திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 444 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
444பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 2
சித்திர குத்த னெழுத்தால் தென் புலக்கோன் பொறி யொற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி யொளித்தார் முத்துத் திரைக்கடற் சேர்ப்பன் மூதறி வாளர் முதல்வன் பத்தர்க் கமுதன் அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-2
பதவுரை Show / Hide
சித்திர குத்தன்,Siththira Kuththan - சித்ரகுப்தனென்கிற (யமலோகத்துக்) கணக்குப் பிள்ளையானவன்
தென் புலம் கோன்,Then Pulam Kon - தெற்குத் திசைக்குத் தலைவனான யமனுடைய
பொறி ஒற்றி,Pori Oththri - மேலெழுத்தை இடுவித்து
எழுத்தால் வைத்த,Ezuththaal Vaiththa - (தான்) எழுதிவைத்த
இலச்சினை,Ilachchinai - குறிப்புச் சீட்டை
தூதுவர்,Thoodhuvar - யம கிங்கரர்கள்
மாற்றி,Maatri - கிழித்துப் போட்டு விட்டு
ஓடி ஒளிந்தார்,Odi Olindhaar - கண்ணுக்குத் தெரியாத இடந்தேடி) ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்;
முத்து,Muththu - முத்துக்களை (க்கொண்டு வீசுகிற)
திரை,Thirai - அலைகளை யுடைய
கடல்,Kadal - கடலில்
சேர்ப்பன,Saerppana - கண் வளர்ந்தருளுமவனும்,
மூது அறிவு ஆளர்,Moothu Arivu Aalar - முதிர்ந்த அறிவை யுடைய நித்ய ஸூரிகளுக்கு
முதல்வன்,Mudhalvan - தலைவனும்,
பத்தர்க்கு,Paththarkku - அடியார்களுக்கு
அமுதன்,Amudhan - அம்ருதம் போல் இனியனுமான எம்பெருமானுக்கு
அடியேன்,Adiyaen - (யான்) தாஸனாயினேன்;
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.