruthuvapadham Neenginaalennum Vaarthaipaduvathan Mun - (என்று தாயாகிய நான் சொல்ல இதைக் கேட்ட பந்துக்கள்) வயித்தியன் தான் செய்யும் மருந்தில் பதம் பார்த்து செய்யாவிடில் அது கை தவறுவது போல இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள் கைகழிந்தாளேன்கிற அபவாதம் பிறப்பதற்கு முன். இவளை,Ivalai - இவளை உலகு அளந்தானிடைக்கே,Ulaku Alandhaanidaikke - உலகளந்தருளின கண்ணபிரானிடத்திலேயே(கொண்டு போய்) ஒருபடுத்திடுமின்,Orupaduthidumin - சேர்த்துவிடுங்கள் (என்று கூறியதைத் தாய் கூறுகின்றாள்) |
| 296 | பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 11 | ஞால முற்றும் உண்டு ஆலிலைத் துயில் நாரா யணனுக்கு இவள் மால தாகி மகிழ்ந்தன ளென்று தாயுரை செய்ததனை கோல மார் பொழில் சூழ் புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே-3-7-11 | இவள்,Eval - இப்பெண்பிள்ளை யானவள் ஞாலம் முற்றும் உண்டு,Gnaalam Mutrum Undu - எல்லா வுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கி ஆல் இலை துயில்,Aal Ilai Thuyil - ஒரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளின நாராயணனுக்கு,Naarayananukku - எம்பெருமான் விஷயத்தில் மால் அது ஆகி,Maal Athu Aagi - மோஹத்தை யுடையளாய் மகிழ்ந்தனள் என்று,Magizhndhanal Endru - (அவனை அணைக்க வேண்டு மென்ற மநோ ரதத்தினால்) மனமுகந்தாள்” என்று தாய் உரை செய்ததனை,Thaai Urai Seidhaththai - தாய் சொல்லியதை கோலம் ஆர்,Kolam Aar - அழகு நிறைந்த பொழில் சூழ்,Pozhil Soozh - சோலைகளாலே சூழப்பட்ட புதுவையர் கோன்,Puthuvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்க்குத் தலைவரான விட்டுச் சித்தன்,Vittuch Siththan - பெரியாழ்வார் சொன்ன,Sonnna - அருளிச் செய்த மாலை,Maalai - சொல் மாலையாகிய பத்தும்,Paththum - இப்பத்துப் பாட்டையும் வல்லவர்கட்கு,Vallavarkatku - ஓத வல்லவர்களுக்கு வரு துயர் இல்லை,Varu Thuyar Illai - வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை. |
| 297 | பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1 | நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தா லொத்த தாலோ இல்லம் வெறியோடிற் றாலோ என் மகளை எங்கும் காணேன் மல்லரை யட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ–3-8-1 | நல்லது ஓர் தாமரைப் பொய்கை,Nalladhu Or Thaamaraip Poigai - அழகிய ஒரு தாமரைக் குளமானது (தன்னிடத்துள்ள) நாள் மலர் மேல்,Naal Malar Mel - அப்போதலர்ந்த பூவின் மேல் பனி சோர,Pani Soora - பனி பெய்ததனால் அல்லியும் தாதும்,Alliyum Thaadhum - (அம் மலரினது) உள்ளிதழும் புறவிதழும் உதிரப் பெற்று அழகு அழிந்தால் ஒத்தது,Azhagu Azhindhaal Oththathu - அழகு அழியப் பெறுவது போல இல்லம்,Ellam - (இவ்)வீடானது வெறி ஓடிற்று,Veri Odidritru - வெறிச்சென்றிருக்கிறது; என் மகளை,En Magalai - என் பெண் பிள்ளையை எங்கும்,Engum - ஓரிடத்திலும் காணேன்,Kaanen - காண்கின்றிலேன்; மல்லரை அட்டவன் பின் போய்,Mallarai Attavan Pin Poi - மல்லர்களை அழித்த கண்ணபிரான் பின்னே போய் மதுரைப் புறம்,Mathuraip Puram - மதுரைக்கு அருகிலுள்ள திருவாய்ப்பாடியில் புக்கார்கொல் ஓ,Pukkaar Kol O - புகுந்தாளாவள் கொல்?. |
| 298 | பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2 | ஒன்றும் அறிவொன்றில்லாத உருவறைக் கோபாலர் தங்கள் கன்று கால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை என்றும் எமர்கள் குடிக்கு ஓரேச்சுக் சொலாயிடுங் கொலோ–3-8-2 | ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத,Ondrum Arivu Ondru Illaatha - பொருந்திய ஞானம் சிறிதுமில்லாதவர்களும் உரு அறை,Uru Arai - ரூப ஹீநர்களுமான கோபாலர் தங்கள்,Gopaalar Thangal - இடையரானவர்கள் கன்று கால் மாறும் ஆ போலே,Kanru Kaal Maarum Aa Pole - கண்ணுக்கழகிய கன்றுகளை உடையவர்களறியாமல் களவிலே கொண்டு போவது போல, கன்னி இருந்தாளை,Kanni Irundhaalai - கன்னிகைப் பருவத்தளாய் எனக்கடங்கி யிருந்த பெண்ணை நன்றும் கிறி செய்து,Nandrum Kiri Seidhu - நல்ல உபாயங்களைப் பண்ணி கொண்டு போனான்,Kondu Ponnaan - (தெரியாமல்) அபஹரித்துக் கொண்டு போன நாராயணன்,Naaraayanan - கண்ண பிரான் செய்த தீமை,Seidha Theemai - செய்த தீம்பானது எமர்கள் குடிக்கு,Emargal Kudikku - எங்கள் குலத்துக்கு என்றும்,Endrum - சாச்வதமான ஓர் ஏச்சு ஆயிடும் கொல் ஓ,Or Echu Aayidum Kol O - ஒரு பழிப்பாகத் தலைக் கட்டுமோ?. |
| 299 | பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3 | குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத் திருத்தி தமரும் பிறரும் அறியத் தாமோதரற்கென்று சாற்றி அமரர் பதியுடைத் தேவி அரசாணியை வழி பட்டு துமில மெழப் பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொலோ–3-8-3 | குமரி மணம் செய்து கொண்டு,Kumari Manam Seidhu Kondu - கன்னிகை யவஸ்தையிற் செய்ய வேண்டிய மங்கள விசேஷத்தைச் செய்து கோலம் செய்து,Kolam Seidhu - (ஆடை ஆபரணங்களால்) அலங்கரித்து இல்லத்து,Ellathu - விவாஹ மந்திரத்தில் இருத்தி,Eruthi - உட்கார வைத்து தமரும்,Thamarum - பந்து வர்க்கங்களும் பிறரும்,Pirarum - மற்றுமுள்ள உதாஸீநர்களும் அறிய,Ariya - அறியும்படி தாமோதரற்கு என்று சாற்றி,Thaamodhararku Endru Saatri - (இவள்) கண்ண பிரானுக்கு (க்கொடுக்கப் பட்டாள்) என்று சொல்லி, அமரர் பதியுடைய தேவி,Amarar Padhiyudaiya Devi - (பிறகு) தேவாதி தேவனான கண்ண பிரானுக்கு மனைவியாகப் பெற்ற என் மகள் அரசாணியை,Arasaani - (ஜாதிக்குத் தக்க ஒழுக்கமாக) அரசங்கிளையை வழிபட்டு,Vazhipattu - பிரதக்ஷிணம் பண்ண துமிலம் எழப் பறை கொட்டி,Thumilam Ezha Parai Kotti - பேரொலி கிளம்பும்படி பறைகளை முழக்கி தோரணம் நாட்டிடும் கொல் ஓ,Thoranam Naattidum Kol O - மகா தோரணங்களை (ஊரெங்கும்) நாட்டி அலங்கரித்துக் கொண்டாடுவர்களோ?. |
| 300 | பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4 | ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான் பெருமகளாய்க் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறம் செய்யுங் கொலோ–3-8-4 | ஒரு மகள் தன்னை உடையேன்-,Oru Magal Thannai Udaiyen - ஒரே மகளை உடையளாகிய நான் உலகம் நிறைந்த புகழால்,Ulagam Niraindha Pugazhal - உலகமெங்கும் பரவின கீர்த்தியோடு. திரு மகள் போல,Thiru Magal Pola - பெரிய பிராட்டியாரைப் போல் வளர்த்தேன்,Valarththen - சீராட்டி வளர்த்தேன்; செம் கண் மால்,Sem Kan Maal - (இப்படி வளர்ந்த இவளை) செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன் தான்,Thaan - தானே (ஸாக்ஷாத்தாக பந்து) கொண்டு போனான்,Kondu Ponaan - (நானறியாமல்) கொண்டு போனான்; பெரு மகளாய் குடி வாழ்ந்து,Peru Magalaai Kudi Vazhndhu - (போனால் போகட்டும்;) (இடைச்சேரியில்) ப்ரதாந ஸ்த்ரீயாய்க் குடி வாழ்க்கை வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை,Perum Pillai Petra Asothai - பெருமை தங்கிய பிள்ளையைப் பெற்றவளான யசோதைப் பிராட்டியானவள் மருமகளை,Marumagalai - (தன்) மருமகளான என் மகளை கண்டு உகந்து,Kandu Ugandhu - கண்டு மகிழ்ந்து மணாட்டுப் புறம் செய்யும் கொல் ஓ,Manattup Puram Seyyum Kol O - மணவாட்டிக்குச் செய்யக் கடவதான சீர்மைகளைச் செய்வளோ? |
| 301 | பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5 | தம் மாமன் நந்த கோபாலன் தழீஇக் கொண்டு என் மகள் தன்னை செம் மாந்திரே யென்று சொல்லிச் செழுங் கயற் கண்ணும் செவ் வாயும் கொம்மை முலையும் இடையும் கொழும் பணைத் தோள்களும் கண்டிட்டு இம் மகளைப் பெற்ற தாயர் இனித் தரியாரென்னுங் கொலோ–3-8-5 | தம் மாமன்,Tham Maaman - என் மகள் தனக்கு மாமனாரான நந்த கோபாலன்,Nandha Gopalan - நந்த கோபரானவர் என் மகள் தன்னை,En Magal Thannai - என் பெண்ணை தழீஇக் கொண்டு,Thazheei Kondu - (அன்புடன்) தழுவிக் கொண்டு செம்மாந்திரு என்று சொல்லி,Semmanthiru Endru Solli - (வெட்கத்தாலே தரையைக் கீறி முகங்கவிழ்ந்து நிற்காமல்) செவ்வனே நில் என்று சொல்லி செழு கயல் கண்ணும்,Sezhu Kayal Kannum - (பிறகு ஸர்வாங்க ஸெளந்தர்யத்தையுங் காணலாம்படி அவள் ருஜுவாக நிற்க)அழகிய மீன் போன்ற (அவளது) கண்களையும் செம் வாயும்,Sem Vaayum - சிவந்த அதரத்தையும் கொம்மை முலையும்,Kommai Mulaiyum - (கச்சுக்கு அடங்காமல்) பெருத்திருக்கின்ற முலையையும் இடையும்,Edayum - இடுப்பினழகையும் கொழு பணை தோள்களும்,Kozhu Panai Tholgalum - பெருத்த மூங்கில் போன்ற தோள்களையும் கண்டிட்டு,Kandittu - நன்றாகப் பார்த்து இ மகளை பெற்ற தாயர்,E Magalai Petra Thaayar - “இப் பெண் பிள்ளையைப் பெற்ற தாயானவள் இனி,Eni - இவளைப் பிரிந்த பின்பு தரியார் என்னும் கொல் ஓ,Thariyaar Ennum Kol O - உயிர் தரித்திருக்க மாட்டாள்” என்று சொல்லுவரோ?. |
| 302 | பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6 | வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்து என் மகளை கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடி வாழுங் கொலோ நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொலோ–3-8-6 | சாடி இற பாய்ந்த பெருமான் ,Saadi Ira Paayndha Perumaan - சகடாஸுரனை முறித்து தள்ளின திருவடிகளை யுடைய கண்ணபிரான், வேடர்,Vedhar - வேடர்களையும் மறக் குலம் போலே,Marak Kulam Pole - மறவர் என்கிற நீச ஜாதியரையும் போலே என் மகளை,En Magalai - (ஸத் குலத்திற் பிறந்த) என் பெண் பிள்ளையை வேண்டிற்று செய்து,Vendritru Seidhu - தன் இஷ்டப்படி செய்து கூடிய கூட்டமே ஆகக் கொண்டு,Koodiya Koottaame Aaga Kondu - தம்பதிகளாகிய இருவரும் நெஞ்சு பொருந்திக் கூடின கூடுதலையே விவாஹமாஹக் கொண்டு குடி வாழும் கொல் ஓ,Kudi Vaalum Kol O - குடிவாழ்க்கை வாழ்வனோ? நாடும்,Naadum - (அன்றி) ஸாமாந்ய ஜனங்களும் நகரும்,Nagarum - விசேஷஜ்ஞ ஜனங்களும் அறிய,Ariya - அறியும்படி (பஹிரங்கமாக) நல்லது ஓர் கண்ணாலம் செய்து,Nalladhu Or Kannaalam Seidhu - விலக்ஷணமானதொரு விவாஹோத்ஸவத்தை (விதிப்படி) செய்து தக்க ஆ,Thakka Aa - (ஜாதி தர்மத்துக்குத்) தகுதியாக கைப்பற்றும் கொல் ஓ,Kaippatrum Kol O - பாணி க்ரஹணம் பண்ணுவனோ? |
| 303 | பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7 | அண்டத் தமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொலோ கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொலோ–3-8-7 | அண்டத்து அமரர்,Andhathu Amarar - பரம பதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு பெருமான்,Perumaan - தலைவனும் ஆழியான்,Aazhiyaan - திருவாழி யாழ்வானை யுடையனுமான கண்ணபிரான் என் மகளை,En Magalai - என் பெண் பிள்ளையை இன்று,Endru - இப்போது பண்டம் பழிப்புக்கள் சொல்லி,Pandham Pazhippukal Solli - பதார்த்தங்களுக்குக் குறை சொல்வது போல் (இவளது) ரூப குணங்களிற் சில குறைகளைச் சொல்லி பரிசு அற,Parisu Ara - வரிசை கெடும்படி ஆண்டிடும் கொல் ஓ,Aandidum Kol O - ஆளுவனோ?(அன்றி,) பண்டை மணாட்டிமார் முன்னே,Pandai Manaattimaar Munne - முன்பே பட்டங்கட்டித் தனக்குத் தேவியாயிருப்பவர்களின் முன்னே கொண்டு,Kondu - இவளைக் கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து,Kudi Vaalvazh Vaalndhu - (தனது) க்ருஹ க்ருத்யமெல்லாம் நடத்தி கோவலர் பட்டம் கழித்து,Kovalar Pattam Kazhiththu - “இவள் இடைகுலத்துக்குத் தலைவி” என்று (தன் மனைவியானமை தோற்றப்) பட்டங்கட்டி, பாதுகாவல் வைக்கும் கொல் ஓ,Paadhukaaval Vaikkum Kol O - அந்தப்புறக் காவலிலே வைப்பனோ? |
| 304 | பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ நடை யொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் இடை யிருபாலும் வணங்க இளைத்திளைத்து என் மகள் ஏங்கி கடை கயிறே பற்றி வாங்கிக் கை தழும்பேறிடுங் கொலோ–3-8-8 | நங்காய்,Nangai - பூரணையாயிருப்பவளே; நந்தகோபான மகன் கண்ணன்,Nandagopaana Magan Kannan - நந்தகோபருடைய பிள்ளையாகிய கண்ணன் குடியில் பிறந்தவர் செய்யும் குணம்,Kudiyil Pirandhavar Seyyum Gunam - உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் (குல மர்யாதைக்குத் தக்கபடி) செய்யும் குணங்களில் ஒன்றும்,Ondrum - ஒருவகைக் குணத்தையும் செய்திலன்,Seydhilan - செய்தானில்லை; நடை,Nadai - உலகத்துக்குப் பொதுவான நடத்தைகளிலும் ஒன்றும் செய்திலன்;,Ondrum Seydhilan - ஒன்றும் செய்திலன்; அந்தோ!,Andho - அஹஹ! என் மகள்,En Magal - என் மகளானவள் இடை,Edai - (தயிர் கடையும் போது) இடுப்பானது இரு பாலும்,Eru Paalum - இரு பக்கத்திலும் வணங்க,Vananga - துவண்டு போவதனால் ஏங்கி,Eangi - மூச்சுப்பிடித்துத் கடைய மாட்டாள்) நடுநடுவே எக்கமுற்று இளைத்து இளைத்து,Elaiththu EIaiththu - மிகவும் இளைத்து கடை கயிறே,Kadaikayire - கடைகிற கயிற்றையே பற்றி வாங்கி,Patri Vaangi - பிடித்து வலித்திழுப்பதனால் கை தழும்ப ஏறிடும் கொல் ஓ,Kai Thazhumpa Eraidum Kol O - (தனது ஸுகுமாரமான) கைகள் தழும்பேறப் பெறுமோ?. |
| 305 | பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9 | வெண்ணிறத் தோய் தயிர் தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து கண்ணுறங்காதே யிருந்து கடையவும் தான் வல்லள் கொலோ ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந்தான் என் மகளை பண்ணறையாப் பணி கொண்டு பரிசற ஆண்டிடுங் கொலோ–3-8-9 | என் மகள் தான்,En Magal Thaan - என் மகளானவள் வெளிவரைப் பின் முன் எழுந்து,Velivarai Pin Mun Ezhandhu - கிழக்கு வெளுப்பதற்கு முன்பாக எழுந்திருந்து கண் உறங்காதே இருந்து,Kan Urangaadhe Irundhu - கண் விழித்துக்கொண்டிருந்து வெள் நிறம் தோய் தயிர் தன்னை,Vel Niram Thoy Thayir Thannai - வெளுத்தை நிறுத்தையுடைத்தாய் தோய்ந்த தயிரை கடையவும் வல்லன் கொல் ஓ,Kadaiyavum Vallan Kol O - கடையும் படியான சக்தியைத் தான் உடையவனோ? ஒண் நிறம் செம் தாமரை கண்,On Niram Sem Thamarai Kan - அழகிய நிறத்தையுடைய செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடையவனும் உலகு அளந்தான்,Ulagu Alandhaan - (திரிலிக்ரமாவதாரத்தில்) உலகளந்தருளினவனுமான கண்ணபிரான் என் மகளை,En Magalai - என் பெண்ணை பண் அறையாய் கொண்டு,Pan Arayai Kondu - தர்ம ஹாநியாக இழி தொழில்களைச் செய்வித்துக் கொண்டு பரிசு அற,Parisu Ara - (அவளுடைய) பெருமை குலையும்படி ஆண்டிடும் கொல் ஓ,Aandidum Kol O - ஆளுவனோ? |
| 306 | பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | மாயவன் பின் வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமு மெல்லாம் தாயவள் சொல்லிய சொல்லைத் தண் புதுவைப் பட்டன் சொன்ன தூய தமிழ்ப் பத்தும் வல்லார் தூமணி வண்ணற் காளாரே–3-8-10 | வழி இடை,Valee Idai - போகிற வழியிலே மாற்றங்கள் கேட்டு,Maattrangal Kettu - (அபூர்வ வஸ்துக்களைக் கண்டால் இவை என்?” என்று அவ் விஷயமாக) வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு மாயவன் பின் வழி சென்று,Maayavan Pin Vali Sendru - கண்ணபிரான் பின்னே போய் ஆயர்கள் சேரியிலும் புக்கு,Aayargal Seriyilum Pukku - திருவாய்ப்பாடியிலும் சென்று புகுந்த பின்பு அங்குத்தை மாற்றமும் எல்லாம்,Anguththai Maatramum Ellaam - அங்குண்டாகும் செயல்கள் சொலவுகள் முதலிய எல்லாவற்றையுங் குறித்து தாய் அவள்,Thaai Aval - தாயானவள் சொல்லிய,Solliya - சொன்ன சொல்லை,Sollai - வார்த்தைகளை தன் புதுவைபட்டன் சொன்ன,Than Pudhuvaipattan Sonnan - குளிர் தன்மையை யுடைய ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த பெரியாழ்வார் அருளிச் செய்தவையாகிய தூய,Thooya - பழிப்பற்ற தமிழ் பத்தும்,Tamil Paththum - தமிழ் பாட்டுக்கள் பத்தையும் வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் தூ மணிவண்ணனுக்கு,Thoo Manivannanukku - அழகிய மணி போன்ற நிறத்தையுடைய கண்ணபிரானுக்கு ஆளர்,Aalar - ஆட்செய்யப் பெறுவர். |
| 307 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 1 | என்னாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள் தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன் வன்மையைப் பாடிப் பற எம்பிரான் வன்மையைப் பாடிப் பற–3-9-1 | என் நாதன்,En Naathan - எனக்கு ஸ்வாமியான கண்ண பிரானுடைய தேவிக்கு,Devikku - தேவியான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு இன்பம் பூ,Enbam Poo - மனோ ஹரமான கற்பகப் பூவை அன்று,Andru - (அவன் விரும்பின) அக் காலத்தில் ஈயாதாள் தன்,Eeyaadhaal Than - கொடாத இந்திராணியினுடைய நாதன்,Naathan - கணவனான தேவேந்திரன் காணவே,Kaanave - கண்டு கொண்டு நிற்கும் போதே தண் பூ மரத்தினை,Than Poo Maraththai - குளிர்ந்த பூக்களை யுடைய கல்ப வ்ருஷத்தை வல் நாதம் புள்ளால்,Val Naatham Pullaal - வலிமை யுடைய ஸாமவேத ஸ்வரூபியான பெரிய திருவடியாலே வலிய,Valiya - பலாத்காரமாக பறித்து,Pariththu - பிடுங்கிக் கொண்டு வந்து இட்ட,Etta - (அதனை ஸத்யபாமையின் வீட்டு முற்றத்தில்) நட்டருளின என் நாதன்,En Naathan - என் ஸ்வாமியான கண்ண பிரானுடைய வன்மையை,Vanmaiyai - வலிவை பாடி,Paadi - பாடிக் கொண்டு பற,Para - உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற |
| 308 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 2 | என் வில் வலி கண்டு போவென்று எதிர் வந்தான் தன் வில்லி னோடும் தவத்தை எதிர் வாங்கி முன் வில் வலித்து முது பெண்ணுயிருண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற தாசரதி தன்மையைப் பாடிப் பற–3-9-2 | எதிர் வந்தான் தன்,Ethir Vandhaan Than - எதிர்த்து வந்த பரசு ராமனுடைய வில்லினோடு,Villinodu - வில்லையும் தவத்தையும்,Thavaththaiyum - தபஸ்ஸையும் எதிர்,Ethir - அவன் கண்ணெதிரில் வாங்கி,Vaangi - அழித்தருளினவனும் முன்,Mun - இதற்கு முன்னே வில் வலித்து,Vil valiththu - வில்லை வளைத்து முது பெண்,Muthu pen - (பர ஹிம்சையில்) பழகிக் கிடந்த தாடமையினுடைய உயிர்,Uyir - உயிரை உண்டான் ,Undaan - உண்டான் வில்லின்,Villin - (தன் முடித்தருளினவனுமான இராமபிரானுடைய) வில்லினது வன்மையை,Vanmaiyai - வலிவை பாடிப் பற தாசரதி,Dasarathi - சக்ரவர்த்தித் திருமகனுடைய தன்மையை,Thanmaiyai - ஸ்வபாவத்தை பாடிப் பற |
| 309 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 3 | உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற் றங்கேக விரைந்து எதிர் வந்து செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற–3-9-3 | உருப்பிணி நங்கையை,Uruppini nangaiyai - ருக்மிணிப் பிராட்டியை தேரின்,Therin - (தனது) தேரின் மேல் ஏற்றிக் கொண்டு,Eatrik kondu - ஏற்றிக் கொண்டு விருப்புற்று,Virupputru - ஆசையுடனே ஏக,Eka - (கண்ணன்) எழுந்தருளப்புக, அங்கு,Angu - அவ்வளவில் விரைந்து,Viraindhu - மிக்க வேகங் கொண்டு எதிர் வந்து,Ethir vandu - (போர் செய்வதாக) எதிர்தது செருக்கு உற்றான்,Serukku utraan - கர்வப்பட்ட ருக்மனுடைய வீரம் சிதைய,Veeram sithaiya - வீரத் தனம் கெடும் படியாக தலையை,Thalaiyai - (அவனது) தலையை சிரைத்திட்டான்,Siraiththittaan - (அம்பாலே) சிரைத்து விட்ட கண்ணனுடைய வன்மையை,Vanmaiyai - வலிவை பாடிப் பற தேவகி சிங்கத்தை,Devaki singaththai - தேவகியின் வயிற்றிற் பிறந்த ஸிம்ஹ குட்டி போன்றவனை பாடிப்பற,Paadippara - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற |
| 310 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 4 | மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன சீற்ற மிலாதானைப் பாடிப் பற சீதை மணாளனைப் பாடிப் பற–3-9-4 | மாற்று தாய்,Maatru thaai - தாயானவள் சென்று,Sendru - சென்று. வனமே போகு என்றிட,Vaname poga endrida - ‘நீ காட்டுக்கே போ’ என்று நியமிக்க ஈற்றுத்தாய்,Eetru thaai - பெற்ற தாயாகிய கௌஸல்வை யானவள் பின் தொடர்ந்து,Pin thodarnthu - (தன்னைப்) பின் தொடர்ந்து வந்து எம்பிரான்,Empiraan - “என் நாயனே! (உன்னைப் பிரிந்து எப்படி தரித்திருப்பேன்”) என்று அழ,Endru azha - என்று கதறி அழ கூற்று தாய் சொல்ல,Kootru thaai solla - யமனைப்போல் கொடியளான கைகேயியின் சொல்லைக் கொண்டு கொடிய வனம் போன,Kodiya vanam pona - கொடிய காட்டுக்கு எழுந்தருளின சீற்றம் இலாதானை,Seetram ilaathaanai - சீற்றமற்ற இராம பிரானை பாடிப் பற,Paadippara - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற சீதை மணாளனை,Seethai manaalanai - ஸீதைக்கு வல்லபனானவனை பாடிப் பற, Paadippara - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற |
| 311 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 5 | பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து நஞ்சுமிழ் நாகம் கிடந் தநல் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப் பற அசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற–3-9-5 | பஞ்சவர்,Panchavar - பஞ்ச பாண்டவர்களுக்காக தூதன் ஆய்,Thoodhan Aay - (துரியோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய் பாரதம்,Bharatham - (அத்துரியோதனநாதிகள் தன்சொற்படி இசைந்துவாராமையால்) பாரத யுத்தத்தை கை செய்து,Kai Seithu - அணி வகுத்துச் செய்து, கஞ்சு உமிழ்,Kanju Umizh - விஷத்தைக் கக்குகின்ற நாகம் கிடந்த,Kaagam Kidandha - காளியன் கிடந்த நல் பொய்கை புக்கு,Nal Poigai Pukku - கொடிய மடுவிலே புகுந்து அஞ்ச பணத்தின் மேல் ,Anja Ak Kaaliyan Anjumbadi - (அக் காளியன்) அஞ்சும்படி (அவனது) படத்திலே பாய்ந்திட்டு,Paayndhittu - குதித்து நடமாடி அக்காளியனை இளைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க அருள் செய்த,Arul Seitha - அப் பாம்பின் பிராணனைக் கருணையால் விரட்டிட்ட அஞ்சனவண்ணனை பாடிப்பற;,Anjanavannanai Paadippara - அஞ்சனவண்ணனை பாடிப்பற; அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.,Asothaithan Singaththaip Paadippara - அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற. |
| 312 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 6 | முடியொன்றி மூவுல கங்களும் ஆண்டு உன் அடியேற் கருளென்று அவன் பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடி நிலை யீந்தானைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற–3-9-6 | முடி ஒன்றி,Mudi Ondri - திருமுடி சூடி மூ உலகங்களும்,Moo Ulagangalum - பூமி, சுவர்க்கம், பாதாளம் என்ற மூன்று லோகங்களையும் ஆண்டு,Aandu - பரி பாலித்துக் கொண்டு உன் அடியேற்கு அருள் என்று,Un Adiyerku Arul Endru - தேவருடைய தாஸனான எனக்கு க்ருபை பண்ண வேணும் என்று வேண்டிக் கொண்டு அவன் பின் தொடர்ந்த,Avan Pin Thodarndha - பெருமான் பின்னே தொடர்ந்து வந்த படி இல் குணத்து பரதன் நம்பிக்கு,Padi Il Gunathu Barathan Nambikku - ஒப்பற்ற குணங்களை யுடையனான ஸ்ரீபரதாழ்வானுக்கு அன்று,Andru - அக் காலத்திலே அடி நிலை,Adi Nilai - ஸ்ரீபாதுகைகளை ஈந்தானை,Einthaanaai - அளித்தருளின இராமபிரானை பாடிப் பற,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற அயோத்தியர்,Ayoththiyar - அயோத்தியையிலுள்ளவர்களுக்கு கோமானை,Komaanaai - அரசனானவனை, பாடிப்பற |
| 313 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 7 | காளியன் பொய்கை கலங்கப் பாய்ந் திட்டு அவன் நீள் முடி யைந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் தோள் வலி வீரமே பாடிப் பற தூமணி வண்ணனைப் பாடிப் பற–3-9-7 | காளியன் பொய்கை,Kaaliyan Poigai - காளியன் கிடந்த பொய்கையானது கலங்க,Kalanga - கலங்கும்படி பாய்ந்திட்டு,Paayndhittu - (அதில்) குதித்து அவன்,Avan - அக் காளியனுடைய நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து,Neel Mudi Aindhilum Nindru Nadam Seithu - ஆகாசத்தளவும் நீண்ட ஐந்து படங்களின் மேலும் நின்று கூத்தாடி, மீள,Meela - அவன் இளைத்துச் சரணம் புகுந்த பிறகு. அவனுக்கு,Avanukku - அக் காளியனுக்கு அருள் செய்து,Arul Seithu - (ப்ராணன் நிற்கும்படி) க்ருபை செய்தருளின் வித்தகன்,Viththagan - லிஸ்மயநீயனான கண்ணபிரானுடைய தோள் வலி,Thol Vali - புஜ பலத்தையும் வீரம்,Veeram - வீரப் பாட்டையும் பாடிப் பற; தூ மணி,Thoo Mani - பழிப்பற்ற நீலமணி போன்ற வண்ணனை,Vannanai - நிறத்தை யுடையவனை பாடிப் பற |
| 314 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 8 | தார்க்கு இளந் தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடைச் சூர்ப்ப ணகாவைச் செவி யொடு மூக்கு அவ ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்திக் கரசனைப் பாடிப் பற–3-9-8 | தார்க்கு,Tharkku - மாலை யிட்டு ராஜ்யம் நிர்வஹிக்கைக்கு இளந்,Ilann - (தகுந்திராத) இனம் பருவத்தை யுடையவனான தம்பிக்கு,Thambikku - பரதாழ்வானுக்கு அரசு ஈந்து,Arasu Eindhu - (அடி சூடுகையாகிற) அரசைக் கொடுத்து, நூற்றவள்,Noorrthaval - (இராமனைக் காட்டுக்குச் செலுத்தக் கடவோம் என்று) எண்ணம் கொண்ட கைகேயியினுடைய சொல் கொண்டு,Sol Kondu - சொல்லை ஏற்றுக் கொண்டு தண்டகம்,Thandhagam - தண்ட காரண்யத்துக்கு போகி,Poagi - எழுந்தருளி (அவ்விடத்தில்) நுடங்கு இடை,Nutangu Idai - துவண்ட இடையை உடையனான சூர்ப்பண சாவை,Soorppana Saavai - சூர்ப்பணகையினுடைய செவியொடு மூக்கு,Seviyodu Mookku - காதையும் மூக்கையும் அவன் ஆர்க்க அரித்தானை,Avan Aarkka Ariththaanai - அவன் கதறும்படி அறுத்த இராம பிரானை பாடிப் பற;,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற,Ayoththikku Arasanai Paadip Para - அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற |
| 315 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 9 | மாயச் சகட முதைத்து மருதிறுத்து ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயர்க ளேற்றினைப் பாடிப் பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற–3-9-9 | மாயம்,Maayam - க்ருத்ரிமமான அஸுரராலிஷ்டமான சகடம்,Sakadam - சகடத்தை உதைத்து,Uthaiththu - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளியும் மருது,Marudhu - இரட்டை மருத மரங்களை இறுத்து,Iruththu - இற்று விழும்படி பண்ணியும், (பின்பு) ஆயர்களோடு,Aayargalodu - இடையர்களோடு கூட போய்,Poi - (காடேறப்) போய் ஆநிரை,Aanirai - பசுக்களின் திரளை காத்து,Kaaththu - ரக்ஷித்தும் அணி,Ani - அழகிய வேயின் குழல்,Veyin Kuzhal - வேய்ங்குழலை ஊதி,Oothi - ஊதியும் வித்தகன் ஆய் நின்ற ,Viththagan Aay Nindra - விஸ்மயநீயனாய் நின்ற ஆயர்கள் ஏற்றினை,Aayargal Etrhinai - இடையர்க்குத் தலைவனான கண்ணபிரானை பாடிப்பற ஆநிரை மேய்த்தானை பாடிப் பற,Aanirai Meyththaanai Paadip Para - ஆநிரை மேய்த்தானை பாடிப் பற |
| 316 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 10 | காரார் கடலை யடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன் முடி ஒன்பதோ டொன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீளரசீந்த ஆரா வமுதனைப் பாடிப் பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற–3-9-10 | கார் ஆர் கடலை,Kaar Aar Kadalai - கருமை பொருந்திய கடலை அடைத்திட்டு,Adaiththittu - (மலைகளினால்) அடைத்து விட்டு (ஸேது கட்டி) இலங்கை,Ilangai - (அர்த்த ஸேது வழியாக) லங்கையிலிருந்து புக்கு,Pukku - (அவ்விடத்தில்) ஒராதான்,Oraathaan - (தன் வீரப்பாட்டை) மதியாத ராவணனுடைய பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்,Pon Mudi Onpathodu Onraiyum - அழகிய தலைகள் பத்தையும் நேரா,Naeraa - அறுத்துப் போகட்டு அவன் தம்பிக்கே,Avan Thambikke - அவனது தம்பியான ஸ்ரீலிபீஷணாழ்வானுக்கே நீள் அரசு ஈந்த,Neel Arasu Eindha - நெடுங்காலம் நடக்கும்படியான ஆதி ராஜ்யத்தை அளித்தருளின் ஆரா அமுதனை,Aaraa Amudhanai - எவ்வளவு உண்டாலும் திருப்தியைத் தாராத அம்ருதம் போல் இனியனான இராமபிரானை பாடிப்பற;,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற அயோத்தியர்,Ayoththiyar - அயோத்தியிலுள்ளார்க்கு வேந்தனை அரசனானவனை பாடிப் பற |
| 317 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 11 | நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பறந்த ஒளி யிழையார்கள் சொல் செந்தமிழ்த் தென் புதுவை விட்டு சித்தன் சொல் ஐந்தினோ டைந்தும் வல்லார்க்கு அல்ல லில்லையே–3-9-11 | நந்தன மதலையை,Nandhana Madhalaiyai - நந்த கோபான் குமாரனான கண்ண பிரானையும் காகுத்தனை,Kaaguththanai - இராம பிரானையும் நவின்று,Navindru - (ஒருவர்க்கொருவர் எதிரியாய் நின்று) சொல்லி உந்தி பறந்து,Undhi Parandhu - உந்தி பறக்கையாகிற லீலா ரஸங்கொண்டாடின ஒளி இழையார்கள்,Oli Izaiyaargal - அழகிய ஆபாரணமணிந்த ஆய்ப் பெண்கள் இருவருடைய சொல்,Sol - சொல்லி செம்தமிழ்,Semthamizh - அழகிய தமிழ் பாஷையாலே தென் புதுமை விட்டு சித்தன் சொல்,Then Puthumai Vittu Siththan Sol - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வார் அருளிச் செய்த ஐந்தினோடு ஐந்தும்,Aindhinodu Aindhum - க்ருஷ்ணாவதார விஷயமான ஐந்தும், ராமாவதார விஷயமான ஐந்துமாகிய இப் பத்துப் பாசுரங்கனை வல்லார்க்கு அல்லல் இல்லை,Vallarkku Allal Illai - துன்பமொன்று மில்லையாம். |
| 318 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 1 | நெறிந்த கருங் குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம் செறிந்த மணி முடிச் சனகன் சிலை யிறுத்து நினைக் கொணர்ந்தது அறிந்து அரசு களை கட்ட அருந்தவத்தோன் இடை விலங்க செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓரடையாளம்–3-10-1 | நெறிந்த கருங்குழல்,Nerindha Karunguzhal - நெறிப்புக் கொண்ட கரிய கூந்தலை யுடையவளும் மடவாய்,Madavaai - மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ! நின் அடியேன்,Nin Adiyen - உமது அடியவனான என்னுடைய விண்ணப்பம்,Vinnappam - விஜ்ஞாபகம் (ஒன்றைக் கேட்டருள வேணும்): செறிந்த,Serindha - நெருங்கின மணி,Mani - ரத்நங்களை யுடைய முடி,Mudi - கிரீடத்தை அணிந்த சனகன்,Sanagan - ஜநக மஹாராஜன் (கந்யா சுல்யமாக ஏற்படுத்தின) சிலை,Silai - ருத்ர தநுஸ்ஸை இறுத்து,Iruththu - முறித்து நினை,Nina - உம்மை (பிராட்டியை) கொணர்ந்தது,Konarnthathu - மணம் புரிந்து கொண்டதை அறிந்து,Arindhu - தெரிந்து கொண்டு அரசு களை கட்ட,Arasu Kalai Katta - (துஷ்ட) ராஜாக்களை (ப்பயிருக்கு)க்களை களைவது போலழித்த அருந் தவத்தோன்,Arun Thavaththon - அரிய தவத்தை யுடைய பரசுராமன் இடை விலங்க,Idai - நடு வழியில் தடுக்க செறிந்த சிலை கொடு,Nadu Vazhiyil Thadukka - (தனக்குத்) தகுந்த (அப்பரசுராமன் கையிலிருந்த விஷ்ணு) தநுஸ்ஸை வாங்கிக் கொண்டு தவத்தை,Thavaththai - (அப் பரசுராமனுடைய) தபஸ்ஸை சிதைத்ததும்,Sithaiththadhum - அழித்ததும் ஓர் அடையாளம்,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |
| 319 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 2 | அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம் சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மட மானே எல்லியம் போதினி திருத்தல் இருந்ததோரிட வகையில் மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்–3-10-2 | அல்லி,Alli - அகவிதழ்களை யுடைய அம் பூ,Am Poo - அழகிய பூக்களால் தொடுக்கப் பட்ட மலர்க் கோதாய்,Malark Kothai - பூமாலை போன்றவளே! அடி பணிந்தேன்,Adi Panindhen - (உமது) திருவடிகளில் வணங்கிய நான் விண்ணப்பம்,Vinnappam - விஜ்ஞாபநமொன்றை சொல்லு கேன்,Sollu Kaen - (உம்மிடத்தில்) சொல்லுவேன்; துணை மலர் கண்,Thunai Malar Kan - ஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர் போன்ற கண்களையும் மடம்,Madam - மடப்பத்தையு முடைய மானே,Maanae - மான் போன்றவளே! கேட்டருளாய்,Kaettarulai - (அதைத்) திருச் செவி சாத்த வேணும்; அம் எல்லி போது,Am Elli Podhu - அழகிய இராத்திரி வேளையில் இனிது இருத்தல்,Inidhu Iruththal - இனிமையான இருப்பாக இருந்தது,Irundhathu - இருந்ததான ஒர் இடம் வகையில்,Or Idam Vagaiyil - ஓரிடத்தில் மல்லிகை,Malligai - மல்லிகைப் பூவினால் தொடக்கப்பட்ட மா மாலை கொண்டு,Maa Maalai Kondu - சிறந்த மாலையினால் ஆர்த்ததும்,Aarththadhum - (நீர் இராம பிரானைக்) கட்டியதும் ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |
| 320 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 3 | கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3 | கைகேசி,Kaikaesi - கைகேயியானவள் கலக்கிய மா மனத்தனன் ஆய்,Kalakkiya Maa Manaththanan Aay - (மந்தாரையினாள்) கலக்கப்பட்ட சிறந்த மனத்தை யுடையவளாய் வரம் வேண்ட,Varam Venda - (தசரதர் முன் தனக்குக் கொடுத்திருந்த) வரங்களின் பயனைக் கேட்க மலக்கிய,Malakkiya - (அக் கைகேயியின் வார்த்தையால்) கலக்கமடைந்த மா மனத்தனன் ஆய்,Maa Manaththanan Aay - சிறந்த மனத்தை யுடையவனாய் மன்னவனும்,Mannavanum - தசரத சக்ரவர்த்தியும் மறாது,Maraadhu - மறுத்துச் சொல்ல முடியாமல் ஒழிய,Oliya - வெறுமனே கிடக்க, குலம் குமரா,Kulam Kumaraa - (அந்த ஸந்தர்ப்பத்தில் கைகேயியானவள்,) “உயர் குலத்திற்பிறந்த குமாரனே) காடு உறைய,Kaadu Uraiya - காட்டிலே (பதினான்கு வருஷம்) வஸிக்கும்படி போ என்று,Poa Endru - போய் வா” என்று சொல்லி விடை கொடுப்ப,Vidai Koduppa - விடை கொடுத்தனுப்ப அங்கு,Angu - அக் காட்டிலே இலக்குமணன் தன்னொடும்,Ilakkuamanan Thannodum - லக்ஷ்மணனோடு கூட ஏகியது,Eagiyathu - (இராமபிரான்) சென்றடைந்ததும் ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |
| 321 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 4 | வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம் தேரணிந்த அயோத்தியர் கோன் பெருந்தேவீ கேட்டருளாய் கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமையைக் கொண்டதும் ஓரடையாளம்–3-10-4 | வார் அணிந்த,Vaar Anindha - கச்சை அணிந்த முலை,Mulai - முலையையும் மடவாய்,Madavaai - மடப்பத்தையுமுடைய பிராட்டீ! வைதேவீ,Vaithevi - விதேஹ வம்சத்திற் பிறந்தவனே! விண்ணப்பம்,Vinnappam - ஒரு விஜ்ஞாபகம்; தேர் அணிந்த,Ther Anindha - தேர்களாலே அலங்காரமான அயோத்தியர் கோன்,Ayoththiyar Kon - அயோத்தியிலுள்ளார்க்கு அரசனாதற்கு உரிய இராமபிரானது பெருந்தேவீ,Perundhevi - பெருமைக்குத் தகுந்த தேவியே! கேட்டருளாய்,Kaettarulai - அவ் விண்ணப்பத்தைக் கேட்டருளவேணும்; கூர் அணிந்த,Koor Anindha - கூர்மை பொருந்திய வேலாயுதத்தில் வல்லவனாகிய குகனோடும்,Guganodum - குஹப் பெருமாளோடு கூட கங்கை தன்னில்,Gangai Thannil - கங்கை கரையிலே சீர் அணிந்த தோழமை,Seer Anindha Thozhamai - சிறப்புப் பொருந்திய ஸ்நேஹத்தை கொண்டதும்,Kondadhum - பெற்றதும் ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |
| 322 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 5 | மானமரு மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம் கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து தேனமரும் பொழிற் சாரல் சித்திர கூடத்து இருப்ப பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓரடையாளம்-3-10-5 | மான் அமரும்,Maan Amarum - மானை யொத்த மென் நோக்கி,Men Nookki - மென்மையான கண்களை யுடையவளான பால் மொழியாய்,Paal Mozhiyaai - பால் போல் இனியபேச்சை யுடையவளே! விண்ணப்பம்;,Vinnappam - ஒரு விஜ்ஞாபகம்; கான் அமரும்,Kaan Amarum - காட்டில் பொருந்திய கல் அதர் போய்,Kal Adhar Poi - கல் நிறைந்த வழியிலேயே காடு உறைந்த காலத்து,Kaadu Uraindha Kaalaththu - காட்டில் வஸித்த போது தேன் அமரும் பொழில்,Then Amarum Pozhil - வண்டுகள் பொருந்திய சோலைகளை யுடைய சாரல்,Saaral - தாழ்வரையோடு கூடிய சித்திர கூடத்து,Siththira Koodaththu - சித்திர கூட பர்வதத்தில் இருப்ப,Irup - நீங்கள் இருக்கையில் பரதன் நம்பி,Barathan Nambi - பரதாழ்வான் பணிந்ததும்,Panindhadum - வந்து வணங்கியதும் ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |
