திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 344 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
344பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 7
மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை யெழுவித்தவன் மலை கொன்னவில் கூர் வேற் கோன் நெடு மாறன் தென் கூடற்கோன் தென்னன் கொண்டாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-7
பதவுரை Show / Hide
மன்னர்,Mannar - (குரு தேசத்து) அரசர்கள்
மறுக,Maruga - குடல் குழம்பும்படி
மைத்துணன் மார்க்கு,Maiththunan Maarkku - மைத்துனன்மாரான பாண்டவர்களுக்கு (த் துணையாகி)
ஒரு தேரின் மேல்,Oru Therin Mel - ஒரு தேரிலே
முன் அங்கு நின்று,Mun Angu Ninru - முற் புறத்திலே நின்று கொண்டு
மோழை யெழுவித்தவன் மலை,Mozhai Ezhuviththavan Malai - (நீர் நரம்பில் விட்ட வாருணாஸ்த்ரத்தின் வழியே) கீழுண்டான குமிழி யெறிந்து கிளரும்படி பண்ணின கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற) மலையாவது
கொன்னவில்,Konnavil - கொலையையே தொழிலாக வுடைய
கூர்,Koor - கூர்மை பொருந்திய
வேல்,Vel - வேலை யுடையவனும்
கோன்,Kon - ராஜ நீதியை வழுவற நடத்துமவனும்
நெடு,Nedu - பெருமை பொருந்தியவனும்
மாறன்,Maaran - ‘மாறன்‘ என்னும் பெயருடையவனும்
தென்,Then - அழகிய
கூடல்,Koodal - ‘நான் மாடக் கூடல்‘ என்ற பெயரை யுடைய மதுரைக்கு
தென்னன்,Thennan - பாண்டி நாட்டுத் தலைவனுமான மலயத்வஸ ராஜனாலே
கொண்டாடும்,Kondaadum - கொண்டாடப் பெற்ற
தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை