திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 52 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
52பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 9
மெய் திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள் அய்யா அழேல் அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!–1-3-9
பதவுரை Show / Hide
மெய்,Mey - திருமேனியிலே
திமிரும்,Thimirum - பூசுகைக்குரிய
நானம் பொடியோடு,Naanam podiyodu - கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய ஸூகந்தப் பொடிகளையும்
மஞ்சளும்,Manjalum - மஞ்சள்பொடியையும்
செய்ய,Seyya - சிவந்ததாய்
தட,Thada - விசாலமாயுள்ள
கண்ணுக்கு,Kannukku - கண்களில் (சாத்த)
அஞ்சனமும்,Anjanamum - மையையும்,
சிந்தூரமும்,Sindooramum - ஸிந்தூரத்தையும் (திரு நெற்றியில் சாத்துகைக்கு)
வெய்ய கலை பாகி,Veyya kalai paagi - கொடிய ஆண்மானை வாஹமாகவுடைய துர்க்கையானவள்
கொண்டு,Kondu - எடுத்துக்கொடு வந்து
உவளாய் நின்றாள்,Uvalaai ninraal - அதோ இரா நின்றாள்;
ஐயா,Ayaa - ஸ்வாமியான கண்ணனே!
அழேழ் அழேழ் தாலேலோ;,Azael azael Thaalelo - அழேழ் அழேழ் தாலேலோ;
அரங்கத்து,Arangaththu - ஸ்ரீரங்கத்திலே
அணையானே,Anaiyaane - (திருவனந்தாழ்வானைப்) படுக்கையாக வுடையவனே!
தாலேலோ.,Thaalelo - தாலேலோ.