| 323 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 6 | சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓரடையாளம்–3-10-6 | சித்திரக்கூடத்து ,Siththirak Koodaththu - சித்திரகூட பர்வதத்தில் இருப்ப,Irup - நீங்களிருவரும் ரஸாநுபவம் பண்ணிக் கொண்டிருக்கையில் சிறு காக்கை,Siru Kaakkai - சிறிய காக்கையின் வடிவு கொண்டு வந்த ஜயந்தன் முலை தீண்ட,Mulai Theenda - (உமது) திரு முலைத் தடத்தைத் தீண்ட அத்திரமே கொண்டு,Aththiramae Kondu - (அதனாற் சீற்றமுற்ற ஸ்ரீராமன்) ப்ரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்து எறிய,Eriya - பிரயோகிக்க, அனைத்து உலகும்,Anaiththu Ulagum - (அக் காகம் அதற்குத் தப்புவதற்காக) உலகங்களிலெல்லாம் திரிந்து ஓடி,Thirindhu Oadi - திரிந்து ஓடிப் போய் வித்தகனே,Viththagane - (தப்ப முடியாமையால் மீண்டு இராமபிரானையே அடைந்து) “ஆச்சரியமான குணங்களை யுடையவனே! இராமா,Raamaa - ஸ்ரீ ராமனே! ஓ,O - ஓ !! நின் அபயம்,Nin Abayam - (யான்) உன்னுடைய அடைக்கலம்” என்று அழைப்ப,Endru Azhaippa - என்று கூப்பிட அத்திரமே,Aththiramae - (உயிரைக் கவர வேணுமென்று விட்ட அந்த) அஸ்த்ரமே அதன் கண்ணை,Adhan Kannai - அந்தக் காகத்தின் ஒரு கண்ணை மாத்திரம் அறுத்ததும்,Aruththadhum - அறுத்து விட்டதும் ஓர் அடையாளம் |
| 324 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 7 | மின்னொத்த நுண்ணிடையாய் மெய் யடியேன் விண்ணப்பம் பொன்னொத்த மானொன்று புகுந்து இனிது விளையாட நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓரடையாளம்–3-10-7 | மின் ஒத்த,Min Oththa - மின்னலைப் போன்ற நுண் இடையாய்,Nun Idaiyaai - மெல்லிய இடையை யுடையவளே! மெய் அடியேன்,Mei Adiyen - உண்மையான பக்தனாகிய எனது விண்ணப்பம்,Vinnappam - விண்ணப்பத்தை (க் கேட்டருள வேணும்;) பொன் ஒத்த,Pon Oththa - பொன் நிறத்தை ஒத்த (நிறமுடைய) மான் ஒன்று,Maan Ondru - (மாரீசனாகிய) ஒருமான் புகுந்து,Pugundhu - (பஞ்சவடியில் நீரிருக்கும் ஆச்ரமத்தருகில் வந்து இனிது விளையாட,Inidhu Vilaiyaada - அழகாக விளையாடா நிற்க, நின் அன்பின் வழி நின்று,Nin Anbin Vazi Nindru - (அதை மாயமான் என்று இளையபெருமாள் விலக்கவும்) உம்முடைய ஆசைக்குக் கட்டுப்பட்டு நின்று சிலை பிடித்து,Silai Pitiththu - வில்லை யெடுத்துக் கொண்டு எம்பிரான்,Empiraan - இராமபிரான் ஏக,Eaga - அம்மானைப் பிடித்துக் கொணர்வதாக அதன் பின்னே தொடர்ந்து) எழுந்தருள, பின்னே,Pinnae - பிறகு அங்கு,Angu - அவ் விடத்தில் இலக்குமணன்,Ilakkuamanan - இளைய பெருமாளும் பிரிந்ததும்,Pirindhadhum - பிரிந்ததுவும் ஓர் அடையாளம் |
| 325 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 8 | மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம் ஒத்த புகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத் தேட அத் தகு சீரயோத்தியர் கோன் அடையாள மிவை மொழிந்தான் இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே-3-10-8 | மை தகு,Mai Thagu - மைபோல் விளங்குகிற மா மலர்,Maa Malar - சிறந்த புஷ்பங்களை அணிவதற்கு உரிய குழலாய்,Kuzhalaai - கூந்தலை யுடையவளே! வைதேவி,Vaithevi - வைதேஹியே! ஒத்த புகழ்,Oththa Pugazh - “பெருமாளோடு இன்பத் துன்பங்களை) ஒத்திருக்கப் பெற்றவன்” என்ற கீர்த்தியை யுடைய வானரர் கோன் உடனிருந்து,Vaanarar Kon Udanirundhu - (இராமபிரானோடு) கூட இருந்து நினை தேட,Ninaith Theda - உம்மை தேடும்படி (ஆள் விடுகையில் என்னிடத்து விசேக்ஷமாக அபிமானிக்க) அத் தகு சீர்,Ath Thagu Seer - (பிரிந்த) அந்த நிலைக்குத் தகுதியான குணமுள்ள அயோத்தியர் கோன்,Ayoththiyar Kon - அயோத்தியிலுள்ளார்க்குத் தலைவைரான பெருமாள் அடையாளம் இவை,Adaiyaalam Ivai - இவ் வடையாளங்களை மொழிந்தான்,Mozhindhaan - (என்னிடத்திற்) சொல்லி யருளினான்; அடையாளம்,Adaiyaalam - (ஆதலால்) (யான் சொன்ன) அடையாளங்கள் இத் தகையால்,Ith Thagaiyaal - இவ்வழியால் (வந்தன); (அன்றியும்) ஈது,Eedhu - இதுவானது அவன்,Avan - அவ்விராம பிரானுடைய கை மோதிரம்,Kai Modhiram - திருக்கையிலணிந்து கொள்ளும் மோதிரமாகும். |
| 326 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 9 | திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெருஞ் சபை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல் வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9 | திக்கு,Thikku - திக்குகளிலே நிறை,Nirai - நிறைந்த புகழ் ஆனன்,Pugazh Aanan - கீர்த்தியை யுடையவனான ஜநக ராஜனுடைய தீ வேள்வி,Thee Velvi - அக்நிகளைக் கொண்டு செய்யும் யாகததில் சென்ற,Sendra - (விஸ்வாமித்திரருடன்) போன மிக்க பெருசபை நடுவே,Mikka Perusabai Naduvae - மிகவும் பெரிய ஸபையின் நடுவில் வில்லிறுத்தான்,Villiruththaan - ருத்ர தநுஸ்ஸை முறித்த இராமபிரானுடைய மோதிரம்,Modhiram - மோதிரத்தை கண்டு,Kandu - பார்த்து மலர் குழலாள்,Malar Kuzhalaal - பூச்சூடிய கூந்தலை யுடையவளான சீதையும்,Seethaiyum - ஸுதாப் பிராட்டியும், அனுமான்,Anumaan - ‘வாராய் ஹனுமானே! அடையாளம் ?,Adaiyaalam - (நீ சொன்ன) அடையாளங்களெல்லாம் ஒக்கும்,Okkum - ஒத்திரா நின்றுள்ளவையே என்று,Endru - என்று (திருவடியை நோக்கிச்) சொல்லி (அந்தத் திருவாழியை) உச்சி மேல் வைத்துக் கொண்டு,Uchchi Mael Vaiththuk Kondu - தன் தலையின் மீது வைத்துக் கொண்டு உகந்தான்,Ugandhaan - மகிழ்ந்தான் |
| 327 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 10 | வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம் பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார் ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.–3-10-10 | வார் ஆரும்,Vaar Aarum - கச்சு அணிந்திருக்கைக்கு உரிய முலை,Mulai - முலையையும் மடலாள்,Madalaal - மடப்பத்தை யுமுடையவளான வைதேவிதனை,Vaithevidhanai - ஸீதா பிராட்டியை கண்டு,Kandu - பார்த்து சீர் ஆரும்,Seer Aarum - சக்தியை யுடையவனான திறல்,Thiral - சிறிய திருவடி தெரிந்து,Therindhu - (பெருமாளிடத்தில் தான்) அறிந்து கொண்டு. உரைந்து,Uraindhu - (பின்பு பிராட்டியிடத்திற்) சொன்ன அடையாளம்,Adaiyaalam - அடையாளங்களை (க் கூறுவதான) பார் ஆளும் புகழ்,Paar Aazhum Pugazh - பூமி யெங்கும் பரவின கீர்த்தியை யுடையராய் புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான பட்டர்பிரான் பாடல்,Pattarpiraan Paadal - பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை வல்லார்,Vallaar - ஓத வல்லார்கள் ஏர் ஆரும் வைகுந்தத்து,Er Aarum Vaikunthaththu - வல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீவைகுண்டததில் இமையவரோடு,Imaiyavarodu - நித்ய ஸூரிகளோடு இருப்பார்,Irupaar - கோவையா யிருக்கப் பெறுவார்கள். |
| 328 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 1 | கதிராயிர மிரவி கலந் தெரித்தா லொத்த நீள் முடியன் எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் அதிரும் கழற் பொரு தோள் இரணிய னாகம் பிளந்து அரியாய் உதிரமளைந் தகையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர்–4-1-1 | கதிர்,Kathir - (எண்ணிறந்த) கிரணங்களை யுடைய ஆயிரம் இரவி,Aayiram Iravi - ஆயிரம் ஆதித்யர்கள் தறித்தால் ஒத்தத,Thariththaal Oththadha - ஜ்வலித்தாற்போல் (மிகவும் பளபளவா நின்றுள்ள) நீள் முடியன்,Neel Mudiyan - நீண்ட திருவபிஷேகத்தை உடையவனுமான இராமன்,Raaman - இராமபிரான் இருக்கும் இடம்,Irukkum Idam - எழுந்தருளியிருக்குமிடத்தை நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில் (அவ்விடத்தை விட்டுச் செல்லுகிறேன்;) அதிரும்,Athirum - (கல கல் என்று) ஒலி செய்யா நின்றுள்ள கழல்,Kazhal - வீரக் கழலையும் பொரு தோள்,Poru Thol - போர் செய்யப் பதைக்கிற தோள்களையுமுடைய இரணியன்,Iraniyan - ஹிரண்யாஸுரனுடைய ஆகம்,Aagam - மார்பை அரி ஆய்,Ari Aay - நரஸிம்ஹ ருபியாய்க் கொண்டு பிளந்து,Pilandhu - கீண்டு உதிரம் அளைந்து,Uthiram Alainthu - (அதனாலுண்டான) ரத்தத்தை அளைந்த கையோடு,Kaiyodu - கைகளோடு கூடி இருந்தானை,Irundhaanai - (சீற்றந்தோற்ற) எழுந்தருளியிருந்த நிலைமையில் (அவனை) உள்ள ஆ உண்டார் உளர்,Ulla Aa Undaar Ular - உள்ள அவனை ஸேவித்தவர்கள் இருக்கின்றனர். |
| 329 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 2 | நாந்தகம் சங்கு தண்டு நாணொலிச் சார்ங்கம் திருச் சக்கரம் ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க வேந்தர் தலைவஞ் சனகராசன் தன் வேள்வியில் கண்டாருளர்–4-1-2 | நாந்தகம்,Naandhagam - நந்தகம் என்னும் வாளையும் சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்ச ஐன்யத்தையும் தண்டு,Thandu - கௌமோதகி என்னும் கதையையும் நாண் ஒலி,Naan Oli - நாண் கோஷத்தை யுடைய சார்ங்கம்,Saarngam - ஸ்ரீசார்ங்க ததுஸ்னையும் திரு சக்கரம்,Thiru Chakkaram - திருவாழி யாழ்வானையும் ஏந்து பெருமை இராமன்,Aendhu Perumai Raman - (திருக்கைகளில்) ஏந்தும்படியான பெருமையை யுடைய இராமபிரான் இருக்கும் இடம் நாடுதிரேல்,Irukkum Idam Naadhuthireel - எழுந்தருளியிருக்குமிடத்தை தேடுகிறீர்களாகில் (அவ்விடத்தை விட்டுச் செல்லுகிறேன்;) காந்தன் முகிழ் விரல் சீதைக்கு ஆகி,Gaanthan Mughil Viral Seethaaikku Aagi - செங்காந்தளம்பு போன்ற விரல்களையுடைய பிராட்டிக்காக வேந்தர் தலைவன்,Vaendhar Thalaivan - ராஜாதிராஜனான சனகராசன் தன்,Sanagaraasan Than - ஜனக சக்கரவர்த்தியினுடைய வேள்வியில்,Velviyil - யஜ்ஞ வாடத்திலே சென்று,Sendru - எழுந்தருளி கடு சிலை,Kadu Silai - வலிய வில்லை இறுக்க கண்டார் உளர்,Irukka Kandaar Ular - முறிக்கக் கண்டவர்கள் இருக்கின்றனர். |
| 330 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 3 | கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொரு தழிய சிலையால் மராமர மெய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தட வரை கொண்டடைப்ப அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர்–4-1-3 | கொலை யானை,Kolai Yaanai - கொலை செய்வதையே இயல்பாக வுடைய (குவலய பீடமென்னும் யானையினுடைய கொம்பு,Kombu - தந்தங்களை பறித்து,Pariththu - பறித்துக் கொண்டவனும், கூடலர்,Koodalar - (ஜகஸ்தாதத்திலுள்ள ராக்ஷஸர்களாகிய) சத்துருக்களுடைய சேனை,Saenai - சேனையானது அழிய,Azhiya - அழியும்படி பொருது,Porudhu - போர் செய்தவனும், சிலையால்,Silaiyaal - வில்லாலே மராமரம்,Maraamaram - ஸப்த ஸால வ்ருக்ஷங்களை மெய்த,Meidha - எய்தவனுமான தேவனை,Thevanai - எம்பிரானை சிக்கன நாடுதிரேல்,Sikkana Naadhuthireel - த்ருடாத்யவஸாயத்தோடு தேடுகிறீர்களாகில், குரங்கு இனம்,Kurangu Inam - (அவனிருக்குமிடஞ் சொல்லுகிறேன்;) வாநர ஸேனையானது தடவரை,Thadavarai - பெரிய மலைகளை தலையால்,Thalaiyaal - (தமது) தலைகளினால் தாங்கிக் கொண்டு சென்று,Thaangik Kondu Sendru - சுமந்து கொண்டு போய் அடைப்ப,Adaippa - கடலின் நடுவே அணையாக) அடைக்க அலை ஆர் கடல் கரை,Alai Aar Kadal Karai - அலையெறிகிற கடற்கரையிலே வீற்றிருந்தானை,Veetrirundhaanai - எழுந்தருளியிருந்த இராமபிரானை அங்குத்தை கண்டார் உளர்,Anguththai - அந்த ஸந்நிவேசத்தில் கண்டார் உளர் |
| 331 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 4 | தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட மாயக் குழவியதனை நாடுதிறில் வம்மின் சுவடுரைக்கேன் ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல்விடை யேழினையும் வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டாருளர்–4-1-4 | பரந்த,Parandha - எங்கும் பரவின தோயம் நடுவு,Thoyam Naduvu - ஜலத்தின் நடுவே சூழலின்,Soozhalin - உபாயத்தினால் தொல்லை வடிவு கொண்ட,Thollai Vadivu Konda - பழமையான (பெரிய) வடிவைச் சுருக்கிக் கொண்ட மாயம் குழலி அதனை,Maayam Kuzhali Adhanai - அந்த ஆச்சர்யக் குட்டியை நாடுதிறில்,Naadhuthiril - தேட முயன்றீர்களாகில் வம்மின்,Vammin - (இங்கே) வாருங்கள்; சுவடு உரைக்கேன்,Suvadu Uraikkaen - (உங்களுக்கு) ஓரடையாளம் சொல்லுகின்றேன்; ஆயர் மகள்,Aayar Magal - (ஸ்ரீகும்பர் என்னும்) ஆயருடைய பெண் பிள்ளையும் மடம்,Madam - மடப்பம் என்ற குணத்தை உடையவளுமான பின்னைக்கு ஆகி,Pinnaikku Aagi - நப்பின்னைப் பிராட்டிக்காக அடல் விடை யேழினையும்,Adal Vidai Eaezhinaiyum - வலிய ரிஷபங்களேழும் வீய,Veea - முடியும்படியாக பொருது,Porudhu - (அவற்றோடு) போர் செய்து (அந்த ஆயாஸத்தாலே) வியர்த்து நின்றானை,Viyarththu Nindraanai - குறு வெயர்ப்பரும்பின வடிவுந்தானுமாய் நின்றவனை மெய்யம்மையே,Meiyyammayae - உண்மையாகவே கண்டார் உளர் |
| 332 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 5 | நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல் வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேரேற்றி சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டாருளர்–4-1-5 | நீர்,Neer - (எம்பெருமானது ஸ்ரீபாத) தீர்த்தமானது ஏறு,Eru - ஏறப் பெற்ற செம் சடை,Sem Sadai - சிவந்த ஜடையையுடைய நீல கண்டனும்,Neela Kandhanum - (விஷமுடையதனால்) கறுத்த மிடற்றை யுடையவனான சிவ பெருமானும். நான்முகனும்,Naanmughanum - சதுர் முக ப்ரஹ்மாவும் முறையால்,Muraiyaal - (சேஷ சேஷி பாவமாகிற) முறையின்படி சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற,Seer Eru Vaasagam Seiyya Nindra - சிறந்த சொற்களைக் கொண்டு துதிக்கும்படி அமைந்து நின்ற திருமாலை,Thirumaalai - ச்ரிய : பதியாகிய எம்பெருமானை நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில், (இதைக் கேளுங்கள்;) வார் ஏறு,Vaar Eru - கச்சை அணிந்த கொங்கை,Kongai - முலைகளை யுடைய உருப்பிணியை,Urupiniyai - ருக்மிணிப் பிராட்டியை வலிய,Valiya - பலாத்காரமாக பிடித்துக்கொண்டு தேர் ஏற்றி,Ther Eritti - (தனது) திருத் தேரின் மேல் ஏற விட்டு சேனை நடுவு,Saenai Naduvu - (அவ்வளவிலே சிசுபாலதிகளான பல அரசர்கள் எதிர்த்துவர) அவ்வரசர்களுடைய ஸேநா மத்யத்திலே போர் செய்ய,Por Seiyya - (அவ்வரசர்களோடு )யுத்தம் செய்ய சிக்கென கண்டார் உளர்,Sikkena Kandaar Ular - திண்மையான (த்ருடமாக) கண்டார் உளர் |
| 333 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 6 | பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லானை மா மணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல் பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறி துவரை எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்–4-1-6 | பொல்லா வடிவு உடைபேய்ச்சி,Polla Vadivu Udaipeychchi - மஹா கோரமான வடிவை யுடைய பூதனை யானவள் அஞ்ச,Anja - மாளும்படியாக புணர்முலை,Punarmulai - தன்னில் தான் சேர்ந்திருள்ள (அவளது) முலையிலே வாய் மடுக்க வல்லான்,Vaai Madukka Vallaan - (தனது) வாயை வைத்து உண்ண வல்லவனும் மா மணிவண்ணன்,Maa Manivannan - நீலமணி போன்ற நிறத்தை யுடையவனுமான எம்பெருமான் மருவும் இடம்,Maruvum Idam - பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடத்தை நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில் பௌவம் ஏறி துவரை,Pauvam Eri Thuvarai - (இதைக் கேளுங்கள்:) கடலலைகள் வீசப் பெற்றுள்ள ஸ்ரீத்வாரகையிலே எல்லாரும் சூழ,Ellaarum Soozha - தேவிமார் எல்லாரும் சுற்றுஞ் சூழ்ந்து கொண்டிருக்க பல் ஆயிரம் பெரு தேவிமாரொடு,Pal Aayiram Peru Devimaarodu - (அந்தப்) பதினாறாயிரம் தேவிமாரோடு கூட சிங்காசனத்து,Singaasanaththu - ஸிம்ஹாஸநத்தில் இருந்தானை கண்டார் உளர்,Irundhaanai Kandaar Ular - எழுந்தருளி யிருக்கும் போது கண்டார் உளர் |
| 334 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 7 | வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையன் உள்ள விடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடுரைக்கேன் வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கை செய்யக் கண்டாருளர்–4-1-7 | வெள்ளை,Vellai - வெண்மை நிறமுடையதும் விளி,Vili - (அநுபவ கைங்கரியங்களில் ருசியுடையீர்! வாருங்கள் என்று, தன் த்வநியால்) அழைப்பது போன்றுள்ளதுமான சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும் வெம் சுடர்,Vem Sudar - தீக்ஷ்ணமான ஜ்யோதிஸ்ஸை யுடைய திருச் சக்கரம்,Thiruch Chakkaram - திருவாழி யாழ்வாளையும் ஏந்து கையன்,Aendhu Kaiyan - தரியா நின்றுள்ள திருக்கைகளையுடைய எம்பெருமான் உள்ள இடம்,Ulla Idam - எழுத்தருளி யிருக்குமிடத்தை வினவில்,Vinavil - கேட்கிறீர்களாகில் உமக்கு,Umakku - (கேட்கிற) உங்களுக்கு இறை சுவடு உரைக்கேன்,Irai Suvadu Uraikkaen - சிறிது அடையாளம் சொல்லுகிறேன், வம்மின்,Vammin - வாருங்கள்; வெள்ளைப் புரவி,Vellaip Puravi - வெள்ளைக் குதிரகைள் பூண்டிருப்பதும் குரங்குகொடி,Kurangukodi - குரங்காகிற வெற்றிக் கொடியை உடையதுமான தேர்மிசை,Thermisai - (அர்ஜுனனுடைய) தேரின் மேலே முன்பு நின்று ,Munbu Nindru - (ஸாரதியாய்) முன்னே நின்று படை,Padai - ஸைந்யத்துக்கு கள்ளம் துணை ஆகி,Kallam Thunai Aagi - க்ருத்ரிமத் துணையாயிருந்து பாரதம்,Bhaaratham - பாரத யுத்தத்தை கை செய்ய கண்டார் உளர்,Kai Seiyya Kandaar Ular - அணி வகுத்து நடத்தும் போது கண்டார் உளர் |
| 335 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 8 | நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன் ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையை பாழி லுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர்–4-1-8 | நாழிகை ,Naazhikai - (பகல் முப்பது) நாழிகைகளை கூறி விட்டு,Koouri Vittu - பங்கிட்டுக்கொண்டு காத்து நின்ற,Kaaththu Nindra - (ஜயத்ரதனைக்) காத்துக் கொண்டிருந்த அரசர்கள் நம் முகப்பே,Arasargal Nam Mugappae - ராஜாக்கள் முன்னிலையில் நாழிகை போக,Naazhikai Poga - (பகல் முப்பது) நாழிகையும் போயிற்றென்று தோற்றும்படியாக படை,Padai - (தன்) ஆயுதமாகிய திருவாழியாழ்வானைக் கொண்டு பொருதவன்,Porudhavan - (ஸூர்யனை) மறைத்தவனும் தேவகி தன் சிறுவன்,Devagi Than Siruvan - தேவகிப்பிராட்டியின் பிள்ளையுமான கண்ணபிரான் உள்ள இடம் கேட்கிறீர்களாகிய சொலலுகின்றேன்; (உள்ள இடம்),Ulla Idam - எழுந்தருளியிருக்குமிடத்தை ஆழி கொண்டு,Aazhi Kondu - திருவாழியினால் இரவி,Iravi - ஸூர்யனை மறைப்ப,Maraippa - (தான்) மறைக்க, சயத்திரதன்,Sayaththiradhan - (அதனால் பகல் கழிந்த்தாகத் தோற்றி வெளிப்பட) ஜயத்ரனுடைய தலை,Thalai - தலையானது. பாழில் உருள,Paazhil Urula - பாழியிலே கிடந்துருளும்படி படை பொறாதவன் பக்கமே,Padai Poraadhavan Pakkamae - அம்பைச் செலுத்தின அர்ஜுநனருகில் கண்டார் உளர்,Kandaar Ular - (அவ் வெம்பெருமானைக்) கண்டாருண்டு. |
| 336 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 9 | மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவுமெல்லாம் திண்ணம் விழுங்கி யுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் எண்ணற் கரிய தோரேனமாகி இரு நிலம் புக்கிடந்து வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டாருளர்–4-1-9 | மண்ணும்,Mannum - பூமியையும் மலையும்,Malaiyum - மலைகளையும் மறி,Mari - அலை யெறியா நின்றுள்ள கடல்களும்,Kadalgallum - கடல்களையும் மற்றும் யாவும் எல்லாம்,Matrum Yaavum Ellaam - மற்றுமுண்டான எல்லாப் பொருள்களையும் திண்ணம்,Thinnam - நிச்சயமாக விழுங்கி,Vizhungi - (ப்ரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து நோக்கி உமிழ்ந்த,Umizhndha - (பின்பு ப்ரளயங்கழிந்தவாறே அவற்றை வெளி…..காண) உமிழ்ந்து தேவனை,Thevanai - எம்பெருமானை சிக்கென,Sikkena - ஊற்றத்துடனே நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில், (இதனைக் கேளுங்கள்.) எண்ணற்கு அரியது,Ennarku Ariyadhu - நினைக்க முடியாத (பெருமையையுடைய) ஓர்,Or - ஒப்பற்ற ரேனமாகி ,Raenamaagi - அவதரித்து புக்கு,Pukku - ப்ரளய வெள்ளத்தில் புகுந்தது இரு நிலம்,Eru Nilam - பெரிய பூமியை இடந்து,Edandhu - அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து (அவ்வளவிலே பூமிப்பிராட்டி தன்னை வந்து அணைக்க,) வண்ணம்,Vannam - அழகியதும் கரு,Karu - கறுத்ததுமான குழல்,Kuzhal - குந்தலையுடைய மாதரோடு ,Maadharodum - (அந்த) பூமிப்பிராட்டியோடு மணந்தானை கண்டார் உளர்,Manandhaanai Kandaar Ular - ஸமச்லேஷித்தருளினவனை கண்டார் உளர் |
| 337 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 10 | கரிய முகில் புரை மேனி மாயனைக் கண்ட சுவடுரைத்து புரவி முகம் செய்து செந்நெலோங்கி விளை கழனிப் புதுவை திருவிற் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே–4-1-10 | கரியமுகிற் புரை மேனி,Kariyamugir Purai Maeni - கரு மலர் போன்ற திருமேனியுடையனும் மாயனை,Maayanai - ஆச்சரிய செய்கைகளை யுடையனுமான கண்ணபிரானை கண்ட சுவடு,Kanda Suvadu - ஸேவித்த அடையாளங்களை உரைத்த,Uraitha - அருளிச் செய்த; செந்நெல்,Sennel - செந்நெற் பயிர்களானவை ஓங்கி,Ongi - (ஆகாசமளவும்) உயர்ந்து புரவி முகம் செய்து,Puravi Mugam Seidhu - குதிரை முகம் போலத் தலை வணங்கி விளை,Vilai - விளையா நிற்கப் பெற்ற கழனி,Kazhani - வயல்களை யுடைய புதுவை,Puduvai - ஸ்ரீவில்லிபுத்தார்க்குத் தலைவரும் திருவின்,Thiruvin - (விஷ்ணு பக்தியாகிற) செல்வத்தினால் பொலி,Poli - விளங்கா நின்றுள்ளவரும் மறை வாணன்,Marai Vaanan - வேதத்துக்கு நிர்வாஹகருமான பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியாழ்வார் சொன்ன,Sonna - அருளிச்செய்த மாலை பத்தும்,Maalai Paththum - சொல் மாலையாகிற இப் பத்துப் பாட்டையும் பரவும் மனம் உடை,Paravum Manam Udai - அநுஸத்திக்கைக் கீடான மநஸ்ஸை யுடையவரும் பக்தர் உள்ளார்,Bakthar Ullaar - பக்தியை யுடையவருமாயிருப்பவர்கள் பரமன்,Paraman - பரம புருஷனுடைய அடி,Adi - திருவடிகளை சேர்வர்கள்,Saervargal - கிட்டப் பெறுவார்கள் |
| 338 | பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 1 | அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்களாடும் சீர் சிலம்பாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே-4-2-1 | தெய்வம் மகளிர்கள்,Deivam Magalirgala - தேவ ஸ்திரீகள் சிலம்பு ஆர்க்க ,Silambu Aarka - (நமது) பாதச் சிலம்புகள் ஒலிக்கும் படி வந்து ,Vandhu - (பூலோகத்தில்) வந்து ஆடும் சீர்,Aadu Seer - நீராடும்படியான பெருமையை யுடைய சிலம்பு ஆறு,Silambu Aaru - நூபுர கங்கையானது பாயும்,Paayum - (இடைவிடாமல்) பெருகப் பெற்றுள்ள தென் திருமாலிருஞ் சோலை,Then Thirumaalirun Cholai - அழகிய திருமாலிருஞ் சோலையானது, அலம்பா,Alampaa - பிராணிகளை அலையச் செய்தும் வெருட்டா,Veruttaa - பயப்படுத்தியும் கொன்று,Konru - உயிர்க் கொலை செய்தும் திரியும்,Thiriyum - திரிந்து கொண்டிருந்த அரக்கரை,Arakkarai - ராக்ஷஸர்களை குலம் பாழ் படுத்து,Kulam Paazh Paduthu - ஸ குடும்பமாகப் பாழாக்கி குலம் விளக்கு ஆய் நின்றகோன்,Kulam Vilakku Aay Nintragon - (இக்ஷ்வாகு வம்சத்துக்கு விளக்காய் நின்ற பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமான) மலை,Malai - திருமலையாம். |
| 339 | பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 2 | வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை எல்லா விடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டொலி செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே–4-2-2 | பல்லாண்டு ஒலி,Pallandu Oli - மங்களசான கோஷமானது எல்லா இடத்திலும்,Ella Idathilum - எல்லா யிடங்களிலும் எங்கும்,Engum - திருமலையின் பரப்பெங்கும் பரந்து செல்லா நிற்கும் சீர்,Parandhu Sella Nirkum Seer - பரவிச் செல்லும் படியான பெருமையை யுடைய தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை வல் ஆளன்,Val Aalan - வலிய ஆண்மையை யுடையவனும் வாள்,Vaal - (சிவனிடத்துப் பெற்ற) வாளை யுடையவனுமான அரக்கன்,Arakkan - ராவணனுடைய தோளும் முடியும்,Tholum Mudiyum - தோள்களும், தலைகளும் தங்கை,Thangai - (அவனது) தங்கையாகிய சூர்ப்பணகையினது பொல்லாத மூக்கும்,Pollaadha Mookkum - கொடிய மூக்கும் போக்குவித்தான்,Pookkuvithaan - அறுப்புண்டு போம்படி பண்ணின எம்பெருமான் பொருந்தும்,Porundhum - பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடமான மலை,Malai - திருமலையாம். |
| 340 | பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 3 | தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை அக் கானெறியை மாற்றும் தண் மாலிருஞ் சோலையே-4-2-3 | எக் காலமும்,Ek Kaalamum - எப்போதும் சென்று,Senru - போய் சேவித்திருக்கும்,Sevithirukkum - திருவடி தொழா நின்றுள்ள அடியரை,Adiyarai - பாகவதர்களை அக் கான் நெறியை மாற்றும்,Ak Kaan Neriya Maatrum - அப்படிப்பட்ட (கொடுமையான) (பாவக்)காட்டு வழியில் நின்றும் விலக்கக் கடவதும் தண்,Than - தாப ஹரமுமான மாலிருஞ்சோலை,Maaliruncholai - மாலிருஞ்சோலை தக்கார் மிகார்களை,Thakkar Migargalai - (க்ருபா விஷயத்தில்) எம்பெருமான் ஒத்தவர்களும் (அவனிலும்) மேற்பட்டவர்களுமாயுள்ள மஹாத்மாக்களை சஞ்சலம் செய்யும்,Sanchalam Seyyum - அலைத்து வருந்தா நின்றுள்ள சலவரை,Salavarai - க்ருத்ரிமப் பயல்களை தெக்கு ஆம் நெறியே,Thekku Aam Neriye - தென் திசையிலுள்ள நரக மார்க்கத்திலே போக்கு விக்கும்,Pookku Vikkum - போகும் படி பண்ணா நின்ற செல்வன்,Selvan - ச்ரிய பதியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்குமிடமான) பொன் மலை,Pon Malai - அழகிய திருமலையாம் |
| 341 | பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 4 | ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர் தம் கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை வானாட்டில் நின்று மா மலர்க் கற்பகத் தொத்திழி தேனாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-4 | வான் நாட்டில்,Vaan Naatil - ஸ்வர்க்க லோகத்திலுள்ள மா மலர்,Maa Malar - பெரிய பூக்களை யுடைய கற்பகம்,Karpagam - கல்ப வ்ருக்ஷத்தினுடைய தொத்தில் நின்று,Thottil Ninru - பூங்கொத்தில் நின்றும் இழி,Izhi - பெருகா நின்ற தேன்,Then - தேனானது ஆறு பாயும்,Aaru Paayum - ஆறாய்க் கொண்டு ஓடா நிற்கிற தென்,Then - அழகை யுடைய திருமாலிருஞ்சோலை ஆன் ஆயர்,Aan Aayar - பசுக்களுக்குத் தலைவரான இடையர்கள் கூடி,Koodi - ஒன்று சேர்ந்து அமைத்து,Amaiththu - (இந்திரனுக்காக) ஏற்படுத்தின விழவை,Vizhavai - ஸமாராதனையை அமரர் தம் கோனார்க்கு ஒழிய,Amarar Tham Konarkku Ozhia - (அந்த) தேவேந்திரனுக்குச் சேர வொட்டாமல் தடுத்து கோவர்த்தனத்து,Govarthanathu - கோவர்த்தன மலைக்குச் (சேரும் படி) செய்தான் மலை,Seithaan Malai - செய்தருளின கண்ண பிரானுடைய திருமலையாம். |
| 342 | பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 5 | ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிருண்டவன் சென்றுறையும் மலை கரு வாரணம் தன் பிடி துறந்தோட கடல் வண்ணன் திரு வாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே–4-2-5 | ஒரு வாரணம்,Oru Varanam - (ஸ்ரீகஜேந்திராழ்வானாகிற ஒரு யானையினிடத்து பணி,Pani - கைங்கர்யத்தை கொண்டவன்,Kondavan - ஸ்வீகரித்தருளினவனும் கஞ்சன் தன்,Kanjan Than - கம்ஸனுடைய ஒரு வாரணம்,Oru Varanam - (குவலயாபீடமென்ற) ஒரு யானையினுடைய உயிர்,Uyir - உயிரை உண்டவன்,Undavan - முடித்தவனுமான கண்ணபிரான் சென்று,Senru - எழுந்தருளி உறையும்,Uraiyum - நித்ய வாஸம் பண்ணப் பெற்ற மலை,Malai - மலையாவது: கரு வாரணம்,Karu Varanam - கறுத்ததொரு யானை, தன் பிடி,Than Pidi - தன்னுடைய பேடை யானது துறந்து ஓட,Thurandhu Oda - (பிரணய ரோஷத்தினால்) தன்னை விட்டிட்டு ஓடப்புக, (அதுகண்ட அவ்வானையானது) கடல் வண்ணன் திரு ஆணை கூற,Athukanda Avvaanaiyanadhu Kadal Vannan Thiru Aanai Koora - “கடல் போன்ற நிறமுடைய அழகர் மேலாணை” என்று சொல்ல திரியும்,Thiriyum - (அப்பேடை யானது அவ்வாணைக்குக் கட்டுப்பட்டு அப்புறம் போக மாட்டாமல்) மீளா நின்றுள்ள தண்,Than - குளிர்ந்த மாலிருஞ்சோலை,Maaliruncholai - திருமாலிருஞ் சோலை மலையாம். |
| 343 | பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 6 | ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை சாவத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் மலை ஆவத்தன மென்று அமரர்களும் நன் முனிவரும் சேவித்திருக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-6 | ஏலிற்று,Elitru - (கம்ஸன்) ஏவின காரியங்களை செய்வான்,Seivaan - செய்து முடிப்பதற்காக ஏன்று எதிர்த்து வந்த,Enru Edhirththu Vanda - துணிந்து எதிரிட்டுவந்த மல்லரை,Mallarai - (சாணுரன் முதலிய) மல்லர்களை சாவ தகர்த்து,Saava Thagarththu - முடியும்படியாக நோக்கினவனும் சாந்து,Santhu - (கூனி யிட்ட) சாந்தை அணி,Ani - அணிந்து கொண்டுள்ள தோள்,Thol - தோள்களை யுடையவனும் சதுரன்,Sathuran - ஸமர்த்தனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற) மலை,Malai - மலையாவது: அமரர்களும்,Amarargalum - (பிரமன் முதலிய) தேவர்களும் நல் முனிவரும்,Nal Munivaram - (ஸனகர் முதலிய மஹர்ஷிகளும்) ஆவத்து தனம் என்று,Aavathu Thanam Endru - ஆபத்துக் காலத்துக்குத் துணையாயிருக்குமிடமென்று (நினைத்து) சேவித்து இருக்கும்,Seviththu Irukkum - ஸேவித்துக் கொண்டு இருக்குமிடமான தென் திருமாலிருஞ்சோலை |
| 344 | பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 7 | மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை யெழுவித்தவன் மலை கொன்னவில் கூர் வேற் கோன் நெடு மாறன் தென் கூடற்கோன் தென்னன் கொண்டாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-7 | மன்னர்,Mannar - (குரு தேசத்து) அரசர்கள் மறுக,Maruga - குடல் குழம்பும்படி மைத்துணன் மார்க்கு,Maiththunan Maarkku - மைத்துனன்மாரான பாண்டவர்களுக்கு (த் துணையாகி) ஒரு தேரின் மேல்,Oru Therin Mel - ஒரு தேரிலே முன் அங்கு நின்று,Mun Angu Ninru - முற் புறத்திலே நின்று கொண்டு மோழை யெழுவித்தவன் மலை,Mozhai Ezhuviththavan Malai - (நீர் நரம்பில் விட்ட வாருணாஸ்த்ரத்தின் வழியே) கீழுண்டான குமிழி யெறிந்து கிளரும்படி பண்ணின கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற) மலையாவது கொன்னவில்,Konnavil - கொலையையே தொழிலாக வுடைய கூர்,Koor - கூர்மை பொருந்திய வேல்,Vel - வேலை யுடையவனும் கோன்,Kon - ராஜ நீதியை வழுவற நடத்துமவனும் நெடு,Nedu - பெருமை பொருந்தியவனும் மாறன்,Maaran - ‘மாறன்‘ என்னும் பெயருடையவனும் தென்,Then - அழகிய கூடல்,Koodal - ‘நான் மாடக் கூடல்‘ என்ற பெயரை யுடைய மதுரைக்கு தென்னன்,Thennan - பாண்டி நாட்டுத் தலைவனுமான மலயத்வஸ ராஜனாலே கொண்டாடும்,Kondaadum - கொண்டாடப் பெற்ற தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை |
| 345 | பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 8 | குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங் கானிடைச் சிறு கால் நெறியே போக்கு விக்கும் செல்வன் பொன் மலை அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறு காலைப் பாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-8 | குறுகாத,Kurugaadha - திருமலையைக் கிட்டி அநுகூலாய் வாழலாமாயிருக்க, அது செய்யாமல் விலகுகின்ற மன்னரை,Mannarai - அரசர்களுடைய கூடு,Koodu - இருப்பிடத்தை கலக்கி,Kalakki - குலைத்து (அழித்து) வெம்,Vem - தீஷணமான கானிடை,Kaanidai - காட்டிலே சிறு கால் நெறியே ,Siru Kaal Neriye - சிறந்த வழியில் போக்குவிக்கும்,Pookkuvikkum - (அவ் வரசர்களை) ஓட்டுகின்ற செல்வன்,Selvan - திருமால் (எழுந்தருளியிருக்கிற) பொன் மலை,Pon Malai - சிறந்த மலையை யுடையவன் அறுகால்,Arukaal - ஆறு கால்களை யுடைய வரி வண்டுகள்,Vari Vandugal - அழகிய வண்டுகளானவை ஆயிரம் நாமம் சொல்லி,Aayiram Naamam Solli - (எம்பெருமானுடைய) ஸஹஸ்ர நாமங்களை ஆளாத்தி வைத்து சிறு காலைப் பாடும்,Siru Kaalaip Paadum - சிற்றஞ் சிறு காலையில் அடி பணியுமாற்றைக் கூறியவாறு பாடுமிடமான தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை |
| 346 | பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 9 | சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள் அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாயொப்பான் சிந்தும் புறவில் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-9 | பூதங்கள்,Boothangal - ஸ்ரீ வைஷ்ணவ பூதங்களானவை (தேக அபாஷணமே பண்ணிக் கொண்டு திரியும் நாஸ்திரிகர்களைக் கண்டால், அவர்களை) சிந்தப் புடைத்து,Sindhap Pudaiththu - (அவயங்கள்) சிதறும்படி அடித்துக் கொன்று செம் குருதி கொண்டு,Sem Kurudhi Kondu - (அதனால் அவர்களுடலினின்று புறப்படுகிற) சிவந்த ரத்தத்தைக் கொண்டு அந்தி,Andhi - அந்திப் பொழுதிலே பலி கொடுத்து,Pali Koduththu - (எம்பெருமானுக்கு) ஆராதந ரூபமாக ஸமர்ப்பித்து ஆபத்து தனம் செய்,Aapaththu Dhanam Sei - ஆபத் காலத்துக்குத் துணையாமிடமென்று ஸேவிக்குமிடமும் அப்பன்,Appan - ஸ்வாமி (எழுந்தருளியிருக்க மிடமுமான) மலை,Malai - மலையாவது, இந்திர கோபங்கள்,Indhira Gobangal - பட்டுப் பூச்சிகளானவை எம் பெருமான்,Em Perumaan - அனைவர்க்கும் ஸ்வாமியான அழகருடைய கனி வாய்,Kani Vaai - (கொவ்வைக்) கனி போன்ற திரு வதரத்திற்கு ஒப்பான்,Oppaan - போலியாக சிந்தும்,Sindhum - (கண்ட விடமெங்கும்) சிதறிப் பறக்கப் பெற்ற புறவில்,Puravil - தாழ்வரையை யுடைய தென் திருமாலிருஞ்சோலை.,Then Thirumaalirunjolai - தென் திருமாலிருஞ்சோலை |
| 347 | பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 10 | எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார் விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று மாலை வாய்த் தெட்டித் திளைக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-10 | எண்ணிறந்த,Ennirandha - எண் இறந்த கணக்கிட முடியாதவர்களும் பெரு,Peru - பெருமை பொருந்தியவர்களுமான தேவிமார்,Devimaar - தேவியானவர்கள் எட்டு திசையும்,Ettu Thisaiyum - எட்டுத் திக்குகளிலும் விட்டு விளங்க,Vittu Vilangha - மிகவும் பிரகாசிக்க (அவர்கள் நடுவே) வீற்றிருந்த,Veeetrirundha - பெருமை தோற்ற எழுந்தருளி யிருந்த விமலன் மலை,Vimalan Malai - நிர்மலான கண்ணபிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலையானது; பட்டி,Patti - வேண்டினபடி திரியும் மலையான பிடிகள்,Pidigal - யானைப் பேடைகளானவை மாலைவாய்,Maalai Vaai - இரவிலே பகடு,Pagadu - ஆண் யானை மேல் உரிஞ்சி சென்று,Urinji Sendru - ஸம்லேஷித்துப்போய் தெட்டித் திளைக்கும்,Thetti Thilaikkum - அந்த ஸம்லேஷித்துப் போய் முற்றிக் களியா நிற்கும் |
| 348 | பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 11 | மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலை தன்னை கருதி யுறைகின்ற கார்க் கடல் வண்ண னம்மான் தன்னை விரதம் கொண்டேத்தும் வில்லி புத்தூர் விட்டு சித்தன் சொல் கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே–4-2-11 | மருதம் பொழில்,Marudham Pozhil - மருதஞ் சோலைகளை அணி,Ani - அலங்காரமாக வுடைய மாலிருஞ்சோலை மலை தன்னை,Maalirunjolai Malai Thannai - திருமாலிருஞ்சோலை மலையை கருதி,Karudhi - விரும்பி உறைகின்ற,Uraiginra - (அதில்) எழுந்தருளி யிருக்கின்ற கார் கடல் வண்ணன்,Kaar Kadal Vannan - கருங்கடல் போன்ற நிறத்தை யுடைய அம்மான் தன்னை,Ammaan Thannai - அழகப் பிரனாரை விரதம் கொண்டு,Viradham Kondu - மங்கள விரதமாகக் கொண்டு ஏத்தும்,Eaththum - துதிக்குமாறும் வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவருமான விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார். சொல்,Sol - அருளிச் செய்த இவற்றை கருதி,Karudhi - விரும்பி உரைப்பவர்,Uraippavar - ஓதுமவர்கள் கண்ணன்,Kannan - கண்ண பிரானுடைய கழல் இணை,Kazhal Inai - திருவடிகளை காண்பர்கள்,Kaanbargal - ஸேவிக்கப் பெறுவார்கள். |
| 349 | பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 1 | உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந் தோடிச் சென்ற உருப்பனை யோட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை பொருப்பிடைக் கொன்றை நின்று முறி யாழியும் காசும் கொண்டு விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ் சோலையதே–4-3-1 | உருப்பிணி நங்கை தன்னை,Uruppini Nangai Thannai - ருக்மிணிப் பிராட்டியை மீட்பான்,Meetpaan - கண்ணனுடைய தேரில் நின்றும்) திருப்பிக் கொண்டு போவதற்காக தொடர்ந்து,Thodarnthu - (அத் தேரைப்) பின் தொடர்ந்து கொண்டு ஓடிச் சென்ற,Odi Senra - ஓடி வந்த உருப்பனை,Uruppanai - உருப்பன் என்றவனை ஓட்டிக் கொண்டு இட்டு,Ottik Kondu Ittu - ஓட்டிப் பிடித்துக் கொண்டு (தேர்த் தட்டிலே) இருத்தி உறைத்திட்ட,Uraiththitta - (அவனைப்) பரிபவப் படுத்தின உறைப்பன் மலை,Uraippan Malai - மிடுக்கை உடைய கண்ண பிரான் (எழுந்தருளு யிருக்கிற)மலையாவது கொன்றை,Kondrai - கொன்றை மரங்களானவை பொருப்பு இடை நின்று,Poruppu Idai Nindru - மலையிலே நின்று முறி,Muri - முறிந்து பொன்,Pon - பொன் மயமான ஆழியும்,Aazhi Yum - மோதிரங்கள் போன்ற பூ நரம்புகளையும் காசும்,Kaasum - (பொற்காசு)போன்ற பூ விதழ்களையும் கொண்டு,Kondu - வாரிக் கொண்டு விருப்பொடு வழங்கும்,Viruppodu Vazhanguum - ஆதரத்துடனே (பிறர்க்குக்)கொடுப்பவை போன்றிருக்கப் பெற்ற வியன்,Viyan - ஆச்சரியமான மாலிருஞ்சோலை அதே,Maalirunjolai Adhe - அந்தத் திருமாலிருஞ்சோலையே யாம். |
