Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 204 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
204பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3
திருவுடைப் பிள்ளை தான் தீய வாறு தேக்க மொன் றுமிலன் தேசு டையன்
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான்
அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் வழக்கோ அசோதாய்
வருகவென்று உன் மகன் தன்னைக் கூவாய் வாழ வொட்டான் மது சூதனனே–2-9-3
திரு உடை பிள்ளை தான்,Thiru Udai Pillai Thaan - உன் செல்லப் பிள்ளையாகிய கண்ணன்
தீய ஆறு,Theeya Aaru - தீம்பு செய்யும் வழியில்
ஒன்றும் தேக்கம் இவன்,Ondrum Theakkam Ivan - சிறிதும் தாமஸிப்பதில்லை.
தேசு உடையன்,Desu Udaiyan - அதைத் தனக்குப்) புகழாகக் கொண்டிரா நின்றான்;
உருக வைத்து,Uruga Vaithu - (இவன் செய்ததென்ன வென்றால்) உருகுவதற்காக (அடுப்பில் நான் வைத்திருந்த)
வெண்ணெய்,Vennai - வெண்ணெயை
குடத்தொடு,Kudathodu - தாழியோடே (நிச்சேஷமாக)
உறிஞ்சி,Uruinji - உறிஞ்சி விட்டு
உடைத்திட்டு,Udaithittu - தாழியை யுமுடைத்துப் பொகட்டு
போந்து நின்றான்,Ponthu Nindran - (பிறகு தான் உடையாதவன் போல்) அவ்வருகே வந்து நில்லா நின்றான்;
அசோதாய்,Asothai - யசோதையே!
அருகு இருந்தார் தம்மை,Arugu Irundhar Thammai - உன் வீட்டருகே இருந்தவர்களை
அநியாயம் செய்வது,Aniyaayam Seivadhu - இஷ்டப்படி அக்ரமஞ் செய்வது
வழக்கோ தான்,Vazhakkothan - ந்யாயமாகுமோ?
உன் மகன் தன்னை,Un Mahan Thannai - (நீ) உன் பிள்ளையை
வருக என்று,Varuga Endru - ‘வா’என்று சொல்லி
கூவாய்,Koovai - அழைக்க வேணும்;
மது சூதனன்,Madhu Soodhanan - (நீ அழைத்துக் கொள்ளா விட்டாலோ) இக் கண்ண பிரான்
வாழ ஒட்டான்,Vaazha Ottan - (எங்களைக்) குடி வாழ்ந்திருக்க வொட்டான்.