Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 214 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
214பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 2
குண்டலம் தாழக் குழல் தாழ நாண் தாழ
எண் திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த
வண்டமர் பூங்குழ லார் துகில் கைக் கொண்டு
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்–2-10-2
குண்டலம்,Kundalam - கர்ண பூஷணங்களானவை
தாழ,Thaazha - (தோள் (அளவும்) தாழ்ந்து தொங்கவும்
குழல்,Kuzhal - திருக் குழல்களானவை
தாழ,Thaazha - (அத்தோடொக்கத்) தாழ்ந்தசையவும்
நாண்,Naan - திருக்கழுத்திற் சாத்தின விடு நாணானது
தாழ,Thaazha - (திருவுந்தி யளவும்) தாழந்தசையவும்
எண் திசையோரும்,Enn Disaiyorum - எட்டு திக்கிலுமுள்ள (தேவர் முனிவர் முதலியோர்) எல்லாரும்
இறைஞ்சி தொழுது,Erainji Thozhudhu - நன்றகா [ஸாஷ்டாங்கமாக] வணங்கி
ஏத்த,Ethan - ஸ்தோத்ரம் பண்ணவும்
வண்டு அமர் பூ குழலார்,Vandu Amar Poo Kuzhalar - (இப்படிப்பட்ட நிலைமையை யுடையனாய்) வண்டுகள் படிந்துகிடக்கப் பெற்ற பூக்களை அணிந்த கூந்தலையுடைய இடைச்சிக(ளான எங்க)ளுடைய
துகில்,Thugil - (ஆற்றங்கரையில் களைந்து வைக்கப் பட்டிருந்த) புடவைகளை
கைக் கொண்டு,Kaik Kondu - (தனது)கைகளால் வாரிக் கொண்டு
விண் தோய் மரத்தானால்,Vin Thoi Maraththaanal - ஆகாசத்தை அளாவிய (குருந்த) மரத்தின் மேல் ஏறியிரா நின்றுள்ள கண்ணபிரானால்
இன்று முற்றும்;,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
வேண்டவும்,Vendavum - (எங்கள் துகிலை தந்தருள் என்று நாங்கள்) வேண்டிக் கொண்ட போதிலும்
தாரானால்,Tharanaal - (அவற்றைக்) தந்தருளாத கண்ணபிரானால்
இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;