| 350 | பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 2 | கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை நஞ்சுமிழ் நாகமெழுந் தணவி நளிர் மா மதியை செஞ்சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ் சோலையதே–4-3-2 | கஞ்சனும்,Kanjanum - கம்ஸனும் காளியனும்,Kaaliyanum - காளிய நாகமும் களிறும்,Kalirum - (குவலயாபீடமென்ற) யானையும் மருதும்,Maruthum - இரட்டை மருத மரங்களும் எருதும்,Eruthum - (அரிஷ்டாஸுரனாகிற) ரிஷபமும் வஞ்சனையின்,Vanjanaiyin - (தந்தாமுடைய) வஞ்சனைகளாலே மடிய,Madiya - (தாம் தாம்) முடியும்படி வளர்ந்த,Valarntha - (திருவாய்ப்பாடியில்) வளர்ந்தருளினவனும் மணி வண்ணன் மலை,Mani Vannan Malai - நீல மணி போன்ற நிறமுடையவனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கும்) மலையாவது: நஞ்சு,Nanju - விஷத்தை உமிழ்,Umizh - உமிழா நின்றுள்ள காகம்,Kaagam - (மலைப்) பாம்பானவை நளிர்,Nalir - குளிர்ந்த மா மதியை,Maa Mathiyai - (மலைச் சிகரத்தின் மேல் தவழுகின்ற) பூர்ணச்சந்திரனை,Poornachandiranai - (தமக்கு உணவாக நினைத்து) எழுந்து,Ezhnthu - (படமெடுத்துக்) கிளர்ந்து அணலி,Anali - கிட்டி செம் சுடர்,Sem Sudar - சிவந்த தேஜஸ்ஸை யுடைய நா,Naa - (தனது) நாக்கினால் அளைக்கும்,Alaikkum - (சந்திரனை) அளையா நிற்குமிடமான திருமாலிருஞ்சோலை அதே.,Thirumaalirunjolai Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |
| 351 | பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 3 | மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்தெறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் மலை புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே–4-3-3 | மன்னு,Mannu - (தன்னை அழிவற்றவனாக நினைத்துப்) பொருந்திக் கிடந்த நரகன் தன்னை ,Naragan Thannai - நரகாஸுரனை சூழ்போகி,Soolpoghi - கொல்லும் வகைகளை ஆராய்ந்து வளைத்து,Valaiththu - (அவனைத் தப்பிப்போக முடியாதபடி)வளைத்துக் கொண்டு எறிந்து,Erinthu - (திரு வாழியாலே) நிரஸித்து கன்னி மகளிர் தம்மை,Kanni Magalir Thammai - (அவனால் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருந்த பதினாறாயிரத் தொரு நூறு) கன்னிகளையும் கவர்ந்த,Kavarntha - தான் கொள்ளை கொண்ட கடல் வண்ணன்,Kadal Vannan - கடல் போன்ற நிறமுடையவனான கண்ண பிரான் (எழுந்தருளியிருக்கிற) மலை,Malai - மலையாவது: புன்னை,Punnai - புன்னை மரங்களும் செந்தியொடு,Sendhiyodu - சுர புன்னை மரங்களும் புனம் வேங்கையும்,Punam Vengaiyum - புனத்திலுண்டாகிற வேங்கை மரங்களும் கோங்கும்,Kongum - கோங்கு மரங்களும் நின்று,Ninru - (புஷ்பங்களால் நிறைந்த ஒழுங்கு பட) நின்று பொன்னரி மலைகள் சூழ்,Ponnari Malaigal Sool - (திருமலைக்குப்) பொன்னரி மாலைகள் சுற்றினாற் போலே யிருக்கப் பெற்ற பொழில்,Pozhil - சோலைகளை யுடைய மாலிருஞ்சோலை அதே,Maalirunjolai Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |
| 352 | பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 4 | மாவலி தன்னுடைய மகன் வாணன் மகளிருந்த காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப் பாவொலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலையதே–4-3-4 | மா வலி தன்னுடைய,Maa Vali Thannudaiya - மஹாபலியினுடைய மகன் வாணன்,Mahan Vaanan - புத்திரனாகிய பாணாஸுரனுடைய மகள் இருந்த,Magal Irundha - மகளான உஷை இருந்து காவலை,Kaavalai - சிறைக் கூடத்தை கட்டு அழித்த,Kattu Azhitha - அரனோடே அழித்தருளினவனும் தனி காளை,Thani Kaalai - ஒப்பற்ற யுவாவுமான கண்ணபிரான் கருதும் மலை,Karudhum Malai - விரும்புகிற மலையாவது; கோவலர்,Kovalar - இடையர்களுக்கும் கோவிந்தனை,Govindhanai - கோவிந்தாபிஷேகம் பண்ணப் பெற்ற கண்ணபிரான் விஷயமாக குற மாதர்கள்,Kura Maathargal - குறத்திகளானவர்கள் குறிஞ்சி மலர்,Kurinji Malar - குறிஞ்சி ராகத்தோடு கூடின பா,Paa - பாட்டுக்களை ஒலி பாடி,Oli Paadi - இசை பெறப் பாடிக் கொண்டு (அப் பாட்டுக்குத் தகுதியான) நடம் பயில்,Nadam Payil - கூத்தாடுமிடமான மாலிருஞ்சோலை அதே |
| 353 | பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 5 | பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசு பாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் அலங் காரன் மலை குலமலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை நிலமலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-5 | பலபல நாழம்,Palapala Naazham - பலபல குற்றங்களை சொல்லி,Solli - சொல்லி பழித்த,Pazhitha - தூஷித்த சிசு பாலன் தன்னை,Sisu Balan Thannai - சிசுபாலனுடைய அலவலைமை,Alavalaimai - அற்பத் தனத்தை தவிர்த்த,Thavirtha - (சாம தசையில்) போக்கி யருளின அழகன்,Azhagan - அழகை யுடையவனும் அலங்காரன்,Alangaaran - அலங்காரத்தை யுடையவனுமான கண்ண பிரான் (எழுந்தருளி மலை,Malai - மலையானது: குலம் மலை,Kulam Malai - தொண்டர் குலத்துக்குத் தலையான மலையும் கோலம் மலை,Kolam Malai - அழகை யுடைய மலையும் குளிர் மா மலை,Kulir Maa Malai - குளிர்ந்த பெரிய மலைகள் கொற்றம் மலை,Kotram Malai - ஜயத்தை யுடைய மலையும் நிலம் மலை,Nilam Malai - (நல்ல மரங்கள் முளைக்கும் பாங்கான) நிலத்தை யுடைய நீண்ட மலை,Neenda Malai - நீட்சியை யுடைய மலையுமான திருமாலிருஞ்சோலை அதே.,Thirumaaliruncholai Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |
| 354 | பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 6 | பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை பாண்டகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருக தோண்ட லுடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே–4-3-6 | பாண்டவர் தம்முடைய,Paandavar Thammudaiya - பஞ்சபாண்டவர்களுடைய (மனைவியாகிய) பாஞ்சாலி,Paanchaali - த்ரௌபதியினுடைய மறுக்கமெல்லாம்,Marukkam Ellam - மனக் குழப்பத்தை யெல்லாம் ஆண்டு,Aandu - (தன்) திருவுள்ளத்திற்கொண்டு, அங்கு,Angu - (அவள் பரிபவப்பட்ட) அப்போது (அத் துன்பங்களை யெல்லாம்) நூற்றுவர் தம்,Nootruvar Tham - (துரியோதநாதிகள்) தூற்றுவருடைய பெண்டிர் மேல்,Pendir Mel - மனைவியர்களின் மேல் வைத்த,Vaitha - சுமத்தின அப்பன்,Appan - ஸ்வாமியான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலை,Malai - மலையானது : பாண் தரு,Paan Tharu - பாட்டுக்குத் தகுதியான (ஜன்மத்தை யுடைய) வண்டு இனங்கள்,Vandu Inangal - வண்டு திரளானவை பண்கள்,Pangal - ராகங்களை பாடி,Paadi - பாடிக் கொண்டு மது,Madu - தேனை பருக,Paruga - குடிப்பதற்குப் பாங்காக (ச் சோலைகள் வாடாமல் வளர) தோண்டல்,Thondal - ஊற்றுக்களை யுடைய மலையாகிய தொல்லை மாலிருஞ் சோலை அதே,Thollai Maaliruncholai Adhe - அநாதியான அந்த மாலிருஞ் சோலையேயாம். |
| 355 | பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 7 | கனங் குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழு வேற்றுவித்த எழில் தோள் எம்பிரான் மலை கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலமெல்லாம் இனம் குழு வாடும் மலை எழில் மாலிருஞ் சோலையதே–4-3-7 | கனம்,Kanam - ஸ்வர்ண மயமான குழையாள் பொருட்டா,Kuzhaiyaal Porutaa - காதணியை யுடையாளான கணை,Kanai - அம்புகளை பாரித்து,Paariththu - பிரயோகித்து அரக்கர்கள் இனம்,Arakkargal Inam - ராஷஸ குலத்தை கழு ஏற்றுவித்து,Kazhuertruviththu - குலத்தின் மேல் ஏற்றின வனும் எழில் தோள்?,Ezil Thol - அழகிய தோள்களை யுடையவனுமான இராமன்,Raaman - இராமபிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலை,Malai - மலையான கனம்,Kanam - பொன்களை கொழி,Kozhi - கொழித்துக் கொண்டு வருகின்ற தெள் அருவி,TheL Aruvi - தெளிந்த அருவிகளிலே இனக்குழு,Inakuzhu - அறிஞர்கள் எல்லாம் அகல் ஞாலமெல்லாம்,Agal Gnaalam Ellam - விசாலமான பூமியிலுள்ளா ரெல்லாரும் வந்து சூழ்ந்த,Vandhu Soozhntha - வந்து சூழ்ந்து கொண்டு ஆடும்,Aadum - நீராடப் பெற்ற எழில்,Ezil - அழகிய மாலிருஞ் சோலையிலே அதே,Maaliruncholaiyile Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |
| 356 | பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 8 | எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த அரையனமரும் மலை அமரரொடு கோனும் சென்று திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-8 | எரி,Eri - நெருப்பை சிதறும்,Sitharum - சொரியா நின்றுள்ள சரத்தால்,Saraththaal - அம்புகளினால் இலங்கையினை,Ilangkaiyinai - இலங்கைக் காரனான ராவணனை தன்னுடைய,Thannudaiya - தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து,Vari Silai Vaa yil Peydhu - நீண்ட வில்லின் வாயிலே புகுரச் செய்து காய் நோட்டம்,Kaai Nottam - (அவனுடைய) வாக்கின் அநீதியை தவிர்த்து,Thavirthu - குலைத்து உகந்த,Ugantha - (தான் வெற்றி பெற்றமையாலே) மகிழ்ந்தருளின அரையன்,Araiyan - ஸ்வாமியான இராமபிரான் அமரும்,Amarum - எழுந்தருளி யிருக்கிற மலை,Malai - மலையாவது: அமரரொடு,Amararodu - தேவர்களோடு கூட கோனும்,Konum - (அவர்களுக்கு) தலைவனான இந்திரனும் திரி,Thiri - (இரவும் பகலும்) திரியா நின்ற சுடர்,Sudar - சந்த்ர ஸூர்யர்களும் சென்று,Sendru - வந்து சூழூம்,Soozhoom - பிரதக்ஷிணம் பண்ணப் பெற்ற திருமாலிருஞ்சோலை மலை அதே,Thirumaaliruncholai Malai Adhe - திருமாலிருஞ்சோலை மலை அதே |
| 357 | பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 9 | கோட்டு மண் கொண்டிடந்து குடங்கையில் மண் கொண்டளந்து மீட்டு மதுண்டு மிழ்ந்து விளையாடு விமலன் மலை ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை யென்று ஓட்டரும் தண் சிலம்பாறுடை மாலிருஞ் சோலையதே–4-3-9 | மண்,Mann - (ஹிரண்யாக்ஷனாலே பாயாகச் சுருட்டிக் கொண்டு போகப்பட்ட) பூமியை இடந்து,Edandhu - (வராஹர மாய் அவதரித்து) (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு லிடுவித்தெடுத்து கோடு,Kodu - (தனது) திரு வயிற்றிலே கொண்டு,Kondu - என்று கொண்டும், மண்,Mann - (மஹாபலியினால் தன் வசமாக்கிக் கொள்ளப்பட்ட) பூமியை குடங் கையில்,Kudang Kaiyil - (வாமந ரூபியாய் அவதரித்து) அகங்கையில் கொண்டு,Kondu - (நீரேற்று) வாங்கிக் கொண்டு அளந்து,Alandhu - அளந்தருளியும் மீட்டும்,Meettum - மறுபடியும் (அவாந்தர ப்ரளயத்திலே அந்தப் பூமி அழியப் புக.) அது,Adhu - அப் பூமியை உண்டு,Undu - திரு வயிற்றில் வைத்து நோக்கி உமிழ்ந்து,Umizhndhu - (பிம்பு பிரளங் கழித்தவாறே) (அதனை) வெளிப் படுத்தியும் விளையாடும்,Vilaiyaadum - (இப்படிப்பட்ட ஆச்சரியச் செயல்களாலே) விளையாடா நின்றுள்ள விமலன்,Vimalan - நிர்மல ஸ்வரூபியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற) மலை,Malai - மலையாவது; ஈட்டிய,Eettiya - (பெருகி வரும் போது) வாரிக் கொண்டு வரப் பெற்ற பல் பொருள்கள்,Pal Porulgal - பல தரப் பட்ட பொன், முத்து, அகில் முதலிய பொருள்கள் எம் பிரானுக்கு,Em Piraanukku - எம் பெருமானுக்கு அடியுரை என்று,Adiyurai Endru - ஸ்ரீபாத காணிக்கை யென்று ஒட்டரும்,Ottarum - (பெருகி) ஒடி வாரா நின்றுள்ள தண்,Than - குளிர்ந்த சிலம்பாறு உடை,Silambaaru Udai - நூபுர கங்கையை யுடைய மாலிருஞ் சோலை அதே,Maaliruncholai Adhe - திருமாலிருஞ்சோலை மலை அதே |
| 358 | பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 10 | ஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னிலக ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை ஆயிர மாறுகளும் சுனைகள் பல வாயிரமும் ஆயிரம் பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே-4-3-10 | ஆயிரம்,Aayiram - பலவாயிருந்துள்ள தோள்,Thol - திருத் தோள்களை பரப்பு,Parappu - பரப்பிக் கொண்டும். முடி ஆயிரம்,Mudi Aayiram - ஆயிரந் திருமுடிகளும் மின் இசை,Min Isai - (திருவபிஷேகத்திலுள்ள சத்தங்களினால்) மிகவும் விளங்கும்படியாகவும் பை,Pai - பரந்த ஆயிரம் தலைய,Aayiram Thalaiya - ஆயிரந்தலைகளை யுடைய அனந்தன்,Ananthan - திருவந்தாழ்வான் மீது சயனன்,Sayanan - பள்ளி கொண்டருளுமவனான எம்பெருமான் ஆளும்,Aalum - ஆளுகின்ற மலை,Malai - மலையாவது, ஆயிரம் ஆறுகளும்,Aayiram Aarugalum - பல நதிகளையும் பல ஆயிரம் சுனைகளும்,Pala Aayiram Sunaigalum - அனேகமாயிரந் தடாகங்களையும் ஆயிரம் பொழிலும் உடை,Aayiram Pozhilum Udai - பல பூஞ்சோலைகளையுமுடைய |
| 359 | பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 11 | மாலிருஞ் சோலை யென்னும் மலையை யுடைய மலையை நாலிரு மூர்த்தி தன்னை நால் வேதக் கடலமுதை மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளில் மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே–4-3-11 | மாலிருஞ்சோலை என்னும்,Maaliruncholai Ennum - திருமாலிருஞ்சோலை என்கிற மலையை,Malaiyai - திருமலையை உடைய,Udaiya - (தனக்கு இருப்பிடமாக) உடையவனும் மலையை,Malaiyai - ஒரு மலை சாய்ந்தாற்போன்றுள்ளவனும் கால் இரு மூர்த்தி தன்னை,Kaal Iru Moorththi Thannai - திருவஷ்டாக்ஷர ஸ்வரூபி யானவனும் நால் வேதம் கடல் அமுதை,Naal Vedham Kadal Amudhai - நான்கு வேதங்களாகிய கடலில் ஸாரமான அம்ருதம் போன்றவனும் மேல் இருங் கற்பகத்தை,Mel Irung Karppagaththai - (ஸ்வர்க்க லோகத்திலுள்ள கல்ப வ்ருக்ஷத் தினம்) மேற்பட்டதும் பெரிதுமான கல்பங்ருஷமாயிருப்பவனும் வேதாந்தம்,Vedhaantham - வேதாந்தங்களிற் கூறப்படுகின்ற விழுப்பொருளில்,Vizhupporulil - சிறந்த அர்த்தங்களுள் மேல் இருந்த,Mel Irundha - மேற்பட்ட அர்த்தமாயிருப்பவனும் விளக்கை,Vilakkai - தனக்குத் தானே விளங்குபவனுமான எம்பெருமானைக் குறித்து விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார் விரித்தன,Viriththana - அருளிச் செய்தவை இப் பாசுரங்கள். |
| 360 | பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 1 | நாவ காரியம் சொல்லிலாதவர் நாள் தொறும் விருந் தோம்புவார் தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர் மூவர் காரியமும் திருத்தும் முதல்வனைச் சிந்தியாத அப் பாவ காரிகளைப் படைத்தவன் எங்ஙனம் படைத்தான் கொலோ–4-4-1 | நாவ காரியம்,Naava Kaariyam - நாவினாற் சொல்ல வொண்ணாத வற்றை சொல்லில்லாதவர்,Sollillaadhavar - (ஒருநாளும்) சொல்லி யறியாத ஸ்ரீவைஷ்ணவர்கள் நாள் தோறும்,Naal Thorum - நாடோறும் விருந்து ஓம்புவார்,Virundhu Ombuvaar - (ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விருந்தளித்துக் கொண்டும் தேவர் காரியம் செய்து,Thevar Kaariyam Seidhu - பகவதாராதநம் பண்ணிக் கொண்டும் வேதம்,Vedham - வேதங்களை பயின்று,Payindru - ஓதிக் கொண்டும் வாழ்,Vaal - வாழுமிடாமன திருக்கோட்டியூர்,Thirukkottiyur - திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்,) மூவர்,Moovar - பிரமன், ருத்ரன், இந்திரன் என்ற மூவருடைய காரியமும்,Kaariyamum - காரியங்களையும் திருத்தும், Thiruththum - செய்து தலைக் கட்டுமவனும். முதல்வனை,Mudhalvanai - (எல்லார்க்கும்) தலைவனுமான எம்பெருமானை சிந்தியாத,Sindhiyaadha - நெஞ்சாலும் நினையாத அ பாவ காரிகளை,A Paava Kaariigalai - அப்படிப்பட்ட (மிகவுங்கொடிய) பாவஞ்செய்த பிராணிகளை படைத்தவன்,Padaiththavan - ஸ்ருஷ்டித்தவன் எங்ஙனம்,Engnganam - எதுக்காக படைத்தான் கொல் ஓ,Padaiththaan Kol O - ஸ்ருஷ்டித்தானோ! (அறியோம்) |
| 361 | பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 2 | குற்ற மின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கு அனு கூலராய் செற்ற மொன்று மிலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் துற்றி யேழுல குண்ட தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதவர் பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு நோய் செய்வான் பிறந் தார்களே-4-4-2 | குற்றம் இன்றி,Kutram Inri - ஒரு வகையான குற்றமுமில்லாமல் குணம்,Gunam - (சமம், தமம் முதலிய குணங்களை) பெருக்கி,Perukki - வளரச் செய்து கொண்டு குருக்களுக்கு,Gurugukkalukku - (தம் தம்) ஆசாரியர்களுக்கு அனுகூலர் ஆய்,Anukoolar Aay - (கைங்கரியம் பண்ணுவதற்குப்) பாங்காயிருப்பவர்களும் செற்றம் ஒன்றும் இலாத,Setram Ondrum Ilaadha - பொறாமை யென்பது சிறிதுமில்லாதவர்களும் வண் கையினார்கள்,Van Kaiyinaargal - கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்,Vazh - வாழுமிடமான திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்) ஏழ் உலகு,Ezhu Ulagu - ஸப்த லோகங்களையும் துற்றி,Thuttri - ஒரு கபளமாகத் திரட்டி உண்ட,Unda - அமுது செய்தருளினவனும் தூ,Thoo - பழிப்பற்ற மணி வண்ணந்தன்னை,Mani - நீல மணி போன்ற நிறத்தை யுடையவனுமான எம்பெருமானை தொழாதவர்,Thozhaadhavar - வணங்காதவர் பெற்ற ,Petra - (தங்களைப்) பெற்ற தாயர்,Thaayar - தாய்மாருமடய வயிற்றினை,Vayittrinai - வயிற்றை பெரு நோய் செய்வான்,Peru Noi Seivaan - மிகவும் கொடுமைப் படுத்தமைக்காக பிறந்தார்கள்,Pirandhaargal - பிறந்தார் |
| 362 | பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 3 | வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழலெழும் திண்ணை சூழ் திருக் கோட்டியூர்த் திரு மாலவன் திரு நாமங்கள் எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ணகிலாது போய் உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக் கவளம் உந்து கின்றார்களே–4-4-3 | நல் வண்ணம்,Nal Vannam - நல்ல நிறத்தை யுடைய மணியும்,Maniyum - ரத்நங்களையும் மரகதமும்,Maragathamum - மரகதகங்களையும் அழுத்தி,Azhuthi - (ஒழுங்கு பட) இழைத்ததனால் நிழல் எழும்,Nizhal Ezhum - ஒளி விடா நின்றுள்ள திண்ணை,Thinnai - திண்ணைகளாலே சூழ்,Sool - சூழப் பெற்ற திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருக்கிற) திருமால் அவன்,Thirumaal Avan - திருமாமகன் கொழுநனுடைய திரு நாமங்கள்,Thiru Naamangal - திரு நாமங்களை எண்ண,Enna - (ஒன்று, இரண்டு என்று எண்ணுகைக்கா கண்ட,Kanda - படைக்கப் பட்ட விரல்களால்,Viralgalal - விரல்களாலே (அந்தத் திருநாமங்களை) இறை பொழுதும்,Irai Pozhuthum - க்ஷண காலமும் எண்ண இலாது,Enna Ilaadhu - எண்ண மாட்டாமல் போய்,Poi - புறம்பே சென்று உண்ணக் கண்ட,Unnak Kanda - (சரீர போஷணார்த்தமாக) உண்ணா நின்ற தம்,Tham - தங்களுடைய நம் ஊத்தை வாய்க்கு,Nam Ooththai Vaikku - அசுத்தமான வாயிலே கவளம்,Kavalam - சோற்றுத் திரள்களை உந்துகின்றார்களே,Undhugindraargale - (அவ் விரல்களினால்) தள்ளா நின்றார்களே! (இதென்ன கொடுமை.!) |
| 363 | பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 4 | உரக மெல்லணையான் கையில் உறை சங்கம் போல் மட வன்னங்கள் நிரை கணம் பரந் தேறும் செங்கமல வயல் திருக் கோட்டியூர் நரக நாசனை நாவிற் கொண்டழையாத மானிட சாதியர் பருகு நீரும் உடுக்குங்கூறையும் பாவம் செய்தனதாங் கொலோ–4-4-4 | உரகம் மெல்,Uragam Mel - திருவனந்தாழ்வானை ஸுகுமாரமான அணையான்,Anaiyaan - படுக்கையாக வுடைய எம்பெருமானது கையில் உறை,Kaiyil Urai - திருக் கையில் உள்ள சங்கம் போல்,Sangam Pol - ஸ்ரீ பாஞ்ச ஜந்யம் போல் (வெளுத்த) மட அன்னங்கள்,Mada Annangal - மடப்பம் பொருந்திய ஹம்ஸங்களானவை ஏறும்,Erum - ஏறி யிருக்கப் பெற்ற செம் கமலம்,Sem Kamalam - செந்தாமரை மலர்களை யுடைய திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்) நரகம் நாசனை,Naragam Naasanai - (தன்னடியார்க்கு) நரக ப்ரவேசத்தை ஒழித்தருளுமவனமான எம்பெருமானை நாவில் கொண்டு,Naavil Kondu - நாவினால் மானிட சாதியர்,Maanida Saathiyar - மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்கள் பருகும்,Parugum - குடிக்கின்ற நீரும்,Neerum - தண்ணீரும் உடுக்கும்,Udukkum - உடுத்துக் கொள்ளுகிற கூறையும்,Kooraiyum - வஸ்திரமும் பாவம் செய்தன தான் கொல் ஓ,Paavam Seithana Thaan Kol O - பாவஞ்செய்தனவோ தான்!: |
| 364 | பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 5 | ஆமையின் முதுகத்திடைக் குதி கொண்டு தூ மலர் சாடிப் போய் தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக் கோட்டியூர் நேமி சேர் தடங் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை பூமி பாரங்க ளுண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே–4-4-5 | இள,Ila - இளமை பொருந்திய வாளைகள்,Vaalagal - ‘வாளை’ என்னும் மீன்கள் ஆமையின்,Aamaiyin - ஆமைகளினுடைய முதுகத்திடை,Mudugaththidai - முதுகின் மேல் குதி கொண்டு,Kudhi Kondu - குதித்துக் கொண்டும் தூ மலர்,Thoo Malar - நல்ல புஷ்பங்களை சாடிப் போய்,Saadi Poi - உழக்கிக் கொண்டும் தீமை செய்து,Theemai Seidhu - (க்ஷுத்ர ஜந்துக்களைக் கலக்கி ஒட்டுகையாகிற தீம்புகளைச் செய்து கொண்டும் விளையாடு,Vilaiyaadu - விளையாடுமிடமான நீர்,Neer - நீரை யுடைய திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக்கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்) நேமி,Nemi - திருவாழி யாழ்வானோடு சேர்,Ser - சேர்ந்திருக்கிற தட,Thada - பெரிய கையினானை,Kaiyinaanai - திருக் கையை யுடையனுமான எம்பெருமானை நினைப்பு இலா,Ninaippu Ilaa - (ஒரு காலும்) நினையாத வலி நெஞ்சு உடை,Vali Nenju Udai - கடினமான நெஞ்சை உடையவர்களும் பூமி பாரங்கள்,Bhoomi Paarangal - பூமிக்குச் சுமையாயிருப்பவர்களுமான பாவிகள் உண்ணும்,Unnum - உண்கிற சோற்றினை,Sotrinai - சோற்றை வாங்கி,Vaangi - பிடுங்கி விட்டு, (எறிந்து) புல்லை,Pullai - (அறிவற்ற பசுக்களுக்கு உண்வான) புல்லைக் கொண்டு திணிமின்,Thinimin - (அவர்கள் வயிற்றைத்) துற்று விடுங்கள். |
| 365 | பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 6 | பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால் ஏதமொன்று மிலாத வண் கையினார்கள் வாழ்திருக் கோட்டியூர் நாதனை நரசிங்கனை நவின் றேத்துவார் களுழக்கிய பாத தூளி படுதலால் இவ் வுலகம் பாக்கியம் செய்ததே–4-4-6 | பூதம் ஐந்தொடு,Poodham Ainthodu - பஞ்ச பூதமாகிய சரீரத்தினாலும் ஐந்து வேள்வி,Aindhu Velvi - பஞ்ச மஹா யஜ்ஞங்களினாலும் ஐந்து புலன்கள்,Aindhu Pulangal - (சப்தம் முதலிய) ஐந்து விஷயங்களினாலும் (ஐந்து) பொறிகளால்,Aindhu Porigalal - பஞ்சேந்திரியங்களினாலும் (ஸம்பவிக்கக்கூடிய) ஏதம் ஒன்றும் இலாத,Aedham Ondrum Ilaadha - குற்றமொன்றுமில்லாதவர்களும் வண் கையினார்கள்,Van Kaiyinaargal - உதாரணமான கைகளை யுடையவர்கள் வாழ்,Vaazh - வாழ்விடமான திருக்கோட்டியூர்,Thirukkottiyoor - திருக்கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்) நாதனை,Naadhanai - (எமக்கு) ஸ்வாமியும் நரசிங்கனை,Narasinganai - நரஸிம்ஹ ஸ்வரூபியுமான எம்பெருமானை நவின்று,Navindru - அநுஸந்தித்து ஏத்துவார்கள்,Eaithuvaargal - துதிக்குமவரான பாகவதர்கள் உழக்கிய பாதத் துளி,Uzhakkiya Paadhath Thuli - திருவடிகளினால் மிதித்தருளின தூளினுடைய படுதலால்,Paduthalaal - ஸம்பந்தத்தினால் இ உலகம்,I Ulagam - இந்த லோகமானது பாக்கியம் செய்தது,Paakiyam Seithathu - பாக்யம் பண்ணினதாகக் கொள்ளப்படும். |
| 366 | பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 7 | குருந்த மொன்றொசித் தானொடும் சென்று கூடி யாடி விழாச் செய்து திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர் கருந்தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள் இருந்த வூரிலிருக்கும் மானிடர் எத் தவங்கள் செய்தார் கொலோ–4-4-7 | திருந்து,Thirundhu - (எம்பெருமான் ஸ்வரூபங்களைப் பிழையறக் கூறுகையாகிற) திருத்தத்தை யுடைய நால் மறையோர்,Naal Maraiyor - நான்கு வேதங்களையுமோதின ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒன்று குருத்தம்,Ondru Kuruththam - ஒரு குருத்த மரத்தை ஒசித்தானோடும்,Osiththaanoodum - முறித்தருளின கண்ண பிரானை சென்று கூடி,Senru Koodi - சென்று சேர்ந்து ஆடி,Aadi - (அவனுடைய குணங்களிலே) அவகாஹித்து விழாச் செய்து,Vizha Seithu - (விக்ரஹ ஸேவையாகிற) உத்ஸவத்தை அநுபவித்துக் கொண்டு இரா பகல்,Eraa Pagal - இரவும் பகலும் ஏந்தி,Eaendhi - மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு வாழ்,Vaazh - வாழுமிடமான திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்,) கருந்தட,Karundhata - கறுத்துப் பெருத்த முகில்,Mugil - மேகம் போன்ற வண்ணனை,Vannanai - நிறத்தை யுடையனுமான எம்பெருமானைக் குறித்து கடைக் கொண்டு,Kadai Kondu - நைச்சியாநுஸந்தானத்துடன் கை தொழும்,Kai Thozhum - அஞ்ஜலி பண்ணா நின்றுள்ள பக்தர்கள்,Bakthargal - பக்தியை யுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் இருந்த,Erundha - எழுந்தருளி யிருக்குமிடமான ஊரில்,Ooril - ஊரிலே இருக்கும்,Erukkum - நித்ய வாஸம் பண்ணுகிற மானிடர்,Maanidar - மநுஷ்யர்கள் ஏதலங்கள்,Eaethalangal - எப்படிப்பட்ட பாவங்களை செய்தார் கொல் ஓ,Seithaar Kol O - அனுஷ்டித்தார்களோ! (அறியேன்.) |
| 367 | பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 8 | நளிர்ந்த சீலன் நயாசல னபிமான துங்கனை நாடொறும் தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட செங்கண் மால் திருக்கோட்டியூர் குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள் விளைந்த்த தானியமு மிராக்கர் மீது கொள்ள கிலார்களே–4-4-8 | நளிர்ந்த சீலன்,Nalirndha Seelan - குளிர்ந்த ஸ்வபாவத்தை யுடையவரும் நயாசலன்,Nayaasalan - நீதிநெறி தவறாதவரும் அபிமான துங்கனை,Abimaana Thunganai - இடைவிடாது எம்பெருமானை அநுபவிக்கையாலுண்டான) அஹங்காரத்தால் உயர்ந்தவரும் நாள் தொறும் தெளிந்த செல்வனை,Naal Thorum Thelintha Selvanai - நாடோறும் தெளிந்து வரா நின்றுள்ள கைங்கர்ய ஸம்பத்தை யுடையவருமான செல்வ நம்பியை சேவகம் கொண்ட,Sevagam Konda - அடிமை கொண்டவனாய் செம் கண் மால்,Sem Kan Maal - செந் தாமரைபோன்ற கண்களையுடையவனாய் (அடியார் பக்கல்) மோஹமுடையனாய் திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் குளிர்ந்து உறைகின்ற,Kulirndhu Uraiginra - திருவுள்ளமுகந்து எழும் தருளி யிருப்பவனான எம்பெருமானுடைய கோவிந்தன் குணம் படுவார்,Govindan Gunam Paduvaar - கல்யாண குணங்களைப் பாடுமவரான ஸ்ரீவைஷ்ணவர்கள் உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும்,Ulla Naattinul Vilaindha Thaniyamum - எழுந்தருளி யிருக்கிற நாட்டிலே விளைந்த தாந்யத்தையும் இராக்கதர்,Raakkathar - ராக்ஷஸர்கள் மீது கொள்ள கிலார்கள்,Meedhu Kolla Kilaargal - அபஹரிக்க மாட்டார்கள் |
| 368 | பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 9 | கொம்பினார் பொழில் வாய் குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர் செம்பொனார் மதிள் சூழ் செழுங்கழனி யுடைத் திருக் கோட்டியூர் நம்பனை நர சிங்கனை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால் எம்பிரான் தன் சின்னங்கள் இவரிவரென்று ஆசைகள் தீர்வனே–4-4-9 | கொம்பின் ஆர்,Kombin Aar - கிளைகளாலே நெருங்கின பொழில் வாய்,Pozhil Vaai - சோலைகளிலே குயில் இனம்,Kuyil Inam - குயில்களின் திரள் கோவிந்தன்,Govindan - கண்ண பிரானுடைய, குணம்,Gunam - சீர்மைகளை பாடு,Paadu - பாடா நிற்கப் பெற்றதும், சீர்,Seer - சிறந்த செம் பொன் ஆர்,Sem Pon Aar - செம் பொன்னாலே சமைந்த மதிள்,Mathil - மதிள்களாலே சூழ்,Soozh - சூழப் பட்டதும் செழு,Sezhu - செழுமை தங்கிய கழனி உடை,Kazhani Udai - கழனிகளை யுடையதுமான திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்). நம்பனை,Nambanai - (ரக்ஷகன் என்று) விச்வஸிக்கக் கூடியவனும் நரசிங்கனை,Narasinganai - நரஹிம்ஹ ரூபியுமான ஸர்வேச்வரனை நலின்று,Nalindru - அநுஸந்தித்து ஏத்துவரர்களை,Eaithtuvarargalai - துதிக்கும் பாகவதர்களை கண்டக்கால்,Kandakkaal - (யான்) ஸேவிக்கப் பெறுவேனாகில் இவர் இவர்,Ivar Ivar - இந்த இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பிரான் தன்,Empiraan Than - எம்பெருமானுடைய சின்னங்கள்,Sinnangal - அடையாளமாயிருப்பவர்கள்” என்று,Endru - என்று அநுஸந்தித்து ஆசைகள்,Aasaigal - நெடுநாளாய் பிறந்துள்ள ஆசைகளை தீர்வன்,Theervan - தலைக் கட்டிக் கொள்வேன். |
| 369 | பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 10 | காசின் வாய்க் கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று பேசுவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே–4-4-10 | காசின் வாய்,Kaasin Vaai - ஒருகாசுக்கு கரம்,Karam - ஒரு பிடி நெல் விற்கிலும்,Virkilum - விற்கும்படியான துர்ப்பிக் ஷகாலத்திலும் சோறு இட்டு,Sooru Ittu - (அதிதிகளுக்கு) அன்னமளித்து தேச வார்த்தை,Desa Vaarthai - புகழ்ச்சியான வார்த்தைகளை படைக்கும்,Padaikkum - ஸம்பாதித்துக் கொள்ளுமவரும் வண் மங்கையினார்கள்,Van Mangaiyinaargal - உதாரமான கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்,Vaazh - வாழுமிடமான திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற) கேசவா,Kesavaa - கேசவனே! புருடோத்தமா,Purudhooththamaa - புருஷோத்தமனே! காவாது,Kaavaadhu - (தமக்குள்ள பொருள்களை ) மறைத்திடாது மாறு இலி,Maatru Ili - பதில் உபகாரத்தை எதிர் பாராமல் கிளர் சோதியாய்,Kilar Sothiyaai - மிகுந்த தேஜஸ்ஸை யுடையவனே! குறளா,Kuralaa - வாமந வேஷம் பூண்ட எம்பெருமானே! என்று,Endru - என்றிப்படி பேசுவார்,Pesuvaar - (எம்பெருமான் திரு நாமங்களைப்) பேசுமவரான அடியார்கள்,Adiyaargal - பாகவதர்கள் எந்தம்மை,Endhammmai - அடியோங்களை விற்கவும் பெறுவார்கள்,Virkavum Peruvaargal - (தம் இஷ்டப்படி) விற்றுக் கொள்ளவும் அதிகாரம் பெறுவார்கள். |
| 370 | பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 11 | சீதநீர் புடை சூழ் செழுங்கழனி யுடைத் திருக் கோட்டியூர் ஆதியானடியாரையும் அடிமை யின்றித் திரிவாரையும் கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் ஏதமின்றி உரைப்பவர் இருடீகேசனுக் காளரே–4-4-11 | சீதம் நீர்,Seetham Neer - குளிர்ந்த நீராலே படை சூழ்,Padai Soozh - சுற்றும் சூழப் பெற்ற செழு,Sezhu - செழுமை தங்கிய கழனி உடை,Kazhani Udai - கழனிகளை யுடைய திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற) ஆதியான்,Aadhiyaan - எம்பெருமானுக்கு அடியாரையும்,Adiyaaraiyum - அடிமை செய்யும் பாகவதர்களையும் அடிமை இன்றி,Adimai Inri - அடிமை செய்யாமல் திரிவாரையும்,Thirivaaraiyum - திரிகின்ற பாவிகளையும் குறித்து, கோதில்,Kothil - குற்றமற்றவரும் பட்டர் பிரான்,Pattar Piraan - அந்தணர்கட்குத் தலைவரும் குளிர,Kulira - குளிர்ந்த புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு மண்,Man - நிர்வாஹருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த இப் பாசுரங்களை ஏதும் இன்றி,Eaathum Inri - பழுதில்லாதபடி உரைப்பவர்,Uraippavar - ஓதுமவர்கள் இருடீகேசனுக்கு,Irudheekesanukku - எம்பெருமானுக்கு ஆளர்,Aalar - ஆட் செய்யப் பெறுவர் |
| 371 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1 | ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி வாச வார் குழலாளென்று மயங்கி மாளு மெல்லைக் கண் வாய் திறவாதே கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும் பேசு வாரவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரமன்றே–4-5-1 | ஆசை வாய்,Aasai Vaai - (தனக்கு) ஆசையுள்ள விதத்திலே சென்ற,Senra - போர்ப் பாரத்த சிந்தையார் ஆகி,Sindhaiyaar Aagi - நெஞ்சை யுடையாராய் கொண்டு என் அன்னை,En Annai - என்னுடைய தாய் என் அத்தன்,En Aththan - என்னுடைய தகப்பன் என் புத்திரர் ,En Puththirar - என்னுடைய பிள்ளைகள் என் பூமி,En Boomi - என்னுடைய நிலம் வாச வார்,Vaasa Vaar - பரிமளம் வீசுகின்ற என் குழளான,En Kuzhalaana - கூந்தலை யுடையவளான என் மனைவியான என்று,Endru - என்று சொல்லிக் கொண்டு மயங்கி,Mayangi - (அவர்கள் பக்கத்தில்) மோஹமடைந்து மாளும் எல்லைக் கண்,Maalum Ellaik Kan - (பழூதே பல பகலும் போக்கினாலும்) சரம ஸமயத்தில் வாய் திறவாதே,Vaai Thiravaadhe - வாய் திறந்து(அவர்கள் பேச்சை) சொல்லி யழையாமல் கேசவா என்றும்,Kesavaa Endrum - கேசவனே என்றும் புருடோத்தமா என்றும்,Purudhooththamaa Endrum - புருடோத்தமனே என்றும் கேழல் ஆகிய கேடு இலீ என்றும்,Kezhal Aagiya Kedu Ili Endrum - ‘வராஹ ரூபியாய் அவதரித்தவனும் அழிவில்லாதவனுமான எம்பெருமானே! என்றும் பேசுவார் அவர்,Pesuvaar Avar - சொல்லுவார்கள் எய்திய,Eithiya - அடையக் கூடிய பெருமை,Perumai - பெருமைகளே பேசுவான் புகில்,Pesuvaan Pugil - பேசப் புக்கால் நம் பரம் அன்று,Nam Param Andru - நம்மால் பேசித் தலை கட்டப் போவது |
| 372 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 2 | சீயினால் செறிந்தேறிய புண் மேல் செற்ற லேறிக் குழம்பிருந்து எங்கும் ஈயினால் அரிப் புண்டு மயங்கி எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம் வாயினால் நமோ நாரணா வென்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி போயினால் பின்னை இத் திசைக்கு என்றும் பிணைக் கொடுக்கிலும் போக வொட்டாரே–4-5-2 | சீயினால்,Seeyinaal - சீயாலே செறிந்து எறிய,Serindhu Eriya - மிகவும் நிறைந்த புண் மேல்,Punn Mel - புண்ணின் மேல் செற்றல் ஏறி,Setral Eaari - ஈ இருந்து முட்டை யிட்டு குழம்பிருந்து,Kuzhambirundhu - அலை புழுத்து சீயாய்ப் பாயுமளவில் எங்கும்,Engum - உடல் முழுதும் ஈயினால்,Eeyinaal - ஈயாலே அரிப்புண்டு,Aripputru - அரிக்கப்பட்டு மயங்கி,Mayangi - (வேதனை பொறுக்க முடியாமல்) மூர்ச்சை யடைத்து எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம்,Ellai Vaai Senru Servadhan Munnam - சரம காலத்தைக் கிட்டுவதற்கு முன்னே வாயினால்,Vaaiyinaal - வாயாலே நமோ நாராணா என்று,Namo Naaraanaa Endru - ‘நமோ நாராயணாய்’ என்று சொல்லிக் கொண்டு மத்தகத்திடை,Maththagaththidai - உச்சியிலே கைகளைக் கூப்பி,Kaigalai Kooppi - அஞ்ஜலி பண்ணி போயினால்,Poyinaal - (சரீர வியோகமான பின்பு) (பரம பதம்) போய்ச் சேர்ந்தால் பின்னை,Pinnai - பிறகு பிணைக் கொடுக்கிலும்,Pinaik Kodukkilum - (நித்ய முக்தர்கள்) ‘நாங்கள் உத்தர வாதம் பண்ணுகிறோம்’ என்றும்,Endrum - ஒருகாலும் போக ஒட்டார்,Poga Ottaar - (இந்த முக்தர்களைப்) போக வொட்டார்கள் |
| 373 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3 | சோர்வினால் பொருள் வைத்த துண்டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து ஆர்வினாவிலும் வாய் திறவாதே அந்தக் காலம் அடைவதன் முன்னம் மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாதவ னென்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே–4-5-3 | சோர்வினால்,Soruvenaal - களவு வழியாலே பொருள் வைத்தது,Porul Vaiththathu - (எங்கேனும் ஏதாவதொரு) பொருள் வைக்கப் பட்டிருக்குமாகில் சொல்லு சொல் என்று,Sollu Sol Endru - (அதைச்) செல்லு, சொல்லு என்று சுற்றும் இருந்து,Sutrum Irundhu - சூழ்ந்து கொண்டு ஆர்வினாவிலும்,Aarvinaavilum - எப்படிப்பட்ட அன்பர்கள் கேட்டாலும் வாய் திறவாதே,Vaai Thiravaadhe - (அவர்களுக்கு மறு மாற்றம் சொல்லுகைக்கும்) வாயைத் திறக்க மாட்டாதபடி. அந்தக் காலம்,Andhak Kaalam - மரண காலமானது அடைவதன் மூலம்,Adaivadhan Moolam - வந்து கிட்டுவதற்கு முன்னே; மார்வம் என்பது,Maarvam Enbadhu - ‘ஹ்ருதயம்’ என்கிற ஓர் கோயில்,Or Koyil - ஒரு ஸந்நிதியை அமைத்து,Amaiththu - ஏற்படுத்தி (அந்த ஸந்நிதியில்) மாதவன் என்னும்,Madhavan Ennum - ‘திருமால்’ என்கிற தெய்வத்தை,Dheivaththai - தேவதையை நாட்டி,Naatti - எழுந்தருளப் பண்ணி (அத் தெய்வத்தைக் குறித்து) ஆர்வம்மென்பது,Aarvammenbadhu - பக்தி என்கிற ஓர் பூ,Or Poo - ஒரு புஷ்பத்தை இட வல்லார்க்கு,Eda Vallaarkku - ஸமர்பிக்க வல்லவர்களுக்கு அரவதண்டத்தின்,Aravathandaththin - யம படர்களால் வரும் துன்பத்தில் நின்றும் உய்யலும் ஆம்,Uyyalum Aam - தப்பிப் பிழைக்கலாகும். |
| 374 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 4 | மேலெ ழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை உள்ளெழ வாங்கி காலுங் கையும் விதிர் விதிர்த் தேறிக் கண்ணுறக்க மாவதன் முன்னம் மூல மாகிய ஒற்றை யெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலு மாமே–4-5-4 | மேல் எழுந்தது ஓர் வாயு,Mel Ezhundhathu Or Vaayu - ஊர்த்துவச்ஸமானது கிளர்ந்து,Kilarndhu - மேலெழுந்ததனால் மேல் மிடறு,Mel Midaru - நெஞ்சானது உள் எழ வாங்கி,Ul Eza Vaangi - கீழே இடிந்து விழப் பெற்று காலும் கையும்,Kaalum Kaiyum - கால்களும் கைகளும் விதிர் விதிர்த்து ஏறி,Vidhir Vidhirththu Eaari - பதைபதைக்கப் பெற்று கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்,Kan Urakkam Adhu Aavadhan Munnam - தீர்க்க நித்திரையாகிய மரணம் ஸம்பவிப்பதற்கு முன்னே, மூலமாகிய ஒற்றை எழுத்தை,Moolamaagiya Otrai Ezhuththai - (ஸகலவேதங்களுக்கும்) காரணமாகிய ‘ஓம்’ என்ற பிரணவத்தை மூன்று மாத்திரைகள் உள் எழ வாங்கி,Moonru Maaththiraigal Ul Eza Vaangi - உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்து வேலை வண்ணனை,Velai Vannanai - கடல் போன்ற நிறத்தை யுடையவனான எம்பெருமானை மேவுதிர் ஆகில்,Mevuthir Aagil - ஆச்ரயித்தீர்களாகில் விண் அகத்தினில்,Vin Agaththinil - ஸ்ரீவைகுண்டத்தில் மேவலும் ஆம்,Mevalum Aam - அடியார்கள் குழாங்களை) உடன் கூடவும் பெறலாம். |
| 375 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5 | மடிவழி வந்து நீர் புலன் சோர வாயி லட்டிய கஞ்சியும் மீண்டே கடைவழி வாரக் கண்டமடைப்பக் கண்ணுறக்க மாவதன் முன்னம் தொடைவழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார் இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசனென் றேத்த வல்லீரே–4-5-5 | மடி புலன் வழி வந்து,Madi Pulan Vali Vandhu - லிங்கத்தின் வழியாக வந்து நீர் சோர,Neer Sora - மூத்திர நீர் பெருகவும் வாயில்,Vaayil - வாயிலே அட்டிய,Attiya - பெய்த கஞ்சியும்,Kanjiyum - பொரிக் கஞ்சியும் கண்டம் அடைப்ப,Kandam Adaippa - கழுத்தை அடைக்கவும் மீண்டும்,Meendum - மறுபடியும் கடை வழி,Kadai Vali - கடை வாய் வழியாலே வார,Vaara - (அந்தப் பொறிக் கஞ்சி வழியா நிற்கவும் கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்,Kan Urakkam Adhu Aavadhan Munnam - கண் உறக்கம் அது ஆவதன் முன்னம் இருடீகேசன் என்று,Erudeekesan Endru - (ஹ்ருஷீகேசன்’ என்ற (எம்பெருமான் திருநாமத்தைச் சொல்லி) ஏத்த வல்லீர்,Eaitha Vallir - ஸ்தோத்திரம் பண்ண வல்லவர்களே! நாய்கள்,Naaygal - (யம லோகத்திலுள்ள) செந்நாய்களானவை உம்பை,Umbai - உங்களை கவரா,Kavaraa - கவர மாட்டா; உம்மை,Ummai - (யம கிங்கரர்களும் ) உங்களை சூலத்தால்,Soolaththaal - சூலாயுதத்தால் பாய்வதும் செய்யார்,Paayvadhuum Seiyaar - கத்தவும் மாட்டார்கள்; நீர்,Neer - நீங்கள் இடை வழியில்,Edai Valiyil - நடு வழியில் கூறையும்,Kooraikum - வஸ்திரத்தையும் இழவீர்,Izhavir - இழக்க மாட்டீர்கள் |
| 376 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6 | அங்கம் விட்டவை யைந்து மகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை சங்கம் விட்டவர் கையை மறித்துப் பைய வேதலை சாய்ப்பதன் முன்னம் வங்கம் விட்டுலவும் கடற் பள்ளி மாயனை மது சூதனை மார்பில் தங்க விட்டு வைத்து ஆவதோர் கருமம் சாதிப் பார்க்கு என்றும் சாதிக்க லாமே–4-5-6 | அவை ஐந்தும்,Avai Aindhum - பஞ்ச பிராணன்களும் அங்கம் விட்டு,Angam Vittu - உடலை விட்டு அகற்றி,Agarthi - அகன்று போக மூக்கினில்,Mookkinil - மூக்கில் (கையை வைத்து) ஆவி சோதித்த பின்னை,Aavi Sodhiththa Pinnai - ‘பிராணன் இருக்கிறதா இல்லையா’ என்று சோதித்துப் பார்த்து, இல்லை யென்றிந்த பின்பு சங்கம் விட்டு,Sangam Vittu - (அவருடைய உயிரில்) ஆசையை விட்டு, கையை மறித்து,Kaiyai Mariththu - (அங்குள்ளாரை நோக்கி, இப்போதை நிலைமை ஏன்? என்று வந்தவர்கள் கேட்க; (அவர்களுக்குப் பதிலாக) கையை விரித்துக் காட்டி பைய,Paiya - மெள்ள மெள்ள தலை சாய்ப்பதன் முன்னம்,Thalai Saayppadhan Munnam - (தங்கள்) தலையைத் தொங்க விட்டுக் கொள்வதற்கு முன்னே, வங்கம்,Vangam - கப்பல்களானவை விட்டு உலவும்,Vittu Ulavum - இடை விடாமல் திரியப் பெற்ற கடல்,Kadal - கடலில் பள்ளி,Palli - பள்ளி கொள்பவனும் மாயனை,Maayanai - ஆச்சரிய சக்தி யுத்தனும் மது சூதனை,Madhu Soothanai - மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானை மார்பில்,Maarbil - ஹ்ருதயத்தில் தங்க விட்டு வைத்து,Thanga Vittu Vaiththu - அமைத்து, ஆவது ஓர் கருமம்,Aavadhu Or Karumam - ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததொரு (உபாய வரணமாகிற காரியத்தை) சாதிப்பார்க்கு,Saadhippaarkku - ஸாதிக்குமவர்களுக்கு என்றும்,Endrum - எந்நாளும் சாதிக்கலாம்,Saadhikkalaam - பலாநுபவம் பண்ணப் பெறலாம். |
| 377 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7 | தென்னவன் தமர் செப்ப மிலாதார் சேவ தக்குவார் போலப் புகுந்து பின்னும் வன் கயிற்றால் பிணித் தெற்றிப் பின் முன் னாக இழுப்பதன் முன்னம் இன்னவன் இனையானென்று சொல்லி எண்ணி உள்ளத் திருளற நோக்கி மன்னவன் மது சூதன னென்பார் வானகத்து மன்றாடிகள் தாமே–4-5-7 | செப்பம் இலாதார்,Seppam Ilaadhaar - ருஜுவான செய்கை இல்லாதவர்களான தென்னவன்,Thennavan - தமர் யம கிங்கரர்கள் சே அதக்குவார் போல,Se Athakkuvaar Pola - எருதுகளை அடக்கி ஓட்டுபவர்கள் போல புகுந்து,Pugundhu - வந்து, பின்னும்,Pinnum - அதற்கு மேல் வல் கயிற்றால்,Val Kayittraal - வலிவுள்ள பாசங்களினால் பிணித்து,Piniththu - கட்டி ஏற்றி,Eaathri - அடித்து பின் முன் ஆக,Pin Mun Aaga - தலை கீழாக இழுப்பதன் முன்னம்,Ezhuppadhan Munnam - (யம லோகத்துக்கு) இழுத்துக் கொண்டு போவதற்கு முன்னே மன்னவன்,Mannavan - (அந்தத் தென்னவனுக்கும்) மன்னவனான எம்பெருமான் இன்னவன் இனையாள் என்று சொல்லி,Innavan Inaiyaal Endru Solli - இப்படிப்பட்ட ஸ்வரூபத்தையுடையவன், இப்படிப் பட்ட ஸ்பாவத்தையுடையவன் என்று எண்ணி,Enni - (அவனுடைய ஸ்ரூப ஸ்வபாவங்களைச் சொல்லி) (அவற்றை) நெஞ்சாலும் மநநம் பண்ணி உள்ளத்து இருள் அற,Ullaththu Irul Ara - ஹ்ருதயத்திலுள்ள (அஜ்ஞாநமாகிற) அந்தாரம் நீங்கும்படி நோக்கி,Nookki - (எம் பெருமானை) ஸாஷாத்கரித்து, மதுசூதனன் என்பார்,Madhusoodanan Enbaar - (தேஹமுள்ளதனையும்) ‘மதுஸூதநனே’ என்று அவன் திரு நாமங்களையே சொல்லிக் கொண்டிருக்குமவர்கள் வான் அகத்து,Vaan Agaththu - ஸ்ரீவைகுண்டத்திலே மன்றாடிகள் தாம்,Mantraadigal Thaam - (எம்பெருமானோடே நித்ய ஸூரிகளின் கைங்கரியத்துக்காக) மன்றாடப் பெறுவர்கள் |
| 378 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 8 | கூடிக் கூடி உற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து பாடிப் பாடி ஓர் பாடையிலிட்டு நரிப் படைக்கு ஒரு பாகுடம் போலே கோடி மூடி யெடுப்பதன் முன்னம் கெளத்துவமுடைக் கோவிந்தனோடு கூடி யாடிய உள்ளத்தரானால் குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே–4-5-8 | உற்றார்கள்,Urrargal - (மரணமான பின்பு) பந்துக்களானவர்கள் கூடி கூடி இருந்து,Koodi Koodi Irundhu - திரள் திரளாகக் கூடியிருந்து கொண்டு குற்றம் நிற்க,Kutram Nirka - (செத்தவன் செய்த) குற்றங்கள் (பல) கிடக்க (அவற்றை யெல்லாம் விட்டு விட்டு) நற்றங்கள்,Natrangal - (சிறிது) நன்மையாகத் தோன்றும் படியான கூற்றை பறைந்து,Parainthu - சொல்லி, பாடிப் பாடி,Paadip Paadi - (அழுகைப் பாட்டுக்களைப்) பலகால் பாடி ஓர் பாடையில் இட்டு,Or Paadaiyil Ittu - ஒரு பாடையிலே படுக்க வைத்து கோடி மூடி,Koodi Moodi - வஸ்திரத்தை யிட்டு மூடி நரிப் படைக்கு ஒரு பாகுடம் போல,Narip Padaikku Oru Paagudam Pola - நரிக் கூட்டத்துக்கு ஒரு பாகுக் குடத்தைப் பச்சையாகக் கொடுப்பதுபோல (இப் பிணத்தைப் கொடுக்கைக்காக,) எடுப்பதன் முன்னம்,Eduppadhan Munnam - (சுடுகாட்டுக்குக் கொண்டு போவதாக) எடுப்பதற்கு முன்னே, கௌத்துவம்,Kauthuvam - கௌஸ்துபத்தை உடை,Udai - (திரு மார்பிலே) உடைய கோவிந்தனோடு,Govindhanodu - எம்பெருமன் பக்கலில் கூடி ஆடிய,Koodi Aadiya - சேர்ந்து அவகாஹித்த உள்ளத்தர் ஆனால்,Ullaththar Aanaal - நெஞ்சை யுடையவர்களாக ஆனால், குறிப்பு இடம்,Kurippu Idam - யம லோகத்தை கடந்து,Kadandhu - (அதிக்ரமித்து,(பரம பதம் போய்ச் சேர்ந்து) உய்யலும் ஆம்,Uyyalum Aam - உஜ்ஜீவிக்கப் பெறலாம். |
| 379 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9 | வாயொரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்ற தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற தீ ஓரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற மாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே–4-5-9 | வாய்,Vaai - வாயானது ஒரு பக்கம் வாங்கி வலிப்ப,Oru Pakkam Vaangi Valippa - (வாயுவினாலே) ஒருக்கடுத்து வலிக்கவும் வார்ந்த நீர்,Vaarndha Neer - பெருகா நின்ற நீரை யுடையதும் குழி,Kuzhi - உள்ளே இடிய இழிந்ததுமான கண்கள்,Kangal - கண்ணானது மிழற்ற,Mizhatra - அலமந்து நிற்கவும், ஒரு பக்கம்,Oru Pakkam - ஒரு பக்கத்தில் தந்தை,Thandhai - தகப்பானரும் தாரமும்,Thaaramum - மனைவியும் (இருந்து கொண்டு) அலற்ற,Alatra - கதறி அழவும் ஒரு பக்கம்,Oru Pakkam - மற்றொரு பக்கத்திலே தீ,Thee - நெருப்பானது சேர்வதன் முன்னம்,Servadhan Munnam - (மார்லில வந்து) சேர்வதற்கு முன்னே செம் கண் மாலொடும்,Sem Kan Maalodum - புண்டரீகரக்ஷனான எம்பெருமானை சிக்கன சுற்றம் ஆய்,Sikkana Suttram Aai - நிருபாதிக பந்துவாகக் கொண்டு ஒரு பக்கம்,Oru Pakkam - அவனொருவனிடத்திலேயே பக்ஷ பாதமாய் நிற்க வல்லாருக்கு,Nirka Vallaarkku - நிலைத்து நிற்ப வல்லவர் களுக்கு அரவ தண்டத்தில்,Arava Thandaththil - யம தண்டனையில் நின்றும் உய்யலும் ஆம்,Uyyalum Aam - தப்பிப் பிழைக்கப் பெறலாம். |
| 380 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10 | செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல் பத்தரா யிறந்தார் பெறும் பேற்றைப் பாழித் தோள் விட்டு சித்தன் புத்தூர்க் கோன் சித்தம் நன்கொருங்கித் திரு மாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார் சித்தம் நன்கொருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே–4-5-10 | செத்துப் போவது ஓர் போது,Seththu Povadhu Or Podhu - இறந்து போகுங் காலத்திலே செய்கைகள்,Seykaigal - (கடுஞ்) செயல்களை நினைத்து,Ninaiththu - நினைத்து தேவ பிரான் மேல்,Deva Piraan Mel - தேவ பிரான் பக்கலில் பத்தர் ஆய்,Pattar Aai - அன்பு பூண்டவர்களாய் இருந்து இறந்தார்,Irandhaar - (பின்பு) இறந்தவர்கள் பெறும் பேற்றை,Perum Paettrai - அடையக்கூடிய பலன்களைக் குறித்து, பாழி தோள்,Paazhi Thol - (ஸம்ஸாரத்தை வென்ற) மிடுக்கை யுடைய தோள்களை யுடையவரும் புத்தூர்,Puththoor - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கோன்,Kon - தலைவருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் செய்யும்,Seyyum - (யம படர்களால்) செய்யப் படுகிற சித்தம்,Siththam - (தம்முடைய) நெஞ்சை திருமாலை,Thirumaalai - திருமால் திறத்தில் நன்கு,Nangu - நன்றாக ஒருங்கி,Orungi - ஒருபடுத்தி செய்த,Seydha - அருளிச் செய்த மாலை,Maalai - சொல் மாலையாகிய இவை பத்தும்,Ivai Paththum - இப் பத்துப் பாட்டுகளையும் வல்லவர்,Vallavar - ஓத வல்லவர்கள், சித்தம் நன்கு ஒருங்கி,Siththam Nangu Orungi - (ஆழ்வார்க்குப் போல்) நெஞ்சு ஒருபடிப்படப் பெற்று திருமால் மேல்,Thirumaal Mel - திருமால் பக்கலிலே சென்ற,Senra - குடி கொண்ட சிந்தை,Sindhai - மநஸ்ஸை பெறுவர்,Peruvar - உடையராவர். |
| 381 | பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 1 | காசும் கறை யுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும் ஆசையினால் அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள் கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள். –4-6-1 | காசுக்கு,Kaasukku - ஒரு காசுக்காகவும் கறை உடை,Karai Udai - (தலைப்புகளில் நல்ல) கறைகளை யுடைய கூறைக்கும்,Kooraiykkum - வஸ்திரத்துக்காகவும் ஓர் கற்றைக்கும்,Or Katraikkum - ஒரு கட்டுக் கற்றைக்காகவும் (உண்டான) ஆசையினால்,Aasaiyinaal - ஆசையாலே பேர்,Per - (க்ஷத்ர பிள்ளைகளுக்கு) இடுகிற ஆதர்காள்,Aadhargaal - அறிவு கெட்டவர்களே! நீங்கள்,Neengal - நீங்கள் கேசவன்,Kesavan - கேசவனென்னுந் திருநாமத்தை யுடையவனும் நாயகன்,Naayagan - ஸர்வ சேஷியுமான நாரணன்,Naaranan - நாராணனுடைய பேர்,Per - திரு நாமங்களை இட்டு,Ettu - (உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு தேனித்து இருமின்,Theniththu Irumin - மகிழ்ச்சி கொண்டிருங்கள் தம் மன்னை,Tham Mannai - (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் நரகம் புகார்,Narakam Pugaar - துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 382 | பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 2 | அங்கொரு கூறை அரைக்குடுப்ப தனாசையால் மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள் செங்க ணெடு மால் சிரீதரா என்று அழைத்தக்கால் நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-2 | அங்கு,Angu - அந்த நீசரிடத்தில் ஒரு கூறை,Oru Koorai - ஒரு வஸ்த்ரத்தைப் (பெற்று) அரைக்கு உடுப்பதன் ஆசையால்,Araikku Uduppadhan Aasaiyaal - அரையில் உடுக்க வேணுமென்னு மாசையினால் மங்கிய,Mangiya - கெட்டுக் கிடக்கிற மானிட சாதி பேர் இடும்,Maanida Saadhi Per Idum - மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்களுடைய பெயரை இடுகிற ஆதர்காள்,Aadhargaal - குருடர்களே! நங்கைகாள்,Nangaikaal - சொல்லிற்றை அறிய வல்ல மதியினால் நிறைந்தவர்களே! செம் கண் நெடு மால்,Sem Kan Nedu Maal - புண்டரீகரக்ஷனான ஸர்வேச்வரனே! சிரீதரா,Sreedharaa - (நீங்கள் உங்கள் பிள்ளையை) ஸ்ரீதரனே! அழைத்தக்கால்,Alaiththakkaal - அழைத்தீர்களாகில் நாரணன்,Naaranan - நாராயண நாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய தம்மன்னை,Thammannai - தாயானவள் நரகம் புகாள்,Narakam Pugaal - நரகம் புகார் |
| 383 | பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 3 | உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து எச்சம் பொலிந்தீர்காள் எஞ்செய்வான் பிறர் பேரிட்டீர் பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-3 | எச்சம் பொழிந்தீர்காள்,Echcham Pozhindheergaal - ஸந்தாநத்தினால் விளக்குமவர்களே! உச்சியில்,Uchchiyil - உச்சியில் (தடவத் தக்க) எண்ணெயும்,Ennaiyum - எண்ணெயும் சுட்டியும்,Sutthiyum - (நெற்றியில் தொங்கும்படி கட்டத்தக்க) சுட்டியையும் வளையும்,Valaiyum - (கையில் அணியத் தக்க) வளையையும் உகந்து,Ugandhu - விரும்பி என் செய்வான் ,En Seivaan - ஏதுக்காக பிறர்,Pirar - (எம்பெருமானை யொழிந்த) மற்றவர்களுடைய பேர்,Per - பெயர்களை இட்டீர்,Ettir - (உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டீர்கள்? பிச்சை புக்க ஆகிலும்,Pitchai Pukka Aagilum - பிச்சையெடுத்து ஜீவித்தாலும் எம்பிரான் திருநாமமே,Empiraan Thirunaamame - எம்பெருமானுடைய திரு நாமத்தையே நச்சுமின்,Nachchumin - விரும்பி இடுங்கள்; (அப்படி இட்டால்) நாரணன்,Naaranan - இத்யாதி பூர்வவத் |
| 384 | பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 4 | மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக் கில்லை வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால் நானுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-4-6-4 | மானிட சாதியில்,Maanida Saadhiyil - மநுஷ்ய ஜாதியில் தோன்றிற்று,Thonritru - உண்டான ஓர் மானிட சாதியை,Or Maanida Saadhiyai - ஒரு மநுஷ்ய ஜந்துவை மானிட சாதியின் பேர் இட்டாள்,Maanida Saadhiyin Per Ittaal - (கர்ம பலன்களை அநுபவிக்கப் பிறந்த) மநுஷ்ய சாதியர்க்கு உரிய பெயரை இட்டழைத்தால் மறுமைக்கு இல்லை,Marumaikku Illai - அத்ருஷ்ட பலம் (மோஷம்) பெறுகைக்கு யாதொரு வழியுமில்லையாம், வான் உடை,Vaan Udai - பரம பதத்தை (விபூதியாக) உடைய மாதவா,Maadhavaa - ச்ரியபதியே கோவிந்தா,Govindhaa - கோவிந்தனே! என்று அழைத்தக் கால்,Endru Alaiththak Kaal - என்று (எம்பெருமான் திருநாமத்தை யிட்டு) அழைத்தால், நானுடை நாராணன்,Naanudai Naaranan - எனக்கு நாதனான நாராயணனுடைய திருநாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய தம்மன்னை நரகம் புகார்,Thammannai Narakam Pugaar - (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 385 | பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 5 | மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல வூத்தையை மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கில்லை குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால் நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-5 | மலம் உடை,Malam Udai - மலத்தை யுடையதும் ஊத்தையில்,Ooththaiyil - ஹேயமுமான சரீரத்தில் நின்றும் தோன்றிற்று ஓர்,Thonritru Or - தோன்றினதொரு மலம் ஊத்தையை,Malam Ooththaiyai - (தானும் அப்படியே) மலமுடையதும் ஹேயமுமான சரீரத்தோடே கூடி யிருக்கிற ஐந்துவை மலம் உடை,Malam Udai - (கீழ்ச் சொன்ன படியே) மலத்தை யுடையதும் பேர்,Per - (ஸத்தையின் ஹேயமுமான சரீரத்தையுடைய மற்றொரு ஐந்துவினுடைய) பெயரை இட்டால்,Ettaal - இட்டு அழைத்தால் இல்லை,Ellai - ஒருவழியு மில்லையாம்: குலம் உடை,Kulam Udai - நற்குலத்திற் பிறந்த கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக் கால்,Govindhaa Govindhaa Endru Alaiththak Kaal - கோவிந்தனே! கோவிந்தனே! என்று (பகவந் நாமத்தை யிட்டு) அழைத்தால். நலம் உடை,Nalam Udai - (தன் திருநாமத்தைச் சொன்னவர்களை வாழ்விக்கையாகிற) நன்மையையுடைய நாரணன்,Naaranan - எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய தம்மன்னை நரகம் புகார்,Thammannai Narakam Pugaar - (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 386 | பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 6 | நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-6 | நாடும்,Naadum - குக்ராமங்களிலுள்ள ஸாமாந்ய ஜ்ஞானிகளும் அறிய,Ariya - (இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி, மானிடர் பேர் இட்டு,Maanidar Per Ittu - (ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு கூடி,Koodi - அவர்களோடு கூடி அழுங்கி,Azhungi - ஒளி மழுங்கி குழியில் வீழ்ந்து,Kuzhiyil Veezhndhu - (அவர்கள் விழுந்த) குழியிலே விழுந்து வழுக்காதே,Vazhukkaadhe - தவறிப் போகாமல், சாடு,Saadu - ‘சகடாஸுரன் இற,Era - முறியும்படி பாய்ந்த,Paayndha - உதைத்தருளின தலைவா,Thalaivaa - பெரியோனே!’ (என்றும்) தாமோதரா என்று,Thaamodharaa Endru - ‘தாமோதரனே! என்றும் நாடுமின்,Naadumin - வாழ்த்திக் கொண்டு திரியுங்கள்; நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Naagam Pugaar - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 387 | பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 7 | மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு எண்ண மொன் றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள் கண்ணுக் கினிய கரு முகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-7 | கண்ணில் பிறந்து,Kannil Pirandhu - கண்ணில் நின்று முண்டாய் மண் ஆகும்,Man Aagum - பின்பு மண்ணாய் விடுகிற மானிடர்,Maanidar - அல்ப மநுஷர்களுடைய பேர் இட்டு,Per Ittu - பெயரை (த் தங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு அங்கு,Angu - ஆமுஷ்மிக பலத்தில் எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்,Ennam Ondru Inri Irukkum - ஒரு விசாரமற்றிருக்கிற ஏழை மணிசர்காள்,Ezhai Manisargaal - அறிவற்ற மனுஷ்யர்களை! கண்ணுக்கு,Kannukku - கண்ணால் காண்கைக்கு இனிய,Iniya - யோக்யனாயும் கரு முகில்,Karu Mugil - காள மேகம் போன்ற கண்ணன்,Kannan - நிறத்தை யுடைவனாயுமுள்ள எம்பெருமானுடைய நாமமே,Naamame - திரு நாமத்தையே கண்ணுமின் நாரணன்,Kannumin Naaranan - விரும்பி யிடுங்கள் நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Narakam Pugaan - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 388 | பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 8 | நம்பி பிம்பி யென்று நாட்டு மானிடப் பேரிட்டால் நம்பும் பிம்பு மெல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம் செம் பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டழைத் தக்கால் நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-8 | நம்பி பிம்பி என்று,Nambi Pimbi Endru - நம்பி என்றும் பிம்பி என்றும் நாட்டு மானிடப் பேரிட்டால்,Naattu Maanidap Per Ittaal - க்ஷுத்ர மனுஷ்யர்களுடைய பெயரை (உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்) இட்டால் நம்பும் பின்பும் எல்லாம்,Nambum Pinbum Ellaam - ‘நம்பி’ ‘பிம்பி’ என்னும் பெயர்களுக்கு அடியான முதன்மை யெல்லாம் நாலு நாளில்,Naalu Naalil - நாலு நாளைக்குள் அழுங்கிப்போம் ,Azhungippom - அழிந்துபோம்; செம் பெருந் தாமரை,Sem Perun Thaamarai - சிவந்தும் பெருத்துமிருக்கிற தாமரைப் பூப் போன்ற கண்ணன்,Kannan - திருக் கண்களை யுடைய எம்பெருமானுடைய பேர் இட்டு,Per Ittu - திரு நாமத்தை இட்டு அழைத்தக்கால்,Alaiththakkaal - அழைத்தால் நம்பிகாள்,Nambikaal - (அறிவினால்) குறைவற்றவர்களே! நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Narakam Pugaar - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 389 | பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 9 | ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள் மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-9 | ஊத்தை குழியில் அமுதம் பாய்வது போல்,Ooththai Kuzhiyil Amudham Paayvadhu Pol - அசுத்தமானதொரு குழியிலே அம்ருதம் பாய்ந்தாற்போலே உங்கள் மூத்திரப் பிள்ளையை,Ungal Mooththirapp Pillaiyai - உங்களுடைய அசுத்தனான பிள்ளைக்கு என் முகில் வண்ணன் பேர் இட்டு,En Mugil Vannan Per Ittu - எனக்குத் தலைவனும் காளமேகம் போன்ற திரு நிறத்தையுடையனுமான (எம்பெருமானுடைய திருநாமத்தை நாமகரணம் பண்ணி) கோத்து குழைத்து,Koththu Kuzhaiththu - (அதனால் அப்போதே நீங்கள் எம்பெருமானுடைய பரிக்ரஹமாகப் பெற்று) (அவ் வெம்பெருமானோடு) கூடி கலந்து குணாலம் ஆடி,Kunaalam Aadi - (அதனாலுண்டாகும் ஆநந்த்த்துக்குப் போக்கு வீடாக) குணாலைக் கூத்தாடிக் கொண்டு திரிமின்,Thirimin - திரியுங்கள் நாத்தகு நாரணன்,Naaththaku Naaranan - (இப்படியாகில்) நாவினால் துதிக்கத் தக்க நாரா யணனுடைய பெயரைப் பூண்ட அப்பிள்ளையினுடைய தம்மன்னை நரகம் புகார்,Thammannai Narakam Pugaar - தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 390 | பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 10 | சீரணி மால் திரு நாமமே யிடத் தேற்றிய வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த ஓரணி யொண் தமிழ் ஒன்பதோடொன்றும் வல்லவர் பேரணி வைகுந்தத்து என்றும் பேணி யிருப்பரே–4-6-10 | சீர்,Seer - கல்யாண குணங்களை அணி,Ani - ஆபரணமாக வுடையவனும் மால்,Maal - (அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான எம்பெருமானுடைய திரு நாமமே,Thiru Naamame - திருநாமத்தையே இட,Ida - (தம் பிள்ளைகளுக்கு இடும்படி) தேற்றிய,Theatriya - உபதேசித்தருளினவரும் வீரம் அணி,Veeram Ani - (இந்திரியங்களை வெல்லுகை யாகிற) வீரப் பாட்டை ஆபரணமாக வுடையவரும் தொல் புகழ்,Thol Pugazh - சாச்வதமான கீர்த்தியை யுடையவருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் விரித்த,Viriththa - விரிவாக அருளிச் செய்தமையும் ஓர் அணி,Or Ani - (கற்பார்க்கு) ஒப்பற்ற ஆபரணம் போன்றவையும் ஒண் தமிழ்,On Tamil - அழகிய தமிழ்ப் பாஷை யுமாயிருந்துள்ள ஒன்பதோடு ஒன்றும்,Onbadhodu Ondrum - இப் பத்துப் பாட்டுக்களையும் வல்லவர்,Vallavar - ஓத வல்லவர் பேர் அணி,Per Ani - பெரியதும் அழகியதுமான வைகுந்தத்து,Vaikunthaththu - ஸ்ரீவைகுண்டத்தில் என்றும்,Endrum - எந்நாளும் பேரணி இருப்பர்,Perani Iruppar - (எம்பெருமானுக்கு) மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு வாழப் பெறுவர். |
| 391 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1 | தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் தாசரதி போய் எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட எம் புருடோத்தம னிருக்கை கங்கை கங்கை யென்ற வாசகத்தாலே கடு வினை களைந்திட கிற்கும் கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்ட மென்னும் கடி நகரே–4-7-1 | கங்கை கங்கை என்ற வாசகத்தாலே,Gangai Gangai Endra Vaasagaththaaley - கங்கை கங்கை என்ற சப்த்த்தைச் சொல்லுவதனால் என்ற வாசகத்தைச் சொல்லுவதாகும். கடு வினை,Kadu Vinai - கடுமையான பாவங்களை களைந்திட கிற்கும்,Kalaindhida Kirkkum - ஒழிக்கவல்ல கரை மேல்,Karai Mel - கரையிலே கை தொழ நின்ற,Kai Thozha Nindra - (பக்தர்கள்) கை கூப்பித் தொழும் படியாக நின்ற கண்டம் என்றும்,Kandam Endrum - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய கடி நகர்,Kadi Nagar - சிறந்த நகரமானது (எதுவென்னில், தங்கையை,Thangaiyai - (இராவணனுடைய ) தங்கையாகிய சூர்ப்பணகையினுடைய மூக்கும்,Mookkum - மூக்கையும் தமையனை,Thamaiyanai - அவளுடைய தமையனான ராவணனுடைய தலையும்,Thalaiyum - தலையையும் எங்கும்,Engum - நாட்டெங்கும் தன் புகழ்,Than Pugazh - தன்னுடைய கீர்த்தியே யாம்படி இருந்து,Erundhu - பதினோராயிரம் ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து அரசு ஆண்ட,Arasu Aanda - ராஜ்ய பரிபாலகஞ் செய்தருளினவனும் எம்,Em - எமக்குத் தலைவனுமான தாசரதி,Daasarathi - இராமபிரானுமாகிய எம் புருடோத்தமன்,Em Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமாளுடைய எமது இருக்கை,Emadhu Irukkai - வாஸஸ்தாநமாம். |
| 392 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 2 | சலம் பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ் வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச மலர்ந்தெழுந் தணவி மணி வண்ண வுருவின் மால் புரு டோத்தமன் வாழ்வு நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும் கலந்திழி புனலால் புகர் படு கங்கைக் கண்டமென்னும் கடி நகரே–4-7-2 | நலம் திகழ்,Nalam Thigazh - (எம்பெருமானுடைய ஸ்ரீபாததீரத்தை வஹக்கின்றமையாலுண்டான) நன்மை விளங்கா நிற்கிற ஜடையன்,Jadaiyan - ஜடையை யுடையவனான சிவபெருமானுடைய முடி,Mudi - தலையில் (அணியப் பெற்றுள்ள) கொன்றை மலரும்,Kondrai Malarum - (செந்நிறமுடைய) கொன்றைப் பூவோடும் நாரணன்,Naaranan - (அச் சிவபிரானுக்குத் தலைவனான) நாராயணனுடைய பாதத் துழாயும்,Paadath Thuzhaayum - திருவடிகளிற் பனைந்த (பசுமை நிறமுடைய) திருத்துழாயோடும் கலந்து,Kalandhu - சேர்ந்து இழி,Izhi - ஆகாயத்தில் நின்றும் பூமியில் இழிந்து வெள்ள மிடா நின்ற புனலால்,Punalal - ஜலத்தினால் புகர் படு,Pugar Padu - விளங்கா நின்றுள்ள கங்கை,Gangai - கங்கைக் கரையிலுள்ள கண்டமென்னும் கடிநகர்,Kandamennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது சலம்,Sadam - ஜலத்தை பொதி,Podhi - பொதிந்து கொண்டிருக்கிற உடம்பின்,Udampin - வடிவை யுடைய சந்திரன்,Sandhiran - சந்திரனும் தழல்,Thazhal - நெருப்பை உமிழ்,Umizh - உமிழா நின்றுள்ள பேழ்,Pezh - பெரிய வாய்,Vaai - கிரணங்களை யுடையவனாய் வெம்,Vem - வெம்மையே இயல்வாக வுடையவான கதிர்,Kathir - ஸூர்யனும் அஞ்ச,Anja - அஞ்சும்படியாக மலர்ந்து எழுந்து,Malarndhu Ezhundhu - மிகவும் பரம்பின சரீரத்தை யெடுத்துக் கொண்டு கிளர்ந்து அணவு,Anavu - (அந்த சந்த்ர ஸூர்யர்களுடைய இருப்பிடத்தைச்) சென்று கிட்டின மணி வண்ணன் உருவின்,Mani Vannan Uruvin - (நீலமணி போன்ற நிறம் பொருந்திய வடிவை யுடையவனும் மால்,Maal - (அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தமன் வாழ்வு,Vaazhvu - வாழுமிடம் |
| 393 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3 | அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழி கொண் டெறிந்து அங்கு எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம் புரு டோத்தம னிருக்கை சதுமுகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி கதிர்முக மணி கொண்டிழி புனல் கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-3 | சதுமுகன் கையில்,Sadhumugan Kaiyil - சதுர்முக ப்ரஹ்மாவினுடைய கையிலும் சதுப்புயன் தாளில்,Saduppuyan Thaalil - சதுப்புஜனான எம்பெருமானுடைய திருவடியிலும் (பின்பு) சங்கரன் சடையினில்,Sankaran Sadaiyinil - சிவபெருமானுடைய ஜடையிலும் தங்கி,Thangi - தங்கி, கதிர்,Kathir - ஒளியுடையனவும் மணி,Mani - ரத்னங்களை கொண்டு,Kondu - கொழித்துக் கொண்டு இழி,Ezhi - இழிகிற புனல்,Punal - தீர்த்தத்தை யுடைய கங்கை,Gangai - கங்கைக் கரையிலுள்ள கண்டமென்னும் கடிநகர்;,Kandamennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது அங்கு,Angu - உலகமளந்த அப்போது, அதிர் முகம் உடைய,Adhir Mugam Udaiya - முழங்கா நின்ற முகத்தை யுடைய வலம் புரி,Valam Puri - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை குமிழ்த்தி,Kumizhthi - திருப் பவளத்தில் வைத்து ஊதியு“ அழலுமிழ்,Azhalumizh - நெருப்பை வீசா நின்றுள்ள ஆழி கொண்டு எறிந்து,Aazhi Kondu Erindhu - திரு வாழியை யெடுத்து விட்டெறிந்தும், எதிர் முகம்,Edhir Mugam - (போர் செய்வதாக) எதிர்த்த முகத்தை யுடைய அசுரர்,Asurar - அஸுரர்களுடைய தலைகளை,Thalaigalai - தலைகளை இடறும்,Edarum - உருட்டி யருளின எம் புருடோத்தான் இருக்கை,Em Purudhoaththaan Irukkai - எமது புருடோத்தமனுடைய வாஸஸ்தலமாகும். |
| 394 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 4 | இமையவர் இறுமாந்திருந் தரசாள ஏற்று வந்தெதிர் பொரு சேனை நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம் புருடோத்தமன் நகர் தான் இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இரு கரை உல கிரைத்தாட கமை யுடைப் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-4 | இமவந்தம் தொடங்கி,Imavantham Thodangi - இமய மலையின் உச்சி முதற் கொண்டு இரு கடல் அளவும்,Eru Kadal Alavum - பெரிய கடல் வரைக்கும் இரு கரை,Eru Karai - இரண்டு கரைகளிலுமுள்ள இரைத்து,Eraiththu - ஆரவாரித்துக் கொண்டு ஆட,Aada - நீராட கமை உடை பெருமை,Kamai Udai Perumai - (அவர்களது பாபங்களைப்) பொறுக்கையால் எந்த பெருமையை யுடைய கங்கையின் கரை மேல்,Gangaiyin Karai Mel - கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடிநகர்;,Kandam Ennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது இமையவர்,Emaiyavar - (இந்திரன் முதலிய) தேவர்கள் இறுமாந்து இருந்து,Erumaanthu Irundhu - அஹங்காரப் பட்டுக் கொண்டிருந்து அரசு ஆள,Arasu Aala - ராஜ்யம் நிர்வஹிப்பதற்காகவும், ஏற்று வந்த எதிர் பொரு சேனை,Etrru Vandha Edhir Poru Senai - துணிந்து வந்து (தன் மேலும் அத் தேவர்கள் மேலும்) எதிந்து போர் செய்கிற (அஸுர ராஷஸ) ஸேனையானது நமபுரம்,Namapuram - யமலோகத்தை நணுக,Nanuga - கிட்டுகைக்காகவும் நாந்தகம்,Naandhagam - நந்தகமென்னும் வாளை விசிறும்,Visirum - வீசா நிற்குமவனும் நம்,Nam - நமக்குத் தலைவனுமான புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமாளுடைய நகர்,Nagar - நகரமாகும். |
| 395 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5 | உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடராழியும் சங்கும் மழுவொடு வாளும் படைக்கல முடைய மால் புருடோத்தமன் வாழ்வு எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழு தளவினில் எல்லாம் கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-5 | எழுமையும்,Ezhumaiyum - ஏழு ஜந்மங்களிலும் கூடி ஈண்டிட,Koodi Eendhida - சேர்ந்து திரண்ட பாவம் எல்லாம்,Paavam Ellaam - பாவங்களை யெல்லாம் இறைப் பொழுது அளவினில்,Eraip Pozhuthu Alavinil - க்ஷண காலத்துக்குள்ளே கழுவிடும்,Kazhuvidum - போக்கி விடும்படியான பெருமை,Perumai - பெருமையை யுடைய கங்கையின் கரை மேல்; கண்டம் என்னும் கடி நகர்;,Kandam Ennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது உழுவது ஓர் படையும்,Uzhuvadhu Or Padaiyum - உழுவதற்கு உரிய கருவியாகிய கலப்பையும் உலக்கையும்,Ulakkaiyum - உலக்கையையும் வில்லும்,Villum - ஸ்ரீசார்ங்கத்தையும் ஒண் சுடர்,On Sudar - அழகிய தேஜஸ்ஸையுடைய ஆழியும்,Aazhiyum - திரு வாழியையும் சங்கும்,Sangum - ஸ்ரீபாஞ்ச ஜன்யத்தையும் மழுவொடு,Mazhuvodu - கோடாலியையும் வாளும்,Vaalum - நந்தக வாளையும் படைக்கலம் உடைய,Padaikkalam Udaiya - ஆயுதமாக வுடையவனும் மால்,Maal - ஸர்வேச்வரனுமான புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமான் வாழ்வு,Vaazhvu - எழுந்தருளியிருக்குமிடம் |
| 396 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6 | தலைப் பெய்து குமுறிச் சலம் பொதி மேகம் சல சல பொழிந்திடக் கண்டு மலைப் பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு அலைப் புடைத் திரை வாய் அருந் தவமுனிவர் அவபிரதம் குடைந் தாட கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-6 | அரு தவம் முனிவர்,Aru Thavam Munivar - அரிய தவங்களைப் புரிந்த மஹர்ஷிகள் அலைப்பு உடை,Alaippu Udai - அலைத்தலை யுடைய (கரை யெறியா நின்றுள்ள) திரை வாய்,Thirai Vaai - அலையிலே அவபிரதம் குடைந்து ஆட,Avapratham Kudaindhu Aada - அவப்ருத ஸ்நாநம் பண்ண, (பிறகு பெரும் ஆறாய்) கலப்பைகள் கொழிக்கும்,Kalappaigal Kozhikkum - (யாக பூமியிலுண்டான) கலப்பை முதலிய உபகரணங்களெல்லா வற்றையும் எடுத்துத் தள்ளிக் கொண்டு போகா நிற்கிற கங்கையின் கரை மேல்,Gangaiyin Karai Mel - கங்கைக் கரையிலுள்ள கண்டம் என்னும் கடி நகர் ;,Kandam Ennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது சலம்,Sadam - (கடலிலுள்ள) ஜலத்தை பொதி,Podhi - பொதிந்து கொண்டிரா நின்ற மேகம்,Megham - மேகங்களானவை தலைப்பெய்து,Thalaippeidhu - திருவாய்ப்பாடியில் வந்து கிட்டி குமுறி,Kumuri - கர்ஜனை பண்ணி சலசல பொழிந்திட,Salasala Pozhindhida - சள சள வென்று மழை பொழிய கண்டு,Kandu - (அதைக்) கண்டு மலை,Malai - கோவர்த்தன மலையாகிற பெருங் குடையால்,Perung Kudaiaal - பெரிய குடையாலே மறுத்தவன்,Maruththavan - (அம்மழையைத்) தடுத்தருளினவனும் மதுரை,Mathurai - திரு வடமதுரையில் மால்,Maal - விருப்பமுடையவனுமான புருடோத்தமன்,Purudhoaththaman - ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான் வாழ்வு,Vaazhvu - எழுந்தருளி யிருக்குமிடம். |
| 397 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7 | விற் பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந்தவன் தலை சாடி மற் பொரு தெழப் பாய்ந்து அரையன யுதைத்த மால் புரு டோத்தமன் வாழ்வு அற்புத முடைய அயிராவத மதமும் அவரிளம்படிய ரொண் சாந்தும் கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-7 | அற்புதம் உடைய,Arpudham Udaiya - ஆச்சர்யமான ஐராவதம்,Airaavatham - ‘ஐராவதம்’ என்னும் (தேவேந்திரனது) யானையினுடைய மதமும்,Madhamum - மத நீரும், அவர்,Avar - அத் தேவர்கள் (விரும்பத் தக்க) இள படியர்,Ela Padiyar - இளம் பருவத்தை யுடையவர்களான தேவ மாதர்கள் (அணிந்த) கற்பகம் மலரும்,Karpagam Malarum - (அவர்களது குழலில் சொருகி யிருந்த) கற்பகப் பூக்களும் கலந்து,Kalandhu - ஒன்று சேர்ந்து இழீ,Izhi - இழியா நின்றுள்ள கங்கை,Gangai - கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடிநகர் வில் பிடித்து இறுத்து,Vil Pidiththu Iruththu - (கம்ஸனுடைய ஆயுதச் சாலையிலிருந்து) வில்லிப் பிடித்து முறித்து. வேழத்தை,Vezhaththai - (குவலயாபீடம் என்ற ) யானையை முறுக்கி,Murukki - பங்கப்படுத்தியும் மேல் இருந்தவன்,Mel Irundhavan - (அந்த யானையின்) மேலிருந்த யானைப் பாகனுடைய தலை,Thalai - தலையை சாடி,Saadi - சிதறப் புடைத்தும் மல்,Mal - (சாணுர முஷ்டிகாதி) மல்லர்களோடு பொருது,Porudhu - போர் செய்தும் அரயைனை,Arayainai - உயர்ந்த கட்டிலின் மேலிருந்த அரசனாகிய கம்ஸனை எழப் பாய்ந்து உதைத்த,Ezha Paayndhu Udaiththa - அவன்மேற் பாய்ந்து (கீழே) தள்ளித் திருவடிகளால்) உதைத்தவனான என் புருஷோத்தமன் வாழ்வு,En Purushoththaman Vaazhvu - ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம். |
| 398 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 8 | திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை யருளும் அரி புருடோத்தம னமர்வு நிரை நிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு விட்டு இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்ட மென்னும் கடி நகரே–4-7-8 | நெடியன,Nediyana - நீண்டவையா யிரா நின்றுள்ள யூபம்,Yoopam - (பசுக்கள் கட்டுகிற) யூப ஸ்தம்பங்களானவை நிரை நிரை ஆக,Nirai Nirai Aaga - திரள் திரளாக நிரந்தரம்,Nirandharam - இடை விடாமல் ஒழுங்கு விட்டு,Ozhungu Vittu - நெடுக ஓடா நிற்பதும் இரண்டு கரை புரை ,Erandu Karai Purai - இரு பக்கத்துக் கரைகளும் தம்மிலே ஒத்து வேள்வி புகை கமழ்,Velvi Pugai Kamazha - யாக குண்டத்திலுண்டாகும் புகைகளால் பரிமளியா நிற்பதுமான கங்கை,Gangai - கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடி நகர்;,Kandam Ennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது திரை பொரு,Thirai Poru - அலை யெறியா நின்றுள்ள கடல் சூழ்,Kadal Soozh - கடலால் சூழப் பெற்ற திண் மதிள்,Thin Mathil - திண்மையான மதிள்களை யுடைய துவரை,Thuvaarai - த்வாரகைக்கு வேந்து,Vendhu - தலைவனும் தன்,Than - தன்னுடைய மைத்துனன் மார்க்கு,Maiththunan Maarkku - மைத்துனன் மார்களான பாண்டவர்களுக்கு ஆய்,Aay - பக்ஷபாதியாய் நின்று அரசனை அவிய,Arasanai Aviya - துரியோதநாதி ராஜாக்களை அழியச் செய்து அரசினை,Arasinai - ராஜ்யத்தை அருளும்,Arulum - (அப்பாண்டவர்கட்குக்) கொடுத்தருளினவனும் அரி,Ari - (ஸகல பாபங்களையும்) போக்குமவனுமான புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமாள் அமர்வு,Amarvu - பொருந்தி யெழுந்தருளி யிருக்குமிடம் |
| 399 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9 | வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இட முடை வதரி யிட வகை யுடைய எம் புருடோத்தம னிருக்கை தட வரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-9 | தட வரை,Thada Varai - (மந்தரம் முதலிய) பெரிய மலைகளானவை அதிர,Athira - சலிக்கும் படியாகவும் காணி,Kaani - பூமியானது விண்டு இடிய,Vindu Idiya - பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும் தலைப் பற்றி,Thalaip Patri - (மரங்களினுடைய) தலை யாவுஞ் செல்லக் கிளம்பி கரை,Karai - கரையிலுள்ள மரம்,Maram - மரங்களை சாடி,Saadi - மோதி முறித்தும் இடம் உடை,Edam Udai - இடமுடையத்தான் (விசாலமான) கடல்,Kadal - (ஒன்றாலுங் கலங்காத) கடலுங்கூட கலங்க,Kalanga - கலக்கும்படி கடுத்து,Kaduthu - வேகங்கொண்டு இழி,Ezhi - இழியா நின்றுள்ள கங்கை,Gangai - கங்கா தீரத்திலுள்ள கண்டம் என்னும் படி நகர்;,Kandam Ennum Padi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது வட திசை,Vada Thisai - வடக்கிலுள்ள மதுரை,Mathurai - ஸ்ரீ மதுரையும் சாளக்கிராமம்,Saalakkiraamam - ஸ்ரீ ஸாளக்ராமமும் வைகுந்தம்,Vaikuntham - ஸ்ரீவைகுண்டமும் துவரை,Thuvaarai - ஸ்ரீத்வாரகையும் அயோத்தி,Ayoththi - திருவயோத்தையும் இடம் உடை,Edam Udai - இடமுடைத்தான (விசாலமான) வதரி,Vathari - ஸ்ரீ பதரிகாஸ்ரமுமாகிற இவற்றை இடவகை உடைய,Edavagai Udaiya - வாஸஸ்தானமாக வுடையனான எம் புருடோத்தமன் இருக்கை,Em Purudhoaththaman Irukkai - ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம். |
| 400 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10 | மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கி மூன் றெழுத்தை ஏன்று கொண் டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய எம் புரு டோத்தம னிருக்கை மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான் கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-10 | கான்,Kaan - கறு நாற்றம் கமழா நின்றுள்ள தட,Thada - பெரிய பொழில்,Pozhil - சோலைகளினால் சூழ்,Soozh - சூழப் பெற்ற கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகர் ;,Gangaiyin Karaimeel Kandam Ennum Kadi Nagar - கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகர் ; மூன்று எழுத்ததனை,Moonru Ezhuthadhanai - அகார மகார ஸ்வரூபமான ‘ஓம்’ என்னும் பிரணவத்தை மூன்று எழுத்தனால்,Moonru Ezhuthanaal - (‘நிருக்தம்’ என்று) மூன்றக்ஷராமன பெயரை யுடைத்தான நிர்வசக ப்ரியையாலே மூன்று எழுத்து ஆகி,Moonru Ezhuthu Aagi - (மூன்று பதமாய் மூன்று அர்த்தத்துக்கு வாசகமாயிருக்கும்) மூன்றெழுத்தாகப் பிரித்து மூன்று எழுத்தை,Moonru Ezhuthai - (அந்த) மூன்றெழுத்தை (பிரணவத்தை) ஏன்று கொண்டிருப்பார்க்கு,Eenru Kondiruppaarkku - (தஞ்சமாக நினைத்து) அது ஸந்திக்குமவர்கள் பக்கலில் இரக்கம் நன்கு உடைய,Erakkam Nanku Udaiya - சிறந்த கருணையையுடையவனும் மூன்று அடி நிமிர்த்து,Moonru Adi Nimirththu - அந்த பிரணவத்தை நம பத்தோடும் நாராயண பத்தோடும் நாராயண பத்தோடுங்கூட்டி மூன்று பதமாக்கி (திருவஷ்டாக்ஷரமாக்கி) மூன்றினில்,Moonrinil - (அந்த) மூன்று பதங்களிலும் தோன்றி,Thonri - (ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம் அநந்ய போக்யத்துவமாகிற மூன்று ஆகாரங்களையும்) தோன்றுவித்து. மூன்றினில்,Moonrinil - அந்த ஆகார த்ரயத்துக்கும் பிரதி ஸம்பந்தியாக மூன்று உரு ஆனான்,Moonru Uru Aanaan - (காணும்) சேஷித்வம் ப்ராப்யத்வம் என்கிற மூன்று ஆகாரங்களை யுடையவனுமான எம் புருடோத்தமன் இருக்கை,Em Purudhoaththaman Irukkai - ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம். |
| 401 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 11 | பொங்கொலி கங்கைக் கரை மலி கண்டத்து உறை புரு டோத்தம னடிமேல் வெங்கலி நலியா வில்லி புத் தூர்க் கோன் விட்டு சித்தன் விருப் புற்று தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந்த கணக்காமே–4-7-11 | இத்திருமொழி,Iththirumozhi - நீர்க் கொழிப்பால் வந்து கிளர்த்தியை யுடையதும் ஒலி,Oli - கோபத்தை உடையதுமான கங்கை கரை,Gangai Karai - கங்கைக் கரையிலுள்ளதும் மலி,Mali - எல்லா வகை ஏற்றங்களை உடையதுமான. கண்டத்து,Kandaththu - திருக் கண்டங் கடி நகரில் புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தப் பெருமானுடைய அடி மேல்,Adi Meel - திருவடிகளில், வெம்கலி நலியா,Vemkali Naliya - கொடிய கலியினால் நலியப் பெறாத வில்லிபுத்தூர் கோன்,Villipuththoor Kon - ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் விருப்புற்ற,Viruppu Utra - ஆசைப் படல் தங்கிய அன்பால்,Thangiya Anbaal - நிலை நின்ற பக்தியினால் செய்,Sey - அருளிச் செய்த தமிழ் மாலை,Thamizh Maalai - இத்திருமொழி தங்கிய,Thangiya - நிலை நின்றிருக்கப்பெற்ற நா உடையார்க்கு,Naa Udaiyaarkku - நாக்கை உடையவர்களுக்கு கங்கையில்,Gangaiyil - கங்காநதியில் குளித்து,Kuliththu - நீராடி திருமால்,Thirumaal - ஸ்ரீயபதியினுடைய இணை,Inai - ஒன்றொடொன்றொத்த கழல் கீழே,Kazhal Keezhe - திருவடிகளின் கீழே இருந்த கணக்கு ஆம்,Irundha Kanakku Aam - நிரந்தரவேலை பண்ணுமையாகிற பயன் பெற்றதாகும். |
| 402 | பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 1 | மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர் தோதவத்தித் தூய் மறையோர் துறை படியத் துளும்பி எங்கும் போதில் வைத்த தேன் சொரியும் புனலரங்க மென்பதுவே –4-8-1 | மறி,Mari - அலையெறியா நின்றுள்ள கடல்வாய் போய்,Kadalvaai Poi - கடலிற் புகுந்து மாண்டானை,Maandaanai - முதலைவாயி லகப்பட்டு உயிரொழிந்த மாதவத்தோன் புத்திரன்,Maadhavaththon Puththiran - மஹா தபஸ்வியான ஸாந்தீபிணியினுடைய பிள்ளையை ஒதுவித்த தக்கணையா,Othuvitha Thakkanaiyaa - (ஸாந்திபிகி தன்னை) அத்யாகம் பண்ணுவித்ததற்கு தக்ஷிணையாக உரு உருவே,Uru Uruve - (அப்புத்திரன் மரணமடையும் போதுள்ள ரூபம் மாறாதபடி) யதா ரூபமாக கொடுத்தான்,Koduththaan - (கொணர்ந்து) கொத்தருனின எம்பெருமானுடைய ஊர்,Oor - திருப்பதியாவது; தோதவத்தி,Thothavathi - பரிசுத்தமாகத் தோய்த்து உலர்த்தின வஸ்திரங்களை அணியா நிற்பவரும் தூய் மறையோர்,Thooy Maraiyoor - நிர்த்தோஷ ப்ரமாணமான வேதத்தைத் தமக்கு நிரூபகமாக வுடையவருமான ஸ்ரீவைஷ்ணவர்கள் துறை,Thurai - காவேரித் துறைகளில் படிய,Padiya - அவகாஹிக்க (அதனால்) எங்கும்,Engum - அக் காவேரி முழுதும் துளும்பி,Thulumbi - அலை மோதப் பெற்று (அதனால் தாமரை மலர்களின் கானங்கள் அலைய) போதில்,Pothil - (அந்தப்) பூக்களில் வைத்த,Vaiththa - இரா நின்றுள்ள தேன்,Then - தேனானது சொரியும்,Soriyum - பெருகப் பெற்ற புனல்,Punal - நீரை யுடைய அரங்கம் என்பது,Arangam Enbathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம். |
| 403 | பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 2 | பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர் மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார் வரு விருந்தை யளித்திருப்பார் சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்க மென்பதுவே–4-8-2 | பிறப்பு அகத்தே,Pirappu Agaththe - ஸூதிகா க்ருஹத்திலேயே மாண்டு ஒழிந்த,Maandu Ozhindha - இறந்தொழிந்த பிள்ளைகளை நால்வரயும்,Pillaigalai Naalvarayum - புத்திரர்கள் நால்வரையும் இறைப் பொழுதில்,Irai Pozhuthil - ஒரு நொடிப் பொழுதில் கொணர்ந்து,Konarndhu - (ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து கொடுத்து,Koduththu - மாதா பிதாக்கள் கையில் கொடுத்து ஒருப்படுத்த,Orupadutha - (இப் பிள்ளைகள் எம் பிள்ளைகள் தான் என்று) ஸம்மதி பண்ணுவித்த உறைப்பன்,Uraippan - சத்தியந்தன் (எழுந்தருளி யிருக்கிற) ஊர்,Oor - தீருப்பதியாவது: மறை,Marai - வேதங்களிற் கூறப்பட்டுள்ள (வைதிகமான) பொருந்தி,Porundhi - சிறந்த (மூன்று) அக்நிகளையும் வளர்த்து இருப்பவர்,Valarththu Irupavar - (அலிச்சிந்தமாக) வளர்த்துக் கொண்டிருப்பவர்களும் வரு,Varu - (தத்தம் திருமாலிகைக்கு) எழுந்தருளுகிற விருந்தை,Virundhai - அதிதிகளான ஸ்ரீவைஷ்ணவர்களை அளித்திருப்பவர்,Aliththirupavar - ஆதரித்துப்வோருமவர்களும் சிறப்பு உடைய,Sirappu Udaiya - (இப்படிப்பட்ட) உத்கர்ஷங்களை யுடையவர்களுமான மறையவர்,Maraiyavar - வைதிகர்கள் வாழ்,Vaazh - வாழப்பெற்ற திரு அரங்கம் என்பதுவே….,Thiru Arangam Enbathuve - திருவாங்கமென்னுந் திருப்பதியாம். |
| 404 | பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 3 | மரு மகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன்மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர் திரு முகமாய்ச் செங்கமலம் திரு நிறமாய்க் கருங்குவளை பொரு முகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே–4-8-3 | மருமகன் தன்,Marumagan Than - மருமகனான அபிமன்யுவினுடைய சந்ததியை,Sandhathiyai - புத்திரனான பரிஷித்தை உயிர் மீட்டு,Uyir Meettu - மறுபடியும் உயிர் மீட்டு மைத்துனன் மார்,Maiththunan Maar - மைத்துனன்னாரான பாண்டவர்களுடைய உரு,Uru - சரீரமானது மகத்து,Magaththu - (பாரதயத்தமாகிற) நரமேதத்திலே வீழாமே,Veezhamae - விழுந்து அழிந்து போகாதபடி குரு முகம் ஆய்,Guru Mugam Aay - ஆசார்ய ரூபியாய் (ஹித உபதேசங்களைப் பண்ணி) காத்தான்,Kaaththaan - ரக்ஷித்தருளிய கண்ணபிரானுடைய ஊர்,Oor - திருப்பதியாவது: செம் கமலம்,Sem Kamalam - செந்தாமரை மலர்களானவை திரு முகம் ஆய்,Thiru Mugam Aay - (பெரிய பெருமாளுடைய) திருமுகத்துக்குப் போலியாகவும் கரு குவளை,Karu Kuvalai - நீலோத்பல புஷ்பங்கள் திரு நிறம் ஆய்,Thiru Niram Aay - திருமேனி நிறத்துக்குப் போலியாகவும் பொரு முகம் ஆய் நின்று,Poru Mugam Aay Nindru - (ஒன்றுக் கொன்று) எதிர் பொருகிற முகத்தை யுடைத்தாய் கொண்டு அலரும்,Alarum - நீர்வளத்தையுடைய புனல்,Punal - நீர் வளத்தை யுடைய அரங்கம் என்பது |
| 405 | பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 4 | கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர் தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4 | கூன்,Koon - கூனைவுடைய தொழுத்தை,Thozhuththai - வேலைக்காரியாகிய மந்தரை யானவள் சிதகு,Sithagu - (ஸ்ரீராமபட்டாபிஷேக மஹோத்வசத்துக்கு விநாசகமான தீய சொற்களை உரைப்ப,Uraippa - சொல்ல (அச் சொற்களை அங்கீகரித்துக் காட்டுக்கு எழுந்தருளச் சொன்ன) கொடியவள்,Kodiaval - மஹா க்ரூரையான கைகேயியினுடைய வாய்,Vaai - வாயிலுண்டான கடிய சொல்லைக் கேட்டு,Kadiya Sollai Kaettu - கடினமான சொல்லைக் கேட்டு ஈன்று எடுத்து தாயாரையும்,Eenru Eduththu Thaayaraiyum - (தன்னைப்) பெற்று வளர்த்த தாயான ஸ்ரீகௌஸலையாரையும் இராச்சியமும்,Iraachchiyamum - ராஜ்யத்தையும் ஆங்கு ஒழிய,Aangu Ozhia - கைவிட்டு தொழத்தை,Thozhaththai - அடிமைப் பெண் தாயார்,Thaayaar - பூஜையிற்பன்மை கண்டகர்,Kandhagar - முள்ளைப் போன்றவர் கான் தொடுத்த நெறி போகி,Kaan Thoduththa Neri Pogi - காடுகள் அடர்ந்திரா நின்றுள்ள வழியே (ஸ்ரீதண்டகாரணியத்திற்கு) எழுந்தருளி கண்டகரை,Kandhagarai - (முனிவர்களுக்கு) முள் போலப் பாதகராயிருந்த (ஜநஸ்தாந வாசிகளான ராக்ஷஸரை களைந்தான்,Kalaindhaan - நிரஸித்தருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற) ஊர்,Oor - திருப்பதி யாவது தேன் தொடுத்த மலர்,Then Thoduththa Malar - தேன் மாறாத மலர்களை யுடைய சோலை,Solai - சோலைகளை யுடைத்தான திரு அரங்கம் என்பது.,Thiru Arangam Enpathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம். |
| 406 | பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 5 | பெரு வரங்களவை பற்றிப் பிழகுடைய இராவணனை உருவரங்கப் பொருதழித்து இவ் வுலகினைக் கண் பெறுத்தானூர் குருவரும்பக் கோங்கலரக் குயில் கூவும் குளிர் பொழில் சூழ் திருவரங்க மென்பதுவே என் திருமால் சேர்விடமே–4-8-5 | குரவு,Kuravu - குரவ மரங்களானவை அரும்ப,Arumba - அரும்பு விடா நிற்க கோங்கு,Kongu - கோங்கு மரங்களானவை அலரா,Alaraa - அலரா நிற்க. குயில்,Kuyil - குயில்களானவை கூவும்,Koovum - (களித்துக்) கூவும்படியான குளிர் பொழில் சூழ்,Kulir Pozhil Soozh - குளிர்ந்த சோலைகளாலே சூழப் பெற்ற திரு அரங்கம் என்பது,Thiru Arangam Enpathu - திருவரங்கமென்னும் திருப்பதியானது; பெரு வரங்களவை ,Peru Varangalavai - பெருமை பொருந்திய வரங்களை பற்றி,Patri - பலமாகக் கொண்டு பிழக்கு உடைய,Pizhakku Udaiya - (தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாக வுடைய இராவணனை,Eraavananai - இராவணனுடைய உரு,Uru - உடலானது மங்க,Mangga - சிந்நபிந்நமாம்படி பொருது அழித்து,Porudhu Azhiththu - போர் செய்து (அவனைத்) தொலைத்த இ உலகினை,E Ulaginai - இந்த லோகத்தை கண் பெறுத்தான்,Kan Peruththaan - காத்தருளினவனும் என்,En - எனக்குத் தலைவனும் திருமால்,Thirumaal - ச்ரிய: பதியுமான எம்பெருமான் சேர்வு இடம்,Saarvu Idam - சேருமிடாகிய ஊர்,Oor - திருப்பதியாம் |
| 407 | பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 6 | கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே ஆழி விடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர் தாழை மடலூடுரிஞ்சித் தவள வண்ணப் பொடி யணிந்து யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே–4-8-6 | கீழலகில்,Keezhlagil - பாதாள லோகத்திலுள்ள அசுரர்களை,Asuraralai - அஸுரர்களை கிழக்க இருந்து,Kizhakka Irundhu - அடக்கிடந்து கிளராமே,Kilaramae - கிளம்ப வொட்டாதபடி ஆழி விடுத்து,Aazhi Viduththu - திருவாழியாழ்வானை ஏவி அவருடைய,Avarudaiya - அவ் வசுரர்களுடைய கரு,Karu - கர்ப்பந்தமாக அழித்த,Azhiththa - அழித்தருளினதாலும் அழிப்பன்,Azhippan - சத்ருக்களைத் தொலைத் தருளுவதையே இயல்பாக வுடையவனுமான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) ஊர்,Oor - திருப்பதி யாவது: யாழ்,Yaazh - (வீணையினுடைய ஓசை போன்ற) இன் ஓசை,In Osai - இனிய இசையையுடைய வண்டு இனங்கள்,Vandu Inangal - வண்டுகளின் திரள்களானவை தாமழை மடலூடு,Thaamazhai Madaloodu - (மலரத் தொடங்குகிற) தாழை மடல் முன்னே உறிஞ்சி,Urinji - உடம்பை உரசிக் கொண்டு (புகுந்து) தவள வண்ணப் பொடி,Thavala Vannapp Podi - (அம்மடலிலுள்ள)வெளுத்த நிறத்தையுடைய வண்ணத்தை அணிந்து,Aninthu - உடம்படங்கலும் அணிந்து கொண்டு ஆளம் வைக்கும்,Aalam Vaikkum - (அந்தக் களிப்பிலே) தெனதென என்று ஆளத்தி வைத்து பணிமிடமான அரங்கம்,Arangam - திருவரங்கம் |
| 408 | பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 7 | கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர் தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு தெழிப்புடைய காவிரி வந்து அடி தொழும் சீரரங்கமே–4-8-7 | கொழுப்பு உடைய,Kozhuppu Udaiya - கொழுப்பை யுடையதும் செழு,Sezhu - செழுமை தங்கியதுமான குருதி,Kurudhi - ரத்தமானது கொழித்து,Kozhiththu - ஊற்று மாறாமல் கிளர்ந்து இழிந்து,Izhindhu - நிலத்தில் பரவி குமிழ்ந்து,Kumizhndhu - குமிழி கிளம்பி பிழக்கு உடைய,Pizhakku Udaiya - (பர ஹிம்சையாகிய) தீமைகளைச் செய்கிற அசுரர்களை,Asuraralai - அஸுரர்களை பிணம் படுத்த,Pinam Paduththa - பிணமாக்கி யருளின பெருமான்,Perumaan - எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற) ஊர்,Oor - திருப்பதியானது: தழுப்பு அரிய,Thazhuppu Ariya - (ஒருவரிருவரால்) தழுவ முடியாத சந்தனங்கள்,Santhanangal - சந்தந மரங்களை தடவரைவாய்,Thadavarai Vaai - பெரியமலைகளினின்று ஈர்த்துக் கொண்டு,Eerththuk Kondu - (வேரோடே பிடுங்கி) இழுத்துக் கொண்டு வந்து தெழிப்பு உடைய,Thezhippu Udaiya - (இவற்றைத் திருவுள்ளம் பற்றவேணும் என்று எம்பெருமானைப் பிராரத்திக்கின்றதோ என்னலாம்படி) இரைச்சலை யுடைய காவிரி,Kaaviri - திருக்காவேரி நதியானது அடி தொழும்,Adi Thozhum - (எம்பெருமானது) திருவடிகளைத் தொழுகையாகிற சீர்,Seer - சீர்மையைப் பெற்ற அரங்கம்,Arangam - திருவரங்க நகராம். |
| 409 | பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 8 | வல் லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய் எல்லை யில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர் எல்லியம் போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி மல்லிகை வெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே–4-8-8 | வல் எயிறு கேழலும் ஆய்,Val Eyiru Kezhllum Aay - வலிவுள்ள பற்களையுடைய வராஹமாய்த் திருவவதரித்தும், வாள் எயிறு சீயமும் ஆய்,Vaal Eyiru Seeyamum Aay - ஒளியையுடைய பற்களையுடைய நரஸிம்ஹமாயத் திருவவதரித்தும் எல்லை இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான்,Ellai Illaa Dharaniyaiyum Avuṇanaiyum Idandhaan - ஹிரண்யாஸுரனையும் கிண்டருளின எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) ஊர்,Oor - திருப்பதியாவது இரு சிறை வண்டு,Eru Sirai Vandu - பெரிய சிறகுகளையுடைய வண்டுகளானவை எல்லியம் போது,Elliyam Podhu - அந்திப் பொழுதிலே எம்பெருமான் குணம் பாடி,Emperumaan Gunam Paadi - பெரிய பெருமாளுடைய திருக் குணங்களைப் பாடிக் கொண்டு மல்லிகை வெண் சங்கு ஊதும்,Malligai Ven Sangu Uudhum - மல்லிகைப் பூவாகிற வெளுத்த சங்கை ஊதா நிற்கப் பெற்றதும் மதில்,Mathil - திருமதிள்களை யுடையதுமான அரங்கம் என்பது,Arangam Enpathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம். |
| 410 | பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 9 | குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமாலூர் குன்றாடு பொழில் நுழைந்து கொடியிடையார் முலை யணவி மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே–4-8-9 | குன்று ஆடு,Kundru Aadu - மலையினுச்சியிற் சார்ந்த கொழு முகில் போல்,Kozhu Mugil Pol - நீர் நிறைந்த மேகம் போலவும் குவளைகள் போல்,Kuvalaigal Pol - கரு நெய்தல் பூப்போலவும் குரை,Kurai - ஒலி செய்யா நின்ற கடல்போல்,Kadal Pol - கடல்போலவும் நின்று ஆடு,Nindru Aadu - (களிப்பாலே) நின்று ஆடா நின்றுள்ள மயில் கணம் போல்,Mayil Kanam Pol - மயில்களின் திரள்போலவும் (இரா நின்ற) நிறம் உடைய,Niram Udaiya - வடிவழகை யுடையவனான நெடுமால்,Nedumaal - எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) ஊர்,Oor - திருப்பதி யாவது தென்றல்,Thendral - தென்றல் காற்றானது குன்று,Kundru - (மலய) பர்வதத்திலுள்ள பொழிலூடு,Pozhiloodu - சோலைகளினிடையிலே அழைத்து,Azaiththu - அழைத்து கொடி இடையார்,Kodi Idaiyaar - (அங்குள்ள பூத்களின் தாதுகளை அனைத்து பரிமளத்தைக் கொய்து கொண்டு) கொடி போன்ற இடையை யுடையரான பெண்களினுடைய முலை,Mulai - (கலவைச் சாந்தணிந்த) முலைகளை அணவி,Anavi - வியாபித்து மன்றூடு,Mandru Oodu - (அந்தப் பரிமளத்துடனே) நாற்சந்திகளினூடே உலாம்,Ulaam - உலாவப் பெற்ற மதிள் அரங்கம் என்பது |
| 411 | பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 10 | பரு வரங்களவை பற்றிப் படையாலித் தெழுந்தானை செரு வரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதி மேல் திருவரங்கத் தமிழ் மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு இருவரங்க மெரித்தானை ஏத்த வல்லா ரடியோமே-4-8-10 | பருவரங்கள் அளை பற்றி,Paruvarangal Alai Patri - பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற பெரிய வரங்களைப் பலமாகக் கொண்டு படை ஆலித்து எழுந்தானை,Padai Aaliththu Ezhundhaanai - யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப் புறப்பட்ட இராவணனை செரு,Seru - யுத்தத்திலே அரங்க,Aranga - ஒழியும்படி பொருது,Porudhu - போர் செய்து அழித்த,Azhiththa - ஒழித்தருளின திருவாளன்,Thiruvaalan - (வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய திருப்பதி மேல்,Thiruppathi Mel - (திருவரங்கமென்னும்) திருப்பதி விஷமாக விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார் விரித்தன,Viriththana - அருளிச் செய்த திரு அரங்கம் தமிழ் மாலை கொண்டு,Thiru Arangam Tamil Maalai Kondu - (பாட்டுத் தோறு ம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய தமிழ் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையுங்கொண்டு. இருவர் அங்கம் மெரித்தானை,Iruvar Angam Meriththaanai - (மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத் (திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை ஏத்தவல்லார்,Eaththavallaar - துதிக்க வல்லவர்களுக்கு அடியோம்,Adiyom - அடிமை செய்யக்கடவோம். |
| 412 | பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (முதல் பாட்டு மீண்ட எழுந்து அருளுமதுக்கு விஸ்வாசமாக ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு திருவடி நிலைகளை கொடுத்து போய் – தேவர்களுக்கு விரோதியான ராவணாதிகளை நிரசித்து -மீண்டு வந்து லோகத்தை ஆண்டு அருளினவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார்.) 1 | மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ செரு உடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில் திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே –4-9-1 | தம்பிக்கு,Thambikku - சித்திர கூடத்தில் வந்த ப்ரபத்தி பண்ணின) பரதாழ்வானுக்கு மரவடியை ,Maravadiyai - (மலய) பர்வதத்திலுள்ள ஸ்ரீபாதுகைகளை வான் பணயம் வைத்து,Vaan Panayam Vaiththu - நன்றாக நம்புசைக்கு உரிய அடாக அளித்து வானோர் வாழ,Vaanor Vaazha - தேவர்கள் வாழும்படி போய்,Poy - (சித்திரக் கூடத்தைவிட்டு அவ்வருகே ) எழுந்தருளி செருஉடைய திசை கருமம்,Seru Udaiya Thisai Karumam - யுத்தத்துக்கு உரிய தெற்குத்திக்கில் செல்ல வேண்டிய காரியங்களை திருத்தி,Thiruththi - குறையறச்செய்து முடித்துவிட்டு வந்து,Vanthu - (பிராட்டியுடன் அயோத்திக்கு) எழுந்தருளி உலகு ஆண்ட,Ulagu Aanda - ராஜ்யபரிபாலநம் செய்தருளின திருமால்,Thirumaal - ச்சரியபதி (எழுந்தருளியிருக்கிற) கோயில்,Koyil - கோயிலாவது; திரு அடி தன்,Thiru Adi Than - ஸர்வஸ்வாமியான் பெரிய பெருமாளுடைய திரு உருவும்,Thiru Uruvum - திருமேனி நிறத்தையும் திரு மங்கை,Thiru Mangai - பெரிய பிராட்டியருடைய மலர் கண்ணும்,Malar Kannum - மலர்ந்த திருக்கண்ணனின் நிறத்தையும் காட்டி நின்ற,Kaatti Nindra - பிரகாசிப்பியா நின்ற உரு உடைய,Uru Udaiya - அழகு பொருந்திய நீலம் மலர்,Neelam Malar - கறாநெய்தற் பூக்களானவை காற்று ஆட்ட சலிக்கும்,Kaatru Aatta Salikkum - காற்று அசைக்க அசைக்க கொண்டிருக்கப்பெற்ற ஒளி,Oli - ஒளிபொருந்திய அரங்கம்,Arangam - திருவரங்கம் |
| 413 | பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (இரண்டாம் பாட்டு – புருஷகார பூதையான பிராட்டி தானே சிதகுரைக்கிலும் -அவளோடு மறுதலித்து நின்று ஆஸ்ரிதரை ரஷித்து அருளும் ஸ்ரீ பெரிய பெருமாள் குணத்தை அருளிச் செய்து -இப்படி இருக்கிற இவர்க்கு ஒழிய வேறு ஒருவர்க்கு ஆளாவாரோ என்கிறார்.) 2 | தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே –4-9-2 | தன் அடியார் திறத்தகத்து,Than Adiyaar Thiraththagathu - தன்னுடைய (எம்பெருமானுடைய) அடியவர்கள் விஷயத்தில் தாமரையாள் ஆகிலும்,Thaamaraiyaal Aagilum - (புருஷகாரம் பண்ணக்கடவளான) பெரியபிராட்டியார்தாமே சிதகு,Sithagu - குற்றங்களை உரைக்கும் என்,Uraikkum En - கணக்கிட்டுச் சொல்லத் தொடங்கினாலும் என் அடியார்,En Adiyaar - “எனக்கு அடிமைப்பட்டவர்கள் அது,Adhu - அக்குற்றங்களை செய்யார்,Seiyaar - செய்யமாட்டார்கள்; செய்தார் என்,Seithaar En - (செய்தகுற்றத்தைப் பொறுப்பதற்கு எம்பெருமானுண்டு என்று சிலவற்றைச் செய்தார்களாயினும் நன்றி செய்தார் என்பர்,Nandri Seithaar Enbar - (அவர்கள்) நன்மையையே செய்தார்களத்தனை” என்று சொல்லா நிற்பவரும், மன் உடைய,Man Udaiya - ஐச்வரியம் பொருந்திய விபீடணற்கா,Vibeedanarkaa - விபீஷணாழ்வானுக்காக மதிள் இலங்கை திசை நோக்கி,Mathil Ilangai Thisai Nookki - மதிளையுடைய லங்கையின் முகமாக மலர்கண் வைத்த,Malarkan Vaitha - மலர்ந்த திருக்கண்களை வைத்தருளினவனும் என்னுடைய,Ennudaiya - எனக்கு ஸ்வாமியுமான திரு அரங்கற்கு அன்றியும்,Thiru Arangarku Andriyum - பெரிய பெருமாளையொழிய மற்று ஒருவர்க்கு,Matru Oruvarkku - வேறொருவர்க்கு ஆள் ஆவரே,Aal Aavare - ஆட்படுவோர் ஆரேனுமண்டோ. |
| 414 | பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (மூன்றாம் பாட்டு விரோதி நிரசன சீலனாய் -அடியார் ஆனவர்களை புநராவர்த்தி இல்லாதபடி ஸ்ரீ பரம பதத்தில் கொடு போய் வைத்து அடிமை கொள்ளுமவன் வர்த்திக்கும் தேசம் இது என்கிறார்) (ஏணி வாங்கி-தன்னுடைய உபாய பாவம் தவிர்த்து புருஷார்த்தம் பகவத் அனுபவம் அருளுவானே ) 3 | கருளுடைய பொழில் மருதம் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும் உருளுடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டோசை கேட்டான் இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே –4-9-3 | கருள் உடை,Karul Udai - (கிருஷ்ணனை நலிய வேணும் என்கிற) சீற்றத்தையுடையதும் பொழில்,Pozhil - (மன விழுப்புண்ணும்படி புறம்பே) சோலை செய்து நிற்பதுமான மருதும்,Marudhum - (இரட்டை) மருத மரங்களையும் சதம்,Satham - மிக்க கோபத்தையுடைய களிறும்,Kalirum - குலையாபீடத்தையும் பிலம்பளையும்,Pilampalaiyum - ப்ரலம்பாஸுரனையும் கடிய,Kadiya - மிகவும் க்ரூரான மாவும்,Maavum - குதிரை வடிவாய் வந்த நேசியையும் உருள் உடைய,Urul Udaiya - உருண்டுவந்த சகடினையாய்,Sakadinaiaay - சகடாஸுரனையும் மல்லரையும்,Mallaraiyum - மல்லர்களையும் உடையவிட்டு,Udaiyavittu - நிரஹித்தருளி ஓசை கேட்ட என்,Osai Ketta En - கீர்த்திபெற்றவனும் இருள் அகற்றும்,Irul Agatrum - இருளைப் போக்காநின்ற எறிகதிரேசன்,Erikathiresan - வீசுகின்ற கிரணங்களையுடையனான ஸூர்யனுடைய மண்டலத்தூடு,Mandalaththuudu - மண்டலத்தினுள்ளே அடியவரை,Adiyavarai - அடியார்களை ஏற்றி,Eatri - ஏறச்செய்து வைத்து,Vaiththu - (அங் கு நின்றும் அர்ச்சிராதி மார்க்கமாகப் பரமபதத்திற்குக் கொண்டுபோய்)(அங்கு அவர்களை) நிறுத்தி ஏணி வாங்கி,Eani Vaangi - தன்னுடைய உபாயத்வரகாரத்தைத் தவிர்த்து அருள் கொடுத்திட்டு,Arul Koduththittu - (அவர்கள் அவ்விடத்தில் நின்றும் மீளாமைக்கும் கைங்கரிய லாபத்திற்கு முறுப்பாக அவர்கள் பக்கல்) க்ருபைபண்ணி ஆட் கொள்வான்,Aat Kolvaan - அடிமை கொள்ளுமவனுமான எம்பெருமாள் அமரும்,Amarum - பொருந்தி எழுந்தருளியிருக்கிற ஊர்,Oor - திருப்பதியாவது அணி அரங்கம்,Ani Arangam - அழகிய திருவரங்கமாம். |
| 415 | பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (நான்காம் பாட்டு ஸ்ரீ மத் த்வாரகையிலே -பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய இருந்தவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் .) 4 | பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில் புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே –4-9-4 | துவரை என்னும் அதில்,Thuvarai Ennum Adhil - ஸ்ரீத்வாரகை யென்கிற பட்டணத்தில் பதினாறு ஆம் ஆயிரம் தேவிமார்,Pathinaaru Aam Aayiram Devimaar - (ஆயர் மங்கைகளாகிய) பதினாராயிரம் தேவிமார் பணி செய்ய,Pani Seiyya - கைங்கரியம் பண்ண, நாயகர் ஆகி,Naayagar Aagi - (அவர்களுக்கு) நாயகராய்க் கொண்டு வீற்றிருந்த,Veetrirundha - (அவர்களின் நடுவே) எழுந்தருளியிருந்த மணவாளர்,Manavaalar - மணவாளப்பிள்ளை மன்னு,Mannu - (அழகியமணவாளப் பெருமாளாய்) நித்தியவாஸம் பண்ணுகிற கோயில்,Koyil - கோயிலாவது; புதுநாள் கமலம் மலர்,Pudunaal Kamalam Malar - அப்போதலர்ந்த செவ்விய தாமரை பூவானது எம்பெருமான்,Emperumaan - எம்பெருமானுடைய பொன் வயிற்றில்,Pon Vayitril - அழகிய திருநாபியிலுள்ள பூபோல்வான்,Poopolvaan - தாமரைப்பூவோடு ஸாம்யம் பெறுவதற்காக பொதுநாயகம் பாவித்து,Podhunaayagam Paaviththu - ஸர்வநிர்வாஹகத்தைப் பாவித்து இறுமாந்து,Irumanthu - (அப்பாவனையாலே) கர்வங்கொண்டு பொன் சாய்க்கும்,Pon Saikkum - (மற்ற தாமரைகளின்) அழகைத் தள்ளிவிடா நின்றுள்ள புனல்,Punal - நீர்வளத்தையுடைய அரங்கம்,Arangam - திருவரங்கமாம். |
| 416 | பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஐந்தாம் பாட்டு – ஸ்ரீ நாரத பகவானுக்கு தன் வைபவத்தை பிரகாசிப்பித்த ஸ்ரீ சர்வேஸ்வரன் -அவன் பக்கலிலே ஸ்தோத்ரம் பண்ணி வணங்க -கண் வளர்ந்த தேசம் இது என்கிறார்.) 5 | ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான் சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே –4-9-5 | ஆமை ஆய்,Aamai Aay - (ஸ்ரீநாரத் மஹர்ஷிக்குத் தன்னுடைய ஸர்வாதிகத்ததுவத்தை விளங்கச் செய்வதற்காக) (முதலில் கங்காஜலத்துக்குள்) ஆமையாயும் கங்கை ஆய்,Gangai Aay - (பின்பு அந்த ஆமைமுதலிய ஜந்துக்களுக்கு இருப்பிடமான) கங்கையாயும் ஆழ் கடல் ஆய்,Aazh Kadal Aay - (பின்பு அக்கங்கை முதலிய நதிகளுக்குப் புகலிடமான) ஆழ்ந்து கடலாயும் அவனி ஆய்,Avani Aay - (பின்பு அக்கடலுக்கு இருப்பிடமான) பூமியாயும் அவனி அய்,Avani Ay - (பின்பு) அப்பூமிக்கு ஆதாரமான) பெரியமலைகளாயும் அரு வரைகள் ஆய்,Aru Varaigal Aay - (பின்பு) அப்பூமிக்கு ஆதாரமான) பெரியமலைகளாயும் நான்முகன் ஆய்,Naanmugan Aay - (பின்பு அம்மலைகளுக்கு ஸ்ருஷ்டிகர்த்தாவான) சதுர்முகனாயும் நால்மறை ஆய்,Naalmurai Aay - (பின்பு அச்சதுர்முகனுக்குத் தாரகமான) நான்கு வேதங்களாயும் வேள்வி ஆய்,Velvi Aay - (பின்பு வேதாந்தங்களுக்குப் பராபணமான) யாகங்களாகவும் தக்கணை ஆய்,Thakkanai Aay - (பின்பு அந்த யாகங்களுக்கு விர்யத்தைக் கொடுக்க வல்ல) தக்ஷிணையாகவும் தானும் ஆனான்,Thaanum Aanaan - (அந்த தக்ஷிணை முகமாக அனைவர்க்கும் அவரவர்கள் விரும்பின பலத்தைக் கொடுக்கவல்ல அஸாதாரண விக்ரஹ விசிஷ்டனான) தானகவும், சேமம் உடை,Saemam Udai - (ப்ரஹ்மபாவணையில் நிஷ்ட்டையாகிற) க்ஷேமத்தையுடைய நாரதனார்,Naarathanar, Naradhar - ஸ்ரீநாரத பகவான் சென்று சென்று,Sendru Sendru - பலகாலும் எழுந்தருளி துதித்து,Thudiththu - ஸ்தோத்திரம் பண்ணி இறைஞ்சி,Irainji - வணங்கும்படி கிடந்தான்,Kidandhaan - பள்ளிகொண்டருள் பவனாகவும் இராநின்ற எம்பெருமானுடைய கோயில்,Koyil - கோயிலாவது புள் இனங்கள்,Pul Inangal - (அன்னம் முதலிய) பறவைக்கூட்டங்கள் பூ,Poo - (நீர்ப்பூ முதலிய) பூக்களில் மருவி,Maruvi - பொருந்தியிருந்து புள் அரையன்,Pul Araiyan - தங்கள் சாதிக்குத் தலைவனான பெரிய திருவடியினுடைய புகழ்,Pugazh - கீர்த்தியை குழறும்,Kuzharum - அநக்ஷரரஸமாகப் பேசாநிற்கப் பெற்றதும் புனல்,Punal - நீர்வளத்தையுடையதுமான அரங்கம்,Arangam - திருவரங்க நகராம் |
| 417 | பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஆறாம் பாட்டு திரௌபதியை குழல் முடிப்பித்து –பாண்டவர்களை ராஜாக்கள் ஆக்கி -உத்தரா தநயனையும் உஜ்ஜீவிப்பித்தவன்- நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இது என்கிறார்.) 6 | மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன் உறையும் கோயில் பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும் சித்தர்களும் தொழுது இறைஞ்சி திசை விளக்காய் நின்ற திருவரங்கமே –4-9-6 | மைத்துனன் மாரி,Maiththunan Maari - (தனது) மைத்துனன்மாரான பாண்டவர்களுடைய காதலியை,Kaathaliyai - பத்தினியாகிய த்ரௌபதியை மயிர் முடிப்பித்து,Mayir Mudippiththu - விரிந்த கூந்தலை முடியும் படி செய்தருளி அவர்களைளேயே,Avargalaiyeye - அப்பாண்டவர்களையே மன்னர் ஆக்கி,Mannar Aakki - அரசான்வித்தளியவனும் உத்தரை தன்,Uththarai Than - (அபிமந்யுவின் மனைவியான) உத்தரை என்பவளுடைய சிறுவனை,Siruvanai - மகனான (கருவிற் கரிக்கட்டையாயொழிந்த) பரிக்ஷித்தை உய்யக் கொண்ட,Uyyak Konda - உயிர்பெற்றெழுந்திருக்கும் படி செய்தருளியவனும் உயிர் ஆளன்,Uyir Aalan - எல்லா உயிர்கட்கும் தலைவனுமான எம்பெருமான் உறையும்,Urayum - எழுந்தருளயிருக்கிற கோயில்,Koyil - கோயிலாவது; பத்தர்களும்,Paththargalum - பக்தர்களும் பழ மொழி வாய் முனிவர்களும்,Pazha Mozhi Vaai Munivargalum - அநாதிவாக்காகிய வேதத்தை வாயிற்கொண்டுள்ள ரிஷிகளும் பரந்த நாடும்,Parantha Naadum - விசாலமான நாட்டிலுள்ள மற்றும் பலரும் சித்தர்களும்,Siththargalum - நித்திய முக்தர்களும் தொழுது இறைஞ்ச,Thozhuthu Irainja - அஞ்சாலி பண்ணி வணங்கும்படி திசை விளக்கு ஆய்நிற்கின்ற,Thisai Vilakku Aaynirkkinra - எல்லாத் திக்குகளுக்கும் விளக்காயிருக்கிற திருவரங்க நகராம் |
| 418 | பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஏழாம் பாட்டு-ஸ்ரீ வாமனனாய் மாவலியை குறும்பதக்கி-ராஜ்யத்தை வாங்கி -அவனை பாதாளத்திலே வைத்தவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார்.) 7 | குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பதக்கி அரசு வாங்கி இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த வெம்மான் கோயில் எறிப்புடைய மணி வரைமேல் இள நாயிறு எழுந்தால் போல் அரவணையின் வாய்ச் சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே –4-9-7 | குறள் பிரம சாரி ஆய்,Kural Brama Saari Aay - வாமக ப்ரஹ்மசாரியாய் (எழுந்தருளி) பக வலிமை,Paga Valimai - மஹாபலியினடைய குறும்பு அதக்கி,Kurumbu Athakki - செருக்கை அடக்கி அரசு,Arasu - (அவனுடைய) ராஜ்யமாயிருந்த பக்ஷமியை வாங்கி,Vaangi - (தன்னுடையதாம் படி நீரேற்றுப்) பெற்று இறைப் பொழுதில்,Iraip Pozhudil - க்ஷணகாலத்துக்குள் பாதாளம்,Paadhaalam - பாதாளலோகத்தை கலவிருக்கை கொடுத்து,Kalavirukkai Koduththu - (அவனுக்கு) இருப்பிடமாகக் கற்பித்து உதந்த,Uthantha - (இந்திரன் வேண்டுகோளைத் தலைக்கட்டினோம் என்று) மகிழ்நத எம்மான்,Emmaaan - எமது தலைவனான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) கோயில்,Koyil - கோயிலாவது எறிப்பு உடைய,Erippu Udaiya - மிக்க ஒளியையுடைய மணி வரை மேல்,Mani Varai Mel - நீலரத்ந பர்வதத்தின்மேல் இள ஞாயிறு,Ila Nyaayiru - காலஸூரியர்கள் எழுந்தால் போல்,Ezhundhaal Pol - உதித்தாற்போல அறவு அணை பின் வாய்,Aravu Anai Pin Vaai - திருவனந்தாழ்வானிடத்து சிறப்பு உடைய,Sirappu Udaiya - அழகு பொருந்திய பணங்கள் மிக,Panangal Miga - படங்களின்மேல் செழு மணிகள்,Sezhu Manigal - செழுமை தங்கிய ரத்னங்களானவை விட்டு எறிந்தும்,Vittu Erindhum - மிகவும் ஜ்வலியா நிற்கப்பெற்ற திரு அரங்கம்,Thiru Arangam - திருவரங்கமாம் |
| 419 | பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (எட்டாம் பாட்டு அதி க்ரூரரான ஹிரண்யனை அடர்த்து பிடித்து நிரசித்தவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார்.) 8 | உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச் சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான் கோயில் உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட வரம் புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண் அரங்கமே –4-9-8 | மூலம் பற்றி,Moolam Patri - (தன்னுடைய) வலிமை நினைத்து (ச் செருக்குற்று) இரணியனை,Iraniyanai - இரணியாஸஷரனுடைய துப்புரிய மார்பு,Thuppuriya Maarbu - அழகிய மார்பை உகிர்நுதியாற் உறைக்க ஊன்றி,Ugirnuthiyaar Uraikka Oonri - நகங்களின் அணிகள் உள்ளே பொத்தும்படி (திருக்கைகளால்) பற்றிக்கொண்டு முடி,Mudi - (அவனது தலையிலுள்ள) கிரீடமானது இடிய,Idiya - பொடி படும்படியாகவும் கண்,Kan - கண்களானவை பிதுங்க,Pithunga - பிதுங்கும்படியாகவும் வாய் அரை,Vaai Arai - (வேதனை பொறுக்கமாட்டாமல்) வாய் விரியும்படியாகவும் சிரம்பற்றி,Sirampatri - தலையைப் பிடித்து நெரித்து தெழித்தான்,Thezhiththaan - (பிரஹலாதனுடைய விரோதியை முடித்தோமென்னும் மகிழ்ச்சியினால்) ஆரவாரம் செய்தருளின எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) கோயில்,Koyil - கோயிலானது; உரம் பெற்ற,Uram Petra - செழிப்புபொருந்திய கமலம் மலர்,Kamalam Malar - தாமரை மலர்களானவை உலகு அளந்த,Ulagu Alandha - மேலுலகை அளப்பதற்கு உயர்ந்த சே அடி போல்,Sey Adi Pol - திருவடியைப்போல் உயர்ந்து காட்ட,Uyarnthu Kaatta - உயர்ந்து விளங்க வரம்பு பெற்ற,Varambu Petra - வரம்பு சேர்ந்து விளைந்து நிற்பதும் காம்புங்> உற்ற,Kaambung Utra - காம்பு சேர்ந்து விளைந்து நிற்பதும் கதிர்,Kathir - கதிரையுடையதுமான செந் நெல்,Sen Nel - செந்நெல்லானது தான் சாய்த்து,Thaan Saiththu - தாள்களை நீட்டி தலை வணங்கும்,Thalai Vanangum - தலைவணங்கி நிற்கப்பெற்ற தண் அரங்கம்,Than Arangam - குளிர்ந்த திருவங்க நகராம். |
| 420 | பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஒன்பதாம் பாட்டு – தசாவதாரமாய் கொண்டு ஜகத் ரஷணம் பண்ணுமவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இது என்கிறார்.) 9 | தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில் சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே –4-9-9 | தேவு உடைய,Thevu Udaiya - தேஜஸ்ஸையுடைய மீனம் ஆய்,Meenam Aay - மத்ஸ்யமாயும் ஆமை ஆய்,Aamai Aay - கூர்மமாயும் எனம் ஆய்,Enam Aay - வராஹமாயும் அரி ஆய்,Ari Aay - நரஸிம்ஹமாயும் குறள் ஆய்,Kural Aay - வாமனாயும் மூ உருவின் இராமன் ஆய்,Moo Uruvin Iraaman Aay - பரசுராமனாயும், தசரதராமனாயும், பலராமனாயும், கண்ணன் ஆய்,Kannan Aay - ஸ்ரீகிருஷ்ணனாயும் கற்கி ஆய்,Karki Aay - கல்கியாயும் (திருவலதாரங்களெடுத்து) முடிப்பான்,Mudippaan - (விரோதிகளை) ஒழிக்கவல்ல எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) கோயில்,Koyil - கோயிலாவது; பெடை அன்னம்,Pedai Annam - அன்னப்பேடையான சேவலொடு,Sevalodu - (தனமு) புருஷஹம்ஸத்தோடு கூடுகிற செம் கமலம் மலர் ஏறி,Sem Kamalam Malar Eri - செந்தாமரைப் பூவின் மேலேறி ஊசல் ஆடி,Oosal Aadi - (அம்மலரை அசைத்து ஊசலாடி பூ அணை மேல்,Poo Anai Mel - புஷ்ப சயகத்தின் துதைந்து,Thudhaindhu - (ஒன்றோடொன்று புணருகையாகிற) நெருக்கத்தைச் செய்து எழு,Ezh - (அதனால்) கிளர்ந்த செம்பொடி ஆடி,Sempodi Aadi - (கண்ணமாகிற) சிவந்த பொடியில் மூழ்கி விளையாடும்,Vilaiyaadum - விளையாடா நிற்கப்பெற்ற புனல்,Punal - நீர்வளத்தை யுடைய அரங்கம்,Arangam - திருவரங்க நகராம். |
| 421 | பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (பத்தாம் பாட்டு – சர்வ நிர்வாஹகனாய் -ஸ்ரீயபதி யானவன் சரசமாக கண் வளர்ந்து அருளுகிற தேசம் இது -என்கிறார்.) 10 | செரு ஆளும் புள் ஆளன் மண் ஆளன் செரு செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன் மறை யாளன் ஓடாத படை ஆளன் விழுக்கை ஆளன் இரவாளன் பகலாளன் என்னை ஆளன் ஏழுலகப் பெரும் புரவாளன் திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே –4-9-10 | செரு ஆளும்,Seru Aalum - தானே போர்ச்செய்யவல்ல புள் ஆனன்,Pul Aanam - பெரிய திருவடிக்குத் தலைவனும், மண் ஆனன்,Man Aanam - லீலாவிபூதியை ஆளுமவனும், செரு செய்யும்,Seru Seiyyum - (ஆச்ரித விரோதிக்கு எதிர்த்துப்) பூசல் செய்யவில்லை. நாந்தகம் என்னும்,Naandhagam Ennum - நந்தகம் என்கிற ஒருவானன்,Oruvaanan - ஒப்பற்றதொரு கொற்றவாளையுடையவனும் மறை ஆனன்,Marai Aanam - நான்கு வேதங்களையும் ஆணாமவனும் ஓடாத,Odaadha - (போர்க்களத்தில்) முதுகுகாட்டி ஒடாத படை ஆனன்,Padai Aanam - ஸேனைகளை யுடையவனும், விழு கை ஆனன்,Vizhu Kai Aanam - சிறந்த ஔதார்ய முடையனும், இரவு ஆனன்,Iravu Aanam - ராத்ரி காலத்துக்கு நியாதமகனும், பகல் ஆனன்,Pagal Aanam - பகற்போதுக்கு நியாமகனும் என்னை ஆனன்,Ennai Aanam - அடியேனுக்கு தலைவனும் ஏழ் உலகம்பெரு புரவு ஆனன்,Ezh Ulagamperu Puravu Aanam - ஸப்தலோகங்களாகிய பெரிய ஸுஷேத்திரங்களை ஆளுமவனும் திரு ஆன்,Thiru Aan - பெரிய பிராட்டியாரை (த் தேவியாக) ஆளுமவருமான எம்பெருமான் இனிது ஆக,Inidhu Aaga - திருவள்ளமுவந்து திருக்கண்கள் வளர்கின்ற,Thiruk Kangal Valarkkinra - திருக்கண் வளர்ந்தருளு (கோயிலாவது;) |
| 422 | பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்.) 11 | கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படை வுடையான் கருதும் கோயில் தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல் மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் எஞ்ஞான்றும் எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே –4-9-11 | கை நாகத்து இடர் கடிந்த,Kai Naagaththu Idar Kadindha - பெரிய துதிக்கையையுடைய கஜேந்திராழ்வா னுடைய துன்பத்தைப் போக்கின கனல் ஆழி,Kanal Aazhi - ஜ்வலியா நின்றுள்ள திருவாழியாழ்வனை படை உடையான்,Padai Udaiyaan - ஆயுதமாகவுடைய எம்பெருமான் கருதும் கோயில்,Karudhum Koyil - விரும்பி எழுந்தருளியிருக்கப்பெற்ற கோயிலாய் தென் நாடும் வட நாடும் தொழ நின்ற,Then Naadum Vada Naadum Thozha Nindra - தென்னாட்டிலுள்ளாரும் வடநாட்டிலுள்ளாரும் ஸேவிக்கும்படி அமைந்த திரு அரங்கம் திருப்பதியின்மேல்,Thiru Arangam Thiruppathiyinmel - திருவரங்கமென்னும் திருப்பதி விஷயமாக மெய் நாவன் மெய் அடியான் விட்டு சித்தன்,Mei Naavan Mei Adiyaan Vittu Siththan - மெய்யே சொல்லா நின்ற நாவையுடையரும் பிரயோஜனத்தை விரும்பாது அடிமை செய்பவருமான பெரியாழ்வார் விரித்த தமிழ்,Viritha Tamil - அருளிச்செய்த இத்தமிழ்ப் பாசுரங்களை உரைக்க வல்லார்,Uraikka Vallaar - ஓதவல்லவர்கள் எம்பெருமான் இணை அடி கீழ்,Emperumaan Inai Adi Keezh - எனக்குச் சேஷியான பரமபத நாதனுடைய ஒன்றோடொன்றொத்த திருவடிகளின் கீழ் எஞ்ஞான்றும் இணைபிரியாது இருப்பர்,Ennyaanrum Inaipiriyaadhu Irupaar - எந்நாளும் (நித்யமுக்தர்களின் திரளாகிற) துணையைப் பிரியாமல் (அவர்களோடு கூடி) வாழ்ந்திருக்கப்பெறுவர் |
| 423 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1 | துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத்துத் துணை யாவ ரென்றே ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-1 | அரங்கத்து,Arangaththu - திருவரங்கம் பெரிய கோயிலில் அரவு அணை,Aravu Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளியானே,Palliyanae - பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! துப்பு உடையாரை அடைவது,Thuppu Udaiyaarai Adaivathu - (அடியாரைக் காப்பதில்) ஸாமர்த்தியமுடைய தேவரீரை ஆஸ்ரயிப்பது எல்லாம் சோர்வு இடத்து,Ellaam Sorvu Idaththu - ‘ஸர்வ இந்திரியங்களும் சிதிலமாய் விடுங்காலத்தில் துணை ஆவர் என்றே,Thunai Aavar Endrae - தேவரீர் துணையாயிருக்கும் என்கிற எண்ணத்தினாலன்றோ? ஒப்பு இலேன் ஆகிலும்,Oppu Ilaen Aagilum - (இவ்வாறு துணை செய்வதற்கு உரிய அதிகாரிகள் இன்னாரென்னு தேவர் திருவுள்ளத்திற் கொண்டிருக்கும் அவர்களோடு) அடியேன் ஒப்பற்றவனாயினும், நீ ஆனைக்கு அருள் செய்தமையால்,Nee Aanaikku Arul Seithamaiyaal - தேவர் கஜேந்திராழ்வானைக் காத்தருளியவராதலால் நின் அடைந்தேன்,Nin Adaindhaen - (அவரைப் போல் அடியேனையுங் காத்தருள்வீரென்று) தேவரைச் சரணம் புகுந்தேன் எய்ப்பு,Eyppu - (வாத பித்த ச்லேஷ்மங்களினால் நெருக்குண்கையா லுண்டாகக் கடவதான) இளைப்பானது என்னை,Ennai - அடியேனை வந்து நலியும் போது,Vanthu Naliyum Podhu - கிட்டி வருந்துங்காலமாகிற அங்கு,Angu - அந்த சரம தசையில் நான்,Naan - அடியேன் உன்னை,Unnai - தேவரீரை ஏதும்,Aedhum - க்ஷண காலமாயினும் நினைக்க மாட்டேன்,Ninaikka Maattaen - நினைக்க முடியாதவனாவேன் இப்போதே,Eppodhe - (கரண களேபரங்கள் தெளிவு பெற்றிருக்கிற) இப்போதே சொல்லி வைத்தேன்,Solli Vaiththaen - (என்னுடைய பிரார்த்தனையை) விண்ணப்பஞ் செய்து கொண்டேன் |
| 424 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 2 | சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தினானே நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள் போமிடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை ஆமிடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-2 | சங்கொடு,Sangodu - ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் சக்கரம்,Chakkaram - ஸ்ரீஸுதர்சனாழ்வானையும் ஏந்தினானே,Aendhinaanae - திருக் கையில் அணிந்து கொண்டுள்ளவனே அரங்கத்து அரவு அணை பள்ளியானே!,Arangaththu Aravu Anai Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! அனேக தண்டம் செய்வதா நிற்பா,Anaega Thandam Seivathaa Nirpaa - பல வகைகளால் தண்டிக்க நினையா நின்றவர்களாய் போம் இடத்து,Pom Idaththu - இழுத்துக் கொண்டு போம் போது உன் திறத்து,Un Thiraththu - (என்னுடைய நெஞ்சானது) உன் விஷயத்தில் எத்தனையும்,Eththanaikum - சிறிதாயினும் புகா வண்ணம்,Pugaa Vannam - அவகாஹிக்க மாட்டாதபடி நிற்பது ஓர் மாயை வல்லை,Nirpathu Or Maayai Vallai - மறைந்து நிற்கையாகிற ஒப்பதொரு மாயையைச் செய்வதில் (நீ) வல்லவனாக யிரா நின்றாய் நமன் தமர்கள்,Naman Thamargal - யம படர்கள் நா மடித்து,Naa Madiththu - (மிக்க கோபத்தோடு) நாக்கை மடித்துக் கொண்டு என்னை,Ennai - (மஹா பாபியான) அடியேனை ஆம் இடத்தே,Aam Idaththae - (ஆதலால்) ஸர்வேந்திரயங்களுடங் தெளிவு பெற்றிருக்கை யாகிற இக் காலத்திலேயே சாம் இடத்து என்னை குறிக்கோள் கண்டாய் என்று,Saam Idaththu Ennai Kurikkol Kandhaai Endru - “சரீர வியோக ஸமயத்தில் (உன்னை நினைக்க மாட்டாத) அடியேனைத் திருவுள்ளம் பற்றி யருள வேணும்” உன்னை,Unnai - உன்னைக் குறித்து சொல்லி வைத்தேன்,Solli Vaiththaen - விண்ணப்பஞ் செய்து கொண்டேன். |
| 425 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3 | எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன் தமர் பற்றும் போது நில்லுமி னென்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தி னானே சொல்லலாம் போதே உன் நாம மெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும் அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-3 | நேமியும்,Naemiyum - திருவாழியையும் சங்கமும்,Sangamum - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும் ஏந்தினானே,Aendhinaanae - கையில் அணிந்து கொண்டுள்ளவனே வாசல் குறுகச் சென்றால்,Vaasal Kurugach Sendraal - (யம புரத்துக்குப்) போம் பழியைக் கிட்டப் புகுந்தால் நமன் தமர்,Naman Thamar - யம கிங்கரர்கள் ஏற்றி,Aettri - அடித்து பற்றும் போது,Patrum Podhu - பிடிக்குங் காலத்தில் நில்லுமின் என்னும்,Nillum In Enum - “கடக்க நில்லுங்கள்” என்ற (அவர்களைக் கிட்ட வர வொட்டாமல்) தடுக்கும் படியான உபாயம் இல்லை,Upaayam Illai - ஓரு உபாயமும் (என் கையில்) இல்லை; சொல்லலாம் போதே,Sollalaam Podhae - வாய் விட்டுச் சொல்லுகைக்கு உரிய இப்போதே அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!,Arangaththu Aravu Anaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! எல்லையில்,Ellaiyil - (அடியேனுடைய வாழ் நாளின்) எல்லையாகிய சரம தசையில் உன்,Un - உன்னுடைய நாமம் எல்லாம்,Naamam Ellaam - திரு நாமங்களை யெல்லாம் சொல்லினேன்,Sollinaen - சொன்னேன்; என்னை,Ennai - அடியேனை குறிக் கொண்டு,Kurik Kondu - திருவுள்ளத்திற் கொண்டு என்றும்,Endrum - எப்போதும் அல்லல் படா வண்ணம்,Allal Padaa Vannam - அநர்த்தப் படாதபடி காக்க வேண்டும்,Kaakka Vendum - ரக்ஷித்தருள வேணும். |
| 426 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 4 | ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே முற்ற உலகெல்லாம் நீயேயாகி மூன்றெழுத்தாய முதல்வனேயா அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன் தமர் பற்ற லுற்ற அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-4 | ஒற்றை விடையனும்,Otrai Vidaiyanum - ஒப்பற்ற ரிஷப வாஹநனானன ருத்ரனும் நான்முகனும்,Naanmuganum - ப்ரஹ்மாவும் உன்னை,Unnai - உன்னை அறியா,Ariyaa - (உள்ளபடி) அறிய வொண்ணாமைக்கு உறுப்பான பெருமை யோனே,Perumai Yoanae - பெருமை பொருந்தியவனே! நமன் தமர்,Naman Thamar - யம கிங்கரர்கள் இவற்கு வாழ் நாள் அற்றது என்று எண்ணி,Evarkku Vaazhnal Atrathu Endru Enni - இவனுக்கு ஆயுள் காலம் முடிந்தது என்று நினைத்து முற்ற உலகு எல்லாம்,Muttra Ulagu Ellaam - ஒன்றொழியாதபடி எல்லா உலகங்களும் நீயே ஆகி,Neeyae Aagi - நீயே ஆய் மூன்று எழுத்து ஆய,Moonru Ezhuththu Aaya - மூன்று அக்ஷரமான பிரணவ ஸ்வரூபியானவனும் ஓ முதல்வனே,O Mudhalvane - ஸர்வ காரண பூதனுமானவனே! அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!.,Arangaththu Aravu Anaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! அஞ்ச,Anja - (பிடிக்கிற பிடியில்) அஞ்சும்படி பற்றல் உற்ற அற்றைக்கு,Patral Utra Atraiyukku - பிடிக்கப் புகுகிது அன்றைக்கு நீ என்னை காக்க வேண்டும்.,Nee Ennai Kaakka Vendum - ரக்ஷித்தருள வேணும். |
| 427 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5 | பைய ரவினணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை வைய மனிசரைப் பொய் யென்றெண்ணிக் காலனையும் உடனே படைத்தாய் ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே–4-10-5 | பால்கடலுள்,Paal Kadalul - திருப் பாற் கடலில் பை அரவ இன் அணை,Pai Arava In Anai - (பரந்த) பாடல்களை யுடைய திருவனந்தாழ்வானகிய இனிய படுக்கையின் மீது பள்ளி கொள்கின்ற,Palli Kolginra - திருக் கண் வளர்ந்தருளா நின்ற பரம மூர்த்தி,Parama Moorththi - பரம சேஷியானவனே ! உய்ய,Uyya - (எல்லா வுயிர்களும் தன்னை அடைந்து) உஜ்ஜிவிக்கும்படி உலகு,Ulagu - லோகங்களை படைக்க வேண்டி,Padaikka Veendi - ஸ்ருஷ்டிக்க விரும்பி உந்தியில்,Undhiyil - திரு நாபிக் கமலத்தில் நான் முகனை,Naan Muganai - பிரமனை தோற்றினாய்,Thotrinai - தோற்று வித்தவனே! வையம்,Vaiyam - பூமியிலுள்ள மனிசர்,Manisar - மனுஷ்யர்கள் பொய் என்று எண்ணி,Poi Endru Enni - (நமது கட்டளையாகிய சாஸ்த்தர மரியாதையில் நிற்கமாட்டாது) க்ருத்ரிமராய் நடப்பவர்களென்று நினைத்து (அந்த விபரீதாசரணத்துக்கு தக்க தண்டம் நடத்துதற்காக) காலனையும்,Kaalanaiyum - யமனையும் உடனே,Udanae - கூடவே படைத்தாய்,Padatthaai - ஸ்ருஷ்டித்தருளினவனே! ஐய,Aiyaa - பரம பந்துலானவனே! அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!,Arangaththu Aravu Anaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! இனி என்னைக் காக்க வேண்டும்,Eni Ennaik Kaakka Vendum - இவர் என்னை காக்க வேண்டும் |
| 428 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6 | தண்ணென வில்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர் மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமு மாகி நின்றாய் எண்ணலாம் போதே உன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் அண்ணலே நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-6 | மண்ணொடு,Mannodu - பூமியும் நீரும்,Neerum - ஜலமும் எரியும்,Eriyum - தேஜஸ்ஸும் காலும்,Kaalum - வாயுவும் ஆகாசமும்,Aakaasamum - ஆகாசமும் (ஆகிய பஞ்ச பூதங்களும்) மற்றும் ஆகி நின்றாய்,Matrum Aagi Nindraai - மற்றுமுள்ள பதார்த்தங்களுமாய் நின்றவனே! அண்ணலே,Annaley - ஸர்வ ஸ்வாமி யானவனே! அரக்கத்து அரவணைப் பள்ளியானே;,Arakkaththu Aravanaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! நமன் தமர்கள்,Naman Thamargal - யம கிங்கரர்கள் தண்ணென வில்லை,Thannena Villai - இரக்க மற்றவர்களாய்க் கொண்டு சால,Saala - மிகவும் கொடுமைகள்,Kodumaigal - கொடிய சிஷைகளை செய்யா நிற்பர்,Seiyaa Nirpar - பண்ணுவர்கள்; எண்ணலாம் போதே,Ennalaam Podhae - (அப்படிப்பட்ட சிஷைகளுக்கு ஆளாகா தொழியும்படி.) அநுஸந்கைக்கு உரிய காலத்திலேயே உன் நாமம் எல்லாம்,Un Naamam Ellaam - உன்னுடைய திருநாமங்களை யெல்லாம். எண்ணினேன்,Enninaen - அநுஸந்தித்தேன் (ஆதலால்) என்னை,Ennai - அடியேனை நீ,Nee - நீ குறிக் கொண்டு,Kurik Kondu - நினைவுள்ளத்தில் கொண்டு என்றும்,Endrum - எப்போதும் காக்க வேண்டும்,Kaakka Vendum - காத்தருள வேணும் |
| 429 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7 | செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே எஞ்சலி லென்னுடை யின்னமுதே ஏழுலகு முடையாய் என்னப்பா வஞ்ச வுருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது அஞ்சலமென்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே–4-10-7 | செம் சொல்,Sem Sol - ருஜுவான சொற்களை யுடைய மறை,Marai - வேதத்துக்கு பொருள் ஆகி நின்ற,Porul Aagi Nindra - அர்த்தமாயிருப்பவனும் தேவர்கள்,Thaevargal.Devargal - நித்திய ஸூரிகளுக்கு நாயகனே,Naayagane - தலைவனுமானவனே! எம்மானே,Emmaanae - எம்பெருமானே! எஞ்சல் இல்,Enjal Il - குறை வற்ற இன்,En - பரம போக்யமான உன்னுடை அமுதே,Unnudaiya Amudhe - எனக்கு (ரஸ்யமான) அம்ருதம் போன்றவனே! ஏழு உலகும் உடையாய்,Ezh Ulagum Udaiyaai - உலகங்களுக் கெல்லாம் ஸ்வாமி யானவனே! என் அப்பா,En Appa - எனக்கு உபகாரகனானவனே! அரங்கத் தரவணைப் பள்ளியானே!;,Arangathth Aravanaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! வஞ்சம்,Vanjam - வஞ்சனை பொருந்திய உருவின்,Uruvin - ரூபத்தை யுடையவரான நமன் தமர்கள்,Naman Thamargal - யம கிங்கரர்கள் என்னை,Ennai - அடியேனை வலிந்து,Valindhu - பலாத்கரித்து நலிந்து,Nalindhu - ஹிம்ஸித்துக் கொண்டு பற்றும் போது,Patrum Podhu - பிடிக்கும் போது அஞ்சல் என்று என்னை காக்க வேண்டும்,Anjal Endru Ennai Kaakka Vendum - அஞ்ச வேண்டா என்று என்னை காக்க வேண்டும் |
| 430 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 8 | நான் ஏதும் உன் மாய மொன்ற றியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புகே யென்று மோதும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மா மாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-8 | வான் ஏய்,Vaan Ey - பரம பதத்திற் பொருந்தி யிரா நின்ற வானவர் தங்கள்,Vaanavar Thangal - நித்ய முக்தர்களுக்கு ஈசா,Eesaa - தலைவனே! மதுரை,Mathurai - திரு வட மதுரையில் பிறந்த,Pirantha - அவதரித்த மா மாயனே,Maa Maayaney.Mayane - மிக்க ஆச்சரிய சக்தியை யுடையவனே! என் ஆனாய்,En Aanaai - (பாகனுக்கு வசப்பட்டொழுகுகின்ற) யானை போல் எனக்கு வசப்பட்டிருப்பவனே! அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!,Arangaththu Aravu Anaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! நான்,Naan - அடியேன் உன் மாயம்,Un Maayam - உன் மாயைகளில் ஏது ஒன்றும்,Aethu Ondrum - யாதொன்றையும் அறியேன்,Ariyaen - அறிய மாட்டேன்; நமன் தமர்,Naman Thamar - யம கிங்கரர்கள் பற்றி,Patri - (என்னைப்) பிடித்து நலிந்திட்டு,Nalindhittu - (இந்தச் சரீரத்தோடே) பண்ண வேண்டிய ஹிம்ஸைகளை யெல்லாம் பண்ணி விட்டு, (பின்பு,) இந்த ஊன் புகு என்று,Endha Oon Pugu Endru - ‘இந்த யாதநா சரீரத்தினுள்ளே பிரவேசி’ என்று மோதும் போது,Modhum Podhu - அடிக்கும் போது அங்கு,Angu - அவ் விடத்தில் உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்;,Unnai Naan Ondrum Ninaikka Maattaen - உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்; நீ என்னை காக்க வேண்டும்.,Nee Ennai Kaakka Vendum - நீ என்னை காக்க வேண்டும். |
| 431 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9 | குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே அன்று முதல் இன்றறுதியாக ஆதியஞ் சோதி மறந்தறியேன் நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னைப் பற்றும் போது அன்றங்கு நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-9 | குன்று,Kundru - கோவர்த்தந மலையை எடுத்து,Eduththu - (குடையாக) எடுத்து (ப்பிடித்து) ஆநிரை,Aanirai - பசுக்களின் திரளை காத்து,Kaaththu - ரஷித்தருளின ஆயா,Aayaa - ஆயனே (கோபாலானே!) கோ நிரை,Ko Nirai - மாடுகளின் கூட்டத்தை மேய்த்தவனே,Maeyththavaney - மேய்த்தருளினவனே! எம்மானே,Emmaanae - எனக்கு ஸ்வாமி யானவனே அரங்கத்து அரவணைப் பள்ளியானே,Arangaththu Aravanaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! அன்று முதல்,Andru Mudhal - (உமக்குப் பல்லாண்டு பாடுமவனாக்கக் கொண்ட) அந்நாள் தொடங்கி இன்று அறுதி ஆக,Indru Arudhi Aaga - இன்றளவாக ஆகி,Aagi - ஸர்வ காரண பூதனான உன்னுடைய அம் சோதி,Am Sothi - விலக்ஷண தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹகத்தை மறந்து அறியேன்,Marandhu Ariyaen - (அடியேன்) மறந்ததில்லை நன்றும் கொடிய,Nandrum Kudiya - மிக்க பொறுமை பொருந்திய நமன் தமர்கள்,Naman Thamargal - யம கிங்காரர்கள் என்னை,Ennai - என்னை நலிந்து,Nalindhu - ஹிம்ஸித்து வலிந்து,Valindhu - பலாத்கரித்து பற்றும் போது அன்று,Patrum Podhu Andru - பிடிக்கும் அத் தருணத்தில் அங்கு,Angu - அவ் விடத்தில் நீ என்னைக் காக்க வேண்டும்,Nee Ennaik Kaakka Vendum - நீ என்னைக் காக்க வேண்டும் |
| 432 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10 | மாயவனை மது சூதனன் தன்னை மாதவனை மறையோர்க ளேத்தும் ஆயர்களேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக் காளர் தாமே–4-10-10 | மாயவனை,Maayavanai - ஆச்சரிய சக்தி யுடையவனும் மதுசூதனனை,Mathusoothananai,Madusothanai - மது என்ற அசுரனை ஒழித்தருளினவனும் மாதவனை,Maadhavanai,Madhavanai - பெரிய பிராட்டியார்க்கு வல்லபவனும் மறையோர்கள்,Maraiyorgal - வைதிகர்கள் ஏத்தும்,Eaththum - துதிக்கப்படுமவனும் ஆயர்கள் ஏற்றினை,Aayargal Eatrinai - இடையர்களுக்குத் தலைவனும் அச்சுதனை,Achchuthanai - (அடியாரை ஒரு நாளும்) நழுவ விடாதவனும் அரங்கத்து,Arangaththu - கோயிலில் அரவு அணை,Aravu Anai - சேஷ சயநத்தில் பள்ளியானை,Palliyanaai - கண் வளர்த்தருள்பவனுமான எம்பெருமானை நோக்கி வேயர்,Vaeyar - தாம் திருவவதரித்த குடியிலுள்ள ரெல்லோராலும் புகழ்,Pugazh - புகழப் பட்டவரும் வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு மன்,Mann - நிர்வாஹருமான விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார் சொன்ன,Sonna - அருளிச் செய்த மாலை,Maalai - சொல் மாலையான பத்தும்,Paththum - இப் பத்துப் பாசுரங்களையும் தூய மனத்தனர் ஆகி,Thooya Manaththanar Aagi - நிர்மலமான நெஞ்சை யுடையராய்க் கொண்டு வல்லார் தாம்,Vallaar Thaam - ஓத வல்லார்கள் தூய மணி,Thooya Mani - பழிப்பற்ற நீலமணி போன்ற வடிவை யுடைய எம்பெருமானுக்கு ஆளர்,Aalar - அடிமை செய்யப் பெறுவர். (ஏ அசை.) |
| 433 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1 | வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா உன்னை வாய்க் கொள்ள மாட்டேன் நாக்கு நின்னை யல்லால் அறியாது நான தஞ்சுவன் என் வச மன்று மூர்க்குப் பேசுகின்றானிவ னென்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன் காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே–5-1-1 | மாதவா,Maadhavaa - ச்ரிய: பதியானவனே! நாரணா,Naaranaa - (உலகங்கட்கெல்லாம்) ஆதி காரணமானவனே! கருளன்,Karulan - பெரிய திருவடியை கொடியானே,Kodiyaanae - த்வஜமாக வுடையவனே! வாக்கு,Vaakku - (என்னுடைய) வாய் மொழிக்கு தூய்மை இலாமையினாலே,Thooymai Ilaamaiyinaalae - பரி சுத்தி இல்லாமையால் உன்னை,Unnai - (ஹேய ப்ரதிபடனான) உன்னை வாய் கொள்ள மாட்டேன்,Vaai Kollamaattaen - வாய் கொண்டு துதிக்க யோக்யதை அறற்வனா யிரா நின்றேன் நாக்கு,Naakku - (வெறுமனே கிடப்போமென்று பார்த்தாலும்) (ரஸமறிந்த எனது) நாக்கானது நின்னை அல்லால்,Ninnai Allael - உன்னை யொழிய மற்றொருவரை அறியாது,Ariyaadhu - (வாய்க் கொள்ள) அறியாது; அது,Adhu - அசுத்தமான நாக்கு இங்ஙனே உன் பக்கம் ஈடுபடா நின்றதைக் குறித்து நான் அஞ்சுவன்,Naan Anjuvan - நான் அஞ்சுகின்றேன்; என் வசம் அன்று,En Vacham Andru - (அது) (அந்த நாக்கானது)எனக்கு வசப்பட்டு நிற்பதன்று; இவன் மூர்க்கு பேசுகின்றான் என்று,Ivan Moorkku Paesugindraan Endru - “இவன் மூடர் பேசும் பேச்சைப் பேசா நின்றான்” என்று திருவுள்ளம் பற்றி முனிவாயேலும்,Munivaayaelum - நீ சீறி யருளினாலும் என் நாவினுக்கு ஆற்றேன்,En Naavinukku Aatraen - என்னுடைய நாக்கின் பதற்றத்தை என் ஸஹகிக்க வல்வேனல்லேன்; காக்கை வாயிலும்,Kaakkai Vaayilum - காக்கையினுடைய வாயிலுண்டான சொல்லையும் கட்டுரை,Katturai - நற் சொல்லாக கொள்வர்,Kolvar - (அறிவுடையார்) கொள்ளுவார்கள். |
| 434 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2 | சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கர மேந்து கையானே பிழைப்ப ராகிலும் தம்மடியார் சொல் பொறுப்பதும் பெரியோர் கடனன்றே விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது உழைக்கு ஓர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி யேழுலகுண் டுமிழ்ந்தானே–5-1-2 | சங்கு சக்கரம் ஏந்து கையானே!,Sangu Chakkaram Aendhu Kaiyaanae - சங்கு சக்கரம் ஏந்து கையானே! ஊழி,Oozhi - பிரளயக் காலத்தில் ஏழ் உலகு,Ezh Ulagu - எல்லா வுலகங்களையும் உண்டு,Undu - திரு வயிற்றில் வைத்துக் கொண்டு (பின்பு பிரளயம் கழிந்தவாறே) உமிழ்ந்தானே,Umizhnthaaney - (அவற்றை) வெளிப்படுத்தினவனே! சழக்கு நாக்கொடு,Sazhakku Naakkodu - பொல்லாத நாக்கினால் புன் கவி,Punn Kavi - அற்பமான பாசுரங்களை சொன்னேன்,Sonnaen - நான் சொன்னேன்; பிழைப்பர் ஆகிலும்,Pizhaippar Aagilum - (தாஸ பூதர்கள்) பிழை செய்தவர்களே யாகிலும் தம் அடியார்,Tham Adiyaar - தமக்கு அடிமைப்பட்ட அவர்களுடைய செயல்,Seyal - சொல்லை. பொறுப்பது,Poruppadhu - பொறுத்தருளுகை பெரியோர் கடன் ஆனதே,Periyor Kadan Aanaadhe - பெருந்தன்மை யுடையவர்களுக்கு கடமை யன்றோ நின் கண் அல்லால் மற்று விழிக்கும் கண் இலேன்,Nin Kan Allael Matru Vizhikkum Kan Ilaen - உன்னுடைய கடாஷம் அல்லால் வேறு ஒருவருடைய கடாஷத்தை (ரஷகமாக) உடையேனல்லேன்; வேறு ஒருவரோடு,Vera Oruvarodu - (அன்றியும்) மற்று ஒருவர் பக்கலிலும் என் மனம்,En Manam - என் நெஞ்சானது பற்றாது,Patraadhu - பொருந்த மாட்டாது உழைக்கு,Uzhaikku - புள்ளிமானுக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய்,Or Pulli Migai Andru Kandaai - ஒரு புள்ளி (ஏறுவது) குற்றமதன்றோ? |
| 435 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3 | நன்மை தீமைக ளொன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை யல்லால் புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வானன்று கண்டாய் திருமாலே உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன் வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவனென்னும் வன்மை கண்டாயே–5-1-3 | கண்டாய்,Kandaai - முன்னிலை யசைச் சொல் திருமாலே,Thirumaalae - ச்ரிய: பதியானவனே! நாரணா என்னும் இத்தனை அல்லால்,Naaranaa Enum Ithanai Allael - ‘நாராயணா!’ என்று கூப்பிடுகையாகிற இவ்வளவொழிய நன்மை தீமைகள் ஒன்றும்,Nanmai Theemigal Ondrum - (வேறு) நன்மை தீமை ஒன்றையும் அறியேன்,Ariyaen - அறிகிறேனில்லை. புன்மையால்,Punnmaiyaal - (எனக்கு இயற்கையாக உள்ள) அற்பத் தனத்தினால் உன்னை,Unnai - உன்னைக் குறித்து புள்ளுவம் பேசி,Pulluvam Paesi - வஞ்சகமான சொற்களைச் சொல்லி புகழ்வான் அன்று கண்டாய்,Pugazhvaan Andru Kandaai - புகழுவனல்லன் (அடியேன்) உன்னை,Unnai - உன்னை உண்ணும் ஆறு,Unnum Aaru - இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டிருக்கத் தக்க வழிகளில் ஒன்றும்,Ondrum - ஒரு வழியையும் அறியேன்,Ariyaen - அறிந்தேனில்லை; ஓவாறே,Ovaarae - (ஒரு நொடிப் பொழுதும்) ஒழிவின்றி (இடைவிடாமல்) நமோ நாராயணா என்பன,Namo Naaraayanaa Enbana - நமோ நாராணாய என்னா நின்றேன் வன்மை ஆனது,Vanmai Aanaadhu - அடியேனுக்கு மிடுக்காவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும்,Un Koyilil Vaazhum Vaittanavan Enum - உன்னுடைய கோயிலில் வாழுகின்றவன் வைஷ்ணவன் என்கிற மிடுக்கோடு |
| 436 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4 | நெடுமையால் உலகேழு மளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனைக் குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவ தில்லை அடிமை யென்னு மக்கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய் கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத் தானே–5-1-4 | நெடுமையால்,Nedumaiyaal - (குறிய மாணுருவை மாற்றி) நெடுக வளர்ந்ததனால் உலகு எழும்,Ulagu Ezhum - எல்லா வுலகங்களையும் அளந்தாய்,Alandhaay - அளந்தருளினவனே! நின்மலா,Ninmalaa - பரிசுத்தமானவனே! நெடியாய்,Nediyai - (அனைவர்க்கும்) தலைவனானவனே! கொடுமை கஞ்சனை,Kodumai Kanjanai - கொடிய கம்ஸனை கொன்று,Kondru - உயிர்க் கொலை செய்து, நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே,Nin Thaathai Koatha Van Thalai Kol Viduththaane - உனது தந்தையாகிய வஸுதேவருடைய காலில் பூட்டப்பட்டிருந்த வலிய விலங்கின் பூட்டை தறித்துப் பொகட்டவனே! அடியேனை,Adiyenai - (உனக்கு) அடிமைப்பட்டுள்ள என்னை அடிமை கொள்வதற்கு,Adimai Kolvadharku - கிங்கரனாகக் கொள்வதற்கு ஐயுறு வேண்டா,Aiyuru Vendaa - ஸந்தேகிக்க வேண்டியதில்லை; கூறை சோறு இல்லை,Koorai Sooru Illai - இக் கூறையையும் சோற்றையும் வேண்டுவது இல்லை,Venduvathu Illai - (நான் உன்னிடத்து) விரும்புகிறேனில்லை; அடிமை என்னும்,Adimai Ennum - அடிமை யென்ற அ கோயின்மையாலே,A Koyinmaiyaale - அந்த ராஜகுல மாஹாத்மியத்தினால் அவை,Avai - அக்கூறை சோறுகள் அங்கு அங்கு,Angu Angu - அவ்வவ் விடங்களில் போதரும்,Podharum - (தாமாகவே) கிடைக்கும் கண்டாய்,Kandaai - (கண்டாய்- முன்னிலை யசைச் சொல்.) |
| 437 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5 | தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை துடவையும் கிணறும் இவை யெல்லாம் வாட்ட மின்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண் டிருந்தேன் நாட்டு மானிடத் தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழலொன் றாகி கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழக் கொம்பொசித் தானே–5-1-5 | கேழல் ஒன்று ஆகி,Kezhal Ondru Aagi - ஒப்பற்ற வராஹ ரூபியாய்க் கொண்டு கோடு,Kodu - (தனது) கோரப் பல் நுனியில் மண் கொண்ட,Man Konda - பூமியைத் தாங்குகையாகிற கொள்கையினாளே,Kolgaiyinalae - கால பாவத்ந யுடையவனே குஞ்சரம்,Kunjcharam - (குவலயாபீடமென்ற) யானையானது வீழ,Veezha - முடியும்படி கொம்பு,Kombu - (அதன்) தந்தத்தை ஓசித்தானே,Osiththaanae - முறித்தெறிந்தவனே! தோட்டம்,Thottam - தோட்டமும் இல்லவள்,Illaval - மனைவியும் ஆ,Aa - பசுக்களும் தொழு,Thozhu - மாட்டுத் தொழுவமும் ஓடை,Odai - குளமும் துடவையும்,Thudavaiym - விளை நிலமும் கிணறும் இவை எல்லாம்,Kinarum Ivai Ellaam - கிணறுமாகிற இவை யெல்லா வற்றையும் வாட்டம் இன்றி,Vaattam Inri - குறைவில்லாமல் உன் பொன் அடி கீழே,Un Pon Adi Keezhae - அடியேன் உனது அழகிய திருவடியிலே வளைப்ப வகுத்துக் கொண்டிருந்தேன்,Valaippa Vakuththu Kondirundhaen - திரள வகுத்துக் கொண்டிரா நின்றேன் எனக்கு,Enakku - (எல்லாம் உன் திருவடியே என்றிருக்கிற) எனக்கு நாடு மானிடத்தோடு,Naadu Maanidaththodu - நாட்டிலுள்ள மநுஷ்யரோடு அரிது,Aridhu - (ஸஹ வாஸம் செய்வது) அஸஹ்யம்; பலர்,Palar - பல பேர் நச்சுவார்,Nachchuvaaar - (இந்த ஸஹவாஸத்தை) விரும்புவர்கள் |
| 438 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6 | கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான் உண்ணா நாள் பசியாவதொன் றில்லை ஓவாதே நமோ நாரணா வென்று எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உன் பாதம் நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே–5-1-6 | காரணா,Kaaranaa - (லோக ஸருஷ்டிக்குக் காரணமானவனே!) நான்முகனை,Naanmuganaai - பிரமனை படைத்தானே,Padaiththaanae - (உந்தி மேல்) படைத்தருளினவளே! கண்ணா,Kannaa - கண்ணபிரானே! கரியாய்,Kariyaai - (காள மேகம்போல்) கறுத்த நிறத்தை யுடையவனே! அடியேன் நான் ,Adiyaen Naan - (உனக்கு) சேக்ஷபூதனான நான் உண்ணா நாள்,Unnaa Naal - உண்ணா தொழிந்த போது பசி ஆவதொன்றுமில்லை,Pasi Aavadhonrumillai - பசி என்பது மறந்து முண்டாவதில்லை. ஓயாதே,Oyaadhe - இடைவிடாமல் நமோ நாராயணா என்று,Namo Naaraayanaa Endru - ‘நமோ நாராயணாய’ என்று எண்ணா நாளும்,Ennaa Naalum - அநுஸந்திக்கப் பெறாத நாளும் இருக்கு எசுச் சாமவேதம்,Irukku Esuchchaamavetham - ருக், யஜுர், ஸாமம் என்கிற வேதங்களை (ச்சொல்லிக் கொண்டும்) நாண் மலர் கொண்டு,Naan Malar Kondru - அப்போதலர்ந்த (புதிய) பூக்களை எடுத்துக் கொண்டும் (வந்து) உன் பாதம்,Un Paadham - உன் திருவடிகளை நண்ணா நான்,Nannaa Naan - கிட்டப் பெறாத நாள்களும் அவை,Avai - (எனக்கு) அந்த உண்ணாதொழிந்த நாள்களாம்; அவை,Avai - அந்த வேதாசந்தநமும் புஷ்ப ஸமர்ப்பணமும் தத்துவம் ஆகில்,Thaththuvam Aagil - தட்டுப்படுமாகில் அன்று,Andru - அந்த நாளானது எனக்கு,Enakku - எனக்கு பட்டினி நாள்,Pattini Naal - உண்ணாதொழிந்த நாளாகும். |
| 439 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7 | வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங்கொல் என்றாசையினாலே உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள் துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே–5-1-7 | வெள்ளை,Vellai - பால் மயமான வெள்ளத்தின் மேல்,Vellaththin Mael - பெருக்கிலே ஒரு பாம்பை,Oru Paambai - ஒப்பற்ற திருவனந்தாழ்வானை மெத்தை ஆக விரித்து,Meththai Aaga Viriththu - படுக்கையாக விரித்து அதன் மேலே,Adhan Maelae - அப் படுக்கையின் மீது கள்ளம் நித்திரை கொள்கின்ற மார்க்கம்,Kallam Niththirai Kolginra Maarkkam - (நீ) யோக நித்ரை செய்தருளும்படியை காணலாம் கொல் என் ஆசையினாலே,Kaanalaam Kol En Aasaiyinaalae - காணக் கூடுமோ என்கிற விருப்பத்தினால், உள்ளம் சோர,Ullam Soora - நெஞ்சு அழிய உகந்து எதிர் விம்மி,Ugandhu Ethir Vimmi - மகிழ்ச்சியின் மிகுதியால் (வார்த்தை சொல்ல வொண்ணாதபடி) மாறாகக் கலங்கி உரோம கூபங்கள் ஆய்,Uroma Koopangal Aay - (உடம்பு முழுவதும்) மயிர்க் குழி யெறியப் பெற்று கண்ண நீர்கள்,Kanna Neergal - கண்ணீர் அணை,Anai - படுக்கையில் துயில் கொள்ளேன்,Thuyil Kollen - உறங்கப் பெறுகிறேனில்லை; யான்,Yaan - (இப்படிப்பட்ட) அடியேன் உன்னை,Unnai - உன்னை தத்துறும் ஆறு,Thaththurum Aaru - கிட்டும்வழியை சொல்லாய்,Sollaai - அருளிச் செய்ய வேணும். |
| 440 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மது சூதா கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே எண்ணு வாரிடரைக் களைவானே ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே நண்ணி நான் உன்னை நாள் தொறும் ஏத்தும் நன்மையே அருள் செய் எம்பிரானே–5-1-8 | காரணா,Kaaranaa - (உலகங்கட்குக்) காரணமானவனே! என்ணுவார் இடரை களைவானே,Ennuvaar Idarai Kalaivaanae - (எப்போதும் உன்னையே தியானிப்பவர்களுடைய துன்பங்களைப் போக்குமவனே! மது சூதா,Madhu Soodhaa - மதுவைக் கொன்றவனே! கரி கோள் விடுத்தானே,Kari Kol Viduththaanae - கஜேந்திராழ்வானுடைய துக்கத்தை நீக்கினனனே! கண்ணனே!,Kannaney - கண்ணனே! வண்ணம்,Vannam - அழகிய மால்,Maal - பெரிய வரை,Varai - கோவர்த்தன மலை குடை ஆக,Kudai Aaga - குடையாக (அமைய) மாரி,Maari - மழையினின்றும் காத்தவனே,Kaaththavanae - (பசுக்களையும் இடைகரையும்) காத்தருளினவனே! களிறு,Kaliru - (குவலயாபீடமென்னும்) யானையை அட்ட,Atta - முடித்த பிரானே,Piranae - உபகாரகனே! ஏத்த அரு பெரு கீர்த்தியினானே,Eaetha Aru Peru Keerththiyinaanae - துதிக்க முடியாத அளவற்ற கீர்த்தியை யுடையவனே! எம்பிரானே,Empiraanae - எமக்குத் தலைவனே! நான்,Naan - அடியேன் உன்னை,Unnai - உன்னை நாள் தொறும்,Naal Thorum - தினந்தோறும் நண்ணி,Nanni - ஆச்ரயித்து ஏத்தும் நன்மை,Eaeththum Nanmai - துதிக்கையாகிற நன்மையை அருள் செய்,Arul Sei - அருள் செய்ய வேணும். |
| 441 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9 | நம்பனே நவின் றேத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய் உம்பர் கோனுலகேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே எம்பிரான் என்னை யாளுடைத் தேனே ஏழை யேனிடரைக் களையாயே–5-1-9 | நம்பனே,Nampanae - (ரக்ஷகன் என்று) நம்பத் தகுந்தவனே! நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே,Navinru Eaetha Vallaargal Naadhanae - (ஸ்தோத்திரங்களை) வாயாரச் சொல்லிப் புகழ வல்லவர்களுக்கு ரக்ஷகனே! நரசிங்கம் அது ஆனாய்,Narasingham Adhu Aanaai - நரசிங்க அவதராம் செய்தருளினவனே! உம்பர்,Umbar - நித்ய ஸூரிகளுக்கு கோன்,Kon - தலைவனே! உலகு ஏழும்,Ulagu Eaazhum - எல்லா வுலகங்களையும் அளந்தாய்,Alandhaai - (திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்து கொண்டவனே! ஊழி ஆயினாய்,Oozhi Aayinaai - காலம் முதலிய பதார்த்தங்களுக்கெல்லாம் நிர்வாஹகனானவனே! முன்,Mun - முன்னே ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை ஏத்தி,Eaethi - (திருக் கையில்) ஏந்திக் கொண்டு (எழுந்தருளி) மா கம்பம்,Maa Kampam - மிக்க நடுக்கத்தை அடைந்த கரி,Kari - கஜேந்திர ஆழ்வானுடைய கோள்,Kol - சிறையை விடுத்தானே,Viduththaanae - விடுத்தருளினவனே! காரணா,Kaaranaa - ஜகத் காரண பூதனே! கடலை,Kadalai - (திருப்பாற்) கடலை கடைந்தானே,Kadaindhaanae - (தேவர் களுக்காகக்) கடைந்தருளினவனே! எம்பிரான்,Empiraan - எம்பிரானே! என்னை,Ennai - அடியேனை ஆளுடை,Aaludai - ஆட்படுத்திக் கொண்டவனும் தேனே,Thaenae - தேன் போல் இனியனுமானவனே! ஏழையேன்,Eaazhaiyaen - (உன் திருநாமங்களில்) சாபல்யமுடைய என்னுடைய இடரை,Idarai - துன்பத்தை களையாய்,Kalaiyaai - களைந்தருள வேணும். |
| 442 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | காமர் தாதை கருதலர் சிங்கம் காண வினிய கருங்குழல் குட்டன் வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதனன் தன்னை சேம நன்கமரும் புதுவையர் கோன் விட்டு சித்தன் வியந் தமிழ் பத்தும் நாம மென்று நவின்றுரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணனுலகே–5-1-10 | காமர் தாதை,Kaamar Thaathai - மன்மதனுக்குத் தந்தையும் கருதலர் சிங்கம்,Karuththalar Singam - (தன்னை) விரோதிப்பவராகிய யானைகட்கு சிங்கம் போன்றவனும் காண,Kaana - ஸேவிப்பதற்கு இனிய,Iniya - அழகாயிருக்கிற கரு குழல் குட்டன்,Karu Kuzhal Kuttan - கறுத்த குழலையுடைய சிறுக்கனானவனும் வாமனன்,Vaamanan - வாமாநாவதாரம் செய்தருளியவனும் என்,En - எனக்குத் தலைவனும் மரகத வண்ணன்,Maragatha Vannan - மரகதப் பச்சை போன்ற வடியையுடையவனும் மாதவன்,Maadhavan - பிராட்டிக்குக் கண்வனும் மதுசூதனன் தன்னை,Madhusoodanan Thannai - மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானைக் குறித்தருளிச்செய்த சேமம்,Saemam - க்ஷேமமானது நன்கு,Nangu - நன்றாக (குறைவின்றி) அமரும்,Amarum - அமைந்திருக்கப் பெற்ற புதுவையர் கோன்,Puduvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிள்ளார்க்குத் தலைவனான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வாரது வியன் தமிழ் பத்தும்,Viyan Tamil Paththum - பெருமையுள்ள (இத்) தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் நாமம் என்று,Naamam Endru - (எம்பெருமானது) திருநாமங்களாக பிரதிபத்தி பண்ணி நவின்று,Navinru - அன்பு கொண்டு உரைப்பார்கள்,Uraippaargal - ஓதுமவவர்கள் ஒல்லை,Ollai - விரைவாக நாரணன் உலகு,Naaranan Ulagu - ஸ்ரீவைகுண்டத்தை நண்ணுவார்,Nannuvaar - கிட்டப் பெறுவர்கள். |
| 443 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 1 | நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின் மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக் கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-1 | நெய்க் குடத்தை,Neik Kudaththai - நெய் வைத்திருக்கும் குடத்தை பற்றி,Patri - பற்றிக் கொண்டு ஏறும்,Erum - (அக் குடத்தின் மேல்) ஏறுகின்ற எறும்புகள் போல்,Erumbugal Pol - எறும்புகளைப் போல் நிரந்து எங்கும்,Niranthu Engum - என்னுடைய உடம்பு முழுவதும் பரவி கைக் கொண்டு,Kaik Kondu - (என்னை) வசப்படுத்தி நிற்கின்ற ,Nirkkinra - (என்னையே இருப்பிடமாகக் கொண்டு) நிலைத்து நிற்கிற நோய்காள்,Noigal - வியாதிகளே! காலம்பெற,Kaalampera - விரைவாக உய்ய,Uyya - (நீங்கள்) பிழைக்க வேண்டி போமின்,Pomin - (என்னை விட்டு வேறிடத்தைத் தேடிப்) போய் விடுங்கள் வேதம் பிரானார்,Vedham Piraanaar - (பிரமனுக்கு) வேதத்தை உபகரித்தருளின் எம்பெருமான். பைக் கொண்ட,Paik Konda - பரம்பினை படங்களை யுடைய பாம்பு அணையோடும்,Paambu Anaiyodum - திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட வந்து புகுந்து ,Vandhu Pugundhu - எழுந்தருளி மெய்,Mei - (எனது) சரீரத்தை கொண்டு,Kondu - (தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி கிடந்தார்,Kidandhaar - (என் சரீரத்தை கொண்டு (தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி (என் சரீரத்தினுள்ளே) பள்ளி கொண்டிரா நின்றார், ஆதலால் பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 444 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 2 | சித்திர குத்த னெழுத்தால் தென் புலக்கோன் பொறி யொற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி யொளித்தார் முத்துத் திரைக்கடற் சேர்ப்பன் மூதறி வாளர் முதல்வன் பத்தர்க் கமுதன் அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-2 | சித்திர குத்தன்,Siththira Kuththan - சித்ரகுப்தனென்கிற (யமலோகத்துக்) கணக்குப் பிள்ளையானவன் தென் புலம் கோன்,Then Pulam Kon - தெற்குத் திசைக்குத் தலைவனான யமனுடைய பொறி ஒற்றி,Pori Oththri - மேலெழுத்தை இடுவித்து எழுத்தால் வைத்த,Ezuththaal Vaiththa - (தான்) எழுதிவைத்த இலச்சினை,Ilachchinai - குறிப்புச் சீட்டை தூதுவர்,Thoodhuvar - யம கிங்கரர்கள் மாற்றி,Maatri - கிழித்துப் போட்டு விட்டு ஓடி ஒளிந்தார்,Odi Olindhaar - கண்ணுக்குத் தெரியாத இடந்தேடி) ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்; முத்து,Muththu - முத்துக்களை (க்கொண்டு வீசுகிற) திரை,Thirai - அலைகளை யுடைய கடல்,Kadal - கடலில் சேர்ப்பன,Saerppana - கண் வளர்ந்தருளுமவனும், மூது அறிவு ஆளர்,Moothu Arivu Aalar - முதிர்ந்த அறிவை யுடைய நித்ய ஸூரிகளுக்கு முதல்வன்,Mudhalvan - தலைவனும், பத்தர்க்கு,Paththarkku - அடியார்களுக்கு அமுதன்,Amudhan - அம்ருதம் போல் இனியனுமான எம்பெருமானுக்கு அடியேன்,Adiyaen - (யான்) தாஸனாயினேன்; பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 445 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 3 | வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புலச் சேவை யதக்கி கயிற்றும் அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-3 | எயிற்றிடை,Eyittridai - (வராஹ ரூபியாய் திருவதரித்தபோது.) (தனது) கோரப் பல் மேல் மண்,Man - பூமியை கொண்ட,Kondra - தாங்கி யருள எந்தை,Endhai - எம்பெருமான் (அடியேனுக்கு) வயிற்றில் தொழுவை,Vayitril Thozhuvai - வயிற்றினுள் விலங்கிட்டுக் கொண்டிருக்கை யாகிற கர்ப்ப வாசத்தை பிரித்து,Piriththu - கழித்தருளியும் புலம்,Pulam - இந்திரியங்களால் வல் சேவை,Val Saevai - கடுயைமான ரிஷபங்களை அதக்கி,Athakki - (பட்டி மேய்ந்து திரிய வொட்டாமல்) அடக்கியும் கயிறும்,Kayirum - நரம்புகளும் அக்கு,Akku - எலும்புகளுமேயா யிருக்கின்ற ஆணி,Aani - சரீரத்தில் (ஆசையை) கழித்து,Kaliththu - ஒழித்தருளியும் பாசம்,Paasam - (யம தூதர்களுடைய) பாசங்களை காலிடை கழற்றி,Kaalidai Kalittri - காலிலே கட்டி இழுக்க வொண்ணாதபடி பண்ணியும், இரா பகல்,Iraa Pakal - இரவும் பகலும் ஓதுவித்து,Othuviththu - நல்லறிவைப் போதித்து பயிற்றி,Payittri - (கற்பித்தவற்றை) அனுஷ்டிக்கச் செய்து அருளியும் பணி செய்ய,Pani Seiyya - நித்திய கைங்கர்யம் பண்ணும்படி என்னை கொண்டான்,Ennai Kondaan - அடியேனைக் கைக் கொண்டருளினான்; பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 446 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 4 | மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர் இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின் சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர் பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-4 | மங்கிய,Mangiya - (ஆத்துமா உருத் தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான வல் வினை,Val Vinai - வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த நோய்காள்,Noigal - வியாதிகளே உமக்கும்,Umakkum - உங்களுக்கும் கூட ஓர் வல் வினை,Or Val Vinai - ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே) கண்டீர்,Kandir - (இன்று) பாருஙக்ள் இங்கு,Ingku - இவ்விடத்தும் புகேன்மின் புகேன் மின்,Pugenmin Pugen Min - வர வேண்டா, வர வேண்டா எளிது அன்று ,Elidhu Andru - (இனி நீங்கள் என்னைக் கிட்டுகை) சுலபமான கரியமன்று; புகேன்மின்,Pugenmin - ஆகையால் இனி இங்கு வர வேண்டா சிங்கப் பிரானவன்,Singap Piraanavan - நரசிம்மாவதாரமெடுத்து உபசரித்தருளினவன எம்மான் அவன்,Emmaaan Avan - (என் ஆத்துமா) எமக்குத் தலைவனுமான எம்பெருமான் சேரும்,Saerum - எழுந்தருளி யிருப்பதற்கிடமான திரு கோவில் கண்டீர்,Thiru Kovil Kandir - திருக் கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள் பங்கப்படாத,Pangkap Padaadha - பரிபவப் படாமல் உய்யபோமின்,Uyya Pomin - பிழைத்துப் போங்கள். பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 447 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 5 | மாணிக் குறளுருவாய மாயனை என் மனத் துள்ளே பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்களுள்ளீர் பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-5 | மாணி,Maani - பிரமசாரி வேஷத்தை யுடைய குறள் உரு,Kural Uru - வாமனாய் அவதரித்தவனும் மாணிக்கப் பண்டாரம்,Maanikkap Pandaaram - மாணிக்க நிதி போல் இனியவனும் மாயனை,Maayanai - ஆச்சரிய பூதனுமான எம்பெருமானை பேணி,Paeni - ஆசைப் பட்டு கொணர்ந்து,Konarndhu - எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து என் மனத்துள்ளே,En Manaththullae - என் நெஞ்சினுள்ளே புகுத,Pugudha - புகுந்திருக்கும்படி பிறிது இன்றி,Piridhu Inri - வேற்றுமை யில்லாமல் வைத்துக் கொண்டேன்,Vaiththuk Konden - அமைத்துக் கொண்டேன். வலி வல் குறும்பர்கள் உள்ளீர்,Vali Val Kurumpargal Ullir - மிகவும் கொடிய குறும்புகளைச் செய்கிற இந்திரியங்களே! நடமின்,Nadamin - (வேறிடந்தேடி) ஓடுங்கள்; பாணிக்க வேண்டா,Paanikka Vaendaa - தாமதிக்க வேண்டியதில்லை, பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 448 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 6 | உற்ற வுறு பிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின் பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர் அற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர் பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-6 | உற்ற,Utrra - நெடு நாளாக இருக்கிற உறு பிணி,Uru Pini - மிக்க வருத்தத்தைச் செய்கிற நோய்காள்,Noigal - நோய்களே! உமக்கு,Umakku - உங்களுக்கு ஒன்று,Onru - ஒரு வார்த்தை சொல்லுகேன்,Sollugenaen - சொல்லுகிறேன்: கேண்மின்,Kaenmin - கேளுங்கள்; பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்,Pettrangal Maeykkum Piraanaar Paenum - (நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது) பசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளி யிருக்கைக்கு இடமான திருக் கோயில்,Thiruk Koyil - திருக் கோயிலாயிற்று; கண்டீர்,Kandir - முன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் பாருங்கள்; ஆழ்,Aazh - (ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின வினை காள்,Vinai Kaal - ஓ கொடுமைகளே! இன்னம்,Innam - மறுபடியும் அற்றம் உரைக்கின்றேன்,Attram Uraikkindren - அறுதியாகச் சொல்லுகிறேன்; உமக்கு,Umakku - உங்களுக்கு இங்கு,Ingku - இவ்விடத்தில் ஓர் பற்று இல்லை,Or Patru Illai - ஒருவகை அவலம்பமும் கிடையாது; நடமின்,Nadamin - (இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள். பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 449 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 7 | கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந் துழல்வேனை வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல் வினையாயின மாற்றி பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-7 | சிறு வரை,Siru Varai - சிறிய மலை போன்ற கொங்கை என்னும்,Kongai Ennum - முலைகளாகிற பொதும்பினில்,Podhumpinil - பொந்தில் வழுக்கி வீழ்ந்து,Vazhukki Veezhndhu - வழுக்கி விழுந்து அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு,Angu Or Muzhaiyinil Pukkitttu - (நரகமென்கிற) பர லோகமாகிய ஒரு குஹையினுள் புகுந்து அழுந்திக் கிடந்த,Azhundhik Kidandha - (அங்குநின்றும் கால் பேர்க்க வொட்டாமல் அங்கேயே) அழுந்தியிருந்து உழல்வேனை,Uzhalvaenai - (திரியப் போகிற என்னுடைய) வல் வினை ஆயின,Val Vinai Aayina - தீவினைகளா யிருப்பவைகளை வங்கம் கடல் வண்ணன் அம்மாள்,Vangkam Kadal Vannan Ammaaal - கப்பல்களை யுடைய கடல் போன்ற திருநிறத்தனான எம்பெருமான் மாற்றி,Maatri - போக்கி யருளி பங்கப்படா வண்ணம்,Pangkap Padaa Vannam - பரிபவப் படாதபடி செய்தான்,Seidhaan - செய்தருளினான்; பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 450 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 8 | ஏதங்க ளாயின வெல்லாம் இறங்க லிடுவித்து என் னுள்ளே பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன் னெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில் பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-8 | பீதக ஆடை பிரானர்,Peethaga Aadai Piraanargal - திருப் பீதாம்பரத்தை யுடையவனான எம்பெருமான் பிரமகுரு ஆகிவந்து,Brahmaguru Aagivandhu - ப்ரஹ்மோபதேசம் பண்ணக் கடவனான ஆசாரியனாய் எழுந்தருளி போது இல்,Podhu Il - அறிவுக்கு இருப்பிடானதும் அல்,Al - அந்தர்யாமியையும் அறிய வொட்டாத) வன்மையை யுடையதுமான நெஞ்சம் கமலம்,Nenjcham Kamalam - ஹ்ருதய கமலத்தினுள் புகுந்து,Pugundhu - பிரவேசித்து என் னுள்ளே,En Nullae - எனது (அந்த) ஹிருதயத்தில் ஏதங்கள் ஆயின எல்லாம்,Eaathangal Aayina Ellaam - தோஷங்களாக இருப்பவற்றை யெல்லாம். இறங்க விடுவித்து,Iranga Viduviththu - நீக்கி என்,En - என்னுடைய சென்னித் திடரில்,Sennith Thidarul - தலையினிது பாத விலச்சினை,Paadha Vilachchinai - ஸ்ரீபாத முத்திரையை வைத்தார்,Vaiththaar - ஏறி யருளப் பண்ணினான் பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 451 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 9 | உறக லுறக லுறகல் ஒண் சுட ராழியே சங்கே அற வெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே இறவு படாம லிருந்த எண்மர் உலோக பாலீர்காள் பறவை யரையா உறகல் பள்ளி யறைக் குறிக் கொண்மின்–5-2-9 | ஒண் சுடர்,On Sudar - அழகிய தேஜஸ்ஸை யுடைய ஆழியே,Aazhiye - திருவாழி யாழ்வானே! எறி,Eri - (எம்பெருமானால்) வீசப் படுகின்ற நாந்தக வாளே!,Naandhaka Vaaley - நந்தகமென்கிற திருக் குற்றுடை வாளே! அழகிய சார்ங்கமே,Azhagiya Saargngamae - அழகு பொருந்திய சார்ங்கமேசார்ங்கமென்கிற தநுஸ்ஸே! தண்டே,Thandae - (கௌமோதகி என்கிற) கதையே! இருந்த,Irundha - (எம்பெருமானுடைய நியமனத்திற்கு ஆட்பட்டு) இரா நின்ற எண்மர் உலோக பாலீர்காள்,Enmar Uloga Paaleerkaal - அஷ்ட திக்குப் பாலகர்களே! இறவு படாமல்,Iravu Padaamal - தப்பிப் போகாமல் சங்கே,Sangey - ஸ்ரீபஞ்சஜந்யாழ்வானே! அற,Ara - (ஆச்ரித விரோதிகளின் உடல்) அறும்படி உறகல் உறகல் உறகல்,Urakal Urakal Urakal - உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள்; பறவை அரையா,Paravai Araiya - பறவைகளுக்குத் தலைவனான பெரிய திருவடியே! உறகல்,Urakal - உறங்காதிரு; பள்ளி அறை,Palli Arai - (நீங்கள் எல்லாரும் விழித்துக் கொண்டிருந்தது) (எம்பெருமானுக்குத்) திருப்பள்ளி யறையாகிய என் சரீரத்தை குறிக் கொள்மின்,Kurik Kolmin - நோக்கிக் காத்திடுங்கள். |
| 452 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 10 | அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவற் பொருட்டே–5-2-10 | அரவத்து அமளியினோடும்,Aravaththu Amaliyinodum - திருவனந்தாழ்வனாகிற படுக்கையோடும் அழகிய பால் கடலோடும்,Azhagiya Paal Kadalodum - அழகு பொருந்திய திருப் பாற் கடலோடுங் கூட அரவிந்தப் பாவையும் தானும்,Aravindhap Paavayum Thaanum - செந்தாமரை மகளாகிய பெரிய பிராட்டியாரும் தானும் வந்து,Vandhu - எழுந்து அருளி அகம்படி,Agampadi - (எனது) உடம்பாகிற ஸ்தானத்தில் புகுந்து,Pugundhu - பிரவேசித்து, பரவை,Paravai - (அந்தத்) திருப்பாற்கடலினுடைய பல திசை,Pala Thisai - பல அலைகள் மோத,Moedha - தளும்ப பள்ளி கொள்கின்ற,Palli Kolginra - திருக் கண் வளர்ந்தருளா நின்ற பிரானை,Piranaai - உபகாரகனான எம்பெருமானை விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் பட்டினம் காவல் பொருட்டே,Pattinam Kaaval Poruttrae - ஆத்ம ரக்ஷண நிமித்தமாக பரவுகின்றான்,Paravuginraan - போற்றுகின்றார். |
| 453 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 1 | துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து புக்கினில் புக்குன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே மக்க ளறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் திரு மாலிருஞ்சோலை யெந்தாய்–5-3-1 | மக்கள் அறுவரை,Makkal Aruvarai - உனக்கு முன்பிருந்த (ஆறு பிள்ளைகளையும்) கல் இடை மோத,Kal Idai Moedha - (கம்ஸனானவன்) கல்லில் மோதி முடிக்க, (அதனால்) இழந்தவள் தன்,Izhandhaval Than - (அம் மக்கள் அறுவரையும்) இழந்தவனான தேவகியினுடைய வயிற்றில்,Vayitrril - திரு வயிற்றில் சிக்கென வந்து,Sikkena Vandhu - சடக்கென வந்து பிறந்து நின்றாய்,Pirandhu Nindraai - திருவவதரித் தருளினவனே! திருமாலிருஞ்சோலை எந்தாய்,Thirumaalirunjcholai Endhaai - (எல்லார்க்கும் எளியவனும்படி) திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே! புக்கினில் புக்கு,Pukkinil Pukku - (நீ) புகுந்தவிடங்களில் எல்லாம் (நானும்) புகுந்து கண்டுகொண்டு,Kandukondu - உன்னை ஸேவித்து துக்கம் சுழலையை சூழ்ந்து கிடந்த,Thukkam Suzhalaiyai Soozhndhu Kidandha - துக்கங்களாகிற சுழலாற்றைச் சுற்று மதிளாகக் கொண்டிருக்கிற வலையை,Valaiyai - வலை போன்ற சரீரத்தில் நசையை அற,Ara - அறும்படி பறித்தேன்,Pariththaen - போக்கிக் கொண்ட அடியேன் இனி,Ini - (உன்னைப்) பிரயாணப்பட்டுப் பெற்ற பின்பும் போக விடுவது உண்டே,Poga Viduvathu Undae - (வேறிடத்திற்குப்) போகும்படி விடுவது முண்டோ? |
| 454 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 2 | வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உந்த னிந்திர ஞாலங்களால் ஒளித்திடில் நின் திரு வாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீ வினை தீர்க்கலுற்று தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-2 | நாடும்,Naadum - நாட்டிலுள்ளாரும் நகரமும்,Nagaramum - நகரத்திலுள்ளாரும் எங்கும்,Engkum - மற்றெங்குமுள்ளவர்களும் அளித்து,Aliththu - நெருங்கி தம்முடைய,Thammudaiya - தங்கள் தங்களுடைய தீ வினை,Thee Vinai - துஷ்ட கர்மங்களை தீர்க்கல் உற்று,Theerkal Utrru - ஒழிப்பத்தில் விருப்புற்று தெளித்து,Thelizththu - ஆரவாரித்துக் கொண்டு வலம் செய்யும்,Valam Seiyyum - பிரதக்ஷிணம் செய்யப் பெற்ற தீர்த்தம் உடை,Theertham Udai - தீர்த்தம் விசேஷங்களையுடைய திருமாலிருஞ்சோலை,Thirumaalirunjcholai - திருமாலிருஞ்சோலையில் எந்தாய்,Endhaai - (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே! வளைத்து வைத்தேன்,Valaitthu Vaiththaen - (உன்னைச்) சூழ்ந்து கொண்டேன் இனி,Eni - இனி மேல் போகல் ஒட்டேன்,Pogal Ottaen - (நீ வேறிடந் தேடிப்) போவதை (நான்) ஸம்மதிக்க மாட்டேன். உன் தன்,Un Than - உனக்கு உள்ள இந்திர ஞாலங்களால்,Endhira Gnaalangalal - மாயச் செய்கையினால்- வல்லமையினால் ஒளித்திடில்,Oliththidil - (உன்னை நீ) ஒளித்துக் கொண்டால் நின் திரு ஆணை,Nin Thiru Aanai - உனது பிராட்டியின் மேலாணை. நீ,Nee - (அப்படி ஒளிக்கலாகாது) நீ ஒருவர்க்கும்,Oruvarkkum - ஒருவரிடத்திலும் மெய்யன் அல்லை,Meiyan Allai - உண்மையான உக்தி அனுஷ்டானங்களை யுடையவனல்லை. |
| 455 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 3 | உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை யழிவு கண்டாய் புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று இனக் குறவர் புதிய துண்ணும் எழில் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-3 | இனம் குறவர்,Enam Kuravar - திரள் திரளாய்ச் சேர்ந்துள்ள குறவர்கள் புனம்,Punam - புனத்திலுண்டான தினை,Thinai - தினைகளை கிள்ளி,Killli - பறித்து புது அவி காட்டி,Pudhu Avi Kaatti - (அதை எம்பெருமானுக்குப்) புதிய ஹவிஸ்ஸாக அமுது செய்யப் பண்ணி உன் பொன் அடி வாழ்க என்று,Un Pon Adi Vaazhga Endru - அதற்காகப் பிரயோஜ நாந்தரத்தை விரும்பாமல்)“உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்று (மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு) புதியது,Pudhiyadhu - புதியதாகிய அத் தினையை உண்ணும்,Unnum - உண்ணுதற்கு இடமான எழில்,Ezhil - அழகு பொருந்திய மாலிருஞ் சோலை,Maalirunjcholai - திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற) எந்தாய்,Endhaai - எம்பெருமானே! உனக்கு,Unakku - (சேஷியாகிய) உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்,Pani Seidhu Irukkum Thavam Udaiyaen - கைங்கரியம் பண்ணிக் கொண்டிருக்கையாகிற (உனது) அநுக்ரஹத்தைப் பெற்றுள்ள அடியேன் இனி,Eni - இனி மேல் போய்,Poi - புறம்பே போய் ஒருவன் தனக்கு பணிந்து,Oruvan Thanakku Panindhu - ஒரு க்ஷுத்ர புருஷனைப் பற்றி கடைத்தலை,Kadainthalai - (அவனுடைய) வீட்டு வாசலில் நிற்கை,Nirkai - (கதிதேடி) நிற்பதானது நின் சாயை அழிவு கண்டாய்,Nin Saayai Azhivu Kandaai - உன்னுடைய மேன்மைக்குக் குறை யன்றோ? |
| 456 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 4 | காதம் பலவும் திரிந்துழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீருமில்லை உன் பாத நிழலல்லால் மற்றோரு யிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று பேதஞ்செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-4 | குரு,Guru - குருவம்சத்திற் பிறந்த பாண்டவர்க்காய்,Paandavarkkaai - பாண்டவர்களுக்காக ஓர் பொய் சுற்றம் பேசி சென்று,Or Poi Sutrram Paesi Sendru - ஒரு பொய் யுறவைப் பாராட்டிக் கொண்டு அங்கு,Angu - துரியோதனாதியரிடத்து தூது சென்றாய்,Thoodhu Sendraai - தூது போய் பேதம் செய்து,Paedham Seidhu - இரண்டு வகுப்பினர்க்கும் கலஹத்தை மூட்டி இல்லை,Ellai - (பின்பு பாரத யுத்தங் கோடித்து அந்த யுத்தத்தில்) கண்டதில்லை உன் பாதம் நிழல் அல்லால்,Un Paadham Nizhal Allaalaal - உனது திருவடி நிழலொழிய எங்கும்,Enggum - துரியோதனாதியரில் ஒருவர் தப்பாமல் பிணம் படுத்தாய்,Pinam Paduththaai - பிணமாக்கி யொழித் தருளினவனே! திருமாலிருஞ்சோலை எந்தாய்!,Thirumaalirunjcholai Endhaai - திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே! காதம் பலவும்,Kaadham Palavum - பலகாத தூரமளவும் திரிந்து உழன்றேற்கு,Thirindhu Uzhandraerku - திரிந்து அலைந்த எனக்கு அங்கு,Angu - அவ் விடங்களில் ஓர் நிழல் இல்லை,Or Nizhal Illai - (ஒதுங்குகைக்கு) ஒரு நிழலுங் கண்டதில்லை; நீர்,Neer - (அன்றியும்) (காபமாற்றக் கடவதான) தண்ணீரும் மற்று ஓர்,Matru Or - மற்றொரு இல்லை,Ellai - கண்டதில்லை ஆராய்ந்து பார்த்தவிடத்தில் உன் பாதம் நிழல் அல்லால்,Un Paadham Nizhal Allaalaal - உனது திருவடி நிழலொழிய உயிர்ப்புஇடம்,Uyirppidam - ஆச்வாஸ ஹேதுவான இடத்தை நான் எங்கும் காண்கின்றிலேன்,Naan Enggum Kaankindrilaen - நான் ஓரிடத்தும் காண்கிறேனில்லை. |
| 457 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 5 | காலுமெழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் மேலு மெழா மயிர்க் கூச்சுமறா என தோள்களும் வீழ் வொழியா மாலுகளா நிற்கும் என் மனனே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன் சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-5 | சேல்,Sael - மீன்களானவை உகளா நிற்கும்,Ughalaa Nirkum - துள்ளி விளையாடுதற்கு இடமான நீள் சுனை சூழ்,Neel Sunai Soozh - பெரிய தடாகங்களாலே சூழப் பெற்ற என,Ena - என்னுடைய காலும்,Kaalum - கால்களும் எழா,Ezhaa - (வைத்து விடத்தை விட்டுப்) போகின்றனவில்லை; கண்ண நீரும்,Kanna Neerum - கண்ணீரும் நில்லா,Nillaa - உள்ளே தங்குகின்றனவில்லை. உடல்,Udal - சரீரமானது சோர்ந்து நடுங்கி,Soarndhu Nadungi - கட்டுக் குலைந்து நடுங்கியதனால் குரலும்,Kuralum - குரலும் மேல் எழா,Mael Ezhaa - கிளம்புகின்றதில்லை; மயிர் கூச்சும் அறா,Mayir Koochchum Araa - மயிர்க் கூச்செறிதலும் ஒழிகின்றதில்லை; திருமாலிருஞ்சோலை,Thirumaalirunjcholai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எந்தாய்,Endhaai - எம்பெருமானே! தோள்களும்,Tholgalum - (எனக்கு உன்னிடத்துள்ள அன்பு மிகுதியினால்) தோள்களும் வீழ்வு ஒழியா,Veezhvu Ozhiaa - விழுந்து போவதில் நின்றும் ஒழிந்தனவில்லை ( ஒரு வியாபாரமும் செய்ய முடியாமல் விழுந்தொழிந்தன); என் மனம்,En Manam - எனது நெஞ்சானது மால் உகளா நிற்கும்,Maal Ughalaa Nirkum - வியாமோஹத்தை அடைந்திரா நின்றது; வாழ,Vaazha - (இப்படிகளால்) வாழ்வுறும்படி உன்னை,Unnai - உன்னை தலைப் பெய்திட்டேன்,Thalaip Peiththittaen - சேர்ந்து விட்டேன். |
| 458 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 6 | எருத்துக் கொடியுடை யானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப் பிறவி யென்னும் நோய்க்கு மருந்தறிவாரு மில்லை மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத் திருத்தி உங் கோயிற் கடைப் புகப் பெய் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-6 | திருமாலிருஞ்சோலை எந்தாய்!,Thirumaalirunjcholai Endhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே! எருது கொடி உடையானும்,Erudhu Kodi Udaiyaanum - வ்ருஷப த்வஜனான ருத்திரனும் பிரமனும்,Brahmanum - (அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும் இந்திரனும்,Indhiranum - தேவேந்திரனும் மற்றும் ஒருத்தரும்,Matrum Oruththarum - மற்றுள்ள எந்தத் தேவரும் இ பிறவி என்னும் நோய்க்கு,E Piravi Ennum Noaikku - இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு மருந்து அறிவார் இல்லை,Marundhu Arivaar Illai - மருந்து அறிய வல்லவரல்லர்; மருத்துவன் ஆய் நின்ற,Maruththuvan Aay Nindra - (இப்பிறவி நோய்க்கு) மருந்தை அறியுமவனான மா மணிவண்ணா,Maa ManiVanna - நீலமணி போன்ற வடிவை யுடையவனே! மறு பிறவி தவிர,Maru Piravi Thavira - (எனக்கு) ஜந்மாந்தரம் நேராதபடி திருத்தி,Thirutthi - (அடியேனை) சிக்ஷித்து உன் கோயில் கடை புக பெய்,Un Koyil Kadai Puga Pey - உன் கோயில் வாசலில் வாழும்படி அருள் புரிய வேணும். |
| 459 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 7 | அக்கரை யென்னு மனர்த்தக் கடலு ளழுந்தி உன் பேரருளால் இக்கரை யேறி யிளைத்திருந்தேனை அஞ்சேலென்று கை கவியாய் சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும் செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-7 | சக்கரமும்,Chakkaramum - திருவாழியாழ்வானும் தட கைகளும்,Thada Kaigalum - பெரிய திருக்கைகளும் கண்களும்,Kangalum - திருக்கண்களும் பீதக ஆடை யொடும்,Peethaga Aadai Yodum - திருப் பீதாம்பரமும் செக்கர் நிறத்து சிவப்பு உடையாய்,Chekkar Niraththu Sivappu Udaiyaai - செவ் வானத்தின் நிறம் போன்ற நிறத்தை உடையவையாய் இருக்கப் பெற்றவனே! அக்கரை என்னும்,Akkarai Ennum - ஸம்ஸாரம் என்கிற அநர்த்த கடலுள்,Anarththa Kadalul - அநர்த்த ஸமுத்திரத்தின் உள்ளே அழுந்தி,Azhundhi - (நெடுநாள்) அழுந்திக் கிடந்து இளைத்திருந்து,Elaiththirundhu - (அதில்) வருத்ப்பட்டுக் கொண்டிருந்தது உன் பேர் அருளால்,Un Per Arulaal - (பின்பு) உனது பரம கிருகையினால் இக் கரை ஏறினேனை,Ek Karai Eaerinaenaai - இக் கரையேறிய அடியேனைக் குறித்து அஞ்சேல் என்று கை கவியாய்,Anjael Endru Kai Kaviyai - அபய ப்ரதாக முத்ரையைக் காட்டி யருள |
| 460 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 8 | அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற் றிருப்பன் இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச் சக்கரமதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-9 | மைத்துனன் மார்களை,Maiththunan Maargalai - உனது அத்தை பிள்ளைகளான பாண்டவர்களை வாழ்வித்து,Vaazhviththu - வாழச் செய்து மாற்றவர் நூற்றுவரை,Maatravar Nootruvarai - (அவர்களுக்குச்) சத்துருக்களாகிய துரியோதநாதியர் நூறு பேரையும் கெடுத்தாய்,Keduththaai - ஒழித்தருளினவனே! திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!,Thirumaalirunjcholai Eaendhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே! இன்றொடு நாளை என்றே,Endrodu Naalai Endrae - இன்றைக்கு, நாளைக்கு என்று சொல்லிக் கொண்டே (கழித்த காலம்) எத்தனை காலமும் எத்தனை ஊழியும்,Ethanai Kaalamum Ethanai Oozhiyum - எத்தனை காலமும் எத்தனை கல்பங்களும் உண்டோ, இத்தனை காலமும்,Ithanai Kaalamum - இத்தனை காலம் முழுவதும் போய் கிறிப்பட்டேன்,Poi Kirippattaen - (ஸம்ஸாரமாகிற) யந்திரத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தேன்; இனி,Eni - (அதில் நின்றும் விடுபட்டு ஞானம்பெற்ற) இன்று முதலாக போக விடுவது உண்டே,Poga Viduvathu Undae - (உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ? சித்தம்,Siththam - (எனது) நெஞ்சானது நின்பாலது,Nin Paalathu - உன் திறத்தில் ஈடுபட்டுள்ளமையை அறிதி அன்றே,Aridhi Anrae - அறிகின்றா யன்றோ? |
| 461 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 9 | அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற் றிருப்பன் இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச் சக்கரமதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-9 | அங்கு,Angu - சோணித புரத்திற்கு சென்று,Sendru - எழுந்தருளி வாணனை,Vaananai - பாணாஸுரனுடைய ஆயிரம் தோளும்,Aayiram Tholum - ஆயிரந் தோள்களும் திசை திசை,Thisai Thisai - திக்குகள் தோறும் தென்றி வீழ,Thenri Veezha - சிதறி விழும்படி திருச் சக்கரம் அதனால்,Thiruch Chakkaram Athanaal - சக்ராயுதத்தினால் செற்றாய்,Settraai - நெருக்கி யருளினவனே! திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!,Thirumaalirunjcholai Eaendhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே! வயிற்றில் கிடந்திருந்து அன்றே,Vayitrril Kidandhirundhu Anrae - கர்ப்ப வாஸம் பண்ணுகையாகிற அன்று முதற் கொண்டே அடிமை செய்யல்,Adimai Seiyal - (உனக்குக்) கைங்கரியம் பண்ணுவதில் உற்றிருப்பன்,Uttriruppan - அபிநிவேசங் கொண்டிருந்த நான் இன்று,Endru - இப்போது இங்கு வந்து,Engu Vandhu - இத் திருமாலிருஞ்சோலை மலையில் வந்து உன்னை,Unnai - (அனைவருக்கும் எளியனான) உன்னை கண்டு கொண்டேன்,Kandu Kondaen - ஸேவித்துக் கொண்டேன்; இனி போக விடுவது உண்டே,Eni Poga Viduvathu Undae - (அதில் நின்றும் விடுபட்டு ஞானம்பெற்ற) இன்று முதலாக (உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ? |
| 462 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 10 | சென்றுலகம் குடைந்தாடும் சுனைத் திரு மாலிருஞ் சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர் பட விண்ணப்பஞ்செய் பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன் ஒன்றினோ டொன்பதும் பாட வல்லார் உலகமளந்தான் தமரே–5-3-10 | உலகம்,Ulagam - உலகத்தாரெல்லாரும் சென்று,Sendru - (தங்கள் தங்கள் இருப்பிடித்தில் நின்றும்) போய் குடைந்து,Kudainthu - அவகாஹித்து ஆடும்,Aadum - நீராடா நிற்கப் பெற்ற சுனை,Sunai - தீர்த்தங்களை யுடைய திருமாலிருஞ்சோலை தன்னுள்,Thirumaalirunjcholai Thannul - திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற பிரான்,Nindra Praan - எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானடைய அடி மேல்,Adi Mael - திருவடிகள் மேல் அடிமைத்திறம்,Adimaiththiram - கைங்கரிய விஷயமாக பொன் திகழ்,Pon Thigal - ஸ்வர்ண மயமாய் விளங்கா நின்ற மாடம்,Maadam - மாடங்களினால் பொலிந்து தோன்றும்,Polindhu Thoondrum - நிறைந்து விளங்கா நின்ற புதுவை,Puduvai - ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு கோன்,Koon - தலைவரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் நேர்பட,Naerpadha - பொருந்தும்படி விண்ணப்பம் செய்,Vinnappam Sei - அருளிச் செய்த ஒன்றினோடு ஒன்பதும்,Onrinodu Onbadum - இப் பத்துப் பாசுரங்களையும் பாட வல்லார்,Paada Vallaar - பாட வல்லவர்கள் உலகம் அளந்தான் தமர்,Ulagam Alandhaan Thamar - திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர் |
| 463 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - எம்பெருமானே! நெடுநாளாய் உன் திறத்தில் விமுகனாய் விஷயாந் தரங்களை நச்சி அங்குமிங்கும் அலைந்து திரிந்த அடியேனை, உனது திவ்ய கல்யாண குணகணங்களைக்காட்டி வசப்படுத்திக்கொண்டு, ஆத்மாத்மீயங்களை யெல்லாம் உனக்கே சேஷப்படுத்திவிட்டு உன் அருளையே புருஷார்த்தமாகப் பிரதிபத்தி பண்ணிக் கொண்டிருக்கும் படியான நிலைமையயும் அடியேனுக்கு அமைத்தருலினாய், இதனால் உன் அபேக்ஷிதமும், தலைக்கட்டிற்று என் அபேக்ஷிதமும் தலைக்கட்டிற்று; இனிச் செய்ய வேண்டுவதொன்றில்லை; இன்னும் என் செய்ய வேணுமென்ற உன் திருவுள்ளத்தில் ஓடுகிறது என்று கேட்கிறபடி. திருவேங்கடத்துக்குத் தண்மை – ஸம்ஸார தாபங்களை ஆற்றவற்றாயிருக்கை. உடையாய்- உடையான் என்பதன் ஈறு திரிந்த விளி. வாழ – பிறவினையில் வந்த தன்வினை; ‘உலகு தன்னை’ என்பதை உருபு மயக்கமாகக் கொண்டால், உலகத்தவர்கள் வாழும்படி நின்ற நம்பீ; என்று உரைக்கலாம். தாமோதரன் -கண்ணி நுண் சிறுந்தாம்பினாற் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனாதலால், அத்தாம்பின் தழும்பு திரு வயிற்றில் தோன்றப் பெறவனென்றபடி. சதிர் – ருஜுவாயிருக்குந் தன்மை. கீழ் திருப்பல்லாண்டில், “தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின், கோயிற் பொறியாலே யொற்றுண்டு நின்று” என்றதை-, இப் பாட்டில் மூன்றாமடியால் விவரிக்கிறார். ஆத்துமாவுக்குச் சக்கரப்பொறி யொற்றுகையாவது – அநந்யார்ஹ சேஷத்வ ஜ்ஞாநத்தைப் பிறப்பிக்கை. அது பிறந்தமை தோற்றவிறே தோளுக்குத் திருவிலச்சினை யிடுவது. ‘நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றது – உபாயாந்தரத்திலும் ருசி குலையப் பெற்றேன் என்றபடி. … 1 | சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 | சென்னி ஓங்கு, Chenni ongu - கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற தண், Than - குளிர்ந்த திருவேங்கடம், Thiruvengadam - திருவேங்கட மலையை உடையாய், Udayai - (இருப்பிடமாக) உடையவனே! உலகு தன்னை, Ulagu thannai - உலகத்தவர்களை வாழ, Vaazha - வாழ்விப்பதற்காக நின்ற, Nindru - எழுந்தருளி யிராநின்ற நம்பீ, Nambi - (கல்யாண குணங்களால்) நிறைந்தவனே! தாமோதரா, Thamodhara - தாமோதரனே! சதிரா, Sathira - (அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே! என்னையும், Yennaiyum - எனது ஆத்துமாவுக்கும் என் உடைமையையும், En udaimaiyaiyum - என் உடைமையான சரீரத்திற்கும் உன், Un - உன்னுடைய சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு, Sakara pori otrik kondu - ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து நின், Nin - உன்னுடைய அருளே, Arule - கருணையே புரிந்திருந்தேன், Purindhiruthen - (ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன் இனி, Ini - இப்படியான பின்பு திருக் குறிப்பு, Thirukkurippu - திரு வுள்ளக் கருத்து என், En - எதுவாயிருக்கின்றது? |
| 464 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கீழ்பாட்டில், “இனியென் திருக்குறிப்பே” என்று எனக்குச் செய்ய வேண்டுவதெல்லாம் செய்து தலைக் கட்டின பின்பு இனிப்பதறுவானென்? என்று கேட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் எல்லாம் பெற்றீரோ? உம்மை நெடு நாளாகப் பற்றிக் கிடக்கிற கருமங்கள் கிடக்கின்றவே; ப்ராப்திக்கு உறுப்பான பரம பக்தி பிறக்க வில்லையே” என்ன; இவை யித்தனையும் தமக்குப் பிறந்தபடியை அருளிச் செய்கிறார் – நீ பொருளல்லாத வெள்ளைப் பொருளாக்கின பிறகு ஸம்ஸார ஸாகரமானது நிச் சேஷமாக வற்றிப் போனமையால், அடியோர் பெருத்த பாக்கியம் பண்ணினேனாகிறேன்; இந்த ஸம்ஸாரத்துக்கு மூலமான பாப ராசிகளும் தீயினிற் பட்ட தூசு போல இவை யெல்லாம் இங்ஙனொழிந்தமையால் ஞானம் குறைவற்ற வளரப்பெற்றது என்றவாறு. எம்பெருமான் ஆழ்வாரைத் திருநாட்டுக்கு எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போவதாகப் பெரிய திருவடியின் மேலேறிக் கொண்டு வந்து தோன்றினனாதலால் “பறவையேறு பாம்புருடா” என விளிக்கின்றார். ‘பெரும்பதமாகின்றது’ என்பதற்கு முன், எனக்கு என வருவிக்க வேணும்; பெரிய பதவியை யான் பெறா நின்றேன் என்றபடி. இன்றளவும் பிறவிக் கடலில் ஆழங்காற்பட்டுக் கிடந்தமையால் நிஹீந பதவியிலிருந்த நான், இன்று அதனை வென்றமையால் உத்தம பதவியைச் சேர்ந்தேன் என விரிக்க. ஆல் இரண்டும் மகிழ்ச்சிக் குறிப்பிடைச் சொல். தீக்கொளீஇ – தீக்கொண்டு; சொல்லிசையளபெடை ? “போய பிழையும் புகு தருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்” என்ற திருப் பாவை இங்கு நினைக்கத்தக்கது. அறிவை என்ற சொல்லில், ஐ -சாரியை. இவ் விடத்தில் அறிவை யென்று பரம பக்தியைச் சொல்லுகிறதென்பர். பிறவிக் கடலில் ஆழ்ந்திருந்த நான், அதனை வென்று வெளிக் கிளம்பி நின்றால், ஞானமாகிற ஒரு அமுதவாறு வாயையும் தலையும் சொல் நயத்தாற் போதருமென்க. தலைப்பற்றி வாய் கொள்ளுதல் -மேல் மேல் வளர்ந்து பெருகிச் செல்லுதல். 2 | பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால் அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 | பறவை ஏறு, Paravai eru - பெரிய திருவடி மேல் ஏறுமவனான பரம் புருடா, Param puruda - புருஷோத்தமனே! நீ, Nee - (ஸர்வ ரக்ஷகனான) நீ என்னை, Ennai - (வேறு கதி யற்ற) என்னை கைக் கொண்ட பின், Kaikonda pin - ஆட் படுத்திக் கொண்ட பிறகு பிறவி என்னும் கடலும், Piravi ennum kadalum - ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும் வற்றி, Vatri - வறண்டு போய் (அதனால்) பெரும் பதம் ஆகின்றது, Perum padham agindradhu - பெரிய தரம் பெற்றதாகிறது இறவு செய்யும், Iravu seiyum - (இவ்வாத்துமாவை) முடிக்கிற பாவக்காடு, Pavakkaadu - பாப ஸமூஹமானது தீக் கொளீஇ, Thee koli - நெருப்புப் பட்டு வேகின்றது, Vegindradhu - வெந்திட்டது அறிவை என்னும், Arivai enum - ஞானமாகிற அமுதம் ஆறு, Amudham aaru - அம்ருத நதியானது தலைப் பற்றி வாய்க் கொண்டது, Thalaipatri vaaikondadhu - மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது |
| 465 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கீழ் “பிறவியென்னுங் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால், இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்” என்ற தம்முடைய விரோதிகள் ஒழிந்தமையையும் அபேக்ஷிதம் தலைக் கட்டிமையையும் அருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! நீரொருவர் மாத்திரம் பேறு பெற்றால் அது என்னாகும்? உம்மோடு ஸம்பந்தமுடையார்க்கும் விரோதி கழிந்தலாலன்றோ? நீர் பேறு பெற்றீராவது” என்ன, அதற்கு ஆழ்வார், “என் நாயகனே! நான் உன்னுடைய பொருளாக வாய்ந்த பின்பு என்னைப் போல் நன்மை பெற்றார் இவ் வுலகில் யாரேனுமுண்டோ? என்னுடைய விரோதிகள் கழிந்ததன்றி என்னோடு ஸம்பந்தம் பெற்றாருடைய விரோதிகள் கழிந்தது மன்றி, இந் நாட்டிலுள்ள ரனைவருடையவும் விரோதிகளுமன்றோ கழிந்தன; இதற்கு மேற் படவும் ஒரு நன்மை யுண்டோ?” என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டு. எம்மனா – எம் மன்னா; தொகுத்தல்; ‘மன்னன்’ என்ற சொல்லின் ஈறுதிரிந்த விளி. “எம்மனாயென் குலதெய்வமே” என்றும் ஒரு பாடம். அப்போது ‘எம் அனாய்’ எனப் பிரியும். அனாய்-அன்னை என்பதன்விளி; தொகுத்தல் ; எனக்குத் தாய் போலப் பிரியமே நடத்துமவனே! என்றபடி. குலதெய்வம் – வடமொழித் தொடர். “நம்மன்போல வீழ்த்தமுக்கும்” என்று – பாவங்களின் கொடுமையைக் கூறியவாறு. “நாட்டுள பாவமெல்லாம்” என்றும் பாடமுண்டென்பர். (சும்மெனாதே) ‘கப் சிப், வாயைத் திறவாமல் ஓடிப் போய் விட்டான்’ என்பதுபோல ; போவது பிறர்க்குத் தெரியாதபடி போயினவென்க. (தூறுகள் பாய்ந்தன) “வனோ மறிகடலோ மாருதமோத தீயகமோ, நானோ ஒருங்கிற்றுங் கண்டிலமால்- ஆனீன்ற, கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்ததார். தாள் பணிந்தோம், வன்துயரை யாவாமருங்கு” என்றார் நம்மாழ்வார். “இவ் விடத்தில், தூறு என்கிறது ஸம்ஸாரிகளை” என்றருளிச் செய்வாராம் திருக்கோட்டியூர் நம்பி. தூறென்று செடியாய், கிளை விட்டுக் கிடக்கிற ஸம்ஸாரத்தைச் சொல்லக் கடவதிறே. “முற்ற விம் மூவுலகும் பெருந் தூறாய்த் தூற்றிற் புக்கு” என்ற திருவாய்மொழி காண்க. 3 | எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார் நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம் சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 | எம் மனா, Em mana - எமக்குத் தலைவனே!;தாய் ; மன்னன் என் குல தெய்வமே, En kuladeivame - என் குடிக்குப் பரதேவதை யானவனே! என்னுடைய நாயகனே, Ennudaiya naayagane - எனக்கு நாதனானவனே! நின்னுளேன் ஆய், Ninnulen ai - உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய் நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும், Naatil ulla ella paavangalum - உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்;நாடு சாஸ்திரம் என்றுமாம் சும்மெனாதே, Summenaathe - மூச்சு விடவும் மாட்டாமல் பெற்ற நன்மை, Petra nanmai - பெற்ற நன்மையை இ உலகினில், I ulaginil - இந்த உலகத்திலுள்ள ஆர் பெறுவார், Aar peruvaar - மற்று யார் தான் பெறுவர்? நம்மன் போல, Namman pol - பூத ப்ரேத பிசாசங்களைப் போல் (உருத் தெரியாமல் ஒளிந்து வந்து) வீழ்ந்து அமுக்கும், Veezhndhu amukkum - கீழே தள்ளி மேலே அமுக்கா நின்றுள்ள கை விட்டு, Kai vittu - ஸவாஸநமாக விட்டிட்டு ஓடி, Odi - ஓடிப் போய் தூறுகள், Thoorugal - புதர்களில் பாய்ந்தன, Paaindhana - ஒளிந்து கொண்டன |
| 466 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கடலைக் கடைந்தெடுத்த அமுதத்தைக் கலசத்தினுள் நிறைத்த வாறுபோல, உன்னை நான் என்னுள்ளே நிறைத்துக் கொண்டேன் என்கிறார் முன்னடிகளால், ஸம்ஸாரமாகிய கடலினுள் ஈச்வரனாகிற அமுதத்தைத் தேர்ந்தெடுத்து ஆத்மாவாகிற கலசத்தில் ஆழ்வார் நிறைத்துக்காண்டனரென்க. கலசம் -வடசொல்; பாத்திரமென்று பொருள் – நிறைந்தாப்போல் = நிறைத்த, ஆ, போல், எனப் பிரியும்; ஆற என்ற சொல்: ஆ எனக் குறைந்து கிடக்கிறது; ஆறு – பிரகாரம். நிறைத்த+ஆ, நிறைத்தலா எனச் சந்தியாக வேண்டுமிடத்து, அங்ஙனாகாதது, தொகுத்தல் விகாரம். (உடலுருகி இத்யாதி) பகவதநுபவாதிசயத்தினால் ஆத்துமா வெள்ளக் கேடு படாமைக்காக இட்ட கரை போன்ற சரீரமும் உருகப்பெற்றது. எனவே, இவ் வாழ்வார்க்குப் பகவத் விஷயத்திலுள்ள அவகாஹம் அற்புதமென்பது போதரும். “நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சே இடிந்து உகும்” என்று உருவற்ற நெஞ்சே உருகுகிறதென்றால் உடலுருகச் சொல்லவேணுமோ? “ஆராவமுதே! அடியேனுடலம் நின்பாலன்பாயே, நீராயலைந்து கரையவுருக்குகின்ற நெடுமாலே!” என்ற திருவாய்மொழியையுங் காண்க. ‘உடலும் நெஞ்சுமுருகப் பெற்றதாகில், பின்னை இவ் வமுதத்தைத் தேக்கிக் கொள்வது எங்ஙனமே?” என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க; ‘விட்டுசித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன்’ என்பராதலால், அவ்வமுதம் வியாபித்த விடமெங்கும் திருவுள்ளம் வியாபிக்குமெனக் கொள்வீர் என்று பட்டர் அருளிச் செய்தனராம். (கொடுமை செய்யும் இத்தியாதி) கீழ்ப்பாட்டில், “என்னுடைய பாவங்கள் கழிந்தவளவே யன்றி, நாட்டிலுள்ளா ரெல்லாருடைய பாவங்களும் கழித்தன” என்றார்; இதில், என்னுடைய ஆணை செல்லு மிடங்களில் யமனுங்கூட அணுக வல்லவனல்லன்’ என்கிறார். ‘கூற்றமும் –குறுகப்பெறாது’ என்ன வேண்டியிருக்க அங்ஙனக் கூறாது; ‘குறுகப் பெறா’ என்க கூறியது பொருந்துமோ?” எனின்; ‘குறுகப்பெறாது’ என்பதன் கடைக் குறையாகக் கொள்க; “கூற்றமுஞ் சாரா” என்றவிடத்திற்போல. (குறுகப் பெறா -பலவின்பாலெதிர் மறைவினைமுற்று). கூற்றம் -உடலையு முயிரையும் வேறு கூறாக்குபவனென்று காரணப் பெயராம் . கோலாடி – ஆஜ்ஞை செல்லுமிடம். கோல் – செங்கோல். 4 | கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல் உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன் கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே -5 -4-4 | தட வரை, Tada varai - பெரிய மலை போன்ற தோள், Thol - தோள்களை யுடையவனும் சக்கரபாணீ, Sakkarapani - திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே! சார்ங்கம் வில், Saarngam vil - சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட சேவகனே, Sevakane - வீரனே! கடல், Kadal - திருப் பாற் கடலை கடைந்து, Kadainthu - (மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து அமுதம் கொண்டு, Amudham kondu - (அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து கலசத்தை, Kalasathai - கலசத்தில் நிறைந்த ஆ போல், Niraindha aa pol - (நீ) நிறைந்தது போல உடல் உருகி, Udal urugi - (அடியேன்)உடல் உருகப் பெற்ற வாய் திறந்து, Vaai thirandhu - வாயைத் திறந்து கொண்டு உன்னை, Unnai - (ஆராவமுதாகிய) உன்னை மடுத்து நிறைந்துக் கொண்டேன், Maduthu niraindhukonden - உட் கொண்டு தேக்கிக் கொண்டேன் கொடுமை செய்யும், Kodumai seiyum - (இனி) கொடிய தண்டங்களை நடத்துமவனான கூற்றமும், Kootramum - யமனும் என் கோல் ஆடி, En kol aadi - எனது செங்கோல் செல்லுமிடங்களில் குறுகப் பெரு, Kuruga peru - அணுக வல்லவனல்லன் |
| 467 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கீழ்ப்பாட்டில், எம்பெருமானுக்கு அம்ருத த்ருஷ்டாந்தங் கூறினர்; இப்பாட்டில் ஸ்வர்ண த்ருஷ்டாந்தங் கூறுகின்றனர். உலகத்தில் பொன்னைப் பரீக்ஷிக்க விரும்புமவர்கள், அதனை உரை கல்லில் இட்டு உரைத்துப் பார்ப்பர்கள்; அதுபோல், பொன் போன்ற உன்னை, அற்ப சாரங்களில் மண்டின என் நாக்காகிற உரை கல்லில் இட்டு உரைத்தேன்; நல்ல பொன்னைக் கெட்ட கல்லிலிட்டுரைத்தால் அப்பொன்னினுடைய மாற்றுக் குறைவது போல், நீ என்றன் சழக்கு நாக்கிலிட்டு ரைக்கப்பட்டமையால் மாற்று, அழியப் பெற்றாய் என்பது, முன்னடிகளின் கருத்து. உரைகல்-உரைத்துப் பார்ப்பதற்கு உரிய இடமாகிய கல்; நிறமேழ – நிறமறிவதற்காக என்றே பொருளாகும்; ‘நிறமுண்டாம்படி’ என்பது பொருளன்று; பொல்லாப் பொன்னை உரை கல்லிலே உரைத்த மாத்திரத்தினால் அதற்கு நல்ல நிறமுண்டாகமாட்டாதே; உள்ளமாற்றேயன்றோ காணப்படுவது. நல்ல பொன்னையும் பொல்லாப் பொன்னையும் உரை கல்லில் நிறம் பார்க்கவிறே உரைப்பது. ஆதலால், நிறமெழ என்பதற்கு, ‘நிறமறியும்படி’ என்றே பொருள் கொள்க. ‘உன்னைக் கொண்டு’ இத்யாதி இரண்டாமடி நைச்சியநுஸந்தாநம். ஒருவராலும் துதிக்க வொண்ணாத விஷயத்தை ஒருவன் துதிக்கத் தொடங்குவது – அவ்விஷயத்தைத் தூஷிப்பது போலாகுமே யன்றி, பூஷிப்பதாக மாட்டாதானமைபற்றி, மாற்றின்றி என்கிறார். இங்கு, இன்றி என்பதற்கு – ‘இல்லாமற்போம்படி’ எனப் பொருள் கொள்ள வேணும். “மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்- மாற்றழியும்படி’ பேசிக் கொண்டு நின்றேன். நல்ல பொன்னை நல்ல கல்லிலே உரைத்தாலிறே மாற்று அறியலாவது; தரமல்லாத கல்லிலே உரைப்பாரைப் போலே, உன்னை என் நாக்காலே தூக்ஷித்தேன்; பொன் என்கிறது -ஈச்வரனை; கல் என்கிறது – நாக்கை” என்ற வியாக்கியான வாக்கியங் காணத்தக்கது. இப்படி அருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! இன்றளவும் நான் உமக்குச் செய்து வந்த நன்றிகளுக்கு ஓரளவில்லை; ‘நெய்க்குடத்தைப்பற்றி’ என்ற திருமொழியில் அந் நன்றிகளை நீர் தாமே பரக்கப் பேசியிருக்கிறீர்; இப்படி நான் உம்மைப் பரம பாவநராக்கி யிருக்கச் செய்தேயும், உம்மை நீர் மிகவும் அசத்தராகப் பாவித்து, என்னை நாவிற்கொண்டு தூக்ஷித்து விட்டதாகப் பேசுகிறீரே, இஃது என்ன கொடுமை! உமக்கு மேற்பட்ட நன்றி கெட்டார் இவ்வுலகில் இல்லைகாணும்” என்ன; அது கேட்ட ஆழ்வார் மிகவும் அஞ்சி அவ் வெம்பெருமான் திருவடிகளில் ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகிறார், பின்னடிகளால்; “நன்றாக, நானுன்னை யன்றியிலேன் கண்டாய் நாரணமே! நீயென்னை யன்றியிலை” என்றாற் போல நாராயண சப்தார்த்தம் பின்னடிகளில் விவரிக்கப் பட்டதாகும். 5 | பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன் உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 -5 | என் அப்பா, En appa - எனக்குத் தந்தையானவனே! என் இருடீகேசா, En irudeekesa - எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே! என் உயிர், En uyir - என் ஆத்மாவை காவலனே, Kaavalane - (அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே! பொன்னை, Ponnai - ஸுவர்ணத்தை நிறம் ஏழ, Niram ezha - நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக) உரைகல் மீது கொண்டு, Uraikal meedhu kondu - உரைக் கல்லில் இட்டு உரைத்தால் போல், Uraithaal pol - உரைப்பது போல உன்னை, Unnai - (பரம போக்யனான) உன்னை என் நா அகம் பால் கொண்டு, En na agam paal kondu - என் நாவினுட்கொண்டு மாற்று இன்றி, Maatru indri - மாற்று அழியும்படி உரைத்துக் கொண்டேன், Uraithu konden - பேசிக்கொண்டு நின்றேன் உன்னை, Unnai - (யோகி கட்கும் அரியனான) உன்னை என்னுள் , Ennul - என் நெஞ்சினுள் கொண்டு வைத்தேன், kondu veithen - அமைத்தேன் என்னையும், Ennaiyum - (நீசனான) அடியேனையும் உன்னில் இட்டேன், Unnil itten - உனக்குச் சேஷப் படுத்தினேன் |
| 468 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கீழ்ப்பாட்டில், “உன்னைக் கொண் டென்னுள் வைத்தேன்” என்றார்; இப்பாட்டில், வைத்த ப்ரகாரத்தைச் சொல்லுகிறார். முதற் பாட்டில் “மல்லாண்ட திண்டோன் மணிவண்ணா” என்று தொடங்கினமையால், அந்த மல்ல வதம் முதலிய சிறுச் சேவகங்களை யெல்லாம் என் நெஞ்சில் நன்கு அமைத்தேன் என்கிறாரென்க. “உன்னுடைய விக்கிரமம் எல்லாம்” என்னுமளவே போதுமாயிருக்க, “ஒன்றொழியாமல்” என்று விசேஷித்துக் கூறினமைக்குக் கருத்து என்னவெனில்; வியாஸர், வான்மீகி முதலிய முனிவர்கட்கும் விஷயமாகாத விக்கிரமங்கள் தமக்கு விஷயமானபடியைக் குறித்தவாறு; கீழ் இரண்டாம் பந்தில் ஏழாந்திருமொழியில் “சீமாலிக னவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ பெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்” என்றருளிச் செய்த விருத்தாந்தமும், மூன்றாம்பத்தில் பத்தாந்திருமொழியில், “எல்லியம்போ தினிதிருத்த லிருந்தோ ரிடவகையில், மல்லிகைமா மாலை கொண்டங்கார்த்தது மோரடையானம்” என்றருளிச்செய்த விருத்தாந்தமும் மற்ற முனிவர்கட்கன்றி இவ்வாழ்வார் ஒருவர் தமக்கே ஞானவிஷய மாயினவாறு காண்க. விக்கிரம் – வினா : என்ற வடசொற்றிரிபு. (சுவர் வழி எழுதிக்கொண்டேன்) சுவரில் சித்திரமெழுதினால் அது கண்ணுக்குத் தோற்றுவது போல, உன் விக்கிரமங்களாகிற சித்திரங்களை எனது நெஞ்சென்னுஞ் சுவரில் அமைத்து விளக்கிக்கொண்டே னென்றபடி. ஆழ்வார் எம்பெருமானால் மயர்வற மதிநல மருளப்பெற்றமையால், அவனுடைய விக்கிரமங்க ளனைத்தையும் குறையறக்கண்டு அநுபவித்தன ரென்றுணர்க. “மண் நடுங்க” என்றும் ஓதுவர். எம்பெருமானே! நீ பரசுராமனா யவதரித்தபோது “இருபத்தோர்கா லாசுகளைகட்ட, வென்றி நீண்மழுவா” என்றபடி க்ஷத்ரிய குல மடங்கலும் பாழ்பட்டவாறு போல, உனது விக்கிரமங்களை ஸாக்ஷத்கரிக்கப்பெற்ற என்னுடைய ஊழ்வினைகளடங்கலும் பாழ்த்துப்போயின என்பது மூன்றாமடியின் உட்கருத்து. ஆழ்வார் திருவுள்ளத்தில் குடியிருந்து நாம் செய்ய வேண்டிய காரியம் செய்து தலைக்கட்டினமையால் இனி இங்கு நின்றும் பெயர்ந்து செல்வோம் என்ற எம்பெருமான் கருதியதாகக் கொண்டு, அங்ஙனம் போகவொண்ணாதென்று வளைத்துத் தடுக்கிறார். நான்காமடியால் “மன்னஞ்சு வாயிரந்தோள் மழுவில் துணிந்த மைந்தா, என்நெஞ்சத்திலிருந்து இங்கினிப் போய்ப் பிறரொருவர். என்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்து வைத்தேன்” என்று தடுத்தாரிறே திருமங்கையாழ்வாரும். போகின்றது- தொழிற்பெயர். “ஆக, இப்பாட்டால், அவள் வந்து புகுந்த ப்ரகாரத்தையும், அவன் போனால் தாம் முடியும்படியான அவஸ்தை பிறந்தபடியையும், அவனுக்குப் போக்கின்றிக்கே நிற்கிற நிலையையும் நிர்ஹேதுகமாக விஷயிகரித்து ப்ரகாரத்தையுஞ் சொல்லுகிறது” என்ற வியாக்கியானவாக்கிய மறியத்தக்கது. 6 | உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 | மன், Man - (துஷ்ட) க்ஷத்திரியர்கள் அடங்க, Adanga - அழியும்படி மழு, Mazhu - மழு என்னும் ஆயுதத்தை வலம் கை கொண்ட, Valam kai konda - வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள இராமன், Raman - பரசு ராமனாய்த் திரு வவதரித்த விராம நம்பீ, Virama nambi - குண பூர்த்தியை யுடையவனே உன்னுடைய, Unnudaiya - உன்னுடைய விக்கிரமம், Vikkiramam - வீரச் செயல்களில் ஒன்று ஒழியாமல், Ondru ozhiyaamal - ஒன்று தப்பாமல் எல்லாம், Ellaam - எல்லாவற்றையும் என்னுடைய, Ennudaiya - என்னுடைய நெஞ்சகம் பால், Nenjagam paal - நெஞ்சினுள்ளே சுவர் வழி எழுதிக் கொண்டேன், Suvar vazhi ezhuthi konden - சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;பிரகாசிக்கும் படி கொண்டேன் எம் பெருமான், Em perumaan - எமக்குத் தலைவனே!எனக்கு உபகாரகன் ஆனவனே (கோபமும் உத்தேச்யம் -நமது விரோதி பாஹுள்யத்தைப் போக்கி அருளியதால்) என்னிடை வந்து, Ennidai vandhu - என் பக்கலில் எழுந்தருளி இனி , Ini - இனி மேல் போகின்றது, pogindrathu - போவதானது எங்கு, engu - வேறு எவ்விடத்தைக் குறித்து? |
| 469 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கீழ்ப்பாட்டில், “உன்னுடைய விக்கிரமமொன் றொழியாமலெல்லாம், என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி யெழுதிக்கொண்டேன்” என்றது எம்பெருமானுடைய நிர்ஹேதுக கருணையினால் என்பதை இப்பாட்டாலருளிச் செய்கிறார். பரமபதத்தை இருப்பிடமாகவுடைய எம்பெருமான் அங்கு நின்றும் இவர் பக்கலிலே வருமளவு முண்டான பாவக் காடுகளைப் பாழாக்கியும், விரோதிகளைப் போக்கியும், இவருடைய சென்னித் திடரில் பாத விலச்சினை வைத்தருளினமைக்கு ஒரு த்ருஷ்டாந்தல் காட்டுகிறார். முதலடியில், பாண்டியகுலத்துத் தலைவனாயிருந்த மலயத்வஜ ராஜன் தனது நாட்டில் நின்றும் மஹா மேரு கிரியளவும் வழியிலுள்ள காடுகளைக் களைந்து பகைவர்களைக் காப்பாற்றித் தனக்கும் தனது பரிஜனங்களுக்கும் கடை எளிதாம்படி பெரு வழியாக்கிக்கொண்டு சென்று, தனது வெற்றி தோற்றும்படி அம்மேருகிரியின் சிகரத்தில் தனது மதுரகேதுவை நாட்டிப்போயினனென்று வரலாறு அறிக. பாண்டியர்குலபதி கயல்பொறித்த இடமாகிய, பருப்பதத்தை இங்கு உவமை கூறியதனால், பெறுதற்கரிய இப்பேற்றைப் பெறுவதற்காகத் தாம் ஒரு முயற்சியும் செய்திலர் என்பது போகரும். பருப்பதம்-வடசொல்; உருப்பசி எனத் திரிவதாக்கும். கயல்- மீன்; இது, மன்மதனுக்குக் கேது வானதுபோல, பாண்டியர் குலபதிக்கும் கேதுவாயிருந்ததென்க. சே அடி- ருஜுவான திருவடி என்றுமாம்; செம்மை + அடி, சேவடி. செம்மை- செந்நிறமுமாம்; ருஜுவாயிருக்குத் தன்மையுமாம். பொறித்தாய், ஒசித்தாய், அடர்த்தாய் என்ற மூன்றும் விளி. ‘உருப்பொலிந்த’ என்று- எம்பெருமானைத் துதிப்பதனால் நாவுக்குப் பிறந்த புகர்ப்பைக் கூறியவாறுமாம். “(உருப்பொலிந்த நாவினேனை.) செவ்வாய்க்கிழமையை ‘மங்களவாரம்’ என்னுமாபோலே விபரீத லக்ஷணை; இதர விஷயங்களிலேயிறே என் நாக்கு உருப் பொலிந்தது” என்பது ஆன்றோர் வாக்கியம். பகவத் ஸந்நிதிகளில் ஸ்ரீசடகோபன் ஸாதிக்கும் போது இப் பாசுரத்தை அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம். 7 | பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல் திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய் மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 | பருப்பதத்து, Paruppadhathu - மகா மேரு பர்வதத்தில் கயல், Kayal - (தனது) மகர த்வஜத்தை பொறித்த, Poritha - நாட்டின் பாண்டியர் குல பதி போல், Pandiyar kula pathi pol - பாண்டிய வம்சத்து அரசனைப் போல் திருப் பொலிந்து, Thiru polindhu - அழகு விளங்கா நின்றுள்ள சே அடி, Se adi - செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை என் சென்னியின் மேல், En chenniyin mel - என் தலையின் மீது பொறித்தாய் என்று, Porithaai endru - (அடையாளமாக) வாட்டி யருளினவனே! என்றும் மருப்பு ஒசித்தாய் என்று, Maruppu osithaai endru - (குவலயாபீடத்தின்) கொம்பை முறித்தவனே என்றும் மல், Mal - மல்லரை அடர்ந்தாய் என்று, Adarndhaai endru - நிரஸித்தவனே! என்றும் உன் வாசகமே, Un vaasagame - (இவ்வாறான) உனது செயல்களுக்கு வாசகமான திரு நாமத்தின் அநு ஸந்தாநத்தினாலேயே உருப் பொலிந்த நாவினேனை, Uru polindha naavinenai - தழும்பேறின நாக்கை யுடைய அடியேனை உனக்கு, Unakku - உனக்கு உரித்து ஆக்கினையே, Uritthu aakkinaiye - அநந்யார்ஹ சேஷனாக ஆக்கிக் கொண்டாயே |
| 470 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - எம்பெருமான் தனது அந்தரங்க சிங்கார்களான நித்யஸூரியள் அனைவரிடத்தும் அன்பைக் குறைத்து, அவ்வன்பு முழுவதையும் தம்மொருவர் பக்கலில் அமைந்தருளின பரமோபகாரத்தைப் பேசுகின்றார், இப்பாட்டில் “சென்றால் குடையாம்” என்றபடி பலவகைப் பணிவிடைகளையுஞ் செய்யவல்ல திருவனந்தாழ்வானிடத்தும், உவந்து தேறுதைக்குரிய பெரிய திருவடியினிடத்துமே அன்பு குறைந்ததென்றால், மற்றையோரிடத்துக் குறைவுற்றது. கைமுதிக நியாயத்தாற் பெறலாகுமென்க ஐது எனினும், நொய்து எனினும் அற்பமென்றே பொருள்; இங்கு ஒருபொருட் பன்மொழியாய், ‘மிகவும் அற்பமாக’ என்று பொருள்படும். இப்படி ‘வாழச்செய்தாய் எம்பிரான்!’ என்ற ஆழ்வாரை நோக்கி, எம்பெருமான், “ஆழ்வீர்! இன்று வாழ்ந்ததாகக் கூறுகின்ற நீர் நெடுநாளாக இவ்விருள் தருமா ஞாலத்தில் தட்டித்திரிந்து அலமந்து மிகவும் இளைத்தீரே” என்ன; அதற்கு ஆழ்வார், “ஐயனே! உன்னை இன்று நெஞ்சார நினைத்து, பிறகு ‘நெஞ்சுழியும்’ என்றபடி மனஸ் சைதில்யமும் பெற்று, கண்களும் நீர் மல்கப் பெற்று, பிறகு இவ்வாறாக பரிபாகங்கள் பிறக்கைக்கடியாக நீ செய்தருளின நன்றிகளை மநநம் பண்ணிக் கொண்டே ஸகல தாபங்களும் தவிரப் பெற்றேனாகையால், என் சிரமத்தைப்பற்றி உனக்குச் சிந்திக்க வேண்டிய கடமையில்லை” என்கிறார். பின்னடிகளில். அசும்பு – கண்ணீர்; வடசொல் திரிபு சிரமம் – வடசொல் திரிபு. கையும் திருவாழியுமான அழகைக் கண்ட பின்பும் இளைப்பாறக் கேட்கவேணுமோ என்பார் ‘நேமி நெடியவனே!’ என விளிக்கின்றார் 8 | அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான் நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8 | நேமி, Nemi - திருவாழி யாழ்வானை யுடைய நெடியவனே, Nediyaavane - ஸர்வாதிகனே! எம் பிரான், Em piran - எனக்குப் பரமோபகராகனானவனே! அனந்தன் பாலும், Anandhan paalum - திருவனந்தாழ்வானிடத்திலும் கருடன் பாலும், Garudan paalum - பெரிய திருவடியினிடத்திலும் ஐதுநொய்தாக வைத்து, Aidhu noithaaga vaithu - (அன்பை) மிகவும் அற்பமாக வைத்து என் மனம் தன் உள்ளே, En manam than ulle - எனது ஹருதயத்தினுள்ளே வந்து வைகி, Vandhu vaigi - வந்து பொருந்தி வாழச் செய்தாய், Vaazha seidhaai - (என்னை) வாழ்வித்தருளினாய் என் உள்ளே, En ulle - (இப்படி வாழ்வித்த உன்னை)என் நெஞ்சில் நினைந்து நின்று, Ninaindhu nindru - அநுஸந்தித்துக் கொண்டு நெக்கு, Nekku - (அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று கண்கள் அகம்பு ஒழுக, Kangal agambu ozhuga - கண்களினின்றும் நீர் பெருகும்படி நினைத்து இருந்தே, Ninaithu irundhe - (நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே சிரமம் தீர்த்தேன், Siramam theerthen - இளைப்பாறப் பெற்றேன் |
| 471 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - எம்பெருமான், தன்னை அநுபவிக்குமவர்களான நித்திய ஸூரிகளை உபேக்ஷித்து விட்டு, என்னிடத்து அன்பு பூண்டு, என்னையே போக்தாவாகக் கொண்டு வந்தான் என்றார், கீழ்ப்பாட்டில்; இப் பாட்டில், அவ்வெம்பெருமான் தன்னுடைய போக ஸ்தாநங்களையும் உபேக்ஷித்து விட்டு வந்து என் நெஞ்சையே தனக்கு உரிய இடமாக அங்கீகரித்தருளின் என்கிறார். (வரதராஜபஞ்சாசத்) தூப்புற்பிள்ளையினருளிச் செயல், இப் பாசுரத்தை ஒரு புடை அடியொற்றிய தென்றுணர்க. “பள்ளி கோள்“ என்றவிடத்து, கோள் – முதனிலைதிரிந்த தொழிற்பெயர். பழகவிட்டு-பழகும்படிவிட்டு, அதாவது – ‘எம்பெருமானுக்குப் பனிக்கடலில் பள்ளி கொள்ளுதல் எப்போதோ பழைய காலத்தில் இருந்த சங்கதி‘ என்னும்படியாகவிட்டு என்றபடி, பழகுதல் – பிராசீநமாதல். மனத்தைக் கடலாகக் கூறியது – குளிர்ச்சி. இடமுடைமை முதலிய தன்மைகளின் ஒற்றுமைபற்றி– எம்பெருமான் ஸூர்ய மண்டலத்தை இருப்பிடமாக்க் கொண்டவனென்பது அறியற்பாற்று. 9 | பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 | பனி, Pani - குளிர்ந்த கடலில், Kadalil - திருப்பாற் கடலில் பள்ளி கோளை, Palli kolai - பள்ளி கொள்ளுதலை பழக விட்டு, Pazhaga vittu - பழகியதாக விட்டு (மறந்து விட்டு) (பிறிவு உளவு என்று அன்றோ ஸூ கம் உள்ளது; சேர்ந்தே இருந்தால் மறதிக்கு இடம் இருக்குமே: குகன் இடம் பெருமாள்) ஓடி வந்து, Odi vandhu - (அங்கு நின்றும்) ஓடி வந்து என், En - என்னுடைய மனம் கடலில், Manam kadalil - ஹ்ருதயமாகிற கடலில் வாழ வல்ல, Vaazha valla - வாழ வல்லவனும் மாயம் , Maayam - ஆச்சரிய சக்தியை யுடையவனும் மணாள, Manaala - (பெரிய பிராட்டியார்க்குக்) கணவனும் நம்பீ, Nambi - குண பூர்ணனுமான எம்பெருமானே! தனி கடல் என்று, Thani kadal endru - ஒப்பற்ற திருப்பாற் கடல் என்றும் தனி சுடர் என்று, Thani sudar endru - ஒப்பற்ற ஆதித்ய மண்டலமென்றும் தனி உலகு என்று, Thani ulagu endru - ஒப்பற்ற பரம பதமென்றும் (சொல்லப்படுகிற இவை) உனக்கு இடம் ஆய் இருக்க, Unakku idam aai irukka - உனக்கு (ஏற்ற) வாஸஸ் ஸ்தாநமாயிருக்கச் செய்தேயும் (அவற்றை உபேக்ஷித்து விட்டு) என்னை, Ennai - (மிகவும் நீசனான) அடியேனை உனக்கு, Unakku - உனக்கு உரித்து ஆக்கினையே, Uritthu aakkinaiye - உரிய வாஸஸ் ஸ்தாநமாக அமைத்துக் கொண்டருளினையே! (இஃது என்ன ஸௌசீல்யம்!) |
| 472 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கீழ்ப்பாட்டில் எம்பெருமான் திருப்பாற்கடல் முதலிய திவ்ய ஸ்தாநங்களை மறந்துவிட்டுத் தம்மிடம் போந்தபடியைப் பேசியருளினார்; ஒரு பொருளை மறதியினால் விட்டவர்கள் மீண்டு ஒருநாள் அப்பொருள் நினைவுக்கு வரும்போது அதனை அங்கீகரிப்பதுபோல, எம்பெருமானும் இப்போது திருப்பாற்கடல் முதலிய விடங்களை மறந்துவிட்டானேலும், பின்பொருகால் அவை நினைவுக்குவரின், அவற்றை அங்கீகரித்தருள வானன்றோ? என்று சிலர் சங்கிப்பதாகக் கொண்டு, அச்சங்கைக்குப் பரிஹாரம் பிறக்குமாறு இப்பாட்டை, அருளிச் செய்கின்றாமென்க. ‘இடவகைகள் இகழ்ந்திட்டு’ என்றதில் நோக்கு. ஒருவன் தன் மனைவியை மறந்து மற்றொருத்தியை காதலித்தானாகில், பின்பு ஒரு காலத்தில் மனைவியை ஸ்மரித்து, அவளோடு புணரக் கருதக்கூடும். அவன்றானே அவளிடத்துச் சில குற்றங்குறை காரணமாக அவளை இகழ்ந்து விட்டானாகில், மீண்டு ஒருகாலும் அவளை நெஞ்சிலும் நினையான்; அதுபோல, எம் பெருமான், திருப்பாற்கடல், பரமபதம், ஸ்ரீத்வாரகாபுரி முதலிய இடங்களைத் தானே புத்தி பூர்வமாக இகழ்ந்துவிட்டு வந்தனானாதலால், இனி அவ்விடங்களை ஒருகாலும் நினைக்கவும் மாட்டான் என்பது திருவுள்ளக் கருத்து. பெரியதொரு மலையின் கொடுமுடியில் நிர்மலமாக விளங்குகின்ற ஒரு கொடி எல்லார்க்கும் காண எளிதாயிருக்குமாறுபோல, என்னுடைய ஹ்ருதய கமலத்தினுள்ளே ஸுஸ்பஷ்டமாகப் பளபளவென்று விளங்காநின்ற தேஜஸ் ஸ்வரூபியே! என்று எம்பெருமானை விளிக்கின்றார். முன்னடிகளில். மிளிர்ந்த மின்னும்- மீமிசைச்சொல். தவளம்-வடசொல் திரிபு. இரண்டாமடியில், சுடர், ஒளி, சோதி என்ற இம்மூன்று சொற்களுக்கும், முறையே, திவ்யாத்ம ஸ்வரூபம், திவ்ய மங்கள விக்ரஹம், திவ்ய கல்யாண குணம் எனப் பொருள் வாசி காண்க. மூன்றாமடியில், வடதடமென்பதை, வட மென்னும் வட சொல்லின் விகாரமாகக் கொண்டு, ஆலிலை என்று பொருள் கூறுவாருமுளர்; இகழ்ந்திடுதல்- வெறுப்புக் கொள்ளுதல் என்பால் = பால்- எழலுருபு, இடவகை- இடம். “கொண்டனையே” என்றதற்குப் பின், இப்படியுமொரு ஸௌசீல்யமிருப்பதே! இப்படியுமொரு ஸௌலப்பமிருப்பதே! இப்படியுமொரு வாத்ஸல்யமிருப்பதே! எனக் கூட்டி உயர்யஸிக்க. “உனக்குரிதத்தாக்கினையே” என்பாலிடவகை கொண்டனையே’ என்று- ‘இப்படி செய்தாயே! என்று அவன் திருவடிகளிலே விழுந்து கூப்பிட இவரை யெடுத்து மடியிலே வைத்துத் தானும் ஆச்வஸ்தனான படியைக் கண்டு ப்ரீதராய்த் தலைக்கட்டுகிறார். “அதனிற் பெரிய என் அவா ” என்று நம்மாழ்வாருக்குப் பகவத் விஷயத்திற் பிறந்த அபிநிவேசமெல்லாம், இப் பெரியாழ்வார் பக்கவில் ஈச்வரனுக்குப் பிறந்தபடி இத் திருமொழி” என்ற ஆன்றோர் உரையில் அருளிச் செயல் இங்கு அறியற்பாலது. 10 | தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 | தடவரை வாய், Tadavarai vaai - பெரிய பர்வதத்தில் மிளிர்ந்து மின்னும், Milirndhu minnum - மிகவும் விளங்கா நின்றுள்ள தவளம் நெடு கொடி போல், Thavalam nedu kodi pol - பரிசுத்தமான பெரியதொரு கொடி போல சுடர் ஒளி ஆய், Sudar oli aai - மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய் என் நெஞ்சின் உள்ளே, En nenjin ulle - எனது ஹ்ருதயத்தினுள் தோன்றும், Thondrum - விளங்கா நின்றுள்ள சோதி நம்பீ, Jodhi nambi - ஒளியினால் நிரம்பியவனே! வட தடமும், Vada thadamum - வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும் வைகுந்தமும், Vaigundhamum - ஸ்ரீவைகுண்டமும் மதிள், Madhil - மதில்களை யுடைய துவராபதியும், Thuvara pathiyum - த்வாரகையும் (ஆகிற) இட வகைகளை, Ida vagaigalai - இடங்களை யெல்லாம் இகழ்ந்திட்டு, Igazhindittu - உபேஷித்து விட்டு என் பால், En paal - என்னிடத்தில் இடவகை கொண்டனையே, ida vagai kondanaiye - வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!) |
| 473 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - இப்பாட்டால், இத்திருமொழி கற்பவர்களுக்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார். விஷ்ணுசித்தர் என்கிற ஆழ்வார் திருநாமத்திற்கு வ்யுதபத்தி இப்பாடல் விசுதமாகும். ‘விஷ்ணுவை ஹ்ருதயத்தில் அமையப் பெற்றுள்ளவர்’ என்ற அத் திருநாமத்தின் பொருள் ஒன்றரை யடிகளால் விரிக்கப்பட்டது. (வேயர் இத்தியாதி) பெரியாழ்வாருடைய திருவம்சத்திற்கு வேயர்குலமென்று திருநாம மென்பர்; “முன்னை வினையகல மூங்கிற்குடியமுதன் என்று- இராமாநுச நூற்றந்தாதி அருளிச் செய்த திருவரங்கமுதனார் மூங்கிற்குடியர் என்றதுபோல, இவர் வேயர்குடியர் என்கிறது. எம்பெருமான் இடைக் குலத்திற் பிறந்து அனைவர்க்கும் எளியனானது போல ஆழ்வார் தமக்கும் எளியனான படியைக் கோவலனை யென்பது குறிக்குமென்க. எம்பெருமான் ஆழ்வார் நெஞ்சிற் புகுந்த பின்பு, விலக்ஷணமானதொரு புகரைப் பெற்றன னென்பதைப் பெறுவிக்கும், “கொழுங்குளிர் முகில்வண்ணனை” என்பது. கொழுமை- செழுமை. எம்பெருமானுடைய ஔதார்யத்திற்கு முகிலை உவமை கூறினானென்றுங் கொள்வர். ஆயரேறு- இடைக்குலத்திற் பிறக்கப்பெற்றோமென்னும் மகிழ்ச்சியினால் காளை போலச் செருக்குற்றிருப்பவன். ஆழ்வார் திருவுள்ளததிற் புகழ் பெற்ற மகிழ்ச்சியினாலும் அங்ஙனமே செருக்குற்றானென்க. அந்தணர்- ஆசிரியர்; நச்சினார்க்கினியர் “அந்தத்தை அணவுபவர்” (வேதாந்தத்தைச் சார்பவர்) என விரித்துக் காரணப் பொருளுரைத்தனர்; “அணவுபவர்” என்றது அணர் என விகாரப்பட்டது. “ஆரணத்தின் சிரமீதுறை” என்ற சடகோரந்தாதிச் சிறப்பாயிரச் செய்யுளின் ஈற்றடியில் “கார் அணனைக் கம்பனை நினைவாம்” என்றவிடம் நோக்கத்தக்கது. அந்தம் + அணர், அந்தணர்; தொகுத்தல். இனி, ‘அம் தம் ஆர்’ னஎப் பிரித்துப்பலவாறகப் பொருள்கௌள்வாரு முளர். “அந்தனரென்போ ரறவோர் மற்றெப்பொருட்ருஞ், செந்தண்மை பூண்டொழுகலான்” என்ற திருவள்ளுவர் திருக்குறளும், அவ்விடத்துப் பரிமேழைகருரையும் நோக்கத்தக்கது. “நூலே காகம் மூக்கோல்மனையே, ஆயுதங்காலை அந்தணர்க்குரிய” என்ற தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தில் கருத்தை நோக்கினால், அந்தணரென்ற சொல் யதிகளைக் குறிக்குமென்பது தெற்றென விளங்கும். அமுதத்தினை- அத்து, இன் என்ற இரண்டும் சாரியை; ‘அந்தணர்கள் அமுதை’ என்றபடி; உவமையாகுபெயர். சுவையின் மிகுதி பற்றியும் பெறற்கருமை பற்றியும் போக்யமாயிருக்குந் தன்மை பற்றியும், பருகினவர்களை மயக்குந்தன்மை பற்றியும் எம்பெருமானை அமுதமாகக் கூறுதல் ஏற்குமென்க. ஈற்றடியில் ஒரு ஐதிஹ்யம்- பண்டு எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பியைத் திருவடி தொழுவதற்கென்று அங்கு எழுந்தருளின காலத்தில், சிலர் எம்பார் என்ற ஆசிரியரிடம் வந்து “சாயைப்போலப் பாடவல்லர்’ என்ற அடியின் கருத்தை அருளிச் செய்யவேண்டும்” என்று பிரார்த்திக்க, எம்பார், “எம் பெருமானாரிடத்தில் இதன் பொருளை நான் கேட்டுணர்ந்ததில்லை; இப்போது அவரைக் கேட்டு உங்களுக்குச் சொல்லுவோமென்று பார்த்தால், அவர் திருக்கோட்டியூர்க்கு எழுந்தருளியிருக்கிறார்; ஆகிலும் நான் உங்களுக்கு இப்போதே சொன்னேனாகவேணும்” என்று , எம்பெருமானாருடைய திருவடி நிலைகளை யெடுத்துத் தம் திருமுடியின்மீது வைத்துக் கொண்டு,‘இப்போது உடையவர் எனக்கு அருளிச்செய்தார். சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று, “அந்தணர்தம் அமுதத்தினைப் பாடவல்லார் சாயைப்போல அணுக்கர்கள்” என அவ்வயித்துப் பொருள் கொள்ளுங்கள்’ என்றருளிச் செய்தனராம். தம்முடைய நிழல் தம்மை விட்டு அகலாதவாறு போல, எம்பெருமானைப் பாடுமவர்கள் அவ்வெம் பெருமானைவிட்டு இறையும் அகலாது அவன்றனக்கே அந்தாணிச் சேவகராப் பெறுபவர் என்றவாறு, இனி, ‘சாயைபோல- குளிர்த்தி உண்டாம்படி, பாட வல்லார் தாம் அணுக்கர்கள்’ என்றும் சிலர் உரைப்பர் என்ப, 11 | வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 | வேயர் தங்கள், Veyar thangal - வேயர் வைதிகர்களுடைய குலத்து, Kulathu - வம்சத்து (வைதிகர் குலம்) உதித்த, udhitha - அவதரித்த விட்டு சித்தன், Vittu Chithan - பெரியாழ்வாருடைய மனத்து, Manathu - ஹ்ருதயத்தில் கோயில் கொண்ட, kovil konda - திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கிற கோவலனை, Kovalanai - கோபாலனும் கொழு குளிர் முகில் வண்ணனை, kozhu kulir mugil vannanai - கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தை யுடையனும் ஆயரேற்றை, Aayarerrai - இடையர்களுக்குத் தலைவனும் அமரர் கோவை, Amarr kovai - நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனும் அந்தணர், Andhanar - சனகர் முதலிய ப்ரஹ்ம மஹரிஷிகளுக்கு அமுதத்தினை, Amudhathinai - அம்ருதம் போல் இனியதுமான எம்பெருமானை பாட வல்லார் தாம், Paada vallaar thaam - (இத் திருமொழியினால்) பாட வல்லவர்கள் சாயைப் போல, Saayai pola - நிழல் போல அணுக்கர்களே, Anukkargale - (எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள் |